என் தேடலின் முடிவு நீயா – 14

4.8
(46)

தேடல் 14

மகிமா சஞ்சனாவின் அறைக்குச் செல்ல அப்போதுதான் அவளும் தூங்கி எழுந்திருந்தாள்… “ஹாய் கன்யா… சாரி…சாரி ஹாய் மகி… எப்படி இருக்க” என்று கேட்டாள் சஞ்சனா…

“நான் நல்லா தான் இருக்கேன்.. உன் அம்மா உன்ன உன் அத்தான் கூட வர சம்மதிச்சாங்களா?” என மகிமா கேட்க,

“எங்க கம்பெனில இருந்து முக்கியமான ஒரு ரிசெர்ச்க்கு போகணும்ன்னு சொல்லி தான் வந்திருக்கேன்… அம்மாக்கு என் மேல கோபம் இல்ல… அத்தான் மேல தான் செம்ம கோபத்துல இருக்காங்க… இனிதான் எனக்கு கல்யாணம் பேசணும்ன்னு அவங்களுக்கு கவலயும் சேர்ந்திடுச்சி” என்றாள் கண் சிமிட்டி…

“ஆனா உனக்கு ஒரு கவலையும் இல்ல போல இருக்கே… ட்ரிப் வந்த மாதிரி ஹாப்பியா என்ஜோய் பண்ணிட்டு இருக்க” என மகிமா கேட்க,

“இல்லாம இருக்குமா? அத்தான் கிட்ட இருந்து தப்பிட்டேன்… நீ பலியாடா மாறிட்ட…” என்றவள், “ஆமா கேக்க நெனச்சேன், அது எப்படி டீ நீ அந்த ஹிட்லர போய் லவ் பண்ணின? உனக்கு வேற ஆளே கிடக்கலயா? உன் டேஸ்ட் ஏன் இவ்ளோ மட்டமா இருக்கு?” என்று சஞ்சனா கிண்டலாக கேட்க,

“எல்லாம் அந்த விதி விளையாட்டு…” என்றாள் மகிமா கைகளை மேலே உயர்த்திக் காட்டி.

“சும்மா வாய்க்கு வந்தத சொல்லாதே மகி… வேணும்ன்னா நீ விளையாடின விளையாட்டுன்னு சொல்லு… நான் நம்புறேன்… சிங்கத்தோட குககுள்ள வர கிட்ட பார்த்து வர வேணாம்…” என்று கிண்டலாக சிரித்த படி சஞ்சனா கேட்க,

“எப்படி உனக்கு தெரியும்” என்று அதிர்ச்சியாக கேட்டாள் மகிமா…

“நீ மகாதேவ் தங்கச்சின்னு தெரிஞ்சதுமே, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ண சான்சே இல்லன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு… அத வச்சு கெஸ் பண்ணேன்…” என்றாள் சஞ்சனா…

“அடிப்பாவி… என் வாயாலே போட்டு வாங்கினியாடி நீ?” என்று கண்களை விரித்து கேட்டாள் மகிமா…

“வாயில்லா பூச்சி மாதிரி இருந்த நீயே இத்தன வேல பண்ண கிட்ட… நான் மட்டும் சும்மா இருப்பேனா?” என்றாள் தோல்களை உலுக்கியபடி…

“சரிதான்…” என்று சொல்லிக் கொண்ட மகிமா, “நாம ஸ்விம் பண்ணுவோமா?” என்று தன் கையில் கொண்டு வந்திருந்த உடையை காட்டிக் கேட்டாள்…

“ஒகே” என்று சஞ்சனாவும் கூற, இருவரும் உடை மாற்றிக் கொண்டு வந்தனர்…

இருவரும் ஷார்ட்ஸ் மற்றும் உடலுடன் இறுக்கிப் பிடித்த ஸ்லீவ் லெஸ் டி-ஷர்ட் அணிந்திருந்தனர்…

இருவரும் ஒன்றாகவே நீச்சல் தடாகத்தினுள் பாய்ந்து நீந்த ஆரம்பித்தனர்…

ஓரிரு முறை நீந்தியவர்கள் நீச்சல் தடாகத்தில் இருந்த கட்டில் சாய்ந்து நின்றிருக்க, “நமக்கிடைல ஸ்விம்மிங் காம்பெடிஷன் ஒன்னு வெப்போமா?” என்று கேட்டாள் சஞ்சனா…

“நைஸ் ஐடியா” என்று மகிமாவும் சொல்ல, டைமை செட் பண்ணிவிட்டு நீந்த ஆரம்பித்தனர்…

நீந்த ஆரம்பித்த இடத்தில் இருந்து மறுமுனைக்கு சென்று, திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கே வர வேண்டும் என்பதுதான் போட்டி….

இருவரும் வேகமாக நீந்த ஆரம்பிக்க மகிமாவோ ஐம்பது செக்கனுக்கு முன்பே போட்டியை முடித்து விட்டாள்…

ஒரு நிமிடம் தாண்டி மூச்சு வாங்கிய படி வந்து சேர்ந்தாள் சஞ்சனா…

“யுனிவர்சிட்டில இருந்த காலத்துல ஸ்விம் பண்ணது… இடைல கைவிட்டுப் போச்சு… திரும்ப இப்பதான் நீந்துறேன்” என்றாள் வேகமாக மூச்சுகளை விட்டபடி,

“பார்த்தாலே தெரியுது… ஆனா பிராக்டிஸ் பண்ணா ஒகே ஆயிடும்” என்றாள் மகிமா மென் புன்னகையுடன்…

மகிமாவின் நனைந்த தோற்றத்தை பார்த்த சஞ்சனா, “உன் ஸ்ட்ரக்சர் செம்மையா இருக்கு… நல்லா மெயின்டைன் பண்ற” என்றாள் கண்களை சிமிட்டியபடி…

“என்னடி பொண்ணு என்கிட்டயே இப்படி பேசுற” என்று சிரித்தபடி மகிமா கேட்க,

“உன்ன நான் தானே பார்த்தேன்… அப்ப நான்தான் சொல்லணும்” என்றாள் சஞ்சனா.

“ஒரு பையன ரசிக்கிறத விட்டுட்டு ஏண்டி என்ன ரசிக்கிற…” என்று மகிமா வினவ,

“அழகா இருந்தா… யார வேணாலும் ரசிக்கலாம்… சொல்லு நான் உன்ன ரசிக்கிறது தப்பா என்ன?” என்று கேட்க,

“தப்பே இல்லம்மா… நீ எவ்ளோ வேணாலும் தாராளமா ரசிச்சுக்கோ” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறிய மகிமா, “உன் ஸ்ட்ரக்சறும் செம்மயா தான் இருக்கு… ஆனா நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல” என்று கேட்க…

“உனக்கு தான் என் கதை தெரியுமே… என் கல்யாணத்துக்கு அம்மாவே வில்லியா அமைஞ்சுட்டாங்க… முப்பது வயசாயிடுச்சு… இனி தான் ஒருத்தன தேடி கல்யாணம் பண்ணிக்கணும்…” என்றாள் பெருமூச்சுடன்,

“அடிப்பாவி ஆண்டியாடி நீ… அரை கிளவி ஆயிட்ட… இன்னம் சின்னப் பொண்ணு மாதிரி நடந்துக்கிற” என்றாள் அதிர்ச்சியாக,

“அடி செருப்பால… ஆன்ட்டி, கூன்ட்டின்னு சொல்லிட்டு வந்தேன்னா மண்டையிலே ரெண்டு போடுவேன்… அடுத்த மாசம் தான் எனக்கு முப்பது பிறக்க போகுது… நீயே என் வயச கூட்டிடுவ போல” என்றாள் மகிமாவை முறைத்தபடி…

“சரிதான்…” என்று தலையாட்டி சிரித்த மகிமா, “உன்ன பார்த்தா முப்பது வயசுன்னு சொல்லவே முடியல தான்… நான் நெனச்சேன் என்ன விட ஒன்னு ரெண்டு வயசு மூப்பா இருப்பன்னு” என்றாள் மென்புன்னகையுடன்…

அவள் பேச்சைக் கேட்டு சிரித்த சஞ்சனா, “அத்தானும் நானும் ஒரே கிளாஸ் தான்… அத்தானுக்கு பயந்தே எந்த பசங்களும் என்ன திரும்பியும் பார்க்க மாட்டானுங்க…” என்றாள் சோகமாக…

“உனக்கு வாய்ச்ச அத்தான் அப்படி” என்றபடி நீச்சல் தடாகத்தில் இருந்து வெளியே வந்தாள் மகிமா…

“ம்ம் அது என்னவோ உண்மதான்… ஆனா நான் அத்தான் கிட்ட இருந்து தப்பிட்டேன்… நீ சிக்கிட்ட” என்றாள் சத்தமாக சிரித்தபடி…

“இப்ப நல்லா சிரி… உன்ன பார்த்து சிரிக்கிற நேரம் வரும் அப்போ நான் நல்லா சிரிப்பேன்” என்றாள் மகிமா.

“அத விடு… நீ ஜிம் போவியா?” என்று கேட்டாள் சஞ்சனா.

“ஒன் ஹவர் வொர்க் அவுட் பண்ணுவேன் டி… ஏன் கேட்குற?” என மகிமா கேட்க,

“நாளையிலிருந்து நானும் உன் கூட ஜாயின் பண்ணிக்க தான்” என்றாள்.

இருவரும் உடைமாற்றிக் கொண்டு வர, சஞ்சனாவோ மகிமாவை பார்த்து, “நான் உன்ன ரொம்ப அடக்கமான பொண்ணுன்னு நெனச்சிருந்தேன்…” என்று கிண்டலகக் கூற…

“க்கும்” என முகத்தை சுளித்துக் கொண்டாள் மகிமா…

“ஹேய் மகி.. சரியான போரிங்கா இருக்கு… நாம ஒரு படம் பார்க்கலாமா?” என்று சஞ்சனா கேட்க,

“நாம கொரியன் சீரீஸ் பார்ப்போமா?” என்று கண்கள் மின்ன கேட்டாள் மகிமா…

“ஏய் நீயும் கொரியன் ட்ராமா பார்ப்பியா?” என்று கேட்டாள் சஞ்சனா கே ட்ராமாவை சேர்ந்து பார்க்க ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்…

“ம்ம்.. இதுவரை நான் எந்த கே ட்ராமாவயும்(K drama) மிஸ் பண்ணதே இல்ல… யுனிவர்சிட்டில கூட என்ன வேல இருந்தாலும் இத மட்டும் மிஸ் பண்ணவே மாட்டேன்” என்றாள் மகிமா,

“ம்ம்.. அதுல இருக்க ஹீரோஸ் தான் வேற லெவலுக்கு இருப்பானுங்க… என்னா ஒரு பாடி… என்னா மசில்ஸ்…” என்று கண்களில் கனவு மின்ன சஞ்னா கூற…

“ம்ம்…ஓஹ் டி” என்று மகிமாவும் அந்த கற்பனையிலே கூற இருவரும் சிரித்தபடி கையடித்துக் கொண்டனர்…

 மடிக்கணனியை உயிர்ப்பித்து, அதன் முன்னால் இருவரும் அமர்ந்து விட்டனர்…

சிப்ஸ், பாப்கான் போன்ற கடிபிடிகளையும் வரவழைத்து சாப்பிட்ட படி நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்…

எட்டு மணி தாண்டி விட, “ஹேய் சஞ்சு இத எபிசோட நிப்பாட்டிடலாம்… மீதிய நாளைக்கு பார்க்கலாம்” என்ற மகிமா அந்த எபிசோட் முடிந்ததும் லெப்பை அணைக்க… சஞ்சனா லெப்பையே சோகமாக பார்த்துக் கொண்டிருந்தாள்…

அவள் முதுகில் தட்டிய மகிமா, “ஏய் உன் பார்வையே சரியில்ல… நான் போனதுக்கு அப்புறம் ராவுடிய மீதி எபிய பார்த்துடாதே” என்றாள்.

அவளும் சரி என்பது போல் தலையாட்ட…

“உண்மயா பார்க்க மாட்ட தானே” என்று அவள் மேல் நம்பிக்கை இல்லாமல் மீண்டும் கேட்டாள் மகிமா…

“இன்னும் ஒரே ஒரு எபிசோட மட்டும் பார்ப்போம்டி… இந்த எபில செம்ம கிஸ் சீன் ஒன்னு இருக்கு” என்று கண்களை விரித்தபடி கூறிக்கொண்டே மடிக்கணனியை உயிர்பித்து எபிசோடையும் போட்டு விட்டாள் சஞ்சனா…

அதன்பிறகு கேட்கவும் வேண்டுமா? இரு பெண்களும் தங்களை மறந்து அதில் மூழ்கி விட்டனர்….

மகிமா வாயை திறந்தபடி  திரையை பார்த்துக் கொண்டிருக்க, எதேர்ச்சையாக அவளைப் பார்த்த சஞ்சனா, “க்கும்…” என்று முகத்தை நொடிந்து கொண்டு, அவள் வாயை மூடிவிட்டவள், “இதெல்லாம் நீ இங்க மட்டும் தான் பார்க்கணும்மா… உன் லைப்ல இதெல்லாம் நடக்காது… உனக்கு வாச்சது.. இஞ்சி தின்ன குரங்கொருத்தன் தான்… அதனால இத பார்த்து மனச ஆத்திக்கோ” என்று சஞ்சனா கூற,

அதிர்ந்து போய் அவளைப் பார்த்தாள் மகிமா…

அவள் கூறியதும் நேற்று அபின்ஞான் அவளை எப்படி முத்தமிட்டான் என்பது நினைவு வர, தொண்டையை செருமிக் கொண்டவள், திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாள்…

“சரி சரி கவலைப்படாதே… இப்ப இத பாரு” என்ற சஞ்சனா நாடகத்தில் மூழ்கி விட, அதன் பிறகு மகிமாவால் தான் டிராமாவை பார்க்க முடியவில்லை…

அந்த எபிசோட் முடியும் போது பத்து மணியாகி இருக்க… கணணியை மூடி வைத்துவிட்டு படுக்க சென்றனர் இருவரும்.

மகிமா தன்னறைக்குள் வர, கட்டிலில் சாய்ந்தமர்ந்து மடிக்கணனியில் ஏதோ செய்து கொண்டிருந்தான் அபின்ஞான்…

அவனை கண்டும் காணாதது போலவே குளியலறைக்குள் சென்று தன் உடைகளை மாற்றி விட்டு வந்தவள் அவன் அருகே படுத்துக் கொள்ள,

 “நான் இவ்ளோ நேரமா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் மகி… நீ என்ன பார்க்காத மாதிரி படுக்கிற” என்று அவன் எரிச்சலான குரலில் கேட்க,

“யார் உங்கள எனக்காக காத்துட்டு இருக்க சொன்னது…” என்றவள் போர்த்தியவாறு அவனுக்கு மறுபக்கம் திரும்பி படுக்க…

அவளிடம் தன் நிலையிலிருந்து தாழ்ந்து சென்று கெஞ்ச விரும்பாதவன் பேசாமல் படுத்துக் கொண்டான்…

அடுத்த நாள் காலையில் அவளுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் தான் எழுந்து கொண்டாள் மகிமா…

ஆனால் அவளால் எழும்ப முடியவில்லை…

பக்கவாட்டாக படுத்திருந்தவள் சட்டென தலையை திருப்பிப் பார்த்தாள்.

பின்னால் இருந்து அபின்ஞான் தான் அவளை அணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான்…

அவளால் அசையக் கூட முடியவில்லை… அத்தனை இறுகிய அணைப்பு…

அவன் வெற்று மார்புடன் அவள் முதுகுப் புறம் முழுவதும் சேர்ந்து இருக்க, அவள் வயிற்றில் கை வைத்து அணைத்திருந்தான்…

அவன் தொடுகையில் அவள் இதயமோ வேகமாக துடித்துக் கொண்டிருந்தது…

உஷணப் பெரு மூச்சு விட்டவள், வயிற்றை பற்றியிருந்த அவன் கரத்தை எடுத்து விட்டவள், அவன் அணைப்பிலிருந்து மெதுவாக வெளியே வந்ததும் தான் அவளுக்கு மூச்சே வந்தது…

“ஐயோ… இவன் போக்கே சரி இல்ல… கை படக்கூடாதுன்னு சொன்னவன் இப்பிடி அணைச்சிருக்கானே… எதோ சரி இல்ல” என நினைத்தவளுக்கு அவன் அணைப்பில் உடலில் எத்தனையோ மாற்றங்கள்…

கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள் போனை எடுத்துப் பார்த்தாள்…

சஞ்சனா தான் எடுத்திருந்தாள்.

அவளுக்கு அழைப்பெடுக்க, “மகி… நீ ஏன் இன்னும் வரல்ல” என்று கேட்க…

“நீ கால் பண்ணதால தான் எழுந்தேன்… கொஞ்சம் பொறு குளிச்சிட்டு வரேன்” என்றவள் தயாராகிக் கொண்டு வந்து அபின்ஞானை பார்த்தாள்…

இன்று ஒருநாளும் இல்லாத வாரு இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்…

“இவ்ளோ நேரம் தூங்குறான்… புதினம் தான்” என்று சொல்லியபடி சஞ்சனாவின் அறைக்குச் சென்றாள்…

இருவரும் வரும் காலை உணவை உண்டபடியே நேற்றைய கொரியன் டிராமாவை பார்த்து முடித்தவர்கள், நீந்த செல்ல தயாராக, மகிமாவோ தன் ஸ்விம்மிங் சூட்டை மறந்து வைத்து விட்டு வந்திருந்தாள்…

“சஞ்சு கொஞ்சம் வெயிட் பண்ணு… நான் என் ஸ்விம்மிங் டிரஸ்ஸ எடுத்துட்டு வரேன்” என்றவள் தன் அறைக்குச் சென்றாள்…

அங்கே அபின்ஞானோ குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, அவனை கண்ட மகிமா, “இவன் என்ன நடந்தே ரூம அளக்கிறானா?” என புருவம் சுருக்கி யோசித்தபடியே உள்ளே வர,

அவள் வருவதை கண்டதும் நடையை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்…

மகிமாவோ வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற பூக்கள் போட்ட கையில்லாத பிராக் ஒன்று அணிந்திருந்தாள்….

அந்த உடையோ அவளுக்கே செய்தது போன்று அவள் உடலுடன் அழகாக பொருந்தி இருந்தது.

அவளை விழுங்குவது போல் பார்த்தவன் இதழ் குவித்து உதிக்கொண்டு மெல்ல அவளை நெருங்கினான்…

“ஐயோ… இவன் பார்வையே சரி இல்லையே… ஏன் இப்படி பார்க்குறான்” என நினைத்தபடி அவனை புரியாது பார்த்தாள் மகிமா…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 46

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!