Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 37 (On Going Story)

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 37 (On Going Story)

by Thivya Sathurshi
5
(11)

வாழ்வு : 37

தீஷிதனின் வன்கரம் சம்யுக்தாவின் மெல்லிடையை பற்ற அவளின் உடல் சிலிர்த்தது. அதை உணர்ந்த தீஷிதன் புன்னகையுடன் அவளை மேலும் நெருங்க, அவளின் கரங்களோ அவனின் தலையை துடைப்பதை நிறுத்தின. மெல்ல மெல்ல அவளை தன் அணைப்பினுள் கொண்டு வந்த தீக்ஷிதனின் ஒரு கரம் அவளின் இடையை இறுக்க, மறு கரம் அவள் தலையின் பின்பக்கம் பிடித்தது. அவளது கழுத்தில் புதைந்து வாசம் பிடிக்க, சம்யுக்தாவின் கைகளில் இருந்த டவல் கீழே விழுந்தது. அவள் கரமோ அவனை அணைத்து. அவள் கரம் தன்னை அணைத்தும் குறுநகை பூத்த தீஷிதன் அவளை மெல்ல தனது கைகளில் ஏந்திக் கொண்டு அறைக்குள் வந்து பெட்டில் விட்டான். 

தீஷிதன் பெட்டில் அவளை விட்டதும்தான் சம்யுக்தாவிற்கு நடப்பது புரிய அவனைப் பார்த்தாள். அவள் அருகே குனிந்து அவளை அணைத்துக் கொண்டு, அருகில் படுத்தவன் அவள் முகம் பார்த்தான். 

“யுக்தா…”

“ம்ம்ம்ம்”

“யுக்தா, உன்னை இப்படி பக்கத்துல வச்சிட்டு என்னால அமைதியா இருக்க முடியலடி.. யுக்தா உன்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தமாட்டேன்.. உனக்கு சம்மதமா யுக்தா?” என்று ஒரு கண்ணில் காதலும் மறு கண்ணில் தாபத்தையும் வைத்து கேட்பவனிடம் மறுப்பு ஏதும் கூறாமல், அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் சம்யுக்தா. 

சம்யுக்தாவின் சம்மதம் கிடைத்ததும் அவள் மீது படர்ந்தான் தீஷிதன். சம்யுக்தா சம்மதம் சொன்னாலும் அவளை காயப்படுத்தி விடக் கூடாது என்று கண்ணாடி போல அவளை கையாண்டான் தீஷிதன். அவனது தீண்டலில் புதிதாக உயிர் பெற்றாள் மங்கையவள். மனதால் இணைந்த இருவரும் உடலாலும் ஒன்றிணைந்தனர். 

கூடல் முடிந்ததும் சம்யுக்தாவை அணைத்துக் கொண்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டவனின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் சம்யுக்தாவை தொட்டதும் பதறி அவனின் முகத்தை பார்த்தாள் சம்யுக்தா. ஆனால் அவனோ அவனின் முகத்தை அவளிடம் காட்ட விரும்பவில்லை. 

“என்னங்க என்னாச்சு?” என்றவள் அவனின் முகத்தை பார்க்க முயன்றாள். 

“ஒண்ணுமில்லை யுக்தா, உன்னோட காதல், நம்மளோட வாழ்க்கையை ஆரம்பிச்சதுனு மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதுதான் கண்ல ஆனந்தக் கண்ணீர்..” என்றவன் அவளைப் பார்க்க, அவனின் முகத்தை தனது கரங்களால் ஏந்தியவள், அவள் முகத்தோடு இணைத்து, “உங்களோட எதிர்பார்ப்பில்லா இந்த அன்புக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம்ங்க.”

“யுக்தா நான் ஒண்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டல?”

“கேளுங்க..”

“யுக்தா நான் உன்னை கஷ்டப்படுத்திட்டனா?”

“இல்லைங்க… என்னை எப்பவும் உங்களால கஷ்டப்படுத்த முடியாதுங்க.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…” என்றவளை இறுக அணைத்து முத்த மழை பொழிந்தான் தீஷிதன். பின்னர் அவளை தனது மார்பின் மீது போட்டு, தலையை வருடிக் கொடுக்க, சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தாள் சம்யுக்தா. 

தூங்கும் தன்னவளை இரசித்துக் கொண்டு இருந்தவன் அவள் உச்சியில் முத்தம் வைத்து, தன்னிடம் இருந்து அவளை பிரித்து பெட்டில் படுக்க வைத்து பெட்ஷீட்டால் போர்த்தி விட்டு, குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு, சமையல் அறைக்குள் சென்றான். 

………………………………………………….

பிரகாஷ் அறையில் இருந்து நாளை ஆரம்பிக்கப் போகும் ப்ரொஜெக்ட்டுக்கான வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது மேடிட்ட வயிற்றுடன் மெல்ல நடந்து வந்தாள் சீமா. 

“பிரகாஷ்..”

“சொல்லு சீமா.”

“எனக்கு எப்போங்க வளைகாப்பு பண்ணுற?”

“இப்போ வளைகாப்புக்கு என்ன அவசர சீமா.. உனக்கு இப்பதானே அஞ்சு மாசம், வளைகாப்பு ஒன்பதாம் மாசம் தானே பண்ணுவாங்க..”

“ஆமா, ஆனால் அஞ்சு மாசத்துலயும் பண்ணுவாங்க.. எனக்கு இப்பவே பண்ணணும்னு ஆசையா இருக்கு பிரகாஷ்..”

“சரி நான் நாளைக்கு அம்மாகிட்ட இதைப் பற்றி பேசுறன்..”

“சரி.. நீங்க இப்போ பிஸியா? இல்லைனா ஒரு நைட் ட்ரைவ் போலாமா?”

“அதுக்கென்ன வா போகலாம்”

“உங்களுக்கு வேலை இருக்கே…”

“அதை நான் அப்புறமா பண்ணிக்கிறன் சீமா.. உன்கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்ணவும் முடியுதுல.. வா போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பார்க்கிற்கு அழைத்துச் சென்றான். 

………………………………………………….

தீஷிதன் சமையல் அறையில் இருந்து நைட் இருவரும் சாப்பிடுவதற்காக தோசை ஊற்றிக் கொண்டு நின்றான். அப்போது அவனின் போன் சத்தமிட எடுத்துப் பார்க்க, துர்கா அழைத்திருந்தார். 

“சொல்லுங்க அத்தை.. என்ன பண்றீங்க? அங்க எல்லோரும் எப்படி இருக்கிறாங்க?”

“தீஷி இங்க எல்லோரும் நல்லா இருக்கிறாங்கபா.. நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கிறீங்க?”

“நாங்க நல்லா இருக்கிறோம் அத்தை.”

“தீஷி சம்மு எங்க? அவளோட நம்பர்க்கு கூப்டேன். ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது..” என்றார். 

தீஷிதன்தான் கீழே வரும் போது சம்யுக்தாவின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று அவளின் போனை ஆஃப் பண்ணி விட்டு வந்தான். 

“ஆமா அத்தை. யுக்தா போன்ல சார்ஜ் இல்லை.. அதுதான் ஆஃபாகிட்டு போல, அவ தூங்கிட்டு இருக்கா அத்தை. நான் யுக்தா எந்திரிச்சதும் கால் பண்ணவா? ஏதும் இம்பார்ட்டனா அத்தை?”

“தீஷி உங்க கல்யாணம் நடந்ததும் குலதெய்வம் கோயிலுக்கு போகணும்.. ஆனால் நீங்க சென்னை போனதால போக முடியல.. ரெண்டு நாள்ல பௌர்ணமி வருது. அப்போ குலதெய்வம் கோயிலுக்கு போகலாம்னு அண்ணா சொன்னாங்க.. நீங்களும் அங்க இருந்து குலதெய்வம் கோயிலுக்கு வந்துடுங்கபா”

“சரி அத்தை.. நான் யுக்தாகிட்டே சொல்லிடுறன்.”

“சரி தீஷி நான் அப்புறமா பேசுறன்..”

“ஓகே அத்தை..” என்றவன் போனை வைத்து விட்டு, ஒரு தட்டை எடுத்து நன்கு முறுகலாக சுட்ட தோசையையும், கடலைக் கறி மற்றும் தேங்காய் சட்னியையும், க்ளாஸ் ஒன்றில் சுடச்சுட பாலையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். அங்கே அமைதியான முகத்துடன் தூங்கிக் கொண்டு இருந்த தன்னவளைப் பார்த்து விட்டு, அருகில் இருந்த மேசை மீது தட்டை வைத்தான். 

சம்யுக்தாவின் அருகில் அமர்ந்தவன், அவள் பிறை நுதல் மறைத்த கூந்தலை ஒதுக்கி, அக் கூந்தல் இருந்த இடத்தில் முத்தத்தை கொடுத்தான். அவன் இதழ் தீண்டலில் தூக்கம் கலைய கண்களைத் திறந்த சம்யுக்தா, “என்னங்க” என்றவாறு வேகமாக எழுந்தவள், பின் தனது நிலைகண்டு பெட்ஷீட்டை எடுத்து கழுத்து வரை சுற்றிக் கொண்டு குனிந்திருந்தாள். அதைப் பார்த்து சத்தமாக சிரித்தான் தீஷிதன். 

“ஐயோ சும்மா இருங்க”

“யுக்தா, இப்போ எதுக்கு கீழே பார்த்திட்டு இருக்க, இங்க பாரு.” என்று அவளது முகத்தை பிடிக்க, “போங்க…” என்ற சிணுங்கலுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். 

“யுக்தா…”

“ம்ம்ம்ம்…”

“எனக்கு பசிக்குது, உனக்கு பசிக்கல..”

“அட ஆமாங்க.. நைட்டுக்கு சாப்பாடு செய்யணும்.. எல்லாம் உங்களாலதான்.. நீங்க பண்ண வேலையால சாப்பாடு எதுவும் செய்யலை.. ஒரு பத்து நிமிஷம் தாங்க.. நான் குளிச்சிட்டு வந்து தோசை ஊற்றித் தாறேன்..” என்று படபடத்தவளை நிறுத்தியவன், “யுக்தா இங்க பாரு.. அமைதியா இரு. நானே சமைச்சிட்டேன்.. நீ நல்லா தூங்கிட்ட, அதனால நானே போய் தோசை ஊற்றி எடுத்திட்டு வந்தேன்.. வா சாப்பிடலாம்..” என்றான். 

“என்னங்க நீங்க.. என்னை எழுப்பியிருக்கலாம்ல.. நீங்க எதுக்கு கஷ்டப்பட்டுட்டு?”

“இதுல கஷ்டப்பட எதுவும் இல்லை.. என்னோட பொண்டாட்டிக்காக நான் பண்றேன்.. சரி எந்திரி..” என்றவன் தனது மார்பில் சாய்ந்திருந்தவளுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டான். பின்னர் பாலை எடுத்து அவளிடம் குடிக்க கொடுத்தான். 

பின்னர் அவனும் அதே தட்டில் சாப்பிட, அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் கண்களில் கண் குளம் கட்டியது. சாப்பிட்டு கீழே சென்று தட்டை வைத்து விட்டு, வந்தவனை தனது கைகளை விரித்து அழைத்தாள் சம்யுக்தா. காதலோடு அழைக்கும் அவளின் அழைப்பில் வந்து சேர்ந்தவனை அணைத்துக் கொண்டவள், அவனின் இதழோடு இதழ் சேர்த்தாள் சம்யுக்தா. 

மனைவி அவளாக தரும் முத்தத்தில் தன்னை மறந்த தீஷிதன் மீண்டும் அவளுடன் இரண்டறக் கலந்தான். அவர்களின் கூடலைப் பார்த்து வெட்கப்பட்டு மேகத்தினுள் மறைந்தது நிலா.. 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி

திவ்ய சதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

2 comments

Sujatha October 20, 2025 - 9:28 am

Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️

Reply
babuvana October 21, 2025 - 4:45 am

Wow ippodhaan romba happyya irukku divima

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!