Vageeswari

நளிர் 8, 9

நளிர் 8, 9   கால் பண்ணி பார்த்து சலித்து போனவராக அடுத்து வீடியோ காலிலேயே அழைப்பு விடுக்கவும், அருகில் இருவரும் எடுப்பாளா மாட்டாளா என்று அவளையே பார்த்திருக்கவே, அவர்கள் முன் கட்பண்ணவும் முடியாது, வேறு வழியில்லாமல் அதை ஏற்றாள்.   “என் செல்லப் பொண்ணுக்கு இந்த அங்கிள் மேல கோபமோ?…” அவள் அவர் முகம் பார்க்காது அமர்ந்திருக்கவும் ஜெயராமன் அவளைக் கொஞ்சினார்.   எதிரில் அமர்ந்திருந்த சந்தனுவும் சகாயமும் நண்பனின் கொஞ்சல் குரல் கேட்டு புன்சிரிப்புடன் […]

நளிர் 8, 9 Read More »

நளிர் 7…

நளிர் 7 மறுநாள் காலை பிள்ளைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு. அவள் பணிபுரியும் ஹோட்டலுக்கும் லீவ் சொல்லிவிட்டு சோம்பலாக அமர்ந்திருந்தாள் அங்கே உள்ள இருக்கையில்.   சாதாரண கருப்பு நிற பட்டியாலா பேண்ட் மற்றும் டார்க் ரெட் கலர் குர்தாவும் அணிந்திருக்க, அவளது கூந்தல் அலட்சியமாக சிறு கிளிப்பில் அடக்க முயன்றிருந்திருப்பாள் போல. அது அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவளை இதமாய் உரசியபடி  இருந்தது. சாதாரணமாய் எந்த மேக்கப்பும் இல்லாமல் இருந்தாலும் அவளை சிறந்த அழகியாக காட்டியது

நளிர் 7… Read More »

நளிர் 5,6

ஒரு மாதம் சென்றும் விடவே, அவள் பள்ளிக்கு இன்று வருவாள் என்று அறிந்தவன், அவளை பார்த்தேயாக வேண்டும் என  கல்லூரிக்கு போகாமல் லீவ் போட்டுவிட்டான்.   எப்பொழுதும் தங்கள் சந்திக்கும் இடத்தில் தன் பைக்கை நிறுத்திவிட்டு அவன் காத்திருக்க, அந்த வழியாக சைக்கிளில் வந்தாள் தாட்சா.   அவன் பைக்கின் அருகே நின்றிருக்கவும், அவன் அருகே நிற்க சிறு தயக்கம் அவளுக்குள். வெட்கமும் கூச்சமுமாக அவளை அலைகழிக்கவே நிற்காது செல்ல முயன்றாள்.    அவள் தன்னை கண்டு

நளிர் 5,6 Read More »

நளிர் 4

நளிர் 4 ஹோட்டலில் இருந்து நேராக தன்னுடைய வீடு சென்றாள். அதை வீடுன்னும் சொல்ல முடியாது. பத்து சென்ட் அளவிலான இடத்தில் ரெஸ்ட்டாரெண்ட் கட்டி, அதில் அவர்களுக்கு என்று இரண்டு அறைகளும் ஒரு சின்ன கிட்சனும் கட்டியிருந்தார்கள். ரெஸ்டாரண்டுக்குள் சென்றுதான் வீட்டுக்குள் செல்ல முடியும். சந்தனு சாதாரண நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த மனிதர்தான். அதற்குள்தான் மகளையும் பேரப்பிள்ளைகளையும் அடக்கியிருந்தார். அவள் வீட்டிற்கு வர சற்று நேரம் ஆகிவிட்டதால் சந்தனுவே குழந்தைகளுக்கு சத்துப்பானம் கலக்கித்தந்து விட்டார். அவரை நன்றியுடன் பார்த்தவள்,

நளிர் 4 Read More »

நளிர் 3

3…    பத்துவருடங்களுக்குப் பின்னர்… தென்னகத்தின் மஹாராணியாகத் திகழும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி என்னும் ஊரில் உள்ள ஓர் சுற்றுலா தலங்கள் தான் தேக்கடி.   தேக்கடி பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்கும்  புகழ் பெற்றது அங்கே புகைப்படம் எடுப்பதற்காகவே செல்லும் பயணிகள்தான் அதிகம்.   அதேசமயம் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் யானை, புலி, சோலை மந்தி, காட்டு எருமை, மான் போன்ற உயிரினங்கள் அதிகமாக இருக்கின்றன. இதெல்லாம் கேட்கவே

நளிர் 3 Read More »

நளிர் 1, 2

1… தேக்கடியில் கடுமையான பனிப்பொழிவு நிலவும் தருணம் அது. எதிரே வரும் வாகனங்கள் கூட கண்களுக்குத் தெரியாது. எட்டு மணி ஆனாலும் இருட்டு கவிந்தது போலவே தோற்றம் அளிக்கும். அதிகாலை நான்கு மணி இருக்கும், ஸ்வெட்டர், மப்ளர் போன்ற பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாது வீட்டை விட்டு வாசல்படியில் காலை வைத்தால் ஆளையே நின்ற இடத்தில் சிலையாய் நிற்கவைத்துவிடும். அந்த அளவிற்கு தேக்கடியில் கடும்குளிர் நிலவும் அக்டோபர் பிப்ரவரி மாத இடைவெளியில். கோடையில் இருந்து தப்பி ஓடிவரும்,சுற்றுலாபயணிகளுக்கும் புதிதாய்

நளிர் 1, 2 Read More »

நளிர்மலர்

  முன்னோட்டம். மக்களே எழுத்து சைஸ் ஓகேவான்னு சொல்லுங்க. இல்லைன்னா கொஞ்சம் பெருசு பண்ணி அப்டேட் பண்ணுறேன். and கதையை படிக்கறீங்கன்னு தெரியுது. பட் பெரிதாக எந்த பிரதிபலிப்பும் உங்களிடம் இல்லை. நன்றி மக்களே…   நிஜமறிய மறுப்பதேனோ!… அழகான கருஞ்சிவப்பு நிற பட்டில் அரக்கு நிற பட்டு ரவிக்கை அணிந்து, அதற்கேற்ப கூந்தல்  அலங்காரம் செய்து, நீண்ட ஜடையை முன் புறம் போட்டிருந்தாள். எல்லோரும் அட்சதை பூக்களை போட்டிருந்ததால், தலையெங்கும் மஞ்சள் சிவப்பு நிற பூக்கள்

நளிர்மலர் Read More »

error: Content is protected !!