Home NovelsE2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)மீண்டும் தீண்டும் மின்சார பாவையே டீஸர்
5
(9)

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே_ டீஸர்

“நிலா பிக்கப்…” என்று முணுமுணுத்தாள் சபரிகா.

“ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க.

“ஹேய் நிலா! எப்படி இருக்க. தேங்க் காட். உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. நாலு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தான் சபரிகா.

“பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா.

“ எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் கூட மாத்திட்ட.” என்று சபரிகா, தோழியிடம் கோபப்பட.

“பழசெல்லாம் எதுக்கு டார்லி‌. நீ எப்படி இருக்க? அதை விடு. உனக்கு அடிமை சிக்குச்சா? அதான் கல்யாணம் ஆகிடுச்சா.” என்று ஆர்வமாக வினவினாள் வெண்ணிலா.

“நாலு வருஷம் கோமாவுல இருந்தியா? இப்ப வந்துட்டா அக்கறையா?”

“பரி! நடந்த எதுவும் என் கையில் இல்லை…” என்று குரல் கம்ம கூறினாள் வெண்ணிலா.

“சாரி நிலா! பழசெல்லாம் ஞாபகப்படுத்துறேனே.”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை பரி டார்லி. சரி நீ எதுக்கு என்னை வலை வீசி தேடுன. உனக்கு கல்யாணமா? அதுக்கு இன்வைட் பண்ண தான் கூப்பிடிறியா?”

“ஏதே! ஒரு கல்யாணம் பண்ணி நான் படுற பாடே போதும். இன்னொன்னு எல்லாம் தாங்காது தாயே. நம்ம காலேஜ் ரீ யூனியன். நெக்ஸ்ட் மந்த். ஒன்வீக் கொடைக்கானல்ல தெறிக்க விடுறோம்.

“நான் வரலை.” என்று தயக்கத்துடன் வெண்ணிலா கூற.

“ஹேய்! யுகி அண்ணா பாரின்ல இருக்காங்க. வர மாட்டாங்க.” என்று குரலை தழைத்துக் கொண்டு கூறினாள் சபரிகா.

‘அப்போ ரீயூனியனுக்கு போனால் என்ன?’ என்று வெண்ணிலா யோசித்தாள்.

ஆனால் ஏன் தான் போனோம் என்று எண்ணி வருந்தப் போவதை அறியவில்லை.

அவளது நிம்மதியைப் பறிக்க ஏர்போர்ட்டில் வந்து இறங்கினான் யுகித்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!