உயிர் போல காப்பேன்-24

5
(9)

அத்தியாயம்-24
இன்றும் ஆதி தாத்தா அறைக்கு ஓடிவிட…. ஆஸ்வதி தான் தனிமையில் ஆதியை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் இந்த வீட்டில் எதற்கும்.. யாரையும் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்.. முக்கியமாக வினிஜாவை.
அன்று ஒருநாள் வினிஜா போன் பேசியது போல் இரண்டு மூன்று முறை போன் பேசி.. அதும் கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசி பார்த்தாள் அன்றிலிருந்து ஆஸ்வதி ஆதிக்கு தானே உணவு செய்வதாக கூறிவிட்டாள் அதனை வினிஜா கண்டு தாத்தாவிடம் கூற….. அவர் ஆஸ்வதி செய்வது போல செய்யட்டும்.. அதில் யாரும் தலையிட வேண்டாம்.. என்று அழுத்தமாக கூறிவிட்டார்
அதில் அந்த வீட்டில் இருக்கும் கெளரவ புலிகளுக்கு அவ்வளவு ஆத்திரம்.. ஆதியை அவர்கள் சாப்பாட்டில் ஏதெனும் கலந்தாவது அவன் நோயை இன்னும் அதிகப்படுத்த அப்போதுதான் ஒரு திட்டத்தை போட்டனர்.. அதனை தவுடு பொடி ஆக்கிவிட்டாள் ஆஸ்வதி.
மேலும் அபூர்வா வேறு ஆஸ்வதியை அடிக்கடி மிரட்டும் பார்வை பார்க்க….. ஆனால் அதனை கண்டுக்கொள்ளதான் ஆஸ்வதிக்கு நேரம் இல்லை எப்படி இருக்கும் இப்போது தான் தன்னவனை பற்றி நினைக்கவே அவளுக்கு நேரம் போதவில்லையே
அதன் பின் ப்ரேம் ஆஸ்வதியை வெறும் பார்வையால் மட்டுமே தொடர முடிந்தது. ஏனென்றால் தாத்தா வேறு அவனது பார்வை ஆஸ்வதி மீது அடிக்கடி விழுவதை பார்த்தவர்
“ப்ரேம். நமக்கு ஊட்டில ஒரு எஸ்டெட் இருக்குல….. அங்க எதோ குளறுபடி நடக்குது அதுனால என்ன செய்ற…. நீ கிளம்பி போய் அங்க தங்கி பிரச்சனைய தீர்த்துட்டு ஒரு மாசம் கழிச்சி இங்க வந்தா போதும்…”என்று அவனை கையோடு அனுப்பி வைத்துவிட்டார்..
அதில் இன்னும் ப்ரேம் கடுப்பாக…. தன் தந்தையிடம் அதனை பற்றி பேச… பரத் தன் தந்தையிடம் அவனை அனுப்ப வேண்டாம் என்று கூறினார்
ஆனால் பெரியவரோ…”இங்க பாரு பரத்.. சொத்து சொத்துனு அடிச்சிக்கிறீங்க….. ஆனா அந்த சொத்துக்காக வேலை மட்டும் பார்க்க மாட்டீங்க….. அப்டிதானே வயசானவன் நான் எவ்வளவு வேலைய தான் பாக்குறது.. அவன கிளம்பி போக சொல்லு இங்க இருந்தா மட்டும் அவன ஒரு வேலையும் நீயும் உன் பொண்டாட்டியும் செய்ய விடமாட்டீங்க….”என்று கூற… பரத் அதற்கு மேலும் தாத்தாவிடம் பேச முடியவில்லை..
“டேய் ப்ரேம்.. தாத்தா அதுக்கு ஒத்துக்கவே இல்லடா இங்க பாரு இப்போ மட்டும் நாம இத செய்யல இத காரணமா வச்சே எங்க அப்பா சொத்துல ஒரு பைசா கூட தரமாட்டாரு…”என்று பரத் புலம்ப…
பூனமிற்கும் அதான் சரி என்று தோன்றியது
“இங்க பாரு ப்ரேம் நீ எதுக்காக போக தயங்குறனு எனக்கு தெரியும் அந்த ஆஸ்வதிகாக தானே அவ இங்க தானே இருக்க போறா. எங்க போய்ட போற….. ஒரு மாசம் தானே.. நீ கிளம்பு அப்போ அப்போ இங்க நடக்குறத உனக்கு நா சொல்றேன்…”என்று பிள்ளைக்கு வேண்டாத அட்வைஸை செய்து அனுப்ப….
ப்ரேமும் தன் கைகளை ஓங்கி சுவற்றில் குத்தி தன் ஆத்திரத்தை காட்டிவிட்டு சென்றான். செல்லும் போது கூட ஆஸ்வதிய தேட அவள் கிட்சனில் வேலையாக இருப்பதை பார்த்தவன் அவளை சுற்றி முற்றி பார்க்க யாரும் அங்கு இருப்பதற்கான அடையாளம் இல்லை.. உடனே ஒரு விஷம சிரிப்பை சிந்திவிட்டு அவளை நோக்கி சென்றவன். வெகுநேரம் ஆஸ்வதியை பின்னால் பார்த்து ரசித்துக்கொண்டே நின்றான்
தன்னை யாரோ வெகுநேரம் பார்ப்பது போல் ஆஸ்வதிக்கு தோன்ற….. திரும்பி பார்க்க….. அங்கு தன்னை கண்களால் கூறு போடும் ப்ரேமை பார்த்து உடல் விறைக்க முறைத்தாள்
“ம்ம். தப்பிச்சிட்டோம்னு நினைக்காத… கொஞ்ச நாள்ல நா வந்துடுவேன்.. அப்போ இருக்கு உனக்கு என்னை அடிச்சதுக்கும்.என்று அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு கேவலமான பார்வை பார்த்தவன்..எல்லாத்துக்கும்…”என்று ஒரு கோணல் சிரிப்பை உதிர்த்தவாறே கூற….
ஆஸ்வதியோ அவனை முறைத்துக்கொண்டே தன் கையை காண….. அவள் பார்வை போகும் திசையை ப்ரேமும் பார்க்க…. அங்கு காய் அரியும் கத்தி ஒன்றினை வைத்துக்கொண்டு ப்ரேமையும் அந்த கத்தியையும் மாற்றி மாற்றி பார்க்க… ப்ரேம் அவளின் பார்வை கூறுவதை கண்டு கோவத்துடன் அவளை நெருங்க நினைக்க… அதற்குள்
“ஏஞ்சல் எனக்கு பசிக்கிது தாத்தூக்கும் காபி வேணுமாம்…”என்று கூறிக்கொண்டே அங்கு ஆதி வர அங்கு ப்ரேமை கண்டவன் அப்படியே நின்றுவிட்டான்…
அவனின் தாத்தா என்ற அழைப்பை கேட்டதும் ப்ரேம் ஆதியையும், ஆஸ்வதியையும் முறைத்தவாறே ஆதியின் அருகில் வந்து..
“உன்ன வந்து வச்சிக்கிறேன் டா..”என்று கண்களால் மிரட்டியவாறே அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஆதியோ போகும் அவனையே கண்களில் மிரட்சியுடன் காண… ஆஸ்வதி அவன் அருகில் வந்து அவன் தோளை தொட…..
அதில் ஆதி ஆஸ்வதியை பார்த்து..”ப்ரேம் என்ன ஏன் ஏஞ்சல் வச்சிக்கிறேனு சொல்றான்..”என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அதே நேரம் நக்கலாக….
அவனது இந்த கேள்வியில் ஆஸ்வதிக்கு புன்னகை அரும்ப….. ஆதியை சந்தேகமாக பார்க்க….
அதை புரிந்துக்கொண்டவன்…”அய்யோ அம்மா பசிக்கிதே.. ஏஞ்சல் எதும் தரமாட்றாலே…”என்று வயிற்றை பிடித்துக்கொண்டு கதற…. அதில் ஆஸ்வதி அவனின் பசியை கவனிக்க ஆரம்பித்தாள் அவளின் சிந்தனை தன்னை விட்டு மாறியதும் தான் ஆதிக்கு மூச்சே வந்தது..
“சப்பா.. இவ வேற… நம்மள எனிடைம் நடிக்கவே வைக்கிறா…”என்று மனதில் நினைத்துக்கொண்டான்..
இன்று இதை எல்லாம் ஆஸ்வதி நினைத்துக்கொண்டே படுத்திருக்க…
இரவு ஆனது,, இன்றும் ஆதி தாத்தா ரூமிற்கு சென்றுவிட அதே போல் இன்றும் ஆஸ்வதி எழுந்து வெளியில் வந்தாள்.. வந்து ஆதியை பார்த்தாள் அவன் நன்றாக உறங்குவதை பார்த்து அவள் அறைக்கு சென்றாள். அங்கு அவளது அறையின் பால்கனியில் சென்று நின்று வானத்தில் இருந்த நிலவை ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தாள்
இதுவரை அவள் வாழ்வில் பெரிதாக ஒன்றும் நடந்தது இல்லை.. யாரும் அவள் மீது பாசம் காட்டியதில்லை.. இவள் தாத்தாவிற்கு ஆஸ்வதி என்றால் உயிர் தவிர அவரால் பெரிதாக இவளுக்கு ஒன்றும் செய்ததில்லை.. அது போக இவளின் தங்கை விஷாலி தான் இவளை அன்னை போல் பல நேரங்களில் தாங்கிருக்கிறாள்..
அப்போது அவளுக்கு ஆதியை சந்தித்தது அவனை உருகி உருகி அவனுக்கே தெரியாமல் காதலித்தது.. என்று அனைத்தையும் நினைத்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்
ஆம் ஆஸ்வதிக்கு ஆதித்தை முன்னாலே தெரியும்.. அதும் இல்லாமல் அவனை மறைமுகமாக காதலித்தாள். ஆஸ்வதி தன் தந்தை வீட்டிற்கு வந்ததும் கல்லூரியில் சேர்க்கப்பட்டாள்.. அது மும்பையில் மிகப்பெரிய யுனிவர்சிட்டி.. பல கோடிஸ்வர வீட்டு பிள்ளைகள் படிக்கும் கல்லூரி.. அதில் தான் ஆஸ்வதியை சேர்த்தார் அவள் தந்தை இது அவளின் சித்திக்கு அறவே பிடிக்கவில்லை.. ஆஸ்வதியின் தந்தையிடம் கேட்க….
அவர்..”இவ்வளவு நாள் உன் பேச்ச கேட்டுதா அவளுக்கு அப்பா பாசம்னா என்னனே தெரியாம வளர்த்தேன். ஆனா இனி முடியாது. அதுக்காக அவகிட்ட இப்போ பாசம் காட்ட நானும் விரும்பல…. அவளும் அத ஏத்துக்கமாட்டா. ஆனா எனக்கு அப்புறம் அவளுக்கு துணையா இருக்க போறது நீ இல்ல… அவ படிப்புதான்.. அதுக்கு தான் அவள நல்ல காலேஜ்ல சேர்க்குறேன்…இதுக்கு ஆகப்போற செலவு எல்லாம் அவ அம்மா போட்டு வந்த நகைய வச்சிதான்.. இதுக்கும் நா 5பைசா செலவு பண்ல……”என்று அழுத்தமான குரலில் சொன்னார். அதிலே இது பற்றி இனி கேட்காதே என்பது போல் இருந்தது அவர் குரல்.
அதன் பின் ஆஸ்வதி அந்த காலேஜில் முதலில் நுழையும் போது பார்த்தது தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் உட்கார்ந்து ஒரு காலை ஸ்டைலாக மடக்கி ஒரு காலை ஊன்றி ஆணழகனாக நின்றிருந்த ஆதித்தை தான் பார்த்த முதல் பார்வையிலையே ஆஸ்வதியின் மனதில் ஆழமாக பதிந்தவன் ஆதித்..
அதும் காற்றில் ஆடும் யாருக்கும் அடங்கா சிகையை அடக்கியவாறே கைக்கொண்டு தலைமுடியை வருடிக்கொண்டிருக்கும் ஆதித்தை தான் முதலில் சந்தித்தாள். அவனை பார்த்தவாறே நடந்து வர… அப்போது அவளை யாரோ அழைக்க….. ஆனால் அதெல்லாம் அவள் காதில் எங்கு விழுந்தது.. அவளது கவனம் முழுதும் அவன் மீது அல்லவா இருந்தது..
“ஏய் வெள்ள சுடிதார். கூப்டா நிக்க மாட்டியா…”என்று ஒருவன் வந்து அவலை வழி மறைக்க…
அப்போது தான் அவள் நிகழ் உலகிற்கே வந்தாள் தன் எதிரில் நிற்கும் அவனை பார்த்து மலங்க மலங்க விழிக்க…
இங்கு ஒருவனோ அவளுக்கு..”வாவ். கேண்டி பேபி..”என்று பெயர் வைத்தான்..
“என்ன சீனியர் கூப்டுறோம்.. மரியாத இல்லாம நீ பாட்டுக்கு போற……”என்றான் ஆஸ்வதியை நக்கலாக பார்த்தவாறே.
அதில் ஆஸ்வதி மிரட்சியுடன்…”சாரி சீனியர் கவனிக்கல……”என்றாள்
“ம்ம்ம் கவனிக்கலையா.ம்ச்.. சரி வா இப்போ கூப்டுறேன்…”என்று அவளை அழைக்க….. அவன் அழைத்த பக்கம் காண….. அங்கு ஒரு நான்கைந்து பேர் கொண்ட கும்பல் நின்றது.. அதில் இருவர் பெண்கள்
அந்த கூட்டத்தை மிரட்சியுடன் பார்த்தவாறே அவன் பின்னால் சென்றாள்
அங்கு நின்றதில் ஒரு பெண்…”ஓய் என்ன 1ஸ்ட் இயரா…”என்றாள்..
ஆஸ்வதியும் ஆம் என்று தலை ஆட்ட…..
“என்ன வாய் தொறந்து பதில் சொல்லமாட்டியா. ஊமையா நீ…”என்றாள் இன்னொரு பெண்.
அதை கேட்டு ஆஸ்வதி அவசரமாக தலை ஆட்ட…..
“ம்ச் பார்ரா,.. மறுபடி தலை ஆட்டல….ஒழுங்கா வாய தொறந்து பேசு…”என்று ஒருவன் அதட்டி கூற…..
அதில் பயந்தவள்…”ஹான் சீனியர் நான் பேசுவேன்..”என்றாள் அவசரமாக…..
“அப்பா அதட்டுனாதான்டா பதில் வருது..”என்று ஒருவன் கூறி சிரிக்க…
“உன் பேரு”
“ஆஸ்வதி தாகூர்.”என்றாள்.
“ஆமா என்ன ஜாய்ன் பண்ணிருக்க……”என்றான் ஒருவன்
“பி.இ கம்ப்யூட்டர் சைன்ஸ் சீனியர்..”என்றாள்
“டேய் நம்ம எதிரி டிப்பார்ட்மென்டா இவ….”என்றாள் ஒருத்தி
“ஓஓ….. அப்போ உனக்கு கண்டிப்பா தண்டன கொடுத்த ஆகனும்..”என்று ஒருவன் கூற….
அதை கேட்டு ஆஸ்வதி மிரண்டு போய் நிற்க…..
“ஆமா.. டேய் ராகுல். நம்ம எதிரிடா.”என்று ஒருத்தி அவர்களுக்கு இடது புறம் கண்காட்ட…
அவள் காட்டிய திசையில் அனைவரும் பார்க்க….. ஆஸ்வதியும் அந்த பக்கம் பார்த்தாள்.. பார்த்ததும் அதிர்ந்துவிட்டாள்.. ஏனென்றால் அங்கு நின்றது ஆதிதான்
அவனை பார்த்ததும் இவர்களுக்கு ஒரு ஐடியா வர…. அனைவரும் ஒரே நேரத்தில் ஆஸ்வதியை காண….. ஆஸ்வதிக்கு புரிந்து போனது தன்னை வைத்து எதோ ப்ளான் போட்டுவிட்டார்கள் என்று..
ஆஸ்வதி தலை ஆட்ட…. அவர்கள் அனைவரும் அவளை கேலியாக பார்த்தனர்.
“நீ என்ன பண்ற……அதோ ஒருத்தன் பைக்ல உட்கார்ந்துட்டு இருக்கானே. என்று ஆதியை காட்ட….. அவங்கிட்ட போய் அங்கிள் டைம் என்ன ஆகுதுனு கேட்குற…..”என்று ஒருத்தன் கூற…..
அதை கேட்ட ஆஸ்வதி முகம் கோவத்தில் சிவந்தது…”மனசாட்சி இல்லாத காட்டேரிங்க… அவன போய். அதும் நா வாழ்க்கையிலையே முத முறையா யார பார்த்து சைட் அடிச்சனோ அவன போய் அங்கிள்னு கூப்ட சொல்றானே..”என்று மனதில் புலம்பலுடன் அவனை பார்க்க…..
“என்ன சொல்வதானே…”என்று ஒருவன் கேட்க…
“ச்ச்செ என்னடா ரேகிங் இது நல்லாவே இல்லை.”என்று அவர்களுள் இருந்த ஒருத்தி கூற….
“பின்ன நீயே ஒரு ஐடியா குடேன்…”என்றான்
“ம்ம்ம்ம்.. ஏய் அவங்கிட்ட போய் உங்கள ஸ்வீட்டி லவ் பண்றாங்களாம்னு சொல்லு…”என்றாள் ஸ்வீட்டி என்றவள்.
அதை கேட்டதும் ஆஸ்வதிக்கு முன்பை விட இப்போது கோவம் அதிகமாக வந்தது.. பின்னே தான் ஆசையாக பார்க்கும் ஒருவனை இன்னொருத்தி லவ் பண்ணுவதாக இவளையே கூற சொல்லும் போது இவளுக்கு கடுப்பாக தானே இருக்கும்
“என்ன ஸ்வீட்டி கேப்புல கிட வெட்றியே மா..”என்றாள் இன்னொருத்தி..
“ஆமா. நீயும் அவன 3வருஷமா லவ்வ சொல்ல தொறத்திட்டு தான் இருக்க….. அவன் என்னனா உன்ன ஒரு ஆளா கூட மதிக்க மாட்றானே…”என்றாள் ஒருவன்.
“ம்ச் அதுக்கு தான் டா இவள தூது அனுப்புறேன்..”என்றாள் அவள்
“ம்ம்ம். நடத்து நடத்து..சரி போ போய் ஸ்வீட்டி சொன்னத செய்…”என்றான் ஒருவன்.
ஆஸ்வதி அவர்களையே கையை பிசைந்தவாறு பார்க்க…..”உன்ன போ சொன்னேன்.”என்று ஸ்வீட்டி அதட்ட…..
அதில் ஆஸ்வதி பயந்து போய் ஆதியை நோக்கி மெல்ல நடந்தாள்.
“ஏன்டா இவ போற வேகத்த பார்த்தா நாளைக்குள்ள அவங்கிட்ட போயடுவபோல….”என்றான்
“ஏய்.. உனக்கு என்ன வயசா ஆகிட்டு. இப்டி கிழவி மாறி நடக்குற….பாஸ்ட்டா போ.”என்று ஸ்வீட்டி அதட்ட…
அதை கேட்ட ஆஸ்வதி அங்கிருந்து வேகமாக நடந்தாள் அவள் மனதில்.. “அய்யோ பாக்க வேற பெரிய இடத்து பையன் மாறி இருக்காறே இவங்க வேற…. இவர்கிட்ட நம்மள கோத்துவிடுறாங்களே.”என்று நினைத்துக்கொண்டே ஆதி இருக்கும் பக்கம் நடந்தாள்
ஆதி அருகில் சென்றவள்.. அவனை பார்த்து.. “சார்..”என்று கூப்பிட வெறும் காத்து தான் வந்தது அவள் வாயில்
பின் வெகுநேரம் அவனை வெளியில் கேட்காத குரலில் கூப்பிட்டு பார்க்க….. அவனோ இவள் புறமே திரும்பாமல் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்..
இது சரி வராது என்று தங்களுக்குள் அந்த ரேகிங் க்ரூப் பேசிக்கொண்டு நிற்க… ஆஸ்வதி அவர்களை பாவமாக திரும்பி பார்க்க….. அவர்களோ பார்வையால் மிரட்டினார்கள் அதில் பயந்தவள்
“சார்…”என்று கொஞ்சம் வேகமாக ஆதியை அழைத்தாள்.. எப்படி என்றால் அவள் அழைத்தது ஆதிக்கு மட்டும் தான் கேட்டிருக்கும் அப்படி.
அவள் கூப்பிட்டதில் திரும்பிய ஆதி “எஸ்..”என்றான்
அவன் திடீர் என்று திரும்பிய வேகத்தில் அவனின் கற்றை முடி அவன் நெற்றில் வந்து கொத்தாக விழுந்தது. அவன் அந்த நேரத்தில் ஆஸ்வதி கண்ணிற்கு ஆணழகனாக தெரிந்தான்..
ஆதி வெகுநேரம் ஆஸ்வதியையே புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க…. அவளோ அவனை தான் இமைக்காமல் பார்த்தாள்..
“என்னமா வேணும்.. கூப்டுட்டு அப்டியே நிற்குற……”என்று ஆதியின் அருகில் நின்ற ஒருவன் ஆஸ்வதியை கேட்க…..
அதில் தான் அவள் நினைவிற்கே வந்தாள் தன்னை நினைத்து ஆஸ்வதிக்கே ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு வருடம் அவள் படித்தது அனைத்தும் இருபாலரும் படிக்கும் ஸ்கூலில் தான் படித்தாள்.. அப்போதெல்லாம் எந்த மாணவனுடனும் பேசாதவள்.. யாரையும் நிமிர்ந்து பார்க்காதவள் இன்று ஆதியை காலையில் இருந்து இமைக்காமல் பார்ப்பது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது
“என்ன வேணும்.”என்று ஆதி இனிமையாக அதே நேரம் அழுத்தமாக ஆஸ்வதியை பார்த்து கேட்க….. அதில் அவள் மயங்கியே போனாள்.. அதும் அவன் பார்வை அவளை எதோ செயதது
“ம்ம்.. அது வந்து சார்…”என்று அவள் இழுக்க….
“எந்த டிப்பார்மென்ட்…”என்றான் ஆதி
“1ஸ்ட் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ்.”என்றாள்.
“ஓஓ… நம்ம டிப்பார்ட்மென்ட்.”என்றான் ஆதியின் நண்பன் ஒருவன்
அப்போது தான் முதலில் இவளை ரேங் செய்த க்ரூப் எதிரி டிப்பார்ட்மென்ட் என்று சொன்னது ஆஸ்வதிக்கு ஆதியை தான் எதிரி என்று சொன்னது விளங்கியது
“என்ன உன்னை என்ன பண்ண சொன்னாங்க…. அந்த க்ரூப்..”என்றான் ஆதி அவர்களையே பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்வீட்டி க்ரூப்பை காட்டி
அதில் ஆஸ்வதி. அவனை அதிர்வுடன் நோக்க…. ஒருவனின் பார்வையோ.. அவளின் அதிர்ந்த கண்களை சுவாரஸ்யத்துடன் பார்த்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!