Mr and Mrs விஷ்ணு

Mr and Mrs விஷ்ணு 14

பாகம் 14 அஸ்வினை ஆபிஸ் முழுவதும் பூரணி தேடி பார்க்க எங்கேயும் அவன் இல்லை.. ராம் தான் ப்ரதாப் சொன்னபடி கடைசியாக அவன் அனுப்பிய டிசைனை “க்ளைன்ட் ஓகே சொல்லிட்டாங்க அதனால் நீ வீட்டுக்கு போ” என்று சொல்லி விட்டானே, காதல் தோல்வியில் இருந்த அஸ்வினுக்கும் அதற்கு மேல் ஆபிஸில் இருக்க பிடிக்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.. இதை அறிந்த கொண்ட பூரணிக்கு அங்கு இருக்கவே முடியவில்லை.. லீவ் கேட்டு ராமிடம் செல்ல அவனோ அடிக்கடி லீவ் […]

Mr and Mrs விஷ்ணு 14 Read More »

Mr and Mrs விஷ்ணு 13

பாகம் 13 ப்ரதாப் அழைத்ததும் அவனின் கோவத்தை எதிர்பார்த்து அவன் அறைக்கு சென்றாள் விஷ்ணு.. அங்கு ப்ரதாப் நேற்று அவள் அனுப்பி இருந்த டிசைனிலுள்ள சிறு சிறு திருத்தங்களை சொல்லி அதை சரி செய்யும்படி அவளை பாராமல் கணினியை மட்டும் பார்த்து கூறி விட்டு தன் வேலையை தொடர்ந்தான்.. வேலை சம்மந்தமாக மட்டும் பேச விஷ்ணுவுக்கு தான் அது ஏமாற்றமாக இருந்தது.. “அவ்ளோ தானா நான் போகவா” என்று கேட்டாள் விஷ்ணு.. “ம்”.. என்று ப்ரதாப் கூறவும்,

Mr and Mrs விஷ்ணு 13 Read More »

Mr and Mrs விஷ்ணு 12

பாகம் 12 கதவை திறந்து அறைக்குள் வந்த ப்ரதாப் கண்ணில் முதலில் பட்டது விஷ்ணு, ப்ரதாப் அவர்களின் கல்யாண போட்டோ தான்.‌.. தெரிந்தோ தெரியாமலோ கதவை திறந்து அறைக்குள் வந்து நிமிர்ந்தாலே கண்ணில் படும்படி தான் அந்த போட்டோவை மாட்டி வைத்து இருந்தாள் விஷ்ணு… அந்த போட்டோ ஃப்ரேம் கொஞ்சம் கோணலாக இருந்தது.. அறையை சுத்தம் செய்தவர்கள் போட்டோவை துடைக்கும் போது கோணலாகி இருக்கும் அவர்கள் கவனிக்காமல் போய் இருக்கலாம் என்று புரிந்தது.. அந்த போட்டோ அருகே

Mr and Mrs விஷ்ணு 12 Read More »

Mr and Mrs விஷ்ணு 11

பாகம் 11 பவித்ராவோ பார்த்திபன் தனக்கு கொடுத்த பொருட்களை எல்லாம் அவனிடமே நாளை திருப்பி கொடுக்க வேண்டும் என்று எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்..  “பவி அவ்ளோ தானா பேக் பண்ணிரலாமா” என கேட்டார் ப்ரதாப் பவி சித்தி விசாலாட்சி..  “ம்”. என்றாள் பவித்ரா..  “என்ன அவ்ளோ தான் சொல்ற?, அப்ப இது கொடுக்கிற எண்ணம் இல்லையா” என கழுத்தில் இருந்த தாலி செயினை சுட்டி காட்டி விசாலாட்சி கேட்க, அதிர்ந்து போன பவி “சித்தி இதை

Mr and Mrs விஷ்ணு 11 Read More »

Mr and Mrs விஷ்ணு 10

பாகம் 10 “ஏய் சிரிக்காத உன்னை கொன்னுருவேன்” என விஷ்ணு கோவப்பட்டாலும்.. நிவியின் சிரிப்பு நின்றபாடில்லை… இன்னும் இன்னும் அதிகம் தான் ஆனது..  வண்டி எடுத்து வரேன் என சென்ற தோழி பத்து நிமிடம் கடந்து வரவில்லையே என நிவியே தேடி பார்க்கிங் வர, அங்கு விஷ்ணுவோ தலையில் கை வைத்து காரில் சாய்ந்து “போச்சு போச்சு எல்லாம் போச்சு” என புலம்பி கொண்டு இருந்தாள்..  “என்னடி ஆச்சு” என பதறி விசாரிக்க, “ஏற்கெனவே செய்வினை செஞ்ச

Mr and Mrs விஷ்ணு 10 Read More »

Mr and Mrs விஷ்ணு 9

பாகம் 9   அறைக்குள் வந்தவளை நோக்கி ப்ரதாப் ஒரு பத்திரத்தை நீட்ட விஷ்ணுவிற்கு இதயம் ரயில் வண்டியை விட அதிவேகமாக துடித்தது..  அதிர்ச்சியில் சிலையென ப்ரதாப் நீட்டிய பத்திரத்தை கூட கையில்  வாங்கமால் அவன் முகத்தையே பார்த்தபடி நின்று இருந்தவளை “இந்தா பிடி” என்ற ப்ரதாப் குரல் கலைத்தது..  “ஆஹான்” என்று விழித்தவளுக்கு அந்த பத்திரம் ஒரு வேளை விவாகரத்து பத்திரமோ என்ற பயம் வந்தது.. “இது நடக்கும்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கலையே”

Mr and Mrs விஷ்ணு 9 Read More »

Mr and Mrs விஷ்ணு 8

பாகம் 8 “ஆமா என் புருஷன் ஆபிஸ் தான்” என்றாள் மனதிற்குள் வெளியே சொல்லவில்லை..  “உனக்கு சின்சியார்டி ரெஸ்பான்சிபிள்டி கொஞ்சம் கூட இல்லையா” என்று அவன் அர்ச்சிக்க அமைதியாக நின்று வாங்கி கொண்டு இருந்தாள்.. வீட்டில் இருக்க முடியாமல் வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து இணையத்தில் விஷ்ணு தேடிய போது கண்ணில் பட்டது இந்த கம்பெனி தான்..  இப்போது வி.வி கன்ஸ்டரக்ஷனாக இருப்பது நான்கு மாதங்களுக்கு முன் வி.எஸ் கன்ஸ்டரகூன் என்று தான் இருந்தது..  வேலைக்கு விண்ணப்பித்தவள்

Mr and Mrs விஷ்ணு 8 Read More »

Mr and Mrs விஷ்ணு 7

பாகம் 7 “அய்யோ மானமே போச்சு போச்சு” என விஷ்ணு அவசரமாக எழ கீழே விழுந்ததில் பின் குத்தாமல் கட்டிய புடவை மடிப்பு அவிழ்ந்தது அதை குனிந்து பிடிக்க போக மாராப்பும் சரிந்தது.. அவளோ அதிர்ச்சியோடே ப்ரதாப்பை பார்க்க, “மேடம் மேடம் நீங்க சொன்ன இடம் வந்துருச்சு” என்ற ஆட்டோகாரின் குரல் பழைய நினைவுகளில் இருந்தவளை கலைத்தது.. “ஆஹான்” என்று முழித்த விஷ்ணு வெளியே பார்க்க தன் வீட்டின் முன்பு ஆட்டோ நின்றது.. தன் தலையில் தட்டி

Mr and Mrs விஷ்ணு 7 Read More »

Mr and Mrs விஷ்ணு 6

பாகம் 6 முதல் இரவை பற்றி எல்லாம் விஷ்ணு இதுவரை யோசிக்க கூட இல்லை.. இவர்கள் வந்து பேசியபின் தான் அந்த நினைவே வந்தது.. முதல் இரவா நினைக்கும் போதே கண்ணை கட்டி கொண்டு வந்தது விஷ்ணுவுக்கு,  பொதுவாக திருமணம் என்றாலே தாம்பத்தியம் எதார்த்தமான ஒன்று தான் என்பது அவளுக்கும் தெரியும்..  ஆனால் இவர்கள் திருமணமோ இருவருக்குமே அதில் பிடித்தம் இல்லை.. இந்நிலையில் முதல் இரவா அது எப்புடி ஒரு புரிதல் பிடித்தம் காதல் இது எல்லாம்

Mr and Mrs விஷ்ணு 6 Read More »

Mr and Mrs 5

பாகம் 5 “நீங்க சொல்லுங்க இப்பவும் நீங்க விவாகரத்து வேணுங்கிறதில் உறுதியா இருக்கீங்களா” என்ற நீதிபதி கேள்வியில் கண்களை இறுக மூடி வாய்க்குள் வேண்டாம்னு சொல்லனும் கடவுளே விவகாரத்து வேண்டாம்னு சொல்லனும் என்று வேண்டியபடி நின்று இருந்தாள் விஷ்ணு.. “எஸ் எனக்கு விவகாரத்து வேணும்”என்ற குரலில் கண்களை திறந்து பாவமாக பார்த்தாள் விஷ்ணு எதிரில் நின்று இருந்த பவித்ராவை, “பவித்ரா விவாகரத்து வேணும்ங்கிறதில் உறுதியா இருக்காங்க.. உங்க முடிவு என்னனு சொல்லுங்க பார்த்திபன்” என்று கேட்டார் நீதிபதி..

Mr and Mrs 5 Read More »

error: Content is protected !!