Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 38 (On Going Story)

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 38 (On Going Story)

by Thivya Sathurshi
4.9
(16)

வாழ்வு : 38

ஆதவன் தன் பொற்கரணங்களை பூமியில் பரப்பியவாறு எழுந்து வந்தான். தீக்ஷிதனின் நெஞ்சில் இதமாக தூங்கிக் கொண்டிருந்த சம்யுக்தா அலாரத்தின் சத்தம் கேட்டு எழுந்தாள். எழுந்தவளை இறுக்கி அணைத்தான் அவளின் கள்வன். 

“விடுங்க டைமாச்சு.. ஆபிஸ்க்கு வேற போகணும்..”

“நம்ம கம்பனி தானே லேட்டா போகலாம் யுக்தா..”

“என்னங்க நீங்க.. காலையில சாப்பாடு செய்யணும் ப்ளீஸ்ங்க..”

“சரி போ.. பட் ஒரு டர்ட்டி கிஸ் கொடுத்திட்டு போ..” என்று அவளைப் பார்த்து கண்ணடிக்க, “ச்சீ பல்லு விளக்காம கிஸ்ஸா? முடியாது முடியாது..” என்று அவனிடம் இருந்து விடுபட முயன்றவளை, “சரி போ..” என்று தனது கரங்களை அவள் இடையில் இருந்து எடுக்கவும், மெல்ல எழுந்த சம்யுக்தா, தீஷிதன் அவனது போனை எடுக்க, சட்டென்று அவனின் நெற்றியில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு குளிப்பதற்குச் சென்றாள். 

இப்படியாக சின்னச் சின்ன கலாட்டாக்களுடன் இருவரும் ரெடியாகி கம்பனிக்குச் சென்றனர். சம்யுக்தாவின் கம்பனியில் வந்து அவர்களை காண்பதற்காக உட்கார்ந்திருந்தான் பிரகாஷ். இவர்கள் அவனை கவனிக்காமல் கேபினுக்குச் சென்றனர். 

சம்யுக்தாவின் பிஏ சிந்து வந்து, “குட் மார்னிங் மேம்.. பிரகாஷ் சார் ப்ரொஜெக்ட் விஷயமா உங்களை பார்க்க வந்திருக்கிறாங்க..”

“குட் மார்னிங் சிந்து.. ஓகே அவங்களை உள்ளே வரச் சொல்லுங்க..” என்றவள் நிமிர்ந்து அமர்ந்தாள். அதே நேரத்தில் தீஷிதனுக்கு புகழ் கால் பண்ண, சம்யுக்தாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சற்று நகர்ந்து சென்றான். 

பிரகாஷ் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தான். 

“குட் மார்னிங் சம்யுக்தா..”

“குட் மார்னிங் மிஸ்டர் பிரகாஷ்.. ப்ளீஸ் கால் மீ மிஸ்ஸஸ் தீஷிதன்..” என்றவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, “ஓகே மிஸ்ஸிஸ் தீஷிதன்.. நான் உங்க கம்பனிக்கு எடுத்த ப்ரொஜெக்ட்டுக்கான வொர்க்கை இன்னைல இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கிறன்.. அதைப் பற்றி உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்..”

“ஓகே பிரகாஷ் உங்களோட பிளானை சொல்லுங்க..” என்றதும் பிரகாஷ் அவனது ப்ளானை அவளிடம் விபரித்தான். அவன் கூறுவதை நன்கு செவிமடுத்து கேட்டவள், “ஓகே மிஸ்டர் பிரகாஷ் உங்க பிளான் ரொம்ப நல்லா இருக்கு.. பட் என்னோட சில ஐடியாக்களை சொல்றன் அதையும் இதோட சேர்த்த்க்கோங்க..”

“மிஸ்ஸிஸ் தீஷிதன் சாரி என்னால இந்த பிளான்ல எதையும் சேர்த்துக்க முடியாது..”

“அப்படி நீங்க சொல்ல முடியாது மிஸ்டர்.. ஏன்னா நான் சொல்ற மாதிரியேதான் நீங்க ப்ரொஜெக்ட் பண்ணுவீங்கனு அக்ரிமென்ட்ல சைட் பண்ணியிருக்கிறீங்க அதை மறந்திடாதீங்க..” என்றாள். 

“நீங்க பழைய கோபத்தை மனசில வச்சிக்கிட்டு இப்பிடி எல்லாம் பண்றீங்க..”

“நோ மிஸ்டர் பிரகாஷ்.. நான் இப்போலாம் பழைச நினைக்கிறல்ல.. ஏன்னா அதுக்கு எனக்கு டைம் இல்ல..” என்றவள் பார்வை தீஷிதன் பக்கம் சென்று வந்தது. 

அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் சம்யுக்தா, “ஓகே மிஸ்டர் பிரகாஷ் நீங்க நான் சொன்னதை எல்லாம் மாத்திட்டு வாங்க.. இப்போ நீங்க போகலாம்..” என்றாள். அவனும் சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றான். 

பிரகாஷ் சென்றதும் தீக்ஷிதனிடம் வந்தாள் சம்யுக்தா. அவனின் முகமோ கோபத்தை தத்தெடுத்து இருந்தது. 

சம்யுக்தா அருகில் வந்ததும் போனை வைத்து அவள் புறம் திரும்பினான். 

“என்னாச்சுங்க? ஏன் இப்பிடி கோபமா இருக்கிறீங்க?”

“ஒண்ணுமில்லை யுக்தா.. ஊட்டில கம்பனியில சின்ன பிரச்சனை புகழ் என்னை வரச் சொல்றான்..”

“அதுக்கென்ன போயிட்டு வாங்க..”

“விளையாடாத யுக்தா நான் ஊட்டிக்கு போனா நீ இங்க எப்பிடி தனியா இருப்ப? உன்னை என்கூட கூட்டிட்டு போலாம்னா, இங்க உனக்கு இருக்கிற வேலைக்கு நீ இங்க இருந்து நகர முடியாது.. ரெண்டு நாள்ல குலதெய்வம் கோயிலுக்கு வேற அத்தை போகணும்னு சொன்னாங்க..”

“அதுக்கென்னங்க நான் இங்க வேலையை பார்க்கிறன்.. நீங்க ஊட்டிக்கு போயிட்டு, அங்க இருக்கிற பிரச்சனையை முடிச்சிட்டு அம்மாகூடவே குலதெய்வம் கோயிலுக்கு வந்திடுங்க.. நான் இங்க இருந்து குலதெய்வம் கோயிலுக்கு வந்திடுறன்..” என்றாள். 

ஆனால் தீஷிதனுக்கு அவளை இங்கே தனியாக விட்டுச் செல்ல மனசே இல்லை. பிரகாஷினால் சம்யுக்தாவிற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. சரி வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு வந்துவிடலாம் என்று நினைத்தவன், “ஓகே யுக்தா.. நீ கவனமா இரு.. நான் சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு வந்திடுறன்.. பார்த்து பத்திரமா இருடா.” என்றவனை அணைத்துக் கொண்டவள், “நீங்களும் பத்திரமா போயிட்டு வாங்க..” என்றாள். அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து ஊட்டிக்குச் சென்றான். 

………………………………………………….

இத்தோடு இருபதாவது முறையாக மதுரா புகழுக்கு போனை எடுத்து விட்டாள். ஆனால் அவன் இவளது போனை எடுக்கவே இல்லை. தீஷிதன் இங்கே இல்லாததால் புகழுக்கு வேலை அதிகமாக இருந்தது. அந்த வேலையையே கவனமாக இருந்தவன் மதுராவின் காலை கவனிக்கவில்லை. புதிதாக வந்த பிரச்சனை வேறு புகழை டென்ஷன் படுத்தியது. 

ஆபிஸில் தனது கேபினில் இருந்து பைலைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது தடாலடியாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மதுரா. சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த புகழின் சட்டையைப் பிடித்தாள். 

“என்ன நினைச்சிட்டு இருக்கிறீங்க? எத்தனை கால் பண்ணினேன்.. ஒரு தடவைகூட போனை எடுத்து பேச முடியாதா?”

“இல்லை மதுரா ரொம்ப வேலை இருந்திச்சு அதுதான் மா போனை கவனிக்கல..”

“நான் செத்திட்டேன்னு போன் வந்தாலும் இப்பிடித்தான் இருப்பியா?” என்றவள் வாயில் கை வைத்தவன், “மது என்ன வார்த்தை சொல்ற? வேலையா இருந்திட்டேன்.. அதனால போன் பண்ணலை.. அதுக்கு இவ்ளோ பெரிய வார்த்தையை விட்டுடுவியா? கொஞ்சமாச்சும் யோசிக்கமாட்ட?” என்றவன் நெஞ்சில் சாய்ந்தவள் அழ ஆரம்பித்தாள். 

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு புகழ்.. உன்னை விட்டு போயிடுவேனோனு.. இப்போ எல்லாம் நாம பேசுற டைம் குறைஞ்சிட்டே போகுது.. பயமா இருக்குங்க..”

“கண்ணம்மா எதுக்கு இப்பிடி பேசுற? கொஞ்சம் வேலைடா.. அதுதான் சரியா பேச முடியல.. இனிமேல் இப்பிடி நடக்காது சரியா?”

“ஆமா… அதுதான் நான் வந்திட்டேன்ல இனிமேல் இப்பிடி நடக்காது..” என்றவாறு அங்கே நின்றிருந்தான் தீஷிதன். 

“தீஷி..”

“அண்ணா..”

“புகழ் சாரிடா.. உனக்குனு ஒரு டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம போயிட்டு..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல தீஷி..”

“புகழ் நீ மதுவை கூட்டிட்டு வெளியே போயிட்டு வா.. நான் இங்க இருக்கிற வேலையை பார்க்கிறன்..”

“அண்ணா அண்ணியும் வந்திருக்கிறாங்களா?”

“இல்லை மது.. யுக்தாக்கு அங்க வேலை இருக்கு.. அதனால அவ வரலை நான் மட்டும்தான் வந்தேன்..”

“என்ன சொல்ற தீஷி.. சம்முவை எதுக்கு அங்க தனியே விட்டுட்டு வந்த?”

“அவளுக்கு எந்த பிரச்சினையும் வராது.. நான் இங்க இருக்கிற வேலையை முடிச்சிட்டு உடனே கிளம்பிடுவன்..”

“ஒரே நாள்ல வேலை முடிஞ்சிடுமா தீஷி?”

“அதை நான் பாத்துக்குறேன் புகழ்.. நீ இன்னைக்கு மதுவை கூட்டிட்டு வெளியே போய்ட்டு வா..” என்று அவர்களை அனுப்பி வைத்தவன். புகழ் சொன்ன பிரச்சினையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். 

………………………………………………….

மணி எட்டை கடந்து விட்டதாக சிந்து கூறியதும்தான் சம்யுக்தா கம்பனியில் இருந்து வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்றாள் சம்யுக்தா. தீக்ஷிதன் இல்லாமல் தனியே இருப்பது அவளுக்கு கவலையாக இருந்தது. ஃப்ரெஷாகிவிட்டு சமையல் அறைக்கு வந்து காபி போட்டுக் குடித்து விட்டு ஹாலிலேயே உட்கார்ந்தாள். போனை எடுத்து தீஷிதனுக்கு அழைக்க போன் வேலை செய்யவில்லை. 

வெளியே மழை வருவதற்கான அறிகுறியாக காற்று பலமாக வீசியது.. இடி வேறு விட்டு விட்டு இடித்தது. இடையிடையே மின்னல் மின்னியது.. சற்று நேரத்தில் சோ வென்ற ஓசையுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. சம்யுக்தாவிற்கு தனியாக இருப்பதால் இடி இடிக்கும் போது பயமாக இருந்தது. 

சோபாவிற்கு மேலே கால்களை தூக்கி வைத்துக் கொண்டு தலையை கால்களில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பயந்து போய் இருப்பவளை மேலும் பயப்பட வைக்கும் வகையில் வீட்டின் கதவு தட்டப்படடது. கதவு தட்டும் சத்தத்தில் திடுக்கிட்டுப் போனாள் சம்யுக்தா. மேலும் மேலும் கதவைத் தட்ட சம்யுக்தா நன்றாகப் பயந்து விட்டாள். கதவை திறக்கவும் பயமாக இருந்தது. ஆனாலும் கதவு தட்டும் சத்தம் நிற்கவில்லை. மெல்ல எழுந்து கதவருகில் சென்றாள். கதவை திறப்பதா இல்லையா என்று தயங்கிக் கொண்டிருக்கும் போது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, மெல்ல கதவைத் திறந்தவள் அதிர்ச்சி அடைந்தாள். 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

1 comment

babuvana October 21, 2025 - 4:50 am

Ayyayo Yaara irukkum

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!