Mr and Mrs விஷ்ணு 8

4.4
(43)

பாகம் 8

“ஆமா என் புருஷன் ஆபிஸ் தான்” என்றாள் மனதிற்குள் வெளியே சொல்லவில்லை.. 

“உனக்கு சின்சியார்டி ரெஸ்பான்சிபிள்டி கொஞ்சம் கூட இல்லையா” என்று அவன் அர்ச்சிக்க அமைதியாக நின்று வாங்கி கொண்டு இருந்தாள்..

வீட்டில் இருக்க முடியாமல் வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து இணையத்தில் விஷ்ணு தேடிய போது கண்ணில் பட்டது இந்த கம்பெனி தான்.. 

இப்போது வி.வி கன்ஸ்டரக்ஷனாக இருப்பது நான்கு மாதங்களுக்கு முன் வி.எஸ் கன்ஸ்டரகூன் என்று தான் இருந்தது.. 

வேலைக்கு விண்ணப்பித்தவள் இன்டர்வுயூக்கு அழைத்ததும் வந்து செலக்ட் ஆகி வேலைக்கு சேர்ந்த ஒரு மாதம் வரையில் அங்கு எம்.டியாக இருந்தவன் ஷர்மா தான்.. 

ஒரு மாதம் கடந்த நிலையில் தான் ஒரு நாள் காலையில் வேலைக்கு வரும் போது வி.எஸ் கன்ஸ்டரகூன் வி.வி கன்ஸ்டரகூனாக மாறி இருந்தது.. 

என்னவென்று விசாரிக்க வி.எஸ் கன்ஸ்டரகூன் நிர்வாகம் மாற போகின்றது என்று தகவல் சொன்னார்கள்.. ஏன் என்று அவள் விசாரிக்க வி.எஸ் கன்ஸ்டரகூனில் இருக்கும் எஸ் தான் சர்மா என்றும் அவருக்கும் 50 சதவிகித பங்கு தான் இதில் இருக்கின்றது.. இன்னோரு 50 சதவிகித பங்கு முன்னால் இருக்கும் வி என்ற எழுத்துக்கு சொந்தகாரனுடையது என்றும் அவன் இந்த கம்பெனிக்கு இவ்வளவு நாள் வரவில்லை என்றாலும் தூர இருந்து நிர்வகின்றான் என்பதும் தெரிந்தது.. 

இப்போது சர்மா தன்னுடைய 50 சதவிகித பங்கையும் அவனுக்கே முழுதாக விற்று விட்டு வேறு தொழிலில் ஈடுபட போவதால்.. இந்த கம்பெனியை இனி அவன் தான் நிர்வகிக்க போகின்றான் என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவன் இங்கு வர போகின்றான் என்று  கூறினர்.. 

 புது எம்.டியை மற்றவர்களோடு சேர்ந்து அவளும் யார் என ஆவலாக பார்க்க,   வந்தது  அவள் கணவன் ப்ரதாப் தான்.. 

அவனை இங்கு முதலில் பார்த்த விஷ்ணுவுக்கு, இவரா என்று இதயமே எகிறி குதித்து வெளியே வந்து விழும் அளவிற்கு அதிர்ச்சி..  இவர் எங்க இங்க.. அப்ப ஊறுகாய் கம்பெனி நிலைமை என்னாகிறது என்று தான் முதலில் தோன்றியது..

பின்பு தான் ப்ரதாப்பும் இன்ஜினியரிங் படித்து இருக்கின்றான் என்பதும் அவனுக்கு கன்ஸ்டரகூன் பிசினஸ் தொடங்க வேண்டும் என்பது தான் அவன் கனவு.. இருந்தும் தாத்தா தொழிலை கை விட கூடாது என்பதால் திருப்பதி ஃபுட் ப்ரொடக்டஸ் கம்பெனியை நடத்துக்கின்றான் என்று அவள் மாமனார் வெங்கடேஷ் முன்பு அவளிடம் கூறியது நினைவிற்கு வந்தது.. 

வி.வி யா?  ஒரு வி அவர்.. அப்ப இன்னோரு வி யார் என்று முதலில் யோசித்தவள் அவங்க தாத்தா பேரும் விஷ்ணு தானே அந்த வி அவரா தான் இருப்பார் என்று நினைத்து கொண்டாள்…

“அச்சச்சோ இவர் ஆபிஸ்ன்னு தெரியாமா வேலைக்கு வந்து இருக்கோம்..  என்கிட்ட சொல்லமா ஏன் வேலைக்கு வந்த, என் கம்பெனிக்கு ஏன் வந்தேன்னு, எல்லாம் திட்டுனா என்ன பண்றது  என்று அவள் பயந்திருக்க ப்ரதாப் அவளை தெரிந்ததாக காட்டி கொள்ளவில்லை.. 

வேலையை விட்டுட்டு போயிரலாமா என்று முதலில் நினைத்தாளே தவிர வேலையை விட தோன்றவில்லை.. ப்ரதாப் அவளை தெரிந்ததாக காட்டி கொள்ளவில்லை.. அது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.. அதோடு கோவம் ரோஷம் எல்லாம் வர விஷ்ணுவும் அவனை தெரிந்ததாக காட்டி கொள்ளவில்லை.. இந்த ஆபிஸை பொறுத்தவரை அவன் எம்.டி அவள் அங்கு பணிபுரியும் ஸ்டாப் அவ்வளவே.. 

இன்னும் அர்ச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது..

“ஏன்டி நிவி பொதுவா உன் அப்பா வீட்டு ஆபிசான்னு தானே கேட்பாங்க,சார் என்ன புதுசா புருஷன் வீட்டு ஆபிசான்னு கேட்கிறாங்க.. ஒரு பொண்ணை பார்த்து இப்புடி கேட்கிறது தப்பில்லையா? என்று மிக மிக மெதுவாக கேட்டாள் பூரணி தன்னருகே அமர்ந்து இருந்த நிவேதா விடம்,

“உன்னையும் என்னையும் பார்த்து அப்புடி கேட்டா தான் தப்பு.. அவளை கேட்டா தப்பில்லை என்றாள் நிவேதா.. 

நிவியும் விஷ்ணுவும் தவழ ஆரம்பித்த காலத்திலிருந்தே தோழிகள்.. விஷ்ணு வசிக்கும் அதே காலனியில் பக்கத்து வீடு.. அதனால் அவளுக்கு விஷ்ணு ப்ரதாப் கல்யாண விஷயம் தெரியும் என்பதால் இப்புடி சொன்னாள்..

நிவி சொன்னதை புரியாமல் பார்த்த பூரணி “புரியலடி” என்றாள்..

“ஒரு நாள் புரியும் இப்ப அமைதியா இரு, இல்ல வண்டி நம்ம பக்கம் திரும்பிட போகுது” என்று ப்ரதாப்பை கண்ணால் காட்டி சொல்ல பூரணியும் அமைதியானாள்..

“இன்னோரு தரம் இப்புடி இர்ரெஸ்பான்சிபிளா நடந்துக்கிட்டா அவ்ளோ தான்” என்று தன் அர்ச்சனையை முடிந்து கொண்ட ப்ரதாப் விஷ்ணுவை அமர சொல்ல பெருமூச்சு ஒன்றை விட்டுட்டு அமர்ந்தாள்..

 அவனும் மீட்டிங்கை தொடங்கி ஆபிஸ் விஷயங்களை பேச ஆரம்பித்தான்.. அவர்களிடம் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்தவன் நான் சொன்ன எல்லா விஷயமும் உங்களுக்கு நல்லா புரிஞ்சுதா, எனி டவுட்ஸ் என்று கேட்க.. அனைவரும் புரிந்தது எனும் விதமாக தலை அசைக்க.. “மீட்டிங் ஓவர் கேரி யான்” என்று சொல்லி விட்டு தன் இருக்கையிலிருந்து எழுந்தவன் விஷ்ணுவை அழுத்தமாக பார்த்து கொண்டே வெளியேறினான்..

“எதுக்கு இப்புடி பார்த்துட்டு போறார்.. ஒரு வேளை பார்த்தி பவித்ரா விஷயம் தெரிஞ்சு இருக்குமோ, இல்லை தெரிஞ்சு இருந்தா ரியாக்ஷன் இன்னும் ஹெவியா இருந்து இருக்கும்.. இப்ப வரை தெரியலை போல, லேட்டா வந்ததுக்கு தான் இந்த பார்வை”என்று தனக்குள் சொல்லி கொண்டாள்..

“ப்ரியா இப்புடி மீட்டிங் ஹால்லே உட்கார்ந்து நேரத்தை கடத்தமா வேலையை பாருங்க… அதுக்கும் சேர்த்து சார்க்கிட்ட திட்டு வாங்காமா” என்று நக்கல் தொனியில் சொல்லி விட்டு சென்றார் சீனியர் ஆர்க்கிடெக் ஆனந்த்.. 

அவருக்கு விஷ்ணுவை பிடிக்காது.. விஷ்ணு மட்டுமல்ல, அந்த ஆர்க்கிடெக் டீமில் யாரையும் பிடிக்காது.. அவர் தான் அவர்களுக்கு வேலையை கத்து கொடுத்தது.. ஆனால் அவர்கள் இன்று அவரையே மிஞ்சும் அளவுக்கு வேலையை நேர்த்தியாக செய்து பெயர் வாங்குகின்றனர் என்ற சின்ன பொறாமை.. 

“கொஞ்சம் சீக்கிரம் வந்து இருக்கலாம்ல ப்ரியா ஏன் இப்புடி சார் கிட்ட திட்டு வாங்குற, இந்த ஆளு எல்லாம் நக்கல் பண்ணிட்டு போறான் பாரு.. இப்புடி நீ திட்டு வாங்குறதது எனக்கு கஷ்டமா இருக்கு என்றான் அஸ்வின்..

இந்த டீமில் ஆனந்த் தான் சீனியர்.. விஷ்ணு, நிவேதா, பூரணி மற்றும் அஸ்வின் நால்வரும் ஜுனியர்..

“ஏன்டா திட்டு வாங்குன அவளே கவலைப்படல நீ ஏன் ஓவரா சீன் போடுற” என கேட்டாள் நிவேதா..

“சீன் எல்லாம் ஒன்னும் இல்லை உண்மையா தான்டி சொல்றேன்” என்ற அஸ்வின்.. “உன்னை சார் திட்டும் போது எனக்கு எவ்ளோ கோவம் வந்துச்சு தெரியுமா ப்ரியா” என வருத்தப்பட,

“அய்யோ உண்மை என்னன்னு தெரியுமா இவன் வேற ஓவரா கடலை வறுக்குறானே”  எங்க போய் முடிய போகுதோ என  நினைத்து கொண்டாள் நிவி..

மேலும் ஏதோ அஸ்வின் சொல்ல வர “மீதியை லன்ச் டைம் பேசிக்கலாம் கைஸ், இப்ப போய் வேலையை பார்க்கலாம், இல்ல இந்த சொட்டை மண்டை ஆனந்த் அங்கிள் ஓவரா பேசுவான் வாங்க”என்று பூரணி சொல்லி விட்டு வெளியேற அஸ்வினும் சென்று இருந்தான்..

விஷ்ணு எழுந்திருக்கமால் அப்புடியே இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.. காலையிலிருந்து கோர்ட் வீடு ஆபிஸ் என்று அலைந்ததில் சோர்ந்து போயிருந்தாள்..

எழுந்த  நிவி  விஷ்ணுவை அப்புடி பார்த்ததுமே  அவள் அருகே அமர்ந்தாள்.. அவளுக்கு தான் பார்த்தி பவித்ரா விஷ்ணு விஷயம் அனைத்தும் தெரியுமே, போன இடத்தில் ஏதோ பிரச்சினை என்பதும் புரிந்தது..

“மச்சி பார்த்தி அண்ணா விஷயம் என்னாச்சு?” என்று கேட்டாள்..

“கதம் கதம் எல்லாமே முடிஞ்சு போயிருச்சு” என்றாள் விஷ்ணு..

“என்னடி சொல்ற” அதிர்ந்த நிவி, “நான் கூட கடைசியில்ல மனசு மாறிடுவாங்கன்னு நினைச்சேன்” என்றாள் நிவி..

“நானும் அப்புடி தான் நினைச்சேன்.. நம்பிக்கையா கோர்ட்டுக்கு போனேன்.. அது எல்லாம் படத்தில்ல தான் வரும் போல கடைசி நிமிஷத்தில்ல டைவர்ஸ் வேண்டாம் சொல்லி கட்டி பிடிக்கிறது.. நிஜத்தில் அப்புடி எல்லாம் ஏதுமில்லை.. விட்டா இரண்டும் ஒன்னுக்கு ஒன்னு கட்டி பிடிச்சு சண்டை போட்டு ரோட்டில் உருளுங்க போல” என்றவள் அனைத்தையும் நிவியிடம் கூறி முடித்தாள்..

அனைத்தையும் கேட்ட நிவிக்கு  இதுக்கு தான் அவ்ளோ அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா என்று தான் தோன்றியது.. சுயநலவாதிங்க அவங்களும் சந்தோஷமா இல்லை.. கூட பிறந்தவர்களின் நிம்மதியையும் கெடுத்து விட்டார்களே என்று பார்த்திபன் பவித்ரா இருவர் மீதும் கோவம் எழுந்தது.. 

விஷ்ணுவின் தோளை தட்டி கொடுத்த நிவி,”விடுடா அதை நினைச்சு கவலைப்படாத அவங்க வாழ்க்கையை அவங்க முடிவு பண்ணிட்டாங்க.. அடுத்து நீ என்ன பண்ண போற” என்று சீரியஸாக கேட்டாள்..

“கேன்டீன் போய் சுடசுட ஒரு காஃபி குடிக்க போறேன்” என்று சிரித்தபடி சொன்னாள் விஷ்ணு..

அவளை முறைத்த நிவி, “நான் உன் லைஃப்பை பத்தி கேட்கிறேன்” என்றதும், உஃப் என்று இதழ் குவித்து ஊதிய விஷ்ணு அடுத்து “என்ன டைவர்ஸ் தான்” என்றாள்..

“லூசு மாதிரி பேசாத ப்ரியா, பார்த்தி அண்ணாவுக்கும் பவித்ராவுக்கும் இடையில்ல ஏகப்பட்ட இஸ்யூ சண்டை அதனால்ல அவங்க டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க.. ஆனா உனக்கும் சார்க்கும் நடுவுல்ல அப்புடி ஏதும் இல்லையே”..

“ஆமா எங்களுக்கு நடுவுல்ல எதுவுமே இல்லை.. அப்புடி ஏதாவது எங்களுக்குள்ள இருந்திருந்தா நான் ஏன் எங்க வீட்டுல இருக்க போறேன்” என்ற விஷ்ணு,

 மேலும் “லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட மெயின் ஜோடியே டைவர்ஸ் பண்ணி பிரிச்சிட்டாங்க.. நாங்க வெறும் சப்போர்டிங் ஜோடி டி அவங்க கல்யாணம் நடக்கனும்ங்கிறதுக்காக பண்ணிக்கிட்டவங்க.. அப்புடி இருக்கும் போது இனி என்ன இருக்கு எப்ப வேணாலும் விவகாரத்து பத்திரம் என்னை நோக்கி வரலாம்” என்றாள் விரக்தியாக

“நீயா எதுவும் கற்பனை பண்ணி பேசாத ப்ரியா”..

“கற்பனை எல்லாம் இல்ல நடக்க போறதை தான் சொல்றேன்”..

“ஆமா நீ பெரிய ஜோசியக்காரி பின்னாடி என்ன நடக்க போகுதுன்னு முன்னாடியே சொல்றதுக்கு, சார் இந்த ஏழு மாசத்தில் உன்கிட்ட கேட்காத டைவர்ஸையா இனி கேட்க போறாங்க”..

“அப்ப பார்த்தி பவித்ரா அண்ணிக்குள்ள சண்டை மட்டும் தான் இருந்துச்சு.. எப்ப வேணா அவங்க சண்டை சமாதானம் ஆகலாம்ன்னு நினைச்சு இருக்கலாம்.. இப்ப அது தான் இல்லைன்னு ஆகிட்டே”, 

இன்னும் அவங்க டைவர்ஸ் விஷயம் அவர்க்கு தெரியலை போல, தெரிஞ்ச அப்புறம் கேட்டலாம் கேட்கலாம்” என்ற விரக்தியாக பேசிய விஷ்ணுக்கு நிவி ஏதோ பதில் கூற வரும் முன்,

“என்னடி இரண்டு பேரும் இங்கேயே உட்கார்ந்துட்டீங்க.. அந்த ஆனந்த் அங்கிள் எதையாவது சொல்ல போறான்.. சீக்கிரம் வாங்க வேலையை ஸ்டார்ட் பண்ணலாம்” என்று பூரணி மீண்டும் வந்து சொல்லவும், விஷ்ணு நிவி இருவரும் வெளியே சென்று தங்கள் இருக்கையில் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தனர்..

விஷ்ணுவால் வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை.. காலையிலிருந்து கோர்ட் வீடு ஆபிஸ் என்று அலைந்து சோர்ந்து தான் போயிருந்தாள்.. உடல் அசதியை விட நடந்த விஷயங்களால் மனது தான் அதிகம் சோர்ந்து போயிருந்தது.. ஏதேதோ யோசித்து யோசித்து தலை தான் வலித்தது.. நெற்றியை இருபக்கமும் பிடித்தபடி கண் மூடி இருக்கையில் சாய்ந்தாள்..

கேன்டீன் போய் ஒரு காஃபி குடிச்சிட்டு டேப்லேட் போட்டா தான் இந்த தலைவலி சரியாகும் என்று இருக்கையிலிருந்து எழ,

“ப்ரியா மேடம் உங்களை எம்.டி சார் ரூம்க்கு வர சொன்னாங்க”, என்று ஆபிஸ் பாய் வந்து சொல்லி விட்டு போனான்.

“எதுக்கு வர சொல்லி இருப்பாங்க.. பார்த்திக்கு டைவர்ஸ் கிடைச்ச விஷயம் தெரிஞ்சு இருக்குமோ, அதான் கூப்பிடுராரோ, சத்தம் போடுவாரோ திட்டுவாரா இல்லை டைவர்ஸ் கேட்பாரோ, அப்புடி கேட்டா என்ன பண்றது” என்று  யோசித்தபடி ப்ரதாப் அறை நோக்கி நடந்தவளுக்கு இன்னும் இன்னும் தலை பயங்கரமாக வலித்தது…

அறைக்குள் வந்தவளை நோக்கி ப்ரதாப் ஒரு பத்திரத்தை நீட்ட விஷ்ணுவிற்கு இதயம்  ரயில் வண்டியை விட அதிவேகமாக துடித்தது..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!