besttamilnovels

நாணலே நாணமேனடி – 15

அடுத்து வந்த ஓரிரு நாட்களும் வெகு சாதாரணமாகத் தான் கழிந்து போனது, புதுமணத் தம்பதியினருக்கு. முதல் நாளன்று இரவு நந்தன் சொன்னது போல், மறுநாளே சுவர் வார்ட்ரோபில் தன் உடைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்தவள் கூடவே, சற்று ஒழுங்கீனமாகக் காணப்பட்ட அவனது உடைகளையும் அழகாக மடித்து வைத்து, அவனிடமிருந்து மெச்சும் சிறு தலை அசைப்பைப் பெற்றுக் கொண்டிருந்தாள். வீடியோ காலில் பார்த்து வந்த மம்மியை இப்போதெல்லாம் இருபத்திநான்கு மணி நேரமும் தன் கண் முன்னே காண்பதில் குஷியோ […]

நாணலே நாணமேனடி – 15 Read More »

நாணலே நாணமேனடி – 14

திருமணம் நல்லபடியாக முடிந்து, சம்யுக்தா நந்தனின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள். வர முன்பு, கண்களில் கண்ணீர் சொரிய நின்றிருந்த தாயைக் கட்டியணைத்து ஆயிரம் பத்திரங்கள் கூறிவிட்டு வித்யாவிடம் கண்ணசைவில் விடை பெற்றுக் கொள்ள மறக்கவில்லை. வந்தவளை புகுந்த வீட்டு சாம்பிரதாயங்கள், சடங்கு முறைகள் என படுத்தி எடுத்தனர், வீட்டில் கூடியிருந்த யதுநந்தனின் நெருங்கிய சொந்தங்கள். யதுநந்தன் தன்னை சாதாரணமாகக் காட்டிக் கொள்ள பெரிதும் பாடுபட்டான். ஒவ்வொரு நிகழ்விலும் பல்லவியின் நினைவுகள் மேலெழுவதைத் தவிர்க்க முடியாமல் தவித்துப் போனவன்

நாணலே நாணமேனடி – 14 Read More »

நாணலே நாணமேனடி – 13

சம்யுக்தா தயங்கியது போல் எதுவும் நடக்கவில்லை.   காருண்யராஜ் ‘டிஸ்கவுண்ட்’ மூலமாக, வாங்கிய பட்டுச்சேலை மற்றும் பிறவற்றின் பெறுமானத்தைக் கொஞ்சமாகக் குறைத்து நந்தன் முன்னிலையில் அவளது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் தான் நடந்து கொண்டார். போகிற போக்கில், ‘நாளைக்கு ஸ்டோர் வந்ததும் என்னை வந்து பாரும்மா, சம்யுக்தா!’ என சாடைமாடையாகப் பேசி கண்காட்டி விட்டுச் செல்ல, ‘நான் உங்களை வந்து பார்க்கலேன்னாலும் வழமையான அர்ச்சனை என்னைத் தேடி வராதா சாரே?’ என்ற நினைப்பில் சிரிப்பு பீரிட்டது சம்யுக்தாவுக்கு.

நாணலே நாணமேனடி – 13 Read More »

நாணலே நாணாமேனடி – 12

தன்னுடைய டப்பா அலைபேசிக்கு சார்ஜேற்றி விட்டு அன்றிரவு வெகுநேரம் வரைக்கும் நந்தனின் அழைப்புக்காக காத்திருந்த சம்யுக்தா, இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டு உறங்கிப் போனாள். தன்னுடைய டப்பா அலைபேசிக்கு சார்ஜேற்றி விட்டு அன்றிரவு வெகுநேரம் வரைக்கும் நந்தனின் அழைப்புக்காக காத்திருந்த சம்யுக்தா, இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டு உறங்கிப் போனாள் மறுநாள் முழுவதும் வழமை போல் வீட்டுவேலை, துணிக்கடை எனக் கடந்து போனது அவளுக்கு. ‘உங்களை மீட் பண்ணனும்’ என அவள் காலையில் அனுப்பி வைத்த குறுஞ்செய்தியைப்

நாணலே நாணாமேனடி – 12 Read More »

நாணலே நாணமேனடி – 11

அன்று சம்யுக்தா துணிக்கடையை விட்டு வெளியேறிய போது, துணையாகப் போகிறவனைப் சந்தித்துப் பேசியதோடு சரி! அவனின் ‘சம்யு’ என்ற சுருக்க அழைப்பு தந்த பெயர் தெரியா இதத்துடன், அகம் தித்திக்க அவன் இறக்கிச் சென்ற இடத்திலே உறைந்து நின்றிருந்தவளை, அரவம் கேட்டு வெளியே வந்த சத்யா தட்டி எழுப்பி நிஜத்துக்கு அழைத்து வந்ததெல்லாம் வேறு கதை. அதற்கு மறுநாள் அவன் அழைப்பு விடுத்த போது, அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனிடமிருந்து வந்திருந்த அழைப்பை வெகு நேரம்

நாணலே நாணமேனடி – 11 Read More »

நாணலே நாணமேனடி – 09

நாட்கள் வழமை போல் கடந்து சென்றன, சம்யுக்தாவுக்கு. ஒன்றரை மாதங்களில் திருமணமென முடிவாகி விட்டதும் சிறு தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டவனிடமிருந்து ஒரு வாரம் கழிந்தும் எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அவளும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதாய் காட்டிக் கொண்டாலும், ‘வாழ்க்கை இப்படியே அசுவாரஷ்யமா கழிஞ்சி போய்டுமோ?’ என்ற பயம் அடிமனதில் எழாமல் இல்லை. ஆனால் அவன் தான் ஆரம்பத்திலே, மறுமணம் யுவனிக்காக மட்டுந்தான் என தெளிவாய் உரைத்து விட்டானே.. பிறகும் எதை நீ எதிர்பார்க்கிறாய் அவனிடம்

நாணலே நாணமேனடி – 09 Read More »

நாணலே நாணமேனடி – 08

அந்த உணவகத்தில் யதுநந்தனின் வருகைக்காக காத்திருந்தாள் சம்யுக்தா. ‘நேற்றிரவு அழைப்பு விடுத்து இவ்விடத்தில் தானே சந்திக்க வேண்டும் என்பதாய் சொன்னார்?’ என நினைத்தவள் கண்களை சுழற்றி, சுவற்றில் அழகுக்காக பொறிக்கப்பட்டிருந்த ரெஸ்டாரண்ட் பெயரைப் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொண்டாள். அன்று சாந்தனா தன் காதலனை அறிமுகப்படுத்தவென அழைத்து வந்த அதே உணவகம் தான்! அன்றிருந்த தயக்கமும், பிரமிப்பும் சற்றே அடங்கியிருந்தது அவளின் பார்வையில்.. “மிஸ்..” என்ற நயமான அழைப்புடன் அருகே வந்து நின்ற வெயிட்டரைப் பார்த்து சிறு

நாணலே நாணமேனடி – 08 Read More »

நாணலே நாணமேனடி – 07

கூடத்தில் அமர்ந்து, சத்யாவின் பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. அவள் ஒன்றும் அவ்வளவு பெரிய படிப்பாளி இல்லை தான் என்றாலும் கல்வியறிவு அறவே இல்லாதவள் அல்ல என்பதால், டியுஷன் செலவுகளுக்கு பணத்தைக் கரைக்க வழியின்றி தன்னால் இயன்ற அளவு தங்கைக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறாள். சொல்லிக் கொடுத்ததை கவனம் சிதறாமல் உள்வாங்கிக் கொண்ட சத்யா, சரியென்ற தலை அசைப்புடன் புத்தகத்தில் மூழ்கி விட, அவளைப் பார்த்தபடி சுவற்றில் முதுகு சாய்த்தவளின் மனம், காலைநேர யதுநந்தனின்

நாணலே நாணமேனடி – 07 Read More »

நாணலே நாணமேனடி – 06

உடலோடு மிகக் கச்சிதமாய் பொருந்தியிருந்த வெள்ளை நிற சட்டையின் மேலிரு பொத்தான்களை மூடி, கழுத்துப் பட்டியை நேர்த்தியாக கட்டிக் கொண்டு நிமிர்ந்தான், யதுநந்தன். மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரத்தை சரி செய்தபடி கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்து திருப்தி அடைந்தவன், நெற்றியில் தவழ்ந்த கேசத்தைக் கோதி விட்டபடி மெத்தையில் வந்தமர்ந்தான். கழுத்து வரையான நேரிய குட்டை முடி தலையணையில் பரவிக் கிடக்க, தந்தை என நினைத்து ஆளுயர டெடிபியரை கட்டி அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி. அவளது முகம்

நாணலே நாணமேனடி – 06 Read More »

நாணலே நாணமேனடி – 05

தந்தையின் நெஞ்சணையில் சாய்ந்து சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி. அவளின் தலை வருடி விட்டவாறே கட்டிலில் சாய்ந்து விட்டத்தை வெறித்திருந்தான் யதுநந்தன். கடலலை போல் மோதிச் சென்ற நினைவுகளில் எல்லாம், தெத்துப் பற்கள் தெரியும்படி அழகாக சிரித்துச் சென்றாள் பல்லவி. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன், ஆயிரமாயிரம் கனவுகளும் ஆசைகளும் போட்டி போட, பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தவளைத் தூக்கிக் கொண்டு இரவோடிரவாக மருத்துவமனைக்கு ஓடிய காட்சி மனக்கண் முன் தோன்றியதும் கண்கள் பனித்தன ஆடவனுக்கு. சிலமணித்

நாணலே நாணமேனடி – 05 Read More »

error: Content is protected !!