சபாபதி போன் கட் பண்ணியது மோனிஷாவிற்கு கோபமாக இருந்தது. அதே கோபத்துடன் வீட்டிற்கு வந்தவள் தனது கைப்பையை தூக்கி சோபாவில் எறிந்தாள். அழகாக நிறப்பூச்சி பூசியிருந்த கைவிரல்களைக் கடித்து அவளது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். சபாபதி போனை ஆஃப் பண்ணின பிறகு, அவனிடம் பேசமாட்டேன் என சபதம் எடுத்தவள், மீண்டும் ஒரு பத்து நிமிடத்தில் அவனுக்கு அழைத்தான். இம்முறை ஆனில் இருந்தது போன். ஆனால் அதை எடுக்காமல் கட் பண்ணி விட்டான். அதுதான் இவளுக்கு கோபம் உச்சத்தை தொட்டது.
வெளியே வந்து கேசவனும் முகேஷும் மோனிஷாவைப் பார்த்தவாறு வந்து சோபாவில் இருந்தனர். கேசவன், “என்ன மோனி, கோபமாக இருக்கிற போல,என்னாச்சி?” என்றார். அவரைப் பார்த்து முறைத்தவள், “என்ன நடக்கணும்? அந்த சபா பார்த்த வேலை தெரியுமா அப்பா? அவன் ரொம்ப மோசம்” என்றாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். முகேஷ், “தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் இப்படி சொன்னா, நாங்க என்னத்தை நினைக்கிறது? என்னாச்சினு சொல்லு மோனி” என்றான். அதற்கு அவள் இதழ்களில் இருந்து விரல்களுக்கு விடுதலை குடுத்து விட்டு,” அண்ணா நான் சபாக்கு போன் பண்ணினேன். ஆனால் அவன் போனை கட் பண்ணிட்டான்.
நான் திரும்ப திரும்ப கூப்பிட போனை ஆஃப் பண்ணிட்டான். நான் கோபத்தில அவனுக்கு எடுக்கக் கூடாதுனு இருந்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்தில மறுபடியும் கூப்பிட்டா போன் ஆன்ல இருக்கு ஆனால் போனை கட் பண்றான்.
பாருங்க அப்பா இனிமேல் அவனா போன் பண்ணாலும் நான் எடுக்க மாட்டேன். ” என்று கோபப்பட்டாள்.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தார்கள்.” மோனி பாரு ஊருக்கு போனதுக்கு அப்புறம் உன்னை மறந்துட்டாரு. இப்படியே போச்சுனா உன்னை மறந்திட்டு, அவங்க வீட்டில சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவான் பார்த்துக்க” என்றார்.
கேசவன் இப்படி சொன்னதும் மோனிஷா பயந்து விட்டாள். அவளுக்கு எங்கே சபாபதி தன்னை விட்டுச் சென்றிடுவானோ என்ற பயம் ஏற்பட்டது.” அப்பா என்ன ஆனாலும் சரி, என்னோட சபா எனக்கு வேணும் அப்பா. ப்ளீஸ் அப்பா, எனக்கும் சபா அங்க இருக்கிறதை நினைக்க பயமா இருக்கு. என்னை அங்க கூட்டிட்டு போங்க அப்பா. நாம போய் சபாவை கூட்டிட்டு வந்திடலாம்.” என்றாள் கேசவனின் கைகளை பிடித்துக் கொண்டு.
கேசவனும் முகேஷூம் அர்த்தத்துடன் பார்த்து சிரித்தனர்.” சரி மோனி, நீ சொல்லிட்டல. என்ன நடந்தாலும் சரி, சபாவை உன்கூட சேர்த்து வைப்போம். நாம சபாபதியோட ஊருக்கு போய், அவரையும் நம்மகூட கூட்டிட்டு வரலாம்.” என்று முகேஷ் சொன்னான். மோனிஷாவும் கேசவனும் அதற்கு சம்மதித்தனர்.
காமாட்சியும் நிஷாவும், காளையன் மலர்னிகாவின் திருமணம் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போது டிடெக்டிவிடம் இருந்து நிஷாவிற்கு போன் வந்தது. உடனே அதை அட்டென்ட் பண்ணினாள். “சொல்லு ரஞ்சித், அந்த கேசவனைப் பற்றி எல்லாத் தகவலும் கிடைச்சுதா?” என படபடப்புடன் கேட்டாள்.
மறுபக்கம் இருந்த ரஞ்சித், “ஹே.. வெயிட்.. வெயிட், எதுக்கு இப்போ இவ்வளவு அவசரப்பட்டு? நீ கேட்டு நான் ஒரு ஹெல்ப் பண்ணாமல் இருப்பானா நிஷா. எல்லாம் பக்காவா இருக்கு. உனக்கு வாட்ஸ்ஆப்பில அனுப்பியிருக்கிறன். அவனுங்க சரியான கேடிங்க நிஷா. எதற்கும் பத்திரமா இருங்க.” என்று சொன்னதும் நிஷா, “அதெல்லாம் பார்த்துக்கிறன் ரஞ்சித். ரொம்ப நன்றி ” என்றாள். அதற்கு ரஞ்சித்,” லூசு ஃபிரண்ட்ஸ்க்குள்ள எதுக்கு நன்றி எல்லாம்? ஓகே எனக்கு வேலை இருக்கு. நான் அப்புறமாக கூப்பிடுறன். “என்று வைத்தான்.
காமாட்சியையும் அழைத்துக் கொண்டு காளையன் அறைக்குள் சென்றாள். மலர்னிகாவைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தவன் அருகில் வந்தனர் காமாட்சியும் நிஷாவும்.” அண்ணா, நீங்க கேட்ட தகவல் எல்லாம் எடுத்தாச்சு ” என்றனர். உடனே காளையன் அதைக் கேட்க, தனது போனை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி படித்தவனுக்கு கோபம் வந்தது.
காமாட்சி நிஷாவை பார்த்தவன், “இதை நீங்க படிச்சீங்களா?” என்று கேட்டான். அவர்கள் இல்லை என்று தலையசைத்தனர். அவர்களிடம் அதில் இருந்த விசயங்களை சொன்னான். அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
காளையன் மேலும் அவர்களிடம், “இந்த விசயம் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம். உங்களுக்கும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க” என்று அவர்களிடம் சொல்ல, அவர்களும் சரி என்று தலையாட்டி விட்டு சென்றனர்.
நேசமதி எல்லோரையும் சாப்பிட அழைத்தார். எல்லோரும் கீழே வந்தனர். தூங்கும் மலர்னிகாவை வந்து எழுப்பினார் துர்க்கா. அவள் எதுவும் பேசாமல் இருக்க, கையை பிடித்து எழுப்ப முயன்றார். அவளது மேல் சூடாக இருந்தது. அவளுக்கு காய்ச்சல் வந்திருந்தது.
மலர்னிகாவை எழுப்ப முயன்றாள். ஆனால் மலர்னிகா எழவில்லை. அவளால் எந்திரிக்க முடியவில்லை. துர்க்கா அவளுக்கு மாத்திரை வாங்க கீழே வந்தார். குணவதியின் அருகே வந்தவர், “அண்ணி மலருக்கு காய்ச்சலாக இருக்கு. மாத்திரை ஏதாவது இருந்தா குடுங்க அண்ணி.” என்று கேட்டார்.
உடனே எல்லோரும் பதறினர். பெருந்தேவனார், “குணவதி மாத்திரை எல்லாம் குடுக்காத, கசாயம் வச்சிக் குடு, எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் போயிடும்.” என்றார். உடனே குணவதி கசாயம் வைத்துக் கொண்டு வந்து துர்க்காவிடம் குடுத்தாள். ஆனால் துர்க்கா,” ஐயோ அண்ணி, கசாயம் எல்லாம் என்னால குடுக்க முடியாது. அவள் மாத்திரைனாலே அலறுவாள். இதுல காயத்தை குடுத்தா ஊரையே கூட்டிட்டுவா”என்றார்.
விசாகம்,” உன் பொண்ணுக்கு போய் நீ பயப்படுறியே துர்க்கா” என்று சொல்ல, துர்க்காவோ, “அவ என் பொண்ணுனாலதான் எனக்கு அவளைப் பற்றி தெரியும். “என்றார். அங்கிருந்த காளையனை பார்த்து துர்க்கா,” காளையா நீ தாலி கட்டின, உன்னோட பொண்டாட்டி காய்ச்சலா இருக்கா, அதனால இந்த கசாயத்தை நீயே குடுத்திடு” என்று அவனை மாட்டிவிட்டார்.
அப்போது பெருந்தேவனார், “என் பேரன் ஒண்ணும் பயந்தவன் இல்லை. அவன் சிங்கக் குட்டி. நீ போ காளையா, இந்த கசாயத்தை மலருக்கு குடுத்திட்டு, அப்படியே சாப்பாட்டையும் குடுத்திட்டு வா” என்றதும் காளையன்,” அம்மா அதை குடுங்க நான் போய் குடுத்திட்டு வர்றன்” என்று கசாயத்தையும் ஒரு தட்டில் சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு மேலே சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
Wow super divima