உயிர் போல காப்பேன்-14

4.3
(11)

அத்தியாயம்-14
ஆதி ஆஸ்வதியை பார்த்து “எப்போதும் இருப்பியா ஏஞ்சல் மத்தவங்க மாறி என்னை விட்டுட்டு போகமாட்டியே..”என்றான் குரல் கலக்கத்துடன் அதே நேரம் அழுகையில் உதடு பிதுங்கியவாறே…
அதில் ஆஸ்வதி ஆதியை யோசனையாக பார்க்க…. திடிர் என்று அவன் குரலில் அவளுக்கு எதோ வித்தியாசம் தெரிய ஆதியை கலக்கமாக பார்த்தாள்.. அவளின் பார்வை உணர்ந்து சட்டேன்று தன் முகத்தை மாற்றிக்கொண்டு அவன் ஒரு பிள்ளை சிரிப்பை உதிர்த்தான்.
”சரி வாங்க நாம கீழ போலாம்.. போய் சாப்டு வந்து நாம விளையாடலாம்..”என்றாள் அவனும் சரி என்று சிரித்துக்கொண்டே அவள் பின்னால் வந்தான்..
கீழே வந்துவள் சுற்றி முற்றி பார்க்க…. ஹாலில் ப்ரேமும்.. பரத்தும் உட்கார்ந்து எதோ பேசிக்கொண்டு இருக்க… ஆதியை தாத்தாவின் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு அவளும் கிட்சனுக்குள் புகுந்துக்கொண்டாள். ஆதி தன் தாத்தாவின் பக்கத்தில் விளையாடிக்கொண்டு இருப்பதை கிட்சனில் இருந்து ஆஸ்வதி பார்த்துக்கொண்டே இருந்தாள்…..
அவள் மனதில் இனி ஆதியை தனியாக எங்கும் விடக்கூடாது என்பது மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது இந்த வீட்டில் ஆதிக்கு எதோ ஆபத்து இருப்பது மட்டும் அவளுக்கு நன்றாக புரிந்தது. அது மட்டும் இல்லாமல் இரவில் தான் கண்ட அந்த உருவத்தையும் அவன் சொன்ன வார்த்தையும் தான் அவள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது..
அது போல ஆதிக்கு எப்படி இப்படி ஆனது.. அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்ற எண்ணமும் அவன் அம்மா எங்கே என்ற எண்ணமும் தான் ஆக்கிரமித்து இருந்தது. அவள் இந்த வீட்டிற்கு ஆஸ்வதி முதலில் வந்த போது கூட ஆதியின் அப்பாவின் புகைப்படத்திற்கு தான் மாலை அணிந்து பார்த்தாள். அவனது அம்மா புகைப்படமும் அங்கு இருந்து பார்த்தாள்.. ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் தாத்தா அவளிடம் கூறவில்லை.. அவள் அப்போது இருந்த நிலையில் அவளால் அதை தெரிந்துக்கொள்ள மனம் வரவில்லை. ஆனால் இப்போது யோசிக்கும் போது அவளுக்கு இதில் ஏதோ இருப்பது போல தோன்றியது தன்னவனிடம் கூட இதை பற்றி கேட்க முடியாது கொஞ்ச நேரத்திற்கு முன் அவன் நடந்துக்கொண்டதை நினைக்கும் போது இப்போதும் ஆஸ்வதிக்கு உடல் நடுங்கியது.. இந்த நிலையில் அவன் தாயை பற்றி அவனிடம் கேட்பது அவன் உயிருக்கே கூட ஆபத்தாக ஆகக்கூடும் என்று ஆஸ்வதிக்கு நன்றாக புரிந்தது…
இதை பற்றி தாத்தாவிடம் கேட்போமா என்று கூட ஆஸ்வதி யோசித்தாள் அவள் யோசித்துக்கொண்டு இருந்த போதே அனைவரும் உணவுண்ண டைனிங் ஹாலுக்கு வர….தற்காலிகமாக தன் யோசனையை விட்டுவிட்டு டிபன் செய்து அனைத்தையும் அவளும், வினுஜாவும் டைனிங் டெபிளில் வைத்துவிட்டு சென்றார்கள்
மணி 9தை காட்ட அனைவரும் உட்கார்ந்து உணவு உண்ண ஆதி வந்து அப்போது தான் தாத்தா பக்கத்தில் உட்கார்ந்தான் ஆஸ்வதி அவனுக்கு தட்டில் பூரியை வைத்து தர அவன் பார்வை முழுதும் ஹாலின் ஆசியின் மகிமையால் ஆஸ்வதியின் புடவை ஒதுங்கி அவனுக்கு அவளது வெற்றிடையை அப்பட்டமாக காட்ட….. அதில் விழுந்து போனான்.. அது தெரியாமல் ஆஸ்வதி தன் வேலையில் கண்ணாக இருக்க ஆதி அவள் வெற்றிடையில் கண்ணாக இருந்தான் தன்னவளின் இடையை தொட தன் கை பரபரக்க…. ஆனால் தான் இருக்கும் இடமும்.. தான் இருக்கும் நிலைமையும் உணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்..ஆனால் இதனை இன்னும் இரு கண்கள் கல்மிஷமாக ரசித்துக்கொண்டு இருந்தது…அந்த கண்கள் ஆஸ்வதியை இச்சை பார்வையுடன் பார்க்க… ஆதி அதனை கண்டுக்கொண்டு அந்த நபரை முறைத்துக்கொண்டே இருந்தான்.
ஆனால் இப்போதைக்கு ஆதியால் அதை தானே செய்ய முடியும் ஆனால் தன்னவளை இன்னொருவன் இப்படி பார்ப்பதா என்பது அவன் மனதில் வெறி ஏற்ற….. ஆதி தன் அருகில் இருந்த ஸ்பூனை பார்க்க அவனுக்கு ஒரு ஐடியா வந்தது அந்த ஸ்பூனை ஆதி கீழே தள்ளிவிட….. ஆஸ்வதி அதனை பார்த்து எடுக்க குனிய….. ஆதியும் “ஐயோ…என் ஸ்பூன்..”என்று முகம் சுருங்க அவனும் அதனை எடுப்பது போல கீழே குனிந்தான்
ஆஸ்வதி ஸ்பூனை எடுப்பதற்குள் ஆதி அதனை எடுத்து தடுமாறுவது போல் ஆஸ்வதியின் இடுப்பில் கை வைத்து அவளது புடவையை நன்றாக இழுத்துவிட்டான்.. அப்போது அவள் இடையின் மென்மை அவனை பித்துக்கொள்ள செய்ய…. அதில் இருந்து அவனால் கையை எடுக்கவே முடியவில்லை.. அப்படியே டேபிளின் அடியில் உட்கார்ந்து அவன் ஆஸ்வதியின் இடையில் அழுத்தம் கொடுக்க….. அதுவரை அவனது தொடுகையில் அதிர்ச்சியுடன் சிலிர்த்து போய் இருந்த ஆஸ்வதி அவன் இடையில் தந்த அழுத்தத்தால் அவனை கண்கள் விரிய காண….. அவனோ அவளது பார்வையை ஆழ்ந்து நோக்கியவன்.. “ஏஞ்சல் ஸ்பூன் கிடச்சிட்டு.”என்றான் கொஞ்சல் குரலில். அதில் நினைவிற்கு வர ஆதி அதற்குள் மேலே ஏறி உட்கார்ந்துவிட்டான்,.. ஆஸ்வதி தான் தன் கணவனின் தொடுகையில் சிவந்திருந்த தன் முகத்தை மாற்ற மிகவும் சிரமப்பட்டாள்
அவள் வெகு நேரம் கழித்து எழ…. அதனை யாரும் கவனிக்காமல் தங்கள் உணவில் கவனமாக இருந்தனர்.. ஒருவனை தவிர… அவன் ப்ரேம்.. அவன் தான் ஆஸ்வதியை கண்களில் அவ்வளவு வக்கிரத்துடன் அவளை இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தது இப்போது ஆஸ்வதியின் முகம் வெட்கத்தில் சிவந்து போய் இருப்பதை பார்த்தவன் உள்ளுக்குள் ஆதி ஆஸ்வதியை நினைத்து எரிந்தது.
ஆஸ்வதி தட்டில் உணவு வைத்து நீட்டியதை பார்த்த ஆதி.அதனை பார்த்து அவளை ஏறேடுத்து பார்த்து உதட்டை பிதுக்கினான்.. அந்த பாவனையில் ஆஸ்வதி இதழ் விரித்து புன்னகைக்க….. ஆதியின் விழிகள் அவளது இதழிலே சிறிது நேரம் நின்று பின் தட்டில் மாறியது…ஆதி தன் தட்டையே பாவமாக பார்க்க……
அதை பார்த்த ஆஸ்வதி அவன் பக்கத்தில் நெருங்கி “ஆதி நீங்க பெரிய பையன் தான… அது மட்டும் இல்லாம நீங்க குட் பாய் வேற அதான் நா அவங்க எல்லார்ட்டையும் என்ன சொன்னெனா ஆதி குட் பாய் அவருக்கு யார் ஹெல்பும் வேணா அவரே சாப்டுவாருனு சொன்னேன்.. யாரும் நம்பவே இல்ல… அதா நா அவங்க கிட்டலா பெட் கட்டி நீங்களாவே சாப்ட்டீங்கனா.. நா உங்கள வெளில கூட்டிட்டு போய் நெறைய டாய்ஸ் வாங்கித்தரதா சொன்னேன்.. என்ன ஒகேவா..”என்றாள் அவன் காதிற்கு மட்டும் கேட்கும் மாறு..
அதில் ஆதி தன்னவளின் பேச்சில் சிரிப்பு வந்தாலும் தன்னை குழந்தை போல் பார்த்துக்கொள்வதை நினைத்து கண்கள் கலங்கியது இதுவரை அவனை இது போல யாரும் கொஞ்சியது இல்லை.. அவன் அப்பா அவனை கொஞ்சியது உண்டு தான். ஆனால் அவனுக்கு விவரம் தெரிந்து அவன் தாயின் அன்பை அனுபவித்தது இல்லை. அனுஷாவும் தான் ஆனால் அவள் பிறந்ததில் இருந்தே அவளுக்கு அது மறுக்கப்பட்டுது தான், ஆனால் ஆதிக்கு அப்படி இல்லையே. அவன் அன்னையின் அன்பில் விவரம் தெரியும் வரை வளர்ந்தவன் தான்.. ஆதி சந்தோஷமாக தலை ஆட்டிக்கொண்டே பூரியை எடுத்து கீழும் மேலும் சிந்திக்கொண்டே சாப்பிட்டான் அதை பார்த்த அவள் அவன் மேலே ஒரு கர்ச்சிப்பை போட்டு இப்போது சாப்பிடுமாறு கூறினாள்.
அவர்கள் இருவரையும் பார்த்த அங்கு உள்ள அனைவரும் முறைத்துக்கொண்டே “இவங்கள இப்படியே விட்டா. இவ அவன சரி பண்ணி இந்த வீட்டையே ராஜ்ஜியம் பண்ண வச்சிடுவா. இத இப்டியே விடக்கூடாது” என்று மனதில் கருவிக்கொண்டே அனைவரும் சீக்கரம் சாப்பிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்கள் ஆதி சாப்பிட்டுக்கொண்டே தன்னவளை ரசிக்க…. அவனது இன்னொரு கண் அங்கிருந்து வன்மமாக எழுந்து சென்றவர்கள் முகத்தில் தான் இருந்தது அதை கண்ட ஆதியின் முகம் வெறியில் சிவக்க….
“ஆதி இன்னொரு பூரி.”என்ற ஆஸ்வதியின் மென்மையான குரலில் அவனது இறுகிய முகம் சட்டென்று இளகி போனது. அதையே ஆதி அடியோடு வெறுத்தான் ஆஸ்வதியின் பாசம்.. அவனை பலவீனமாக ஆக்குவது போல் அவன் உணர்ந்தான் அதனாலே இனி ஆஸ்வதி பக்கம் அவன் நெருங்க கூடாது என்பதை மனதில் பதிய வைக்க நினைத்தான். ஏனென்றால் இனி தான் அவனுக்கு நிறைய வேலை இருக்கிறது.. இவ்வளவு நாள் அவன் யாரேன்றே அவனுக்கு தெரியாத நிலையில் இருந்தான்.. ஆனால் இன்று அப்படி இல்லையே.
ஆனால் அவனால் ஒரடியாக அவளை விட்டு தள்ளி இருக்கவும் முடியாது அவன் விலகி இருந்தாலும் நெருங்கி வந்தாலும் அது ஆஸ்வதியின் உயிருக்கே கூட வினையாக முடியும்.இப்படியே அவன் யோசித்துக்கொண்டிருக்க….. ஆஸ்வதி முகம் மட்டும் ஆதியை காதலாக பார்த்துக்கொண்டிருந்தது.. அவன் தொடுகை இன்னும் அவள் இடுப்பில் குறுகுறுத்தது.. ஆனால் அவள் மனதில் இந்த தொடுகை வேறு ஒருவரையும் அவளுக்கு நியாபகப்படுத்தியது.. இந்த தொடுகை என்று அவள் நினைத்துக்கொண்டு இருக்க… அவளின் முகம் யோசனையில் சுருங்குவதை பார்த்த ஆதி.
“ஏஞ்சல் தண்ணி.”என்ற ஆதியின் குரலில் நடப்புக்கு வந்தவள் ஆதியின் மீது கவனமாக….
இதை எல்லாம் கண்ட தாத்தா அவனாக சாப்பிடுவதை பார்த்து சந்தோஷமடைந்தார்.. கூடிய சீக்கரம் தன் பேரன் சரி ஆகிவிடுவான் என்று அவர் மனதில் உறுதியானது.. ஆனாலும் அவர் மனதில் சற்று பயம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது.. கடந்த சில வருடங்களாக இவ்வீட்டில் நடப்பது ஒன்றும் அவருக்கு சரியாக படவில்லை.. அதன் தொடக்கம் தான் தன் ஆசை மகன் விஷ்ணு திடீர் என்று இறந்து போனது.. அதை இப்போது நினைத்தால் கூட அவருக்கு கண்கள் கரித்துக்கொட்டியது தாத்தா ஆதியை பார்த்தவாறே எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டார்…
அவர்களை தவற இன்னும் அங்கு ப்ரேம் மட்டும் உட்கார்ந்து ஆஸ்வதியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் அதை கண்டும் கானாதது போல் உட்கார்ந்து ஆஸ்வதியும், விதுனும், அனுவும் சாப்பிட ஆரம்பித்தனர்…அனு. விதுன் அங்கு வந்ததில் இருந்து அவனை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அதை யார் காணாவிட்டாலும் இரு ஜோடி கண்கள் அதனை மனதில் குறித்துக்கொண்டது.
பின் அனு விதுனை பார்த்து “விது என்ன காலேஜ்ல ட்ராப் பண்ணிடுறீங்களா”என்றாள் அவனை ஆசையாக பார்த்தவாறு..
அதற்கு விதுன் அனுவை வெற்று பார்வை ஒன்றை பார்த்துவிட்டு எதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டி அங்கிருந்து வெளியில் சென்றுவிட்டான்.. அதனை பார்த்த அனு முகம் வாடிவிட்டது.. ஆஸ்வதி..”அனு இட்லி வைக்கவா…”என்று கேட்க…. அதில் நடப்பிற்கு வந்தவள்…சிரிப்புடனே..”ஹான் வேணா அண்ணி.. காலேஜ்க்கு டைம் ஆச்சி.”என்று எழுந்து கைகழுவிக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு. அனைவரிடமும் சொல்லிவிட்டு அனு காலேஜ் செல்ல….
“அனு.. இது உனக்கு மதியம் லஞ்ச் கொஞ்சமா தான் வச்சிருக்கேன்.. ஒழுங்கா முழுதும் சாப்டுடு.. இங்க சாப்டுற மாறி கோழி கொறிக்கிற மாறி கொறிக்க கூடாது ஈவினிங் பாக்ஸ் காலியா இருக்கனும்.”என்று உரிமையுடன் அதட்டி ஒரு டிபன் டப்பாவை ஆஸ்வதி நீட்ட…..
அதை அதிர்ச்சியுடன் பார்த்த அனு கண்கள் தானாக கலங்கியது ஏனென்றால் அவளுக்கு இதுவரை யாரும் இப்படி கையில் டிபன் பாக்ஸை கொடுத்து இப்படி அறிவுரை சொன்னதில்லை. அவள் பள்ளி படிப்பை ஆரம்பித்ததில் இருந்து டைனிங் டேபிளில் டிபன் பாக்ஸ் ரெடியாக இருக்கும் அதனை எப்போதும் ஒரு வெறுமையான மனதுடன் எடுத்துக்கொண்டு போவாள். சரி காலையில் கொஞ்சம் சாப்பிடு என்று கூட சொல்ல இந்த வீட்டில் அவளை யாரும் கணக்கில் கொள்ளமாட்டார்கள் ஆதி இருந்தவரை அவளை பாசமாக பார்த்துக்கொள்வான்,. அவனும் காலேஜை முடித்துவிட்டு பாரினுக்கு சென்றுவிட அவளுக்கு தாத்தாதான் எல்லாம்.. அவரும் முழுநேரம் அவளுடன் இருக்க முடியவில்லை. அவருக்கும் ஃபேக்டரியில் பிரச்சனை. ஆபிஸில் பிரச்சனை என்று அடிக்கடி எதாவது வந்துக்கொண்டிருக்கும் அவள் பெரியப்பாக்கள் கூட இவளையும் சரி ஆதித்தையும் சரி கண்டுக்கொள்ள மாட்டார்கள்..ஆதித் கொஞ்சம் பெரியவன் என்பதால் இதனை எளிதாக தாண்டி வந்துவிட்டான். ஆனால் அனிஷா விவரம் தெரியாத சின்ன பிள்ளை அதனாலே அவள் அதிகமாக தனிமையில் இருப்பது போல் தான் அமைந்தது
இப்போது ஆஸ்வதியையே அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த அனிஷா.. திடிர் என்று அவளை அணைத்துக்கொண்டு…”தாங்க்ஸ் அண்ணி.”என்க….. ஆஸ்வதி ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள். அவளுக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை.. தன் சித்தியின் வீட்டில் தான் செய்வதை தான் அவள் இங்கும் செய்கிறாள். என்ன தான் ஆஸ்வதி சித்தி நிறைய வீட்டு வேலைகளை ஆஸ்வதி தலையில் கட்டினாலும் சிறிது கூட துவளமாட்டாள்.. அதும் அவளது தங்கை விஷாலியை ஸ்கூலுக்கு தயார் செய்வதில் இருந்து அவளுக்கு உணவு தயாரிப்பது வரை அனைத்தும் ஆஸ்வதிதான் செய்வாள்
அதில் ஆஸ்வதிக்கு ஒரு நிம்மதி விஷாலியும் தன் அக்கா தனக்காக சமைக்கும் உணவுகளை ஆஸ்வதியை பாராட்டிக்கொண்டே உண்பாள்..”அக்கா என் பிரண்டுக்கு அது பிடிக்கும் செஞ்சி குடுக்கா…”என்று உரிமையாக ஆஸ்வதியிடம் கேட்டு வாங்கி செல்வாள்.. அதில் ஆஸ்வதி தனக்காக தன்னையும் உரிமையாக பாசம் காட்ட ஒருத்தி இருக்கிறாள் என்பதில் அவளுக்கு அவ்வளவு தெம்பாக இருந்தது.
அது போல தான் இப்போது அனிவிற்கும் ஆஸ்வதி செய்தாள்.. ஆனால் அனி இவ்வளவு உணர்ச்சி வசப்படுவாள் என்று ஆஸ்வதி நினைக்கவில்லை தன்னை இறுக்கிக் கட்டிக்கொண்டு நிற்கும் அனியை பார்த்தவள் ஒரு பெரும்மூச்சை விட்டுவிட்டு அவள் முதுகில் தட்டிக்கொடுத்துக்கொண்டு இருந்தாள்.. இந்த காட்சியினை டைனிங் டேபிளில் உட்கார்ந்து கண் கலங்க ஆதி பார்த்துக்கொண்டு இருந்தான் அவனுக்கும் தன் தங்கையை பற்றி தெரியுமே.. தானாவது அவளை இங்கு விட்டுவிட்டு போய் இருக்க கூடாது என்று பல முறை தன் மனதில் தன்னையே திட்டிக்கொண்டு இருந்திருக்கிறான். ஆஸ்வதி தன் தங்கையை பார்த்துகொள்வது ஆதிக்கு இதமாக இருந்தது. அவன் கண்கள் ஆஸ்வதியை தான் காதலாக வருடியது..
“போதும் அனி காலேஜ்க்கு டைம் ஆகலையா.. விதுன் அண்ணா வைட் பண்ண போறாங்க…. உன் அண்ணி எங்கையும் போகமாட்டேன்.. இனி இங்கதான் வந்து உன் பாசமழைய பொழிடா ஐ ம் ஆல்வேஸ் வெய்டிங்…”என்றாள் ஆஸ்வதி கண்களில் குறும்பு மின்ன….அதை கேட்டு அனி சிரிக்க….. அதில் ஆதியின் மனம் குளிர்ந்தது. அவனும்
“ஏஞ்சல் ஏன் அனி அழுறா.. அவளுக்கு ஸ்கூல் போக பிடிக்கலையா.”என்றான் ஆதி அனியை பாவமாக பார்த்தவாறு.
அதில் சிரித்தனர் இருவரும்…”ஆதி கண்ணா அனி படிக்கலைனா அப்புறம் எப்டி ஆதித் மாறி அறிவாளி ஆகுறது.”என்றவாறே அங்கு வந்தார் தாத்தா.. அவர் இவ்வளவு நேரம் இங்கு நடந்ததை தன் அறையில் இருந்து கவனித்துக்கொண்டு தான் இருந்தார். இப்போது தான் அவர் மனதில் தான் ஆஸ்வதியை தேர்ந்தெடுத்தது சரியே என்று ஆழமாக பதிந்தது.பாசத்திற்காக ஏங்கும் அனிக்கும் ஆதிக்கும் அவள் ஒரு நல்ல துணையாக இருப்பாள் என்று தான் ஆஸ்வதியை அவர் தேர்ந்தெடுத்தது அது இன்று உண்மையானதில் அவர் மனம் மகிழ்ந்தது.
“ஆமா ஆமா அனி இன்னிக்கி நீ ஸ்கூல் போகலைனா அந்த பப்ளு மாறி குண்டா ஆகிடுவ……”என்றான் ஆதி. அதில் அங்கு அனைவரும் புன்னகைக்க ஆதியும் புரியாமல் புன்னகைத்தான்.
“ஹாஹா ஆதித் கண்ணா வரவர உன் பேச்சி நல்லா இருக்கு யாரு சொல்லி குடுத்தா…”என்றார் தாத்தா கிண்டலாக
அதில் அழகாக வெட்கப்பட்ட ஆதி.”போ. தாத்தூ…”என்றான் ஆஸ்வதி தோளில் முகம் புதைத்தவாறு.. அதில் இன்னும் அவர்கள் புன்னகைக்க….. அனி அனைவரிடமும் பாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்
“மா. ஆஸ்வதி எனக்கும் ஃபேக்டரில வேலை இருக்கு மா ஆடிட்டர இன்னிக்கி வர சொல்லிருக்கேன்.. அதுனால நா மதியமா வரேன். பாத்துக்கோ டா..”என்றார் தாத்தா பரிவாக
“ம்ம்ம் சரி தாத்தா. மதியம் கரக்ட்டா வந்துடுங்க…. லஞ்ச்க்கு..லேட்டா சாப்ட கூடாது டேப்ளட் வேற போடனும்ல……”என்றாள் ஆஸ்வதி அக்கறையாக….. அதில் தாத்தா முகம் கனிந்து புன்னகைத்தார்
“சரிடாமா வந்துடுறேன்…”என்று அங்கிருந்து கிளம்பினார்.
அப்போது வீட்டில் ஆதி.. ஆஸ்வதி கிட்சனில் வினிஜா. மட்டும் தான் இருந்தனர். வெளியில் தோட்ட வேலை செய்பவர்களும் மட்டும் தான் இருந்தனர்
ஆஸ்வதி டைனிங் டேபிளை சுத்தம் செய்துக்கொண்டிருக்க….. ஆதி அவளை தான் ரசிக்கும் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கையில் ஒரு காரை வைத்துக்கொண்டு அவளையே இமைக்காமல் பார்க்க…. ஆனால் ஆஸ்வதியோ அந்த இடத்தை க்ளீன் செய்வதிலே குறியாக இருந்தாள். இப்போது அவனை அவள் கண்டிருந்தாள் கூட அவன் பார்வையின் மாற்றத்தை கண்டுப்பிடித்திருப்பாள். ஆனால் விதி யாரை விட்டது.. இன்னும் அவளின் காதல் கண்ணாமூச்சி ஆடியது
“ஏஞ்சல்…”என்றான் ஆதி சோர்வாக…
அப்போது தான் ஆஸ்வதி அனைத்தையும் கிட்சனில் வைத்துவிட்டு வர….. ஆதியின் சோர்வான குரல் அவளை அசைத்தது.. ஆஸ்வதி அவன் அருகில் சென்று உட்கார்ந்து.. “என்னாச்சி என் ஆதிக்கு டயர்டா இருக்கீங்க….. உடம்பு முடிலையா…எதும் பண்ணுதா..”என்றாள் அதிர்ச்சியாக அவனது உடலை தொட்டுப்பார்த்தவாறே..
அவளது இந்த அதிர்வும், அவளது மென்மையான் தொடுகையும் ஆதியின் புண் பட்ட மனதிற்கு இனிமையாக இருக்க……”இல்ல ஏஞ்சல் தூக்கம் வருது..”என்றான்
“ஓஓ….. வாங்க ஆதி நாம நம்ம ரூம்க்கு போலாம்,..”என்று அவனை கைப்பிடித்து தூக்கினாள்.. அவனும் அவளுடன் எழ… கொஞ்சம் அவனுக்கும் சோர்வாக தான் இருந்தது.. அவனுக்கு கொஞ்ச நாளாகவே இப்படிதான் இருக்கிறது. இவ்வளவு நாள் அவன் அதை உணராத நிலையில் இருந்தான். ஆனால் இப்போது அவனுக்கு தெரிய ஆரம்பித்தது. அவன் உடல்நிலை..
ஆதியை கொஞ்சமாக தாங்கிக்கொண்டு தங்கள் அறைக்கு சென்று அவனை கட்டிலில் படுக்க வைக்க… அவனும் உடல் சோர்வில் படுத்துக்கொண்டே ஆஸ்வதியை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.. ஆஸ்வதி அவனுக்கு ஏசியை ஆன் செய்துவிட்டு அவன் அருகில் உட்கார….. ஆதி அவளை ஒரு மாதிரி பார்த்தவன். தன்னை மறந்தவனாக“ஏஞ்சல்..”என்று உருகிய குரலில் அழைத்து தன் இரு கைகளையும் ஆஸ்வதியை நோக்கி நீட்டினான்..
அவனின் இந்த அழைப்பில் ஆஸ்வதி அதிர்ந்து அவனை பார்க்க… அவன் குரலில் என்ன கண்டாளோ. அவன் இரு கைகளையும் அழுத்தமாக பற்றிக்கொண்டு அவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். அவன் அவளது இரு கைகளையும் பிடித்து இழுத்து அவளை தன் மீது கொண்டு வந்தான். அதில் ஆஸ்வதி உடல் சிலிர்த்தது.
ஆதியோ. இப்போது அவனுக்கு வேறு ஒன்றும் நியாபகம் இல்லை. தன்னவள் மட்டும் தான்.. தன்னுடைய 5வருட காதல் மட்டுமே அவன் மனதில் இருந்தது.. அவளுக்காக உருகியது. அவளை தூரத்தில் இருந்து ரசித்தது அவளுக்காக காத்திருந்தது…அவளிடம் காதலை சொல்ல துடித்தது. அவளுடன் கனவில் வாழ்ந்த வாழ்க்கை இது மட்டும் தான் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது ஆஸ்வதி மனதிலும். தன்னவனை முதலில் கண்டதில் இருந்து அவனையே எண்ணி தவிர்த்தது தான் ஓடிக்கொண்டு இருந்தது.
இருவரும் தங்களின் நிகழ்காலத்தை சுத்தமாக மறந்தனர். அவர்களின் கடந்த காலத்தில் அதும் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலும். சொல்லிக்கொள்ளாமலும் செய்த காதல் அந்த காதலையே காற்றாக ஸ்வாசித்து வாழ்ந்தது மட்டுமே தான் இப்போதைக்கு அவர்களின் நினைவு..
ஆதி.. ஆஸ்வதியை தன் மேல் இருந்து கீழே கொண்டு வந்து அவளது முகத்தை தான் பார்த்துக்கொண்டே இருந்தான்.. ஆஸ்வதி அவன் கீழே தன்னை கொண்டு வந்ததும் அவனது கடுமையான….. ஆளுமையான உடற்கட்டு அவளை பித்தம் கொள்ள செய்தது.. அவனின் தொடுகையையே அவளால் தாங்க முடியவில்லை.. அவளது முகம் அவனின் மூச்சிக்காற்று தீண்டி சிவந்து போனது
அவளின் சிவந்த முகத்தில் அவனும் வீழ்ந்துவிட்டான் அவன் இப்போது அனைவரது முன்னும் நடித்துக்கொண்டிருப்பதை முழுதாக மறந்தான்.. அவளும் அவனது நிலையை மறந்து போனாள்
அவளது வெட்கம் அவனை இம்சிக்க அவளது சிவந்த இதழையே ஆழ்ந்து பார்த்தான் அதில் ஆஸ்வதி வெட்கத்தில் அவன் முகம் பார்க்காமல் தன் கண்களை அழுத்தி மூடிக்கொண்டாள் அதில் இன்னும் கிறங்கிதான் போனான்
“வது “என்றான் உருகிய குரலில் அதில் ஆஸ்வதி ஒரு நிமிடம் அதிர்ந்து ஆதியை பார்க்க…. அவன் பார்வை இன்னும் அவளது இதழில் தான் இருந்தது.. அதனை நெருங்க அவனுக்கு அவ்வளவு பிடித்தம். ஆனால் அவனை எதோ ஒன்று தடுத்தது. ஆஸ்வதி அவனின் வது. என்ற அழைப்பிலே மயங்கி போனாள்.ஆதி அவளை நெருங்க…..
“ஏஞ்சல்.. என்ன எப்டி உனக்கு மேல தூக்குன….”என்றது ஆதியின் பிள்ளைகுரல்
அதில் ஆஸ்வதி அதிர்ந்து கண் திறந்து பார்க்க….. அங்கு அவளின் முகத்திற்கு மிக அருகில் அவன் முகம் இருந்தது. ஆனால் அதில் ஆதியின் காதல் பார்வை இல்லை.. தன்னை யாரேன்றே தெரியாமல் சிறு குழந்தையாக இருக்கும் ஆதியின் மிரட்சி.. ஆச்சரிய பார்வைதான் இருந்தது.

(வருவாள்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!