உயிர் போல காப்பேன்-26

5
(20)

அத்தியாயம்-26
“என்ன வேணும்”என்றாள் அவனை பார்த்து தாழ் போடாத தன் மடத்தனத்தை நொந்தவாறு நிற்க….
அவன் இவளை தான் தலை முதல் கால் வரை பார்த்துக்கொண்டு இருந்தான்.. “என்ன கேட்டாலும் கிடைக்குமா..” என்றான் அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு…
அவனது பார்வையை உணர்ந்து அவள் அவனை பார்த்து முறைக்க அதில் இன்னும் அவளை ரசித்து பார்த்தான். அவனை என்ன செய்தால் தகும் என்னும் அளவிற்கு கோவம் வந்தது.
“என்ன எங்கிட்ட வாங்குனது பத்தாதா..வெளில போறீங்களா.. இல்ல கத்தி எல்லாரையும் எழுப்பட்டுமா.. “என்றாள் கோவமாக…
“ம்ம். உன் புருஷன சொன்னதுக்கு நீ என்ன அடிச்ச….. இப்போ நா உன்ன தொடுறேன்.. எவன் கேட்க வரானு பாக்கலாமா.அது மட்டும் இல்ல….நீ என்ன அடிச்சதுக்கு உன்ன நா பழிவாங்க வேணா….”என்றான்
“வீணா. என் கிட்ட அடிவாங்கிட்டு போய்டாத….. அது உனக்கு தான் அசிங்கம்.. இங்க இருந்து போ…”என்றாள் அவனை மிரட்டியவாறு..
“ம்ம்ம் போக தானே போறேன். ஆனா இப்போ இல்ல காலையில எல்லாரும் பாக்குற மாறி உன் ரூம்ல இருந்து போறேன்.. அப்போ தானே உன்ன அசிங்கப்படுத்த முடியும்.”என்றான்
அதில் ஆஸ்வதி மனதில் லேசாக பயம் கவ்விக்கொண்டது.. பின் எவ்வளவு தான் தைரியமாக இருந்தாலும். கூட யாருமே இல்லாமல் தனிமையாக இருப்பவளிடம் எப்படி அதும் இந்த மாதிரி சூழலில் தைரியத்தை எதிர்ப்பார்க்க முடியும்
ஆஸ்வதி மனதில் முடிந்தவரை அவனை நம் அருகில் நெருங்க விட கூடாது அதற்கான அனைத்து சாத்தியங்களையும் அவள் மனதிலே கணக்குப்போட ஆரம்பித்தாள்…
அவன் இவளை பார்த்துக்கொண்டே அவளை நெருங்கி வந்துக்கொண்டு இருந்தான். அவள் அவனையும் சுற்றி அறையில் உள்ள பொருட்களையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு இருந்தாள் அவளது எண்ணம் புரிந்து அவளை பார்த்து ஒரு ஏளன புன்னகையை சிந்திவிட்டு அவளை நெருங்க அவள் முகத்தில் பயத்தை பார்க்க நினைத்தான். ஆனால் ஆஸ்வதியின் முகத்தில் கொஞ்சம் கூட பயத்தின் அறிகுறி தெரியவில்லை.
ஆஸ்வதியை ப்ரேம் கூர்மையாக பார்க்க… அவளோ. அவனை கேலியாக பார்த்தாள்.. அதை பார்த்து ப்ரேம் “என்ன இவ இந்த வீட்டுக்குள்ள வந்த அன்னிக்கி என்னமோ பயந்த மாறி வந்தா இப்போ என்னனா நம்மளையே கிண்டலா பாக்குறா..”என்று மனதில் நினைத்துக்கொண்டே அவள் அருகில் நெருங்க…..
ஆஸ்வதியோ அவனை எந்த வித பயமும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.. தன்னவனுக்கு எதாவது என்றால் தான் அவளுக்கு சர்வமும் ஆடும். ஆனால் அவளுக்கு எதாவது ஒன்று என்றால் அவளால் அதனை ஏற்க தைரியம் மலை அளவு கொட்டிக்கிடந்தது..
ப்ரேம் ஆஸ்வதிக்கு அருகில் வந்ததும் அந்த அறையில் எரிந்துக்கொண்டு இருந்த அனைத்து லைட்டுகளும் ஆஃப் ஆகி விட்டது அதில் ப்ரேம் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் ஆஸ்வதியை காண….
அந்த அறை முழுதும் இருளில் மூழ்கியதால் அவனால் தனக்கு எதிரில் ஆஸ்வதி நிற்கிறாளா இல்லையா என்பதை அவனால் உணர முடியவில்லை. ஆஸ்வதி இருந்த திசை நோக்கி நகர்ந்து அவளை கைகள் கொண்டு துளாவ….. ஆனால் அந்த அறையிலே அவள் இருப்பது போல் இல்லை.
எப்படி இருப்பாள்.. அவள் தான் அனைத்து லைட்டுகளும் அனைக்கப்பட்டவுடன் ஒருவனின் இறுகிய அணைப்பில் இருக்கிறாளே
ஆம். ஆஸ்வதி இப்போது இருப்பது ஒரு இரும்பு உருவத்தின் பிடியில் அதும் அந்த உருவத்தின் கல் போன்ற நெஞ்சில் ஏடாகூடமாக மோதி.. அதிவேகமாக மோதியதில் அந்த இரும்பு நெஞ்சம் அவளின் தலையில் வலியை உண்டு பண்ணியது
இது…இந்த அணைப்பு.. அன்று ஒரு நாள் நான் இதே போன்ற ஒரு இரவில் ஒரு உருவத்தின் பிடியில் இருந்தோமே.. அதே போன்ற இருகிய அணைப்பு.. அப்போது,.. இது.. என்று ஆஸ்வதியின் முகம் அந்த இருட்டிலும் யோசிக்க….. அவளை வெகு நேரம் யோசிக்கவிடாமல் அந்த உருவம் அவளை இருட்டில் இழுத்துக்கொண்டு போய் பால்கனியில் தள்ளி.. அதன் கதவை அடித்து சாத்தியது..
அதில் அதிர்ந்த ஆஸ்வதி.. கொஞ்ச நேரம் எதும் புரியாமல் நின்றவள் சுத்தி முத்தி பார்க்க….. அது பால்கனி என்பதை அறிந்துக்கொண்டு கதவினை தட்டினாள்…ஆனால் அந்த பக்கம் இருந்து எந்த ஒரு சத்தமும் இவளுக்கு கிடைக்கவில்லை..
“யாராவது இருக்கீங்களா.. கொஞ்சம் கதவ திறங்க…..”என்று ஆஸ்வதி கத்த….. ஆனால் அதனை கேட்கதான் அங்கு யாரும் இல்லை..
இங்கே இவள் இப்படி இருக்க…. அறையின் உள்ளே.ப்ரேம் கைகளால் சுவற்றை தடவிக்கொண்டே லைட்டை போட கை வைக்க… அதற்குள் அவன் தாறுமாறாக இழுக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டான் ஆனால் அவன் வாயில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை எப்படி வரும் அந்த உருவம் முதலில் அவனை அருகில் இழுத்து அவன் வாயில் ஒரு பெரிய துணியினை அடைத்து வைத்துவிட்டு தானே அவனை தூக்கி எறிந்தது..
“ஆ…அ..அ….”என்று அவன் கத்துவது கூட……ம்ம்ம்ம்ம்ம்..என்று தான் கேட்டது.கீழே விழுந்தவனை நோக்கி அந்த உருவம் சென்று அவனை கழுத்தை பிடித்து அலேக்காக தூக்கியது.. அதில் ப்ரேம் விழிகள் பயத்தில் விரிய அந்த இருட்டிலும் அது நன்றாக தெரிந்தது
“ம்ம்.ம்ம். வ்வ்வ்வ்.ட்ட்ட்ட்…”என்று ஏதேதோ புலம்ப….. அவனை அப்படியே ஒரே கையில் தலைக்கு மேல் தூக்கி இன்னும் சுவற்றை நோக்கி பலமாக வீசியது
அதில்.”ளுக்…”என்ற சத்தம் மட்டுமே கேட்க….. அந்த இருட்டிலும் அந்த உருவத்தின் கண்களின் சிவப்பு அரை மயக்கத்தில் கிடந்த ப்ரேமிற்கு பயத்தை உண்டு பண்ணியது..
இன்னும் முடியவில்லை.. என்பது போல்.. அந்த உருவம் அவன் பக்கம் போக…..ப்ரேம்…வேண்டாம் என்பது போல இருபக்கமும் தலை ஆட்டினான் ஆனால் அந்த கண்களில் தெரிந்த வெறி அவன் இத்துடன் விட போவதில்லை என்பதை உறுதியாக தெரிந்துக்கொண்டான் எனவே ப்ரேமும் தட்டு தடுமாறி எழுந்து அந்த உருவத்தை தாக்க வர….
அந்த உருவமோ.. அவனை அசால்ட்டாக தடுத்து மறுபக்கம் தள்ளிவிட்டது. அதில் அங்கு அழகுக்காக வைத்திருந்த மர டேபிளில் போய் விழ போக அதனை நொடியில் தெரிந்துக்கொண்ட அந்த உருவம் ப்ரேமின் பின் பக்கம் சட்டையை பிடித்து இழுத்து தன் காலடியில் போட்டது.
“ஆஆஆஆ……”என்று வேகமாக விழுந்தவன் நெற்றி கண்டிப்பாக உடைந்து போய் இருக்கும்.
இது போதும் என்று நினைத்ததோ என்னவோ அவனை அலேக்காக தூக்கிக்கொண்டு போய் ஆஸ்வதி அறையில் இருந்து வெளியில் மாடிப்படியில் இருந்து மெதுவாக உருட்டிவிட்டது அது யாரும் இந்த இரவில் எழ கூடாது என்பதற்காக தான் தவிர அவனை விட்டுவிட இல்லை
பின் ஆஸ்வதி அறைக்கு வந்த அந்த உருவம் ஆஸ்வதியை அடைத்து வைத்திருந்த பால்கனி கதவை திறக்க… ஆஸ்வதி அந்த உருவத்தை பார்க்காமல் நிலாவை வெறித்துக்கொண்டு இருந்தாள்..
அதை கண்ட அந்த உருவம் ஒரு பெரும்மூச்சினை வெளியிட்டுவிட்டு அங்கிருந்து போய்விட்டது.
இப்போது ஆஸ்வதி நிலாவை வெறிக்க பார்த்துவிட்டு திரும்ப தன் அறைக்குள் வந்தவள் யோசனையுடன் கட்டிலில் உட்கார…..
அவளது அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.. அங்கு ஆதி”ஏஞ்சல்.. எனக்கு தூக்கம் வர்ல”என்றவாரு உள்ளே வந்தான்..
உள்ளே வந்தவன் அங்கே அவன் அறை அலங்கோலமாக இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் கண்கள் கூர்மையாக பார்த்து பின் தன் பார்வையை மாற்றிக்கொண்டு ஆஸ்வதியை திரும்பி பார்த்தான் அங்கு ஆஸ்வதி ஆதியை பார்த்து ஒரு பெரும் மூச்சினை வெளியேற்றிவிட்டு அவனையே பார்க்க….
ஆதியோ அவள் பார்வையை தவிர்த்துவிட்டு..”ஏன் ஏஞ்சல் நம்ம ரூம் இப்டி இருக்கு என்னை விட்டுட்டு நீ மட்டும் விளையாடுனீயா.”என்றான் ஆஸ்வதியை பாவமாக பார்த்தவாறு.
அதில் ஆஸ்வதி ஆதியை குழம்பிய முகத்துடன் பார்க்க… ஆதி மனதில் புன்னகைத்துக்கொண்டான்.
“உங்களுக்கு தூக்கம் வர்லையா.”என்றாள் ஆதியை அழைத்து தன் அருகில் உட்காரவைத்துக்கொண்டு..
அதில் அவன் மேலும் கீழும் தலையை ஆட்டிக்கொண்டே ஆஸ்வதியை கூர்மையாக பார்க்க அவள் அவனை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டே இருக்க…. அதில் ஆதியின் முகம் லேசாக கனிந்து பின் இறுகியது.
பின் ஆஸ்வதி ஆதியிடம் இருந்து எழுந்து வேகமாக கதவை சாத்தி தாப்பாள் போட்டாள். போட்டதும் கட்டிலில் போய் உட்கார்ந்து இவ்வளவு நேரம் பிடித்து வைத்த மூச்சை வெளியிட்டாள் பின் திரும்பி ஆதியை பார்க்க அவன் அவளிடம் இருந்து எழுந்து தலையை குனிந்துக்கொண்டு நின்றிருந்தான்.. அவனை அப்படி பார்க்க ஒரு குழந்தை தப்பு செய்து தலையை குனிந்துக்கொண்டு நிற்பது போல இருந்தது..
“என்னாச்சி ஆதி ஏன் இப்படி நிற்கிறீங்க”என்றாள்
அவன் தலையை நிமிர்த்தாமல் நின்ற இடத்திலே நின்றிருந்தான். அதை பார்த்து அவன் அருகில் சென்று நின்று அவன் முகத்தை கையால் தூக்கினாள்”என்னாச்சி என் ஆதிக்கு”என்றாள் அவன் கன்னத்த லேசாக வருடியவாறு…
“இல்ல சாரி”என்றான் மீண்டும் தலை குனிந்துக்கொண்டு..
“எதுக்கு”என்றாள். மீண்டும் அவன் தலையை நிமிர்த்தியவாறு…
“இல்ல நீ பாவம் உன்ன தனியா விட்டுட்டு நா தாத்தூ கூட படுக்க போய்ட்டேன்ல அதா.அந்த ப்ரேம் உன்னையும் அடிப்பான்.இனி நான் உன்ன விட்டு போகமாட்டேன்.. இப்போ அவன் உன்ன அடிச்சானா”என்றான் படப்படப்பாக……
அதை கேட்டு சிரித்த ஆஸ்வதி “அதுலா ஒன்னும் இல்ல ஆதி.. அவன் என்னை ஒன்னும் பண்ல… நா யாரு ஆதியோட ஏஞ்சல் ஆச்சே அதுனால அவன் பயந்துட்டு போய்ட்டான்.. என்னை எதாவது பண்ணுனா ஆதி அவர அடிப்பாறே. அதான் அவர் பயந்துட்டு இங்க இருந்து போய்ட்டாரு..”என்றாள்.. அவனது முகத்தை கூர்மையாக பார்த்தவாறே.
அவளது கூர்மையான பார்வையில் சுதாரித்த ஆதி. பின் லேசாக புன்னகையுடன்..”அச்சோ. நா அவன அடிக்கிறதா. அப்புறம் அவன் என்னை அடிப்பான்.. ரூம்ல விட்டு லாக் பண்ணுவான்.. எனக்கு சாப்பாடே போட மாட்டான் எனக்கு அவன பார்த்தாலே பயம் ஏஞ்சல்..”என்றான் ஆதி
“அச்சோ. என்ன ஆதி இது. நா தாத்தூக்கிட்ட என்ன சொன்னேன் தெரியுமா. ஆதி ரொம்ப ஸ்ட்ராங்க்.. அவர யாராலையும் ஒன்னும் பண்ணமுடியாது அப்டினு சொன்னா. நீங்க என்னனா இப்டி சொல்றீங்களே”என்றாள் அவனிடன் செல்லமாக கெஞ்சியவாறு.
அதில் ஒரு நிமிடம் ஆதி அசந்து போனான்.. பின் தன்னை சமாளித்துக்கொண்டு…”ம்ம்ம் ஓகே ஏஞ்சல் நீ இவ்ளோ சொல்றதுனால நா உன்ன ப்ரேம்ட இருந்து சேவ் பண்றேன்”என்றான் புன்னகையுடன்..
அதில் ஆஸ்வதியும் புன்னகைத்துக்கொண்டே. “ சரி இன்னுமே நீங்க இங்கயெ தூங்குறீங்களா…”என்றாள் அவனை ஆர்வமாக பார்த்து
அதில் அவனும் அவளை ஆர்வமாக பார்த்துக்கொண்டே அழகாக சிரித்துக்கொண்டு”ம்ம்ம்.”என்றான் தலையை வேகமாக ஆட்டிக்கொண்டு…
“சரி தூங்களாமா. தூக்கம் வருது”என்றாள்
அவள் கீழே படுக்கையை விரித்ததை பார்த்து அவன் அவளை பாவமாக பார்க்க “உங்கள தூங்க வச்சிட்டு தா நா இங்க வருவேன்.” என்றாள்..தலையை அழகாக சாய்த்துக்கொண்டு..”ம்ம்”என்றான் சிரித்தவாறு. பின் அவன் கண்கள் ஏக்கமாக அவளை தொடர பாவம் அதை ஆஸ்வதிதான் பார்க்கவில்லை..
அவனை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவள் அருகில் உட்கார்ந்து அவனை தட்டிக்கொடுத்து தூங்க வைத்தாள்..அவன் வெகு நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருக்க… பின் ஆஸ்வதி அசதியில் அவன் நெஞ்சில் தலை வைத்து உறங்கிவிட்டாள்.. அதில் ஆதி தான் எப்படி உணர்ந்தான் என்பதே தெரியவில்லை அவனும் அவளின் நெருக்கத்தை விரும்பியே இருந்தான் அவள் நன்றாக உறங்கும் வரை காத்திருந்தவன் அவளை அப்படியே அழகாக தன் மீது தூக்கி தன் அருகில் படுக்க வைத்துக்கொண்டான். பின் இரவு வெளிச்சத்தில் அவளின் மதிமுகத்தை பார்த்துக்கொண்டே இருந்தான். பின் அவன் முகம் கொஞ்ச நேரத்தில் கடினமாக மாற…
அவன் மனதில் …”உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா.. என் வது மேலயே கை வைக்க பார்த்துருப்ப…….இன்னிக்கி நீ தப்பி இருக்கலாம் ஆனா என்னிக்கி இருந்தாலும் உனக்கு என் கையால தாண்டா சாவு.. என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவன் நீனு மட்டும் உறுதி ஆகட்டும் அப்போ இருக்கு உனக்கு இந்த ஆதி கையால சாவு…”என்றான் கொலைவெறியில்..பின் தன் கைக்குள் இருக்கும் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.அவனின் வது…. இன்று நேற்று அல்ல….. 4வருடத்திற்கு முன்னால் அவளை எப்ப்டி பார்த்தானோ.. அதே அவனின் வது.. அவளை பார்த்துக்கொண்டே இருந்தவன் பின் அசதியில் அப்படியே தூங்கிவிட்டான்..
ஆனால் அவ்வளவு நேரம் தூக்கிக்கொண்டு இருந்த ஆஸ்வதி கண் விழித்து தன்னவனை பார்க்க…..ப்ரேமை மறந்தே போனாள். அவனுக்கு என்ன ஆனது.. யார் அந்த உருவம் இது எதுமே அவள் மனதில் இல்லை.. அவள் மனதை முழுதாக ஆக்கிரமித்து இருந்தது அவளின் ஆதியை தான் அவனையே உற்று உற்று பார்த்தவள் அவன் கையில் இருப்பதை பார்த்து அவனையே அசையாமல் பார்த்தாள்..பின் ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு அப்படியே உறங்கிப்போனாள்.
இரவு தூங்க நெடுநேரம் ஆனதால் காலையில் ஆஸ்வதி வெகுநேரம் கழித்தே எழுந்தாள் ஆஸ்வதி. எழுந்து பார்க்க அவள் கட்டிலில் படுத்திருந்தாள் ஆனால் பக்கத்தில் அவன் இல்லை.. கீழ எழுந்து போய் இருப்பான் என்று நினைத்தவள் குளிக்க சென்றுவிட்டாள்.
ஆஸ்வதி குளித்து முடித்து கிளம்பி கீழே வந்தாள்.. சோபாவில் தாத்தா உட்கார்ந்து செய்திதாள் படித்துக்கொண்டு இருந்தார். அவர் அருகில் சென்று. “சாரி தாத்தா எழ நேரம் ஆச்சி”என்றாள்
அவர் அவள் முகத்தை பார்த்து “அதுனால என்னடா ஒன்னும் இல்ல போ போய் காபி சாப்டு”என்றார்
அவளும் சரி என்று சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்..
அப்போது..”அய்யோ.. ப்ரேம்..”என்று அலறல் சத்தம் கேட்க….. கையில் வைத்திருந்த ஆதிக்கு கலக்கிய பால் க்ளாஸை கீழே போட்டுவிட்டு வெளியில் ஓடி வந்தாள்.. (வரு

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

1 thought on “உயிர் போல காப்பேன்-26”

Leave a Reply to Babubuvana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!