Mr and Mrs விஷ்ணு 74

4.7
(72)

பாகம் 74

“போதும் ராம்”..

“என்ன போதும்..  இன்னும் கொஞ்சம் நேரம் கால்லை வச்சுக்கோ அப்ப தான் நல்லா இருக்கும்”..

“அய்யோ ராம் எனக்கு கால் வலியே இல்ல.. ஆனாலும் ஹாட் வாட்டர்ல கால் ,வைக்க சொல்லி ஏன் இப்புடி பண்றீங்க?” லீலா சலித்து கொள்ள,

“அப்புறமா வலிச்சா.. அதான் முன் ஏற்பாடு” என்றவன் சுடுதண்ணீர் பாத்திரத்திவிருந்த அவள் கால்களை எடுத்து டவலால் துடைத்து விட்டு, படுக்க வைத்து விட்டு அந்த பாத்திரத்தை கிச்சனில் வைக்க எடுத்து செல்ல,

அவனையே வைத்த கண் வாங்காது  பார்த்து கொண்டு இருந்தாள் லீலா..

இதழில் சின்ன புன்னகை கூட தோன்றியது..

இப்போது எல்லாம் ராம்மை அவளுக்கு பிடித்து இருக்கின்றது.. முன்பே பிடிக்கும் தான்.. ஆனால் இப்போது இன்னும் இன்னும் இன்னேரம் பிடித்து இருக்கின்றது.. அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாள்..

அவளுக்கும் இப்போது ஐந்தாம் மாதம் நடக்கின்றது.. கையில் வைத்து தாங்குவது இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறாள் தான்.. பார்த்தது இல்லை.. ஆனால் திருமணத்திற்கு பின் அதை அனுபவித்து கொண்டு இருக்கின்றாள்.. அவள் வீட்டில் எல்லாம் இவ்வளவு அன்பு அக்கறை கவனிப்பு எல்லாம் அவளுக்கு கிடைத்ததே இல்லை..

ஆனால் இங்கு ராமின் அதீத அன்பு கவனிப்பில் திக்கு முக்காடுகிறாள்.. இது எல்லாம் குழந்தைக்காக தான் ஆரம்பத்தில் நினைத்தவளுக்கு, இப்போது அப்புடி நினைக்க முடியவில்லை.. ராம்க்கு அவளை பிடிக்கும்.. அவளை காதலிக்கின்றான் புரிந்து கொண்டாள்.. அவளும் அவனை காதலிக்கின்றாள்.. அவனோடு வாழ ஆசைப்படுகிறாள்..

ஆனால் அவன் தான் அவள் திருமணத்திற்கு முன்பு என்னை தொட கூடாது என்று சொல்லியதை வேதவாக்காக எண்ணி சீரியல் ஹீரோ போல் தள்ளி நிற்கின்றானே,

அவளாக முன்னெடுக்கவும் தயக்கம் வெட்கம் என வந்து தொலைக்கின்றதே அடுத்து என்ன செய்ய என்ற சிந்தனையிலே படுத்து இருக்க,

“தூங்காம மேடம்க்கு அப்புடி என்ன பலமான யோசனை” கேட்டபடி அவள் அருகே ஒருக்களித்து படுத்தான் அவளை பார்த்தபடி,

“பலமான யோசனை தான்” என்றாள்..

“அதான் என்ன யோசனை மேடம்க்கு”,

“என் பேபியோட டாடிக்குஅவங்க மம்மியை பிடிக்குமா பிடிக்காதாங்கிற யோசனை தான்” என்றாள்..

“இதில் யோசிக்க என்ன இருக்கு அது எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்பவே பிடிக்கும் அவங்க மம்மியை” என்றான்..

“சும்மா பொய் சொல்ல வேணாம்”..

“லீலா பொய் எல்லாம் இல்ல..‌உண்மையாவே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஐ லவ் யூ சோ சோ சோ  மச்” என்றான்.‌.‌

“ம்பச்” என சலித்து கொண்டவள் நம்புற போல இல்லையே என்றாள்..

“வேற எப்படி சொன்னா நம்புவ”..

“வாய் வார்த்தையா சொல்றதை எப்புடி நம்புறது.. உங்களுக்கு என்னை பிடிக்கும்ங்கிறதை செயலில் காட்டுங்க அப்புறம் நம்பலாமா வேணாமான்னு பார்ப்போம்” என்றவள் கண்மூடி கொண்டாள்..

“செயல்ல எப்புடி?” என்றவனுக்கு விஷயம் புரிந்தது.. அவள் முகம் பார்த்தான்.. கண்மூடி இருந்தாலும் இதழில் சின்ன சிரிப்பு இருந்தது.. அவள் சொல்ல வருவதும் புரிந்தது..

“செயல்ல காட்ட நான் ரெடி தான்.. ஆனா லீலா நீ”…

“பிடிக்கலைன்னா பிடிக்கலை குழந்தைக்காக தான் சொல்லிட்டு போங்க இந்த மாதிரி பொய் சாக்”… அடுத்து அவளை பேச விடாது அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு அடைத்த ராம்… தனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும் என காட்டும் முயற்சியில் மும்மரமாக இறங்கினான்..

கர்ப்பமாக இருக்கிறாள் என்பதால் மென்மையாக அவளிடம் தன்னை உணர்த்தினான்.. முழுமையாக அவளை ஆட்கொண்டு முடித்தவன் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டு அவளை விட்டு விலகி விட்டத்தை பார்த்து படுத்தவன்,

“இப்ப நம்புறியா லில்லி உன்னை எனக்கும் பிடிக்கும்ன்னு” ராம் கேட்க,

“ம்”… என மூச்சு வாங்கியபடி லில்லி தலை அசைக்க..

“கர்ப்பமாக இருக்கிறதால் என் லவ்வை அவ்ளோ காட்ட முடியலை.. குழந்தை பிறந்த அப்புறம் முழுசா காட்டுறேன்” என்றான்..

“இதுக்கு மேல முழுசா காட்ட என்ன இருக்கு” அவனை மேலிருந்து கீழ் பார்த்தபடி சிரிப்பை அடக்கியபடி லீலா சொல்ல,

அவசரமாக போர்வையால் தன்னை மூடியவன் “நான் லவ்வை சொன்னேன் டி”..

“நானும் அதை தான் சொன்னேன்” என்றவள் சிரிக்க,

“டர்ட்டி கேர்ள்” என அவள் மூக்கை பிடித்து ராம் ஆட்டினான்..

“உங்களை விடவா ராம் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நீங்க என்னோட” என அந்தரங்கம் பேச,

அவள் வாயை கையால் மூடியவன்,

“இப்புடி எல்லாமாடி பேசுவ” என்றவனுக்கே அந்த நிகழ்வை நினைத்து வெட்கம் வந்தது,

“நான் பேச மட்டும் தான் செய்யுறேன் ஆனா நீங்க” என்றவளை மேலும் பேச விடாது  தன் இதழ் கொண்டு அடைத்த ராம் மீண்டும் தன் காதலை காட்ட வேலையில் ஈடுபட்டான்..

“சாரிங்க சாரிங்க தெரியாம பண்ணிட்டேன் ரொம்ப சாரிங்க.. கோவப்படாதீங்க ப்ளீஸ்” என விஷ்ணு தான்…  D.S.. ஹாஸ்பிடல் காரிடரில் கோவத்தை தனக்குள் அடக்கியபடி கோவமாக நடந்து கொண்டு இருந்த ப்ரதாப்பிடம் கேட்டபடி அவன் பின்னே வந்தாள்…

அவனோ அவள் பேச்சை எல்லாம் கேட்காது வேக எட்டு வைத்து நடந்து கொண்டே இருக்க,

“என்னால உங்களுக்கு ஈக்வெல்ல ஓடி வர முடியலை மூச்சு வாங்குது”.. வயிற்றை பிடித்து கொண்டு விஷ்ணு மூச்சு வாங்க சொல்ல,

ப்ரதாப் நின்றான்.. விஷ்ணு அவன் அருகே வர, அதன் பின்பு அவளுக்காக நடையின் வேகத்தை குறைத்தபடி அவளோடு சேர்ந்து நடந்தான்.‌

“சாரி ப்ளீஸ், ப்ளீஸ் சாரி” என அவள் கேட்டு கொண்டே வர கார் இருக்குமிடம் வந்தது..

காரில் ப்ரதாப் ஏற அவன் அருகே ஏறி கொண்ட விஷ்ணுவோ “சாரி உங்களை ஹர்ட் பண்ண எதுவும் பண்ணலை.. அப்பாவது பேசுவீங்கங்கிற நப்பாசையில் தான் அப்புடி பண்ணுனேன்”..

“நாளைக்கு என் பர்த்டே… அதுக்குள்ள உங்களை பேச வைக்கனும்.. உங்கிட்ட விஷ் வாங்கனும்.. உங்க கூட சேர்ந்து செலிப்ரேட் பண்ணனும் தான் அப்புடி பண்ணிட்டேங்க.. சாரிங்க”

“நான் உங்களை சந்தேப்பட்டு பேசுனது தப்பு தான்.. ஆனா அதுக்காக இவ்ளோ நாள் கோவமா பேசமா இருக்கீங்க.. உண்மையா எனக்கு நீங்க இப்புடி பேசமா இருக்கிறது.. ரொம்ப கஷ்டமா இருக்கு..  எவ்வளவு சிரிச்சு பேசி வம்பு பண்ணினாலும்.. மனசுக்கு கஷ்டமா என்னவோ ஒன்ன இழந்த போல இருக்கு..‌ அழுகை அழுகையா வருது” என்றவள் அழ ஆரம்பிக்கவும்,

ப்ரதாப் அவளை நிமிர்ந்து ஒரு முறை முறைத்தான்.. அழ கூடாது என்பது அதன் அர்த்தம்..

“இப்புடி பேசாமா கஷ்டப்படுத்திட்டு அழ கூடாதுன்னா எப்புடி?” என கேட்டவள் அழுகையை அடக்கி கொண்டாள்..

இரவு தன்னறையில் பேச வைக்க திட்டம் போடறேன்  சொல்லி இப்ப உள்ளதும் போச்சு என புலம்பியபடி விஷ்ணு அங்குமிங்குமாக அலைந்து கொண்டு இருந்தாள்..

அவளால் உண்மையாக ப்ரதாப் காட்டும் ஒதுக்கத்தை தாங்கி கொள்ள முடியவில்லை..

அவள் செய்தது பெரிய தப்பு தான்.. ஆனால் அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா.. என் அண்ணா எவ்ளோ பெருந்தன்மையா நடந்துக்கிட்டான்.. அதே போல் இவர் பண்ண கூடாதா புலம்ப வேறு செய்தாள்..

மாதம் ஆக ஆக ப்ரதாப் அன்பையும் அரவணைப்பையும் சீண்டலையும் செல்ல முறைப்பையும் முத்தத்தையும் பெரிதும் எதிர்பார்க்கின்றாள்..

அதற்காக இன்று அவளுக்கு மாதந்திர செக்அப் அதற்காக அவளை மாலை ப்ரதாப் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்..

அங்கு முழுமையாக அவளை பரிசோதித்த டாக்டர் இந்திரா “வெல் மிஸ்டர் ப்ரதாப் உங்க வொய்ஃப்பை செக் பண்ணுனதில் அவங்களுக்கு பிபி அதிகமாக இருக்கு.. அதோட நச்சுக்கொடி கீழே இறங்கி இருக்கு.. இது இரண்டுமே அவங்க டெலிவரியில் பாதிப்பை கொடுக்கும்” என்றார்..

“வாட்  என்ன சொல்றீங்க டாக்டர்” முதலில் அதிர்ந்தான்.. பயப்பட கூட செய்தான்.. ஆனால் மேலும் டாக்டர் இந்திரா பேச பேச அவர் கருவிழி ஒரு இடத்தில் நில்லாது அங்குமிங்கும் அசைவதிலும், அடிக்கடி அவன் அருகே இருந்த விஷ்ணுவை பார்த்து விட்டு பின்பு பேசுவதிலும்,

பத்து வருடங்களுக்கு மேலான அவனின் தொழில் அனுபவம் பொய் சொல்கிறார்களா உண்மை சொல்கின்றார்களா என கணிக்கும் திறமையை கற்று தந்து இருக்கின்றதே, அதனால் இந்திரா சொன்னது பொய் என நொடியில் கண்டுபிடித்து விட்டான்…

“நீங்க சொன்னது எல்லாம் உண்மையா டாக்டர்” அவன் அழுத்தமாக கேட்டதிலே அவருக்கு உதற ஆரம்பித்தது.‌..‌இருந்தும் சமாளித்து அதே பொய்யை திரும்ப சொல்ல, அவரை முறைத்தவன்,

அந்த ஹாஸ்பிடல் டீன் டாக்டர் தேவேந்திரனுக்கு அழைக்க,

அங்கு வந்த தேவாவோ “என்ன சார் பிரச்சினை” என விசாரித்து இன்றைய பரிசோதனை அறிக்கையை வாங்கி பார்த்தவன்..

“என்ன டாக்டர் இந்திரா மேடம் ரிப்போர்ட்ல ஒன்னு இருக்கு.. ஆனா நீங்க இவர்கிட்ட வேற மாதிரி சொல்லி இருக்கீங்க ஏன்?” என கேட்க,

“அவங்க வொய்ஃப் தான் சார் இப்புடி சொல்ல சொன்னாங்க.. இரண்டு பேர்க்கும் சண்டை அவர் சரியா பேசுறதில்ல.. அதனால் நீங்க இப்புடி சொன்னா பயந்து போய் பேசுவார்ன்னு ரொம்ப கெஞ்சி கேட்டாங்க சார் அதான்..

“அதுக்கு பொய் சொல்லுவீங்களா.. நல்லா இருக்கவங்களுக்கு பிரச்சினைன்னு சொல்லுவீங்களா இதான் உங்க தொழில் தர்மமா.. இனிமே உங்களை எப்புடி நம்புறது.‌ நான் வேற ஹாஸ்பிடல் பார்த்துக்கிறேன்” என தேவா விடம் கோவமாக சொல்லி விட்டு வேகமாக வெளியேறியவன் பின்பு தான் சாரி கேட்ட வண்ணம் விஷ்ணு வந்தது..

ப்ரதாப்பிற்கு அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம் வீட்டினருக்கு தெரிய வருவதே பிடிக்காது… இதில் பேச வைக்கிறேன் என்ற ஆர்வகோளாறில்  டாக்டரிம் சொல்லி இருப்பது.. அதை விட குழந்தைக்கு தனக்கும் ஆபத்து என பொய்யாக இருந்தாலும் அப்புடி சொன்னது இன்னும் அவன் கோவத்தை தூண்டி இருக்கும் புரிந்தது..

இப்புடியே விஷ்ணு அறையை அளந்து புலம்பி கொண்டு இருக்க, ப்ரதாப் வீடு வந்து சேர்ந்தான்..

அவன் முகத்தையே எதிர்ப்பார்ப்போடு பார்த்தாள்.. நாளை பிறந்த நாள் என சொன்னது மாலை அழுதது என மனம் இறங்குவான் என,

ம்ஹும் ப்ரதாப் அவளை கண்டுகொள்ளவில்லை..

“டிபன்  எடுத்து வைக்கட்டுமாங்க” விஷ்ணு கேட்க.. நேற்று அதற்கு முந்தைய நாள் கூட பதிலுக்கு சின்ன முறைப்பாவது வரும்.. இன்று சுத்தம்.. உள்ளதும் போச்சு புலம்பி கொண்டாள்..

9 மணிக்கு ப்ரதாப் படுக்க.. “நாளைக்கு என் பர்த்டேங்க.. நீங்க தான் பர்ஸ்ட் விஷ் பண்ணனும் நினைக்கிறேன்.. ப்ளீஸ் என் மேல்ல கோவம் இருந்தா கூட, விஷ் மட்டுமாவது பண்ணுங்க” என விஷ்ணு சொல்லும் வரை அமர்ந்து இருந்தவன், அவள் பேசி முடித்ததும் படுத்து விட்டான்.. கொஞ்ச நேரத்தில் நன்றாக உறங்கியும் விட்டான்..

மணி 11யை கடந்து 11:30 ஆகி 11:50 கூட ஆகி விட்டது.. ப்ரதாப்போ நன்றாக தூங்கி கொண்டு இருந்தான்‌. முதல் வாழ்த்தை கணவனிடமிருந்து வாங்க வேண்டும் விஷ்ணு மனம் ஏங்கியது.‌

விடிந்தால் அவள் வீட்டில் உள்ளவர்கள் நண்பர்கள் என வரிசையாக சொல்லி விடுவார்களே,

சின்ன பிள்ளை போல எனக்கு பிறந்த நாள் பிறந்த நாள்ன்னு அவளே வாய் விட்டு சொல்லி வாழ்த்தை எதிர்பார்க்க, சின்னதா விஷ் கூட பண்ண மாட்டாரா அந்த அளவு ஆகாதவளா போய்ட்டானா என்றபடி மணியை பார்க்க 11:57 அழுகையே வந்து விட்டது.. அழவும் ஆரம்பித்து விட்டாள்..

“இப்ப எதுக்கு அழற?” ப்ரதாப் குரல் கேட்க,

அழுவதில் மும்மரமாக இருந்த விஷ்ணு பாப்பாவுக்கு அது உரைக்கவில்லை.. “நீங்க விஷ் பண்ணலை அதான் அழறேன்” என்றாள்..

“உன் பர்த் டே ஸ்டார்ட் ஆக இன்னும் இரண்டு நிமிஷம் இருக்கு, அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்”,

“அப்பவும் நீங்க சொல்ல மாட்….”என்றவள் பாதியில் நிறுத்தி கொண்டு திரும்பி பார்க்க,

“மேனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே மிஸஸ் விஷ்ணு” என சின்ன சிரிப்போடு

வாழ்த்தினான் ப்ரதாப்..

 “அவசரகுடுக்க” மண்டையில் தட்டியவன் 

கோழி முட்டை கண்ணை அகல விரித்து அவனை அதிர்ச்சியுடன்  பார்த்து கொண்டு இருந்தவள்  இதழில் தன் பிறந்த நாள் பரிசை கொடுக்க மேலும் அகல விரிந்தது அவள் கண்கள் அதிர்ச்சியில்,

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 72

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “Mr and Mrs விஷ்ணு 74”

Leave a Reply to Deepti Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!