அத்தியாயம்-28 அங்கு ஹாஸ்பிட்டலில் அனைவரும் ப்ரேமை அட்மிட் செய்திருந்த ரூமின் வாசலில் நிற்க…. பூனம் அழுதுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.. அவரின் பக்கம் உட்கார்ந்து இஷானா அவரை சமாதானம் செய்துக்கொண்டு இருக்க…. ராம் நின்றுக்கொண்டு அவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் கண்களில் அவ்வளவு கோவம்.. “ஹும் ஆடுனிங்களே டா சொத்துக்காக என்னலா பண்ணிங்க…. அப்போ உங்களுக்கு வலிக்கல…. ஆனா இப்போ வலிக்கிது ம்ச். உள்ள என்னமோ போராட்ட தியாகி படுத்துக்கிடக்குற மாறி சீன பாரு மொத்த குடும்பத்துக்கும்.. அவனே பொம்பள பொருக்கி.. யாருக்கிட்ட தன்னோட சேட்டைய காட்டி வாங்கிக்கட்டிக்கிட்டானோ தெரில….. அவனுக்காக காலையில இருந்து நம்மளையும் பசியோட நிக்க வைச்சிட்டா என் பொண்டாட்டி..”என்று மனதில் தன் மனைவியை வஞ்சிக்கொண்டு நின்றிருந்தான் ராமிற்கு இஷானா செய்வது எதும் பிடிக்காது ஏனென்றால் ராம் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன் தான்.. இஷானா காலேஜ் படிக்கும் போது அவனை துரத்தி துரத்தி காதலித்தாள் ஆனால் ராம் நடுத்தர குடும்பத்தில் ஒரே தலைமகனாக நின்று தன் தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்துக்கொடுக்க வேண்டிய கடமை இருந்தது அவனுக்கு…அதனால் இஷானாவை கண்டுக்கொள்ளாமல் சுற்றினான் ஆனால் இஷானாவிற்கு ராமின் கம்பீரமும்.. தோற்றமும். அவனின் மெனமையான குணமும் பிடித்திருந்தது.. அதிலும் ஒரு நியாயம் இருந்தது. திருமணத்திற்கு பின் தன் அடிமையாய் இருக்க தான் ராமின் குணம் தெரிந்து அவனை கல்யாணம் செய்ய நினைத்தாள். ஆனால் அவன் கண்டுக்கொள்ளாமல் இருக்கவும்.. தன் அப்பா அம்மாவிடம் கூறி அவன் தான் வேண்டும். அவன் தான் எனக்கு அடிமையாக இருப்பான் என்று எடுத்துக்கூறி அவனை தனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தாள்.. இதனை பரத்தும் பூனமும் கொஞ்சமும் எதிர்க்கவில்லை. ஏனென்றால் அவர்களும் அவளுக்கு அடிமையாக ஒருவனை தான் மாப்பிள்ளையாக முடிக்க நினைத்தனர்.. ராமிடம் முதலில் பரத் பேச…. ராம் தன் தங்கைக்கு திருமணம் முடிந்து தான் தன்னால் அடுத்த பக்கமே போக முடியும் என்று கண்டிப்பாக சொல்லிவிட….. அதற்கு தான் பரத் தன் ஆபிஸில் வேலை செய்யும் ஒருவரின் மகனுக்கு ராமின் தங்கையை பேசி முடிக்க வைத்தார் பின் அவரே அவளுக்கு திருமணம் செய்து வைத்தார். ராம் எவ்வளவோ சொல்லி பார்க்க….. பூனம் ராமின் தாய் தந்தையை மூளை சலவை செய்து அவர்களையும் மாற்றிவிட்டார் இதனால் ராமிற்கும் வேறு வழி தெரியவில்லை. தங்கைக்கு திருமணம் முடித்து வேறு ஆபிஸில் வேலை தேட…. ஆனால் பரத் தன் ஆபிஸிலே அவனை பாட்னராக சேர்த்து தன் மகளையும் அவனுக்கு கட்டிவைத்தார். ஆனால் ராமிற்கு தான் அன்றிலிருந்து சோதனை காலம் ஆரம்பித்தது.. அவன் திருமணம் முடிந்து தன் வீட்டிற்கு கிளம்ப….. ஆனால் பரத் இனி நீங்கள் எங்களுடன் தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.. ஆனால் ராம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடனே அவனின் பெற்றோர்களிடம் என்ன சொன்னார்களோ. அவர்கள் அவனை அவர்களுடன் தான் நீ இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிவிட்டனர். முன்பு மாதத்திற்கு ஒரு முறை தன் அன்னை தந்தையை பார்க்க போக… அது இஷானாவிற்கு பிடிக்கவில்லை.. அவனிடம் சண்டை போட சண்டை போட அவன் வெறுத்து போய் 6மாதத்திற்கு ஒருமுறை என்று தன் பெற்றோரை பார்க்க போவதை மாற்றிக்கொண்டான் இவனுக்கு குழந்தை பிறப்பை கூட அவன் தாய் தந்தை மூன்றாம் நபர் போல தான் பார்த்து போனார்கள். இதில் இஷானா வேறு இவனை அடிக்கடி தன் அடிமை போல திட்டுவது வெறுப்பாக இருந்தது தன் பிள்ளைகளை கூட தன் பேச்சினை கேட்கவிடாமல் தன் மனைவி வளர்ப்பது ராமிற்கு கடும் கோவத்தினை உண்டாக்கியது அதனால் தான் இஷானாவின் குழந்தைகள் அவளை போல அடங்காமல் சுற்றினர் இதில் இந்த ப்ரேம் வேறு ராமை என்னவோ கேவலமாக பார்ப்பான் இவனை அந்த வீட்டில் மதிக்கவே ஆள் இல்லை. ஆதிதான் முன்பு எல்லாம் இவனை பார்த்து சின்ன புன்னகையாவது சிந்துவான். அனிஷாவும் இவனை பார்த்து எப்போதாவது பேசுவாள் அதுவே அவ்வீட்டில் அவனுக்கு கிடைக்கும் மரியாதை.. இப்போது டாக்டர் ப்ரேம் அறையில் இருந்து வெளி வந்து அனைவரையும் காண… அப்போது தான் பெரியவர் அங்கு வந்து சேர்ந்தார்.. அவரை பார்த்ததும் டாக்டர் ஒரு வணக்கத்தை வைத்தார்.. “என்னாச்சி டாக்டர்..”என்றார் தாத்தா “நாம கொஞ்சம் ரூம்ல போய் பேசலாமா சார்..”என்றார் அதற்கு பெரியவர் சரி என்று தலை ஆட்டியவாறே டாக்டர் பின்னால் செல்ல… மேலும் அவர் பின்னாலே பரத்தும். பூனம். இஷானா..சென்றனர்.. டாக்டர் அறைக்கு சென்றவர்கள் அனைவரும் சிறிது நேரம் அமைதியாக இருக்க….பின் மெதுவாக தாத்தா ஆரம்பித்தார் “என்ன டாக்டர் ஆகிட்டு.”என்றார் கலக்கமான குரலில்.. என்னதான் ப்ரேம் நல்லவன் இல்லை என்றாலும் அவனும் தனக்கு பேரன் தானே என்ற எண்ணம் அவருக்கு அதனாலே அவனுக்கு பெரிதாக ஒன்றும் ஆக கூடாது என்று மனதில் கடவுளை வேண்டிக்கொண்டார்… “சார் அவருக்கு பயங்கரமான அடி தலையில பட்டுருக்கு கை காலுல கூட பயங்கரமான அடி தான் தலையை ஸ்கேன் செய்து பார்த்தோம்.”என்றார் கொஞ்சம் இடைவெளிவிட்டு “என்ன டாக்டர் நீங்க இங்க எவ்வளவு நேரமா வைட் பண்ணிட்டு இருக்கோம்.. நீங்க என்னனா சாவகாசமா வந்து பேசிட்டு இருக்கீங்க.,. நாங்க யாருனு தெரியுமா சர்மா பேமிலி நாங்க… அவன் சர்மா ஃபேமிலியோட வாரிசு அதும் முதல் வாரிசு.. அவனுக்கு எதாவது ஆச்சி.”என்று பூனம் எழுந்து கத்த… அதை கேட்ட தாத்தா கடுப்பாகி.”ஒன்னும் பெருசா இல்லையில என் பையனுக்கு..”என்று தானே ஒரு தாயின் முதல் கேள்வியாக இருக்க வேண்டும்.. இவர்களும் இருக்கார்களே.ச்ச….. என்று மனதில் நினைத்தவாறே.. “ம்ச். பரத் உன் பொண்டாட்டிய கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லு.”என்று கத்தினார் அவரின் கத்தலை கேட்ட பூனம் அமைதியாக நிற்க….. பரத் அவளை முறைத்தார் “ம்ம்ம், நீங்க சொல்லுங்க டாக்டர்.”என்றார் தாத்தா அழுத்தமான குரலில். “ஹான்.. அவருக்கு தலையில பயங்கர அடி சார். அதுனால அவர் கோமா ஸ்டேஜிக்கு போய்ட்டார்…”என்று டாக்டர் அமைதியாக கூற…. அதை கேட்ட தாத்தாவே அதிர்ந்துவிட்டார். அங்கு நிற்கும் அனைவரும் அதிர்ந்து நிற்க….. “என்ன டாக்டர் சொல்றீங்க…..”என்று பரத் கதற…. “ஆமா சார்.. அவர் கீழ விழுந்து கிட்டதட்ட 8மணில இருந்து 9மணி நேரம் இருக்கும் அதும் முக்கியமான நரம்பு இருக்குற இடத்துல அடிப்பட்டுருக்கு.. ரொம்ப ப்ளட் லாஸ் வேற….. சோ.. அவர் இப்போ கோமா க்கு போய்ட்டாரு..”என்றார் டாக்டர்.. “அதுலா இல்ல… இங்க நீங்க ஒழுங்கான ட்ரீட் குடுத்துருக்க மாட்டீங்க…. அதா என் புள்ளைக்கு இப்டி ஆச்சி உங்கள நாங்க சும்மா விடமாட்டோம்..நாங்க அவன இப்போவே வேற ஹாஸ்பிட்டல் கொண்டு போறோம்.”என்று பூனம் கத்த… தாத்தா ஒரு பெரும் மூச்சினை விட்டுவிட்டு..”இந்த கோமா.. எப்போ சரி ஆகும்.”என்றார் “அது சொல்ல முடியாது சார்.. இன்னிக்கி கூட ஆகலாம் ஒன் வீக் ஆகலாம்.. ம்ம். வருஷம் கூட ஆகலாம் சார். அது மட்டும் இல்லாம….”என்று டாக்டர் தயங்க…. “ம்ம் சொல்லுங்க டாக்டர்.”என்றார் தாத்தா.. “இங்க அவர கொண்டு வரும்போதே நல்ல ட்ரிக்ஸ் தான் பண்ணி இருந்தாரு. அது தவர… இன்னும் வேற எதோ போதை மருந்து அவர் ப்ளட்ல நல்ல கலந்துருக்கு.. அத பார்த்தா அவருக்கு இந்த போதை மருந்து பழக்கம் ரொம்ப வருஷமா இருக்கும்னு நினைக்கிறேன் அவர அந்த பழக்கம் கூட ரொம்ப பாதிச்சிருக்கு.அது அவரோட நரம்புகள் அனைத்தையும் ரொம்ப பாதிச்சிருக்கு.”என்றார் டாக்டர். அதை கேட்ட தாத்தா தன் அருகில் நிற்கும் பரத்தையும் அவர் மனைவியையும் முறைத்துக்கொண்டு நின்றார் ஏனென்றால் அவனுக்கு இந்த விசயத்தில் இருவரும் அவனை கண்டிக்காமல் இருப்பதை தாத்தாவே பல முறை எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனால் பெற்றவர்கள் இருவரும் அதனை கண்டுக்கொள்வதாகவே இல்லை.. இப்போது இதுவே அவனுக்கு எதிரியாக வந்து நிற்கிறது “டாக்டர் என் பையனுக்கு இது குணம் ஆகவே ஆகாதா..”என்றார் பரத் கலங்கிய குரலில். “நாங்க எங்களால முடிஞ்ச எல்லா ட்ரீட்மென்டையும் குடுத்திட்டு தான் இருக்கோம் மிஸ்டர் பரத் ஆனா அத உங்க பையன் உடம்பு தான் ஏத்துக்க மாட்டீங்கிது.. பாப்போம். இன்னும் 24ஹவர்ஸ் டைம் எடுத்து பாக்கலாம்.”என்றார் டாக்டர் அதனை கேட்ட தாத்தா அவருக்கு ஒரு தலை அசைப்பை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்தார். அவர் பின்னாலே பரத்தும் வர…. பெரியவர் அவரை முறைத்துக்கொண்டு இருந்தார்.. “எவ்வளவு தடவ நா சொல்லிருப்பேன் பரத். அவன் போக்கே சரி இல்ல கொஞ்சம் கவனினு.. என் பேச்ச நீயும் உன் பொண்டாட்டியும் கொஞ்சம் கூட கவனிக்கவே இல்ல….. இப்போ அவனோட இந்த நிலைக்கு நீயும் உன் பொண்டாட்டியும் தான் காரணம்,. அவன் மனசுல தேவை இல்லாத வஞ்சத்தை ஏத்திவிட்டு அவன ஒரடியா எங்கிட்ட இருந்து பிரிச்சி நா சொல்ற பேச்சையே கேட்க விடாம பண்ணி இன்னிக்கி அவன் உயிரோட இருப்பானா இல்லையானு கூட நமக்கு தெரில……”என்றார் கம்பீரமாக அதே நேரம் கலங்கிய குரலில் அதை கேட்ட அனைவரும் அவரை தலை குனிந்தவாறே நிற்க… அவர் அதற்கும் மேல் அங்கு நிற்காமல் வீட்டிற்கு கிளம்பி போய்விட்டார் புரிந்து கொள்பவர்களுக்கு எதாவது சொல்லலாம்.. இவர்களுக்கு எதை சொல்வது என்று நினைத்தவாறே சென்றார் அங்கு வீட்டிலோ.. அனிஷா வந்ததும் அவளிடம் ஆஸ்வதி அனைத்தையும் சொல்ல…. அவள் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டாள்.. அவளுக்கு தான் ப்ரேமை பற்றி தெரியுமே.. அது மட்டும் இல்லாமல் அவனின் நிலைக்கு காரணம் அவனின் பெற்றவர்கள் தான் என்று கூறிவிட்டு.. “ஆதித் அண்ணாவ அவங்களா சேர்ந்து படுத்துனதுக்கு தான் இப்டி அவங்களா அனுபவிக்கிறாங்க அண்ணி.. என்ன கேட்டா இதலா கம்மினு தான் சொல்லுவேன்.”என்றாள்.. அவளின் இந்த பேச்சி ஆஸ்வதிக்கு அவள் ஆதியின் மீது வைத்திருக்கும் அன்பை அழகாக காட்டியது. அடுத்து தாத்தா வீட்டிற்கு வந்தவர் அனைத்தையும் ஆஸ்வதியிடம் கூற…. அவளால் வருத்தப்பட மட்டுமே முடிந்தது.. தன்னவனை படுத்திய பாட்டை பார்த்தவளுக்கு அவர்களை பாவம் என்று நினைக்கும் அளவிற்கு அவள் பக்குவப்படவில்லை.. பின் ஹாஸ்பிட்டலில் இருந்து அனைவரும் வீட்டிற்கு வர….. ப்ரேமை ஒரு நர்ஸ் கொண்டு பார்க்க சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தனர். பூனம் திரும்ப ஹாஸ்பிட்டல் போக கிளம்ப…. ஆஸ்வதி ஆதியுடன் எதோ சிரித்து பேசுவதை பார்த்தவர்.. அவளிடம் வேகமாக சென்று. “உனக்கு இப்போ சந்தோஷம் தானே.”என்றார் முகத்தை கொடூரமாக வைத்துக்கொண்டு. அதைகேட்டு அங்கு இருந்த அனைவரும் இவர்களையே பார்க்க… ஆஸ்வதி அவரை சாதாரணமாக பார்த்துக்கொண்டு இருந்தாள் “நல்லா இருந்தவன நீ தான் எதோ செஞ்சிட்ட….”என்று அவர் கத்த…. அதை கூர்மையாக கவனித்த ஆஸ்வதி..”நா என்ன செஞ்சென்.”என்றாள். “என்ன செஞ்சியா நேத்து நைட் அவன் ரூமுக்கு வரும் போது நல்லா தானே வந்தான்.. அப்டி வந்தவன் எப்டி இப்டி சாகுற நிலைக்கு போய் கிடக்கான்…”என்று கோவத்தில் என்ன பேசுகிறோம் என்பது கூட தோன்றாமல் உளறிவிட்டார் அதனை கேட்ட அனைவரும் அவரை அதிர்ச்சியாக பார்க்க….. அபூர்வா மட்டும் அவர் அருகில் நெருங்கி.. “அண்ணி.. கோவத்துல என்ன பேசுறோம்னு புரியாம பேசுறீங்க….”என்றார் மெல்லிய குரலில்.. “நீ சும்மா இரு அபூர்வா இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும் என் பையன் மேல கை ஓங்க….. அன்னிக்கி நம்ம எல்லார் முன்னாடியும் தானே அவ அடிச்சா.. நேத்து ப்ரேம் இவ ரூம்க்கு போகும் போது கூட இவ தான் அவன எதோ பண்ணிருக்கா.. என்னடி பாக்குற என்ன பொய் சொல்லி சமாளிக்கலாம்னா.. நேத்து உன் ரூம்க்கு வரும் போது எங்கிட்ட சொல்லிட்டு தான் வந்தான்.. அது மட்டும் இல்லாம உன் ரூம்க்கு போகும் போதும் நா பாத்தேன் அவன….”என்று அனைத்தையும் உளற….. அபூர்வாவோ தலையிலே அடித்துக்கொண்டார் ஆம் அனைவரும் சேர்ந்து போட்ட திட்டம் இது தான் ப்ரேமை அடித்த ஆஸ்வதி மீது அனைவரும் கோவமாக இருக்க…. அவளை எப்படியாவது பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டு இருந்தனர் அதே போல் அவளை சாதாரணமாக இந்த வீட்டை விட்டு வெளியேற்ற அவர்கள் நினைக்கவில்லை.. அவளை அசிங்கப்பட்டு அவமானப்பட்டு இங்கிருந்து அடித்து துரத்த ப்ரேம் திட்டம் போட்டான்.. அதற்கு இவர்கள் அனைவரும் அவனுக்கு கூட்டு.. அந்த திட்டம் தான் ப்ரேம் இரவு அனைவரும் உறங்கிய பின் ஆஸ்வதி அறைக்குள் போய் காலையில் அனைவரும் பார்க்கும் போது அவளின் அறையில் இருந்து வெளி வருவது. அதுப்படி தான் நேற்று அவன் திட்டம் போட்டது போல ஆஸ்வதி அறைக்கு செல்ல… கடந்த கொஞ்ச நாளாக அவனும்பார்த்துக்கொண்டு தான் வருகிறான்.. ஆதி இரவானால் தன் தாத்தா அறைக்கு ஓடுவதை அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி.. ஆதியை தன்னுடைய நோக்கத்திற்காக ஆஸ்வதி அவன் தாத்தா அறைக்கு அனுப்புவதாகவும். அவனை அனுப்பியதும் தன்னை அவள் அறைக்கு வர சொல்வதும் தான் ஆஸ்வதியின் ப்ளான் என்றும். அதற்கு ஈடாக தனக்கு பணம் வேண்டும் என்று ஆஸ்வதி கேட்பதாகவும் தான் அவர்களின் திட்டம். அது போல நேற்று இரவு ப்ரேம் தன் அன்னை அறைக்கு சென்று திரும்ப ஒரு தரம் தன் திட்டத்தை கூறிவிட்டு ஆஸ்வதி அறைக்கு சென்றான். ஆனால் எது அவனை சொதப்பியது என்றால் அவன் அடித்த சரக்கு ஆஸ்வதியை அந்த நிலையில் பார்க்கும் போது அவனின் மனம் தடம் புரண்டு அவளை அடைய நினைக்க…. இல்லை என்றால் அவனின் ப்ளான் ஒளிந்துக்கொண்டு காலையில் வெளிவருவது தான் ஆஸ்வதியை பார்த்தவனின் திட்டம் அனைத்தும் அவனுக்கு மறந்து போக தன் வாயாலையே பேசி அனைத்தையும் கெடுத்துக்கொண்டான்.. அதும் அந்த உருவத்திடம். மாட்டிக்கொண்டான்..