கனவு 07
துவாரகா கௌதமின் கையில் கத்தியை திணித்தவள் அதை தன்னுடைய கழுத்தில் வைத்து அழுத்தியவாறு அவனை கொள்ள சொல்ல இவ்வளவு நேரமும் பொறுமையாக இருந்து அவளுடைய பிதற்றளை கேட்டுக் கொண்டிருந்த கௌதமுக்கு பொறுமை காற்றோடு கரைந்து போக விட்டான் அவளுடைய கன்னத்தில் பளார் என்று ஒரு அறையை.
அதில் பொத்தென்று கட்டிலில் விழுந்தாள் துவாரகா.
அதில் அவளுடைய கனவும் கலைந்து போக கன்னத்தில் சுளிர் என்ற வலி அவளைத் தாக்க ஒற்றை கையால் அதை தேய்த்தவாறே தலையை திருப்பி பார்க்க அங்கு கௌதமம் ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தான் அவளை முறைத்தவாறு.
“கௌதம் என்ன அடிச்சீங்களா”
என்று அவள் அதிர்ச்சியாக கேட்க.
அவனோ,
“ஆமா அடிச்சேன் தான் இப்போ அதுக்கு என்னங்கிற எனக்கு இருந்த கோபத்துக்கு உன்னை இன்னும் நாலு அடி அடிச்சிருக்கணும் ஒரு அடியோடு விட்டது என்னோட தப்பு தான்”
“கௌதம் எதுக்கு கௌதம் என்ன அடிச்சீங்க நான் என்ன தப்பு பண்ணேன்”
என்று கேட்டாள் அவள்.
“என்ன தப்பு பண்ணியா என்னடி நினைச்சுகிட்டு இருக்க நீ என் கைல கத்திய கொடுத்து உன்னை நீயே கொல்ல சொல்ற”
என்று அவன் கேட்க அவளோ அவனை புருவங்கள் முடிச்சிட பார்த்தவள்,
“என்ன கவுதம் விளையாடுறீங்களா நான் ஏன் அப்படி செய்ய போறேன் எனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு”
என்று அவள் கேட்க கௌதமோ,
“எனக்கும் தெரியல துவாரகா வரவர உன்னோட நடவடிக்கை ஒன்னும் சரியில்லை எப்போ எப்படி இருப்பேன்னு கூட தெரிய மாட்டேங்குது.
ஏதோ பழங்காலத்தில பேசுற மாதிரி பழந்தமிழ்ல பேசுற யாரோ ஒரு பொண்ணு கூட எனக்கு தொடர்பு இருக்கிற மாதிரியும் பேசுற அதுக்கு நீ இடைஞ்சலா இருக்கிற உன்னை நான் கொல்ல பார்க்கிறேங்கிற மாதிரியே சொல்ற.
எனக்கு ஒண்ணுமே புரியல என்ன தான் நடக்குது இங்க”
என்றான் கௌதம்.
அவன் சொல்வதை கேட்டவளோ பொத்தென்று கட்டிலில் அமர்ந்தாள்.
தன்னுடைய இரு கைகளையும் தலையில் வைத்து தாங்கியவாறு பித்து பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.
ஐந்து நிமிடம் ஆகியும் அவளிடம் இருந்து எந்த ஒரு அசைவம் இல்லாமல் இருக்க பதறிப்போன கௌதமோ அவள் அருகில் வந்து அமர்ந்தவன் அவளுடைய தோளைத் தொட்டு,
“துவாரகா உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற நீ கனவுல அப்படி என்னதான் கண்ட என்ன நடக்குதுன்னு சொல்லுமா”
என்று கேட்டான் அவன்.
அவளோ அவனை ஏறெடுத்து பார்த்தவள்பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு,
“தெரியல கௌதம் என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல இப்ப கொஞ்ச நாளா என்ன ஒரு கனவு தொடர்ந்து டார்ச்சர் பண்ணுது.
பொதுவா எல்லாத்துக்கும் கனவு வரும் ஆனா வந்த கனவே யாருக்கும் வராது ஆனா எனக்கு இப்ப கொஞ்ச நாளா அப்படி இல்ல கெளதம்.
ஒரே கனவு தான் வருது ஆனா வேற வேற காட்சிகளா வருது என்னால அதை புரிஞ்சுக்கவே முடியல”
என்றவள் தன்னுடைய தலையை தாழ்த்திக் கொள்ள அவனோ அவளுடைய தலையை நிமிர்த்தியவன்,
“துவாரகா இங்க பாரு நீ கனவுல என்னென்ன பார்த்தியோ அதை எல்லாத்தையும் என்கிட்ட அப்படியே சொல்லு”
என்று அவன் கேட்டான்.
அவளோ இத்தனை நாட்கள் தான் கண்ட கனவுகளை ஒன்று விடாமல் அவனிடம் அப்படியே உரைத்தாள்.
அவள் கூறக் கூற அனைத்தையும் கேட்ட கௌதமோ,
“இது எல்லாமே உனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கா ஆச்சரியமா இருக்கு துவாரகா”
“ஆமா கௌதம் என்னோட நினைவுல இருந்து இந்த கனவு மறையவே மாட்டேங்குது கண்ண மூடுனா அப்படியே படமா காட்சி அளிக்கிறது எனக்கு எது நிஜம் எது கணவுன்னு கூட தெரியாத அளவுக்கு நான் குழம்பிப்போய் இருக்கேன்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது ஒருவேளை எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா கௌதம்”
என்று விசும்பியவாறு அவனிடம் கேட்டாள்.
அவனோ அவளை தன்னோடு அணைத்தவன்,
“அப்படி எல்லாம் சொல்லாதடி அப்படி எதுவும் ஆக விடமாட்டேன் உனக்கு ஏதாவது ஒன்னுன்னா கண்டிப்பா நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் நாம வேணா எதுக்கும் டாக்டரை பார்த்துட்டு வருவோமா துவாரகா”
என்று அவன் சொன்னான்.
அதற்கு அவளோ அவனிடம் இருந்து பிரிந்தவள்,
“அப்போ எனக்கு பைத்தியம்னு முடிவே பண்ணிட்டீங்களா கௌதம்”
“லூசாடி உனக்கு நான் அப்படி சொல்லுவேனா ஏன் நான் உன்ன டாக்டரை பார்க்க சொல்றேன் அப்படின்னா இந்த கனவால நீ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்க ஒரு தடவை டாக்டரை பார்த்தோம்னா அவங்க இதுக்கு ஏதாவது ஒரு சொல்யூஷன் சொல்லுவாங்க இல்ல அதனால தான் சொன்னேன் நீ என்னடானா என்னென்னமோ உளர்ற”
என்றான் கௌதம்.
“சரி கௌதம் நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் நாம நாளைக்கு போகலாம்”
என்றாள் அவள்.
அதற்கு புன்னகைத்த கௌதமோ அவளுடைய நெற்றியில் இதழ் பதித்து விட்டு,
“சரி வா சாப்பிடலாம்” என்றவன் தான் வாங்கி வந்த பார்சலை பிரித்து அவளுக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டுவிட்டு இருவரும் துயில் கொள்ள ஆரம்பித்தார்கள்.
அவளோ தூங்கும் முன்பு,
“கடவுளே அந்த கனவு எனக்கு வரக்கூடாது வரவே கூடாது”
என்று ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு கண்ணையற,
அவள் எப்பொழுதடா தூங்குவாள் என்று காத்திருப்பது போல அவளுக்கு வந்தது அந்த கனவு.
அதன் விளைவு விடிந்ததும் கௌதமை போட்டு அவள் படுத்தி எடுத்து விட்டாள்.
கௌதமோ அவளுடைய இந்த செயலினால் செய்வதறியாது திகைத்து நின்றான்.
இனி காலம் தாழ்த்துவது சரியில்லை என்று நினைத்தவன் உடனே தனக்கு தெரிந்த ஒரு சைக்காடிஸ்ட் டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கியவன் தன்னுடைய மனைவியை அழைத்துச் சென்று விட்டான்.
ஒரு 40 வயது இருக்கும் அந்த மருத்துவருக்கு.
நன்கு அனுபவம் வாய்ந்தவராக இருந்தார் அவர்.
அவருடைய அறைக்குள் நுழைந்த கௌதமையும் துவாரகாவையும் புன்னகை முகமாக வரவேற்றார் அந்த டாக்டர் அமராந்தி.
அவர்கள் உள்ளே வரவுமே துவாரகாவின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனிக்கலானார் அமராந்தி.
“ஹலோ டாக்டர்”
என்று கௌதம் அமர அவன் அருகில் எதுவும் கூறாமல் பவ்யமாக அமர்ந்தாள் துவாரகா.
அவளுடைய முகமோ கலை இழந்து காணப்பட்டது.
சரியான துக்கம் இல்லாததால் கண்களுக்கு கீழ் கருவளையம் வந்திருக்க அவளுடைய கண்களோ உயிர் இல்லாதது போல் சோர்வாக காணப்பட்டது.
“சொல்லுங்க கௌதம் என்ன ஆச்சு உங்க மனைவிக்கு மார்னிங் நீங்க கால் பண்ணும் போது ரொம்ப பதற்றமா இருந்த மாதிரி இருந்துச்சு”
என்று கேட்டார் அமராந்தி.
அதற்கு கௌதமோ,
“ஆமா டாக்டர் அதனாலதான் உங்க கிட்ட பேசின உடனே நான் இவங்கள அழைச்சிட்டு வந்துட்டேன் இதுக்கு மேல விட்டா இவளோட நிலைமை என்ன ஆகும்னு எனக்குத் தெரியல தனியா வீட்ல இருக்கும்போது ஏதாவது பண்ணிடுவாளோன்னு பயமா இருக்கு டாக்டர்”
என்று அவன் வருத்தப்பட்டு கூறினான்.
உடனே டாக்டர்,
“என்ன கௌதம் நீங்க இப்படி சொல்ற அளவுக்கு என்ன நடந்துச்சு என்கிட்ட எதையும் மறைக்காம அப்படியே சொல்லுங்க”
என்றார் அவர்.
கௌதமோ கடந்த நான்கு நாட்களாக துவாரகாவின் மாற்றங்களை பற்றி தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவரிடம் கூறினான்.
அவன் கூறுவதை நுணுக்கமாக கேட்டு அறிந்தவரோ துவாரகாவிடம் தன்னுடைய பார்வையை திருப்பினார்.
அவளோ தன்னுடைய பார்வையை அங்கு அவருடைய டேபிளில் ஒரு குதிரையில் ஒரு அரசர் கையில் வாளோடு அமர்ந்திருக்க அந்த குதிரையோ இரண்டு காலை மேலே தூக்கி இருப்பது போன்று இருக்கும் ஒரு பொம்மையின் மேல் பதிந்திருந்தது.
அவளுடைய பார்வை செல்லும் இடத்தை பார்த்த அமராந்தியோ,
“துவாரகா இந்த டாய் உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கா”
என்று கேட்டார் அவர்.
“இல்ல டாக்டர் எனக்கு இதை பிடிக்கல இதை பார்க்கும் போது அப்படியே இதை உடைச்சு தூள் தூளா ஆக்கணும் போல இருக்கு. எனக்கு அவ்வளவு கோபம் வருது”
என்றாள் அவள்.
அவளுடைய பதிலில் கௌதம் அவளை திடுக்கிட்டு பார்க்க டாக்டரோ புன்னகைத்தவர் அவளிடம் அமைதியாகவே பேசினார்.
“ஏன் துவாரகா அது உங்களுக்கு பிடிக்கல”
என்று அவர் கேட்க அவளோ,
“இது அந்த கௌதமாதித்தன் தான் என்ன கொல்ல வர்ற மாதிரி இருக்கு”
என்றாள் அவள்.
கௌதமோ தன்னுடைய பார்வையாலேயே,
“இங்கு பாருங்க டாக்டர் இப்படித்தான் பேசுறா”
என்று கண்களாலேயே சைகை செய்தான்.
அவரும் தன்னுடைய கண்களை மூடி திறந்தவர் தான் பார்த்துக் கொள்வதாக அவனிடம் சைகை செய்துவிட்டு துவாரகாவிடம்,
“நீங்க சொன்ன இந்த கௌதமாதித்தன் யார் துவாரகா அவர் ஏன் உங்களை கொள்ள வராரு”
என்று கேட்டார் அவர்.
உடனே அதே கோபத்தோடு கௌதமின் மேல் பார்வையை திருப்பியவள்,
“இதோ இவன்தான் டாக்டர் இவன் தான் அந்த கௌதமாதித்தன் இவனுக்கும் அந்த சாயராவுக்கும் நான் இடைஞ்சலா இருக்கேன் அதனாலதான் என்னை கொலை பண்ண பார்க்கிறான்”
என்றாள் அவள்.
அவளுடைய இந்த வார்த்தையில் மொத்தமாக உடைந்தான் கௌதம்.