கனவு -29
துவாரகாவை மருத்துவமனையில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் கௌதம்.
இன்றோடு அவர்கள் வந்து இரண்டு நாட்கள் ஆகின்றது.
இந்த இரண்டு நாட்களும் கௌதம் அவளை இதுவரை கவனித்ததை விட மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டான்.
அவள் தான் அவனுடைய இந்த கவனிப்பில் திக்கு முக்காடி போனாள்.
இந்த இரண்டு நாட்களும் அவளை பெட்டை விட்டு இறங்கவே விடவில்லை.
அவளுக்கு என்னென்ன வேண்டுமோ அனைத்தையும் தானே செய்வேன் என்று பார்த்து பார்த்து செய்து வந்தான்.
இதோ இப்பொழுது கூட அவளை குளிக்க வைக்கிறேன் என்று தோளில் டவளோடு பெட்டில் அமர்ந்திருப்பவளை நடக்கக் கூட விடாமல் தூக்குவதற்காக வந்தவனை,
“ஐயோ கௌதம் நான் நல்லாதான் இருக்கேன் என்னை ஏன் இப்படி சின்ன குழந்தை மாதிரி ட்ரீட் பண்றீங்க”
“நீ என்ன வேணா சொல்லு துவாரகா எனக்கு அதைப் பத்தின கவலையே இல்லை.
அந்த ஒரு வாரமும் நான் உன்னை கவனிக்காம விட்டதே என் மனசுல ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு அதனால நீ எவ்வளவு கஷ்டப்பட்ட.
இனி உன்னை ஒரு குறை இல்லாம நான் பார்த்துப்பேன் சரி வா குளிக்கப் போலாம்”
என்றவன் அவளை தூக்கப் போக அவளோ தன்னுடைய இரு கைகளாலும் அவனுடைய முகத்தை தாங்கியவள்,
“இங்க பாருங்க கௌதம் தப்பு நடக்கிறது சகஜம் தான் தப்பே பண்ணாதவன் மனுஷங்கன்னு யார் இருக்காங்க சொல்லுங்க அதுவும் போக நீங்க ஒண்ணும் அவ்வளவு பெரிய தப்பு எல்லாம் பண்ணல நான் தான் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்.
டாக்டர் கொடுத்த டேப்லட் ஒழுங்கா போட்டு இருந்திருக்கணும் அதை போடாம நானும் கஷ்டப்பட்டு உங்களையும் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்.
ஆனா அதனால ஒரு நல்ல விஷயமும் நடந்து இருக்கு கெளதம்”
என்று அவள் சூட்சமமாக சொல்ல கௌதமோ புருவங்களை சுருக்கியவன்,
“என்ன துவாரகா சொல்ற என்ன நல்ல விஷயம்”
“அதுவா அது ஒன்னும் இல்ல கெளதம் நீங்க இப்போ எப்பவுமே என் கூடவே இருக்கீங்க பாத்திங்களா அதை தான் சொன்னேன்”
என்றவள் அவனை சிரித்து சமாளித்தாள்.
“ப்ளீஸ் கௌதம் நீங்க இப்படி எல்லாம் பண்ணாதீங்க நான் நல்லா இருக்கேன் என்னோட சின்ன சின்ன வேலைகளை நானே பார்த்துக்கிறேன் ப்ளீஸ் கௌதம் புரிஞ்சுக்கோங்க”
என்று அவள் சொல்ல அவனோ சரி என்று சம்மதம் கூறினான்.
அவர்களுடைய அறையில் உள்ள டேபிள் மேல் இருந்த கௌதமின் மொபைல் ரிங் ஆக ஆரம்பித்தது.
குளியல் அறைக்கு சென்ற துவாரகாவையே பார்த்துக் கொண்டு நின்ற கௌதமோ தன்னுடைய அலைபேசியின் ஓசையில் தன்னுடைய கவனத்தை திருப்பினான்.
மொபைலில் வந்த அழைப்பின் எண்ணை பார்த்தவன் அவனுடைய டீம் லீடர் சரவணன் என்றதும் ஆன் செய்து காதில் வைத்தான்.
அவன் அழைப்பை ஏற்றதும் மறுமுனையில் இருந்த சரவணனோ,
“கௌதம் நீங்க ஆபீஸ் வரலைல்ல அதனால தான் நான் உங்களுக்கு கால் பண்றேன்.
அண்ட் இன்னொரு முக்கியமான விஷயம் நம்ம கஷ்டப்பட்டு பண்ண ப்ராஜெக்ட் சக்சஸ் ஆயிட்டு கௌதம். மேல் இடத்துல இருந்து நம்மளுக்கு அப்ரூவல் கிடைச்சுது அது மட்டும் இல்ல கெளதம் ஃபாரின் கம்பெனில நம்மளோட ப்ராஜெக்ட்டுக்கு பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு சோ அத செலிப்ரேட் பண்றதுக்காக நம்ம ஆபீஸ்ல இருந்து ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காங்க பெரிய ஹோட்டல்ல அதனால நீங்க கண்டிப்பா அதுல கலந்துக்கணும்.
நீங்க மட்டும் அன்னைக்கு சிஇஓ கிட்ட கரெக்ட் டைமுக்கு எனக்கு சைன் வாங்கி அனுப்பலைன்னா இவ்வளவு சீக்கிரமா நம்மளால இதை சாதிச்சு இருக்கவே முடியாது.
அதனால கண்டிப்பா நீங்க இதுல கலந்துக்கணும்”
என்றார் அவர்.
“சூப்பர் சார் இதை கேட்கும் போது ரொம்ப ஹேப்பியா இருக்கு ஆனா என்னால அந்த பார்ட்டில கலந்துக்க முடியாது”
என்றான் அவன்.
“வாட் என்ன கௌதம் இப்படி சொல்றீங்க இந்த பார்ட்டில நீங்களும் ஒரு முக்கியமான ஆள் சோ கண்டிப்பா நீங்க இதை அவாய்ட் பண்ண கூடாது”
“இல்ல சார் என்னோட வைஃப் இப்பதான் சரியாகிருக்காங்க நான் அவங்க கூட இருந்து பாத்துக்கணும் அதனால தான் நான் ஒர்க் ப்ரம் ஹோம் கூட கேட்டு வாங்கி இருக்கேன் கொஞ்ச நாளைக்கு.
சோ அப்படி இருக்கும்போது பார்ட்டியில எல்லாம் என்னால கலந்துக்க முடியாது சார் புரிஞ்சிக்கோங்க”
“நோ கௌதம் சிஇஓ அவரே உங்கள மென்ஷன் பண்ணி இருக்காங்க கண்டிப்பா நீங்க இந்த பார்ட்டியில கலந்துக்கணும் அப்படின்னு இத அவாய்ட் பண்ணா அவர அவமதிக்கிற மாதிரி இருக்கும் வேணும்னா நீங்க உங்க வைஃபை கூட உங்க கூட கூட்டிட்டு வாங்களேன்”
என்று அவர் கூற சிறிது நேரம் யோசித்த கௌதம் பின்பு ஒரு வழியாக முடிவு செய்தவன்,
“ஓகே சார் நான் அந்த பார்ட்டியில் கலந்துக்குறேன் எப்போ பார்ட்டி”
என்று அவன் கேட்க,
“இந்த வீக் எண்ட் கௌதம் சண்டே சோ நம்ம பார்ட்டியில் மீட் பண்ணலாம்”
என்றவர் வைத்துவிட்டார்.
இவனோ அவர் போனை வைத்ததும் யோசனையோடு அமர்ந்திருந்தான்.
குளித்து முடித்து வெளியே வந்த துவாரகாவோ அவன் அருகில் வந்தவள்,
“கௌதம் என்னாச்சு உங்களுக்கு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க”
என்று கேட்டாள் அவள்.
அவனோ அவனுடைய டீம் லீடர் சரவணன் கூறியதை கூற அவளோ,
“இவ்வளவு தானா இதுக்காகவா பலத்த யோசனையோடு உட்கார்ந்திருக்கீங்க. இது உங்க உழைப்புக்கு கிடைச்ச வெற்றி கௌதம் கண்டிப்பா கலந்துக்கணும் இது உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்கும் தெரியும்.
என்ன காரணம் காட்டி நீங்க அதை அவாய்ட் பண்ண கூடாது நீங்க போயிட்டு வாங்க”
“என்ன துவாரகா நீ இப்படி பேசுற என்னால உன்னை தனியா விட்டுட்டு அங்க பார்ட்டில போய் நிற்க முடியாது என்னோட மனசு புல்லா உன்ன சுத்திக்கிட்டே தான் இருக்கும் நீயும் என் கூட வர்றியா”
என்று கேட்டான் அவன்.
“இல்ல கெளதம் அது நல்லா இருக்காது அங்க உங்க கூட ஒர்க் பண்றவங்க எல்லாரும் இருப்பாங்க நான் வந்து அங்க என்ன செய்யப் போறேன் எனக்கு அங்க யாரையும் தெரியாது கொஞ்ச நேரம் தானே நான் என்ன நல்லா பாத்துப்பேன் கௌதம் நீங்களே போயிட்டு வாங்க”
என்று அவள் சொல்ல அவனோ ஒரு முடிவில் அவளுடைய வற்புறுத்தலால் சரி என்று ஒத்துக் கொண்டான்.
இது வெறும் பார்ட்டி மட்டுமல்ல அன்று நிறைந்த பௌர்ணமி.
இந்த நாளை தேர்ந்தெடுத்தது சாயரா.
அவள் தான் கௌதமுடன் தன்னை இணைத்துக் கொள்ள அவள் தேர்ந்தெடுத்த நாள்தான் இது.
மீண்டும் ஒரு காதல் போர் நிகழும் நாளும் அதுவே.
***
இன்று ஞாயிற்றுக்கிழமை சாயரா கௌதமுடன் இணைவதற்காக தேர்ந்தெடுத்த அன்றைய நாள் யாருக்கும் காத்திராமல் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தது.
அன்றைய இரவு நிறைந்த பௌர்ணமி அவர்களுடைய முன் ஜென்மத்தில் இதே பௌர்ணமி அன்று தான் நிறைவேறாத ஆசைகளோடு மூவருடைய உயிரும் பிரிந்தன.
இன்று அதே பௌர்ணமி அன்று தன்னுடைய ஆசையை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கிறாள் சாயரா.
சென்னையில் உள்ள மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் அவர்களுக்கான பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர். கௌதமோ தன்னுடைய மனைவியிடம் கொஞ்சி கெஞ்சி என்று பார்ட்டிக்கு செல்ல மனம் இல்லாமல் அவளுடன் நேரத்தை கடத்திக் கொண்டிருந்தான்.
“துவா கண்டிப்பா நான் போயே ஆகணுமா நான் உன் கூடவே இங்கேயே இருக்கேன்டி எனக்கு அங்க போகவே பிடிக்கல நீயும் என் கூட வான்னு சொன்னா நீ கேட்க மாட்டேங்கிற நீ வந்தாளாவது நான் அங்க போவேன் நீயும் இல்லாம நான் அங்க போய் என்னடி செய்றது.
நான் வேணா எனக்கு கொரோனா வந்து இழுத்துகிட்டு கிடக்குன்னு என்னோட டீம் லீடருக்கு போன் பண்ணி சொல்லிடவா நம்ம ரெண்டு பேரும் ஜாலியா இருக்கலாம்”
என்று அவன் சொல்ல அவளோ அவனுடைய வாய் மீது சப் என்று அடித்தவள்,
“என்ன பேச்சு பேசுறீங்க கௌதம் ஒரு பேச்சுக்காக கூட நீங்க இப்படி எல்லாம் சொல்லாதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்னோட கௌதமுக்கு எதுவும் ஆகக்கூடாது. நீங்க 100 வருஷம் இல்லை இல்லை எல்லையே இல்லை அத்தனை வருஷம் என்னோட கௌதம் நல்லா இருக்கணும்”
“அடியே இப்ப இருக்குற காலகட்டத்துல அவன் அவன் அறுபது வயசு தாண்டுறதே பெரிய விஷயமா இருக்கு நீ நூறே காணாது பல வருஷங்களுக்கு என்ன உயிரோட இருக்க சொல்றியா.
அவ்வளவு வருஷம் எல்லாம் எனக்கு வேண்டாம்மா நான் என் துவா கூட இன்னும் கொஞ்சம் வருஷம் சந்தோஷமா வாழ்ந்தா எனக்கு அதுவே போதும்”
என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க அவனுடைய தொ(ல்)லைபேசியோ தான் இருப்பதை அவனுக்கு சுட்டி காட்டியது.
‘ஐயோ இது வேற”
என்று அவன் சலித்துக் கொள்ள,
“கௌதம் ஏற்கனவே ரொம்ப டைம் ஆயிட்டு இன்னும் நீங்கள் லேட் பண்ணா என்ன அர்த்தம் சீக்கிரம் கிளம்புங்க இங்க பாருங்க கால் கூட வருது”
என்று அவனை அனுப்பி வைத்தாள்.
ஏதோ இன்று செல்பவன் திரும்பி வரவே மாட்டேன் என்பது போல அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு சென்றான் கௌதம்.
கௌதம் அங்கிருந்து சென்ற பிறகு வெகு நேரம் கழித்து அவனுடைய அலைபேசியில் இருந்து துவாரகாவுக்கு அழைப்பு வந்தது.
அதை உயிர்ப்பித்து காதில் வைத்தவளோ அதில் கேட்ட குரலை கேட்டு அதிர்ந்து நின்று விட்டாள்.
“அமையாதேவி எவ்வாறு இருக்கின்றாய் என்னை நினைவு இருக்கிறதா நான் தான் சேனபதி சாயரா.
உனக்கு நினைவு இருக்கத்தான் செய்யும் அதுதான் அன்று சிம்லாவில் பார்த்தேனே உன்னுடைய முகத்தை.
ஆக உனக்கும் நமது பூர்வ ஜென்ம ஞாபகம் இருக்கிறது அல்லவா.
கோமாவில் இருந்து மீண்டு வந்து விட்டாய் போல அதுவும் நல்லதுக்கு தான் நானும் என்னுடைய கௌதமாதித்தனும் ஒன்றாக இணைந்த பிறகு அதை பார்த்து நீ கொஞ்சம் கொஞ்சமாக சாக வேண்டும் அல்லவா அதற்காகத்தான் கோமாவில் இருந்து திரும்பி வந்தாய் போல”
என்று இளக்காரமாய் கூறினாள் மறுமுனையில் இருந்த சாயரா.
துவாரகாவோ,
“ஏய் என் கௌதமோட போன் உன்னிடம் எப்படி வந்துச்சு”
“இதை விடு அமையாதேவி இன்னும் சற்று நேரத்தில் நானும் இதோ என்னுடைய படுக்கையில் இருக்கும் என்னுடைய கௌதமாதித்தனும் உடலால் ஒன்றாக இணைய போகிறோம்”
என்று அவள் சொல்ல பக்கத்தில் கௌதமின் முனகல் சத்தம் கேட்க அப்படியே நின்று விட்டாள் துவாரகா.