வேந்தனின் அளத்தியிவள்..

வேந்தன்… 47

வேந்தன்… 47 சிபின் குளிப்பதற்காய் குளியலறை சென்றிருக்க, அவன் வருவதற்குள் இங்கேயிருந்து சென்றுவிட எண்ணியவள், “பாவி மனுஷன் எந்த நேரத்துல பொறந்தாரோ. இவரைப் பார்த்ததில இருந்தே ஓடிட்டே இருக்கேன்” என்று புலம்பிட்டே, அவசரமாய்த் தயாரானாள். “மைகாட்! அக்கா இந்தப் புடவையை எதுக்கு வச்சே?” இளம்பச்சை வர்ண நிறத்தில் கண்ணைப் பறித்த புடவையைப் பார்த்தவளுக்கு, அழகாக இருக்கேன்னு தோன்றினாலும், இதை எப்போ கட்டி முடிக்கறது? மலைப்பாக இருந்தது. பட்டுப்புடவைகள் பார்க்கப் பார்க்க அழகுதான். அப்படியே அள்ளிக் கட்டிக்க ஆசை […]

வேந்தன்… 47 Read More »

வேந்தன்… 46

வேந்தன்… 46 இரவு முழுவதும் குளிரில் நின்றது, இப்போது குளிர்தண்ணியில் குளித்தது என எல்லாம் சேர்ந்து அவள் தேகத்தை இளம் ரோஜா வர்ணத்தில் மாற்றியிருக்க, கிடுகிடுன்னு நடுங்கி நின்றவளைக் கண்டு சிறிதும் இறக்கம் காட்டாது விஷநாகம் போல வார்த்தைகளால் கொத்தினான்.  “அறிவில்ல உனக்கு? ஒரு ஆம்பளை ரூமுக்குள்ள இருக்கான், அவன் முன்ன இப்படி வந்து நிக்கறம்னு வெக்கமாயில்ல உனக்கு? எப்ப எவன் சிக்குவான் அவனை கைக்குள்ள போட்டுக்கலாம்னு பாப்பியோ?” அவள் மீதான பழி சொற்களை நெருப்பாய் உமிழ்ந்தான்.

வேந்தன்… 46 Read More »

வேந்தன்… 45

வேந்தன்… 45 குளிரில் நனைந்த தேகம் அவனது வெப்பச் சூட்டை விரும்பினாலும் அவளால் அதை முழுமையாக ஏற்க முடியவில்லை. அவனுடன் பேசவேண்டும், தன்னுடைய கேள்விகளை அவனிடம் கேட்டால்தான் நிம்மதியாக இருக்கும் போலத் தோன்றியது. இந்த உறவின் அடிப்படையே அந்தக் கேள்விக்கான பதில் கிடைப்பதில்தான் இருந்தது. “எனக்கு” அவள் பேச முயன்றபோது, அவன் திடீரென அவளின் உதடுகளைத் தன் உதடுகளால் பூட்டினான். அவளின் இதயம் நிசப்தமாய்த் துடித்தது. வன்மையான இதழ் முத்தத்தில் மூச்சுக்கு திணறியவளை பாவம் பார்த்து விடுவிக்க,

வேந்தன்… 45 Read More »

வேந்தன்… 44

வேந்தன்… 44   மக்களே முதல் அத்தியாயத்தில் ஒரு டிஸ்க்ளைமர் தந்திருக்கேன்🙈 மறந்துருக்க மாட்டிங்கன்னு நினைக்கறேன். அங்கயே கிடன்னு அவன் சொல்லி விடவும், இவளுக்கு பயம். பிறந்த வீட்டினரின் கைகளுக்குள்ளேயே வளர்ந்த பெண்ணுக்கு புகுந்த வீட்டில் கணவனின் அவதாரம் மிரட்சியைத் தந்தது. அதுவும், தானே தேர்ந்தெடுத்த வாழ்க்கை என்பதால் குற்றம் குறையேன எதுவும் சொல்லவும் முடியாது. சுவற்றோடு சுவராக நெருக்கியடிச்சுகிட்டு நின்றவளுக்கு பிடிமானம் ஏதுமில்லை. இறங்கும் பொழுது ஏதோ ஒரு வேகத்தில் எட்டிக் குதித்து இறங்கியாயிற்று. இப்பொழுது

வேந்தன்… 44 Read More »

வேந்தன்… 43

வேந்தன்… 43 எவ்வளவு உக்கிரமா மிரட்டிட்டு இருக்கோம். இவளானால் ரெஸ்ட் ரூம் போறேன்னு சொல்றாளே! அவளையே கடுப்பாய் முறைத்தான். “ப்ளீஸ் அர்ஜென்ட்” ஒற்றை விரலை உயர்த்தி அவன் முன் காட்டிட. “போய்த் தொலை” அவளை விடுவித்தான். அவன் விடுவித்த அடுத்த கணம் அருகில் இருந்த ஜன்னலை நோக்கி ஓடினாள் அவனிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு. “ஏய்” கைக்கெட்டிய முந்தானையை பற்றிட, பின் எதுவும் குத்தாததால், ஒரே சுற்றில் எளிதாய் அவன் கைக்குப் போய்விட்டது. ஒரு செக்கன் நின்று அவனைப்

வேந்தன்… 43 Read More »

வேந்தன்… 42

வேந்தன்… 42 மக்களே விமர்சனம் தரலாம்ல. 🤗 மென்மையான மலர் பெண்ணிற்கு இப்படியொரு ராட்சசன்தான் புருஷனாக அமையணுமோ. கணவன் அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம்னு சொல்வாங்க. சிபினும் நல்லவன்தான். ஆனால் தனக்கு உரிமைப்பட்டவளின் மீது வேறொருவனின்  பார்வை பட்டால்?…  சிவந்த கண்களும், உக்கிர முகமும், சட்டையில்லாத தேகத்தில் வரிவடிவமாக முறுக்கேரிய கட்டுக்கட்டானா அங்கங்களும் பார்க்கப் பார்க்க அவளுக்கு கண்களை இருட்டிகிட்டு வந்தது. அவனது தேகத்தின் சூடு இன்னும் தன்னில் படிந்திருப்பதை உணர்ந்தவளுக்கு இப்போதே காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது.

வேந்தன்… 42 Read More »

வேந்தன்… 41

வேந்தன்… 41 மக்களே முதல் அத்தியாயத்தில் நான் சொன்னது உங்களுக்கு நினைப்பிருக்கும்னு நினைக்கறேன். கதை இனி ஆரம்பிக்க போகிறது. எப்படி வேணாலும் போகலாம். சிபின் அறையில் தனித்திருந்தாள் நளிரா.  பெற்றவர்களும் சென்றுவிட, ஏனோ இங்கே எந்த பாதுகாப்பு உணர்வும் சரிவர கிடைக்காதது அச்சமாக உணர்ந்தாள். அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்தில் அமரவும் அச்சம் தடுக்க அங்கே இருந்த நீள்இருக்கையில் அமர்ந்தாள்.  விழிகளால் அறையை அளவிட்டவளுக்கு அதன் பிரம்மாண்டமும் ஆடம்பரமும் பார்க்கவும், தான் இங்கே பொருந்தாததைப் போலவே தோன்றியது.  சிபினை சந்தித்த

வேந்தன்… 41 Read More »

வேந்தன்… 40

வேந்தன்… 40 “என்னடி அநியாயத்துக்கு வெட்கப்படுற. மாப்பிள்ளை கிட்டயாவது பேசுவியா?” அழகு பதுமையாக அமர்ந்திருந்த தங்கையின் காதோரம் கண் மையால் திருஷ்டிப் பொட்டு வைத்த சைத்ரா, செல்லமாக அவள் கன்னம் தட்டிக் கேட்டாள். “அக்கா” மெல்ல அழைத்தவள் அவள் இடையோடு கட்டிக்கொண்டாள். அவள் மனதில் இனம் புரியாத அச்சம் வாட்டி வதைத்தது. அதை வெளியே காட்டி யாரையும் தொந்தரவு பண்ணாது தனக்குள்ளேயே போட்டுப் புதைத்தாள். “நளி. முதல் நாள் அப்படித்தாண்டி இருக்கும். பயப்படாதே” தாம்பத்தியம் பற்றிய அச்சத்தில்

வேந்தன்… 40 Read More »

வேந்தன்… 39

வேந்தன்… 39 சிபினிடம் பேசிமுடித்துவிட்டு நேராக கணவனை தேடிச் சென்றாள் மிரா. துருவ்வை பார்த்துவிட்டு, அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்திருந்தவனுக்கு மனதெல்லாம் அத்தனை சோர்வாக இருந்தது. உடல் சோர்வு, வலி இப்படி எதுவும் இருப்பின் ஒரு வலி நிவாரணியை எடுத்துக் கொண்டால் அதற்கு தீர்வு கிடைத்துவிடும். ஆனால் மனம்?… உலகில் பாதி துன்பம் மனதளவில் மட்டுமே வருகிறது. ஆரியன் மகனின் நினைவில் படுக்கையில் படுத்திருக்க, கணவனின் முகம் பார்த்தவளையும் அவனது கவலை தொற்றயது. “துருவ் எப்படி இருக்கான்?” வேதனையுடன்

வேந்தன்… 39 Read More »

அத்தியாயம் 38

அத்தியாயம் 38l   சொல்லாமல் சொன்ன காதல் கதைக்கான கரு நெஞ்சுக்குள் முட்டி நிற்க, அதன் கணம் தாளாது போனான்.   பார்த்த நாள் முதல் தன்னை ஆட்சி செய்தவள் இப்பொழுது இன்னொருவன் அதுவும் தன் கூடப்பிறந்தவனின் சொந்தம்?   ஆத்மாவும் ரவிக் இருவரும் சிபினின் காதல் பற்றி சொல்லும் பொழுது, அருகில் இருந்த துருவ்க்கு முகமெல்லாம் வெளிரிப் போனது. அப்போதைக்கு தன்னை சந்தோஷமாக காட்டிக்கொண்டவன், அங்கேயிருந்து காரில் கிளம்பிவிட்டான்.   நவீன ரக கார், வேகத்திற்கு

அத்தியாயம் 38 Read More »

error: Content is protected !!