அரிமா – 9
“ரன் வேகமா வா மதி” என்று கத்தியபடி அவளை இழுத்துக்கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடிய ஆதித்யாவுக்கு தன் பின்னால், ஆட்கள்களின் தட தடக்கும் காலடி சத்தம் மற்றும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்க அவன் முகம் விகாரமானது. உடனே தான் இருக்கும் இடத்தை ஒருமுறை நோட்டம் விட்டான். இருள் சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று எண்ணியவன், தன்னையே மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருக்கும் மதுவை பார்த்தான். சட்டென்று அவன் கையை பிடித்தபடியே […]