ஸ்ரீ வினிதா

14. காதலோ துளி விஷம்

விஷம் – 14 அங்கே அவள் ஒருத்தி இருப்பதையே கவனத்திற் கொள்ளாது அவன் அணிந்திருந்த ஷார்ட்ஸின் மீதும் அவன் கையை வைக்க அவளோ அலறியே விட்டாள். கொஞ்சம் கூட லட்ஜை இன்றி மொத்த ஆடையையும் இக்கணமே கழற்றி விடுவானோ எனப் பயந்து போனவள் அலறியவாறு திரும்பி நின்று விட, அவளையும் தன்னையும் குனிந்து பார்த்தவன் “என்னாச்சு..?” என எதுவுமே பெரிதாக நிகழாததைப் போல இயல்பாகக் கேட்டான். அவனுடைய கேஷுவலான கேள்வியில் அவளுக்குத்தான் ஐயோ வென்றிருந்தது. “என்ன இவ்வளவு […]

14. காதலோ துளி விஷம் Read More »

13. காதலோ துளி விஷம்

விஷம் – 13 அன்று மாலை நேரத்திலேயே தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு விட்டாள் அர்ச்சனா. அவளுடைய நேத்திரங்கள் வீதியில் பதிந்திருந்தாலும் கூட அவளுடைய எண்ணங்கள் முழுவதும் யாழவனையே சுற்றிக் கொண்டிருந்தன. ‘மூன்று நாட்களுக்கு முன்பு என்னைத்தானே திருமணம் செய்யக் கேட்டிருந்தான்..? நான் மறுத்ததும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான் போலும்.’ ஏனோ கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. கண்களைத் தாண்டி கண்ணீர் கன்னத்தில் வழிந்தே விட திகைத்து விட்டாள் அவள்.

13. காதலோ துளி விஷம் Read More »

E2K போட்டியின் நாவல்கள்.

இதுவரை கிடைக்கப்பெற்ற E2K போட்டிக் கதைகளின் தலைப்புகள் 👇 🔥E2K 01 – ஆழியின் துறைவன் 🔥E2K 02 – வான்முகிலாய் வந்த தேவதையே 🔥E2K 03 – மயக்கியே என் அரசியே 🔥E2K 04 – மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே 🔥E2K 05 – நீயில்லா நொடி முதல் 🔥E2K 06 – விருகோத்திரனின் துருபத கன்னிகை 🔥E2K 07 – 2K’s காதல் to கல்யாணம் 🔥E2K 08 – I Love

E2K போட்டியின் நாவல்கள். Read More »

தளத்தில் நாவல்களை பதிவிடுவது எப்படி..?

ஹாய் கண்மணீஸ் 😍 💜 தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் eanthilaipathippagam@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால் நீங்கள் எழுதுவதற்கான ஐடி கிரியேட் செய்து கொடுக்கப்படும். தளத்தில் நாவலுக்கான அத்தியாயங்கள் பதிவிடும் முறை 👇 Step 1 Add title எனக் காட்டப்படும் பகுதியில் உங்களுடைய அத்தியாயத்தின் இலக்கத்தை அல்லது கதையின் தலைப்புடன் அத்தியாய இலக்கத்தை குறிப்பிட வேண்டும். Ex : 1. அத்தியாயம் or 1. காதலோ துளி விஷம் Step –

தளத்தில் நாவல்களை பதிவிடுவது எப்படி..? Read More »

12. காதலோ துளி விஷம்

விஷம் – 12 யாழவனோ இன்றோடு மருத்துவமனைக்குச் சென்று மூன்று நாட்கள் ஆகியிருந்தன. அனைத்து வேலைகளையும் வீட்டில் இருந்தே பார்த்துக் கொண்டான் அவன். அங்கே சென்றால் மனதைப் பிசையும் உணர்வு தோன்றுவதை அவனால் தவிர்க்க இயலாமல் போனதன் காரணமாக மருத்துவமனைக்குச் செல்வதையே நிறுத்தி விட்டான் அவன். அனைத்துப் பெண்களையும் போல அர்ச்சனாவையும் கடந்து விட முடியவில்லையே என அவனுடைய மனம் அக்கணமும் அங்கலாய்த்துக் கொண்டுதான் இருந்தது. அதே கணம் அவனுடைய அறைக் கதவு தட்டப்பட “எஸ் கம்

12. காதலோ துளி விஷம் Read More »

11. காதலோ துளி விஷம்

விஷம் – 11 அதிர்ந்து சிலை போல நின்றுவிட்டவளை நெருங்கிய யாழவனோ “என்ன அச்சு தேங்க்ஸ் சொல்லலையா..?” எனச் சிரிப்போடு கேட்க, “ஐயோ.. அங்கேயே நில்லுங்க.. பக்கத்துல வந்தா அவ்வளவுதான்..” என்றவள் இரண்டடி பின்னால் நகர்ந்து நிற்க, புருவங்களைக் கேள்வியாக உயர்த்தினான் அவன். “எங்க ஊர்ல நாங்க இப்படியெல்லாம் தேங்க்ஸ் சொல்ல மாட்டோம்.. த.. தப்புத் தப்பா பேசுறீங்க..” என்றாள் அவள். “வாட் ஜஸ்ட் ஹக்ல என்ன இருக்கு..?” வியந்து போய் கேட்டான் அவன். “வாட்..? ஜெஸ்ட்

11. காதலோ துளி விஷம் Read More »

10. காதலோ துளி விஷம்

விஷம் – 10 யாழவனுடைய கர்ஜனையில் விக்கித்துப் போய்விட்டாள் அர்ச்சனா. சில நொடிகள் அவன் எதற்காகத் திட்டினான் என்பதே அவளுக்குப் புரியவில்லை. அவனைப் பார்த்து மருண்டு விழித்தவளுக்கு விழிகள் கலங்கியே விட்டன. அவனோ அவளை அழுத்தமான ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கு இருந்தவர்களுடன் உரையாடத் தொடங்க அப்போதுதான் மீட்டிங் நடக்கும்போது அனுமதியின்றி உள்ளே நுழைந்தது அவளுக்குப் புரிந்தது. அங்கே இருந்த அனைவரின் பார்வையும் அவள் மீது ஒரு கணம் படிந்து பின் அவன் மீது திரும்பியதை உணர்ந்தவளுக்கு

10. காதலோ துளி விஷம் Read More »

09. காதலோ துளி விஷம்

விஷம் – 09 “இப்போ வரைக்கும் லவ் பண்ணத் தோணல மாம்.. இனி தோணும்னு தோணுது… அப்படி தோணிச்சுன்னா கண்டிப்பா சொல்றேன்..” என சற்று நேரத்திற்கு முன்பு யாழவன் கூறிய வார்த்தைகள்தான் அர்ச்சனாவின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன. இதை அவள் எப்படி எடுத்துக் கொள்வது..? விளையாட்டுக்காக பேசினானா..? இல்லை நிஜத்தைத்தான் கூறினானா..? இதோ எதுவுமே நடவாதது போல அருகில் இயல்பாக நடந்து வருகின்றானே..? அவளுக்குத்தான் தொண்டை அடைத்தது. பேச நா எழவே இல்லை.

09. காதலோ துளி விஷம் Read More »

08. காதலோ துளி விஷம்

விஷம் – 08 அவனுடைய ஒற்றைத் தொடுகையில் தடுமாறி தலை கவிழ்ந்தவளைப் பார்த்தவனுக்கோ அதீத வியப்பு. “அச்சு..?” அவளை மெல்ல அழைத்தான் அவன். “ம்ம்..?” “நீ இப்படி நிலத்தையே பாத்துட்டு இருந்தா என்னால எப்படி மருந்து போட முடியும்..?” என அவன் கேட்க, சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவளுக்கு கூச்சமாக இருந்தது. “சாரி..” என்றவள் விழிகளை மூடி நிமிர்ந்து அமர அவளுடைய இதழ்களின் ஓரத்தில் மருந்தை தடவியவனுக்கும் அவளை தீண்டிய விரல் சிலிர்க்கத்தான் செய்தது. அதே கணம்

08. காதலோ துளி விஷம் Read More »

07. காதலோ துளி விஷம்

விஷம் – 07 சிப்பி இமைகளை மெல்ல அசைத்து தன் விழிகளைத் திறந்து பார்த்தவளுக்கு அந்த அறை புதிதாக இருந்தது. எங்கே இருக்கிறோம் என எண்ணியவாறு மெல்ல எழுந்து கொண்டவள் குனிந்து தன்னைக் கண்டதும் நடந்த அனைத்துமே நினைவிற்கு வரப் பதறிப் போனாள். தனியாக இருக்கவே நெஞ்சம் படபடத்துப் போனது. வேகமாக எழுந்து வெளியே செல்ல முயன்றவள் அந்த அறைக் கதவைத் திறக்க அதுவோ வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டதும் அவள் இதயம் மீண்டும் வேகமாக துடிக்கத்

07. காதலோ துளி விஷம் Read More »

error: Content is protected !!