Mr and Mrs விஷ்ணு 81

4.7
(37)

பாகம் 81

 

தாலி கட்டி முடிய அடுத்தடுத்து சடங்குகள் நடந்தன.. அனைத்தையும் வம்சி நிவேதா இருவரும் செய்தாலும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டும் பார்வையால் எரித்து கொண்டும் தான் செய்தார்கள்… 

இருவருக்குமே ஒருவர் மீது இன்னொருவருக்கு அந்த வானளவு கோவம்… 

இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய மேடை வரை சென்று கூட எந்த வித. எதிர்வினையும் காட்டாது அமைதியாக தானே இருந்தாள், 

இது கூட தன் அண்ணன் ஏதோ செய்ததால் தான்.. இல்லை என்றால் அவன் இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்டி இருக்க வேண்டிய நிலை வந்து இருக்கும்.. அப்புடி என்ன அவ்வளவு நெஞ்சழுத்தம் இப்போது கூட அவளாக வரவில்லையே என வம்சிக்கு கோவம், 

எவ்வளவு தைரியம் இருந்தா இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய மேடை வரை வந்து இருப்பான்..இன்று பக்கதில் அவள் அமராது அந்த சைத்தன்யா அமர்ந்து இருந்தால், நினைக்கவே பயமாக இருந்தது.. அவ்வளவு தானா இவன் காதல் என்ற கோவம் எழ முறைத்து கொண்டு இருந்தாள்… 

இன்று நடந்தது அனைத்துமே அவளுக்கு ஆச்சர்யம் தான்..  கூடவே எப்புடி என்ற கேள்வியும் எழுந்தது..‌ 

வம்சி என்று விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி திருமண பதிவு சான்றிதழை கிழித்தானோ அன்றிலிருந்து  அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை‌‌… 

அவன் யாரை கல்யாணம் பண்ணுனா எனக்கு என்ன என வெளியே காட்டி கொண்டாலும் உள்ளே மனம் எங்கும் ரணம் தான்.. 

‘இது எல்லாம் நடிப்புடீ.. இந்த கல்யாணம் சும்மா லொலொய்க்கு, உன்னை விட்டு நான் எப்புடி போவேன்டி வேதாளம்’ என்றபடி தன் முன் வந்து விட மாட்டானா? மனம் ஏங்கியது… 

அவன் மீதான ஏக்கம் தவிப்பு காதல் அனைத்தையும் வெளி வர வாராது தடுத்தது தந்தையின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட பழைய நினைவுகள்,

வம்சியை ஏற்கவும் முடியாது.. விலக்கவும் முடியாது தவித்து கொணடு இருந்தாள்… 

ஒரு கட்டத்திற்கு மேல் தான் வம்சிக்கு சரி இல்லை.‌.. இதுவரை அவரை நிறைய கஷ்டப்படுத்திட்டேன்.. என்னால் அவருக்கு எந்த சந்தோஷமும் இல்லை…அந்த பொண்ணை கல்யாணம் பண்ணியாவது  சந்தோஷமா இருக்கட்டும் என்ற  மனநிலைக்கு வந்து விட்டாள்.. 

திருமண நாளும் வந்தது.. அந்த பக்கமே போக கூடாது என நினைத்து கொண்டு இருந்தவளை ‘நான் ஒருத்தி மட்டும் எப்புடி போறது, குடும்பத்தோட வர சொல்லி இருக்காங்க நீயும் வாடீ என வம்படிமாய் இழுத்து வந்து இருந்தார் காவேரி.. 

மேடையில் வம்சியை மணகோலத்தில் பார்க்கும் போது இதயத்தில் ரணமாய் வலித்தது… அழுகையாக வந்தது.. அதோடு எவ்வளவு காதல் வசனம் என்கிட்ட  பேசிட்டு இன்னோரு பொண்ணை கல்யாணம் பண்ணா இவ்வளவு தோரணையா வந்து உட்கார்ந்து இருக்கான் கோவம் கோவமாக வந்தது.. 

அந்த நேரம் அவனை பேசியது எல்லாம் அவளுக்கு மறந்து போனது..

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இன்னோருத்தியை கல்யாணம் பண்ண இவ்வளவு தூரம் வந்து இருப்ப சட்டையை பிடிச்சு உலுக்கி சப் சப் பென்று அறைய வேண்டும் என்ற வேகம் எழ எழுந்து மேடையை நோக்கி சென்றவேளை ஒரு கை தரதரவென இழுத்து சென்றது… 

யார் என்று பார்க்க விஷ்ணு தான்.. 

“ப்ரியா என்னடி, என் கையை விடு, எங்க கூட்டிட்டு போற “என நிவி எவ்வளவு கேட்டும் விஷ்ணு  எதுவும் சொல்லாது நிவி கையை பிடித்து ஒரு அறைக்குள் இழுத்து வந்து நாற்காலியில் அமர வைக்க,

அங்கிருந்த அழகு நிலைய பெண்களில் ஒருவர் நிவி பின்னலை கலைக்க, இன்னொரு பெண்ணோ முகத்தில் அவள் ஏற்கென போட்டு இருந்த க்ரீமை நீக்கி விட்டு மேக்கப் போட ஆரம்பித்தனர்.. 

“ப்ரியா என்னடி இது? இங்க என்ன நடக்குது”  என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லை… 

தங்கள் வேலை முடிந்ததும் அந்த அழகு கலை நிபுணர்கள் அங்கிருந்து நகர தன்னை கண்ணாடியில் பார்த்த நிவேதா தன்னை மணப்பெண் போல் அலங்கரித்ததில் அதிர்ந்து போனாள்… 

இப்போது தான் ஒன்றை கவனித்தாள் நிவேதா…  ‘நிவி வம்சி கல்யாணத்திற்கு உனக்கும் ஒரு புடவை எடுத்து இருக்கோம்.. நீ இதை தான் உடுத்திட்டு வரனும்.. ப்ளவுஸ் எல்லாம் ஸ்டீச் பண்ணி தான் இருக்கு’ என இரண்டு நாட்கள் முன்பு விஷ்ணு ஒரு பாக்சை கொடுத்து விட்டு போனாள்.. இன்று காலை கிளம்பும் போது காவேரி அந்த புடவையை கொடுத்து ரெடியாகி வர சொல்ல நிவியும் அதை தான் உடுத்தி வந்து இருந்தாள்.. 

அப்போது இருந்த மனநிலையில் இந்த  புடவையை சரியாக கவனிக்கவில்லை.‌.. இப்போது பார்த்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி பேரிச்சம் பழ நிறத்தை ஒத்த மெரூன் கலர் காஞ்சிபுரம் பட்டுப்புடவை… புடவையின் ஜரிகை எல்லாம் அவ்வளவு மின்னியது.‌ பார்க்கும் போதே தெரிந்தது விலை உயர்ந்த பட்டுப்புடவை… இதை விட ஹைலைட் மடிப்பு எடுத்து குத்தியிருந்த புடவையின்  முந்தானையில் வம்சி முகம் நெய்து இருந்தது தான்..  

என்ன இது என அதிர்ச்சியாக நிவேதா பார்த்து கொண்டு நிற்க,

கூடுதலாக அவள் கழுத்தில் விஷ்ணு மாலையிட்டாள்.. 

“ப்ரியா என்னடி இது?”

என்ன பண்ற? 

“பொண்ணு ஓடி போயிருச்சு வேற வழியில்லை அதான்” விஷ்ணு சொல்ல இவ்வளவு நேரம் வம்சி தான் கடைசி நேரத்தில் தங்களை பற்றி அனைவரிடமும்  சொல்லி,  அலறும் தான் இந்த அலங்காரமோ என உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தவளுக்கு,

அவ ஓடி போய்ட்டா அதனால் ஒப்புக்கு சப்பா நீ என்ற விஷ்ணு பதிலில் கோவம் வர,

என்னால் முடியாது என கோபமாய் கத்தியவள்  கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார் காவேரி… 

மா… என நிவேதா கன்னத்தில் கை வைத்து அதிர,

ஒரு வார்த்தை நீ  பேச கூடாது? வாயை மூடிட்டு கூட போகனும்  என்றார்..

“அத்தை இன்னோரு அடி என் சார்பா  விடுங்க சரியான அமுக்குனி”  என விஷ்ணு திட்ட, 

அங்கு தான் விஷ்ணுவால் ஓடி போனாள் என சொல்லப்பட்ட சைத்தன்யாவும் நின்று இரூந்தாள்.. 

‘அப்ப இங்க என்ன நடக்குது வம்சி தான் கடைசி நேரத்தில் சொல்லி இருப்பானோ’ என்ற யோசனையோடு  வந்து அமர்ந்தவளுக்கு அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவன் சொல்லவில்லை என்பதை சொல்லியது.. அதில் மனதில் சுணக்கம் ஏற்பட்டாலும்,

அவன் கையால் தாலி வாங்கிய போது இவவ்ளவு நாள் தன்னை விட்டு போய் விடுவானோ என அலைபுற்ற மனது நிம்மதி அடைந்தது… வம்சியை விட்டு இருக்க முடியாது..  எதிர்காலத்தை நினைத்து இப்போது இருக்கும் சந்தோஷத்தை நிம்மதியை இழக்க கூடாது என்பதை இந்த இடைப்பட்ட காலத்தில் புரிந்து கொண்டாள்..வம்சி அப்புடி தன்னை விட்டு போய் விட மாட்டான் என்ற நம்பிக்கையும் இப்போது வந்து இருந்தது.. அதனால் மனமார இந்த திருமணத்தை எந்தவித குழப்பமும் இல்லாமல் ஏற்று கொண்டாள்.. 

ஆனாலும் இது எல்லாம் எப்புடி என்ற கேள்வி அவள் மண்டயை குடைந்தது.. வம்சிக்கு அதே நிலை தான்.. 

ஏனெனில் அவர்கள் மூவரை தவிர மற்ற யார் முகத்திலும் அதிர்ச்சி இல்லை.‌.‌ 

பாட்டி, அவனின் பெத்தம்மா தேவகி, ஏன் அவன் அம்மா

விசாலாட்சி கூட இயல்பாக இருக்க ஆச்சர்யமாக இருந்தது வம்சிக்கு.. 

அனைவருக்கும் இது தான் நடக்க போகுது என முன்பே தெரிந்திருக்குமோ,

ஆம் என்று தான் சொன்னது விஷ்ணு, பவி, பார்த்திபன், லீலா அவர்களின் கேலி சிரிப்பு..‌ 

இவர்கள் பற்றாதென கூட சைத்தன்யா வேறு, அவளும் அவள் குடும்பத்தினர் கூட சந்தோஷமாக சிரித்தப்படி தான் நின்று இருந்தனர்… 

இளையவர்கள் அனைவருக்கும் பீறிட்டு கொண்டு கேலி சிரிப்பு வர பார்க்க ப்ரதாப் பார்வைக்கு பயந்து உதட்டை கடித்து அடக்கியபடி நிற்கின்றனர் என்பது புரிந்தது… 

தனிமையில் சிக்குகங்டா இருக்கு உங்களுக்கு என சொல்வது போல் இருந்தது அவர்கள் பார்வை.. 

“உனக்கு முன்னவே தெரியுமாடி” அருகே நின்று இருந்த லீலாவிடம் ராம் கேட்க,

‘ஆம்’ என கண் சிமிட்டி சிரித்தாள்.. “வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு” என ராம் முறைக்க இன்னும் சிரித்தாள் லீலா.. 

“காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போதே காதல், கல்யாணம், அதுவும் வீட்டுக்கு தெரியாம திருட்டு கல்யாணம் எவ்வளவு தைரியம் இருந்திருந்தா இப்புடி பண்ணி இருப்ப ப்ரதாப் தான் கேட்டது.. 

‘அண்ணன்ய்யா உங்களுக்கு எப்புடி தெரியும்’  என கேட்டு தன் முன்னே வந்து நின்ற வம்சியை பார்த்து அவன் அருகே நிவேதாவும்,

“எனக்கு எப்புடி தெரியாமா போகும்ன்னு நினைச்ச வம்சி, நீ ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணுன அன்னைக்கே விஷயம் என் காதுக்கு வந்துருச்சு”, 

“பர்ஸ்ட் இது எனக்கு பெரிய ஷாக்.. ரொம்ப ரொம்ப கோவம் வந்துச்சு, ஆனா ஏன் கேட்கலைன்னா, உன் மேல்ல நான் வச்சு இருந்த நம்பிக்கை, 

நீ காதலிச்சாலும் உன் எதிர்காலத்தை வீணாக்கிக்க மாட்ட, ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நீ இப்புடி செஞ்சு இருப்ப, நீயா வந்து சொல்வேன்னு, உன் மேல் நான் நம்பிக்கை வச்சு இருந்தேன்”… 

“என் அண்ணாகிட்ட சொன்னா அவர் என் பிர்ச்சினையை சரி பண்ணுவார், என் ஆசையை நிறைவேற்றுவார்ன்னு என் மேல் நீ வைக்காத நம்பிக்கையை.. நான் உன் மேல்ல வச்சு இருந்தேன்..  

ஆனா கடைசி வரை நீ எதையும் என்கிட்ட  சொல்லலை.. அதில் எனக்கு நிறையவே வருத்தம் இருக்கு வம்சி” என ஆதங்கப்பட்ட ப்ரதாப்

“நீ சொல்லைன்னு  அப்புடியே விட முடியுமா? பவிக்காக மட்டும் இல்லை உனக்காகவும் தான் உன்னை ஹைதரபாத்லிருந்து வர சொன்னது…   நீ உன் பிரச்சினையை சரி பண்ணிக்கவன்னு பார்த்தா இருக்க இருக்க சிக்கலா மாத்திக்கிட்ட..  இதுக்கு மேல்ல வேடிக்கை பார்த்தா சரி வராதுன்னு நான் இறங்கிட்டேன்‌.  ஒரு அண்ணனா உனக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு தர வேண்டியது என் கடமை…அதை நான் செஞ்சேன் என ப்ரதாப் சொல்ல,

“அண்ணன்ய்யா சரரி” என்றான் வம்சி.. 

“அது எல்லாம் வேண்டாம்” என அவன் கன்னத்தை தட்டிய ப்ரதாப்

அவன் அருகே நின்று இருந்த நிவியை பார்த்து “உன்னை புத்திசாலி பொண்ணுன்னு முன்ன நினைச்சேன்.. ஆனா நீ என்னடான்னா இப்புடி, அது சரி என் பொண்டாட்டி கூட சுத்துற உன்னை அப்புடி நினைச்சதே தப்பு தான்.. 

இனியாவது சண்டை போடாம இருங்க” என்ற ப்ரதாப் அங்கிருந்து செல்ல, 

கடைசி வரை என்ன நடந்துன்னு சொல்லமாலே போறாரே வம்சி நிவேதா இருவருக்கும் மண்டை காய,

அதை நாங்க சொல்றோம் என வந்து நின்றனர்.. விஷ்ணு பவித்ரா லீலா மூவரும்.. 

ப்ரதாப்புக்கு வம்சி நிவேதா காதல் விஷயம் அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சினை என்பது தெரிந்தாலும் அவர்கள் வாழ்க்கை அவர்களாகவே சரி செய்து கொள்ளட்டும் என அமைதி காத்தான்…

ஆனால் என்று சைத்தன்யாவை திருமணம் செய்ய வம்சி சரி என்று சொன்னானோ அன்றே தம்பி வாழ்க்கையை சரி செய்ய பிரச்சினையை தன் கையில் எடுத்து கொண்டான் ப்ரதாப்.. 

அவனுக்கு தெரிந்தது கோவத்தில் தான் வம்சி சம்மதம் சொல்லி இருப்பான் என்று, அதனால் சைத்தன்யாவை அழைத்து பேச, தன்னிடம் வம்சி சொல்லிய திட்டத்தை ப்ரதாப்பிடம் சொல்லி விட்டாள்‌‌.. 

கேட்டவனோ தலையில் அடித்து கொண்டான்… ‘என் பொண்டாட்டியை விட பெரிய லூசா இருக்கானே என, என்ன ஒரு பைத்தியக்கார தனமான திட்டம்’ என கோவம் வந்தது.. 

அதனால் நேரடியாக சைத்தன்யா பெற்றோரை சந்தித்து விஷயத்தை சொல்ல, அவர்களும் புரிந்து கொண்டார்கள்.‌.. அதோடு ப்ரதாப் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.. அவன் மீதே இருக்கும் நல்ல அப்பிராயமே அவர்களை அவ்வாறு ஒத்து கொள்ள செய்தது… 

அதன் பிறகு நிவேதா அம்மா காவேரி ராம் அப்பா அம்மாவை சந்தித்து நடந்த அனைத்தையும் அவர்கள் மனநிலைக்கு தகுந்த போல சொல்லியவன் அவர்கள் திருமணத்திற்கு  காவேரியிடம் சம்மதம் கேட்க, 

முதலில் காவேரிக்கு நிவேதாவா தன் மகளா இப்புடி எல்லாம் தனக்கு தெரியாமல் செய்தால், காதல் என்றால் கூட பரவாயில்லை திருமணமே செய்து விட்டாளே, பயங்கர அதிர்ச்சி சாவித்ரிக்கும் அதே அதிர்ச்சி என்றாலும் ப்ரதாப் சம்மதம் கேட்கும் போது, விசாலாட்சியை நினைத்து அவர்கள் தயங்க, 

அதை புரிந்த ப்ரதாப் அவர்களின் தயக்கம் பயத்தையும் போக்கி சம்மதத்தை வாங்கியவன்…

அடுத்து தன் வீட்டில் சொல்ல அங்கும் அனைவருக்கும் அதிர்ச்சி தான்.. ஆனாலும் திருமணமே  செய்து விட்டானே.. அவன் விருப்பம் நிவேதா எனும் போது யாருக்கும் மறுப்பு சொல்ல தோன்றவில்லை.. 

ஆனால் விசாலாட்சி அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்வாரா, தாம் தூம் என குதித்து ‘உயிரே போனாலும் ஒத்துக்க மாட்டேன்.. அதான் அவளே என் பையனை வேண்டாம் சொல்றாளே தொல்லை விட்டுதுன்னு விட வேணடியது தானே’ என குதிக்க,

“சித்தி அவனை பாருங்க அவன் சிரிச்சிட்டு இருந்தாலும் இந்த கல்யாண விஷயம் ஆரம்பிச்ச லிருந்து அவன் முகம் எவ்வளோ டல்லா இருக்குன்னு, அவன் ரொம்ப கஷ்டப்படுறான்.. அவன் சந்தோஷம் நிவி தான் புரிஞ்சிக்கோங்க”என பவித்ராவும்,

“ஒரு பையன் வச்சு இருக்க, அவன் ஆசை சந்தோஷத்தை விட அப்புடி என்ன பணம் புகழ் கௌவரத்து மேல்ல ஆசை உனக்கு” என பாட்டியும்,

“நீ எவ்வளோ தடுக்க நினைச்சாலும் வம்சி ஆசைப்பட்ட வாழ்க்கையை தான் ப்ரதாப் அவனுக்கு அமைச்சு தருவான் அதனால் நீ சம்மதிக்கலைன்னாலும் அது தான் நடக்கும்.. எதுக்கு உனக்கு இந்த வீராப்பு கௌரவம் சரின்னு சொல்லு என தேவகியும் சொல்ல,

ப்ரதாப் நினைத்தது தான் நடக்கும் என்பதாலும், இப்பவே உயிர்ப்பு இல்லாத மகனின் முகத்தை பார்க்க தாயாக சகிக்க முடியாததாலும் விசாலாட்சி ‘எனக்கு விருப்பம் இல்லை என்னவோ பண்ணுங்க’ என ஒருவழியாக சம்மதம் சொல்ல,

வம்சி நிவேதா இருவருக்குமான திருமண ஏற்பாடு நடந்தது..  அவர்களுக்கோ அவர்களுக்கு துணை போன ராம்க்கோ கடைசி வரை தெரிய கூடாது என்ற நிபந்தனையுடன்,

அவர்கள் மூவரும் இப்ப வரை எதையும் சொல்லாமல் அமைதியாக இருக்கும் கோவத்தில் எது வரை போகிறார்கள் பார்க்கலாம் என ப்ரதாப் சொல்ல,

அனைவருக்கும் அதே கோவம் இருப்பதால்  சரி என ஒப்புக்கொண்டார்கள்.. 

‘மகளே உன் புருஷன் கிட்ட எதுவும் சொன்ன அவ்ளோ தான்’ என லீலாவை விஷ்ணு பவித்ரா இருவரும் மிரட்ட,

‘ச்சே ச்சே சொல்ல மாட்டேன்.. எனக்கு இதை எல்லாம் பார்க்க ஜாலியா இருக்கு’ என இந்த கள்ளதனத்தில் இணைந்து கொண்டாள்.. 

“கூடவே செவ்வாழை போல சுத்தின என்கிட்ட இருந்து எவ்ளோ பெரிய விஷயத்தை இந்த நிவி மறைச்சு இருக்கா பார்த்தீங்களா? இந்த வம்சி இனிமே பேபின்னு வரட்டும் இருக்கு, ஆமா ஏன்  என்கிட்ட மறைச்சாங்க?” தோழி மறைத்து விட்டாளே என்ற ஆதஙக்த்தில் விஷ்ணு ப்ரதாப்பிடம் புலம்ப,

“நீ சரியான ஓட்ட வாய்டி, உன்கிட்ட சொன்னா ஊருக்கே சொன்ன போல ஆகிடும் அதனால் மறைச்சு இருப்பாங்க” என ப்ரதாப் சிரிக்க அவ்ளோ முறைத்தாள்…‌

கல்யாண வேளை களை கட்டியது.. சம்மதப்பட்ட இருவருக்கும் தெரியாமல், பத்திரிக்கை கூட வம்சியிடம் கொடுத்ததை தவிர மற்ற அனைத்தும் வம்சி கிருஷ்ணா வெட்ஸ் நிவேதா என்று தான் அச்சிடப்பட்டு இருந்தது.. 

அவ்வளவு ஏன் இந்த கடற்கரை வில்லா முன்பு வம்சி கிருஷ்ணா வெட்ஸ் நிவேதா என்ற பெயர் அடித்த பேனரும், இவர்கள் இருவர் உருவ பேனர் கூட வைக்கப்பட்டு இருந்தது..  அவர்கள் இருந்த மனநிலையில் அதை கூட கவனிக்கவில்லை என நடந்ததை சொல்லி தொப்பி தொப்பி என மூவரும் கேலி செய்து சிரிக்க,

ஆ… இப்புடி மொக்கை வாங்கிட்டனே என வம்சி கண்ணை மூடி கொள்ள,

நிவியோ அவர்களை பார்த்து சிரித்து சமாளித்தாள்… 

விடுவார்களா விஷ்ணு பவி பார்த்தி லீலா சைத்தன்யா என அனைவரும் இரவு வரை கலாய்த்து தள்ளி விட்டனர்..‌  

“எல்லாம் உன்னால் தான்டி.. நான் கேட்டப்பவே சரின்னு சொல்லி இருந்தா, இது எல்லாம் நடந்து இருக்குமா.. அப்ப பெரிய இவ மாதிரி நான் ஏமாத்திருவேன் சொல்லி வேண்டாம் சொல்லிட்டு எந்த மூஞ்சியை வச்சிட்டு என் பக்கத்தில் உட்கார்ந்த” முதல் இரவு அறையில் நிவேதாவிடம் வம்சி கத்தினான்.. இத்தனை நாள் அவனை மனது அளவில் படுத்தி எடுத்து விட்டாளே என்ற கோவத்தில்,

“இந்த மூஞ்சியை வச்சிட்டு தான்.. இந்த மூஞ்சி வேணும்னு தானே அவ்ளோ அழுதீங்க.. அதான் போனா போகுதுன்னு  கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”…

“ஹே ஹே யாரு நானா அழுதது, நீ தான்டி மண்டபமே முழ்கி போற அளவுக்கு அழுதிட்டு இப்ப சீன பாரு, நான் உன்னை வேண்டாம் முடிவு பண்ணி எப்பவோ சைத்தன்யாவை கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்டேன்”.. 

“அப்ப அவளை கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது தானே,”

“என்ன பண்ண   இந்த அண்ணன்ய்யா தான் உன்னை என் பக்கத்தில் உட்கார வச்சிட்டாரே” இன்னைக்கு நீ இல்லாம சைத்தன்யா இருந்திருந்தாலும் நான் அவ கழுத்திலும்” சொல்ல வந்ததை முழுதாக முடிக்க விடாது,

” உன்னை உனக்கு  எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்ன இப்புடி பேசுவ” என்ற கோவத்தில் நிவேதா வம்சியை அடிக்க,

அடிக்க வந்த அவளின் கையை ஒரு கையில் அடக்கி அவளின் முதுகு பக்கம் கொண்டே வந்தவன் “உனக்கு எவ்வளவு தைரியம் இரூந்தா இன்னொருத்தியை கல்யாணம் பண்ண போற வரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு அமைதியா இருந்திருப்ப, என்னை இவ்வளவு நாள் டார்ச்சர் பண்ணுன உன்னை”,

“அடிப்பீங்களா” அவனின் கோவத்தை பார்த்து பயந்தபடி நிவேதா கேட்டாள்.. 

“ம்… ஆனா உன்னை போல் இல்ல வேற மாதிரி” என்றவன் குரலிலோ இவ்வளவு நேரம் இருந்த ஆக்ரோஷம் இல்லை குழைந்து வந்தது… கண்ணிலோ கள்ளத்தனம் குடி இருந்தது… 

“வேற மாதிரியா அது என்ன” என முதலில் புரியாது கண்ணை சுருக்கி யோசித்தவளுக்கு நொடியில் அர்த்தம் புரிந்தது.. அதோடு இரூவரின் மேனியும் உரசி கொண்டு இருக்கும் நெருக்கம் உணர்ந்தவள் மேனி சிலிர்க்க, அவனடமிருந்து விலக நெளிய,

அதிலோ இன்னும் அவளின் மேனி ஏடாகூடாமாக உரச நிவிக்கோ அய்யோ டா என்று இருந்தது, 

அதில் “உன் கோவத்தை நீ  என்னை அடிச்சு தீர்த்துட்டல இப்ப என் டேர்ன்” என அவளின் இதழை நோக்கி வம்சியின் பார்வை போக,

“வம்சி நோ வேண்டாம்” என்ற பொய் மறுப்பு உரைத்த இதழை வம்சி தன் வசமாக்கினான்.. இதழை மட்டுமல்ல சில நொடிகளில் நிவேதாவையும் தன் வசமாக்கினான்…

ஒருவருககொருவர் இவவ்ளவு நாள் விட்டு கொடுக்காது சண்டையிட்டவர்கள், இன்றோ கட்டிலில் ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து, ஒருவர் உணர்வுகளை இன்னொருவர் மதித்து ஒருவர் ஆசையை இன்னொருவர் நிறைவேற்றி அழகான இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தனர்… 

இத்தனை நாள் பிரிவு அதனால் உண்டான ஏக்கம் தவிப்பு ஒருவர் மேல் இன்னொரூவருக்கு இருந்த அளவுகடந்த காதல், அந்த காதலால் உண்டான தாபமென அனைத்தையும் சரிசமமாக காட்டி உச்சம் அடைந்தனர்… 

அனைத்தும் முடிந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டு இருந்தவள்  “ஐ லவ் யூ டி மா ப்ரியத்தமா” என வம்சி நெற்றியில் முத்தமிட, பதில் முத்தம்  இதழில் வழங்கியவளோ சாரி என்றாள்.. 

இத்தனை நாள் நடந்த அனைத்துக்கும் சேர்த்து, 

“இந்த சாரி எல்லாம் அக்சப்ட் பண்ணிக்க முடியாது.. உனக்கான தண்டனையில் நான் இரக்கம் காட்ட போறதே இல்லை” என்றவன் மீண்டும் அவளுள் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்தான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 37

No votes so far! Be the first to rate this post.

1 thought on “Mr and Mrs விஷ்ணு 81”

Leave a Reply to Deepti Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!