உயிர் போல காப்பேன்-21

4.6
(14)

அத்தியாயம்-21ஆதி தன்னவளை கையில் பூப்போல சுமந்துக்கொண்டு ஆஸ்வதியை முழுக்காதலையும் தேக்கி வைத்து பார்த்தவாறே படி ஏற….. இதனை கோவமாக வெளியில் வந்த ப்ரேம் மற்றும் மற்றவர்களும் பார்க்க….அதும் ப்ரேமிற்கு ஆஸ்வதியை பார்க்கும் போது தன்னை மட்டும் அறைந்தாள்.. இப்படி அவன் கையில் மட்டும் குழைந்துக்கொண்டு இருக்கிறாளே என்று எப்போதும் போல ஆதியின் மீது பொறாமை வந்தது அதிதி இந்த காட்சியை பார்த்து அனைவரையும் முறைக்க….. அவர்களோ வெடுக்கென்று தங்கள் அறைக்கு போய்விட்டனர்…இவளும் காலை நன்றாக உதைத்துவிட்டு தன் அறைக்கு செல்ல…அப்போது தான் காலேஜ் முடிந்து வீட்டினுள் வந்த அனியும் அவளை அழைத்து வந்த விதுனும் அந்த காட்சியினை பார்க்க….. அதனை ரசிக்க ஆரம்பித்தனர்.விதுனின் மனம் கொஞ்சம் நிம்மதியை தழுவியது அப்படியே அவன் அனியின் பக்கம் திரும்ப….. அவள் அவர்களை தான் புன்னகையில் விரிந்த உதடுகளுடன் ரசித்துக்கொண்டு இருந்தாள்.. விதுனும் அவளின் விரிந்த இதழ்களை பார்க்க…. அவன் மனம் அதில் பித்தானது ஆதி தன் அறைக்குள் சென்றதும் தான் அனி விதுன் பக்கம் திரும்ப….. விதும் சட்டென்று தன் பார்வையை மாற்றிக்கொண்டான் அதில் அனி முகம் வாடினாலும். ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள் ஆனால் விதுனின் மனமோ.. அவளின் மனம் படும் பாட்டை கண்டு துடிக்கதான் செய்தது. ஆனால் என்ன செய்வது அனியின் மீது விதுனுக்கு சிறு பிள்ளையில் இருந்து ஒரு விருப்பம் அதனை வெறும் பிடித்தம் என்று தான் அவனும் நினைத்தான்.. ஆனால் அவனுக்கு 15வயதில் அடிப்பட்டபோது அனியின் முகத்தில் வந்த அதிர்ச்சி அதனை வேறுமாதிரி காட்டியது.. ஆனால் அது காதலிக்கும் வயது அல்லவே. அதும் இல்லாமல் அனி தன் மீது வெறுப்பாக அல்லவா இருந்தாள்எனவே இனி நாம் அனி பக்கம் கூட போகக்கூடாது என்பதை மனதில் நினைத்துக்கொண்டு தான் அடிப்பட்ட அடுத்த நாள் மருத்துவமனையில் இருந்து வந்தான். ஆனால் அனி இவனுக்காக வாசலிலே காத்திருப்பதை கண்டு மொத்தமாக அவள் மீது பித்தானான்ஆனால் அனி தன் உயிர் நண்பனின் தங்கை அல்லவா அதும் இல்லாமல் தன்னை படிக்க வைக்கும் முதலாளியின் மகள். அவளை மனதில் நினைப்பது அவர்களுக்கு தான் செய்யும் துரோகமாக நினைத்தான் அதனாலே அவளை விட்டு விலக… அவளது குற்றவுணர்வை பயன்படுத்திக்கொண்டான்..அடுத்து விதுன் தன் படிப்பிற்காக பூனே சென்றுவிட……எப்போதும் அவன் மனதில் அனிக்கான காதல் வளர்ந்துக்கொண்டே இருந்தது.அப்போது தான் விதுன் தன் தந்தை இறப்புக்கு திரும்ப இங்கு வந்தான்அப்போது விதுன் சோகத்தில் இருக்க….. ஆனால் அனி அவனை தான் பாவமாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.. விதுனுக்கு அவளின் அணைப்பு வேண்டும் போல் இருந்தது.. ஆனால் அவனது நண்பனின் நம்பிக்கையை அவன் கொடுத்துக்கொள்ள விரும்பவில்லைஇப்போதும் அப்படி தான் அனி அவனை ஆர்வமுடன் பார்ப்பதை பார்த்து விதுனுக்கு சந்தோஷமாக தான் இருந்தது.. ஆனால் ஆதி இந்நிலையில் இருப்பதை பார்த்து அவனுக்கு ஆதி தான் இப்போது முதலும் முடியுமாக தெரிகிறான்அதனாலே இன்று காலை அவன் அனியிடம் அப்படி பேசியது.பெரும்மூச்சை ஒன்று வெளியிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான் விதுன்..இங்கு ஆதியோ தன் அறைக்கு தூக்கி வந்த ஆஸ்வதியை இமைக்காமல் கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்க…. ஆஸ்வதியும் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.. அவன் கண்களின் வீச்சில் ஆஸ்வதி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டு இருந்தாள் ஆதியோ ஆஸ்வதியின் சிவந்த இதழ்களையே பார்க்க….. அதை அறிந்த ஆஸ்வதி தன் உலர்ந்த இதழ்களை தன் நாக்கினால் ஈரப்படுத்திக்கொள்ள…..அவளின் இந்த செயல் ஆதியை கிறங்க செய்தது.. ஆதி அவள் இதழ் நோக்கி குனிய ஆஸ்வதி அவனின் இந்த செயலில் கண்களை அழுத்த மூடிக்கொண்டாள் அவளின் இந்த செயலை கண்ட ஆதியின் முகம் புன்னகையில் விரிய…. அப்படியே ஆஸ்வதியை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு பால்கனி நோக்கி சென்றுவிட்டான்..ஆதியின் கையில் இருந்த ஆஸ்வதி திடிர் என்று மெத்தையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியுடன் கண்களை திறந்து பார்க்க…. ஆதி அங்கு இல்லை. ஆஸ்வதிக்கு ஒன்றும் புரியவில்லை. இப்போது என்ன நடந்தது. ஆதி ஏன் அப்படி பார்த்தான் ஏன் இறக்கிவிட்டான் என்று ஒன்றுமே அவளுக்கு புரியவில்லை,.. ஆனால் அவள் மனதில் ஆதியின் பார்வை ஆழமாக பதிந்துவிட்டது.. அவனின் சிறுபிள்ளை தனமாக இருக்கும் நிலையும் அவனது பார்வைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் இருந்ததுஅதனை எல்லாம் ஆஸ்வதி மனதில் சந்தேகத்தை கிளப்ப….. யோசித்தவாறு அந்த அறையை நோட்டம்விட்டாள். ஆதி எங்கு சென்றான் என்று பார்க்க… ஆதி அப்போது தான் பால்கனியில் இருந்து அறைக்குள் வந்தான் அவன் பார்வை ஆஸ்வதியை தவிர எங்கும் அழைந்தது.. அவனை புரியாத பார்வை பார்த்த ஆஸ்வதி.. தன்னை சமன்செய்துக்கொண்டு மெத்தையில் இருந்து எழுந்தாள்.ஆதி எங்கே என்று பார்க்க…. பால்கனியின் கதவு திறந்திருந்ததை பார்த்துவிட்டு அங்கு செல்ல….. ஆதி கையில் ஒரு பறவையை வைத்துக்கொண்டு நின்றிருந்தான். அதனை ஆஸ்வதி ஆச்சரியமாக பார்த்தவாறு“ஆதி .. இங்க என்ன பண்றீங்க….”என்றாள் அவன் அருகில் சென்றவாறு..ஆஸ்வதியின் குரலை கேட்ட ஆதியின் உடல் ஒரு நிமிடம் இறுகி பின் இளகியது.. அவளை பார்த்தவாறு திரும்பி புன்னகைக்க…. அவன் அருகில் சென்றாள் ஆஸ்வதி..“ஏஞ்சல்.. இது என்னோட பேரட்…”என்று தன் கையில் வைத்திருக்கும் கிளி ஒன்றினை அவளிடம் காட்ட…..அவள் அப்போது தான் அதனை உற்று பார்த்தாள்.. பின் இதழ் விரிய புன்னகைத்தவள்“வாவ் ஆதி சூப்பரா இருக்கு.. இது யாரோட….”என்றாள் அதனை பயந்தவாறு வருடிக்கொண்டு“என்னோட பேரட் தான் ஏஞ்சல்.. ஆனா நா இதுக்கு கூண்டுலா பண்ல….. அதுனால இது அதோ அந்த மரத்துல தான் கூடு கட்டி வாழுது…”என்றான் மரத்தை காட்டிஅந்த மரம் என்றவுடனே ஆஸ்வதிக்கு ஆதி இன்று நடத்திய அந்த நிகழ்வு நியாபகம் வர….. அவள் உடல் நடுங்கியது.. அதனை உணர்ந்த ஆதி. அவளின் கைகளை அழுத்திக்கொண்டு.“நா ரொம்ப நல்ல மரம் ஏறுவேன் ஏஞ்சல் நானே கத்துக்கிட்டேன்.. தாத்தூக்கு மட்டும் தான் இது தெரியும் வேற யாருக்கும் தெரியாது.”என்றான்அதில் ஆஸ்வதி கொஞ்சம் சமாதானம் ஆனவள். அந்த கிளியை இன்னும் தொட்டுக்கொண்டு இருக்க…. ஆதி அவளை தான் இமைக்காமல் பார்த்தான்..“இந்த பேரட் ரொம்ப அழகா இருக்கு ஆதி.”என்றாள் அதனை கொஞ்சியவாறு..“ம்ம்ம். ஆமா வது. உன்ன மாறி.”என்றான் ஆதி கிறக்கமான குரலில்.அவனின் இந்த திடிர் குரல் மாற்றத்தை உணர்ந்த ஆஸ்வதி அவனை நிமிர்ந்து பார்க்க… ஆனால் ஆதியோ.. இப்போது நடந்ததற்கும் எனக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்பது போல் நிற்க….. ஆஸ்வதி ஒரு பெரும்மூச்சினை விட்டுவிட்டு…கிளியை கொஞ்சிக்கொண்டு இருந்தாள்..இப்படியே ஆஸ்வதியை பார்த்து அனைவரும் முறைத்த வண்ணம் நாட்கள் ஓட…ஆஸ்வதி அந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.. இந்த வீட்டிற்கு அவள் வந்ததில் இருந்து அவள் நிறைய மாறி இருந்தாள்.. அதிர்ந்து கூட பேசாதவள் தன்னவனுக்காக ஒருவனை அடித்திருந்தாள்.. அனைவரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தாள்..ஆதியை நன்றாக பார்த்துக்கொண்டாள்.. அவனுக்கு நல்ல தோழியாக மாறி இருந்தாள்.. அவனுக்கு எதற்கும் ஆஸ்வதி வேண்டும் அவன் ஒவ்வொரு முறை ஏஞ்சல் ஏஞ்சல் என்று கூப்பிடும் போது எல்லாம் ப்ரேம் உச்சக்கட்ட கடுப்பில் உலன்றான்.இப்படியே நாட்கள் ஓட அன்று இரவு ஆஸ்வதி கண்டவனை திரும்ப அவள் பார்க்கவில்லை.. ஆனால் அவள் மனம் எந்நேரமும் அலர்ட்டாக இருந்தது. அன்று வந்தவனை பற்றி அவள் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை ஆஸ்வதி வந்த அந்த வாரத்திலே அனைவரது எதிரியாக மாறிவிட்டாள்.. அவள் இருக்கும் போது அவனிடம் யாராலையும் நெருங்க கூட முடியாத அளவிற்கு அவனை பாதுக்காப்பாக வைத்திருந்தாள்.. அவனிடம் நெருங்குவது. விதுன், தாத்தா, அனி மட்டுமே.. ரக்ஷனா கூட ஆதியை தூர இருந்தே பார்த்துவிட்டு செல்வாள்ஆஸ்வதியின் இந்த செயல் தாத்தாவிற்கு நிம்மதியை அளித்தது. அவருக்கு இருக்கும் வேலையில் அவரால் ஆதியை எந்நேரமும் தன்னிடமே வைத்துக்கொள்ள முடியவில்லை. அதனாலே ஆதி நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டான் அதற்கு தான் அவர் முதலில் அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றே நினைத்தார்..இல்லையென்றால் அவர் ஏன் ப்ரேம் இருக்கும் போது முதலில் ஆதிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று யோசிக்க போகிறார்..இப்போது அவர் மனம் நிறைந்திருந்தது ஆனால் அதனை கெடுப்பது போல தான் அவருக்கு ஒரு செய்தி வந்தது.. அது தான் அபூர்வா கணவரின் விபத்து..அன்று சனிக்கிழமை அனைவருக்கும் விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருக்க……அன்று போல் இன்றும் ஆதி ஆஸ்வதியுடன் விளையாடிக்கொண்டே ஆஸ்வதி கையில் இருந்த எண்ணெய்யை கீழே தள்ளிவிட்டுவிட்டான். ஆதி பயந்தவாறு உதடு பிதுங்க ஆஸ்வதியை நோக்க….ஆனால் ஆஸ்வதியோ அவனை ஒரு சொல் கூட கேட்காமல்“பரவால ஆதி தெரியாம தானே கொட்டிச்சி.. தொடச்சா போய்ட போகுது…’என்று உள்ளே சென்று அதனை துடைக்க துணி எடுத்து வர போக…..அதற்குள் அந்த பக்கம் வந்த அதிதி அந்த எண்ணெய்யில் காலை வைத்துவிட்டாள்.. உடனே அவள் வழுக்கி கீழே விழ…..“ஆஆ,. அம்மா.”என்று அந்த வீடே அதிர கத்திவிட்டாள் அவள் குரலுக்கு அனைவரும் தங்கள் அறையில் இருந்து ஓடிவர…. அதிதி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அபூர்வா ஒரு போருக்கே தயார் ஆகிவிட்டார்.“யாரோட வேலை இது எவ்வளவு நாளா இந்த வேலை இங்க நடக்குது.. என்னையும் என் பொண்ணையும் கொல்ல தானே இங்க எண்ணெய்ய ஊத்தி வச்சிருக்கீங்க….”என்று கத்த….ஆதி அவரை பார்த்தவாறு..”நா தான் அத்த தெரியாம கொட்டிட்டேன் சாரி..”என்றான்அதை கேட்ட அபூர்வா இன்னும் கோவத்துடன் அவன் அருகில் நெருங்கி.”உனக்கு துளிர் விட்டு போச்சி இல்ல…..பயம் இல்லாம சுத்துற….. அதுனால தானே இன்னிக்கி இப்டி ஒரு வேலைய பார்த்துருக்க… உன்ன அந்த ரூம்ல அடைச்சி போட்டு ரொம்ப நாள் ஆகிதுல….. அதான்.. வா இன்னிக்கி உன்ன அங்க போய் அடைச்சா தான் சரி வருவ….”என்று ஆதியை குரோதத்துடன் பார்த்து கூற….அதில் ஆதி பயந்தவாறு.”இல்ல இல்ல அத்த நா தெரியாம பண்ணிட்டேன்..”என்று அவன் கெஞ்ச….அபூர்வா அதை எல்லாம் காதில் கூட வாங்காமல் அவனை இழுத்துக்கொண்டு அந்த இருட்டு அறை நோக்கி செல்ல….. ஆதி கதறினான்..“ஏஞ்சல் ஏஞ்சல்.. என்னை காப்பாத்து…”என்ற் அவன் கத்த….“நல்ல கத்து அவ வந்தா மட்டும் உன்ன விட்டுடுவனா வரட்டும் இன்னிக்கி அவ… அவளையும் உன்னோட சேர்த்து உள்ள போட்டு பூட்றேன்.”என்று கத்தியவாறு அவனை இழுக்க….அங்கு அனைவரும் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். இதில் விதுன் தாத்தா இருவரும் வேலை விசியமாக வெளியில் சென்றுவிட…. அனி தன் தோழிகளுடன் ஷாப்பிங் சென்றுவிட்டாள் ரக்ஷனா அங்கு இருந்தாலும் அவளால் ஒன்றும் செய்ய முடியாது.விஷால் அவர்கள் செய்யும் எதிலும் பங்கும் கொள்ளமாட்டான். எதிர்த்தும் நிற்கமாட்டான் ரூபாவதி தன் மகளை அழைத்துக்கொண்டு கணவர் ஊருக்கு போய் இருக்க….. ஆதியை காப்பாற்ற யாரும் இல்லைஅவனை இழுக்க….. அவன் கதற….. ஒரு கட்டத்தில் அபூர்வாவால் அவனை இழுக்க முடியவில்லை என்ன இது என்று அவர் திரும்பி அவனை பார்க்க….. அவன் பார்வை முழுதும் தனக்கு பின்னால் இருக்க….. அவனை தாண்டி பார்க்க…. அங்கு ஆஸ்வதி ஆதியின் இன்னொரு கையை இறுக்க கட்டிக்கொண்டு நின்றாள்.அதில் கடுப்பான அபூர்வா. “விடு அவன……”என்றார் “முடியாது.”என்றாள் ஒரே வார்த்தையில்.“ம்ச். அவன் பண்ணுன தப்புக்கு தான் நான் தண்டன கொடுக்க போறேன்.”என்றார் அபூர்வா திமிராக….“ஓஓ…. அப்போ தப்பு செய்ற எல்லாருக்கும் இங்க தண்டன கெடச்சிடுதா…”என்றாள் ஆஸ்வதி.நிமிர்வாக நின்றவாறேஅவளின் இந்த நிமிர்வு இன்னும் அபூர்வாவை கடுப்பேற்ற…. “ம்ச்.. அவன் செஞ்சதுக்கு நா தண்டன கொடுத்து தான் ஆவேன்..”என்றார் அவளை முறைத்துக்கொண்டே ஆதியின் கையை தன்னை நோக்கி இழுத்தவாறேஆனால் அவரால் அவனை ஒரு சதவீதம் கூட அங்கிருந்து நகர்த்த முடியவில்லை ஏனென்றால் ஆஸ்வதியின் பிடி அப்படி இருந்தது.’பாக்க இத்துநூண்டா இருந்துகிட்டு இவளுக்கு இவளவு சக்தியா என்று அங்கு நின்ற அனைவரும் அவளையே ஆச்சரியமாக பார்க்க….ஆஸ்வதி கூலாக…..”இப்போ என்னாச்சி..”என்றாள் ஆஸ்வதி அழுத்தமான குரலில்..அதில் அபூர்வா அவளை பார்த்தவாறே “நா உன்ட பேச வரல…..”என்றார் அவளை முறைத்துக்கொண்டு.. ஆதியின் கையை இழுத்தவாறு.“உங்கள்ட பேச எனக்கும் ஒன்னும் இல்ல தான் ஆனா. நீங்க இப்போ பேசுறது என் புருஷன பத்தி..”என்றாள் அபூர்வாவை அழுத்தமாக பார்த்தவாறுஅதில் அபூர்வா அவளை பார்த்து முறைக்க ஆஸ்வதி அவரது பார்வையை தைரியமாக எதிர்க்கொண்டாள். அதனை சுத்தி நின்ற அனைவரும் ஆஸ்வதியை எரிக்கும் பார்வை பார்த்தனர்…“என்ன நேத்து வந்தவ நீ எங்கள நிக்க வச்சி கேள்விக் கேட்குற……”என்றார் பரத் அவளை முறைத்தவாறு.“எப்போ வந்தங்குறது இங்க முக்கியம் இல்ல… என் வீட்டுக்காரருனால இங்க என்ன பிரச்சனைக்குறது தான் இப்போ முக்கியம்..அவரு என்ன பண்ணுனாறு. இப்போ எங்க அவர கூட்டிட்டு போறீங்க……”என்றாள் ஆதியை தன்னை நோக்கி இழுத்து தனக்கு பின்னால் நிற்க வைத்தவாறே கையை கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றவாறு.அவளது இந்த நிமிர்வில் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனார்கள்.. இதுவரை யாரும் அவர்களிடம் இப்படி பேசியதில்லை.. அவர்கள் தகுதிக்கு கீழ் உள்ளவர்களை அவர்கள் தங்கள் அருகில் கூட சேர்க்க மாட்டார்கள்.. அப்படி இருக்க இப்படி தங்கள் தகுதிக்கு கொஞ்சமும் ஒத்துவராதவளை எப்படி தாங்கள் மருமகளாய் ஏற்றுக்கொள்வது என்பது அனைவரது எண்ணமாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவர்களின் எண்ணம் முழுதும் ஆதித்திற்கு திருமணம் ஆனது தான் அவர்களால் அதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இந்த வீட்டில் ப்ரேம்.. விஷால் கூட தான் இருக்கிறார்கள்.. அவர்களும் தான் பெரியவருக்கு பேரன். ஆனால் பெரியவர் அவர்களை எல்லாம் ஒரு அளவிற்கு மேல் தங்களை நெருங்கவிட்டது இல்லை. ஆனால் ஆதித்தை மட்டும் சிறிய வயதில் இருந்து பெரியவர் தன் மடியிலே தான் வைத்திருப்பார்.. அது என்னமோ.. ஆதித்தை பார்க்கும் போது தாத்தாவிற்கு அவரது மகன் விஷ்ணு போல் தான் தோன்றும்.. விஷ்ணு கூட ப்ரேமை பெரியவரிடம் தூக்கி வந்து கொடுக்க ஆனால் தாத்தா ப்ரேமை அதிகம் கொஞ்ச மாட்டார்.. அதுவே அங்கு அனைவரது வெறுப்பையும் ஆதித்தின் மீது பல மடங்காக உயர்ந்ததுஇதனாலே அடிக்கடி அந்த வீட்டில் பிரச்சனை வரும்.. அனைத்து நேரத்திலும் விஷ்ணு தான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து வைப்பார்.. அதனை தாத்தா கண்டித்தாலும்..”அப்பா. நாமளா ஒரே குடும்பம்ப்பா. அவங்களா என் அண்ணா..தங்கை தானே. அவங்ககிட்ட போய் எனக்கு என்னப்பா ஈகோ…”என்று அவரை சமாதானம் செய்து வைப்பார்.. ஆனால் ஆதித்தின் மேல் தாத்தாவிற்கு இருந்த அன்பு இன்னும் அதிகமானதே தவிர குறையவில்லை. அதில் இன்னுமே அவர்கள் அனைவருக்கும் கோவம்.“அவன் போன வாரத்துல இருந்து தான் உன் புருஷன். அதுக்கு முன்னாடி எங்க வீட்டு பிள்ளை…”என்றார் பரத்“உங்க வீட்டு பிள்ளையா.”என்று அனைவரையும் ஆஸ்வதி பார்த்து ஒரு நக்கல் புன்னகை சிந்த…அதனை பார்த்த அனைவரும் அவளை முறைத்தனர்.. ஆஸ்வதி அதனை கண்டுக்கொள்ளாமல்..”ஆதி..”என்று அவனை அழைக்க… அதனை கேட்டு அதுவரை ஆஸ்வதியையே பார்த்துக்கொண்டிருந்தவன்..“என்ன ஏஞ்சல்..”என்றான் அபூர்வாவை பயந்து பார்த்தவாறு“நீங்க சொல்லுங்க ஆதி இங்க என்ன நடக்குதுனு..”என்றாள் அனைவரையும் முறைத்துக்கொண்டு..அதில் அனைவரும் ஆஸ்வதியை கொல்லும் அளவிற்கு வெறி ஏறியது..

(வருவாள்)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!