உயிர் போல காப்பேன்-38

5
(20)

அத்தியாயம்-38
அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அனைவரின் மனமும் பதறியது.
ஆஸ்வதியோ.. அவர்கள் செய்தது அனைத்தையும் கேட்டு உடல் நடுங்க நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்குவது ஆதிக்கு நன்றாக தெரிந்தது. அவளின் கையை அழுத்தமாக பற்றியவன் அவளை தன்னோடு லேசாக அனைத்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி கொஞ்சம் தன்னை சமாளித்துக்கொண்டாள்…
அந்த வீட்டின் வெளியில் போலீஸ், ப்ரேஸ், பொதுமக்கள் அனைவரும் குவிந்திருந்தனர்
அனைவரின் மனமும் இந்த கொலைக்கார கூட்டத்தின் வெறி செயல்களை கேட்டு அவர்களை கொல்லும் அளவிற்கு வெறியோடு நின்றிருந்தனர்.. கொஞ்சம் விட்டால் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரையும் கொன்றே இருப்பார்கள்.
இவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று யோசிக்கும் போதே ஹாஸ்பிட்டலில் இருந்து பூனத்தை போலீஸ் அரெஸ்ட் செய்து இங்கு அப்போது தான் அழைத்து வந்திருந்தனர். அவரின் முகம் கொஞ்சம் கூட போலீஸை பார்த்தோ.. தன் மாமனாரின் கோவத்தை பார்த்தோ பயப்படவில்லை.. அப்படியே கல் போல வந்து ரியா பக்கம் அவர் நிற்க…
அப்போது தான் ரியா தலையில் இவ்வளவு நேரம் துப்பாக்கியை வைத்து மிரட்டி அனைத்தையும் கூற வைத்தவன்.. அவர் தலையில் இருந்து கன்னை எடுத்தவாறே..பூனம் பக்கம் வந்து நின்றவாறே.
“உங்களுக்கு கொஞ்சம் கூட கொலை னெஞ்சிட்டோங்குற பயம் இல்லையில…. மனசுல… பரவால அத நா வர வைக்கிறேன்…”என்று கண்களில் கனலுடன் அவன் கூற….
அவனை நிமிர்ந்து பார்த்த அந்த மூவருக்கும் பயம் அப்படி வந்தது.. இருந்தாலும் தன்னை சமாளித்துக்கொண்ட பூனம்..
“போலீஸ் தானே நீ அரெஸ்ட் பண்ண வந்தா அத மட்டும் செய். தேவை இல்லாம பேசாத…..”என்றார் திமிராக
அதை கேட்ட அவன் கண்கள் ரத்தத்தை விட அதிக நிறத்தில் சிவக்க… அதற்கு மாறாக அவன் அழுத்தமான இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
“ஹாஹா.. நா போலீஸா மட்டும் இருந்தா அத தான் செய்திருப்பேன் ஆனா.. நா போலீஸ் மட்டும் இல்லையே…”என்றான் புதிராக
அதில் அவர்கள் மூவரும் மிரட்சியுடன் அவனை காண….
“இவர் ஏசிபி அபினவ் க்ரிஷ். நீங்க கொன்னீங்களே மாதவி அவங்களோட தம்பி..”என்றான் ஆதி குரலில் அவ்வளவு வன்மம்
அதை கேட்டு அவர்கள் ஸ்தம்பித்து போக……மனதில் இல்ல இல்ல அவளுக்கு கூட பிறந்தவன் யாரும் இல்லனு சொன்னாங்களே என்று மனதில் நினைத்துக்கொண்டு இருக்க…..
“ம்ம்ம். மாதவி அக்காக்கு இப்டி ஒரு தம்பி இருக்குறதா அவங்கள தெரிஞ்ச யாருக்குமே தெரியாது.. அதுனால உங்களுக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்க செஞ்ச வினை என் மூலமா உங்களுக்கு வினையா அருவடை தர போது.”என்றான் அபினவ் க்ருஷ் அவர்களை கண்கள் சிவக்க முறைத்தவாறே
“நாங்கதான் இத செஞ்சோம்னு என்ன சாட்சி இருக்கு உங்க கிட்ட……”என்றாள் பூனம் திமிராக
“ம்ம்ம்ம்.. அதும் சரி தானே அபினவ். அவங்க கிட்ட உங்க எவிடன்ஸ காட்டுங்களேன். அவங்க முகத்துல அத பார்த்ததும் வர அதிர்ச்சிய பாக்க நா ஈகரா இருக்கேன்…”என்றான் ஆதி நக்கலாக
அபினவ் க்ருஷ் அவனை பார்த்து தலை அசைத்தவன்.. கான்ஸ்டமிளை கன் காட்ட அவர் தன் பின்னால் நின்றிருந்த ஒருவனை அவர்கள் முன்னால் வந்து நிப்பாட்டினர். அவன் வேறு யாரும் இல்லை. அவர்களின் அனைத்து கொலைகளுக்கும் உதவியாக இருந்த விக்னேஷ் தான்
அவனை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியில் கண்கள் தெறித்து வெளியில் வரும் அளவிற்கு திறக்க…..
“என்ன இவன எப்டி கண்டுப்பிடிச்சோம்னு பாக்குறியா அபூர்வா..”என்றார் பெரியவர்..
அதிலே அவருக்கு அனைத்தும் முன்னவே தெரியும் என்று உணர்ந்தவர்கள். அவரையே பார்க்க…
அவர் ஒரு நாள் அவனை பணக்காரனாக தன் பிஸ்னஸ் பார்ட்டியில் சந்தித்ததில் தொடர்ந்து.. அவனை ஆள் வைத்து கண்காணிக்க வைத்ததில் இருந்து அவனை பூனேயில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அனைத்து விஷ்யங்களையும் வாங்கியது வரை அனைத்தையும் சொன்ன பெரியவர்.
“இவன விசாரிச்சதுல உங்க மேல நிறைய விஷ்யம் இருக்கும்னு தோணிச்சி. அதுனால தான் நா அடிக்கடி பூனே போய் இவன கட்டி வச்சி விசாரிச்சி. அதுக்கு அபினவ உதவியா கூப்பிட்டு. அவர வச்சே நீங்க செஞ்ச எல்லா தில்லுமுல்லு வேலைக்கும் எவிடன்ஸ் திரட்டினேன். அதுனால தான் உங்கள அரெஸ்ட் பண்ண கொஞ்சம் டிலே ஆகிட்டு…”என்றார் பெரியவர்…
“ம்ம்ம். அப்புறம் இன்னொரு விஷ்யம் இந்த கொலை கேஸ் மட்டும் இல்ல…. இன்னும் உங்க மேல நிறைய கேஸ் மாட்டிருக்கு. அது மட்டும் இல்லாம…. “என்று தயங்கிய அபினவ்.. ஆதியை தயக்கமாக பார்க்க….. ஆதியின் கண்கள் கலங்கி சிவந்து போனது..”ஆதியோட அப்பா மிஸ்டர் விஷ்ணு சர்மாவையும் நீங்க கொன்னதும்”என்றான் அபினவ்
அதை கேட்ட ஆஸ்வதி அதிர்ந்து தன்னவனை காண… அவன் முகம் கலங்கி போய் இவளை பார்த்து ஆம் என்று தலை ஆட்டினான்
ஆம் விஷ்ணுவும் இவர்களால் தான் கொல்லப்பட்டார். அதும் தன் மகன் கண் முன்னாலே.
விஷ்ணு ஆதி படிக்க பாரின் சென்றதும்.. அவருக்கு எல்லாமுமாக இருந்தது அனிஷா தான் அப்போது தான் அனிஷா பள்ளி இறுதி வருடம் படித்துக்கொண்டு இருந்தாள். அவளை அழைத்து போய் ஸ்கூலில் விடுவது திரும்ப அழைத்து வருவது எல்லாமே விஷ்ணு தான் செய்வார்.
ஆதி பாரின் போனாலும் ஒரு நாளைக்கு மூன்று முறை தன் தந்தைக்கு அழைத்து பேசாமல் இருக்க மாட்டான். இரண்டு வருடம் கழித்து அன்று ஆதி தன் படிப்பு முடிந்துவிட்டதாகவும். இன்னும் இரண்டு நாட்களில் நான் ஊருக்கு வருவதாகவும் கூற விஷ்ணு ஆனந்தமடைந்தார். தன் தந்தையிடம் இதனை கூறி சந்தோஷமாக சுற்றி வந்தார்…
அதே போல தான் ஒரு நாள் அனிஷாவை அழைத்து போய் பள்ளியில் விட்டுவிட்டு ஆபிஸ் செல்ல இருந்தவர் முக்கியமான ஃபைல் ஒன்று வீட்டிலே மறந்து வைத்துவிட்டு வந்ததை நினைத்து தன்னையே நொந்துக்கொண்டவர்.. திரும்ப தன் காரில் வீட்டிற்கு வந்தார்.
அப்போது தான் பூனமும்,பரத்தும் விக்னேஷிடம் பேசவதை எதர்ச்சையாக கேட்டார். கேட்டவர் அதிர்ந்து போனார்.
இவர்கள் அனைவரும் இதுவரை கம்பெனியில் செய்த கையாடலில் இருந்து குணால், மதுராவை கொன்றது வரை விக்னேஷிடம் பேசி. இனி இது போல் பணம் கேட்க வராதே. நீ செய்ததுக்கும் மேல் நான் கொடுத்துவிட்டேன். என்று பூனம் ஒரு பெரிய தொகையை அவனுக்கு செக்கில் போட்டு நீட்ட…. அதனை பல் இழித்தவாறே வாங்கிக்கொண்டு அவன் கிளம்பும்போது எதார்த்தமாக திரும்ப அங்கு விஷ்ணு நிற்பதை பார்த்துவிட்டு அவன் ஓடிவிட்டான்.
அவன் ஏன் திடீர் என்று ஓடுகிறான் என்று பார்த்த பூனம் அப்போது தான் அங்கு விஷ்ணு நிற்பதை பார்த்து அதிர்ந்தவர் பரத்திற்கு கண் காட்டினார் அவனும் பார்த்து அதிர்ந்தவன்.
விஷ்ணு காலிலே விழுந்து இதனை யாரிடமும் சொல்லாதே ஏதோ அவசரத்தில் இதை செய்துவிட்டோம் என்று கதற…. விஷ்ணு அவர்களையே இமைக்காமல் பார்த்தவர் அங்கிருந்து சென்றுவிட்டார்..
“உன் தம்பி யார்கிட்டையும் சொல்லாம இருப்பானு எனக்கு நம்பிக்கை இல்ல……”என்று கத்தினாள் பூனம்
“அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்ற…..”என்றான் பரத்
“ம்ம். அவனையும் முடிச்சிடுறது தான் நமக்கு நல்லது..”என்றாள் பூனம்
அதை கேட்டு அதிர்ந்த பரத் தடுக்க வாய் திறப்பதற்குள் அவனின் ஆபிஸ் கையாடல் அனைத்தையும் விஷ்ணு ஒரு தரம் கண்டுப்பிடித்து பரத்தை கண்டித்தது அவனுக்கு நியாபகம் வந்தது.
அவன் இல்லாமல் போனால் தான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று பரத் மனதில் தோன்ற….. உடனே பூனத்திடம் தலை ஆட்டினான். அப்படிதான் ஆதியும், விஷ்ணுவும் வரும் போது ஆக்ஸிடன்ட்டில் இருவரையும் கொல்ல ப்ளான் போட்டார்கள்.
அதன் படி விக்னேஷை அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் விஷ்ணு ஏர்ப்போர்ட் செல்லும் போது அவனுடன் யாரும் செல்லாதவாறு பார்த்துக்கொன்டனர்
அன்று ஆதி வரும் நாள் விஷ்ணு எப்போதும் ஆதியை காண சந்தோஷத்துடன் கிளம்புபவர் இன்று இல்லை கடந்த இரண்டு நாட்களாகவே பரத். பூனம் பேசியதை மனதில் ஓடிக்கொண்டு இருந்ததால் கலக்கத்துடனே கிளம்பினார் அனிஷாவும் கூட வருவேன் என்று கூற….. ஆனால் விஷ்ணு மனதிற்கு எதோ கெட்டது நடப்பது போல் தோன்ற….. அவளை வர வேண்டாம் என்று கூறிவிட்டார்..
அவர் மட்டும் கிளம்பி ஏர்ப்போர்ட் போக….. அங்கு ஆதி தன் தந்தையை கட்டிக்கொண்டு தன் பாசமழையை பொழிந்துக்கொண்டு இருக்க….. ஆனால் விஷ்ணுவோ.. ஆதியையே கலக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார். அவரின் முக மாறுதலை கண்ட ஆதி..
“என்ன விச்சுப்பா.. அங்க இருந்தா எப்போ வருவ எப்போ வருவனு கேட்டுட்டே இருப்பீங்க…. இப்போ என்னனா அமைதியா என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க….”என்றான் அவரை கட்டிக்கொண்டு
அவனின் கேள்வியில் தான் தன்னை ஆதி கவனிக்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்டவர். மெல்ல தன்னை சமாளித்துக்கொண்டு புன்னகையுடன்
“இவ்ளோ நாள் கழிச்சி என் பையன பாத்துருக்கேன்ல அதான் அவன் முகத்தை உத்து பார்த்துட்டே இருந்தேன்..”என்றார் விஷ்ணு
அதை கேட்டு புன்னகைத்த ஆதி..”இப்டியே ஏர்ப்போர்ட் வாசலையே பாக்குறதா இருக்கீங்களா. வாங்க வீட்ல போய் பாக்கலாம்.”என்றான் ஆதி கிண்டலாக
அதில் புன்னகைத்தவர்..”வா.என்று இருவரும் காரில் ஏறி கிளம்பியவர்கள்.. விஷ்ணு தான் காரை தான் தான் ஓட்டுவேன் என்றவர் ஆதியை தன் அருகில் உட்கார வைத்தவாறே.. காரை மெதுவாக ஓட்டிவந்தார்
“அப்புறம்ப்பா. அனி எப்டி இருக்கா.. தாத்தா.. விதுன் போன் பண்ணுனானா..”என்று அடுக்கடுக்காக அவரிடம் பேசிக்கொண்டே வர….. விஷ்ணுவும் கொஞ்ச நேரம் மனம் விட்டு ஆதியிடம் பேசிக்கொண்டே வந்தார்..
அவனை பார்த்து பார்த்து மகிழ்ந்து போனார்.. அல்லது இது தான் தன் இறுதி நாள் என்று தெரிந்து போனதோ என்னவோ.. பேசினார்.. அவனை பேச வைத்தார்.. ஒருமணி நேரம் போகும் தன் வீட்டிற்கு 3மணி நேரமாவது ஆக்க வேண்டும் என்பது போல் மெதுவாக ஓட்டியபடி வந்தார்.
அப்போது தான் ஆதி பின்னால் வந்த லாரியை பார்த்தவன்…”என்ன இந்த லாரியை நா ஏர்ப்போர்ட்ல இருந்து கிளம்புனதுல இருந்து பாக்குறேனே. இன்னும் நம்ம பின்னாடிதான் வருது ஒன்னு முன்னாடியாவது போகனும்ல…..”என்றான் ஆதி
அப்போதுதான் விஷ்ணுவும் முன் கண்ணாடி வழியாக லாரியை பார்க்க….. அவருக்கு அது எதார்த்தமாக வந்தது போல தெரியவில்லை அதனை கூர்மையாக பார்த்தவர் அதில் ஏதோ தவறிருப்பது போல தெரிய… அப்போது தான் திடீர் என்று மெதுவாக வந்த லாரி அதிவேகமாக இவர்களை நோக்கி வர….. அதில் என்னவென்று புரிந்துக்கொண்ட விஷ்ணு.. ஆதியையே இமைக்காமல் பார்த்தவர்
“ஆதிக்கண்ணா.”என்றார்
“சொல்லுங்க விச்சுப்பா.”என்றான் தலையை கண்ணாடி வழியாக பார்த்து கோதிக்கொண்டு
“கண்ணா..”என்று தழுதழுக்கும் குரலில் விஷ்ணு கூப்பிட… அப்போது தான் தன் தந்தையின் குரல் மாற்றத்தை உணர்ந்தவன் அவரை திரும்பி பார்க்க….
“யாரையும் நம்பாத கண்ணா.. அதும் நம்ம வீட்ல இருக்க யாரையும்.”என்றவர் திடீர் என்று காரை அதிவேகமாக ஓட்டியவாறே ஆதியின் பக்க கதவை திறந்துவிட்டவர்.. நொடியில் ஆதியை பிடித்து கீழே தள்ளினார்
தன் விச்சுப்பாவின் கலங்கிய குரலில் அவரையே பார்க்க அவர் சொன்னதை கேட்டவன் என்னவென்று உணரும் முன் அவரின் திடீர் செயலில் அவரையே பார்த்தவாறே ஓடும் காரில் இருந்து தூர போய் விழுந்தான்
ஆதியின் நலனை கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டே இருந்த விஷ்ணு.. தன் மகனை காப்பாத்திவிட்டேன் என்ற திருப்தியில் புன்னகைக்க…. அதனை முடித்து வைக்கவே. வந்து மோதியது அந்த லாரி.
ஆதி ரோட்டில் விழுந்தவன் தலையில் பலமாக அடிப்பட….. அந்த வலியையும் மீறி தன் தந்தை போன காரை பார்த்தவன் கண்ணிற்கு தெரிந்தது என்னவோ.. லாரி மோதிய வேகத்தில் காரின் பெட்ரோல் டேங்கில் இருந்து வடிந்த பெட்ரோலையும்.. திரும்பி வந்து மோதிய லாரியையும். அது மோதியதால் வெடித்த காரையும் தான்..
அதனை மங்கும் கண்களில் பார்த்தவன்.”விச்சுப்பா..”என்றவாறே அப்படியே மயங்கி போனான்
பின் கண் விழித்து பார்க்கும் போது ஆதி மருத்துவமனையில் இருக்க… அவன் பக்கம் ஒருவன் உட்கார்ந்திருந்தான்.. அவன் தான் அபினவ் க்ருஷ் ஆதிக்கு ஒன்றும் பெரிய அடி இல்லை. தலையில் மட்டுமே அடி கொஞ்சம் பலம். மத்தப்படி உடலில் கொஞ்சம் அங்கு அங்கு சீராய்ப்பு…அவ்வளவே ஆதி ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்த அடுத்த 3மணி நேரத்திலே கண் விழித்துவிட்டான்.
ஆதி தன் எதிரில் நிற்கும் அவனையே பார்த்தவன் பின்.. தன் தலையை தொட்டு பார்த்தவன்..
“என் விச்சுப்பா.”என்று ஆதி கத்த….. அபினவ் ஒன்றும் சொல்லாமல் தலை தொங்கியவாறே நின்றான் பின் சாரி ஆதி என்றான்.அதிலே ஆதி வெறித்த பார்வை பார்த்தவாறே இருக்க…..
“என் விச்சுப்பாவ யாரோ யாரோ.”என்று ஆதி புலம்ப…..
“அது உன் பெரியப்பா அன்ட் உன் அத்த பேமிலி தான்.”என்றான் அபினவ்..
அதில் அதிர்ந்தவன் அவனை நிமிர்ந்து பார்க்க….. தன் கையில் இருந்த ஒரு போனை ஆதியிடம் அவன் நீட்ட….. அதனை வாங்கியவன் அதில் இருந்த ஒரு வீடியோவை பார்த்தான்..
அது விஷ்ணு இன்று காலை ஆதியை அழைக்க வீட்டில் இருந்து கிளம்பும் போது எடுத்த வீடியோ. அதை விஷ்ணு தான் எடுத்திருக்கிறார். அதில் விஷ்ணு.. தன் அண்ணன், அவர்கள் மனைவி, தங்கை அவள் கணவன் அனைவரும் தனக்கு செய்த துரோகம்.. உன் அம்மாவின் பேரை கெட்டதாக மாற்றி அவளை கொன்றுவிட்டார்கள் என்பது முதல் அனைத்தையும் அதில் கூறியிருந்தார்..
“இத ஏன் இப்போ நா ரெக்கார்ட் பண்றேனா.. என் பையங்கிட்ட இத சொல்ற அளவு டைம் தரமாட்டாங்க அவங்கனு எனக்கு தோணுது. அதான்.. ஆதி ஐ லவ் யூ டா.. கண்ணா.. அனிஷாவ பார்த்துக்கோ அவங்க யாரையும் நம்பாதப்பா…”என்று அந்த வீடியோ முடிந்திருந்தது..
அதனை பார்த்த ஆதி கண்கள் நெருப்பாக கொதித்தது. தன் தந்தை தன் விச்சுப்பாவை கொன்றவர்களை இப்போதே சாகடிக்க வெறி வந்தது எதிரில் நின்றவனை பார்த்தவன்
“இந்த வீடியோ உங்க கிட்ட…..”என்று ஆதி தொண்டை அடைக்க கேட்க…
“ம்ம்ம். நேத்து உங்க அப்பா என்னை பார்க்க எஸ்பி ஆபிஸ் வந்துருக்காரு ஆனா அப்போ நா அங்க இல்ல… ஒரு கேஸ் விஸ்யமா வெளில போய்ட்டேன்.அப்போ தான் உன் அப்பா என் நம்பர வாங்கிட்டு போய் இருக்காரு. இன்னிக்கி காலையில எனக்கு இந்த வீடியோவ உங்க அப்பா எனக்கு அனுப்பி வச்சாரு. இத பார்த்த உடனே நா உங்க அப்பாக்கு போன் பண்ணேன் பட் கால் போல… அப்புறம் தான் எனக்கு நியூஸ் தெரிஞ்சிது ஐ ம் சாரி ஆதித்”என்றான் அபினவ்
அதனை கேட்ட ஆதி கண்கள் கலங்க அவனையே பார்க்க….
“அப்புறம் இன்னொரு விஷ்யம்.”என்ற அபினவ் சொன்ன செய்தியை கேட்டு ஆதியின் உடல் இறுகி போனது..
“இத மட்டும் நீங்க பண்ணுனா நாம அவங்கள கூண்டோட பிடிக்கலாம்.”என்றான் அபினவ்
அதை பற்றி யோசித்த ஆதி.. சரி என்று ஒத்துக்கொண்டான்.
அதான் இந்த இரண்டு வருடம் பைத்தியம் எங்கிற வேஷம்..

(வருவாள்)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

1 thought on “உயிர் போல காப்பேன்-38”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!