Mr and Mrs விஷ்ணு 2

4.1
(30)

பாகம் 2

பார்த்திபனை போன்று பவித்ராவும் தன்னுடைய வீட்டில் தன் காதலை கூறி சம்மதம் வாங்க இரண்டு நாட்களாக போராடி கொண்டி இருந்தாள்..

அந்த காலணியிலே மிகப்பெரிய வீடு அது தான்.. ஏன் அந்த காலணியின் மிகப்பெரிய அடையாளமே அந்த வீடு தான்.. பாரதி காலணி என்ற பெயர் கேட்டால் தெரியாது திருப்பதி ஊறுகாய்க்காரங்க வீடு இருக்குமே அந்த காலணி என்றால் ஆட்டோ டாக்சி காரங்க சரியாக கொண்டு வந்து வீடுமளவு பெரியதும் பெயர் வாங்கியதும் நம் நாயகன் வீடு.. நாயகி வீட்டின் எதிர்வீடு..

இரவு 11 மணி அந்த வீட்டின் ஹாலின் ஷோபாவில் நடுநாயகமாக பவித்ரா பாட்டி ரங்க நாயகி அமர்ந்தார்.. அவரின் ஒரு புறம் பவித்ரா தந்தை வெங்கடேஷ் மறுபுறம் சித்தப்பா ஜெகதீஷ் அமர்ந்து இருந்தார்கள்.. பவித்ரா பாட்டிக்கு நேர்எதிர் நின்று இருக்க அவளின் பக்கத்தில் இருந்த தாய் தேவகி,

“ஏ மார்கம் லேது, ஆ அப்பாயியை மரிச்சிபோ” (வேற வழியில்ல நீ அந்த பையனை மறந்திடு) என்று கூறிய தாய் தேவகியை பார்த்த பவித்ரா,

“ஒத்து மா, நேனு பார்த்திபன் தபா எவரினி பெல்லி சேஸ்கோனா” (பார்த்திபனை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்) என்று அழுகையும் கோவமுமாக அதே நேரம் அழுத்தமாக கூறிய மகளை அதிர்ந்து போய் பார்த்தார் வெங்கடேஷ்..

“பவிமா சொல்றதை புரிஞ்சிக்க, நீ வேற யாரையாவது காதலிச்சு இருந்தா கூட பரவாயில்லை, அவங்க நம்மளை விட அந்தஸ்து குறைவுடா, நம்ம வீட்டுல இருக்க அளவு வசதி அங்க கிடையாது.. அந்த பார்த்திபன் மாச சம்பளம் வாங்குறவன், அவனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ பின்னாடி ரொம்ப வருத்தப்படுவடா வேண்டாம்.. உனக்கு நாங்க நல்ல வசதியான பெரிய இடமா பார்க்குறோம்”  என்றார் தேவகி..

“எனக்கு பெரிய இடம் எல்லாம் தேவையில்லை மா பார்த்திபன் தான் வேணும்” என்ற பேத்தியை பார்த்து ரெங்க நாயகிக்கு கோவம் வந்தாலும் செல்ல பேத்தி ஆயிற்றே அதை வெளியில் காட்டவில்லை, இரண்டு நாட்களாக எவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக இருக்கின்றாளே,  அவளை பக்குவமா கையாள வேண்டும்  என்று நினைத்தவர்

“பவிமா இங்க பாட்டி பக்கத்தில்ல வா” என்று அழைத்து பவித்ரா வந்து அமர்ந்ததும் அவளின் தலையை வருடியவர் “மா பங்காரம் வளர்ந்தாலும் நீ இன்னும் குழந்தைடா மனுஷங்களை சரி வர உனக்கு புரிஞ்சிக்க தெரியலை அதான் இப்புடி பேசிட்டு இருக்க, அவங்க அவ்ளோ நல்லவங்க கிடையாதுடா, நம்ம வசதியை பார்த்து அவங்களுக்கு பொறாமை, அவங்களுக்கும் நமக்கும் நடுவில் என்ன பிரச்சினைன்னு உனக்கே தெரியும் தானே, நம்ம குடும்பத்தை பழி வாங்க உன்னை பகடை காயா யூஸ் பண்றாங்க.. அந்த பையனுக்கு உன் மேல்ல உண்மையான காதல்  கிடையாது,  எல்லாம் நடிப்பு, நாங்க உன் நல்லதுக்கு தானேடா சொல்லுவோம் என்ற ரங்கநாயகி பேத்தி மனதை கரைக்க ஒரு புறமும்
ஆமா பவி பாட்டி சொல்றது தான் கரெக்ட் என்று தேவகி மறுபுறமும் பார்த்திபன் குடும்பத்தை பற்றி மாறி மாறி தவறாக சொல்லி அவள் மனதை மாற்ற முயற்சி செய்தனர்..

அண்ணா நீங்களாவது கொஞ்சம் பவிக்கு சொல்லி புரிய வைங்க நம்ம ஸ்டேஸ்க்கு அந்த ஃபேமிலி ஒத்து வராது என்ற தம்பியை வெங்கடேஷ் முறைக்கவும் அவங்க குடும்ப விஷயத்தில் நீங்க ஏன் தலையிடுறீங்க அமைதியா நின்று வேடிக்கை பாருங்க என்று ஜெகதீஷ் மனைவி விசாலாட்சி கூறவும் ஜெகதீஷ் அமைதியானார்.. விசாலாட்சிக்கு இதை எல்லாம் பார்க்க குஷியாக இருந்தது..

அச்சோ நிறுத்துங்க என்று கத்தியபடி எழுந்த பவித்ரா நான் ஒன்னும் உலகம் தெரியாத சின்ன குழந்தை இல்லை.. எனக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியும்.. என் சொந்த புத்தியை பயன்படுத்தி தான் அண்ணன் எனக்கு கொடுத்த பிசினஸை இந்த  இரண்டு வருஷத்தில் இரண்டு மடங்கா பெருக்கி இருக்கேன் பாட்டி..  நீங்க இன்னும் எத்தனை நாள் என்ன  என்ன சொல்லி ப்ரைன் வாஷ் பண்ண ட்ரை பண்ணாலும் பார்த்திபனை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று கத்தினாள்.. அந்த நேரம் வீட்டு வாசலில் கார் நிறுத்தும் சத்தம் கேட்டது..

கார் சத்ததை வைத்தே வருவது  யார் என்று தெரிந்தது.. இந்த வீட்டின் மூத்த வாரிசு பவித்ராவின் அண்ணா விஷ்ணு ப்ரதாபீ.. வீட்டிலுள்ள அனைவரும் அமைதி ஆனார்கள்..

என் பையன் வரான்  இவ்வளவு நேரம் நீ நாங்க சொல்லி கேட்கலைல  இப்ப அவன் வந்து சொல்லுவான்.. அப்ப நீ என்ன பண்றேன்னு நான் பார்க்கிறேன் என்றார் தேவகி..

  ப்ரதாப்பை பார்த்த பவித்ராவுக்கு மனதிற்குள் பயம் பரவியது.. இந்த இரண்டு நாளும் அவன் வீட்டில் இல்லை.. அவனுக்கு இப்ப வரை பவித்ராவின் காதல் விவகாரம் தெரியாது.. தெரிந்தால் அவன் என்ன சொல்லுவான் என்று பயம் எழுந்தது..  அவளுக்கு இந்த வீட்டில் பாட்டி அம்மா அப்பா மேல் எல்லாம் பயம் கிடையாது.. ப்ரதாப்பிடம் மட்டுமே பயம்.. இந்த வீட்டை பொறுத்தவரை இறுதி முடிவு எடுப்பது முன்பு எல்லாம் ரங்க நாயகி தான் அவர் சொல்படி தான் அவளின் தாத்தா அப்பா அம்மா சித்தி சித்தப்பா நடப்பார்கள்.. ஆனால் ப்ரதாப் தலை தூக்கிய பிறகு  அவன் முடிவே இறுதியானது.. அவன் சொல்படி தான் அனைவரும் நடப்பார்கள்..  ரங்க நாயகியிடம்  கூட மறுப்பு சொல்லி விட  முடியும்.. ஆனால் ப்ரதாப்பிடம் அதுக்கு ஒரு துளி கூட வாய்ப்பு இல்லை.. அவன் யாரையும் இதை தான் செய்ய வேண்டும் என்று கட்டாய படுத்த மாட்டான்.. ஆனாலும் அவன் சொல்லும் ஆளுமையிலும் பார்வையிலும் எதிரில் இருப்பவர்களுக்கு அதை மீற  தைரியம் வராது.. இப்போது அவள் அண்ணன் ப்ரதாப் வந்து பார்த்திபன்  வேண்டாம் என்று கூறி விட்டால் என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு பவித்ரா நின்றாள்..

காரிலிருந்து இறங்கி வேக எட்டு வைத்து வீட்டிற்குள் வந்த விஷ்ணு ப்ரதாப் ஹாலில் நின்ற அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் தன்னறைக்கு செல்ல மாடி படியேறினான்..

இந்த நைட்டு நேரத்தில்ல எல்லாரும் நடு வீட்டில் நிற்கிறோம்.. என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்கிறானா யாரையும் கண்டுக்காம மேல்ல போறான் பாருங்க.. இவனுக்கு உடம்பு முழுக்க திமிர்  என்று தன் கணவர் ஜெகதீஷிடம் கரித்து கொட்டினார் விசாலாட்சி.. அவருக்கு ப்ரதாப்பை பிடிக்காது… அவனின் கீழ் குடும்பமும் அனைத்து தொழிலும் இருக்கின்றதே.. சின்ன சின்ன செலவுக்கு கூட இவனிடம் கேட்க வேண்டி இருக்கின்றதே என்ற கோவம்.. ஆனால் அவரின் கணவன் கையில் தொழிலை கொடுக்க அவர் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் தொழிலை சரி வர கவனிக்காமல் அதை அதாள பாதாளத்திற்கு தள்ளி விட்டுவிட்டு இந்த ஊறுகாய் மஞ்ச பொடி மசாலா பொடி எல்லாம் என்னால் விற்க முடியாது வேற தொழிலை வச்சு கொடுங்க என்று இன்று வரை அவர் புது புது தொழிலாக ஆரம்பித்து அதையும் நஷ்டத்தில் தான் தள்ளி கொண்டு இருக்க அது அனைத்துக்கும் ப்ரதாப் தான் பணம் கொடுக்கிறான் என்பது மட்டும் அவருக்கு மறந்து போனது..

ப்ரதாப் கண்ணா என்று அழைத்த  ரங்கநாயகி “இந்த டைம்ல வீட்டுல எல்லாரும் ஹால்ல நிற்கிறோமே என்னன்னு ஒரு வார்த்தை கூட  கேட்காம நீ பாட்டுக்கு போறியேப்பா என்று ரங்கநாயகி கேட்டதும், நின்று திரும்பி அனைவரையும்  பார்த்த ப்ரதாப் என்ன என்று கேட்டு விட்டு மீண்டும் திரும்பி மாடி படியில் ஏற ஆரம்பித்தான்..

அதை பார்த்து தன் தலையில் அடித்து கொண்ட ரங்கநாயகி ப்ரதாப் ரொம்ப முக்கியமான விஷயம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றதும் நின்ற ப்ரதாப் பாட்டி ஏர்லி மார்னிங் 3மணிக்கு  எனக்கு ஃப்ளைட் டில்லி போகனும் இரண்டு நாள் கழிச்சு வந்ததும் பேசலாம் என்றான்..

சாலா முக்கிய விஷயம் ப்ரதாப்  ஐதூ நிமிஷாலு(அஞ்சு நிமிஷம்) வந்து உட்கார் என்று தேவகி சொன்னதும், இடுப்பில் கை வைத்து தலையை இருபுறமும் சலிப்பாக ஆட்டிய ப்ரதாப் ஷோபாவில் வந்து அமர்ந்தான்..

சரியாக ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒரு நொடி கூட உட்கார மாட்டான் என்று பேரனை பற்றி நன்கு அறிந்த ரங்கநாயகி நேரிடையாகவே விஷயத்திற்கு வந்தார்..  உன் தங்கச்சி எதிர் வீட்டு பார்த்திபனை லவ் பண்றாளாம்  என்றதும்

அதுக்கு நேனு ஏமி செய்யாலி (நான் என்ன பண்ண)  என்று ப்ரதாப் அலட்சியமாக கேட்கவும் ரங்கநாயகி முகம் போன போக்கை பார்த்து விசாலாட்சி சிரித்து விட்டார்..
அவரை முறைத்த ரங்கநாயகி திரும்பவும்  ப்ரதாப்பிடம் உனக்கு இது ஷாக்கா  இல்லையாப்பா,

ஒரு  பொண்ண லவ் பண்றேன் சொல்லி இருந்தானா ஷாக் ஆகி இருப்பேன்.. பையனை தானே பாட்டி லவ் பண்றா இதுல ஷாக்காக என்ன இருக்கு என்றான்..

“என்ன கண்ணா கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இப்புடி  பேசுற  இந்த காதல் கீதல் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராதுன்னு உன் தங்கச்சிக்கு புரியற  மாதிரி நீ தானே எடுத்து சொல்லனும்”

அதுக்கு எல்லாம் எனக்கு டைம் இல்லை பாட்டி.. நீங்களே சொல்லுங்க,

நாங்க எவ்வளவோ எடுத்து சொல்லிட்டோம்ப்பா ஆனா உன் தங்கச்சி கேட்க மாட்டேங்கிறே, அந்த பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன் பிடிவாதமா இருக்கா,

அப்ப கல்யாணம் பண்ணி வைங்க..  இதுக்கா தூங்க போன என்னை  தொந்தரவு பண்ணுனீங்க என்றவன் ஷோபாவிலிருந்து எழுந்து, நானா என்ன பண்ணனும் உங்களுக்கு தெரியும் பேசி முடிவு பண்ணுங்க என்று தந்தை வெங்கடேஷிடம் மறைமுகமாக தங்கை கல்யாண விஷயத்தை பேசி முடிக்க சொன்னவன், அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற ரங்கநாயகியிடம் அஞ்சு நிமிஷம் முடிஞ்சது பாட்டி குட் நைட் என்றவன் மாடி படிகளில் ஏறி தன்னறைக்கு சென்றான்..

பவித்ராவும் தன் அண்ணனே சொல்லி விட்டான் இனி தன் காதலுக்கு தடை இல்லை என்ற  மகிழ்ச்சியில் இருந்த பவித்ரா, பாட்டி பார்த்திபன் வீட்டில் இருக்கவங்கள நாளைக்கே பேச வர சொல்றேன் என்று சந்தோஷமாக கூறி விட்டு உறங்க சென்றாள்..

விசாலாட்சி ஜெகதீஷ்ம் கூட  தங்கள் அறைக்கு சென்று விட்டனர்..

வெங்கடேஷ்க்கு பார்த்திபன் தந்தை உதயகுமாரை நேரில் பார்ப்பதற்கு தர்ம சங்கடமாக இருந்தது.. இப்போது இரு வீட்டினர்க்கும் பேச்சு வார்த்தை இல்லை தான்.. ஆனால் முன்பு ஒரே காலத்தில் இரு குடும்பத்திற்கு நடுவிலும் நல்ல நட்பு இருந்தது..  அந்த நட்பு பிரிவதற்கு காரணமே ரங்கநாயகி தான்..  25 வருடங்களுக்கு முன்பு தன் வீட்டு ஆட்களால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு.. அது   இப்போது வரை  கூட  நெஞ்சில் குற்ற குறு குறுப்பை உண்டு பண்ணியது..

அத்தை  ப்ரதாப்பே கல்யாணத்தை பேசி முடிங்கன்னு சொல்லிட்டான்.. இனி பவித்ரா மனசை மாத்துறது எல்லாம் நடக்காத காரியம்..  நீங்க அவங்களுக்கு செஞ்ச பாவத்துக்கு எல்லாம் என் பொண்ணு தான் அங்க போய் கஷ்டப்பட போறா என்று தேவகி கவலை பட,

தேவகி,பவித்ரா கல்யாணம் பண்ணி அந்த வீட்டுக்கு போனாலும் யாரும் அங்க அவளை கஷ்டபடுத்த முடியாது.. அங்க என் பேத்தி   வைக்கிறது தான் சட்டமா இருக்கும்..

எப்படி என்று தேவகி புரியாமல் தன் மாமியாரை பார்க்க

நாளைக்கு பாரு அந்த வீட்டோட ஒட்டு மொத்த குடுமியையும் என் கைக்கு கொண்டு வரேன்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.1 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “Mr and Mrs விஷ்ணு 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!