Home Novelsமதுரனின் மதிமயக்கும் மங்கையவள்மதுரனின் மதிமயக்கும் மங்கையவள் : 07( On Going Story)

மதுரனின் மதிமயக்கும் மங்கையவள் : 07( On Going Story)

by Thivya Sathurshi
4.5
(4)

அத்தியாயம் : 07

கன்னியப்பன் வீராவின் ஸ்டேஷனில் இருந்து நேராக சர்வேஷ் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் ஹாஸ்பிடலுக்கு வந்தார். மினிஸ்டர் ஹாஸ்பிடலுக்கு வருவதை பார்த்த டாக்டர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்த கன்னியப்பனுக்கு கர்வமாக இருந்தது. அவர்களுக்கு மெல்லிய ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு, சர்வேஷ் இருக்கும் எமர்ஜென்சி அறைக்குள் சென்றார். அங்கிருந்த நர்ஸ் இவரைப் பார்த்ததும் எழுந்து நிற்க, “எங்க உங்க. சீஃப் டாக்டர்… அவரை சீக்கிரம் இங்க வரச் சொல்லு…” என்றார். “இதோ போறேன் சார்….” என்றவள் சீஃப் டாக்டரை அழைப்பதற்கு செல்லும்போது அவரே மினிஸ்டர் வந்ததை அறிந்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்.

“சார் வாங்க சார்…. நீங்க வந்து இருக்கிறதா இப்பதான் சொன்னாங்க அதான் உங்களை பார்க்க வந்தேன்….சார் எல்லாம் ஓகேதானே…. ஏதும் பிரச்சனை இல்லல….”

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல டாக்டர்…. நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்… அந்த போலீஸ்காரன் தான் கொஞ்சம் தெனாவெட்டா பேசுறான்…. ஒரு தடவை நெஞ்சுவலின்னு படுத்துக்கிட்ட… சரி பத்திரமா இரு ஏன்னா நெஞ்சுவலி இன்னொரு தடவை வந்தா உன்னோட பையனுக்கு டிக்கெட் போட்ற வேண்டியதுதான்னு சொல்றான்…” என்று சொன்னார்.

“சார் கவலைப்படாதீங்க சார். அவ்ளோ சீக்கிரம் அந்த போலீஸ்காரனால ஒண்ணுமே பண்ண முடியாது….”

“ஆமாமா அதுதான் நானும் எதுவும் பேசாம அமைதியா வந்துட்டேன்… இருந்தாலும் நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்தா நமக்கு நல்லது தானே….” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது மெல்லக் கண்விழித்தான் சர்வேஷ்.

“டாடி என்னாச்சு ஜாமின் கிடைச்சிடுச்சா….?” 

“அதெல்லாம் கிடைச்சிடுச்சு சர்வேஷ்… நீ ஒண்ணும் கவலைப்படாத நீ பத்திரமா இருக்க…” 

“டாடி… நான் நீங்க சொன்ன மாதிரி நடிச்சேன்…. ஆனாலும் அந்த வீரா கண்டுபிடிச்சிடுவானோனு கொஞ்சம் பயமா இருந்துச்சு…. ஆனால் அவன் கண்டு பிடிக்கவே இல்ல… அந்த பரத்கிட்ட சொன்னான்…. அவன் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தான்… இங்க அட்மிட் பண்ணாங்க…. அதுக்கு அப்புறம் எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல…. இந்த டாக்டர் தான் கடைசியா என் கையில ஊசி போட்டாரு….” என்றான். 

“அதுவா உங்கள மயக்கத்துல வைக்கிறதுக்காக போட்ட மயக்க ஊசி அது…. சப்போஸ் அந்த வீரா வந்து, உங்களை பாக்கணும்னு சொன்னா என்ன பண்றது…. அப்புறம் மாட்டிப்போம்ல அதுதான் உங்களுக்கு மயக்க ஊசி போட்டேன்….” என்றார் அந்த டாக்டர். 

“ஓஓஓ அப்படியா சரி சரி… டாடி அம்மா எங்க…?” என்றான். 

“உன் அம்மாதானே நைட் ஃபுல்லா அழுதுட்டு இருந்தா…. இப்ப சொல்லி இருக்கேன் சீக்கிரமா வந்துடுவா….” 

“ஓகே டாடி… ஆமா நான் எப்போ வீட்டுக்கு போகலாம்….”

“சார் நான் சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… எதுக்கும் உங்க பையன் இங்க ரெண்டு மூணு நாளைக்கு அப்சர்வேஷன் இருக்கிறது நல்லது… அப்படி நீங்க இப்ப இவர வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்கன்னா அந்த வீரா எப்ப வேணா வீட்டுக்கு வரலாம்…. சோ இவர் இங்க இருக்கிற தான் எல்லாருக்குமே நல்லது….” என்றார். 

“சரிங்க டாக்டர் அப்படியே பண்ணிடலாம்…. சர்வேஷ் டாக்டர் சொன்னது புரிஞ்சுதில்ல…. நீ கவனமா இரு…. நான் கட்சி மீட்டிங்க்கு போறேன்… உன் அம்மா இப்ப வந்துடுவா… சாப்பிடு சமைச்சு எடுத்துட்டு வருவா நல்லா சாப்பிடு… நான் அப்புறமா வந்து பாக்கிறேன்….” என்று சொல்லிவிட்டு டாக்டர் பக்கம் திரும்பியவர், “இங்க யாரு டாக்டரே… என் பையனுக்கு எதுவும் நடக்காம பாத்துக்க… அவனுக்கு ஏதாவது நடந்து அப்புறம் உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை….” என்று அந்த டாக்டரை மறைமுகமாக எச்சரித்து விட்டே சென்றார் கன்னியப்பன்.

வீரேந்திர பிரசாத்தும் பரத்தும் அவர்கள் கான்ஸ்டபிள்களுடன் அந்தக் காட்டிற்கு வந்தார்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பகுதிக்கு பிரித்து கள்ளச்சாராயம் காய்ச்சும் இடத்தை கண்டுபிடிக்க கூறினான். ஒவ்வொருவரும் பிரிந்து செல்ல, பரத் வீராவுடன் சேர்ந்து சென்றார். இப்படியாக சென்று கொண்டிருக்கும்போது தூரத்தில் புகை வருவதை பார்த்த பரத், “வீரா அங்க பாரு…. தூரத்துல புகை வர்ற மாதிரி இருக்குல்ல….” என்றான். 

பரத் காட்டிய இடத்தை பார்த்த வீரா, “ஆமா பரத் அங்க புகை வர்ற மாதிரி இருக்கு…. அப்போ அந்த இடத்துல தான் அவங்க கள்ளச் சாராயம் காய்ச்சுறாங்க போல இருக்கு…. வா அங்க போய் பாக்கலாம்….” என்றவன் வாக்கிடாக்கி மூலம் மற்றைய கான்ஸ்டபிள்களையும் அழைத்துக் கொண்டு. புகை வரும் இடத்தை நோக்கிச் சென்றான்.  

பரத் நினைத்தது வீண் போகவில்லை. அங்கே கள்ளச்சாராயம் தான் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த பரத் வீராவிடம், “மச்சான் இன்னைக்கு செம ஃபைட் இருக்கும் போல இருக்கு….”

“இங்க பாரு பரத்து வீணா என்னை மட்டும் கோர்த்து விடாத.. ஒழுங்கு மரியாதையா நீயும் என்கூட வந்து பைட்டு பண்ணு….” 

“வீரா நீ ஃபைட் பண்ணா அது நல்லா இருக்கும்…. அதுவே நான் ஃபைட் பண்ணா காமெடியா இருக்கும்…”

“நீ ஏன் உன்ன அப்படி நினைச்சிக்கிற….? நீ எனக்கே டஃப் கொடுக்கிறவன்னு எனக்குத் தெரியும்…. உன்னோட தன்னடக்கம் ரொம்ப நல்லா இருக்கு…”

“மவனே என்னைத் தனியா ஃபைட் பண்ண விட்டுட்டு எங்கேயாச்சும் எஸ்கேப்பானஅப்புறம் தெரியும் உனக்கு இந்த வீரா யாருன்னு தெரியும்…”

“விட்றா விட்றா இப்போ என்ன நானும் பைட்டு பண்ணனும் சரி சரி எத்தனை பேர் இருக்காங்கன்னு பாத்து ரெண்டு பேரும் பிரிச்சுக்கலாம் ஓகேவா….”

“ஓகே இந்த டீல் நல்லா இருக்கே…” என்றான். இதைக் கேட்டு அங்கிருந்த கான்ஸ்டபில்கள் சிரித்தார்கள். 

“சரி சரி வாங்க நம்ம வேலைய ஆரம்பிக்கலாம்….” என்று அந்த சாராயம் காய்ச்சும் இடத்துக்கு மிகவும் அருகில் வந்து நின்றார்கள். அப்போது ஒரு வண்டி வந்தது. அந்த வண்டி வந்து நின்றதும் அந்த கூட்டத்துக்கு தலைவன் போல இருப்பவன். 

“டேய் வாங்கடா வந்து இந்த பாட்டில் இருக்கிற பாக்ஸ்ஸை அந்த வண்டியில சீக்கிரமா அடுக்குங்க….” என்றார். அப்போது அங்கு வந்த ஒருவன், “சீக்கிரமா வண்டியில ஏத்த சொல்லு… ஏன்னா இப்போ வந்திருக்கிற புது ஏசிபி ரொம்ப மோசமானவனா இருக்கான்… எப்படி கொண்டு போனாலும் செக் பண்றான்… அவன் கண்ணுல மண்ணை தூவிட்டு இந்த கள்ளச் சாராயத்தை ஊருக்குள்ள கொண்டு போறது ரோதனையா போச்சு….”

“ஏன் பாண்டி அவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா…. இப்படி பயப்படுற… நீ இதுவரைக்கும் இப்படி பயப்பட்டதே இல்லை….”

“அட நீ வேற அண்ணாத்த…. அவன் ரொம்ப மோசமானவன் அடிச்சிட்டு தான் பேசவே ஆரம்பிப்பான்னா பாத்துக்கோ…. அது மட்டும் இல்ல நம்ம கன்னியப்பன் அமைச்சர் இருக்காருல்ல அவரோட பையன்னு பாக்காமலே அவனை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல வச்சிருக்கான் அந்த போலீஸ்காரன்…. நம்ம அமைச்சருக்கே. தண்ணி காட்டினவன் நம்மள சும்மா விட்ருவானா….?”

“டேய் அது ஊர்… இது காடு இது மொத்தமும் இந்த குணாவோட கண்ட்ரோல் இருக்கு… அதனால இங்க வரவே முடியாது…. மீறி வந்தாலும் உயிர போக மாட்டான்…. நான் இருக்கும் போது எதுக்கு பயப்படுற விடு பாத்துக்கலாம்…”

“இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல அவன நீ நேர்ல பாத்தா தான் உனக்கு தெரியும் அவனைப் பத்தி….”

“என்னடா இது வந்ததிலிருந்து அவனைப் பத்தியே புகழ்ந்துட்டு இருக்க…. அவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா….? எங்க என் முன்னால வந்து நிக்க தான் சொல்லு…. அப்புறம் தெரியும் நான் யாருன்னு….”

“இங்க பாரு வீரா உன்னைப் பாக்கணும்னு சார் ரொம்ப ஆசை படுறாரு….. போங்க போய் உங்க திருமுகத்தை அவர்கிட்ட காட்டிகிட்டு வாங்க சார்…”என்றான். 

“அப்படின்ற…?”

“அட ஆமாங்கிறேன்…..”

“போய்ட்டா போச்சு….” என்ற வீரா அவர்கள் முன்னால் சென்றான். வீராவைப் பார்த்ததும் அந்த டிரைவருக்கு பயத்தில் வேர்த்து கொட்டியது. பேச்சே வரவில்லை. குணாவின் பின்னால் வீரா நின்றதால் அவனுக்கு வீராவைத் தெரியவில்லை. ஆனால் அந்த டிரைவர் வீராவைக் கண்டு கொண்டான். குணாவைப் பார்த்தவர் கண்களால் அவனின் பின்னால் பார்க்குமாறு சொன்னான் ஆனால் அது குணாவிற்கு விளங்கவில்லை. “என்னாச்சுடா இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்த… இப்போ ஏதோ பேயப் பாத்த மாதிரி அமைதி ஆயிட்டே என்னாச்சு….?”

“அது ஒன்னும் இல்ல உங்கள பின்னால திரும்பி பாக்க சொல்றான்…”

“என்னது பின்னாடி பக்கமா பின்னாடி யார்ரா….?” என்றவாறு திரும்பினான் குணா. அங்கே வீராவைப் பார்த்து, “டேய் யார்ரா நீ…? இங்கே எப்படி வந்த…?”

“நான் யாருன்னு உங்களுக்கு அவசியம் சொல்லனுமா….?”

“என்ன ஏன் இடத்துக்கு வந்து என்கிட்டேயே நக்கலா பேசுறியா…. உயிரோட வீடு போய் சேர மாட்ட…”

“ஐயோ சார் அப்படி எல்லாம் சொல்லாதீங்க…. நான் வழி தவறி வந்துட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க….”

“உன்ன பாத்தா வழிமாறி வந்தவன் மாதிரி தெரியலையே….”

“பார்ரா சீக்கிரமாவே கண்டுபிடிச்சிட்டீங்க… ஆமா நான் வழி மாறிலாம் வரல… வழி மாறின உங்களை சரியான வழிக்கு அதாவது உங்கள எல்லாம் உங்க மாமியார் வீட்டு கூட்டிட்டு போக வந்து இருக்கேன்….”

“என்ன மாமியார் வீடு…?”

“அட மாமியார் வீடுன்னா தெரியாது… போலீஸ் ஸ்டேஷனுக்கு….”

“டேய் யார்ரா நீ….?”

“ யார்றா அந்த பையன்… 

நான் தான் அந்த பையன்….

யார்டா அந்தப் பையன்… 

நான் தான் அந்த பையன்…” என்று பாட்டு படித்தான் வீரா. 

அப்போது குணாவின் தோழைத் தட்டினான் வண்டியின் டிரைவர். “அண்ணாத்த இதுதான் நான் சொன்ன போலீஸ்….”

“நீ சொன்ன அந்த போலீஸ் இவன் தானா… என்ன ஏசிபி இந்த பக்கம் மோப்பம் புடிச்சு வந்துட்ட போல…”

“அப்பாடா நல்ல வேளை என்னைப் பத்தி உனக்கு அறிமுகப்படுத்தனுமோ நெனச்சேன்…. என்ன இவனே சொல்லிட்டான்…. ரொம்ப நன்றி பாண்டி…. ஆமா நான் தான் ஜேசிபி வீரேந்திர ப்ரசாத்.. உன்ன ஒரு வழி பண்ண வந்திருக்கிறன்…”

“என்ன தைரியம் இருந்தா ஏன் இடத்துக்கு வந்து என்னையவே வழி பண்ணப் போறேன்னு சொல்லுவ… இதெல்லாம் வீடு இல்ல காடு…. இங்க மனுஷங்களை விட மிருகங்கள் தான் ஜாஸ்தி. ஒன்னு கையில நீ சிக்கினாலும் மவனே உன்னோட உயிர் உன்கிட்ட இருக்காது….”

“டேய் உன்ன விட மிருகங்களை எல்லாம் நான் நாட்டிலேயே பாத்தாச்சு ரொம்ப நடிக்காத நட ஸ்டேஷனுக்கு…” என்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான் வீரா. “டேய் எங்க இருக்கீங்க வாங்கடா என் மேலே ஒருத்தன் கைய வைக்கிறான்….” என்று சத்தம் போட்டான் குணா. குணாவின் சத்தத்தை கேட்டு அங்கே அவனது ஆட்கள் ஓடி வந்த எல்லோரும் வீராவைச் சுற்றி வளைத்தனர். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!