உயிர் போல காப்பேன்-23

4.8
(16)

அத்தியாயம்-23
அதை கேட்டு அதிர்ந்த விஷால் திருதிருவென்று முழிக்க… ஆதி இவள் என்ன சொல்கிறாள் என்பது போல பார்த்தான்..
“ம்ம்ம் என்ன விஷால்.”என்று ஆஸ்வதி அவனை கேலியாக பார்க்க…..
“ம்ம்.. அது அது வந்து அண்ணி..”என்று அவன் இழுக்க…
ஆஸ்வதி கையை கட்டிக்கொண்டு அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்…அதில் விஷால் அசடாக சிரிப்பை சிரித்துவிட்டு..
“ராக்ஷிய எனக்கு சின்ன பிள்ளையில இருந்து பிடிக்கும் அண்ணி இத்தனைக்கும் அவ எங்கூட பேசுனது கூட இல்ல… இந்த வீட்ல ஆதி அண்ணா அனி இவங்க ரெண்டு பேரும் மட்டும் வித்தியாசமானவங்க இல்ல….. என் ராக்ஷியும் தான் அவ இருக்குற இடமே தெரியாது.. சின்ன பிள்ளையில இருந்து அவள நா ரொம்ப கவனிச்சது இல்ல….. ஆனா இப்போ தான் கொஞ்ச நாளா அவ என் கண்ணுக்கு என் தேவதை மாறி தெரிறா…”என்றான் கண்களை மூடி கனவில் பேசுவது போல…..
அவன் பேச பேச ஆதி அவனை வித்தியாசமாக பார்த்தான்.. ஏனென்றால் விஷால் ரொம்ப அமைதி. அவன் வேலையை அவன் பார்ப்பான்.. தேவை இல்லாமல் யாருடனும் பேசமாட்டான்.. ஆதியுடன் கூட அவ்வளவாக பேசமாட்டான் ஆனால் விஷால் இப்போது பேசுவதை அதிசயம் போல பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதி.
“ம்ம்ம். சோ.. உன் அதிதி லவ்வ என்னப்பா செய்றது..”என்றாள் ஆஸ்வதி
அதை கேட்டு முகத்தை சுருக்கிய விஷால்…”அய்யோ அண்ணி. நா வாழ்க்கை முழுதும் கல்யாணம் பண்ணாம இருக்க தயார் ஆனா தயவு செஞ்சி அந்த காட்டெரிய எங்கூட கோத்துவிட்றாதீங்க….”என்றான் இருகைகளையும் கோர்த்துக்கொண்டு.அவளை கெஞ்சிவது போல்.
“நா எதும் பண்ல பட் அவதான் அப்டி சொல்லிட்டு சுத்றா. என்னனு பாத்துக்கோ..”என்று ஆதியை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
விஷால் ஆஸ்வதியுடன் பேசுவதை பார்த்து அபூர்வா அவனை கண்டிக்க….”ம்ச்.. அத்த நா ஒன்னும் சின்ன பிள்ளை இல்ல….. அவங்க கூட பேசாத இவங்க கூட பேசாதனு அடக்க…. இன்னும் கொஞ்ச நாளுல நா பிஸ்னஸ் பாக்க போறேன். நா யார் கூட பேசனும் பேசகூடாதுனு ஐ நோ…”என்று கடுமையாக சொல்லிவிட்டு போக….
அவன் பேசியதை அப்படியே அஜயிடம் போய் அபூர்வா சொல்ல……”அவன் விஷ்யத்துல நா தலையிட முடியாது அபூர்வா அவன் எனக்கு ஒரே பிள்ளை நா எதாவது சொல்ல போய் அவன் நா உங்க பிஸ்னஸ பாக்க மாட்டேனு சொல்லிட்டானு வை என்னால ஒன்னும் பண்ண முடியாது…விடு.. இது ஒன்னும் பெரிய விசயம் இல்ல……”என்று தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்
ரியாவிடம் இதை பற்றி பேசவே முடியாது.. ஏனென்றால் அவள் ஏற்கனவே விஷாலின் செல்ல அம்மா அவர் எதாவது பேசினால் விஷால் எப்படியாவது அவரை சரிக்கட்டிவிடுவான்.. அதனாலே அபூர்வா கடுப்பில் சுற்றினார்
அன்று அனைத்து ஆண்களும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு சென்றுவிட மீதம் இருந்தவர்கள் சாப்பிட்டதற்கு பின் அனைவரும் அவர்கள் ஆபிஸ், க்ளப், என்று சென்றுவிட…..தாத்தாவும் தன் நண்பனை பார்க்க சென்றுவிட ஆதியும், ஆஸ்வதியும் மட்டுமே வீட்டில் இருந்தனர்..
அன்று நடந்த பிரச்சமைக்கு அப்புறம் அதிதி ஆஸ்வதியின் பக்கம் கூட வராமல் இருக்க….. ராக்ஷி மட்டும் ஆஸ்வதியிடம் நட்பு பாராட்டினாள்.. ஆஸ்வதியின் ஆதி மீதான அக்கறை அவளுக்கு மிகவும் பிடித்தது. அதனாலே அவள் ஆஸ்வதியை தேடி வந்து பேசினாள்.. ஆஸ்வதிக்கும் அப்படி தான். ராக்ஷியை பிடித்தது..
ஆஸ்வதி தன் அறையில் உட்கார்ந்து ஆதியையே பார்க்க…. ஆதி எதையோ கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தான் அவனுக்கு ஆஸ்வதியின் பார்வை குறுகுறுப்பை ஏற்படுத்த…
“என்ன இவ இப்படி பாக்குறா.”என்று மனதில் நினைத்துக்கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு இருந்தான்
“ஆதி..”என்று ஆஸ்வதி அவனை கூப்பிட…
“ஹான் என்ன ஏஞ்சல்..”என்றான் உடனே..
“ம்ம்ம். உங்களுக்கு விதுன் அண்ணாவ சின்ன பிள்ளையில இருந்து பிடிக்குமா.. இல்ல இப்போதானா.”என்றாள்
“ம்ம்ம். விதுன நா இப்போதான் பாக்குறேன் ஏஞ்சல்…”என்றான் அவளை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தவாறு
அதனை கேட்ட ஆஸ்வதி முகம் அவனை சந்தேகமாக பார்க்க… ஆதியோ குழப்பத்தில் இருந்தான்..
இப்படியாக அன்று நாள் ஆஸ்வதிக்கு எந்த வித வித்தியாசமும் இல்லாமல் ஓட….
“ஏஞ்சல் நா இன்னிக்கி தாத்தா ரூம்ல படுக்க போறேன்.”என்றான் ஆதி
“ஏன் ஆதி…”என்றாள்
“ம்ம். இல்ல தாத்தாகூட இருக்கனும் போல இருக்கு அதா..”என்றான்
அதை கேட்டதும் ஆஸ்வதி அவனை சந்தேகமாக பார்த்தவாறு.சரி என்று தலை ஆட்ட… ஆதி அங்கிருந்து ஓடிவிட்டான்
ஆஸ்வதியின் பார்வை இப்போதேல்லாம் ஆதியை சந்தேகமாக நோக்குவதை அவனும் அறிந்து தான் இருந்தான் எதனால் இப்படி அவள் தன்னை இம்சிக்கும் பார்வை பார்க்கிறாள் என்று ஆதி யோசிக்க….. அப்போது தான் அவனுக்கு அந்த நாள் நியாபகம் வந்தது
ஆஸ்வதி இந்த வீட்டிற்கு வந்து முழுதாக 3மாதம் ஓடி இருந்தது. அப்போது ஒரு நாள் ஆஸ்வதி தங்கள் அறையை சுத்தம் பண்ண நினைத்தவள். ஆதியிடம்
“ஆதி நம்ம ரூம நா க்ளீன் பண்ண போறேன் இங்க இருந்த உங்களுக்கு டஸ்ட் அலர்ஜி ஆகிடும்.. அதுனால் நீங்க தோட்டத்துல போய் விளையாடுங்க….. நா ரூம க்ளீன் பண்ணிட்டு உங்கள கூப்டுறேன்..”என்றாள்..
அதை கேட்ட ஆதியும் சமத்தாக தலை ஆட்டினான். ஏனென்றால் அவனுக்கு உண்மையாகவே டஸ்ட் அலர்ஜி இருக்கிறது. ஒரு தரம் இது போல் டஸ்ட் அலர்ஜி ஆகி அதற்கு ஹாஸ்பிட்டல் வரை சென்றது ஆதியால் மறக்க முடியாது அப்போதெல்லாம் ஆதி அப்பா அவனுடன் இருந்தார்.
எனவே ஆதியும் வெளியில் சென்றுவிட….. ஆஸ்வதி முதலில் மேலே இருந்து ஆரம்பிக்கலாம் என்று ஆதியின் அப்பா புகைப்படத்தை எடுத்து அதை துடைத்தவள்.. பின் சீலிங்கில் மாட்டி இருந்த பேனை சுத்தம் செய்ய நினைத்தாள்.. அதனால் தான் அணிந்திருக்கும் புடவையை தூக்கி சொருவிக்கொண்டு.. அங்கு கிடந்த சேரில் ஏற…
அப்போது வெளியில் சென்ற ஆதியை தோட்டத்தில் உட்கார்ந்து தன் குடும்ப வக்கீலிடம் பேசிக்கொண்டு இருந்த தாத்தா.
“ஆதிக்கண்ணா..”என்று அவனை அழைக்க…..
“என்ன தாத்தூ.”என்று குடுகுடுவென அவர் அருகில் ஓடிப்போக…..
“மெதுவாடா கண்ணா…”என்றவர்.
“கண்ணா.. உன் ஏஞ்சல் எங்கடா..”என்றார் தாத்தா.
“ஏஞ்சல் ரூம க்ளீன் பண்றா.. எனக்கு அலர்ஜியாம் அதுனால என்னை ரூம்க்கு வர வேணா சொல்லிட்டா.”என்றான்
அதை கேட்டு சிரித்தவர்…”சரிக்கண்ணா ஆனா இப்போ அவசரமா நா ஆஸ்வதிய பாக்கனும்.. அதுனால கொஞ்சம் அவள வர சொல்லுப்பா.”என்றார் கொஞ்சல் குரலில்.
“அவ என்னை வரக்கூடாதுனு சொல்லிருக்காளே…”என்றான் மெதுவாக
“ப்ளீஸ் கண்ணா. தாத்தா அர்ஜன்ட்டா பாக்கனும்னு சொன்னாருனு சொல்லு.. ஆஸ்வதி உடனே வந்துடுவா…”என்க
“ம்ச்.. சரி போறேன். ஆனா என்னை ஈவ்னிங் அந்த பார்க்குக்கு கூட்டிட்டு போனும்.”என்றான் கட்டளையாக….
“கண்டிப்பா கண்ணா. கூட்டிட்டு போறேன்…”என்றார்
“சரி.”என்றவாறே தன் அறைக்கு ஆதி ஓட…..
தாத்தா மிகவும் அவசரத்தில் இருந்தார். விஷ்ணுவின் சில பாகங்கள் இன்னும் ஆதியின் மீது மாற்றாமல் இருந்தது.. அது மட்டும் இல்லாமல் இந்த வீடும் இன்னும் தாத்தா பெயரில் தான் இருந்தது.. அவருக்கு என்ன தோன்றியதோ உடனே அத்தனை சொத்தையும் ஆதி. அவன் மனைவி ஆஸ்வதி தன் பேத்தி அனிஷாவிற்கு மாற்ற நினைத்தார் அதனாலே இப்போது தன் குடும்ப வக்கீலை கூப்பிட்டார்,
அதற்கு ஆஸ்வதியின் கையெழுத்து வேண்டும் என்பதால் தான் இப்போது ஆதியை கூப்பிட்டு ஆஸ்வதியை அழைத்து வர சொன்னார்.
ஆதியும் எதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே ஆஸ்வதியை கூப்பிட அவன் அறைக்கு செல்ல….. ஆதி வந்த வேகத்திற்கு கதவை படார் என்று திறந்து விட… அங்கு கதவின் அருகில் தான் ஆஸ்வதி நின்று ஃபேனை துடைக்க ஆரம்பித்திருந்தாள். ஆதி திறந்த வேகத்திற்கு ஆஸ்வதி நின்றிருந்த சேரின் மீது கதவு மோத… ஆஸ்வதி நுனிக்காலில் நின்றவாறே துடைத்துக்கொண்டு இருந்ததால் கதவின் மோதலை சமாளிக்க முடியாமல் ஆஆஆஆஆ….என்று கத்தியவாறே கீழே விழ செல்ல…..
ஆஸ்வதி நிலைத்தடுமாறும் போதே விபரீதத்தை உணர்ந்த ஆதி.. “அய்யோ வது…”என்று கத்தியவாறே ஆஸ்வதியை பிடிக்க அவள் அருகில் ஓடினான் புயல் போல….
ஆதி அவள் அருகில் வருவதற்கும். ஆஸ்வதி விழுவதற்கும் கொஞ்சம் தான் இடைவெளி இருந்தது.. அவள் தரையில் விழுவதற்கு முன் ஆதி அவளை தாங்கிக்கொண்டே கீழே விழுந்தான்
இருவரும் விழுந்த வேகத்திற்கு ஆஸ்வதியின் இதழ் ஆதியின் நெற்றியில் அழுத்தமாக முட்டிக்கொள்ள….. அது அழகான முத்தமாக பதிவானது.
இதனை ஆஸ்வதி அதிர்ச்சியுடன் ஆதியை காண….. அவனோ அவளை தான் பார்வையால் விழுங்கிக்கொண்டு இருந்தான்.. அவனின் கைகள் இரண்டும் ஆஸ்வதியின் இடையை ஆக்டோபஸ் போல ஆஸ்வதியை இறுக்கிக்கொண்டு இருந்தது..
அவனின் இந்த தொடுகையை உணர்ந்த ஆஸ்வதி உடல் சிலிர்த்து போனது.. அவளது முகமோ.. அவள் வகுட்டில் வைத்திருக்கும் குங்குமத்தை விட சிவந்து போய் இருந்தது.
அவளின் இந்த சிலிர்ப்பையும் முகச்சிவப்பையும் கண்ட ஆதியின் மனம் பூரித்து போனது.. தன் தொடுகைக்கு சிவக்கும் பெண்ணவளை வெகுவாக ரசித்தான் ஆதி.. அது மட்டும் இல்லாமல் பெண்ணவளின் உடல் அவனை அப்பிக்கொண்டு இருக்க….. அதில் ஆதியின் நிலை தான் மோசமாகியது. அவளது உடல் அவனை கிறக்கமாக்கியது..
அந்த கிறக்கத்தில் ஆஸ்வதியை கண்களில் மொத்த காதலையும் சுமந்துக்கொண்டே ஆதி தன்னவளை பார்த்து..
“வது. ப்ளீஸ்.. ஒன் கிஸ்..”என்றான் மெலிதான கிறங்கியவாறு.
அவனின் இந்த கெஞ்சலில் ஆஸ்வதிக்கு அவன் நிலை இந்த உலகம்.. அனைத்தும் மறந்தே போனது அவனது விழி வீச்சை தாங்க முடியாதவள் போல தன் இரு கண்களையும் அழுத்தமாக மூடிக்கொண்டாள்.
அவளின் இந்த செயலை கண்ட ஆதி.. மெல்ல புன்னகைத்துக்கொண்டே அவளை தனக்கு கீழே கொண்டு வந்து அவள் இதழை நோக்கி சென்றான். அவளது இதழ் அவனை வசியம் செய்தது மினுமினுப்பாக இருக்கும் அவள் இதழே அவனை பித்தாக்கியது.. அவளின் இதழை மெதுவாக நெருங்கியவன் அவளது தடிமனான கீழ் உதட்டை பார்த்து மெல்ல அதனை பட்டும்படாதவாறே முத்தம் ஒன்றை வைத்தான்..
அதில் அவளது முகம் இன்னும் சிவந்தது என்றால் அவளது இதயம் தாறுமாறாக துடித்தது..அவளது இதய ஓசை அவனுக்கும் நன்றாக கேட்டது அவளது இந்த படப்படப்பு ஆதியை இன்னும் மயக்கியது.
அவளது இதழை மெல்ல தன் விரல் கொண்டு வருடியவன் இப்போது ஆவேசமாக கவ்விக்கொண்டான்.. அவனின் இந்த செயலை சற்றும் எதிர்ப்பார்க்காத ஆஸ்வதி முதலில் அதனை ஏற்க முடியாமல் தவிக்க… ஆனால் ஆதியோ அதனை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாத ஆதி அவளது இதழை வன்மையாகவும் அதே நேரம் காதலாகவும் சுவைக்க ஆரம்பித்தான்
பின் ஆஸ்வதி கொஞ்ச கொஞ்சமாக அவனது இத்ழ் முத்தத்தில் ஆழ்ந்து போய்விட்டாள் எப்படி ஆழ்ந்து போகாமல் இருக்க முடியும் 5 வருட காதல் அவளது அவனையே நினைத்து தன் காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைத்தவளுக்கு அவனே கணவனாக அமைய….. அவனிடம் மயங்காமல் என்ன செய்வாள்..
ஆதியோ தன்னுடைய இத்தனை வருட காதலை அவளிடம் ஒரே அடியாக சொல்வது போல அவளது இதழில் மூழ்கி போனான்
இருவருமே தன்னிலை மறந்தனர்.. ஆஸ்வதி தன்னவனின் நிலையை மறந்து போனாள் என்றால் ஆதியோ தன்னவளுக்கும் தனக்கும் இந்த வீட்டில் இருக்கும் ஆபத்தை மறந்து இதழ் முத்தத்தில் மூழ்கி போனார்கள்
பின்பு. அங்கு இருக்கும் தூசியின் மகிமையால் ஆதிக்கு தும்மல் வந்துவிட….. அதில் தான் இருவரும் தன்னிலை அடைந்தனர் ஆதி மெதுவாக… மிக மெதுவாக ஆஸ்வதி மீது இருந்து இறங்க… ஆஸ்வதியோ அப்பொது தான் தான் செய்துக்கொண்டு இருக்கும் செயல் நியாபகம் வந்தது. அதோடு சேர்த்து தன்னவனின் மாற்றமும்
அப்போது ஆரம்பித்தது ஆதியின் மீது ஆஸ்வதிக்கு சந்தேகம் ஆதியை எப்போதும் கவனித்துக்கொண்டே இருந்தாள். அதனை ஆதி கண்டுக்கொண்டாலும் பெரிதாக முதலில் எடுத்துக்கொள்ளவில்லை.. ஆனால் அதன் பின் ஆஸ்வதியின் ஆளை விழுங்கும் பார்வை அவனை நொருக்கியது. அவளிடம் இருந்து தப்பிக்க முயன்றான். அவள் பார்வையில் இருந்தும்.

(வருவாள்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

1 thought on “உயிர் போல காப்பேன்-23”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!