கனவு -30
சென்னையில் இருக்கும் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டல் அது.
கௌதம் எவ்வளவு சொல்லியும் மனைவி கேட்காததால் வேறு வழியே இன்றி இங்கு பார்ட்டிக்கு வந்தவன் சீக்கிரம் அதை முடித்துவிட்டு தன்னவளை காணச் செல்ல வேண்டும் என்று எண்ணமே அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அங்கு இருந்த அனைவரும் கோட் சூட் அணிந்து கொண்டு கையில் மதுக்கோட்டையுடனும் அங்கு நடக்கும் பார்ட்டியை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்க இங்கு கௌதமோ எப்போதடா இதை முடிப்பீர்கள் என்பது போல கையை பிசைந்து கொண்டு அவனுக்கும் அங்கு நடக்கும் பார்ட்டிக்கும் சம்பந்தமே இல்லாது போல் நின்று கொண்டிருந்தான்.
அப்பொழுது அங்கு வருகை தந்த அவருடைய கம்பெனி எம்டி மற்றும் சிஇஓ, சிஇஓவின் மகள் சாயரா வருகை தந்தனர்.
“குட் ஈவினிங் எவ்ரி ஒன் உங்க எல்லாரையும் இங்க பார்க்கிறதுல ரொம்பவே எனக்கு சந்தோஷம் அண்ட் இப்போ இந்த பார்ட்டிய நம்ம எதுக்காக செலப்ரேட் பண்றோம் அப்படினா மிஸ்டர் சரவணன் அண்ட் அவரோட டீம் பண்ண ப்ராஜெக்ட் ஃபாரின் கம்பெனியில ரொம்ப நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு அதனால அவங்கள பெருமைப்படுத்தும் விதமா இந்த பாட்டியை அரேஞ்ச் பண்ணி இருக்கோம்.
இப்போ மிஸ்டர் சரவணனுக்கும் அவருடைய டீம் மெம்பர் மிஸ்டர் கௌதம் அவருக்கும் ப்ரோமோஷன் கொடுக்கப் போறோம்.
இதுல மிஸ்டர் கௌதமோட பங்கு ரொம்ப அதிகமாக இருக்கு அவரோட ஹார்ட் வொர்க் ரொம்பவே எனக்கு பிடிச்சிருக்கு”
என்ற சிஇஓ,
“மிஸ்டர் கௌதம் இங்க வாங்க”
என்று அழைத்தார்.
‘அப்பா சீக்கிரம் கூப்பிட்டாங்க அவர்கிட்ட ஒரு நன்றியை சொல்லிட்டு உடனே கிளம்பிட வேண்டியதுதான்’
என்று மனதிற்குள் நினைத்தவன் வேக வேகமாக அவர் அருகே சென்றான்.
அவன் அவர் அருகில் வந்ததும் தன்னுடைய கையை நீட்டி அவனுடன் கைகுலுக்கியவரோ,
“வெல்டன் மிஸ்டர் கௌதம் உங்களுடைய ஹார்ட்வொர்க்கு நீங்க இன்னும் பெரிய லெவல்ல சாதிப்பிங்க உங்கள மாதிரி ஒருத்தர் எங்க கம்பெனியில இருக்கிறார் என்பதற்கு நாங்கள் ரொம்பவே பெருமைப்படுகிறோம்”
என்று கூறியவர் அவனை ஆற தழுவினார்.
அவருடைய அருகில் நின்ற சாயரா கௌதமையே விளுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவனோ அவள் பக்கம் திரும்பவே இல்லை.
ஏன் அவள் ஒருவள் அங்கு நிற்கிறாள் என்று கூட அவன் அறியவில்லை.
இப்பொழுதே என்னை விடுங்கடா நான் என் மனைவியிடம் போகின்றேன் என்பதைப் போலத்தான் காலில் சுடுதண்ணி ஊற்றியது போல நின்று கொண்டிருந்தான் கௌதம்.
“ஓகே எவ்ரி ஒன் எல்லாரும் இந்த பார்ட்டிய நல்ல என்ஜாய் பண்ணுங்க”
என்று சீஇஓ சொல்லிவிட அங்கு நின்ற மற்ற அனைவரும் கையில் மது கோப்பையுடன் ஓஹோ என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்திருந்தனர்.
கௌதமோ அவனுடைய டீம் லீடர் சரவணன் அருகில் வந்தவன்,
“சார் நான் கிளம்பட்டுமா வந்து ரொம்ப நேரம் ஆகுது அதான் எல்லாம் முடிஞ்சுட்டுல்ல இன்னும் சாப்பிட வேண்டியது மட்டும் தான் பாக்கி நான் வீட்டுக்கு போறேன் சார் என் வைஃப் எனக்காக காத்துகிட்டு இருப்பாங்க”
என்று அவன் சொல்ல சரவணனோ,
“அட என்ன கௌதம் நீங்க உங்க வைஃபை விட்டு கொஞ்ச நேரம் கூட பிரிஞ்சு இருக்க மாட்டீங்க போல இருக்கு இன்னைக்கு ஒரு நாள் தானே இன்னும் கொஞ்ச நேரம் எங்க கூட இருந்துட்டு போங்க அங்க பாருங்க எல்லாரும் எவ்வளவு ஜாலியா என்ஜாய் பண்றாங்க.
நீங்க என்னடான்னா ஸ்கூல் பையன் மாதிரி வீட்டுக்கு போறேன் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க வாங்க கௌதம்”
என்றவர் வரமாட்டேன் என்றவனை வலுக்கட்டாயமாக அங்கு ட்ரிங்க்ஸ் பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றார்.
அங்கு ஒரு சிலர்களோ கையில் ட்ரிங்க்ஸ்வுடன் ஆடிக் கொண்டிருக்க கௌதமின் கையிலும் ஒரு ட்ரிங்க்ஸ் கோப்பையை தினித்தவர்,
“லெட்ஸ் என்ஜாய் கௌதம் குடிங்க”
என்றார் சரவணன்.
“இல்ல சார் நான் குடிக்க மாட்டேன்”
என்று அவன் சொல்ல,
“அட என்னப்பா இன்னைக்கு ஒரு நாள் குடிச்சா தப்பு ஒன்னும் இல்ல”
என்றவரோ அவன் மறுக்க மறுக்க அவனுடைய வாய்க்குள் இரண்டு மூன்று கோப்பை என ஊத்திவிட்டார்.
இதை அனைத்தையும் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த சாயராவோ,
“ஆஹா அவரை எப்படி நம்ம வழிக்கு கொண்டு வரலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்தா கடவுளே அதுக்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார் இந்த மாத்திரையை மட்டும் கௌதமுக்கு கொடுத்துட்டா போதும் அதுக்கு அப்புறம் இன்னைக்கு ஃபுல்லா என்னோட கட்டுப்பாட்டில் தான் கௌதம் இருப்பார்”
என்று தன்னுடைய கையில் இருக்கும் ஒரு சிறிய மாத்திரையை எடுத்துக் கொண்டவள் ஒரு மது கோப்பையில் அதை போட்டு நன்கு கலக்கியவள் நேராக கௌதமின் அருகில் சென்றாள்.
அவனுக்கோ இருக்க இருக்க போதை ஏற ஆரம்பித்தது.
ஆனாலும் தன்னுடைய தலையை ஆட்டி தன்னை சமன்படுத்த முயன்று கொண்டிருந்தான்.
அப்பொழுது அவன் அருகில் வந்த சாயராவோ,
“ஹாய் கௌதம் கங்கிராட்ஸ்”
அவனோ சற்று உளறலாக,
“ஹ ஹ ஹாய்”
என்றான்.
“என்ன கௌதம் உங்க டீம் லீடர் கூட மட்டும் தான் என்ஜாய் பண்ணுவீங்களா என்கூட எல்லாம் என்ஜாய் பண்ண மாட்டீங்களா”
என்று கேட்டாள் அவள்.
“ஐயோ அப்படியெல்லாம் இ இல்லைங்க மே மேடம்”
என்று அவன் சொல்ல,
“அப்போ எனக்காக இந்த ட்ரிங்க் நீங்க குடிக்கனும் அப்படி நீங்க குடிச்சா நான் ஒத்துக்குறேன்”
“ஐயோ வேணாம் ப்ளீஸ் மேடம் ஏற்கனவே என்னோட லீடர் அதிகமா குடுத்துட்டாரு எனக்கு குடிச்சு பழக்கம் கிடையாது இப்பவே தல ரொம்ப சுத்துது இதுக்கு மேல குடிச்சா கண்டிப்பா என்னால நிக்க கூட முடியாது நான் வீட்டுக்கு போகணும்”
என்றான் கௌதம்.
‘ஐயோ இவன் வேற எப்ப பாரு பொண்டாட்டி முந்தானையிலேயே இருக்கணும்னு ஆசைப்படுறான்.
உன்ன அவகிட்ட இருந்து தனியா பிரிச்சு கூட்டி வருவதற்காக நான் போட்ட பிளான் தான் இந்த பார்ட்டி அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுடுவேனா என்ன’
என்று தனக்குள் கூறிக் கொண்டவள்,
“அவ்வளவு தானே கெளதம் கண்டிப்பா போகலாம் எனக்காக இந்த ஒரு கிளாஸ் மட்டும் நீங்க குடிச்சீங்கன்னா நானே உங்கள உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்”
என்றாள் அவள்.
“ஐயையோ வேண்டாம் என் ஒய்ஃப்க்கு உங்கள பார்த்த பிடிக்காது அதனால நீங்க என்ன கொண்டு விட வேண்டாம்.
இப்ப என்ன இந்த ட்ரிங்க்க குடிக்கணும் அவ்வளவு தானே குடுங்க நான் குடிக்கிறேன்”
என்றவன் அதில் அவள் மாத்திரையை கலந்திருப்பதை அறியாமல் வாங்கி ஒரே சிப்பில் குடித்து முடித்தவனோ தலை தொங்க நிற்க முடியாமல் தள்ளாடினான்.
கீழே விழ போனவனை தன்னுடைய தோளில் தாங்கினாள் சாயரா.
அப்பொழுது அவர்கள் அருகில் வந்த சரவணன்,
“சாரி மேடம் கௌதமுக்கு கொஞ்சம் ஓவர் ஆயிட்டு போல அவர என்கிட்ட விடுங்க நான் பாத்துக்குறேன்”
என்று கூற உடனே அவரை முறைத்த சாயரா,
“மிஸ்டர் சரவணன் உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க இவரை நானே பார்த்துக்கொள்கிறேன் நீங்க போகலாம்”
என்று உத்தரவிடுவது போல கூறினாள்.
சரவணனோ வேறு வழியில்லாமல் அங்கிருந்து அகன்றார்.
தள்ளாடிய கௌதமை தோளில் தாங்கியவள் அங்கு அவள் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த அறைக்கு அழைத்து வந்தவள் அவனை அங்கு உள்ள மெத்தையில் கிடத்திவிட்டு துவாரகாவுக்கு அழைப்பு எடுத்தது.
“என்ன துவாரகா உன் புருஷனை இப்படி என்கிட்ட பறிகொடுத்துட்டியே இனி நீயே நெனச்சா கூட ஒன்னும் பண்ண முடியாது இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் கூட ஒன்னா இருக்கப் போறேன் பாய் எனக்கு உன்கிட்ட பேச நேரம் இல்லை.
என்னோட கௌதம் எனக்காக வெயிட்டிங் போன வைக்கிறேன்”
“ஹலோ ஹலோ ஏய் சாயரா ஹலோ கௌதம்”
என்று துவாரகா அங்கு கத்த கத்த போனை துண்டித்தவளோ கௌதமின் மேல் மெதுவாக படர ஆரம்பித்தாள்.
அங்கு துவாரகாவுக்கோ நிலை கொள்ள முடியவில்லை.
“அடியே சேனபதி சாயரா நீ எவ்வளவுதான் முயற்சித்தாலும் என்னுடைய கௌதம உன்னால நெருங்கவே முடியாது அதற்கு விடவும் மாட்டேன்”
என்றவள் உடனே பார்ட்டி நடக்கும் இடத்திற்கு புறப்பட்டாள்.
கௌதமோ தனக்கு ஏறிய போதையில் மெத்தையில் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருக்க அவன் மேல் சரிந்தவளோ அவனுடைய முகத்தை கை கொண்டு வருடியவள்,
“கௌதம் என்னோட கௌதம் எனக்கே எனக்கு சொந்தமாக போற என்னோட கௌதம் எவ்வளவு அழகா இருக்கான் நம்முடைய முன் ஜென்மத்தில் எந்த அளவுக்கு கம்பீரமான தோற்றத்தோடு இருந்தாயோ அதே அளவு கொஞ்சமும் குறையாமல் இருக்கிறாயடா”
என்று அவனை வர்ணித்தவள் அவனுடைய கழுத்து வளைவில் தன்னுடைய முகத்தை புதைத்து அவனுடைய சுவாசத்தை முகர்ந்து ஆழ்ந்து சுவாசித்தாள்.
“ம்ம் ஆஹா என்ன ஒரு வாசனை உன் வசம் என்னை மொத்தமாய் இழுக்கிறாய்டா”
என்றவள் அவனுடைய ஷர்ட் பட்டனை ஒவ்வொன்றாக கழட்டினாள்.
அவனோ அவ்வளவு போதையில்,
“துவா துவா ஐ மிஸ் யூ டி ஐ மிஸ் யூ சோ மச்”
என்று உளறிக் கொண்டிருந்தான்.
அவளுடைய செவிகளில் அந்த வார்த்தைகள் விழுந்தன.
பிரகாசமாக இருந்த அவளுடைய முகமோ சட்டென கடுமையாக மாறியது.
ஆனால் தன்னுடைய கோபத்தை காட்டும் நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்தவள் அதை புறம் தள்ளிவிட்டு அவனுடன் இணையவே முற்பட்டாள்.
முழுவதுமாக அவனுடைய மேல் சட்டையை கழட்டியவள் அவனுடைய மேனியில் தன்னுடைய இதழால் முத்த ஊர்வலம் நடத்தினாள்.
அவனோ அவளை தன்னுடைய மேனியில் இருந்து விளக்க நினைக்க அவனுடைய உடலோ அதற்கு இடம் கொடுக்கவில்லை.
மீண்டும் சாயரா அவனுடைய கீழாடையில் கையை வைக்க அப்பொழுது அவர்கள் இருந்த அறைக்கதவு படார் என திறந்து கொண்டது.
கண்களில் தீப்பொறி பறக்க எதிரே வருபவரை சுட்டெரிப்பவள் போல காளியாக வந்து நின்றாள் துவாரகா.
கதவு திறக்கும் ஓசையில் திரும்பிய சாயராவோ அங்கு நின்று கொண்டிருக்கும் துவாரகாவை பார்த்தவள்,
“நீ எதுக்கு உள்ள வந்த உன்னை யாரு உள்ள விட்டா மரியாதையா இங்கிருந்து வெளியே போயிரு இல்ல நடக்கிறதே வேற”
என்று சீறினாள் சாயரா.
“நான் வெளியே போகனுமா உன்னை இதற்கு மேல் உயிரோடு விட்டா அப்பறம் பார்க்கலாம்”
என்று கர்ஜித்தவளோ வீர நடை போட்டு அவள் அருகே வந்தவள் சாயராவின் தலைமுடியை கொத்தாக பிடித்து தரதரவென்று இழுத்து வந்தவள் அவளை அடிக்க சாயராவும் அவளுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டிருக்க,
ஒரு கட்டத்தில் துவாரகா அவளுடைய கழுத்தை பிடித்து நெறித்தவள்,
“என்னை நினைத்தாய் போன ஜென்மத்தில் என்னை அமைதியாக பார்த்ததால் இந்த ஜென்மத்திலும் நான் அவ்வாறே இருப்பேன் என்று நினைத்தாயோ அப்படி நினைத்தால் அது உன் முட்டாள்தனம் சேனபதி சாயரா.
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுடைய கௌதமாதித்தனை நீ நெருங்கவே முடியாது அதற்கு நான் ஒரு காலத்திலும் அனுமதிக்க மாட்டேன்”
சாயராவோ இருமியவாறே சிரித்தவள்,
“என்ன அமையாதேவி என்னை கொன்று விடலாம் என்று நினைத்தாயா அது உன்னால் முடியாது. ஏனென்றால் நீ ஒரு கோழை எங்கே கௌவுதமாதித்தன் என்னுடன் இணைந்து விடுவானோ என்று பயந்து போய் தானே வந்திருக்கிறாய்.
அவர் மேல் உனக்கு துளியும் நம்பிக்கை இல்லை அமையாதேவி”
“என்ன உளறுகிறாய் சாயரா உனக்கு நினைவில்லையா முன் ஜென்மத்தில் என்ன நிகழ்ந்தது என்று என்னுடைய கௌதம் கையால் தான் உன் உயிர் பிரிந்தது நினைவில் இருக்கிறதா”
என்று துவாரகா கூற சாயராவோ,
“எனக்கு அனைத்தும் நினைவு இருக்கிறது அமையாதேவி ஆனால் என்னுடைய வசியத்தினால் அவரை என் வசம் மொத்தமாக இழுத்து விடுவேன் அதுவும் உனக்கு நினைவு இருக்கிறது தானே மறக்கவில்லையே அமையாதேவி”
என்று அவள் சொல்ல,
“உன்னுடைய வசியத்தை மீறியது எங்களுடைய காதல் அதை ஒரு நாளும் உன்னால் வெல்ல முடியாது சாயரா”
“காதலா அந்தக் காதலையும் என்னுடைய வசியத்தினால் நான் என் வசமாக்குவேன்”
என்றவளோ அவள் அசந்த நேரம் பார்த்து அவளை தன்னிலிருந்து தள்ளி விட்டவள் அங்கு இருந்த கத்தியை கையில் எடுத்தாள் சாயரா.
பின்பு அந்த அறையே அதிரும் அளவு சிரித்தவள்,
“முட்டாள் நீ எப்பொழுதும் முட்டாள் என்று நிரூபித்து விட்டாய் உன்னை உயிரோடு விட்டால் என்னுடைய கௌதமாதித்தன் எனக்கு எப்பொழுதும் கிடைக்க மாட்டான் உன்னை இப்பொழுது என்னுடைய கையினால் கொல்லப் போகிறேன்”
என்று துவாரகாவை நெருங்கியவளை இவ்வளவு நேரமும் போதையின் வசத்தில் மயங்கி இருந்த கௌதமோ வீறு கொண்ட வேங்கையாக அவர்கள் இருவருக்கும் இடையே வந்து நின்றவன் சாயராவின் கன்னத்தில் பளார் என்று விட்டான் ஒரு அறை.
அதில் தூரப் பொய் விழுந்தாள் சாயரா.
“உனக்கு எவ்வளவு துணிவு இருந்தால் என்னுடைய அமையாதேவியை நீ நெருங்கி இருப்பாய்”
என்று அவன் கூற இருவரும் ஒருசேர அதிர்ந்து அவனைப் பார்த்தனர்.
ஆம் சாயரா துவாரகா அவளை இழுத்துக் கொண்டு போகவும் அவளிடம் இருந்த அந்த நாணயம் மெத்தையில் விழுந்தது.
அதை அவளோ அறியவில்லை.
துவாரகாவின் சத்தம் கௌதமின் செவிகளில் விழ எழும்ப முயன்றவனின் கரத்திலோ அந்த நாணயம் சிக்குண்டது.
உரியவனின் பரிசம் பட்டதும் அந்த நாணயம் மின்னல் ஒளியை அவன் மேல் பாய்ச்ச முன் ஜென்ம ஞாபகம் அவனுக்கு கண் முன் தோன்றியது.
அதேநேரம் சாயரா துவாரகாவை கத்தியால் குத்துவதற்கு நெருங்க அதை பார்த்தவனோ வெகுண்டு எழுந்து விட்டான்.
“கௌதம் உங்களுக்கு எதுவும் ஆகலையே நீங்க நல்லா இருக்கீங்கள்ள”
என்று துவாரகா அவன் அருகே வர அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்த கௌதமோ,
“எனக்கு ஒன்னும் இல்ல துவாரகா நான் நல்லா இருக்கேன்”
என்றவன் அந்த நாணயத்தை அவளிடம் காட்டினான்.
“அப்போ உங்களுக்கும் எல்லாம் ஞாபகம் வந்துட்டா”
என்று அவள் கேட்க ஆம் என்று தலையசைத்தான்.
அங்கு கீழே விழுந்து கிடந்த சாயராவுக்கோ மீண்டும் மீண்டும் தான் தோல்வியுற்றதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“இல்ல இல்ல இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்னுடைய கௌதமாதித்தன் எனக்கே வேண்டும் எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அதுவே நடந்து கொண்டிருக்கிறது.
கௌதம் கௌதம் இங்க பாருங்க நான் தான் உங்கள் சாயரா நான் உங்களை மட்டுமே நேசிக்கின்றேன் அதற்காகவே மீண்டும் பிறவி எடுத்து வந்திருக்கிறேன்.
ஆனால் தாங்கள் மீண்டும் மீண்டும் இந்த அமையாதேவி பக்கமே நிற்கின்றீரே இது தங்களுக்கே நியாயமாக படுகிறதா”
என்று இயலாமையில் கத்தினாள்.
“சாயரா நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் உனக்கு முன் ஜென்மத்திலேயே நான் தெளிவாக கூறி விட்டேன் அப்படி இருந்தும் வீண் பிடிவாதமாகவே மீண்டும் பிறவி எடுத்து வந்திருக்கிறாய்.
இன்னொன்றையும் நன்றாக கேட்டுக் கொள் நீ இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் என்னுடைய நிழலைக்கூட உன்னால் தொட முடியாது அதற்கு என்றும் அனுமதிக்க மாட்டேன் இந்த கௌதமாதித்தன். என்னுடைய சரிபாதி எப்பொழுதும் என்னுடைய அமையாதேவி என் துவாரகா மட்டுமே”
என்று கர்ஜித்தான் கெளதம்.
அவளால் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“ஆஆஆஆஆஆ” என்று கத்தியவள் பைத்தியம் போல் நடந்து கொண்டாள் சாயரா.
இனி தனக்கு கௌதமாதித்தன் கிடைக்க மாட்டான் என்ற நிதர்சனம் அவள் மூளையில் ஏற அவளுடைய மூளையோ குழம்பியது.
முழு பைத்தியமாகவே மாறிப் போனாள் சாயரா.
அவளுடைய செயலை பார்த்த துவாரகாவோ,
“என்னங்க இது இவளுக்கு பைத்தியம் பிடிச்சிட்டா?”
“ஆமா துவாரகா இவளுக்கு பைத்தியம் தான் பிடிச்சிட்டு இவளுடைய இந்த நிலைக்கு இவள் தான் காரணம் இதுக்கு நாம ஒன்னும் செய்ய முடியாது வா நாம இங்க இருந்து போகலாம்”
என்றவன் அங்கு பித்து பிடித்து கத்திக் கொண்டிருக்கும் சாயராவை ஏறெடுத்தும் பார்க்காமல் தன்னுடைய துவாரகாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.