அத்தியாயம்-29 “உன்னால தான்டி என் பையனுக்கு இந்த நிலைமை நேத்து நைட் அவன் உன் ரூமுக்கு வந்தத எனக்கு தெரியாதுனு நினைச்சியா.. அவன் சொல்லிட்டு தான்டி அங்க வந்தான்.. அதும் எங்க எல்லாரோட ப்ளான் கூட அதான்.. அவன உன் ரூமுக்குள்ள அனுப்பி உன் பேர நாரடிச்சி. உன்ன இங்க இருந்து அடிச்சி துரத்துறதுதான் எங்க ப்ளான். ஆனா நீ அத மொத்தமா கெடுத்து அவன எதோ பண்ணிட்ட… சொல்லு அவன என்ன செஞ்ச……”என்று அவள் தோளை போட்டு பூனம் உலுக்க….. ஆஸ்வதியோ இமைக்காமல் பூனத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.. ஆஸ்வதியின் கண்களில் இருந்து கண்ணீர் இப்போது வழிந்துவிடுவேன் என்பது போல் கலங்கி இருந்தது.. இவர்கள் தன்னை எப்படி எல்லாம் சித்தரிக்க பார்த்திருக்கிறார்கள். இவர்களும் ஒரு பெண் தானே இவர்களுக்கு எப்படி இப்படி தன்னை காட்ட மனம் வந்தது.. யாரோ வீட்டு பெண் என்பதால் தானே இவர்களுக்கு தன்னை கண்டாள் இப்படிஎல்லாம் செய்ய தோன்றுகிறது.இதுவே இவர் பெண்ணாய் இருந்தால் என்று அவள் மனம் ஏதேதோ நினைத்து உடல் இறுக நின்றுக்கொண்டு இருக்க…… ஆஸ்வதியின் பக்கத்தில் நின்றிருந்த ஆதியின் உடலோ இறுகி போய் இருந்தது. அவன் கைகள் மடக்கி பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். எங்கே அந்த இருக்கத்தை கொஞ்சம் தளர்த்தினாலும் தன் எதிரில் நின்று தன்னவளை அவமானப்படுத்திக்கொண்டு நிற்பவளை நாலு சாத்து சாத்திவிடுவோமோ என்று பயந்தான்.. ஆதியின் கண்கள் தன் பக்கத்தில் உடல் இறுகிப்போய் முகம் கலங்கி போய் நிற்கும் ஆஸ்வதியின் முகத்திலே நிலைத்தது. ஆஸ்வதிக்கு இடது பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த அனிஷா தன் பெரியன்னையின் இந்த செயல் அடியோடு அவர்களை வெறுக்க செய்தது அனிஷா கோவமாக பூனத்தை வெறித்துக்கொண்டு இருக்க… பூனம் பேசியதை கண்ட விஷாலிற்கே அவனின் பெரியம்மா மீது கோவமாக வந்தது…விதுன் அதற்கு மேல் கோவத்தில் நின்றிருந்தான். ஆதியோ ஒரு முடிவுக்கு வந்தவனாக பூனம் பக்கம் நகர…. அப்போது. “பளார்…”என்ற சத்தம் கேட்டத்தில் அனைவரும் தங்கள் கனவு லோகத்தில் இருந்து நினைவிற்கு வந்தனர். சத்தம் வந்த பக்கம் பார்க்க….. அங்கே பூனம் தான் தன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு தன் எதிரில் இருப்பவரை அதிர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார். “உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்ல…. நீ எல்லாம் மனிசி தானா மிருங்கங்கள். இங்க இருக்கவங்க எல்லாம் மனித மிருகங்கள்.”என்று அந்த வீடே அதிர கத்தினார் தாத்தா.. ஆம் அவர் தான் பூனத்தை அடித்து இருந்தார்.. ஹாஸ்பிட்டல் சென்று வந்தவர் மனம் சரி இல்லாமல் தன் அறையில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தவருக்கு அப்போது தான் பூனம் பேசியது அனைத்தும் அவர் காதில் விழுந்தது.. அதில் தாத்தா அதிர்ந்து போய்விட்டார். இவர்கள் சொத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பது அவருக்கு தெரிந்ததே. ஆனால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில் அவர்கள் இப்படி விளையாடுவார்கள் என்று அவர் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை அதும் எவ்வளவு பெரிய வேலையை பார்க்க இருந்தார்கள் அது மட்டும் நடந்திருந்தால்.. தன் பேரனின் வாழ்க்கையை சரி ஆக்க ஒரு ஏழை பெண்ணின் வாழ்க்கையை அழித்த பாவம் தனக்கு அல்லவா வந்து சேரும். அதனை தானே இங்கு உள்ளவர்கள் செய்ய முயன்றார்கள்.. அதனை நினைக்கும் போது தாத்தாவின் உடல் நடுங்கியது.. ஆஸ்வதி ஒரு தேவதை அவள் நினைத்தால் இந்த திருமணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்.. அதும் விஷாலி ஒன்னும் அவளுடன் பிறந்த தங்கை இல்லையே அப்படிப்பட்ட பெண்ணை இவர்கள் என்னவெல்லாம் பேசுகின்றார்கள் அதும் அந்தஸ்து.. அது இதுவென்று தினமும் அவளை அவர்கள் அனைவரும் துன்பப்பட வைக்கிறார்கள். அதற்கு எல்லாம் ஆஸ்வதி பதில் கொடுத்தாலும் அவளின் மனம் என்ன பாடுபடும் என்று அவர் அறிந்து தான் இருந்தார்.. பூப்போல மென்மையானவள். தன்னவனுக்காக தன்னை அழுத்தமானவளாக….. தன்னை திமிரானவளாக….. மாற்றிக்கொண்டாள்.. அவளை போய் இவர்கள் என்னவெல்லாம் செய்ய திட்டம் போட்டிருக்கிறார்கள். இப்போது தாத்தா பூனத்தை அடித்ததை பார்த்து விஷால்.. அனிஷா. விதுனின் கோவம் கொஞ்சம் குறைந்தது… “ப்பா…”என்று கத்தினான் பரத்..அஜய் “மாமா..”என்று கத்தினாள் ரியா. “தாத்தா..”என்று கத்தினாள் இஷானா… ஆனால் யாருடைய குரலும் பெரியவரின் காதில் விழவில்லை.. அவர் பூனமை முறைத்துக்கொண்டே நிற்க….. அவளோ தாத்தாவை அதிர்ந்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். ஏனென்றால் இதுவரை பெரியவர் தன் மனைவியின் மீது கூட கை வைத்தது இல்லை என்று அவர் பிள்ளைகள் அடிக்கடி சொல்லி அவள் கேட்டிருக்கிறார்.அப்படி பட்டவர் இன்று தன்னை அறைந்திருக்கிறார் என்றால்.. அதுவே பூனத்திற்கு பெரிய அவமானமாக இருந்தது.. அதும் ஆஸ்வதி முன்னால் அறைந்தது. அவருக்கு இன்னும் கோவத்தை அதிகரிக்க… “எவ்வளவு தைரியம் இருந்தா என் மேலே கை வச்சிருப்பீங்க…..”என்று கத்தினார் பூனம். ஆனால் அதனை பெரியவர் தூசு போல தட்டிவிட்டுவிட்டு.பரத்தை பார்க்க……பரத்தோ அவரை முறைத்துக்கொண்டு நின்றான். பரத் அனைவருக்கும் முன் தன் மனைவியை அறைந்தது முதலில் அதிர்ச்சியை அளித்தது,. பின் தன் தந்தையின் மீது கோவம் வந்தது. “ப்பா.. எப்டிப்பா நீங்க என் மனைவிய அடிக்கலாம்..”என்று சண்டைக்கு நின்றான் பரத்.. “அதானே அண்ணிய எப்டிப்பா நீங்க அடிச்சீங்க……”என்றான் அஜய்.. “அதானே அண்ணி என்ன தப்பு பண்ணுனாங்க அவங்கள இப்டி எல்லாருக்கும் முன்னாடி வச்சி அடிச்சிருக்கீங்க… அவங்க கிட்ட மன்னிப்பு கேளுங்க….”என்றாள் அபூர்வா.. திமிராக முகத்தை வைத்துக்கொண்டு.. அதில் ஒருவனின் உடல் இறுகியது… அதனை கேட்ட தாத்தா தன் மகள் அருகில் வந்து..”நா அவகிட்ட மன்னிப்பு கேட்கனும் இல்லையா அபூர்வா.”என்றார் தாத்தா “ஆமாப்பா. அவங்க என்ன தப்பு பண்ணுனாங்க…. ஏதோ ப்ரேமுக்கு அடிப்பட்டுட்டுங்குற ஆதங்கத்துல எதோ பேசிட்டாங்க….. அதும் யாரோ ஒருத்திய பாத்து தானே பேசுநாங்க….உங்களுக்கு ஏன் கோவம் வருது.”என்றாள் அபூர்வா ஆஸ்வதியை முறைத்துக்கொண்டு.. அதை கேட்ட தாத்தா. ஓங்கி ஒரு அறை தன் மகளுக்கும் கொடுக்க…. அதில் அதிர்ந்துவிட்டால் அபூர்வா ஏனென்றால் இதுவரை தங்களை வளர்த்த அப்பா. தாங்கள் எந்த தப்பு செய்தாலும் அதற்காக அடிக்காமல் இருந்த அப்பா. முதல் முதலில் அடித்திருக்கிறார் அதில் அதிர்ந்து தானே போவார்கள் “என்ன சொன்ன அபூர்வா.. காதுல சரியா விழழ……”என்றார் தாத்தா கோவத்துடன் அதில் மிரண்ட அபூர்வா வாயை கம்சிப் என்று மூடிக்கொண்டு நிற்க….. அதனை பார்த்த அபூர்வாவின் கணவரும் சர்வமும் ஒடிங்கி போய் நின்றார்.. பெரியவர் அப்படியே பரத் அருகில் வந்து நின்றவர்..”சொல்லுப்பா நீ என்னவோ சொல்லிட்டு இருந்தியே.. உன் மனைவிய நா எப்டி அடிக்கலாம்னா கேட்ட….”என்றார் அவனை முறைத்தவாறே அதில் பயந்த பரத். எச்சிலை விழுங்கியவாறே தன் தந்தையின் புதிய அவதாரத்தை பார்த்துக்கொண்டு இருந்தார். “ஒரு பொண்ணு. அதும் இந்த வீட்டு மருமகள உன் மனைவி எப்டிலா அசிங்கப்படுத்திட்டு நிற்கிறா அத கேட்க உனக்கு துப்பு இல்ல என்னை கேள்வி கேட்க வரியா..”என்றார் மிரட்டலாக……பின். “ஆமால அதுக்கு திட்டம் போட்டு கொடுத்ததே நீதானே. அப்புறம் எப்டி உனக்கு கேட்க வாய் வரும்.”என்றார் பரத்தை நெருங்கியவாறே.. “இல்…ல்ல..ப்பா. நா எதும்..”என்று பரத் நடுங்க… அவர் அருகில் நெருங்கிய பெரியவர் “என் பசங்க எல்லாம் ஒன்னா ஒத்துமையா இருக்கனும்னு தான் இவ்ளோ நாள் உங்கள எல்லாம் இங்க தங்க அனுமதிச்சேன்.. ஆனாலும் நீங்களா என் பேரன் ஆதித் கிட்ட நடந்துக்குறது எதும் எனக்கு தெரியாதுனு நெனைக்கிறீங்களா.. தெரியும் ஆனாலும் நா எதுக்கு தெரியுமா அமைதியா இருந்தேன் என் மகன் விஷ்ணுக்காக…..”என்றார் கடைசி வரி பேசும் போது நடுங்கிய குரலில்.. அந்த பெயரை கேட்டதும் ஆதியின் உடலும் நடுங்க ஆரம்பிக்க….. இடையில் ஆஸ்வதியின் கையை ஆதரவாக பிடித்திருந்த ஆதியின் கை இப்போது உதறுவதை தன் கையின் மூலம் உணர்ந்த ஆஸ்வதி ஆதியின் பக்கம் தன் பார்வையை திருப்பிக்கொண்டாள் “அவன் சொன்னான்.. என் விஷ்ணு சொன்னான் ப்பா. என்னிக்கி இருந்தாலும் அவங்களா என் அண்ணா தங்கை தானே. தப்பே செஞ்சாலும் அவங்க உங்க பிள்ளைகள் தானே அவங்களா இங்க நம்ம கூடவே இருக்கட்டும்ப்பா அவங்கள அனுப்பிடாதீங்கனு என் விஷ்ணு சொன்னதுக்காக இவ்ளோ நாள் உங்கள எல்லாம் நா இங்க விட்டு வச்சிருந்தேன் ஆனா இனி…”என்று தாத்தா மறுப்பாக தலை ஆட்ட…. அதனை கேட்ட அனைவரது முகமும் பயத்தில் வெளிரியது.. எங்கே தன் தந்தை தங்களை வீட்டை விட்டு அனுப்பிவிடுவாறே. அப்படி அனுப்பினால் ஆதியின் இந்த சொத்தினை அவனுக்கு விட்டு கொடுத்தது போல அல்லவா மாறும் என்று அவர்கள் அனைவரும் மனதில் யோசிக்க….. பரத் தன் மனைவியை தன் அக்னி பார்வையால் முறைத்துக்கொண்டு நின்றிருந்தார் அதனை பார்த்த பூனம் பயந்து போனாள்.. பரத் மனதில்..”இந்த பூனம்க்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல…. இப்டி நடு ஹாலில் வச்சி இப்டி உலறி கொட்டிட்டாளே.. இப்போ இந்த அப்பா பேசுறத பார்த்தா நம்மள இங்க இருந்து ஒரடியா அனுப்பிடுவாறு போல……”என்று பயந்தவர்.. பூனமை பார்த்து கண்காட்ட…… “சாரி மாமா நா எதோ தெரி..”என்று ரியா தன் கணவனின் எரியும் பார்வை தாங்காமல் அவரிடம் மன்னிப்பு கேட்க வர…. “போதும் உங்க கண் காட்டு விளையாட்டுலாம்…”என்று அவர் வீடே அதிர கத்த… ஆஸ்வதி தன்னவனின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு.. “தாத்தா.”என்று அழைத்தாள் அவளது இந்த அழைப்பில் ஆதி ஆஸ்வதியை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தான்.. அவனுக்கு தான் தெரியுமே தன்னவளின் இளகிய மனம். அவள் அடுத்து என்ன கேட்க போகிறாள் என்பதை உணர்ந்தவன் போல….. “ஏஞ்சல் எனக்கு தூக்கம் வருது. நா ரூமுக்கு போறேன்..”என்று ஒரு மாதிரி குரலில் கூறிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து ஓடிவிட்டான் ஆஸ்வதியோ ஓடும் அவனையே பார்த்தவள்.. தன்னையே அனைவரும் பார்ப்பதை பார்த்துவிட்டு தாத்தாவை நோக்கி “தாத்தா இவங்க எதோ ஒரு தடவ தப்பு செஞ்சிட்டாங்க…. அவங்கள மன்னிச்சிடுங்க தாத்தா…”என்றாள் கெஞ்சல் குரலில் அவளை ஆச்சரியமாக பார்த்த தாத்தா.. “என்னமா ஆஸ்வதி உன்ன என்னலா செய்ய இவங்க திட்டம் போட்றுக்காங்க…. அவங்கள போய் இப்டி மன்னிக்க சொல்றீயே மா.”என்றார் கோவமாக… “இல்ல தாத்தா நா எனக்காக அப்டி சொல்லல தாத்தா…”என்றாள் தாத்தா அவளை புரியாமல் பார்க்க….. “விஷ்ணு அங்கிளோட ஆசை அதானே தாத்தா.. அங்கிள் தானே இவங்களா இங்கையே இருக்கனும்னு ஆசைப்பட்டாங்க…..அதுனால……”என்று ஆஸ்வதி இழுக்க… “இங்கையே இருந்து தொலையட்டும்.. ஆனா இனி யாரும் உன் பக்கம் கூட தலை வச்சி படுக்க கூடாது.. அது மட்டும் இல்லாம இனி யாரும் என் மூஞ்சில முழிக்க கூடாது.”என்று சொல்லிவிட்டு வேகமாக தன் அறைக்கு சென்றுவிட்டார்.. அதனை கேட்ட அனைவரும் ஒரு பெரும்மூச்சினை விட்டுவிட்டு ஆஸ்வதியை முறைத்துக்கொண்டு நின்றனர்.. பூனம் கோவமாக ஆஸ்வதி அருகில் நெருங்க….. அதை பார்த்த பரத்..”இப்போ நீ செஞ்சது போதாதா.. இன்னும் என்ன செய்ய அவ பக்கம் போற…..”என்றார் பரத் பல்லை கடித்தவாறே “பரத் என்னை விடுங்க…. அவளால தான் உங்க அப்பா என்னை அடிச்சிட்டு போறாறு. அவள நா சும்மா விடமாட்டேன்.”என்று பூனம் கத்த…. “ஆமா அண்ணா அவளால தான் இன்னிக்கி என்னை கூட அப்பா அறைஞ்சிட்டாரு அவர நாம சும்மா விடக்கூடாது…”என்று அபூர்வாவும் கத்த….. அவள் கணவன் அவள் கையை பிடித்து “வாங்குனது போதாதா அபூர்வா. இப்போதானே மாமா சொல்லிட்டு போனாங்க…. பேசாம வா…”என்று கடுப்பாக அவளை இழுத்து செல்ல பார்க்க… “விடுங்க என்னை. அவள இன்னிக்கி…”என்று அபூர்வா எதோ சொல்ல வர ஆஸ்வதி அவர்களையே கூர்மையாக பார்த்தவாறே.. “தாத்தா…”என்று அழைக்க….. அதில் பயந்த அனைவரும் அங்கிருந்து சிதறி ஓடிவிட்டனர் அதை பார்த்த ஆஸ்வதி முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.. திரும்பி பார்க்க அங்கு விஷால், அனிஷா, விதுன் மட்டும் நின்று ஆஸ்வதியையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்த ஆஸ்வதியும் புன்னகைக்க… “என்ன அண்ணி. உங்கள இப்டிலா பேசிட்டு இருக்காங்க…. நீங்க என்னனா அமைதியின் சிகரம் மாறி பேசாம இருக்கீங்க…..”என்றான் விஷால் “ஆமா. அண்ணி. அவங்க பண்ணுனது நீங்க மன்னிக்கிற அளவுக்கு சின்ன விஷ்யம் இல்லனு உங்களுக்கு தெரியாம இருக்காது. அப்டிப்பட்ட அவங்கள ஏன் அண்ணி தாத்தாட்ட சொல்லி இங்கையே தங்க வைக்கிறீங்க…..”என்றாள் அனிஷா.. இருவரும் பேசுவதை கேட்டாளும் விதுனின் பார்வை என்னவோ ஆஸ்வதியிடம் தான் இருந்தது. அவள் என்ன பதில் சொல்வாள் என்று கூட அவனுக்கு தெரிந்து தான் இருந்தது.. ஆஸ்வதியும் விதுனை பார்த்தவாறே..”அத பத்தி விதுன் அண்ணா உங்க கிட்ட சொல்வாங்க….”என்று தன் அறைக்கு போய்விட்டாள் ஆஸ்வதி. இதனை கேட்ட அனிஷாவும். விஷாலும் விதுனை பார்க்க….. அவனோ போகும் ஆஸ்வதியே பார்த்தவாறே..”அவ விஷ்ணு அங்கிளுக்காகவும் தாத்தாவோட ஆசைக்காகவும் தான் இப்டி பேசிருக்கா.”என்றான் விதுன் அதனை கேட்ட விதுன் அனி இருவரும் ஒருவரைக்கொருவர் புரியாமல் பார்த்துக்கொள்ள… விதுன் இருவரையும் அழுத்தமாக பார்த்துவிட்டு அங்கிருந்து போய் விட்டான் ஆஸ்வதி தன் அறைக்கு செல்ல…. அங்கு ஒரு பூச்சாடி எக்கசக்கமாக உடைந்து தூள் தூளாக கிடந்தது.. அதனை பார்த்த ஆஸ்வதி புருவம் முடிச்சிட… ஆதியை அறையில் தேடினாள்.. ஆனால் அவன் அங்கு எங்கும் இருப்பது போல் அவளுக்கு தெரியவில்லை. உடனே அவள் பால்கனியில் எட்டிப்பார்க்க… ஆதி நிலவை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான்.. ஆஸ்வதி அவனின் உருவத்தை பார்த்தவாறே அவன் அருகில் செல்ல….. திடிர் என்று அழுத்தமான அறை ஒன்று அவள் கன்னத்தை பதம் பார்த்தது..