காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 25 🖌️

0
(0)

“உன்னை நான் எப்போவுமே நம்ப மாட்டேன். இதுல விஷம் ஏதாவது கலந்தாலும் கலந்திருப்ப. சொந்த வீட்டையே ஏமாத்தினவ தானே நீ? சோ அதனால முதல்ல இந்த டீய நீயே குடி.” என அவள் கைகளில் கப்பைத் திணித்தான். அவளுக்குத்தான் பேரிடியாய் விழுந்தது.

“என்ன இவன் திடீர்னு இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். இப்போ நான் இதை குடிச்சா இதுல நான் கலந்த ரஷ் மாத்திரை என் உடம்பை அரிச்சி அலேர்ஜி ஆக்கிடுமே. ஆனால்… குடிக்கலன்னா இவனுக்கு வேற சந்தேகம் வந்துடுமே. குடிச்சாலும் எனக்குதான் பிரச்சினை. குடிக்கலன்னாலும் எனக்குதான் பிரச்சினை. இப்போ என்னதான் நான் பண்றது?” என யோசித்தவளின் கைகள் கடகடவென ஆடியவாறே அவனிடமிருந்து கப்பை வாங்கச் செல்ல

“ஆடாத… கண்டு பிடிச்சிடுவான்…” என்றவாறு மறு கையால் தன் ஆடும் கையைப் பிடித்தவள் “இஇஇ…” என இழித்து வைத்துக் கொண்டாள்.

“ஐய்யோ… இப்போ குடிச்சாகனுமே. இவன் வேற பாத்துட்டே இருக்குறான்.” என்றவள் அவனைப் பார்க்க அவன் தலைசாய்த்து ஆட்காட்டி விரலைத் தாங்கியபடி ஏனைய விடலை தாடையில் வைத்து அவளையெ சலனமில்லாமல் பார்த்தாருந்தான்.

ஒரு யோசனை வந்ததும் கை தவறி விழுவது போல கப்பைத் தூக்கி கீழே போட்டு விட்டுவள் “அச்சச்சோ… சோரி… தெரியாம கை நழுவி கப் கீழ விழுந்துடுச்சு சேர். நான் வேணா உள்ள இருக்குற டீய எடுத்து வந்து குடிக்கவா?” என அவள் காரிய திருப்தியில் திரும்பி நடக்க முயல

“ரொம்ப நடிக்காதடி… அழகா உன் மூஞ்சியே பச்சையா சொல்லுது நீ நடிக்கிறன்னு. உன் மனசுல பெரிய ஹீரோயின்னு நினைப்பா? நீ டீல ரஷ் டெப்லட் கலந்தத நான் பாத்துட்டேன்.” என்று அவன் இழிக்க அவளும் அவனுடன் சேர்ந்து

“ஹி… ஹி… ஹி…” என இழிக்க அவளை நோக்கி

“நீ எவ்ளோ பெரிய ஆளுன்னு எனக்கு தெரியும்மா.” என அவள் அருகில் நெருக்கமாக நடந்து வ்நது நின்றான்.

“அது வந்து… வந்து…” என அவள் பயத்தோடே இழித்துக் கொண்டு பின்னோக்கி செல்ல இறுதியில் பின்னாலிருந்த சுவற்றில் இடித்துக் கொண்டாள்.

உடனே அவன் அவள் கைகளை முறுக்கி பின்னால் வைத்து “இனிமேல் இந்த டீல மாத்திரை கலக்குற வேலையெல்லாம் வெச்சிப்ப?” என்று புருவம் உயர்த்தினான்.

“நொ… நொ… நொ…” என கண்டபடி அவள் திக்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன நொ… நொ… நொ…? இனிமேல் ஏதாவது பண்ண… என்ன நடக்கும் தெரியுமாடி?” என்றவன் இன்னும் அவள் அருகில் நெருக்கமாக நிற்க

“ஏதாவது பண்ணிடுவானோ? இவன நம்ப முடியாது. வீட்டுல வேற யாரும் இல்லை. சோ… யூவி… உன் தற்காப்பு கலைய பயன்படுத்திக்க.” என மூளை யோசனை கூற முட்ட முட்ட விழித்தவள் அருகிலிருந்த மேசையில் இருந்த கண்ணாடி சாடியை நடுங்கிய கைகளால் பிடித்துக் கொண்டாள்.

அவளை வெகு விரைவாக நெருங்கானான். அவனது கூறிய மூக்கு அவள் மூக்கில் உரச அவள் இதயம் லப் டப்பென எகிறியது. அவளது மூளையோ “அடிச்சிடுடி… இனிமேலும் தாமதிச்ச… நீ அவ்ளோதான்டி… அவன அடிச்சிடு…” என கூற அவள் இதயம் அதனை செய்ய கொஞ்சம் கூட இசைந்து கொடுக்கவில்லை. அடிப்பதற்காக தன்னைமீறி கையை எடுத்தவளை அவன் செயல் காதலால் கட்டிப் போட்டது. தனது மூக்கினால் அவள் மூக்கை உரசி ஆதி விளையாட அதில் அவள் மனம் மொத்தமாக அவனிடம் பறிபோனது. இன்னும் நெருங்கியவன் தலை சாய்த்து இலேசாக அவன் இதழை அவன் இதழில் ஓற்றி எடுத்தான்.

உடனே அவள் கைகள் சாடியை விடுவித்து கண்கள் அவனது புதிய அவதாரத்தை ரசிக்க ஆரம்பித்தது. அவன் அவளிடமிருந்து விலகி தலை முடியை சிலிப்பி விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனாள் யூவி.

“இவனுக்கு இவ்ளோ அழகா கூட சிரிக்க தெரியுமா?” என்று கேட்ட இதயத்தைப் பிடித்து நிறுத்தி

“இந்த முஞ்சிய நீ எதுக்கு யூவி ரசிக்கிற? பச்சை பைத்தியம். இது தப்பு… நீ இப்படி எல்லாம் அவன ரசிக்க கூடாது.” என்று தனக்கு தானே தடை போட்டாள்.

அடுத்த நிமிடம் “இவ்ளோ அழகா இருந்தா யாருதான் ரசிக்காம இருப்பா?” என அவள் காதல் கொண்ட மனம் கேள்வி எழுப்ப மறுபடியும்

“ஆமாம்ல??? எவ்ளோ க்யூட் என்ட் ஹேன்ட்ஸம்…” என்று தன்னை மறந்து கூறியவள் மீண்டும் நினைவுக்கு வந்து

“அதெல்லாம் ஒன்னும் இல்லை யூவி. தப்பு தப்பு…” என்று கூறியவள்

“ஐய்யய்யோ என்ன தனியா வேற பொலம்ப உட்டுட்டானே. இன்னும் கொஞ்ச நாள்ல பைத்திய ஹொஸ்பிடல்ல சேர வெச்சிடுவான் போலயே.” என புலம்பியவாறே சென்று கதிரையில் அமர்ந்து விட்டாள்.

அவளைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தவாறே அருகே வந்து அமர்ந்தது எமகண்டம். ” Yuvi, Can you rub my forehead? bcz, I have headache. You know that. But, you miced rush pill in my tea. Unfortunately I found it. Bcz, of your idiot behaviour.. I got more headache. So… you want to rub my head… so,” என்று தோளைத் தூக்க அவனை கண்ணா பின்னா என முறைத்திருந்தாள் யூவி. அவளுக்கு வேறு வழி தெரியவில்லையே. அடுத்த நிமிடம் அவன் நெற்றியில் ஒய்ல்மென்டை வைத்து எரிச்சலாக தேய்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி… ஒய்ல்மென்டை விட நீதான் ரொம்ப எரிச்சலா இருக்குற போல. ஆஹா… என்ன ஒரு சுகம்? என்ன சுகம்? இப்படி தலைவலிக்கு மருந்து போட ஒருத்தர் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?” என்றான் ஒய்ல்மென்ட்டின் வாசனையை முகர்ந்தவாறு.

“அத விட உன்னை கொலை பண்ண யாராவது இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?” என்றாள் பொறிந்து தள்ளி.

“ஏய்…” என்றான் கோபமாக.

“ஒன்னும் இல்ல… சும்மா…” என இழித்தவள் அவன் தலையைப் பிடித்து இழுத்து மிகவும் வேகமாக ஒய்ல்மென்டை தேய்க்க அது அவன் கண்களுக்குள் சென்று எரிச்சலை உண்டாக்கியது.

“ஏய்… இடியட்… உனக்கு அறிவு இருக்கா இல்லையா? இங்க பாரு கண்ணுக்குள்ள போய்டுச்சு. ரொம்ப எரியிது…” என அவன் கண்களை பொத்திக் கொண்டு கசக்க,

“உனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்டா.” என்று மனதில் நினைத்தவள்

“முதல்ல போய் மூஞ்ச கழுவுடா என் டுபுக்கு…” என்றாள் தைரியமாக.

“என்னது… டாவா? டுபுக்கா?” என்றவன்

“உன்ன வந்து வெச்சிக்கிறேன்.” என்று கோபத்தில் கத்திவிட்டுச் சென்றுவிட்டான்.

செல்லும் அவனுக்கு பழிப்பு காட்டியவாறே “லூசு…” என கூறியவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அறையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

இரவாகியும் சென்ற ஆதியும் திரும்பி வரவில்லை. கோவிலுக்கு சென்றவர்களும் திரும்பி வரவில்லை. இதில் ஆதி வேறு இல்லை. இதைவிட பெரிய சந்தோசம் ஏதும் உண்டா? ஹெட்செட்டை காதினுள் வைத்தவள் பாடலைக் கேட்டவாறு போனை நோண்டிக் கொண்டிருக்க, கதவில் கையை கட்டி சாய்ந்து நின்றவாறு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. அவனைத் திடீரென பார்த்ததும் யூவி பயந்து திடுக்கிட்டு எழுந்தாள்.

“ஏய்… அரை மெண்டல்… அரை மெண்டல்… இப்படி சொல்லாம கொள்ளாமயா வந்து நிப்ப?” எனக் கேட்டவளின் இதயம் பயத்தில் படபடவென்று அடித்துக் கொண்டது.

‘ஏய்… என்னடி நானும் பாக்குறேன்… ஓவராதான் போற? என்னடி நினைச்சிட்டு இருக்குற உன் மனசுல? ஸ்லேவ்னா ஸ்லேவ் மாதிரி இருக்கனும். இப்படி ஓவரா கத்துனன்னா உன் கதையை க்ளோஸ் பண்ணிடுவேன். மரியாதை…” என்று எகிறினான். சீறிய புலி பூனை ஆகிவிட்டது.

“சரி… சரி… ஓக்கே சேர்… சோரி…” என பயந்து கொண்டாள்.

உடனே வெளியே சென்றவாறே “என்கூட வா.” என்றதும் அவன் பின்னே பூனை போல தலையை குனிந்து சென்றாள். தன்னிடம் இருந்த ஸ்னேக்ஸை எடுத்து அவளிடம் எறிய அதனை கேட்ச் பிடித்தவள்

“இது எதுக்கு?” என கேள்வியாய் கேட்டாள்.

“நான் மூவி பாக்கனும். அதுக்குதான்.” என்றதும்

“அதுக்கு நான் எதுக்கு?” என்றாள் எரிச்சலாக

“அதுவா… நீ என்ன பண்றேன்னா… இந்த ஸ்னேக்ஸ எனக்கு ஊட்டி விடனும்.” எனக் கூறியதும் எகிறி விட்டாள் யூவி.

“ஏய்… ஏதோ உன் பொண்டாட்டிக்கு ரூல் போடுற மாதிரி ரூல் போடுற? இந்த வேலை எல்லாம் வேற யாருக்கிட்டயாவதும் இல்லன்னா அந்த பல்லவிக்கிட்ட வெச்சிக்கோ. அவதான் ஆசையா வந்து கார்த்திக் மாமா… ன்னு காதல் வழிய வழிய ஊட்டி விடுவா.” என அவள் உதட்டை சுளிக்க அடுத்த நிமிடம் பாட்டிக்கு அழைப்பு சென்றது.

அந்தப் பக்கத்திலிருந்து “ஹலோ…” என்றார் பாட்டி. அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை யூவி.

“பாட்டி… இந்த யூவி ரொம்பதான் ஆடுறா. சோ… நான் என்ன டிசைட் பண்ணேன்னா அவங்க அப்பா… அதுதான் உங்க பையன்… ஆதித்ய வர்…” என்றதும் போனைப் பிடுங்கி

“பாட்டி… நான் யூவி… நீங்க எப்போ வருவீங்கன்னு கேட்கதான் போன் பண்ணேன்.” என்று கூறிவிட்டு பதில் கூட கேட்காமல் போனை துண்டித்து விட்டாள்.

உடனே “சும்மா சும்மா எதுக்கு சேர் தேவை இல்லாம பாட்டிய டிஸ்டர்ப் பண்ணிட்டு? செய்னு சொன்னா செய்ய போறேன் சேர்.” என பரிந்து பேசியவள் பெருமூச்சு விட்டு நாற்காலியில் அமர மீண்டும் அழைப்பு வந்தது பாட்டியிடமிருந்து.

“ஹ்ம்…” என மூச்சு ஏத்தியவள் “ஐய்யய்யோ… ஒருவேளை இவன் உலரினத கேட்டிருப்பாங்களோ…” என யோசித்தவாறே பயத்துடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஹலோ… என்னம்மா… அதுக்குள்ள கட் பண்ணிட்ட… நாங்க இங்க மழையில மாட்டிட்டு இருக்கோம். எப்படியாவது காலையில வந்து சேர்ந்துடுவோம். கார்த்திக் இருக்கான். எதுனாலும் அவன்கிட்ட கேளு.” என்று கூறிவிட்டு அழைப்பை வைத்தார்.

“இவன் கிட்ட கேட்குறதோட நான் தூக்குல தொங்கி செத்துப் போய்டலாம்.” என்றவள் அவனிடம் திரும்பி

“இனிமேல் இப்படி நடக்காது. ஆனால், பாட்டி கிட்ட மட்டும் வாய திறந்திடாத சேர். உங்க கிட்ட பணிவோட பாசத்தோட மரியாதையோட அடக்கத்தோட கேட்குறேன். மிஞ்சி போனா உங்கள கையெடுத்து கும்பிடுறேன்.” என கும்பிட்டவளுக்கு கோபம் கொதித்தது.

“யோசிக்கிறேன். யோசிக்கிறேன்.” என்றவன் படம் பார்க்க பொப் கோர்னை அவன் வாயில் திணித்துக் கொண்டிருந்தாள் யூவி.

“என்ன ஆதி சேர் எக்ஸன் மூவியா இருக்கு? உங்களுக்கு இந்த அடி, குத்து, வெட்டு, கொலை இது தவிர எதுவும் பிடிக்காதா?” என கேட்டதும்

“பேசாம வாய மூடிட்டு இரு. இல்லன்னா இந்த படத்துல வார மாதிரிதான் உன்ன கொன்னு தூக்குல போட்டு கடைசில நீ சூசைட் பண்ணண்ணு கதைய மாத்திடுவேன்.” என மிரட்ட

“என்னது சூசைட்டா?” என வாயைப் பிளந்தவள்

“சைக்கோ கொலைகாரன விட மிஞ்சிருவான் போலயே.” என்று வாய்க்குள் கூறிவிட்டு அவளும் கொஞ்ச பொப்கோர்ன்களை வாயில் திணித்தாள்.

படத்தின் பகுதிக்கு ஒரு தடவை அவள் தூங்கி அவனுடைய தோளில் விழுந்தாலும் அவன் தோளை உலுக்கி அவளை எழும்பச் செய்துவிடுவான். அவளுக்கு எரிச்சல் மாத்திரமே மிஞ்சும். ஆனால் வெளியில் இழித்துக் கொண்டிருப்பாள். இவ்வாறு படம் முடிந்ததும் அவன் எழுந்து கொண்டு அவன் அறைக்குச் சென்றுவிட்டான். அவள் அந்த இடத்திலேயே இருக்க

“ஏய்… என்ன தூக்கமா?” என அவன் கோபமாக கேட்டதும்

“ஆமாம்…” எனத் தலை ஆட்டியவளை

“அடச் சீ… வா…” என அழைத்தான்.

“எதுக்கு?” எனக் கேட்டவளுக்கு

“நான் தூங்கனும்.” என்ற ஒரே வார்த்தை பதிலுக்கு வந்ததது.

“நீ தூங்கனும்னா தூங்கு.” என்று கூற முறைத்தான்.

“இல்லை… நீங்க தூங்கனும்னா தூங்குங்களேன். நான் எதுக்கு?” பவ்வியமாக வந்தது அவள் வார்த்தைகள்.

“புக் படிக்கிறது யாரு உங்க அப்பாவா?” என அவன் சலிப்பாக கேட்க

“என்னது… புக்கா? டேய்… ஏழு டொங்கி வயசாச்சு. இன்னும் என்ன உனக்கு புக்?” என்று மனதினுள் திட்டியவாறு அவனை பாவமாக பார்த்தாள். அப்பாவித்தனம் பொங்கி வழிந்தது அவள் முகத்தில்.

“நீ இப்போ புக் படிச்சு காட்டுவியா மாட்டியா?” என்றதும்

“சரி… படிச்சுத் தொலைக்கிறேன்.” என அவன் கையிலிருந்த புத்தகத்தை வெடக்கென்று பிடிங்கி வாங்கிக் கொண்டாள்.

அவன் வசதியாக தூங்க அவள் கதிரையில் அமர்ந்து கதையை படிக்கத் தொடங்கினாள். “நான் தூங்குற வரை நீ படிச்சிட்டே இருக்கனும்.” என்று கூற அவளுக்குதான் முழி முட்டியது.

படித்துக் கொண்டு இருக்கும் போதே அவள் தூங்கித் தூங்கி அவன் மார்பிலேயே விழ அவன்தான் தலையில் கொட்டி “போட்டேன்னா… உன்ன படிக்க சொன்னா தூங்குறீயாடி நீ?” என எழுப்பி விடுவான்.

அவள் மீண்டும் வாசிப்பாள். மீண்டும் தூங்குவாள். அவன் மீண்டும் திட்டி எழுப்பி விடுவான். இவ்வாறே தொடர்ந்து செல்ல *போதும்… இன்னைக்கு டோர்ச்சர் பண்ணது போதும். நாளைக்கு மீதிய கன்டிநிவ் பண்ணிக்கலாம்.” என்று நினைத்தவன்

அவளிடம் “போதும்… போதும்… எனக்கு தூக்கம் வருது. சோ… நான் தூங்க போறேன். குட் நைட்” என்றான் அவளைப் பார்த்து.

அவள் பதிலுக்கு மலர்ந்த முகத்துடன் “அப்படின்னா Okay… See you… Good night.” என்றவள் அவள் அறைக்குச் செல்ல முயல

“எங்க போற?” என்ற குரலில் தடுத்து நிறுத்தினான்.

“தூங்க போறேன்.” என்றவளை தடுத்தவன் வேண்டுமென்றே பேனை ஓப் செய்துவிட்டு

“அப்போ எனக்கு யாரு விசிறி விடுவா?” என்றதும் அடுத்த நிமிடம் ஒரு புத்தகத்தால் அவனுக்கு வீசிக் கொண்டிருந்தாள்.

மெதுவாக வீசினால் “வியர்க்கிறது.” என்கிறான். சற்று வேகமாக வீசினால் “குளிர்கிறது.” என்பான். இவ்வாறே அவளைப் படுத்திக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் அவளால் முடியவில்லை. இவ்வாறே நல்லிரவைத் தாண்ட அவனுக்கும் தூக்கம் சென்றது. அவளும் நித்திரை மயக்கத்தில் நாற்காலியில் அமர்ந்தவாறே அவன் நெஞ்சில் தலை சாய்த்து தூங்கிவிட்டாள்.

காலையில் டப் டப்பென கதவைத் தட்டினார் மகாலக்ஷ்மி. அதிக நேரமாகியும் கதவு திறக்காததால் “கார்த்திக்… எழுந்துருடா… யூவிய காணோம்…” என கத்த அது லேசாக கண் விழித்த யூவியின் காதில் விழ திடுக்கிட்டு எழுந்தாள்.

தூக்கத்தில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் அவன் மீதே ஏறிப் போய் அவனருகில் சென்று ப்ளேங்கட்டை இழுத்துக் கொண்டு தூங்கியிருக்கிறாள். தற்போது தான் ஆதியை அணைத்துக் கொண்டு தூங்கியிருப்பதைப் பார்த்ததும் அவளுக்கு இதயம் துடிப்பதை மறந்துவிட்டது. ஒரு பக்கம் மகாலக்ஷ்மி வேறு.

“என்ன இது? இவன் பக்கத்துல இவன கட்டிப் பிடிச்சிட்டா தூங்கினேன்?” என யோசித்தவளுக்கு சங்கடமாய் போனது

“ஐய்யய்யோ… அத்தை வேற… என்னக் காணோம்னு எல்லாரும் தேடுறாங்க போல. நான் இந்த ரூம்லதான் இவன்கூட இவன கட்டிப் பிடிச்சு தூங்கிட்டு இருக்கேன்னு மட்டும் தெரிஞ்சது… என் கதை கந்தல்…” என யோசித்தவள் ஆதியை உலுக்கி

“ஆதி… டேய்… ஆதி… எழுந்துருடா சீக்கிரம்.” என அவனை எழுப்ப அவன் தலையணையை கட்டிக் கொண்டு “ம்ம்ம்…” என்றவாறு தலைகீழாக மீண்டும் நித்ராதேவியை தொடர ஆரம்பித்தான். மகாலக்ஷ்மி வேறு கதவை உடைக்கும் அளவு தட்ட

“ஐய்யய்யோ இவன் வேற நேரம் காலம் தெரியாம கும்பகர்ணன் ரேஞ்ச்ல தூங்குறானே.” என புலம்பியவள்

“ஆதி… எழுந்துருடா… எருமை மாடு…” என அவனை தட்டி தட்டி எழுப்ப அவன் நிலமை புரியாது

“ம்… ம்… ம்…” என தூங்கியவாறே ராகம் பாடினான்.

“டேய்… எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதுக்கு மேல என்னால தாங்க முடியல. உன்னை அப்படியே பில்லோவ வெச்சி அழுத்தியே கொன்றுவேன். எழுந்துடுடா. இடியட்…” என்று கடைசியாக அழுதவாறே கூறிவிட்டாள். ஆனால் அவன்தான் எழுந்த பாடில்லை.

“சரி… இதோ வரேன்.” என்றவள் உள்ளே சென்று பாத்திரம் நிறைய தண்ணீர் கொண்டு வந்து அவன் முகத்தில் ஊற்ற காலை வேளையில் பனி அகலாத நீரினால் குளிருற்று சட்டென எழுந்து கத்தினான் அவன்.

“அம்மாஆஆஆஆ…” எனக் கத்தி நடுங்கியவனின் வாயைப் பொத்தினாள். அவள் கையை ஆக்ரோஷமாக தட்டி விட்டவன்

“எதுக்குடி தண்ணி ஊத்தின?” என கத்த அவன் வாயைப் பிடித்து மூடினாள் யூவி.

“கத்தாதடா லூசு. கும்பகர்ணா எத்தனை தடவ உன்ன கொஞ்சி கெஞ்சி எழுப்புறது? ஏற்கனவே உங்கம்மா வேற யூவிய காணோம்னு கத்திட்டு இருக்காங்க. இதுல நீ வேற படுத்தாத.” என அவள் தலையில் கை வைத்தாள்.

“அதுக்கு என்ன இப்போ? நீ உள்ளதான் இருக்கேன்னு சொல்லேன். வேணும்னா நான் சொல்லவா?” என்று கூறியவன் “ம்மா…” என கத்த வர

“டேய்… லூசு… நான் என்ன… உன் பொண்டாட்டியா? நான் அவங்ககிட்ட போய் நான் உங்க பையன் கூட இந்த ரூம்லதான் நேத்து நைட் பூரா பறக்க பறக்க பிடிக்குதே பழைய ரணங்கள் மறக்குதேன்னு டூயட் பாடிட்டு அவனை கட்டிப் பிடிச்சிட்டு தூங்கிட்டு இருந்தேன் அத்தன்னு சொன்னா உங்க அம்மா என்ன வாடி திருமகளே என்னோட மருமகளேன்னு சொல்லி கொஞ்சுவாங்களா?” என்று முறைத்தாள் அவனை.

“ஐய்யய்யோ ஆமால்ல?” என தன்னிலைக்கு வந்து தலையில் கை வைத்து என்ன செய்வதென யோசித்தான் ஆதி.

மகாலக்ஷ்மி வேறு “கார்த்திக்… கதவ திறக்க போறியா இல்ல உடைச்சிடவா?” என பொறுமை இழந்து கேட்டதும்

“மாட்டினோம்.” என்றான் யூவியைப் பார்த்த மாதிரியே. அவள் கட்டிலில் அமர்ந்து ஏதோ யோசனையில் ஆழ

“ஹெலோ… மேடம்… என்ன யோசனை?” என்றான் குறும்புடன்.

“இல்ல… நம்ம ரெண்டு பேரையும் ஒன்னா பாத்தா பாட்டி ரியேக்ஷன் எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தேன்.” என்றாள் பயத்தில் தெறித்த விழிகளுடன்.

“என்ன பண்ணிட போறாங்க? என்கிட்ட தாலிய தந்து பல்லவி கழுத்துல கட்ட சொல்றதுக்கு பதிலா உன் கழுத்துல கட்ட சொல்லுவாங்க.” என்றான் சலிப்பாக.

“என்னது உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கனுமா? உலகமே இடிஞ்சு போனாலும் பாட்டி அப்படி சொல்ல வாய்ப்பே இல்லயே.'” என அவள் சொன்னதும் அவன் ஈரத் தலையை சிலுப்பி விடவும் அவன் தலை முடியிலிருந்த தண்ணர் அவள் மேல் பட்டு சிலிரித்து அடங்கியது அவள் உடல்.

“அப்போ பாட்டி நம்ம கல்யாணத்துக்கு சரின்னு சொன்னா உனக்கு ஓக்கேவா?” என தலையை சாய்த்து குறும்புடன் கேட்டான் ஆதி.

“ஐய்ய… ஆளையும் மூஞ்சையும் பாரு. நான் எவன வேணாலும் கட்டிக்க ரெடியா இருக்கேன். உன்ன தவிர. இதெல்லாம் ஒரு மூஞ்சா?” என்று வாந்தி வருவது போல் பாவனை செய்தாள்.

“ரொம்ப வானத்துல பறக்காத. நீ ஒன்னும் ஐஸ்வர்யா ராய் இல்ல. என் ரேஞ்சுக்கு நீ எல்லாம் ஓவர்தான். ஆனால் இப்படி தனியா விட்டு போனதும் ரெண்டு பேரும் இப்படி டூயட் பாடி குடும்ப கௌரவத்தை நாசம் பண்ணா யாரா இருந்தாலும் மாங்கல்யம் தந்துனானே தான்.” என்றான்.

“எனக்கு ஒன்னும் அந்த ஆசையெல்லாம் கிடையாது.” என்று உதட்டை பாக்கிஸ்தான் வரை நீட்டினாள்.

“ஆமா… ஆமா… அதனாலதான் நைட் கதிரைல தூங்கின நீ காலையில பெட்ல என்ன கட்டிப் பிடிச்சிட்டு பக்கத்துல தூங்கினேல்ல?” என்றான் நக்கலாக.

“சப்போஸ் அப்படி பாட்டி தாலிய கொடுத்து கட்டுன்னு சொன்னா… நீ என்ன பண்ணுவ?” என்றாள் மிடுக்காக.

“ஏதோ… என்னால ஒரு பொண்ணோட லைப் நாசம் ஆகிட கூடாதுன்னு உன் மானத்தை காப்பாத்த உன்ன கல்யாணம் பண்ணிப்பேன்.” என்று சேர்ட்டை உயர்த்தி பேசினான்.

“ஐய்யே… அவ்ளோ சீன் எல்லாம் இல்ல உனக்கு.” என்றவள் “சரி… அதுக்கு அப்பறம் என்ன ஆகும்?” என நகத்தைக் கடிக்க

“ஏய்… இது கூட தெரியாத அளவு நீ சின்ன பொண்ணு இல்லல?” என அவன் கேட்க அவளுக்கு அவன் அவளை கிண்டல் செய்வது கூட புரியவில்லை.

“சத்தியமா தெரியாது. என்ன ஆகும்?” என அவள் அவன் முகத்தை ஆராய்ந்தாள்.

அவன் குறும்புடன் வெட்கப்பட்டவாறே “ச்சீ… எனக்கு வெட்கமா இருக்கு. அதுக்கப்றம் பேசிக்கா ஹஸ்பன்ட் என்ட் வைப்குள்ள…. பர்ஸ்ட் நைட்தான்…” என்று நகத்தைக் கடித்தவாறே டீசேர்ட்டைக் கழட்ட

“ஏய்… ஏய்… ஏய்… என்ன பண்ற?” என்று கத்தி கண்களை மூடிக் கொண்டாள். அவன் சேர்ட்டைக் கழட்டி ஈர உடையை கசக்கிப் பிழிந்து தோளில் போட்டுக் கொள்ள அவள் விரலை நீக்கி விரலின் ஓரத்தால் பார்த்துவிட்டுதான் கண்களிலிருந்து கையை எடுத்தவள்

“ஹீ… ஹீ….” என இழிக்கவும் தலையிலடித்துக் கொண்டான் ஆதி.

கண்கள் விரிய “டேய்… நீ இவ்ளோ நேரமா டப்ள் மீனிங்க்ல பேசிட்டு இருந்தியா நீ?” என தலையணையால் அவனை அடி அடி என அடித்து வாங்க. அவன் சிரித்துக் கொண்டே அவளைத் தடுத்துக் கொண்டிருந்தான்.

அவளும் அவனுடன் சேர்ந்து சிரித்தவாறே “நான் கேட்டது அடுத்ததா பாட்டி என்ன பண்ணுவாங்கன்னு. நீ என்ன சொல்லிட்டு இருக்க? இனிமேல் சொல்லுவ?” என அவனை இன்னொரு அடி அடிக்க அதை தடுத்தவாறே

“பாட்டி என்ன பண்ணுவாங்க? ஆதி… நீயும் இந்த பொண்ணும் இந்த வீட்டுல இருக்க கூடாது. என் சாவுக்கு கூட இந்த வீட்டு வாசல் படிய மிதிக்காதீங்கன்னு சொல்லுவாங்க. உன்ன விட நல்ல மாப்பிள்ளைய நான் பல்லவிக்கு பாத்து கட்டி வெப்பேன்டா. அப்டின்னு கிய்யா முய்யான்னு ஏதாவது டயலொக் பேசுவாங்க.” என்றவாரே டீசேர்ட்டை முறுக்கிப் பிழிந்து மீண்டும் போட்டுக் கொண்டான்.

“இந்த ஆதிய இனிமேல் கூப்பிட்டு பிரயோசனம் இல்லை…” என்றவாறே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் மகாலக்ஷ்மி.

இதனை எதிர்பாராதவன் இதயம் படபடக்க “அம்மா… நான்…” என்று உலரிக் கொண்டிருக்க அவனுக்கே சற்று பயம் ஏறியது.

“ஆதி நான் எத்தனை தடவை கதவை தட்டுறது? நானும் தட்டிக்கிட்டே இருக்கேன். உனக்கு கொஞ்சமாச்சு காதுல விழுந்திச்சா பாரு. அவ்ளோ தூக்கமாடா உனக்கு? நேரத்தோட தானே ஏழுந்திருப்ப?” என அவனைத் திட்டிவிட்டு

“சரி.. யூவி எங்கடா? காலையில இருந்து தேடிக்கிடடே இருக்கோம். அவ எங்கதான் போனான்னே தெரியலடா… பயமா இருக்குடா…” என்றார் மனம் பதைபதைக்க.

“என்னது… யூவிய காணோமா?” என பின்னால் தேடினான் ஆதி. அவள் இருந்ததற்கான அறிகுறியே அங்கு கிடைக்கவில்லை.

“இங்கதானே இருந்தா. அதுக்குள்ள எங்க போனா?” என அங்கும் இங்கும் பார்க்க கட்டிலின் கீழிருந்து எட்டிப் பார்த்தாள் யூவி.

“பரவால்ல. எப்படியோ அம்மா கண்ல படாம தப்பிச்சிட்டா.” என்றவன் பெருமூச்சை இழுத்து விட்டான்.

அவனை தட்டிய மகாலக்ஷ்மி “டேய்… நான் என்ன கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன அங்க பாக்குற? யூவி எங்கடா?” என்றார் கோபமாக.

“அவ இங்கதான்மா எங்கயாவது ஊரு மேஞ்சிட்டு இருப்பா. மேய விடுற பசு மாடும் அவளும் ஒன்னுதான். கடைசில வந்து சேரந்துடுவா. கவலைப்படாம நீங்க போய் வேலையைப் பாருங்க.” என்றதும் எட்டி அவன் காலிலேயே உதைத்தாள் யூவி.

“அம்மாஆஆஆ…” எனக் கத்தினான் வலி தாங்காது.

“ஏய்… என்னாச்சுடா?” என்று கேட்டார் பதறிப் போய்.

அவன் வலியை மறைத்தபடியே “அம்மா… அம்மா… ஆசை அம்மா… நன்றி சொல்ல வார்த்தை இல்லம்மா. ப்ளீஸ்மா இங்கேருந்து போய்டுமா.” என உலர

“என்னடா உலர்ர? ஏதாவது காய்ச்சலா?” என அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லமா. நீ போய் அந்த யூவிய தேடுற வழிய பாரு.” என்றான் சமாளிப்பதற்காக.

“டேய் அவள உன் பொறுப்புலல்ல விட்டுட்டு போனோம். நீ என்னடான்னா இப்படி சொல்ற? அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னு வெச்சுக்கோ உன்ன கொன்னுடுவேன்.” என்றுவிட்டு அவன் நனைந்திருப்பதை பார்த்தவர்

“டேய்… என்னடா நனைஞ்சிருக்க?” என வினவ

“அ… அ… அதுவா? குளிச்சேன்மா.” என்றதும் கீழே கிடந்த தண்ணீரைப் பார்த்துவிட்டு

“என்னடா இங்க எல்லாம் எப்படி தண்ணி ஊத்தி இருக்கு? இங்கேயா குளிச்ச?” என்றார் யோசனையுடன்.

“எங்கேயோ குளிச்சேன்மா. உனக்கு எதுக்குமா அதெல்லாம். முதல்ல நீ வெளில போ.” என்றதும் கீழே கிடந்த யூவியின் செருப்பை கண்டுவிட்டார் மகாலக்ஷ்மி.

“டேய்… என்னடா. இப்போ எல்லாம் பொண்ணுங்க சப்பல் வேற போட ஆரம்பிச்சுட்டியா?” எனக் கேட்டார் வாய் பிளந்து.

“ஐய்யய்யோ இவ வேற செருப்பை போட்டு காட்டி கொடுத்துட்டாளே.” என பின் தலையில் கை வைத்து யோசிக்க அதை எடுக்க கீழே குனிந்தார் மகாலக்ஷ்மி.

உடனே அவர் யூவியைப் பார்த்து விடக் கூடாது என்பதற்காக “ம்மா… ம்மா… ம்மா…” என கத்தி அவரை தடுத்தவனை பார்த்து

“என்னடா? பக்கத்துல தானே இருக்கேன். பின்ன எதுக்கு இப்படி கத்துற?” என்றதும் யூவி எப்படியோ கட்டிலின் கீழிருந்து எழுந்து வெளியே வந்து அவனை முறைக்க அவனோ மகாலக்ஷ்மியை பார்த்து

“ஒன்னும் இல்லமா. ஒன்னும் இல்ல. அது இப்போ எல்லும் பொண்ணுங்க சப்பல பசங்க போடுறதுதான் பேஷன்… பேஷன்…” என்றவாறே கண்களால் யூவியை

“க்ளோசெட் உள்ள போ…” என சைகை காட்ட அவளும் சென்று க்ளோசெட்டினுள் ஒழிந்து கொண்டாள்.

யூவியின் செருப்பை எடுத்த மகாலக்ஷ்மி “இனியாவது பசங்க சப்பல் போடுடா. ஊரே பாத்து சிரிக்க போது.” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

“அப்பாடா… நல்ல வேளை அம்மா எதையும் பாக்கல.” என்றவனிடம் மீண்டும்

“கார்த்திக்… இந்த அபியோட ட்ரஸ் ஏதோ உன் வார்ட்ரோப்ல இருக்காம். அத எடுத்து தர சொல்லி ஒரே தொல்ல பண்றா. அதுதான் எடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.” என்றதும் ஆதிக்கு இடி மின்னல் என வந்து நெஞ்சில் விழுந்தது. மகாலக்ஷ்மி சென்று வார்ட்ரோப் கதவை திறக்க முயல

“அம்மா… அம்மா…” என அவர் முன் போய் நின்றான் ஆதி.

“அம்மா… நான் நல்லா பாத்துட்டேன்மா. என் க்ளோசெட்ல அவ துணியெல்லாம் இல்ல. அவ வேற எங்கேயாவது வெச்சிருப்பா.” என்றான் தயக்கத்துடன்.

“நீ சரியா பாத்திருக்க மாட்டேடா. தள்ளு நானே பாத்துக்குறேன்.” என்று கதவைத் திறந்தார் வேகமாக.

“ஐய்யோ எல்லாமே போச்சு.” என தலையில் கை வைத்தான் ஆதி. கதைவைத் திறந்ததும் உள்ளே திடீரென கண்ட உருவத்தை பார்த்து

“ஆ…” எனக் கத்தினார் மகாலக்ஷ்மி. தலையில் கை வைத்தவாறே

“அம்மா யூவிய பாத்துட்டாங்க… மாட்டினோம்.” என திருதிருவென முழித்தான் ஆதி.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!