அத்தியாயம்-22 “அது.. அது வந்து.”என்று அங்கு தன்னை சுற்றி நிற்கும் பரத். ரியா…பூனம்..ப்ரேம் அனைவரையும் பயத்துடன் பார்த்தவாறே ஆதி நிற்க… “ஆதி.. எதுக்கு இப்போ பயப்படுறீங்க….. உங்க ஏஞ்சல் உங்க பக்கத்துல தானே நிற்குறேன் யாரும் உங்கள ஒன்னும் பண்ண மாட்டாங்க… நா பண்ணவும் விடமாட்டேன்..”என்றாள் ஆஸ்வதி சுற்றி நிற்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே.. அதை கேட்ட அபூர்வா அவளை முறைக்க…. அதனை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “ம்ம். சொல்லுங்க ஆதி…”என்றாள்.. “இல்ல ஏஞ்சல் நா தெரியாம ஆயில கொட்டிட்டேன்ல….. ம்ம்.. ம்ம். அதுல அதிதி தெரியாம கால வச்சிட்டா. அப்புறம் கீழ விழுந்துட்டா.. அதுக்கு அத்த அத்த கோவமா என்னை அந்த டார்க் ரூம்ல அடைக்க போறாங்களாம். நா தெரியாம தானே ஏஞ்சல் செஞ்சேன். உனக்கு கூட தெரியும்ல….. ஆனா அத்த அத நம்பமாட்றாங்க… நீ கூட சொன்னல தெரியாம தப்பு செஞ்சா மன்னிப்பு கேட்கனும்னு நா அவங்ககிட்ட சாரி கேட்டேன். ஆனா அத்த என்னை ஃபர்கிவ் பண்ல…. பனிஷ் பண்ண போறாங்களாம்..”என்றான் ஆதி கண்களில் பயத்துடன் ஆஸ்வதியை பார்த்து. “ஓஓ….. தப்பு செஞ்சா மன்னிப்பு கேட்டா சரி ஆகிடுமா.. அதிதிக்கு மட்டும் பெருசா எதாவது அடிப்பட்டா என்ன பண்றது.”என்று கத்தினார் அபூர்வா.. அதை கேட்ட ஆஸ்வதி கூர்மையாக அபூர்வாவை பார்த்தவாறே. “ஆதி.”என்றாள் அழுத்தமான குரலில்.. அவளது குரல் அந்த ஹாலையே நிறைக்க…. “ஹான் ஏஞ்சல்..”என்று அவள் அருகில் நெருங்கி நின்றான். ஆஸ்வதி ஆதியை ஒருதரம் அழுத்தமாக பார்த்துவிட்டு..அவன் மேலே அணிந்திருந்த ஜிப்பாவை லைட்டாக தூக்கி அவனது வயிற்றில் இருந்த காயத்தை அனைவரும் பார்ப்பது போல காட்டியவள்…”இது தான் உங்க வீட்டு பிள்ளைக்கு நீங்க தர பரிசோ.. இதுக்கு.. பேரு என்ன….. நீங்க சொன்னது மாதிரி ஆதிய நீங்க தண்டிங்க… அப்புறம் ஆதியை யாரு இப்டி பண்ணுனாலோ அவங்கள நா தண்டிச்சிக்கிறேன்.”என்றாள் நக்கலாக…. அதை கேட்ட அனைவரது முகமும் ஒரு நிமிடம் அதிர்ச்சியை காட்டி பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் தலையை திருப்பிக்கொண்டனர் அவர்கள் அனைவரையும் ஒரு வெறுப்பு பார்வை பார்த்துவிட்டு.”ஆதி இனி நீங்க யாருக்கும் பயப்பட வேணாம்,.. உங்களுக்கு இவங்க யாரு எந்த தொந்தரவு கொடுத்தாலும் அத நா பாத்துக்குறேன்.”என்றாள் ஆதியின் கையை இறுக்கிக்கொன்டு. அதனை கேட்டு அனைவரும் அவளை வஞ்சகமாக பார்க்க…. அப்போது தான் வீட்டின் உள்ளே வந்த தாத்தாவை பார்த்த ஆஸ்வதி ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு ஆதியுடன் தன் அறைக்கு சென்றுவிட்டாள். தாத்தா போகும் ஆஸ்வதியையே நிம்மதியுடன் பார்க்க… அங்கு நின்ற அனைவரும் அவரை முறைத்துக்கொண்டு நின்றனர்.. “இவரு மட்டும் இவள இந்த வீட்டுக்குள்ள கொண்டு வரலனா நம்ம தான் இங்க ராஜியம் பண்ணிட்டு இருப்போம்.ச்ச…. எல்லாம் இவரால வந்தது..”என்று அனைவரது மனதிலும் அவரை கரித்துக்கொட்ட….. அதனை அவர் உணர்ந்தாலும் கண்டுக்கொள்ளாமல் தன் அறைக்கு சென்றுவிட்டார் இப்படியாக நாட்கள் வேகமாக ஓட…. இன்றுடன் ஆஸ்வதி அந்த வீட்டிற்கு வந்து 1மாதம் ஆனது இடையில் ஆதியின் கண்கள் ஆஸ்வதியையே வட்டமடித்தது அதனை அவள் கண்டாளோ இல்லையோ விதுன் நன்றாக அதனை கண்டுக்கொண்டான். ஆஸ்வதியை அடிக்கடி ஆதி இடையில் வருடுவது.. பிள்ளை போல கொஞ்சி அவளுக்கு முத்தம் வைப்பது என்று ஒவ்வொரு செயலிலும் அவளை இம்சித்து வந்தான்.. அதை எல்லாம் செய்யும் போது ஆஸ்வதி உருகுலைந்து போனாள்.. அவனின் தொடுகை அவளை இம்சித்தது ஆனால் அவன் இருக்கும் இந்த நிலையில் தாம் இவ்வாறு நடப்பது அவளுக்கே பிடிக்கவில்லை.. ஆனால் ஆதியோ ஆஸ்வதியை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவளை காதலித்த மனம் அவனை சும்மா விடாமல் அவளை இம்சிக்க வைத்தது.. விதுனுக்கோ .. அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதியின் மீது கொஞ்சம் சந்தேகம் அதும் ஆஸ்வதி வந்ததில் இருந்து ஆதி விதுனின் சந்தேகத்தை அதிகப்படுத்தினான். ஆஸ்வதியை கண்களில் மொத்த காதலையும் வைத்து பார்ப்பது அவளை பின் தொடர்ந்துக்கொண்டே இருப்பது அவளுக்கு எதாலோ.. யாராலோ. ஆபத்து போல எப்போது பார்த்தாலும் கண்காணித்துக்கொண்டே இருப்பது போல அனைத்தும் அவனது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.. இதனை பற்றி அறிய விதுன் ஆதியை நெருங்கும் போது எல்லாம் ஆதி அவனை விட்டு விலகி ஓட ஆரம்பித்தான் “ஆதி.உங்கிட்ட….”என்று அவன் ஆரம்பிக்கும் போது எல்லாம்.ஆதி “ஏஞ்சல் கூப்டியா…”என்று கூப்பிடாத ஆஸ்வதி பின்னால் ஓடிவிடுவான்.. அதை பார்த்து விதுனுக்கு சிரிப்பு தான் வந்தது. அன்று அபூர்வா செய்த பிரச்சனையின் போது ஆஸ்வதி பேசியதில் இருந்து யாரும் அவர்களை தொல்லை செய்யவில்லை.. அதற்காக ஒரடியாக அவளை விடவில்லை கொஞ்சம் நாட்கள் தள்ளிப்போட்டு ஆஸ்வதியை பழிவாங்க சமயம் பார்த்துக்கொண்டு இருந்தனர் அன்று நடந்த பிரச்சனையில் இருந்து விஷால் ஆஸ்வதியின் ரசிகனாக மாறிவிட்டான் “அது எப்டி அண்ணி.. எங்க அத்தையையே எதிர்த்து பேசுனீங்க… அத எனக்கும் கத்துக்கொடுக்களேன்…தொல்ல தாங்கல…..”என்று ஆஸ்வதியின் பின்னாலே சுற்றினான். ஆஸ்வதி விஷாலின் காதை திருகி “அதுலா ரகசியம் வெளியில சொல்லப்படாது…”என்று அவனை கிண்டல் செய்துவிட்டு போக… அதை பார்த்த அதிதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.. அதிதிக்கு தன் ஆளுமையை இந்த வீட்டில் காலம் முழுதும் நிலை நாட்ட வேண்டும் என்றால் தன் மாமாக்களின் எதாவது ஒரு மகனை திருமணம் செய்து இங்கையே செட்டில் ஆக வேண்டும். அதற்கு அவள் தேர்ந்தெடுத்தவனே விஷால்.. ப்ரேமிற்கும் அதிதிக்கும் ஏழாம் பொருத்தம்.. இருவரும் ஒரே மாதிரி என்பதால் இருவருக்கும் பிடித்தம் இல்லை ஆதியோ.. இவள் பக்கம் கூட வரமாட்டான் அதும் இப்போது அவன் இருக்கும் நிலையில் அதிதிக்கு அவனை பிடிக்கவில்லை.. அடுத்து இருப்பது விஷால் தான் அதையும் கெடுப்பது போல் ஆஸ்வதி விஷாலிடம் பேசுவது அவளுக்கு பிடிக்கவில்லை.. அதும் இந்த வீட்டில் உள்ள அனைவரும் அவளை எதிரியாக பார்க்க இவன் மட்டும் பேசினால் இதனை விஷாலிடமே கேட்கலாம்.. ஆனால் அவன் இவள் செய்யாதே என்று சொல்வதை தான் செய்வான்.. அதனாலே ஆஸ்வதியிடம் பேச சென்றாள்.மனதில்.. “இவளாம் ஒரு ஆளு இவளுக்கிட்ட என்னை பேசுற நிலைக்கு கொண்டு வந்தானே அவன சொல்லனும்..”என்று திட்டிக்கொண்டே இருந்தாள்… ஆஸ்வதி விஷாலிடம் பேசிவிட்டு தன் வேலையை பார்க்க கிட்சனுக்குள் நுழைய……அதிதி அவளை பிந்தொடர்ந்து வந்தாள். ஆஸ்வதி கிட்சனில் அடுப்பில் எதோ கிண்டிக்கொண்டு இருக்க….. அதிதி உள்ளே வந்து. “ஏய்…”என்றாள் அதிகாரமாக…. ஆனால் ஆஸ்வதி அவள் பக்கம் திரும்பாமல் வேலைப்பார்க்க……அதில் கடுப்பானவள் “ஏய் உன்ன தான்.”என்றாள் கொஞ்சம் சத்தமாக…. ஆனால் இம்முறையும் ஆஸ்வதி திரும்பாமல் இருக்க….. “ஏய் ஆஸ்வதி..”என்றாள் பல்லை கடித்துக்கொண்டு. அதை கேட்டு சாவகாசமாக திரும்பியவள்.. “என்ன ஏய் அதிதி.”என்றாள் அவளை போல… அதில் கோவமானவள்..”ஏய் யார பார்த்து ஏய்னு சொன்ன……”என்றாள் “உன்ன பார்த்து தான் அதிதி நீ சொல்லல என்னை அதான்…”என்றாள் தன் வேலையை தொடர்ந்துக்கொண்டே. “ப்ச்.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை பேர் சொல்லி கூப்டுவ… என் தகுதிக்கு நா உங்கிட்டலா பேசவே கூடாது.”என்றாள் அதிதி “ம்ச். அப்போ பேசாத…..”என்றாள் ஆஸ்வதி வெடுக்கென்று அதில் இன்னும் கோவமானவள்…”எனக்கும் ஒன்னும் உங்கிட்ட பேச ஆசை இல்ல….. இனி விஷால் கூட பேசாதனு சொல்லதான் வந்தேன்…”என்றாள் அதிதி “ம்ம்ம். உனக்கு பேச பிடிக்கலனா பேசாத… அது மாறி விஷாலுக்கு பேச பிடிக்கலனா என்ட பேசாம இருக்கட்டும் அத அவரே என்ட சொல்லட்டும்.. நீ யாரு அத சொல்ல…..”என்றாள் ஆஸ்வதி கூலாக அதை கேட்டு கடுப்பானவள்.”ம்ச்.. உனக்கு அறிவிருக்கா.. உனக்கு தான் அந்த பைத்தியக்காரன்.”என்று முழுதாக முடிப்பதற்குள் ஆஸ்வதி கை இடியென அதிதியின் கன்னத்தில் பதிந்திருக்க… இப்போது என்ன நடந்தது என்று அதிதி கன்னத்தில் கை வைத்துக்கொண்டு ஆஸ்வதியை அதிர்ச்சியுடன் பார்க்க……”இன்னொரு முறை அவர எதாவது சொன்ன கொன்றுவேன்..”என்றாள் ஆஸ்வதி ஒற்றை விரலை அதிதியின் முன் ஆட்டி.. ஆஸ்வதியின் இந்த திடீர் செயலை அதிதி அதிர்ச்சியுடன் பார்க்க… ஆஸ்வதி அவளை முறைத்துக்கொண்டே நிற்க…..”ஏய்.. இப்போ நீ என்ன பண்ணுன… என்ன அடிச்சியா..”என்று அதிதி ஆஸ்வதியை கண்களில் வெறியுடன் கேட்க… ஆஸ்வதி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ஆம் என்று தலை ஆட்ட….. அதில் இன்னும் வெறியான அதிதி ஆஸ்வதியை அடிக்க கை ஓங்க….. அதனை அழகாக பிடித்த ஆஸ்வதி அதிதியை திருப்பி.. அவள் கையை முறுக்கிக்கொண்டே.. “மரியாதங்கறதே சுத்தமா இல்லையா உங்கிட்ட…. ம்ம். இந்த வீட்டோட முதல் மருமக நான் அந்த மரியாத கொஞ்சம் கூட இல்லாம கை ஓங்குற அடிக்க… ம்ம். உன் மாமா பையன் தானே ஆதி அவர பைத்தியம்ங்குற…. என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல….”என்று பேசிக்கொண்டே அவள் கையை இன்னும் முறிக்க….. அதில் உண்டான வலியில் அதிதி ஆஆஆஆ…. என்று கத்தினாள். “என்ன வலிக்கிதா.. ம்ம். பேசாம ஒதுங்கி போனா. உனக்கு பயந்து போறேனு நினைப்போ. கொன்றுவேன். உன் அதிகாரத்த எல்லாம் வேற யார்கிட்டையாச்சும் காட்டு எங்கிட்ட வேணா.போ..”என்று அவள் கையை வெடுக்கென்று விட்டு தள்ளிவிட… அதில் அதிதி சுவற்றில் மோதி நின்றாள்.. அதிதி ஆஸ்வதியிடம் இப்படி ஒரு செயலை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவள் முகத்தில் இருந்த அதிர்ச்சியே காட்டிக்கொடுத்தது.. அனைவரையும் வேலை வாங்கியும். தனக்கு கீழே கொண்டு வந்தும். அவமானப்படுத்தியும் பழக்கப்பட்டு போன அதிதிக்கு ஆஸ்வதி தன்னை அறைந்ததை இன்னும் நம்ப முடியவில்லை.. ஆஸ்வதியையே அதிர்ச்சியுடன் அதிதி பார்க்க…. அதை திரும்பி நின்று சமையல் மேடையில் வேலை பார்த்துக்கொண்டே இவளையும் ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டு இருந்த ஆஸ்வதி.. “என்ன இன்னுமா உனக்கு நா அடிச்சது நம்ப முடில….. வேணும்னா இன்னொரு தடவ நம்பவைக்கவா…”என்றாள் ஆஸ்வதி கேலியாக அதில் அதிதி மிரண்டு போனாள். பின் யாருமே இதுவரை அடித்திடாதவளை முதல் முறை ஆஸ்வதியின் அறை அவளை பயமுறுத்தியது…அவசரமாக ஆஸ்வதிக்கு ஒரு முறைப்பை கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள். விஷால் தான் இதை கண்டுவிட்டு ஆஸ்வதியிடம் சொல்லி ஒரே சிரிப்பு..”அண்ணி உங்ககிட்ட நிறைய திறமை இருக்கு அண்ணி.. இல்லனா வந்த இந்த வன்மந்த்லயே எங்க அத்தைய அடக்கிறுக்கீங்க…. அவங்க பெத்த அந்த சண்டிராணிய அடைக்கிருக்கீங்க… இன்னும் உங்ககிட்ட என்ன திறமைலா இருக்கோ. ஆதி அண்ணா ரொம்ப லக்கி..”என்று ஆஸ்வதிக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்திவிட்டான் அவன் பேசுவதை எல்லாம் ஆஸ்வதி அருகில் உட்கார்ந்து விளையாடுவது போல் கேட்டுக்கொண்டு இருந்தான் ஆதி அவன் மனதிற்கு ஆஸ்வதியின் மீது இன்னும் காதல் கூடியது. ஆனால் அதே நேரம் அவளுக்கு இவர்களால் எதும் தவறாக நேர்ந்திட கூடாது என்றூம் பயமாக இருந்தது “ம்ச். அதலா சும்மா விஷால் உன்ன விட நா திறமை கம்மியானவ தான்…”என்றாள் ஆஸ்வதி.. அவள் சொல்வது புரியாமல் ஆதியும். விஷாலும் அவளை பார்க்க….. “ஆமா. இல்லனா வீட்டுக்குள்ளையே ஒரு லவ் மூவிய ஓட்டுவியா..”என்றாள் ஆஸ்வதி கண்களில் குறும்புடன். முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு. அதனை கண்ட விஷால் அவளை அதிர்வுடன் காண…. ஆதியோ அவளை புரியாமல் பார்த்தான்..