என் நெஞ்சில் நீ தந்த காயம்…(14)

4
(4)

என்னாச்சுடி எதுக்கு கூப்பிட்டாரு என்ற கனிஷ்காவிடம் இன்னைக்கு மேடம் லீவு இல்லையா நான் ஃபோனை எந்த ஸ்டாப் கிட்டயும் கொடுக்கல வில்லை பேக்லையே வச்சிருந்தேன் அதான் பேக் வெளியில் இருந்துச்சு லேப்ல நம்ம ஒர்க் பண்ணிட்டு இருந்தோம் அப்போ செல்போன் ரிங்காகிருக்கு கஸ்டமர் கேர் பரதேசி போன் பண்ணி என்னை மாட்டி குடுத்துட்டான்.

 

அதனாலதான் அவரு ஃபோனை எடுத்து வச்சுட்டாரு போல அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சாரு. நான் சொன்னேன் இந்த மாதிரி அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால போன் எப்பவுமே என்கிட்ட தான் இருக்கும் பிரின்சிபல் கிட்ட பெர்மிஷன் வாங்கி தான் யூஸ் பண்றேன் அப்படின்னு சொன்னதுனால சரின்னு சொல்லி என்கிட்ட கொடுத்துட்டாரு. என்றாள் நிலவேனில்.

 

நல்ல மனுஷன் தான்பா நம்ம அனகோண்டா குரலு என்ற கனிஷ்காவின் தலையில் நங்கென்று கொட்டியவள் அந்த ஆள் உள்ளே தான் இருக்கு நீ பாட்டுக்கு அனகோண்டா குரலுனு சொல்லுற பின்னாடி வந்து நின்று என் குரல் என்ன அனகோண்டா குரல் மாதிரி இருக்கா அப்படின்னு கேட்டால் தான் நீ அடங்குவாய் போல என்று அவள் கூறி முடிக்கவில்லை அவனும் அவர்கள் அருகிலே வந்துவிட்டான்.

 

அச்சோ இந்த ஆளு நிஜமாவே பக்கத்தில் வந்துருச்சு என்று அவள் மௌனமாக கணிப்பொறியை பார்த்துக் கொண்டிருக்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். பேசிட்டு தான் இருக்கீங்க வந்ததுல இருந்து பேச்சு மட்டும் தான் உங்களை ப்ரோக்ராம் போட்டு பார்க்க சொன்னால் டிராயிங் வரைஞ்சுட்டு இருக்கிங்க . டிராயிங் வரைஞ்சு பார்க்கவா லேபுக்கு வர சொன்னாங்க என்றான் அவன்.

 

இருவரும் எழுந்து மௌனமாக கையைக் கட்டிக் கொண்டு நிற்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க நான் கொஸ்டின் கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லாமல் கையை கட்டிக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம் என்று அவன் கொஞ்சம் அதட்டலாக கேட்க சாரி சார் என்றனர் இருவரும் கோரசாக. சரி ரெண்டு பேரும் உட்கார்ந்து புரோக்ராம் போட்டு பாருங்க என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட இந்த அறுந்தவாலு ரெண்டும் கேட்டாங தானே மீண்டும் இரண்டும் டிராயிங் தான் வரைந்து கொண்டிருந்தது. மச்சி இது உன்னோட கண்ணுடி என்ற கனிஷ்காவை முறைத்தாள் நிலவேனில்.

 

ஏண்டி ஆந்தை கண்ணி என் கண்ணு என்ன இவ்வளவு கேவலமாகவாடி இருக்கு என்று நிலவேனில் கூறிட அப்படித் தான் இருக்கு மூன்ஃபையர் என்றாள் கனிஷ்கா.

 

எருமை மூன்ஃபையர் பெயரை நமக்குள்ள மட்டும் தான் வச்சுக்கனும். உனக்கும் ,பிரியாவுக்கும் மட்டும் தான் தெரியும் நீ பாட்டுக்கு ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்காதே என்றாள் நிலவேனில்.

 

எனக்கும் ,பிரியாவுக்கு மட்டும் இல்லங உன்னோட ஆளுக்கும் தானே தெரியும் என்ற கனிஷ்காவிடம் ஐயோ அவனுக்கு என்னோட ஒரிஜினல் நேம் தெரியாது. மூன்ஃபையர் தான் என்னோட பெயருன்னு நினைச்சிட்டு இருக்கான். அவன் அப்படியே நினைச்சுட்டு போகட்டும் என்றாள் நிலவேனில்.

 

என்னடி இப்படி சொல்லிட்ட அப்படியே நினைச்சு போகட்டும்னு அவன் உன்னோட ஆளுடி என்ற கனிஸ்காவிடம் ஆளாக இருந்தால் என்ன ஒரிஜினல் பெயரை சொன்னால் தான் அவன் என்னை லவ் பண்ணுவானா. அப்படிப்பட்ட லவ்வே எனக்கு வேண்டாம் என்றாள் நிலவேனில். அப்போ எப்ப தான் உன்னோட ஒரிஜினல் பெயரை அவன் கிட்ட சொல்லுவ என்ற கனிஷ்காவிடம் சொல்லனுமா இப்போ என்ன அவசரம் எல்லாத்துக்கும் ஒரு நாள் வரும் அப்ப சொல்லிட்டு போனால் முடிஞ்சிருச்சு என்று சிரித்தாள் நிலவேனில்.

 

 

திடீரென அங்கு இருந்த மாணவி ரோஷினிக்கு வலிப்பு வர ஆரம்பித்தது. நிலா, கனி மட்டும் இல்லாமல் அந்த லேபில் இருந்த அனைவரும் பதறி விட்டனர். அந்த நேரத்தில் துருவன் வந்தவன் அந்த பொண்ணு ரோஷினியை தன் மடியில் கிடத்தியவன் அவளது கையில் சாவிக்கொத்தை வைத்து அழுத்திட அவளுக்கு வலிப்பு குறைந்து சுயநினைவுக்கு வந்தாள்.

 

ரோஸி உனக்கு ஒன்னும் இல்லையே என்று அவளை விசாரித்துக் கொண்டு மாணவர்கள் இருந்திட துருவன் எழுந்து சென்று விட்டான். அவனது பாக்கெட்டில் இருந்து விழுந்த அந்த பொருளை எடுத்து வைத்துக் கொண்டாள் நிலவேனில்.

 

வீட்டிற்கு வந்தவள் அந்த ஃப்ரெண்ட்ஷிப் பேண்டை கையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தாள். இது நான் அவனுக்கு கொடுத்தது தானே. இதை நான் என் கையால் ரெடி பண்ணினது. இது எப்படி துருவன் சார் கிட்ட என்று குழம்பினாள் நிலவேனில். ஒருவேளை நான் பேசிட்டு இருக்கிறது துருவன் சார் கிட்ட தானா என்று நினைத்தவள் இன்னைக்கு அவர் போன் செய்தால் கண்டிப்பாக கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்.

 

 

அம்மு என்ன ஒரே யோசனை என்ற வெண்மதியிடம் ஒன்றும் இல்லை அம்மா என்றவள் தனது புரேகரஸ் கார்டை நீட்டினாள். அதை வாங்கி பார்த்த வெண்மதி அமைதியாக அதில் கையெழுத்து போட்டு கொடுத்தார். என்ன அம்மா ஒன்றும் சொல்லாமல் இருக்கீங்க என்ற நிலாவிடம் என்ன சொல்லனும் அம்மு மிட் டெர்ம் டெஸ்ட்டை விட அதிக மார்க் தான் வாங்கி இருக்க. ஒன்னு ஒன்னா தான் நூறு ஒரு மிக்க நூறு வராது. என் பொண்ணு கிளாஸ் ஃபர்ஸ்ட் வரணும், ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரணும் அப்படின்னு எல்லாம் உன் அம்மா நினைக்க வில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இம்ப்ரூவ் ஆனாலே போதும் சரி வா சாப்பிடலாம் என்று கூறி மகளுக்கு சப்பாத்தியை எடுத்து வைத்தார் வெண்மதி.

 

அவள் தன் அறைக்கு வந்தவள் ஃபோனை எடுத்து பார்த்தாள். அவனிடமிருந்து எந்த ஒரு மெசேஜும் வராமல் இருக்க அவளுக்கு மனம் லேசாக வலிக்க ஆரம்பித்தது.

 

என்ன ஆச்சு ஏன் இன்னைக்கு எந்த மெசேஜும் பண்ண வில்லை என்று நினைத்தவள் தானே அவனுக்கு மெசேஜ் செய்யலாம் என்று போனை எடுக்க ஏனோ அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது .

 

இத்தனை நாள் அவன் யாரோ, எவரோ என்று இருந்த பொழுது ஈசியாக பேசிவிட்டாள். இன்று அவன் ஒருவேளை துருவனாக இருக்குமோ என்று நினைத்தவளால் ஏனோ அவனுக்கு மெசேஜ் அனுப்ப இயலவில்லை. ஒருவேளை நான் தான் அந்த பொண்ணுன்னு தெரிஞ்சா அவர் என்ன பண்ணுவாரு கோவப்படுவாரோ என்று இவள் பலவாறு குழம்பிக் கொண்டிருந்தாள்.

 

இங்கு அவனோ அவள் ஆசை ஆசையாக கொடுத்த அந்த பிரண்ட்ஷிப் பேண்டை தொலைத்து விட்டோமே என்று கவலையில் அமர்ந்திருந்தான். இப்போ அவள் கிட்ட இது தொலைஞ்சு போச்சுன்னு சொன்னால் அவள் எப்படி ரியாக்ட் பண்ணுவாள் அவள் எவ்வளவு ஆசையா அவளோட கையாலே செஞ்சது என்று சொன்னாளே என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

 

அப்பொழுதுதான் அவனுக்கு அந்தப் பெண் ரோஷினிக்கு சாவிக்கொத்தை எடுத்துக் கொடுக்கும் பொழுது தன் பாக்கெட்டில் இருந்து அது விழுந்து இருக்குமோ என்று யோசனை வர நாளைக்கு காலையில் முதல் வேலையாக லேப்ல போய் செக் பண்ணனும். லேப்ல தான் கிடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

 

 

அவனது அன்னை சாப்பிட அழைத்த பொழுது தான் அவன் மணியை பார்த்தான். மணி எட்டரை ஆயிருச்சா என்று நினைத்தவன் தன் மொபைலை எடுத்து பார்க்க அவளிடமிருந்து எந்த ஒரு மெசேஜ்ஜும் வராமல் இருக்கவும் என்ன இது இன்னைக்கு மெசேஜே பண்ணாமல் இருக்கிறாள். நான் பண்ணாததுனால கோவமா இருக்காளோ என்று நினைத்தவனை அவனது அன்னையின் அழைப்பு கலைத்தது.

 

அவன் சென்று சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு வந்தவன் தனது மொபைல் போனிலிருந்து அவளுக்கு அவளை அழைத்துப் பேச நினைத்தான். ஆனால் அவள் கொடுத்த பிரண்ட்ஷிப் பேண்டை தொலைத்த குற்ற உணர்வு ஏனோ அவளிடம் பேச விடாமல் தடுத்தது. அந்த பேண்டை எப்படியாச்சும் திரும்ப எடுத்ததுக்கப்புறம் தான் மூனு உன்கிட்ட பேசுவேன் சாரி என்று நினைத்து போனை ஓரமாக வைத்துவிட்டு படுத்து விட்டான் .

 

 

அவளும் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து எந்த ஒரு மெசேஜும் வராமல் இருக்க அவளுக்கு மனம் ஒரு மாதிரி பிசைய தொடங்கியது. என்ன இது ஏன் அவரு மெசேஜ் பண்ண வில்லை ஒருவேளை நானும் ,கணியும் பேசிக்கொண்டதை அவர் கேட்டு இருப்பாரோ. நான் தான் அந்த மூன்ஃபையர் என்று தெரிஞ்சதனால தான் பேசாமல் இருக்காரோ என்று அவளும் பலவாறு யோசிக்க ஆரம்பித்தாள் . தெரிஞ்சால் தான் என்ன என்று ஒரு மனம் கூறிட மறு மனமோ இல்லை வேண்டாம் என்று நினைத்திட அவள் அமைதியாக படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

 

 

 

….. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!