Mr and Mrs விஷ்ணு(இறுதி பாகம்)

4.5
(34)

இறுதி பாகம் 

அன்று விஷ்ணுவிற்கு வளைகாப்பு பட்டு புடவை கழுத்து நிறைய நகை, கை நிறைய கண்ணாடி வளையல்,அதை விட தாய்மை தந்த பூரிப்பில் ஜொலித்த முகம், அதில் மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் பூசப்பட்ட சந்தனம் என அழகு பதுமையாய் மனையில் அமர்ந்திருவளை மற்றவர் கண் கவராத வண்ணம் சைட் அடித்து கொண்டு இருந்தான் ப்ரதாப்..‌

அவளோ உதட்டை இருபுறமும் சுழித்து ப்ரதாப்பை முறைக்க, உதடு கடித்து சிரிப்பை அடக்கியபடி இருந்தான் ப்ரதாப்..

வளைகாப்புக்கு வந்து இருந்த ஒவ்வொருவராக வூஷ்ணூவிற்கு சந்தனம் பூசி வளையல் மாட்டி விட, அவ்ளோ முகத்தை தூக்கி வைத்து ப்ரதாப்பை முறைத்து கொண்டு இருந்தாள்..

காரணம் இல்லாமல் என்ன? ஏழாம் மாதத்திலே வளைகாப்பு  அவளுக்கு பிடிக்கவில்லை..‌‌.

உதயகுமார் கல்யாணி ஏழாம் மாதமே வளைகாப்பு வைத்து கொள்ளலாமா என கேட்க ப்ரதாப் சரி என்று ஒத்து கொண்டான்..

“எதுக்கு ஓகே சொன்னீங்க?”அறையில் அவனிடம் விஷ்ணு சண்டைக்கு நிற்க,

“ஏன்டி உனக்கு இதில் என்ன பிரச்சினை”…

“என்ன பிரச்சினையா? வளைகாப்பு முடிஞ்சா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாங்க”..

“தெரியுமே அதானே வழக்கம்”..

“என்ன நீங்க இவ்வளோ அசாலாட்டா பேசுறீங்க.. இப்ப இரண்டு மாசம்.. குழந்தை பிறந்த அப்புறம் மூணு மாசம்.. மொத்தம் அஞ்சு மாசம் என்னால் எப்புடி உங்களை விட்டு பிரிஞ்சு இருக்க முடியும்” என விஷ்ணு சிணுங்க,

“ஹலோ வாசுகி மேடம் மேரேஜ் முடிஞ்சு ஒன் இயர் நீங்க என்னை பிரிச்சு தான் இருந்தீங்க… இப்ப இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா” என்ற நக்கல் செய்து விட அமைதியாகி விட்டாள்..

அதான் அந்த கோவத்தில் தான் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து இருக்கிறாள்..

வளைகாப்பு முடிய விஷ்ணுவை அழைத்து கொண்டு செல்ல வேண்டும்.. அந்நேரம் ப்ரதாப் முன்ன நிற்க கூடாது என்று சொல்லி விட  ப்ரதாப்பும் வெளியே சென்று விட்டான்.. விஷ்ணுவிற்கோ கண்ணை கரித்து கொண்டு வந்தது…

இரவு “சாப்பிட்டயாடி” ப்ரதாப் போனில் விசாரிக்க,

“நான் சாப்பிட்டா என்ன? சாப்பிடலைன்னா என்ன? ரொம்பத்தான் அக்கறை துரத்தி விட்டுட்டு” என கோவமாக போனை வைத்தவள் இரவு தூக்கம் வரும் வரை ப்ரதாப்பை ‘சரியான கல் நெஞ்சக்காரன், மனுஷனே கிடையாது ரோபோ’ என திட்டி விட்டு தூங்கியும் விட்டாள்..

காலை “ப்ரியா எழுந்திரு” பவித்ரா அவசர அவசரமாக எழுப்ப,

“என்ன அண்ணி?” தூக்க கலக்கத்தில் சோம்பலாக கேட்க,

“இங்க வந்து பாரு” என அவள் அறையை ஒட்டிய பால்கனிக்கு அழைத்து வந்து கை நீட்டி காட்ட,

“என்ன அண்ணி?” என அசுவாஸ்ரயமாக பவித்ரா நீட்டிய திசை பக்கம் பார்த்தவள் கண்கள் விரிந்தது..

எதிர்த்த வீட்டு ஆறடி ஹல்க், ஊறுகாய் கம்பெனி ஓனர், ஆவக்காய் ஊறுகாய் என திருமணத்திற்கு முன்பு எத்தனை முறை இதே இடத்தில் நின்று எதிர்த்த வீட்டை பார்த்து முணுமுணுத்து இருக்கிறாள்.. அந்த அத்தனை செல்ல  நாமத்திற்கு சொந்தக்காரரான அவள் கணவன்..

இவளை முன்ன அனுப்பி விட்டு இரவோடு இரவாக இவள் பின்னே வந்து நிற்கின்றான்.. அவர்களின் பழைய எதிர்த்த வீட்டிற்கு,

“என்ன சொக்கு பொடிமா போட்ட என் அண்ணாவுக்கு இப்புடி மாறிட்டாரு” பவித்ரா கேலி எல்லாம் அவள் காதில் எங்கு விழுந்தது…

அவள் தான் எதிர்த்த வீட்டிற்கு வேகமாக சென்று இருந்தாளே,

“ஏங்க என்னங்க இது ப்ரியாவை முன்ன அனுப்பிட்டு பின்ன மாப்பிள்ளை  வந்து நிற்கிறார்” கல்யாணி அங்கலாய்க்க,

“இப்புடி பட்ட மாப்பிள்ளை கிடைக்க நாமா  சந்தோஷம் தான் படனும் கல்யாணி” என உதயகுமார் சொல்ல,

“உங்களுக்கென்ன அவளை ஏதும் ஒரு வார்த்தை சொல்ல முடியாது தப்பி தவறி சொல்லிட்டா என்னை தானே முறைப்பார்” என கல்யாணி சலித்து கொள்ள உதயகுமாரோ சிரித்தார்…

வேக வேகமாக எதிர்த்த வீட்டிற்குள் செல்ல, ப்ரதாப் மட்டுமில்லை வீட்டிலுள்ள அனைவரூம் இருந்ததனர்..

உன்னை இந்த வீட்டிற்காக மாற சொல்லலை.. உனக்காக இந்த வீட்டையே மாத்தி இருக்கேன்.. அன்றொரு நாள் ப்ரதாப் சொன்னது.. உண்மை தானே அவளுக்காக தானே இது.. அனைவரையும் பார்த்து சிரித்தவள்,

பால்கனியில் நிற்கும் ப்ரதாப்பிடம்

அவசரமாக  ஓடி வர,

“ஏய் மெதுவா வர மாட்டியா? எத்தனை தடவை சொல்றது?” ப்ரதாப் கடிந்து கொள்ள,

“ஒன்னும் ஆகாது அதை விடுங்க எனக்காகவா” கண்ணில் ஒளி மின்ன ஆசையாக கேட்டாள்..

“என்னது உனக்காகவா”,

“இந்த வீட்டுக்கு ஷ்ப்ட் ஆனது”..

“வாசுகி மேடம்க்கு ஆசை தான்.. அது எல்லாம் ஒன்னும் இல்ல.. புது ப்ராஜெக்ட் ஒன்னு பக்கத்தில் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்.. அந்த வீட்டிலிருந்து வந்தா ட்ராஃபிக்ல டைம் ஆகும் அதான்”..

“ஆஹான்” விஷ்ணு சிரிக்க,

“என்ன ஆஹான்… நம்பாத மாதிரி சிரிக்கிற” ப்ரதாப் முறைத்தாலும் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது… கூடவே அவள் மீது அவன் வைத்திருக்கும் நேசம் கர்வத்தையும் கொடுத்தது…

“நம்புறேன் நம்புறேன் நீங்க ப்ராஜக்ட்டாக தான் வந்து இருக்கீங்க எனக்காக இல்லைன்னு கண்டிப்பா நம்புறேன்” என்றவள் மீண்டும் சிரித்தவள் ப்ரதாப்பை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்..

“ஐ லவ் யூ சோ மச்” என்றாள் அவன்  கன்னத்தை கிள்ளி,

ப்ரதாப் கன்னத்தை தடவி அதுக்கு பதில் சொல்லாது இருக்க,

“யோவ் பதிலுக்கு  மீ டுன்னு ஏதாவது சொல்லுய்யா”,

“எனக்கு இப்புடி எல்லாம் சொல்ல வராது போடி”..

“எப்புடி சொல்ல வருமோ அப்புடி சொலலாம்ல” என்றவள் அடுத்து பேசிய வார்த்தை எல்லாம் ப்ரதாப் தொண்டைக்குழிக்குள் தான் சென்றது..‌

சில நொடிகள் கழித்து அவளை விடுவிக்க, உதட்டை கையால் வருடியவள் “இந்த மீ டு கூட நல்லா தான் இருக்கு” என்றவள் திரும்ப “ஐ லவ் யூ” சொல்ல அதுக்கு ப்ரதாப் மீ டு அவன் பாணியில் சொல்ல  இங்கு இவர்கள் இப்புடி மாறி மாறி காதலையும் முத்ததையும் பரிமாறி கொள்ள,

கீழே மூன்று ஜீவன்களோ வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தனர்..‌.

வம்சி பார்த்திபன் ராம் மூவரும் தான்..

“எங்க அண்ணாவ பார்த்தீங்களா எப்புடி பொண்டாட்டியை பார்த்துக்கிறார்னு நீங்களும் தான் இருக்கீங்களே, எல்லாம் சும்மா பேச்சு தான்” என பவித்ரா பார்ததிபனை திட்ட, அது கடைசியில் சண்டையாகி இனிமே என் பக்கத்தில் நீங்க வந்தீங்க அவ்வளவு தான் என வீட்டை விட்டு விரட்டி இருந்தாள்..‌.

அதே கதை தான் வம்சி ராம்க்கும்..

“டேய் உன் அண்ணாவை கொஞ்சம் அடக்கி வாசிக்கக் சொல்லுடா.. அவன் பண்ணுற காதல் அலப்பரையில்ல என் பொண்டாட்டி மறுபடியும் என்னை டிவோர்ஸ் பண்ணிடுவா போல” பார்த்திபன் புலம்ப,

“யோவ் மாமா  நானே அந்த நிலைமையில் தான் இருக்கேன் நீ வேற ஏன்யா என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிற வம்சி புலம்ப…ராமும் ஆமா லீலா கூட கிட்ட வந்த அவ்ளோ தான்னு துரத்தி விட்டுட்டா என புலம்பி கொண்டு இருந்தான்..

இவர்களை இப்புடி இங்க புலம்ப விட்ட ப்ரதாப்போ இன்னும் அவன் மீ டு விற்கு முற்று புள்ளி வைக்காது தொடர்ந்து கொண்டு இருக்க, அவர்கள் அனைவர் வாழ்விலும் இனி மகிழ்ச்சி மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் வைப்போம் முற்று புள்ளி.

முற்றும்.🥳🥳

 

அப்பாடா ஒரு வழியா கதை முடிந்தது.. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்குப்பா… இந்த கதையை இவ்வளவு நாளூம்  பொறுமையா படிச்சு ஆதரவு தந்த உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்.. நீங்க தான் எத்தனை நாள் லேட்டா யுடி போட்டாலும் படிச்சு கமெண்ட் பண்ணி நீங்க கொடுத்த சப்போர்ட் தான் என்னை கதையை முடிக்க வச்சது.. அதுக்கு மறுபடியும் உங்க எல்லாருக்கும் நன்றி ❤️❤️❤️❤️

கதை முடிஞ்சது.. கதை பற்றிய உங்க கருத்தை நிறை குறையை மறக்காம சொல்லுங்க.. இதுவரை சைல்ட் டா வாசிச்சவங்க கூட ஒரு வார்த்தையில் கதை ஓகேவா.. உங்களுக்கு பிடிச்சு இருந்ததா சொல்லிட்டு போங்க டியர்ஸ்….

அடுத்த கதையோட சீக்கிரம் வரேன்😘😘😘

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!