Home Novelsகனவே சாபமா‌ 31

கனவே சாபமா‌ 31

by ஆதி
4.7
(6)

கனவு -31

எபிலாக்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு.
கௌதம் சாயராவின் தந்தை கம்பெனியில் இருந்து வெளியே வந்து சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்திருந்தான்.
அதற்கு அவனுடைய மனைவி துவாரகாவும் அவனுக்கு உறுதுணையாக இருக்க இரண்டு மூன்று வருடங்களிலேயே அவன் ஒரு நல்ல நிலைக்கு வந்திருந்தான்.
அவர்களுடைய ஜென்ம ஜென்ம காதலுக்கு பரிசாக ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்திருந்தது.
ஆனால் சாயரா முற்றிலுமாக தீய வளியில் சென்று கிடைக்காத ஒரு பொருளுக்கு ஆசைப்பட்டு அது தனக்கு எப்பொழுதுமே கிடைக்காது என்று தெரிந்த பிறகும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவளுக்கு பைத்தியம் பிடித்து சுயநலவை இழந்தாள்.
“அப்பா அப்பா எனக்கு பசிக்குது சீக்கிரம் வாங்க”
என்று டைனிங் டேபிளில் ஒரு குட்டி பொம்மை போல் அழகாக அமர்ந்து கொண்டு அங்கு கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய தந்தையை அழைத்தாள் குட்டி தேவதை கௌதம் துவாரகாவின் செல்ல மகள்.
“இதோ வந்துட்டேன் டா ஒரு ரெண்டு நிமிஷம்.
ஆமா எங்க உங்க அம்மா வந்துட்டாளா”
“ஐயோ அப்பா அம்மா இன்னும் காணோம் நானும் ஸ்கூலுக்கு ரெடியாகி சாப்பிட வந்துட்டேன் ஆனா அம்மா இன்னும் வரல”
என்று தன்னுடைய பிள்ளை மொழியில் அழகாக கூறியது அந்த குட்டி வாண்டு.
அதற்கு கிச்சனிலிருந்து புன்னகைத்த கௌதமோ,
அப்படியாடா குட்டி என் பொண்ணு கூட தானே ரெடி ஆயிட்டா ஆனா என்னோட பொண்டாட்டிக்கு எப்பவும் நான் தான் வேணும்”
என்று கூறியவாறு வெளியே வந்தவன் தன்னுடைய மகளுக்கு தட்டில் குட்டி குட்டியாக இரண்டு தோசையை வைத்து அதற்கு தொட்டுக்க மீன் குழம்பு அதையும் வைத்து விட்டு,
நீங்க சாப்பிடுங்க அப்பா போய் அம்மாவ கூட்டிட்டு வருவேணாம் சரியா”
என்றவன் தங்களுடைய செல்ல மகளின் தலையில் முத்தம் வைக்க அதுவோ சமத்தாக சரி என்று தலையாட்டியது.
நேராக தங்களுடைய அறைக்கு வந்த கௌதமோ தன்னுடைய மனைவியை பார்க்க அவளோ தன்னுடைய நிறைமாத வயிற்றை தடவியவாறு அவன் எப்பொழுது உள்ளே வருவான் என்று காத்திருப்பவள் போல அவர்கள் அறையின் வாயில் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய இந்த செயலைக் கண்டு புன்னகை புரிந்த கௌதமோ அவள் அருகில் வந்து அமர்ந்தவன் அவள் வருடிக் கொண்டிருக்கும் வயிற்றில் மேல் உள்ள அவள் கையின் மீது தன்னுடைய கையை வைத்து,
“என்ன துவாரகா உள்ள என் பையன் என்ன சொல்றான்”
என்று அவன் கேட்க அவளோ அவனே லேசாக முறைத்தவாறு,
“ஓ அப்போ உங்க பையனுக்காக தான் நீங்க வந்தீங்களா எனக்காக வரலையா”
என்று அவள் கோபம் கொள்ள அவளுடைய இரு கன்னங்களையும் பிடித்து கொஞ்சியவன்,
“அடியே என் பொண்டாட்டி என்னோட முதல் குழந்தை எப்பவும் என் துவாரகா தான் அதுக்கு அப்புறம் தான் இவங்க ரெண்டு பேரும்.
எனக்கு தெரியும் நீ நான் வந்து உனக்கு மார்னிங் கிஸ் கொடுக்காம இந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன்னு.
சரி நீ தூங்குறன்னு நினைச்சுட்டு பட்டுவுக்காக சாப்பாடு ரெடி பண்ண போனேன்.
ஆனா அதுக்குள்ள என்னோட பொண்டாட்டிக்கு கோபம் வந்திருச்சா”
“ஆமா கோபம் தான் நான் எழும்பி எவ்வளவு நேரம் ஆகுது தெரியுமா இல்லன்னா நீங்க என்னை எழுப்பி விட்டாவது போயிருந்திருக்கலாம் அதுவும் இல்ல.
நான் எழும்பி பார்க்கும்போது நீங்க என் பக்கத்துலயும் இல்ல பின்ன நான் என்ன நினைக்கிறது”
என்றாள் அவள்.
“சாரிமா ஐ அம் சாரி ஆல்ரெடி பட்டுக்கு ஸ்கூல் லேட் ஆகிட்டு இன்னைக்கு உனக்கு செக்கப்புக்கு வேற போகணும் அதனால தான் உன்னை எழுப்பாமல் நானே எல்லா வேலையும் முடிச்சேன்”
“என்ன கௌதம் நீங்க எப்பவும் இதே மாதிரி தான்.
நீங்க இந்த மாதிரி செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து என்னை ரொம்ப கெடுத்து வச்சிருக்கீங்க. அதனாலதான் உங்க பொண்ணு என்ன மதிக்கவே மாட்டேங்குறா ஏதோ நான் அவளுக்கு எதுவுமே செஞ்சு கொடுக்காத மாதிரி எல்லாமே என்னோட அப்பா தான் செய்றாருங்கிற மாதிரி ரொம்ப பில்டப் பண்றா.
இதுக்கு எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் போங்க”
என்று அவள் சொல்ல,
“இதுதான் உன்னோட கோபத்துக்கு காரணமா நான் பட்டு கிட்ட சொல்லி அப்படி எல்லாம் இல்லன்னு சொல்றேன் சரி வா நேரம் ஆகுதுடா பட்டுவ ஸ்கூல்ல விட்டுட்டு நம்ம செக்கப் போகணும் நீ சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் சரியா”
என்றவன் எழுந்து போக அவனுடைய சட்டையை பிடித்து இழுத்தவள்,
“கௌதம் நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டு போறீங்க”
என்றாள்.
அதற்கு அவனோ லேசாக புன்னகைத்தவன்,
“அதான் நீ ஞாபகம் வச்சிருக்கியே அதனால தான் நான் மறந்து போயிட்டேன்”
என்றவன் அவளுடைய நெத்தியில் முத்தமிட்டு,
“இப்போ ஓகேவா”
என்று கேட்க அவளோ புன்னகைத்தவள்,
“இப்ப நீங்க போகலாம்”
என்றாள்.
சிறிது நேரத்தில் குளித்து முடித்து தயாராகி வெளியே வந்தவள் அங்கு டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கும் தன்னுடைய மகளையும் கணவனையும் பார்த்தவள் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள்.
“அப்பா அம்மா எப்பவும் லேட்டு தான் அப்பா தான் எப்பவும் பெஸ்ட்”
என்று சொல்ல அவனோ சட்டென பட்டுவின் வாயை பொத்தியவன்,
“பட்டுக்குட்டி அப்படியெல்லாம் இல்லடா அப்பா இப்படி பெஸ்ட்டா இருக்கிறதுக்கு காரணமே அம்மா தான்.
இப்போ அம்மா வயித்துல குட்டி தம்பி இருக்கிறாங்களா அதனால தான் அம்மா கொஞ்சம் ஸ்லோவா இருக்காங்க சரியா இல்லன்னா உன்னோட அம்மா தான் சூப்பர் மாம்”
“ஓஓ அப்படியா அப்போ எனக்கு குட்டி தம்பி பாப்பா வரப்போறாங்களா”
“ஆமா டா செல்லம் இன்னும் கொஞ்ச நாள்ல உன் கூட விளையாட ஒரு குட்டு தம்பி பாப்பா வந்துருவாங்க ஆர் யூ ஹேப்பி”
என்று கௌதம் கேட்க,
“ஐ அம் சோ ஹாப்பி அப்பா”
என்று அது அழகாக சொல்ல அதனுடைய கன்னத்தில் முத்தமிட்டவன் தன்னுடைய மனைவிக்கு தோசையை தட்டில் வைத்து மீன் குழம்பை அவளுக்கு ஊத்தினான்.
தன்னுடைய தட்டில் மீனை பார்த்தவளோ,
“கௌதம் என்னது இது’
என்று கேட்க அவனோ,
“என்ன துவாரகா தோசையும் மீன் குழம்பும்”
“கௌதம் நான் பழைய ஞாபகம் வந்ததுல இருந்து மீன் சாப்பிடுவதை விட்டு எவ்வளவோ நாளாச்சு ஆனா நீங்க எனக்கு மீன் குழம்பு ஊத்துறீங்க என்ன கௌதம் நீங்க”
என்று அவள் கேட்க,
“அச்சச்சோ ஆமால்ல சாரிமா நான் உனக்காக தனியா சட்னி வச்சுட்டேன் ஆனா பட்டு கிட்ட பேசிகிட்டே மறந்து ஊத்திட்டேன்”
என்றவனோ மீண்டும் ஒரு பிளேட் எடுத்து அதில் தோசை போட்டு அவளுக்காக தனியாக அரைத்து வைத்திருந்த சட்டினியை போட்டு அவளுக்கு ஊட்டியே விட்டான்.
முந்தைய ஜென்மத்திலும் சரி இப்பொழுதும் சரி ஒருவருக்கு ஒருவர் கூடுதளாக அன்பு காட்டி தங்களுடைய வாழ்க்கையை இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் துவாரகாவும் கௌதமும்.
(கௌதமாதித்தன் அமையாதேவி)
கௌதமும் துவாரகாவும்
அவர்கள் வாழ்க்கையின் சோதனைகளில் நல்ல பாதையைத் தான் தேர்ந்தெடுத்தார்கள்.
அன்பையும் நம்பிக்கையையும் கையில் பிடித்து நடந்ததால், அவர்கள் ஆன்மாக்களே கூட விடாமலிருந்து, இக்காலத்திலும் இணைந்து நிம்மதியான வாழ்க்கையை கண்டனர். அவர்களின் முடிவு அன்பு எப்போதும் வெல்லும் என்பதற்கு சாட்சியமாய் இருந்தது.
ஆனால் சாயரா தீய பாதையைத் தான் பிடித்து நடந்தாள்.
ஆசை, கோபம், பொறாமை அவளைக் கைப்பற்ற, அவள் எடுத்த ஒவ்வொரு முடிவும் அவளையே அழிவுக்குள் தள்ளியது.
இறுதியில், அவளின் தனிமையே அவளுக்கு சாபமாக மாறியது.
அழிவு அவளுடைய முடிவு.
“வாழ்க்கை எப்போதுமே இரு பாதையைக் கொடுக்கிறது.
ஒன்று நல்லதுக்காக, ஒன்று தீயதுக்காக. எந்த வழி போவது என்பதை விதி தீர்மானிக்காது… நாமே எடுக்கும் ஒரு தேர்வுதான் அது”
எப்போதும் நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்.

என்றும் அன்புடன்.
ஆதி.

🤍🤍🤍🤍🤍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!