அரிமா – 11
இதற்கிடையில் மதுமதியோ தனது ஆழ்ந்த உறக்கத்திலும் ஆதித்யாவின் காயம் பட்டிருந்த புஜத்தை அழுத்தமாக பிடித்திருக்க, அவனுக்கோ வலிக்காமல் இல்லை ஆனாலும் பொறுத்துக்கொண்டு, மதியின் முகத்தில் விழுந்து கிடந்த முடி கற்றை நீக்கினான். அன்று மின்னல் ஒளியில் அவனை ஈர்த்த அதே அழகு மதி முகம் இப்பொழுதும் அவனை ஈர்த்தது. வலியை மறந்து அவளது முகத்தில் இருந்து தன் பார்வையை அகற்றாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யா. எங்கோ இருட்டில் கிடந்தவனுக்கு மின்மினியாய் வெளிச்சத்தை கொடுத்தது அவளது முகம். மனதிற்குள் […]