காதலுற்றேனடி அன்னம்

அன்னம் 25

அன்னம் 25 அத்தியாயம் 25   “ஆயாளும் மவளும் எப்பதாண்டி திருந்த போறீங்க?” அம்சா அமுதாவை உள்ளே பிடித்துக்கொண்டார்.   “பேசுனதெல்லாம் கேட்டுப்புட்டிங்களா புள்ள?” அமுதாவுக்கு வெசனமாக இருந்தது.   நாம வாய்க்கு வந்ததை பேச. என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்குன்னு மவன் வீரம் வந்து தாய்க்கு ஆதரவா பேச அதுவும் எக்குத்தப்பால்ல பேசி வச்சிருக்கான். அவங்க வந்த தோரணையே அவருக்கு இதான் விஷயம் என உணர்த்த. மவன் வேற மாமியார் மண்டைய உடைப்பேன்னு பேசிட்டானே அதிலேயே […]

அன்னம் 25 Read More »

அன்னமே 24

அன்னமே 24 அத்தியாயம் 24   “அன்பு அப்ப உனக்கும் பொண்ணு பார்க்கறேன். எங்க ஒண்ணு விட்ட அண்ணன் மக இருக்கா. அவ வீட்டுலே பேசறேன். படிச்ச பொண்ணு வீட்டை பொறுப்பா பாத்துக்குவா. அவளை பாத்துட்டா அவளைத் தவிர யாரையும் உனக்கு புடிக்காது”   “நா விழுந்த மாதிரி நீயும் மொத்தமா விழுந்துடுவ கண்ணு சுதாரிச்சுக்க. அனுபவப்பட்டவன் சொன்னா கேட்டுக்க. பின்ன கண்ணை கசக்கிட்டு நின்னா நா பொறுப்பில்ல சொல்லிப்புட்டேன்” தயாளன் மகனுக்கு மட்டும் கேட்க அடிக்குரலில்

அன்னமே 24 Read More »

அன்னமே 23 

அன்னமே 23 மக்களே ஒரு சின்ன அறிவிப்பு. இனிமேல் என்னுடைய கதைகளுக்கான அப்டேட் என்னோட பேஜ், and ஏந்திலை குரூப்ல மட்டுமே வரும். வாட்சப் சேனல்ல எப்பவுமே தருவேன் என்பதை அறிவித்துக் கொள்கிறேன் ❤️❤️❤️ இனிமேல் காலை மாலை இருமுறையும் அத்தியாயம் தருவேன்🤗   இந்தப் புள்ளைய ரெண்டு வாரமா பாக்கலயே. எங்குட்டு போயிருப்பா? அவனுமே காட்டுக்குள் காலை வச்சு வாரக்கணக்கு ஆகியிருந்தது.   வெண்டைக்காய் கொத்தவரங்காய் அவரை புடலை விதைகள் முளைப்பு விட்டிருக்க, இரண்டு இலைகள்

அன்னமே 23  Read More »

அன்னம் 21,22

அன்னம் 21,22 அத்தியாயம் 21  சரமாரியாக குத்துவனை எதிர்த்து நில்ல முடியாமல் இல்லை அவனுக்கு. அடிக்கும் கரங்களை தடுத்து விளக்கம் சொல்ல முடியும் அவனால். ஆனால் அடியை வாங்கிட்டு அப்படியே நின்றான். “போனாப் போவுது அநாதை பயலாச்சேன்னு உசுரோட விட்டு வச்சா ஆட்டைக் கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷனைக் கடிச்ச கதையா எந்தங்கச்சி மேலயே கையை வைக்கற. உன் கதைய இன்னைக்கே முடிக்கறேன் பாரு” அவன் குத்திய குத்தில் சத்தியசீலனின் மூக்கில் ரத்தம் வழிந்தது. “எந்தங்கச்சியை

அன்னம் 21,22 Read More »

அன்னமே 19, 20

அன்னமே 19, 20 “ஹையோ விடு” பைக் அவன் வீட்டு வாசலில் பிரேக்கிட்டு நிற்க, குதித்து இறங்க நினைத்தாள். “அடடா என்ன அவசரம் புள்ள உனக்கு புகுந்த வீட்ட பாக்கறதுக்கு? அப்புறமா பாக்கலாம். மாமன்கிட்ட இப்படி நெருக்கமா உக்காரு புள்ள” அவள் தொடையில் கைவைத்து இறங்காமல் தடுத்து கிட்ட இழுத்து நெருக்கியவன் அவள் கூந்தலில் முகம் புதைத்து முகர்ந்தான்.  பன்னீர் ரோஜா சூடியிருந்ததால் அதே வாசனையை அவள் கூந்தலும் பிரதிபலித்தது.  “அது என்னவோ புள்ள. முன்ன எல்லாம்

அன்னமே 19, 20 Read More »

அன்னமே 18 

அத்தியாயம் 18 இன்னைக்கு அப்பா இல்லைன்னா அண்ணனை கூட்டிட்டு போகணும்னு நினைத்து படுக்கையை விட்டே எழுந்தாள் அன்னம். நன்றாக தூங்கியதால் முகம் பொலிவாக இருந்தது. காச் மூச்சுன்னு பேச்சு சத்தம் காதை அடைத்ததால், ஜன்னலை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். அங்கே அப்பா அண்ணா இருவரும் கோபமாய் உரையாட, அப்பத்தா அம்மா ஒருபக்கம் உரிமைச் சண்டை போட்டனர். “மனசாட்சியோட நடந்துக்கங்கத்த. உங்க வீட்டுல கொடுத்ததுன்னா கொடுக்கறது கொடுக்காம போறது இதெல்லாம் உங்க விருப்பம். ஆனா உங்க மாமியார்

அன்னமே 18  Read More »

அன்னமே 16, 17

அன்னமே 16, 17 லைக் கமெண்ட் நிறைய வந்தால்❤️ அத்தியாயமும் தவறாமல் தொடர்ந்து வரும்னு சொல்லிக்கறேன் மக்களே 🤗   “யாருக்கு யாருன்னு முடிச்சுப் போட நாம என்ன சாமியா கண்ணப்பா. அதது பருவம் வந்தா தானா நடந்துட்டு போவுது. இப்பவே எதுக்கு கண்டதையும் பேசிகிட்டு சங்கடப்படனும். பிள்ளைங்களுக்கு மனசுக்கு பிடிக்கனும் கல்யாணத்துல” “அது என்னவோ சரிதாத்த. நம்ம கையில என்ன கிடக்கு. ஆனாக்கா மனசுக்கு பிடிக்குதுன்னு உன் மவன் கட்டிக்கிட்டு வந்தானில்ல அப்படியெல்லாம் நானு அதுங்க

அன்னமே 16, 17 Read More »

அன்னமே 14, 15

அன்னமே 14, 15 அத்தியாயம் 14  அன்னம் மரத்தின் மீது கண்களை மூடி அப்படியே சாய்ந்து நின்றுவிட்டாள். அவள் மனதை அறிந்தது போல காற்றும் சுழன்று அடித்தது. முகத்தில் அரைந்து போகும் காற்று அவளை குளிர்விக்க முயன்று தோற்றுப் போனது. தேகத்தின் வெம்மையை இன்னுமே கூட்டத்தான் செய்தது.  துச்சாதனன் போல் தன் மேலாடையை அவன் உருவியது நினைக்க. அவள் கரம் தானாய் நெஞ்சம் மறைத்தது. அவன் முன் தான் நின்ற கோலம்?… ஒருமுறை தன்னை குனிந்து பார்த்தவளுக்கு

அன்னமே 14, 15 Read More »

அத்தியாயம் 13 

அத்தியாயம் 13   அருகாமையில் மயங்கிக்கிடந்த இளவரசனை பார்வையிட்ட அன்னத்திற்கு அவன்பால் இரக்கம் சுரந்தது.   தினமும் பேருந்திற்காக இளவரசன் காத்திருப்பதை தந்தை அறியாமல் பார்த்துவிட்டே செல்வாள். ஆணிற்கான கர்வம் கலந்த திமிர் பார்வையாய் இருக்காமல் அப்பாவித்தனமும் பொறுமையும் கலந்த சாதுவான பார்வையில் ஈர்க்கப்பட்டாள் அன்னம்.   பால் வடியும் முகம் என்பார்களே அப்படித்தான் இளவரசனின் முகமும் தோற்றமும் இருக்கும். அவன் தங்கச்சி செவ்வந்தியை விட இவன் அழகில் நிறத்தில் குறைவுதான் ஆனால் கிராமத்து வழக்கில் பேசாமல்

அத்தியாயம் 13  Read More »

அத்தியாயம் 11, 12

அத்தியாயம் 11, 12 தண்ணீரில் கால்களை நனைத்து தொட்டியின் கரையின் அமர்ந்திருந்தவளுக்கு உலகம் மறந்து போனது. இளங்கன்று பயம் அறியாது, துள்ளி விளையாடினாள். யூனிபார்ம் நீர் பட்டு நனைந்து போக, அருகில்தான் வீடு என்பதால் கவலை இல்லை அவளுக்கு. தண்ணீரை வாயில் நிறைத்து கொப்பளித்தாள் பைப்பிலிருந்து நுரைத்து கொட்டும் அருவி நீர் மீது.  உள்ளே இறங்கி குளிக்க ஆசைதான். ஆனால் தங்களுடைய தோப்பு இல்லை என்பதால் ஏமாற்றமாய் இருந்தாலும், தன் மீது தெரித்துவிழும் நீரை ரசித்து அனுபவித்தாள். 

அத்தியாயம் 11, 12 Read More »

error: Content is protected !!