உயிர் போல காப்பேன்-27

4.4
(7)

அத்தியாயம்-27
அங்கு ஹாலில் அனைவரும் நிற்க….. மேலே பரத். பூனம் இருவரும் ப்ரேமின் அறையில் இருந்து கத்தினர்…ப்ரேம் அறையில் இருந்து கேட்ட அலறல் சத்தத்தில் அதிர்ந்த அனைவரும் அவன் அறைக்கு ஓட….
“அய்யோ.. அப்பா ப்ரேம் எவ்வளவு எழுப்புனாலும் எழ மாட்றான்ப்பா…அவன் உடம்புலா ஒரே ரத்தம்..” என்றான் பரத் கலக்கத்துடன்.பதறியவாறே
“என்னடா சொல்ற….”என்றார் தாத்தா அதிர்ச்சியுடன்..
ஆஸ்வதியும் அதிர்ந்து பார்க்க…. அனைவரும் மேலே ஓடினர் அங்கு ப்ரேம் அவன் அறையின் பக்கம் இருந்த படிக்கட்டில் மயங்கிக்கிடந்தான்.. அவன் தலையில் இருந்து ரத்தம் படிகளில் ஊற்றி காய்ந்து போய் இருந்தது..அதனை பார்த்த அனைவருக்கும் திக்கென்று இருந்தது
அந்த வீட்டின் மாடி இரண்டு பக்கமாக பிரியும் ஒரு பக்கம் ஆதியின் அறை அனியின் அறை.. விஷாலின் அறை.. ராக்ஷியின் அறை என்று இருக்க….. மற்றொரு பக்கம் ப்ரேமின் அறை இஷானாவின் அறை பரத்தின் அறை அதிதியின் அறை என்று இருக்கும்.. கீழே தான் அஜயின் அறை அபூர்வா அறை இருக்கும்
ப்ரேம் விழுந்து கிடந்த வழியாக வர யாரும் இன்னும் விழிக்காமல் இருந்தனர் அதனால் தான் அவன் இவ்வளவு நேரமும் அப்படியே கிடந்தான்.
அப்போது தான் பரத் எழுந்து வர….. தன் மகனை அந்த நிலையில் பார்த்து கதறினார்.அவரது குரல் கேட்டு அனைவரும் ஓடிவந்தனர்..
இஷானா. அவள் கணவன் ராம் அனைவரும் அவனை தட்டி எழுப்ப அவன் தான் விழிக்கவே இல்லை அவன் முகத்தில் தண்ணீர் அடித்து பார்க்க அப்போதும் அவனிடம் எந்த அசைவும் இல்லை. அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நிற்க….விஷால் அவனின் நாடியை சோதிக்க…
“மயக்கத்துல தான் இருக்காரு,.”என்றான் விஷால்.. அதில் அனைவருக்கும் ஒரு நிமிடம் போன உயிர் வர….
“அய்யோ அவரு முழிக்கவே இல்ல…. சீக்கரம் ஹாஸ்பிட்டல் கொண்டு போனும்.”என்றாள் ஆஸ்வதி பதறியவளாக… அப்போது தான் ஆதி சாவகாசமாக வந்து ஆஸ்வதியின் அருகில் நின்று குரூர பார்வை பார்த்தான் மயங்கி கிடந்த ப்ரேமை…
உடனே விஷால் தான் ஆம்புலன்ஸிற்கு அழைத்தான் விதுன் அவன் அருகில் பதறியவாறு வந்து நின்று…. ப்ரேமை ஆராய்ந்தான் அவனை புருவம் முடிச்சி விழ….. விதுனின் பார்வை ஆதியை வட்டமடித்தது.. இதனை ஆதி கண்டுக்கொண்டாலும் அவன் விதுன் பக்கம் திரும்பவில்லை…விதுன் அப்போது தான் தன் வீட்டில் இருந்து வந்தான் அனைவரும் கும்பலாக நிற்க…. என்ன என்பது போல் யோசித்துக்கொண்டே ப்ரேம் அறைக்கு வந்தான்
அங்கு ப்ரேம் அசைவின்றி கிடப்பதை கண்டவன் முகம் ஒரு நிமிடம் யோசனைக்கு சென்று பின் தெளிவடைந்தது…பின் சடுதியில் தன் முகத்தை மாற்றி…ஆதியையே இமைக்காமல் பார்க்க….
ஆதியோ..“ஏஞ்சல் ப்ரேம்க்கு என்ன ஆச்சி. உடம்பு சரி இல்லையா.”என்றான் ஆஸ்வதியின் கையை சுரண்டியவாறு.
ஆஸ்வதி அப்போது தான் ஆதியை பார்த்தாள்.. அவன் கண்கள் ப்ரேமையே வெறிப்பதை பார்த்து ஒரு நிமிடம் யோசித்தவள். பின் “அவருக்கு உடம்பு சரி இல்ல போல…..”என்றாள் மெதுவாக…
“உன்ன அன்னிக்கி அவன் திட்டுனான்ல அதான் அவனுக்கு காட் பீவர் குடுத்துட்டாரு போல…..காட் க்கு தாங்க்ஸ் சொல்லு ஏஞ்சல்.”என்றான் ஆதி அவளை குஷியாக பார்த்தவாறு
அதில் ஆஸ்வதி ஆதியை மிரட்டும் பார்வை பார்த்து..”அப்டிலா சொல்லகூடாது ஆதி.. தப்பு.”என்றாள்
அதில் ஆதியின் கண்கள் ஒரு நிமிடம் பளப்பளத்தது..
ஆஸ்வதி ப்ரேமை ஆம்புலன்ஸில் ஏற்றுவதை பார்த்துக்கொண்டு வாசலில் நிற்க….. அதை பார்த்த பூனம் அழுதவாறே
“உன்னால தான்டி எல்லாம் நல்லா இருந்த என் புள்ளைய இப்டி படுக்க வச்சிட்டல…..”என்று கத்தினார்
அதனை கேட்டு ஆஸ்வதி எதும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டு இருக்க….
“இப்போ உனக்கு சந்தோஷமா இருக்குமே என் புள்ளைய இங்க எல்லாரும் என்ன என்ன சொன்னிங்க…. இப்போ அவன் இப்டி ரத்த களறியா கிடக்குறதுக்கு கூட நீங்க தான் காரணம்..”என்றார் பூனம் ஆஸ்வதியையும் அவளுக்கு அருகில் புரியாத பார்வை பார்த்துக்கொண்டு நிற்கும் ஆதியையும்.
“ம்ச். பூனம் எந்த நேரத்துல என்ன பேசுற… அவனுக்கு இப்டி ஆனதுக்கு ஆஸ்வதி என்ன பண்ணுவா.. உன் புள்ள நைட் க்ளப் போய் நல்லா குடிச்சி கும்மாளம் அடிச்சிட்டு விழுந்து எந்திரிச்சி வந்துருப்பான். அதான் அவனுக்கு இந்த நிலைமை. போதையில படி ஏற முடியாம விழுந்து வாரி இருக்கான் போய் அவன முதல பாரு..”என்று கத்தினார் தாத்தா.
அவருக்கு தான் அவனை பற்றி தெரியுமே அவனின் போதை பழக்கம். பெண் சகவாசம் எல்லாம்..
பெரியவர் சொல்வதை கேட்ட பரத்.”அப்பா அவன் உங்க பேரன்ப்பா அவனுக்கு சப்போர்ட் பண்ணாம… இவளுக்கு.”என்று அவர் பேசிக்கொண்டு இருக்க…
“ஆஸ்வதி என் பேத்தி. இந்த வீட்டு முத மருமக….”என்றார் தாத்தா அழுத்தம் திருத்தமாக….
அதில் கடுப்பானவர்கள் அவரை முறைத்துக்கொண்டே பூனமும் பரத்தும் ஆம்புலேன்ஸிலும். இஷானாவும் அவள் கணவனும் வேறு காரிலும்.. மற்றவர்கள் எல்லாம் தனி தனி காரிலும் சென்றனர்..
பெரியவர் போகும் அவர்களையே இமைக்காமல் பார்க்க… ஆஸ்வதி அவரை தான் பார்த்துகொண்டு இருந்தாள்
“தாத்தா நாமளும்…”என்று ஆஸ்வதி ஆரம்பிக்க…. ஆதி அவளை பார்வையால் எரித்தான்
ஆனால் தாத்தாவோ..”ம்ச் இல்லமா.. அவங்களா போறாங்களே. போய் என்னனு சொல்லட்டும் அப்புறம் நாம போய்க்கலாம்.. இப்போ போனா தேவை இல்லாததலா பேசுவாங்க….”என்றவர்..
“ம்ம். வாங்க உள்ள போலாம். ஆதித் கண்ணா வா உள்ள போலாம்..”என்று அவனை உள்ளே அழைத்து சென்றார்.
ப்ரேமை அனைவரும் ஆம்புலன்ஸில் ஹாஸ்பிட்டல் கூட்டிச்செல்ல…. அங்கு அவனை பரிசோதித்தவர்கள் அவனுக்கு தலையில் சிடி எடுக்க சொல்லிவிட்டு காத்திருந்தனர்.
வீட்டில் ஆஸ்வதி கைகளை பிசைந்துக்கொண்டு ஆதியை பார்க்க அவன் எதையும் கண்டுக்கொள்ளாமல் தோட்டத்தில் பறித்துவந்த பூக்களை அடிக்கிக்கொண்டிருந்தான்.. ஆஸ்வதிக்கு இரவில் நடந்ததே மனதில் ஓட… அதனை நினைத்தவாறே போனை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“ஏன் ஏஞ்சல் இப்டி நர்வஸா இருக்க….”என்றான் அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்து
அதில் ஆஸ்வதி ஆதியை முறைக்க….. ஆதி பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு..”அவனுக்கு ஃபீவர்னா நா என்ன பண்ணுவேன் ஏஞ்சல்.. நானா அவனுக்கு ஃபீவர் வர வச்சேன்..”என்றான் கேலியான குரலில்..
அதில் ஆஸ்வதி அவனின் பேச்சி மாற்றத்தை உணர்ந்து அவனை ஆராய்ச்சியாக பார்க்க….. அவன் முகத்தை இன்னும் அப்பாவியாக வைத்துக்கொண்டு அவளை பார்த்தான்..
“ம்ச்…”என்று ஆஸ்வதி சலித்துக்கொண்டு போனை பார்க்க…. அவளுக்கு தாத்தா கையில் போனுடன் தோட்டத்திற்கு வந்தார்.
“மா ஆஸ்வதி ப்ரேமுக்கு தலையில அதிகமான காயம் போல….. ப்ளட் ரொம்ப லாஸ் ஆகிட்டாம். அதுனால அவன அங்கையே அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க….. நா மட்டும் போய் பாத்துட்டு வரேன். நீ ஆதி கூடவே இரு. என்ன…..”என்றார் தாத்தா
ஆஸ்வதி தயங்கியவாறே.. “தாத்தா நானும் வரேனே..”என்றாள் தயங்கியவாறே. அதை கேட்ட தாத்தா அவள் தலையை மெதுவாக வருடியவாறே..
“எனக்கு உன்ன பத்தி தெரியும்மா. உன் மனசு இங்க யாருக்கும் இல்ல…. அவங்க எல்லாம் இங்க நீ வந்ததுல இருந்து உன்னை கரிச்சிக்கொட்டிட்டு தான் இருந்தாங்க…. இருக்காங்க…. ஆனா நீ இன்னும் அவங்களுக்கு நல்லது தான் நினைக்கிற… ஆனா ஆஸ்வதிமா. அது அவங்களுக்கு புரியாது டா. நீயும் இப்போ அங்க வந்துட்டா அவங்க உன்ன ரொம்ப பேசுவாங்க… அதுனால தான் சொல்றேன். உனக்கு நா போன் பண்றேன்.”என்றவர் ஆஸ்வதியை பார்த்து தலை அசைக்க…..
அவளுக்கும் தாத்தா சொல்வது தான் சரி என்று பட்டது.. அவளும் சரி என்க
உடனே தாத்தா விதுனை வரவழைத்து.. ஆதியிடம்.”ஆதித் கண்ணா.. தாத்தூ வெளில போய்ட்டு வரேன். நீ உன் ஏஞ்சல் கூடவே இரு…”என்றார்
“ஹான் ஹான் தாத்தா நா ஏஞ்சல பத்திரமா பாத்துப்பேன்.. நீ பயப்படாம போய்ட்டு வா..”என்றான் ஆஸ்வதி கையை அழுத்தமாக பிடித்தவாறே.. அதில் ஆஸ்வதியின் மனம் கொஞ்சம் கனிய தான் செய்தது..
“சரி கண்ணா. மா ஆஸ்வதி அனி இன்னும் காலேஜ்ல இருந்து வரல… அவளுக்கு இதலா தெரியாது அவளையும் நீ ஹாஸ்பிட்டல் அனுப்ப வேண்டாம்.. சரியா.”என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்
ஆஸ்வதி ஒரு பெரும்மூச்சினை வெளியேற்றிவிட்டு ஆதியை காண அவனோ அங்கு தோட்டத்தில் பறக்கும் பட்டாம்பூச்சினை பிடிக்க முயன்றுக்கொண்டு இருந்தான்.. அதை பார்த்த ஆஸ்வதி முகம் புன்னகையை பூசிக்கொண்டது.
ஆனால் நேற்று இரவு நடந்ததை நினைக்கும் போது ஆஸ்வதி உள்ளம் நடுங்கியது அந்த உருவம் மட்டும் நம் அறைக்கு வரவில்லை என்றால் நம் நிலை என்ன என்று நினைக்கும் போதே அவளுக்கு ப்ரேமின் மீது கோவம் கோவமாக வந்தது.. இன்று காலையில் அவன் இருக்கும் நிலையை பார்த்ததும் கூட அவளுக்கு கோவம் கண் மண் தெரியாத அளவிற்கு வந்தது. ஆனால் அவளின் மென்மையான மனம் அதனை அந்நேரம் மறக்க வைத்தது. அதனால் தான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவர்களுக்கு ஆஸ்வதி உதவி செய்தாள்
ஆனால் நேற்று இரவு நடந்ததை நினைக்கும் போது ஆஸ்வதி அந்த உருவத்தின் மீது மோதியதுமே தெரிந்தது அது இந்த வீட்டிற்கு முதல் நாள் வந்த இரவில் அவள் உணர்ந்த அதே உருவத்தின் தோற்றம் இங்கு வந்ததில் இருந்து இது அவளுக்கு இரண்டாம் முறை நடந்த சம்பவம்
ஆனால் ஆஸ்வதியின் மனம் யாரோ தனக்கு நெருங்கியவர்கள் அவளை பிந்தொடர்கிறார்கள் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.. அதும் அதனை யோசிக்கும் போது ஆஸ்வதியின் பார்வை ஆதியை தான் நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தது..
ஆதியோ அங்கு பட்டாம்பூச்சியை பிடிக்க முயல்வது போல் ஆஸ்வதியை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.. ஆஸ்வதியின் முகம் ஆழ்ந்த யோசனையில் இருப்பது ஆதிக்கு கொஞ்சம் திகிலை கிளப்பதான் செய்தது..
“நோ.. நோ..மை கேண்டி பேபி.. யோசிக்காத….. அது இன்னும் என்னை தடுமாற வைக்கிது இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்புறம் எல்லாமே நல்லதா நடக்கும் இன்னும் கொஞ்ச நாள்.. அவங்கள எல்லாம் ஒரு கை பார்த்துட்டு முழுசா உங்கிட்ட வந்துடுறேன்…”என்று மனதில் பேசிக்கொண்டே ஆஸ்வதியை காண…
அவளும் இவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்…காதலாக……சந்தேகமாக….கோவமாக……ஏதோ.

(வருவாள்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!