பனிச்சாரல் வீசுதோ..?

பனிச்சாரல் -5

பனிச்சாரல் -5 “கடவுள் அனுக்கிரஹத்தால நிச்சயத்தார்த்தம் நல்லபடியா முடிந்தது.”என்று ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்த மகேந்திரனை, தீயென முறைத்தார் சாந்தினி. “என்ன சாந்தி? ஏன் கோபமா இருக்குற?”என்று ஒன்றும் புரியாமல் மகேந்திரன் வினவ. “அதானே எதுக்குமா இப்போ அப்பாவை முறைக்கிறீங்க? “ என்று தந்தைக்கு ஆதரவாக நரேந்திரன் வந்தார். சுரேந்திரனோ,’வீட்ல உள்ள நாய்க்கு அடிபட்டா கூட, அங்க சுத்தி இங்க சுத்தி அப்பா தான் காரணம்னு அம்மா சொல்லுவாங்க. இப்போ அவரோட செல்ல பேத்தி செஞ்சு வச்ச […]

பனிச்சாரல் -5 Read More »

பனிச்சாரல் -4

பனிச்சாரல் – 4 மேடை முழுவதும் அலங்கார விளக்குகளும், கண்ணை கவரும் மலர்களுமாக ஒளிர, அதற்கு இணையாக பொண்ணும், மாப்பிள்ளையும் அழகாக ஜொலித்தனர். லேசான முகச் சிவப்பும், சிறு படபடப்பும், ரூபாவை பேரழகியாகக் காட்டியது. அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தனக்குள் ஏதோ யோசனையாக இருந்தான் மகேஷ். லேசாக அவனது தோளை இடித்த ரூபா, யாரும் தங்களைப் பார்க்கிறார்களா என்று லேசாக விழிகளைத் சுழற்றியவள், யாரும் கவனிக்கவில்லை எனவும் முகம் சிவக்க, “என்ன யோசனை” என்பதுப் போல் புருவத்தை

பனிச்சாரல் -4 Read More »

பனிச்சாரல் -3

பனிச்சாரல்-3 “வில் யூ ஷட் அப்…” என்ற சித்தார்த்தின் குரலில் அதிர்ந்துப் போன மகிழினி படக்கென்று ஃபோனை வைத்து விட்டாள்.  ‘ச்சே! என்ன வார்த்தைகளைச் சொல்லிட்டா.’ என்று எண்ணிய சித்தார்த்திற்கு அவமானமாக இருந்தது. அங்கிருந்தவர்களை நிமிர்ந்துப் பார்க்கச் சங்கடப்பட்டவன், முயன்று தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். சாஹித்யாவும் அவனது கோபத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்தாள். அவன் அமைதியாக ஃபோனை அவளிடம் நீட்ட. நடுக்கத்துடன் அதை வாங்கினாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்தவர்கள் குழம்பித்

பனிச்சாரல் -3 Read More »

பனிச்சாரல் வீசுதோ -2

பனிச்சாரல் -2 சித்தார்த்தின் அறிமுகமற்ற அந்நிய பார்வையில் குழம்பிய மகிழினியோ அப்படியே திகைத்து நின்றாள். ‘ஒருவேளை இருட்டில் அடையாளம் தெரியவில்லையோ.’என்று எண்ணியவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க. அவனோ அவளது பார்வையை கண்டு கொண்டாலும் ஃபோனில் மட்டுமே கவனத்தை வைத்திருந்தான். மகிழினியின் யோசனையைத் தடை செய்வது போல் அவளது ஃபோன் இசைத்து, அவளைக் கவனமாகத் தவிர்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தையும் கவனிக்க வைத்தது. “சிறகுகள் வீசிச் சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன் உலகத்தின் ஓசையில் புது ஒளி வீசிட

பனிச்சாரல் வீசுதோ -2 Read More »

பனிச்சாரல் வீசுதோ -1

பனிச்சாரல் -1 அதிகாலை மூன்று மணி…   எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம். ஆனால் விவாஹா மஹால் திருமண மண்டபம் சற்று பரபரப்பாகவே தான் இருந்தது. எஸ். எம்.எஸ் குழுமத்தின் நிச்சயத்தார்த்த விழா நடைப்பெற உள்ளது. அதற்கே ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. பின்புறம் உள்ள மினிமஹாலில் ஒரு திருமணம். அதனால் அந்த மண்டபமும் பரபரப்பாகவே இருந்தது. எஸ்.எம்.எஸ் குழுமத்தினருடைய ஹோட்டல் மற்றும் ரிசார்ட் சென்னை, கோவை, ஊட்டி என பல இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது.  தமிழ் நாட்டின்

பனிச்சாரல் வீசுதோ -1 Read More »

error: Content is protected !!