அந்த நினைவில் இருந்து நிகழ் நேரத்தில் முகிழ்த்தவன் கயலின் விழியினை நோக்கி “என்ன ஏன்டி விட்டு போன? எதுக்கு டி டிவேர்ஸ் வாங்குன? எதுக்குடி உன் சொந்தக்காரி ஆதினிய எனக்கு கட்டி வச்ச. சொல்லு இது எல்லாத்துக்கும் நீ பதில் சொல்லு?”
அவன் எத்தனை கேள்வி கேட்டாலும் அமைதியாக இருந்தாள்.
என்ன டென்ஷன் பண்ணாதடி. பதில் பேசு. என் மண்ட சூடாகுது.
மீண்டும் மீண்டும் அமைதி.
அவனை பார்ப்பதை கூட தவிர்த்து விட்டாள் அவள்.
ஏய் என்று சத்தமிட்டவன் அவளை முறைத்து கொண்டு எழுந்தார்.
அந்த பாத்ரூம் வெளிப்பகுதியில் உள்ள கதவில் சாய்ந்து அமர்ந்து இருந்த கயலின் விழியில் நீர் நிரம்பி வழிந்தது.
தன்னிடம் பதில் சொல்ல சொல்லி கேட்கும் தன் மன்னவனின் தவிப்பு அவளுக்கு புரியாமல் இல்லை. இருந்தும் தவிர்த்தாள்.
இந்த தவிர்ப்பு நிச்சயம் தேவை என யோசித்து அமைதி காக்க ” அங்கு வந்த ஆரவின் பாடிகாட்ஸ்கள் அவளை ஒரே அழேக்காக தூக்கி விட்டார்கள்”.
“டேய் என்னடா பண்றிங்க என்ன விடுங்கடா” என அவர்களின் முதுகில் அவள் அடித்தும் பயனற்று போனது. ஏதோ பிஞ்சு விரல் தொடுவது போன்று இருக்க கொசுவை தட்டி செல்வது போல தட்டி சென்றான் ஒருவன்.
தயாளனின் அருகில் வந்த சக்திவேல் அந்த பொண்ணு மிஸ்டர் ஆரவ்வோட வைஃப். நீங்க தப்பா நினைச்சுக்காதிங்க. கொஞ்சம் வீட்டு பிரச்சனை இப்ப பப்ளிக் ஆகிடுச்சு. இத நாங்களே பாத்துக்குறோம் என்றான்.
“என்ன நீங்களே பாத்துக்குறீங்க. என் அக்காவ குண்டு கட்டா தூக்கிட்டு போற உங்க மேல நான் கம்ப்ளைண்ட் ரைஸ் பண்ணுவேன்” என்றாள் சுபா.
“ரைஸ் பண்ணு. யாரு வேணானு சொன்னா. உன்னையும் இந்த பாடிகார்ட்ஸ் தூக்கிட்டு போன அப்புறம் அந்த நாளு சுவத்துக்குள்ள உட்கார்ந்து கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ணு” என் அவள் செவி மட்டும் அறியும் வகையில் கூறியவன் அவளை கண்டு நமட்டு சிரிப்பு சிரித்தான்.
“என்ன என்னையுமா?… நான் இதுல தேவையே இல்லாத ஃபீஸ்டா ”
அக்காவுக்கு துணையா வேணும்ல ஒரு ஃபீஸ். அதான் என்ற சக்தி அவளை கண்டு கண்டித்தான்.
அவனை முறைத்தவளை அவன் சொன்னது போலவே ஒரு தடிபாடு போல இருந்த ஒருவன் வந்து குண்டுகட்டானாக தூக்கி சென்றான்.
அச்சோ இவனுங்க வேற இந்த தண்டி இருக்கானுங்க. தப்பிக்க கூட வழி இல்லையே என்று முணுமுணுத்த சுபாவும் முன்னமே மயக்கதில் அமர்ந்திருந்த கயல் இருந்த காரின் அருகில் இருந்த சீட்டில் தொப்பென்று விழுந்தாள். அதன் பின் அவள் முகத்திலும் மயக்க மருந்து அடிக்கப்பட சுயநினைவு இழந்தாள்.
சக்தியின் முகம் அரைகுறையாக தெரிந்தவாறு அவர்கள் இருவருக்கும் கொடுத்த மயக்க மருந்தோடு இருவர் இருந்த காரின் பகுதியினை மூடியவன் காரை ஓட்டினான்.
ஏன்? எதுக்கு? என்றுமீண்டும் மீண்டும் எத்தனை முறை உலறிய படியே வந்தான் ஆரவ்.
மதுரை செல்லும் முன் ஒரு வழி பாதையில் காரினை நிறுத்தி விட்டு இருவரும் கலந்தாலோசித்தார்கள்.
இவளை என்னடா பண்ணட்டும். திகட்ட திகட்ட லவ் கொடுத்தும் என் லவ்வ கேவல படுத்திட்டா. என் காதல் இவ காலடில கிடந்தாலும் என்ன வெறுத்து ஒதுக்குறா. நான் அப்படி என்னடா பண்ண. அவ என் உயிர்னு உனக்கும் தெரியும். அவ இல்லாமல் போனதால தானடா நான் அவள தேடாமல் விட்டன்.
உயிரோட இருந்தும் எதுக்கு இறந்துட்டான்னு ஒரு பிம்பத்தை கிரியேட் பண்ணனும். என் வீடு, வாசல், என் குடும்பம் எல்லாத்தையும் தூக்கி வீச இவளுக்கு எப்படிடா மனுசு வந்தது.
என் வீட்டில எல்லாரும் இவ மேல உயிரே வச்சிருக்காங்க . பெண்பிள்ளை இல்லாத வீடுன்னு எவ்வளவு செல்லம் அவளுக்கு. இப்ப இவ இல்லாமல் எதோ அமைதியா கிடக்கு.
என் பாட்டி,என் தாத்தா இவளோட கையால மட்டும் தானடா சாப்பிடுவாங்க இவ அந்த வீட்டுக்கு வந்த அப்புறம். இந்த ஐந்து வருசம் எப்படிடா நாங்க யாரும் இல்லாமல், எங்களை நினைக்காமல் இருந்திருப்பா?
பொறுமையா இரு ஆரவ். அந்த பொண்ணு முழிச்சதும் கண்டிப்பா கேட்டிடலாம். நீ டென்ஷன் ஆகாத. உனக்கு தெரிஞ்சதுமே இவ்வளவு தவிச்சு போறன்னா குடும்பத்துக்கு கூட்டிட்டு போய் திடீர்னு நிறுத்தினா என்னடா ஆகும். கொஞ்சம் பொறுத்து எல்லாத்தையும் செய்யலாம் என்று யோசனை அளித்தான்.
ஆரவ்விற்கும் சக்திவேல் சொல்வது சரியெனப்பட அவர்கள் ஐடென்டி கார்டில் இருந்த அட்ரஸை நோட் செய்துவிட்டு பாடிகார்ட்ஸை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வரும் படி சொல்லி அனுப்பினான். பட் நீங்க அவங்க கூடவே இருங்க.
அவங்க என்ன பண்ணாலும் எங்களுக்கு அப்டேட் பண்ணிட்டே இருங்க. எங்க போனாலும் கூடவே போங்க. யார் கூட பேசுனாலும் கவனமா கவனிங்க. இந்த தடவை இவங்க எங்களையும் பறந்து போய்விடாமல் நம்ம தான் பத்திரமா பாத்துக்கணும்.
அவர்கள் இடம் கட்டளையிட்டவன் தனது அன்பு மனைவியை சென்று பார்த்தான்.
கொஞ்சம் வெளிய இரு என்று இன்னொருவனையும் அனுப்பி விட்டு, வெகு நாட்களாக காண கிடைக்காத இந்த அழகிய முகத்தை கண்டு இரசித்தான்.
எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டது. இவளின் முக ஒப்பனைகள் கூட மாறுபட்டு உள்ளது என்று அனைத்தும் கணிசமாக கவனித்தான்.
கவனிப்பின் ஈர்ப்பு அதீதமான போது அவனையும் அறியாமல் அவள் முகத்தோடு முகம் கொண்டு அவன் உரச மேனி இரண்டும் ஒன்று மேல் ஒன்றாக ஆனது. ஸ்பரிசம் பட்ட உணர்வு கூட இல்லாமல் மயக்க நிலையில் இருந்தவளை ரசிப்பதற்கு அவனுக்கு திட்டவில்லை.
“நீ ஆதினிய இப்பவே கல்யாணம் பண்ணு. நான் சொன்னா செய்வல்ல ஆரவ் இப்ப பண்ணுடா”….
அவள் அவனிடம் இறுதியாக பேசிய வார்த்தைகள்!
பைத்தியக்காரத்தனம், நீ தான்டி என் பொண்டாட்டி. அவளுக்கு நான் ஏன் தாலி கட்டனும்…
வாதிட்டவனை திரும்பிப் பார்க்காமல் சென்று விட அவள் கோபித்து கொண்டு செல்வதை பார்த்து தவித்து போனவன் இதோ அவள் கழுத்தில் தாலி இல்லாததை கண்டு இப்போது கண் கலங்கினான்.
காதல், கல்யாணம், காமம் என்று அனைத்தும் அவளோடு குளிர்ந்து போகும் அளவு அனுபவித்தவன் அவன். இன்னும் கூட அதை அனுபவிக்க காத்து கிடக்கும் அவனுக்கு அவளின் இந்த தவிர்ப்பும் பொய்களும் கோபத்தை தூண்டியது.
அதே போல் தனது பெற்றோரை அவமதித்து விட்டு சென்றவளை காணும் போதும் மீண்டும் அந்த கோபம் இரட்டிப்பானது.
அதே சமயம் கயல் உயிரோடு தான் உள்ளால் என்ற செய்தியும் அதை ஆரவ் பார்த்து விட்டான் என்ற செய்தியும் கச்சிதமாக சேர்க்கப்பட வேண்டிய இடத்தில் சேர்ந்தது.
“இடியட் எப்படிடா அவள உயிரோட விட்டீங்க, இத்தனை நாளா எங்க இருந்தா? எப்படி இப்ப அவன் கண்ணுல பட்டான்னு விசாரிங்க. அவ அட்ரஸ் எல்லாம் எனக்கு இன்னும் டூ ஹார்ஸ்ல தெரியனும்”,…
கர்ச்சனை குரலில் மறுமுனை வந்ததும் பயந்த விழிகளுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
மயங்கி சரிந்திருந்தவளின் விழி மீதிருந்த அந்த மச்சத்தின் மீது ஒரு மென்மையான முத்தத்தை கொடுத்தான்.
“என்ன ஏன்டி இப்படி இராட்சசன் ஆக்குற. நான் உன் ரசிகனா இருக்கனும்னு ஆசப்பட்டவன்டி. உன் மேல உருகி உருகி லவ் கொடுத்த என்ன இப்படி இரும்பாக்கிட்டையே”,
அவளது கன்னத்தில் அவனுடைய ஆட்காட்டி விரல் விளையாடிய வண்ணத்தில் அவளது முகம் முன்பு பேசினான்.
மயக்கும் நிலையிலும் அவளது தொண்டை குழியில் இறங்கிய எச்சில் அவனுடைய தாகத்தை கூட்டிவிட அவனையும் தாண்டி தொட்டை பகுதியில் அதுவும் அவனின் அன்பு மனைவி இல்லை முன்னால் மனைவிக்கு முத்தமிட்டான்.
அவள் முகம் காண காண அவனுக்கு திட்டவில்லை. மீண்டும் அந்த அழகிய நாட்கள் வேண்டும் என்று அவன் மனம் பாடாய் பட்டது. அவளோடு வாழும் நாட்கள் சிறிதானாலும் அது என்னோட ஆக வேண்டும் என்று அவன் மூளை அவனுக்கு கட்டளையிட்டது.
இரு மணி நேரம் ஆன காரணத்தினால் மென்மையாக மயக்கம் தெளியும் நிலையில் இருந்தாள் கயல்..
ஆரவோ அவளின் செவ்வர்ண உதட்டு சாயலை பூசி இருந்த அந்த உதட்டை தொட்டு இரத்தவாறு இவ்விதழ் நோக்கி தன் முகத்தை நகர்த்தினான் .
ஏதோ உடல் சூடு அதிகரிப்பது போன்று உணர்ந்த கயல் விழித்த சமயத்தில் ஆரவ் அவளுக்கு இதழ் முத்தம் கொடுக்க இருவரின் இமையில் இருந்த கரு விழியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
சண பொழுதில் நிகழ் காலம் அறிந்தவள் தன்னை சமன் செய்து கொண்டு அவனை தள்ளி நகர்த்த இரண்டு நிமிடங்களை தாண்டிவிட்டது.
கூடவே படபடவென அவளது உதட்டை துடைத்து எடுத்தாள்.
“நீயெல்லாம் ஒரு மனுசனா? உன்ன பார்க்க கூட விருப்பம் இல்லன்னு சொன்ன என்ன எங்கிட்ட விருப்பமே இல்லாமல் முத்தம் கொடுக்குற அளவு மிருகமா?
அவளது முகம் அருவெறுப்பை தாங்கி இருந்தது.
“ஏய் நான் உன் புரு…
நீ ஆதினியோட புருசன்”…
அதன்பின் அவனால் என்ன சொல்ல இயலும். அமைதியானான்.
அவளுக்கு கோபம் தலைக்கு மேல் என்றாலும் கூட சுற்றும் முற்றும் பார்த்தவள் முதிரிச்சியாக நடந்து கொண்டாள்.
உன்ன மாதிரி ஒரு அசிங்கத்தை பாக்குறத விட எனக்கு வேற அசிங்கமே எதுவும் இல்ல. இதுக்கு நான் உள்ளேயே உட்கார்ந்துக்கலாம் என்று சென்று காரினுள் மீண்டும் அமர்ந்து கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
காரின் வெளிப்புற பகுதியில் ரோட்டில் இருந்து ஆரவ் அவள் காரில் ஏறி அமரும் வரை அவளையே விழி அகலாது பார்த்து கொண்டு இருந்தான்.
உள்ளத்தாலும், உடலாலும் ஒன்றிணைந்தவனை காண அருவெறுப்பாக உள்ளதா? என மனசாட்சி கேள்வி கேட்டாலும் விவாகரத்தான பின் அவளை தீண்டுவதை விட தோடுவதே தவறு என்று அவனது மூளை நினைவுறுத்தியது.
“கயல் அவன் காண்பதை கண்டதும் தூ என்று எச்சில் துப்புவது போல செய்ய, அவனே அவை முகத்தில் விழுவது போல் பாவனை செய்து தன் கண்ணை இறுக மூடி கொண்டான்”.
இங்கு நடக்கும் அனைத்தும் வீடியோ காலின் மூலம் இரு ஜோடி கண்கள் வெறிகொண்டு பார்த்து கொண்டு இருந்தது.
என்ன சக்தி இதுவெல்லாம் என்று ஒரு