காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 26 🖌️

5
(1)

கதைவைத் திறந்ததும் உள்ளே திடீரென கண்ட உருவத்தை பார்த்து “ஆஆஆ…” எனக் கத்தினார் மகாலக்ஷ்மி.

தலையில் கை வைத்தவாறே “அம்மா யூவிய பாத்துட்டாங்க… மாட்டினோம்.” என திருதிருவென முழித்தான் ஆதி.

“என்னடா இது ஹூடிய இப்படி கொழுவி வெச்சிருக்க? நான் திடீர்னு பாத்ததும் பயந்துட்டேன். யாரோ உள்ள நின்னுட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது.” என்று கூறியவர் உள்ளே இருந்த அபியின் உடைகளை எடுத்து

“இது என்னடா? இததான் தேடினேன். பெரிசா இல்ல இல்லன்னு சொல்லி சாதிச்ச? இப்போ இது எங்க இருந்து வந்தது?” எனக் கேட்டதும் அதிர்ந்து விழித்து உள்ளே எட்டி யூவியைத் தேடினான் ஆதி.

அவள் கீழாக தவழ்ந்து கொண்டு வந்து ஜன்னலின் திரைச் சீலையின் பின் ஒழிந்து கொண்டாள். “பரவால்ல. நல்லாதான் எஸ்கேப் ஆகுறா.” என வாய்க்குள் சிரித்தவன்

“அதுதான் எடுத்தாச்சுல்ல… இன்னும் எதுக்கு இங்க நிக்குறம்மா?” என்றதும்

“ரொம்பதான் பண்றான்.” என்றுவிட்டு சென்றவர் ஜன்னல் திறந்திருந்ததை பார்த்து விட்டு

“என்னடா இவ்ளோ காலையில இப்படி ஜன்னலை திறந்து வெச்சிருக்க? குளிர் காத்துல தடுமல் வரப் போகுதுடா.” என்றவாரே ஜன்னலை அடைக்கச் செல்ல

“எப்படி ஓடி ஒளிஞ்சாலும் அவ இருக்குற இடத்துலேயே திரும்ப திரும்ப போய் அம்மா நிக்கிறா.” என கடுப்பில் வாய்க்குள் கத்திக் கொண்டவன் எவ்வாறு தடுப்பது என யோசித்தவாறே நிற்க அவர் அதற்குள் ஜன்னலை இழுத்து மூடிவிட்டு

“இப்போ சரி…” என்றவர் வாயைப் பிளந்து யூவியைத் தேடிக் கொண்டிருக்கும் தன் மகனிடம்

“என்னடா அப்படி பாக்குற? முதல்ல போய் தலைய துவட்டிட்டு வந்து சேரு.”  என்று கூறியவாறே

“என் பையனுக்கு ஏதோ ஆகிடுச்சு. புத்தியும் சரி இல்ல. அவன் நடந்துக்குற விதமும் சரியில்லை. முதல்ல இவனுக்கு நல்லா வேப்பிலை அடிக்கனும்.” என்றுவிட்டு சென்றார்.

“எங்க போனா?” என ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தவனின் முன்

“என்ன தானே தேடுற?” என்றவாறு வந்து நின்றாள் யூவி.

“எப்படிடி தப்பிச்ச?” என்றான் மெச்சுதலாக.

“அதெல்லாம் நாங்க எஸ்கேப் ஆகுறதுல கரெக்டா இருப்போம். நல்லவேளை உங்க அம்மா மட்டும் பாக்கல. இல்லன்னா அவ்ளோதான். Thank god…” என்றவள்

“இனிமேலாவது இப்படி பைத்தியக்கார வேலை பண்ணாத. எனக்கு நிறைய வேலை இருக்கு. பாய்…” என்றுவிட்டு தனது அறைப் பக்கமாக ஓட

“ஒரு நிமிசம் நில்லுடீ…” எனக் கத்தினான் அவளை அழைத்தவாறே.

“அதெல்லாம் வர முடியாது போடா.” என்றுவிட்டு ஓடிவிட்டாள். அறையின் உள்ளே சென்றவளுக்கு கை கால் ஓடவில்லை. உடனே வார்ட்ரோப்பை திறந்து ஏதோ ஒரு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடிவிட்டாள். அரை மணித்தியாலங்களில் ஆயத்தமாகி வந்தவள் கதவைத் திறந்து கொண்டு

“யூவியக் காணோம்மா. எங்கதான் அடிக்கடி சொல்லாம கொல்லாம மாயமா போறான்னு தெரியல.” என தாயாரிடம் புகார் சொல்லிக் கொண்டிருக்கும் மகாலக்ஷ்மியின் முன் சென்று நின்றாள்.

அவளைக் கண்டதும் “எங்கம்மா போன? நான் உன்ன எங்கே எல்லாம் தேடிட்டு இருந்தேன் தெரியுமா?” என கோபமாக கேட்டவரிடம்

“இல்ல அத்தை நான் என் ரூம்லதான் தூங்கிட்டு இருந்தேன்.” என்றாள் பெற்றியை நீவி சமாளித்தவாறே.

“ஆனால் நான் உன்ன அங்க பாக்கலையே.”  என்று சந்தேகமாய் கேட்க

“உண்மைய சொல்லலாமா? பொய்ய சொல்லலாமா?” என யோசித்தவள்

“பொய்யையும் உண்மையையும் கலந்தே சொல்லிடலாம்.” என்றவாறே

“அது… ரொம்ப குளிரா இருந்திச்சா… அதுதான் கீழ தூங்கினேன். தூக்கத்துல அப்டியோ உருண்டு பிரண்டு கட்டிலுக்கு கீழ போய் தூங்கிட்டேன்.” என அசடு வழிந்து பொய் ஒன்றை எடுத்து விட்டாள்.

“இனிமேல் இப்படி தரையில தூங்காம ப்ளேங்கெட் போட்டு தூங்கும்மா… காய்ச்ல் வந்துட போகுது.” என்று பாசமாக சொன்னதும்

“சரி அத்தை.” என தலையாட்டியவளிடம்

“நானும் பாத்துட்டு தான் இருக்கேன். அதென்னமா புதுசா அத்தை…” என்றார் சிரிப்புடன்.

“அது… வந்து…” அவள் முனுசியவள்

“ஐய்யோ… நாமளே காட்டிக் கொடுத்துடுவோம் போலயே.” என திருதிருவென்று விழித்தாள்.

“சக்தி அவளுக்கு ஹஸ்பன்ட்னா… நீங்க அவளுக்கு அத்தை தானே?” கூறிக் கொண்டே வந்தார் சரஸ்வதி.

“இது வேறயா?” என நொந்து கொண்டவள்

“எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு. நான் போய் பண்ணிட்டு வரேன்.” என நகரப் போனவளை இழுத்து வைத்து

“இதுக்காகதான் உன்ன கூப்பிட்டேனா?” என பாட்டியிடம் கண்காட்டி மகாலக்ஷ்மி முறைக்க

“வேற எதுக்கு?” என்று புரியாமல் மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“நேத்து உன் பிறந்தநாள். உனக்காக இத வாங்கினேன். ஆனால் நைட் தரலாம்னு நினைச்சேன். ஆனால் தர முடியல. அதுதான் இப்போ கொடுக்கலாம்னு உன்ன கூப்பிட்டேன்.” என புன்சிரிப்புடன் கூறினார் பாட்டி.

“பாட்டி… எனக்கு இதெல்லாம் தேவையே இல்லை. நீங்க காட்டுற அன்பே போதும். அதுலயே இந்த 5 மாசமும் வாழ்ந்துடுவேன்.” என உணர்வுபூர்வமாக கன்னம் விரிய சிரித்தாள் கூற

“என்ன அது 5 மாசம்? நீ எதுக்காக இப்படி பேசுற? நூறு வருசம் வாழுவேன்னு சொல்லு.” என்று அவளை அன்பாக கண்டித்தார் சரஸ்வதி.

“அது சரி. உன் பாசக் கயிறு டயலொக் எல்லாம் போதும். இத தட்டாம வாங்கு. நானும் பாசத்துலதான் தரேன். ஒவ்வொரு வருசமும் காவ்யாவுக்கு கொடுப்பேன். கொஞ்ச வருசமா அவளும் இல்ல. அவளுக்கு கொடுக்கவும் இல்ல. ஆனால் இந்த வருசம் உனக்கு தர்ரேன். வாங்கிக்கோ.” என கட்டாயமாக வாங்கிய நகையைத் திணிக்க அவளால் தட்ட முடியவில்லை. வாங்கிக் கொண்டாள்.

“அம்மா… என்ன சாப்பிட உட்கார வெச்சிட்டு எங்கம்மா போன? பசிக்கிது. ஏதோ கருகுற வாசனை வேற வருது. தோசை நல்லா கருகிடுச்சு போல. எனக்கு இன்னும் பத்து நிமிசத்துல சாப்பாடு வரலன்னா நான் எழுந்து போய்டுவேன்ம்மா. நான் சொன்னது சொன்னதுதான்.” எனக் ஆதி கத்திக் கொண்டிருந்க்க வீடே அதிர்ந்தது.

அப்பொழுதுதான் என்ன நடக்கிறது என்று நினைவுக்கு வந்தவராக சென்று தோசையை கவனிக்க ஆரம்பித்தார். “ஐய்யய்யோ… ஸ்ஸ்ஸ்ஸ்… மறந்து போச்சு…” என்று உள்ளே ஓடிவிட்டார்.

“நீயும் போய் சாப்பிடும்மா.” என்று கூறியதும் யூவி மகாலக்ஷ்மிக்கு உதவி செய்வதற்காக சமயலறைக்குள் செல்ல அதைப் பார்த்த ஆதி விசில் அடித்து அவளை அழைத்தான்.

“இவன் எதுக்கு இப்போ கூப்பிடுறான்?” என யோசித்தவாறே அவன் அருகில் சென்று நின்றாள்.

“Good morning.” என தனது தொலைபேசியை பார்த்தபடி அவன் கூற

“ஐய்யய்யோ. இப்போ சல்யூட் அடிக்கணுமே… பைத்தியம்… இவனுக்கு நான் அசிங்கப் படணும். அதுதான் அவன் ப்ளேன்.” எனப் புரிந்து கொண்டாள்.

“இங்க எல்லாரும் இருக்காங்களே. இவனுக்கு கல்யூட் அடிச்சா… என்ன எல்லாரும் லூசுன்னு நைக்கப் போறாங்க.” என்று அவள் துப்பட்டா முனையுடன் தனது மூளையையும் சேர்த்துக் கசக்க அவளை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்துவிட்டு

“இப்போ நான் குட் மோர்னிங்க் சொன்னேன்.” என அவன் சத்தமாக கத்த வேகமாக அனைவர் முன்னும் சல்யூட் அடித்துவிட்டாள். பல்லவி அவளை வினோதமாக பார்த்து வாயடைத்து நின்றிருக்க

“அது வந்து… அக்கா… ஒரு… மரியாதைக்கு… சோ… பழக்கத்துல… பனிஸ்மென்ட்… இல்லைன்னா அப்பாவ பத்தி… ஆதி… தெரில…” என அவள் கண்டவாறு உலர யாருக்கும் எதுவும் புரியவில்லை.

“என்னடி பைத்தியம் மாதிரி உலர்ர? ஏதாவது சிஸ்டம் டேமேஜ் ஆகிடுச்சா என்ன?”  என யூவியைப் பார்த்து அபி காதை கடிக்க ஆதி வாய்க்குள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டவன் அவளைப் பார்த்து டிங்ஙென்று கண்ணை அடித்தவன் அவளைப் பார்த்தவாறே தோசையை மென்று தின்ன

“ஹம்….” என விக்கித்துப் போனவள் அபியிடம் திரும்பி

“உங்க அண்ணன்னு ஒரு சாத்தான் இருக்கும் போது என் வாழ்க்கை நாசம்தான்.” என அவள் கூறிவிட யாரும் பார்க்காத நேரத்தில் யூவியின் கையைப் பிடித்து இழுத்தே தனக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டான் ஆதி. அவனை முறைத்தவாறே அவள் அமர்ந்திருந்தாள்.

மகாலக்ஷ்மி அவனுக்கு நான்கு தோசைகளை வைத்து விட்டு யூவிக்கு இரண்டு தோசைகளை வைத்தார். அவள் சாப்பிடாமல் மேசையில் கோலம் போட்டவாறு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்க சுற்றும் முற்றும் நோக்கிவிட்டு அவள் கையை கிள்ளி நிகழ்காலத்திற்கு வர வைத்தான் ஆதி.

அவன் கிள்ளியது வலித்ததில் “ஸ்ஸ்ஸ்…” அவனை முறைத்தாள் தலையைத் திருப்பி

“என்னடி சாப்பிடாம இருக்க. வேணும்னா நான் ஊட்டி விடவா?” அவன் கண்ணடித்துக் கொண்டே குறும்பாக இதழ் வளைத்துக் கேட்கவும் இவன் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என அறிந்து வேகமாக

“தேவையில்லை… நீ உன் சாப்பாட சாப்பிடு.” என தனது உணவை உண்ண ஆரம்பித்திருந்தாள். அவன் அவள் செயலைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே அவளுக்கு ரைத்தாவை வைத்துவிட்டு அவன் உணவை உண்ணாது போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்துவிட்டவள் “சாப்பிர்ரதுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. இப்படி தட்டுல சாப்பாட வெச்சிட்டு இப்படி போன் நோண்டிட்டு உட்கார்ந்து இருக்க?” என்றாள் அவனை சீண்டுமாறு.

“அப்படியா? அப்போ சரி நீயே ஊட்டி விடு.” என்று சிரித்தான் போனிலிருந்து பார்வையை மாற்றாமல்.

“நீ என்னதான் உன் மனசுல நினைச்சிட்டு இருக்க? உன்ன என்ன சொல்லி திட்டுறதுன்னே எனக்கு தெரியல. எல்லாரும் இருக்காங்க. சோ… இப்படி பைத்தியம் மாதிரி பேசாம ஒழுங்கா சாப்பிட்டு வேலை வேட்டி இருந்தா போய் பாரு.” என்று திட்டிவிட்டு அவள் அவள் வைலையில் கருத்தாக இருந்தாள்.

“பாட்டி… உங்க பையன் ஆ..?” என்றதும் அவன் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி விட்டாள் யூவி.

“அவ்ச்.” என கத்தியவனை இழித்தவாறு பார்த்துக் கொண்டே பல்லைக் கடித்தவள்

“ஹம்ம்ம்ம்… பாட்டி அது என்னன்னா… ஆதியும் நானும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம் பாட்டி. அதுவும் சும்மா சாதாரணமான ப்ரென்ட்சிப் இல்ல பாட்டி. ஸ்ட்ரோங்க் ப்ரெண்ட்ஸிப் பாட்டி. அசைக்க முடியாஆஆதது.” என அவனைப் பார்த்தவாறே பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னவள்

“இல்லை ஆதி…” என்று ஆழித்தவாறே பொஅயயாக சிரித்துக் கொண்டு அவன் தோளில் கையைப் போட்டாள்.

“என்னயாடி கிள்ளுற? நீ எப்படியும் என்கிட்ட தனியா மாட்டுவேல்ல? அப்போ பாத்துக்குறேன்.” என பல்லைக் கடித்து உள்ளுக்குள் பொறிந்து கூறிவிட்டு எழுந்தவன்

“பாட்டி  எனக்கு வொஸ் பண்றதுக்கு நிறைய டிரஸ் இருக்கு. எப்படி வொஸ் பண்றது? ஐ மீன் இங்க வொஸ்ஸிங்க் மெஸின் இல்லையே பாட்டி. அதுதான் கேட்குறேன்.” என்று தலையை சொரிந்தான்.

“இது வில்லேஜ். சிட்டி இல்ல. இங்க எல்லாருமே ஆத்துலதான் உடுப்பு துவைப்பாங்க. அதனால இதோ டிடேர்ஜன் பௌடரும் துணியை விலக்குற கல்லும். இத எடுத்துட்டு போய் ஆத்துல துவைச்சிக்கோ.” என்று இரண்டையும் தூக்கி மேசையில் வைத்தார் சரஸ்வதி.

“What the hell is this? ஆத்துலயா துவைக்கனும்? இந்த ஸ்டுப்பிட் அறிவாலதான் இத்தனை நாள் நான் இங்க வரவே இல்லை பாட்டி. இப்படியே எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்திங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். நாலு நாளா நானும் எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டுதான் இருக்கேன். இதே நான் பழைய ஆதியா இருந்தா என்ன நடக்கும்னு தெரியாது.” என்று கத்தியவன் கோபமாக தனது அறைக்குள் சென்றுவிட்டான்.

“சரி. நாமளும் போய் நம்ம துணிய வொஸ் பண்ணலாம்.” என யோசித்துவிட்டு தனது துணிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் யூவி. ஆதியின் அறையைக் கடக்கும் போது அவளது கையைப் பிடித்து இழுத்து வைத்து இடையை நெருக்கி தாவணி ஒதுங்கிய வெண் இடையில் கிள்ளிவிட்டான் ஆதி.

“ஆஆஆ….” என அதிர்ந்து அவள் வாயைப் பிளந்து கொண்டு சிலை போல கைகளிலிருந்த துணிகளைப் கீழே போட்டுவிட்டு நிற்க

“என் இடுப்புல கிள்ளுனேல்லடி… உனக்கு என்ன தைரியம் இருக்கணும்? அதுதான் ரிவேஞ்ஜ். செத்தடீ மவளே…” என்று என்று இன்னும் இறுக்கினான்.

என்ன செய்யப் போகிறானோ என்ற பயத்தில் “ஆஆஆதீதீதீ…” நடுங்கியது அவள் குரல்.

“ஆம்பளைங்களுக்கு ஒரு சட்டம். பொம்பளைங்களுக்கு வேறொரு சட்டமாடி…” என்று இன்னும் அவன் கையை அவன் இடையில் உரச கண்களை விழித்து விழுத்து சிமிட்டிக் கொண்டிருந்தவளுக்கு கூச்சமாக இருந்தது.

“இனிமேல்… பண்ணுவ…” என அவளை விலக்கியதும்தான் மூச்சே சீராக வந்தது. அவளைப் பார்த்தவாறே தனது துணியையும் எடுத்து வந்து அவள் கையில் வைத்து

“இதையும் சேர்த்து துவைச்சிடு.” என்று கூறிவிட்டு அவள் கண் முன் கை வைத்து சொடக்கு போட உணர்வுக்கு வந்தவளுக்கு அப்போதுதான் அவன் அத்துமீறல்கள் மூளையிலேயே உரைத்தது.

“ஹவ் டேர்? நீ என்ன பண்ண? உனக்கு என்ன தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ நீ?” என அவனை அடிக்க கை ஓங்க அவள் கையை லாவகமாக பிடித்து பின்னால் கொண்டு வந்து தனக்கு முன்னால் நிறுத்தியவன் கண்ணாடியில் தெரியும் அவள் விம்பத்தை பார்த்து

“Men will be men.” என்று சிரித்தவன் அழுத்தமாக அவள் கன்னத்தில் தன் ஈர முத்தத்தை இலேசாக பதித்தான்.

“ஹ்ம்…” என்று மூச்சு ஏறி இறங்க அப்படியே கண்களை முட்ட முட்ட விழித்து அவனையே பார்த்திருந்தவளுக்கு தலைதான் சுற்றியது. உள்ளுக்குள் ஏதோ ஓர் உணர்வு. இதே இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால்… நடப்பது வேறு கதை. ஆனால்… அவனிடம் மட்டும் ஏன் பயம்தான் வருகிறது? ஏன் தயங்கி பயத்தில் உறைந்து போய் நிற்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.

“எல்லாத்தையும் நல்லா க்ளீனா வொஸ் பண்ணிடு.” என்றுவிட்டு அவளை விட்டுச் சென்றான்.

சென்றவன் இரண்டு நிமிடங்கள் நின்று “இனிமேல் நீ என்ன பெயர் சொல்லி கூப்பிட கூடாது. மரியாதையா கூப்பிடனும். இத நான் நேத்தே சொல்லிட்டேன்.” என்று பின்னால் திரும்பி நிற்பவளிடம் பார்த்து சொல்லிவிட்டுச் செல்ல

“சரிங்க அண்ணா.” என்றாள் திரும்பி பாவமாக.

“வட்? அண்ணாவா?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“எந்த ஊருலடி அத்த பையன அண்ணான்னு சொல்லுவாங்க?” என கொந்தளிக்க

“அப்போ சரிடா தம்பி.” என்றாள் பாவமாக.

“போட்டேன்னா… அண்ணன், தம்பின்னு சொல்லுடி… பல்லை உடைச்சிடுவேன்.” என குத்துவது போல் பாவனை செய்ய அவள் படபடக்கும் விழிகளுடன் பயந்து தள்ளி நின்றாள்.

“நீ பெயர் சொல்லியும் கூப்பிட விடமாட்ற. சேர்னு சொல்லியும் கூப்பிட விட மாட்ற. அண்ணன்னு சொல்லவும் விட மாட்ற. தம்பின்னு சொல்லவும் விட மாட்ற. பின்ன நான் என்னன்னு சொல்றது?” என விரலை மடித்து ஒவ்வொன்றாக சொல்லிக் காட்டினாள்.

“உறவு முறை சொல்லி கூப்பிடு. எனக்கு நோ ப்ரோப்ளம்.” என அவன் வேறு எங்கோ பார்த்து கள்ளச் சிரிப்புடன் கூற

“வேண்டாம்… வேண்டவே வேண்டாம்… நான் சேர்ன்னு கூப்பிடுறேன். அது உறவு முறைய விட ரொம்ப மரியாதையா இருக்கும்.” என்றவள் மனதில்

“டேய்… ஆதி… உன் சாவு என் கைலதான்டா.” என கோபமாக கூறி இடது கையில் வலது கையை குத்திக் கசக்கியவள் துணிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நதிக்கு ஓடினாள்.

“சரியான ட்யூப் லைட்.” என அவளை திட்டியவன் தானும் வேலையை பார்க்க சென்றான்.

சூரியன் வானின் கால் பகுதிக்கு தலை காட்ட சற்று பனி அகலாத அந்த காலநிலையில் சலசலவென நீரலைகள் ஒலி எழுப்ப அருகில் இருந்த மூங்கில் மரங்கள் வெயிலுக்கு குடையாக அருவியின் நிழல் விரித்துக் கொண்டிருந்தன. பூமரங்களில் பூத்துக் குலுங்கிய பூக்கள் மெல்லிய நீரில் பட்டு வரும் தென்றல் காற்றில் உதிர்ந்து நீரில் விழுந்து நதியையே அழகுபடுத்திக் கொண்டிருந்தன. மேலும் குயில்களும் குருவிகளும் தன் இனிய குரலினால் இன்னிசை பாட அந்த இடமே இனிமையுடன் கலந்த சாந்தமாகவும் பசுமையாகவும் தோற்றமளித்தது.

அங்கே அமைதியாக மக்கள் சில பேர் குளித்துக் கொண்டிருக்க சில பேர் உடைகளைக் கழுவிக் கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாக தனது உடைகளுடன் ஆதியின் உடைகளையும் எடுத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் யூவி. அந்த பக்கமாக மீரா, அகல்யா, மகாலக்ஷ்மி, சரஸ்வதி என அனைவரும் உடைகளை கழுவிக் கொண்டிருந்தனர்.

அகல்யா அங்கு வந்த யூவியின் கையிலிருந்த ஆதியின் உடைகளை பார்த்துவிட்டு “யூவி… ஹஸ்பன்ட் சட்டையதான் வைப் துவைப்பாங்க. ஆனால் இது யாரோட சேர்ட்?” என சந்தேகமாக கேட்டவளை எப்படி சமாளிப்பது என்ற புரியாமல் அவள் மலங்க மலங்க விழித்தாள்.

சில வினாடிகளில் “ஓ… சக்தியோட ட்ரஸ்ஸா யூவி? இப்போவே இதெல்லாம் பண்ணி பழகிக்கிற போல. நான் வேற தெரியாம கேட்டுட்டேன்.” என வாயக்குள் சிரித்தவள்

“சரி… சரி… போய் துவை.” என்றதும் அவளுக்கு தான் சங்கடமாய் போனது.

“இந்த ஆதியால என் மானம் மரியாதை எல்லாம் க்ளோஸ்.” என அவனை மனதில் கருவியவாறே உட்கார்ந்து அவன் சேர்ட்டை கோபமாக துவைத்தாள்.

அந்தப் பக்கமாக வந்தான் சக்தி. “அக்கா… ட்ரஸ் எல்லாம் அழுக்கா இருக்கு. துவைக்கனும். சோ… டிடேர்ஜன்டா பௌடர் கொடுங்களேன்.” என கேட்க மீரா புரியாமல் விழித்தாள்.

“என்ன? உங்க ட்ரஸ்ஸதான் யூவி துவைக்கிறாளே. பின்ன எதுக்கு இந்த வேண்டாத வேலை?” என குறும்புடன் கேட்டு சிரித்த மீராவை

“ஹேய்… சும்மா இருடி…” என்று அதட்டி வைத்தாள் அகல்யா.

“என்ன? என் ட்ரெஸ்ஸ அவ துவைக்கிறாளா?” என அதிர்ச்சியுடன் கேட்டவன் யூவியின் பக்கமாக சென்றுவிட்டான்.

அவளைப் பார்த்தவன் “உடுப்பு விலக்குறியா யூவி?” என கேட்டவாறே அவள் பின்னால் சென்று நின்றான்.

“ஆஆஆ… இல்ல. பல் விலக்குறேன்.” என எரிச்சலாக கூறியவள்

“கண்ணு தெரியலயா? பாத்தா தெரியிது தானே?” என முறைத்தவாறே சொல்ல

“சரி… எதுக்காக இந்த ட்ராமா? ஆதி என்ன ப்ளேன் சொல்லி கொடுத்தான்? என் மேல அவ்ளோ லவ்வா உனக்கு? எனக்காக இங்க வரை வந்திருக்க? ஆனால் கதை நம்புற மாதிரி இல்லையே.” என்றான் அவைப் பார்த்து நக்கலாக

“ஹா.. ஹா… நான் ப்ளேனோடதான் இப்படி பண்றேன்னே வெச்சிக்கோயேன். உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது. மூடிட்டு போடா.” என ஆதியின் மேல் இருந்த கடுப்பை அவன் மேல் காட்டினாள்.

“என்ன சொன்ன…” என்றவாறு கோபத்தில் அவளை அடிக்க கை ஓங்கியவனின் கையை தடுத்தது பலமான கரமொன்று.

“ஏய்… சாகனும்ன ஆசையா உனக்கு?” என கண்கள் சிவக்க கேட்டான் ஆதி.

“சாவா? அது கூடிய சீக்கிரம் உன்ன வந்து சேரும் கார்த்திக்.” என அவன் பதிலுக்கு முறைக்க

“என் பேர சொல்லாதடா. அந்த தகுதி உனக்கு இல்ல. நம்பிக்கை துரோகி.” என அவனது சேர்ட்டை பிடித்து கத்தினான் ஆதி கண்களில் கொலை வெறியுடன்.

“டேய்… சேர்ட்ல இருந்து கைய எடுடா.” என அவனிடம் சக்தி எகிற

“முடியாது… எடுக்க முடியாது. உன்னால என்ன பண்ண முடியும்?” என்றான் அவனை அல்பப் பார்வை பார்த்தவாறு.

“கார்த்திக்… இதுக்கு நீ பின்னாடி வருத்தப்படுவ. உன் ப்ளேன் எல்லாத்தையும் நான் கண்டு பிடிக்காம விடமாட்டேன்.” என எரிந்தான் சக்தி.

“உன்னை அப்போவே கொன்னிருந்தா இப்படி நீ பேசுற பந்தா பேச்செல்லாம் கேட்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.” என்றவன் அவனது சேர்ட்டை விடுவித்து அவனை முறைக்க யூவி ஆதியின் பின் ஒழிந்து கொண்டாள்.

“இதுக்கெல்லாம் காரணம் நீதான்டி. இதுக்காக உனக்கு தண்டனை கிடைக்கும்.” என யூவியைப் பார்த்து கோபத்தோடு உரைத்தவன் தனது சேர்ட்டை உதறிவிட்டு சென்றுவிட்டான்.

“ரொம்ப தங்க்ஸ்.” ஆதிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு யூவி நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனது போன் அலறியது.

அதை எடுத்து காதில் வைத்தவன் “Excuse me.” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

“ஹெலோ.” என உரைக்க அடுத்த கனம்

“ஒரு சீக்ரெட் சொல்லனுமா? காவ்யா… இருக்கால்ல… அவளை கொன்னதே நான்தான். என்ன வலை போட்டு தேடிட்டு இருக்கிறியாமே. எங்க? என்ன கண்டு பிடி பாக்கலாம். உன்னால கண்டே பிடிக்க முடியாது.” என்று கூறி கொடுரமாக சிரித்தாள்.

“ஏய்… யார் நீ?” என அவன் கத்த அடுத்த கனம் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த தொலைபேசி எண்ணை அவன் அவதானிக்க அது ப்ரைவட் நம்பர் எனக் காட்டியது.

“ச்சேய்…” என எரிந்தவன் உடனே ரித்தேஷுக்கு அழைத்து விடயத்தை கூறினான்.

“சரி. சேர். நான் நெட்வேர்க் செக்கிங் பண்றவங்க கிட்ட கேட்டு உங்க நம்பருக்கு இந்த நேரத்துல கோல் எந்த நம்பர்ல இருந்து வந்ததுன்னு செக் பண்ண சொல்றேன்.” என்று கூறிவிட்டு அழைப்பை வைத்தான்.

“இன்னைக்கு கண்டு பிடிக்கிறேன். என்கிட்ட கேம் ஆடுறது யாருன்னு.” என ஏளனமாக இதழ் வளைத்துக் சிரித்த ஆதி நெற்றியிலிருந்த வியர்வையை துடைத்து எறிந்தான்.

யூவி உடைகளை எடுத்து வேண்டா வெறுப்பாக துவைத்துக் கொண்டிருந்தாள். அவன் உடைகளை தோய்த்தவள் அதனை கோபமாக முறுக்கியவாறே “எனக்கு இருக்குற கோபத்துக்கு உன்ன…. இப்படிதான் அடிச்சி துவைச்சு வெளுத்து என் கோபத்தை தணிக்க முடியும்.” என்று அவன் உடைகளை அவனாக எண்ணி சொன்னவள்

“டேய்… மாவன்னா… உன் மனசுல என்ன பெரிய மகாராஜான்னு நினைப்பா. இவரு சொல்லுவாறாம். அப்படியோ நாங்க அத மந்திரிச்சு விட்ட மாதிரி பண்ணணுமாம். என்னை நீ என்ன இழிச்ச வாச்சின்னு நினைச்சியா? ஓவரா பண்ற? என் லெவலுக்கு எல்லாம் நீ கொஞ்சம் ஓவர்தான்டா. யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும். எருமை மாடு… மூஞ்சியும் முகரையும் பாரு. வந்துட்டான் பெரிய அருசுவை ஐயாசாமி. இஞ்சி டீ போடு அதுல சக்கரை போடுன்னு. உன் மூஞ்சியே இஞ்சி தின்ன குரங்கு மாரிதான்டா இருக்கு. இதுக்குள்ள உனக்கு இஞ்சி டீ வேணுமா? என் வீட்டுல என் சொந்த துணிய கூட நான் வொஸ்ஸிங் மெசின்லயே கழுவ மாட்டேன். ஆனால் நீ கையால கழுவ விட்டுட்ட… என் கை எல்லாம் இன்ப்லமேசன் ஆக்கிடுச்சு. இனிமேல் இப்படி பண்ணுவ?” என்றவாறு அவனது உடைகளை தூக்கி வேகமாக துணி விலக்கும் கல்லின் மேல் தொப்பு தொப்பென அடி பின்னி எடுத்து விட்டாள். பின்னாலிருந்து இதை கை கட்டி பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஆதி. இல்லை… இத்தனை நேரமாகவும் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

அவள் சேர்ட்டை விரித்து தனக்கு முன்னாள் பிடித்து குத்து குத்தென குத்தி விளையாட அந்த சேர்டின் தலையில் பொருந்துமாறு வந்து நின்றான் ஆதி. அவனைப் பார்த்ததும் புலி பூனையாக பம்மி விட்டது.

“ஹாய்… எப்போ வந்திங்க சேர்… குட் மோர்னிங்க்?” என அவள் சல்யூட் அடித்து இழிக்க

“நடிக்காத… நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன்.” என்றதும் பேச்சை மாற்றுவதாக

“சேர்… நீங்க வெயில்ல எல்லாம் நிக்காதீங்க. மூஞ்சிய சுட்டுட போகுது. போங்க போங்க நிழல்ல நின்னு நான் கஸ்ட பட்டு துவைக்கிறத பாருங்க சேர்.” என பாவமாக கூறிவிட்டு குனிந்து கொண்டு உடைகளை மீண்டும் மெதுவாக விலக்க ஆரம்பித்தாள். அவள் அவனை பார்க்கவே இல்லை. அவன்தான் அவள் அழுகிறாள் என அறிந்து கொண்டு

“என்ன நிமிர்ந்து பாரு கொஞ்சம்.” என்றான் கைகட்டி நின்று தலைகுனிந்தவாறு.

“மாட்டேன்…” என்றவாறு தலை அசைத்தவள் புறங்கையால் கண்ணைத் துடைத்துக் கொள்ள அவள் அசைவில் வேண்டுமென்றே அவள் தாடையைப் பிடித்து முகத்தை உயர்த்தினான். அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

“நீ அழுறன்னு எனக்கு தெரியும். மறைக்காதடி…” என்றவனுக்கு மனம் கனமாகிப் போனது.

“எங்க வீட்டுல எல்லாம் என்ன எவ்ளோ சந்தோசமா எங்கம்மா பாத்துப்பாங்கன்னு தெரியுமா? எங்க அப்பா தாங்கு தாங்குன்னு தாங்குவாரு. அப்பா அம்மா இறந்ததுக்கு பிறகு நான் அந்த அன்ப தேடிதான் இங்க வந்தேன். ஆனால் என்ன இருந்தாலும் அம்மா அப்பா அளவுக்கு என்கூட யாரும் பாசமா இல்ல.” எனக் கூறியவவள் மனமுடைந்து மீண்டும் துணிகளை துவைக்க ஆரம்பித்தாள். அவள் கூறிய வார்த்தை அவன் இதயத்தில் ஈட்டி போல் பாய அவள் கைப் பிடித்து துவைப்பதை தடுத்தான்.

“நானே உன் துணி எல்லாத்தையும் துவைக்கவா?” என்று அவன் பாரமான மனதுடன் கேட்க

“நீங்க என் துணிய துவைப்பீங்களா?” என அவள் அதிர்ச்சியில் கேட்டாள் யூவி இது கனவா நினைவா என அறியாமல்.

“ஆமாம்…” என கண்கள் மூடி தலையசத்தவனிடம்

“அதெல்லாம் தேவையில்லை. உங்க துணியை மட்டும் நீங்க துவைச்சாலே போதும் என் பாரம் குறைஞ்சிடும்.” என்று உதட்டை பிதுக்கி சிறு குழந்தை போல செய்தவளின் அழகு அவனை மெய்மறக்க வைத்தது.

தன்னை அவளிடமிருந்து மீட்டுக் கொண்டவன் “பரவால்லடி… எப்படியோ எமோசனலா ட்ராமா போட்டு சமாளிச்சிட்ட…” என்று அவளை மேலும் கீழும் அளந்தான்.

“ஒருவேளை நாம க்ளிசரின் போட்டுதான் பொய்யா அழுதோம்னு கண்டு பிடிச்சிட்டானோ.” என்றவாறு மனதில் நினைத்துக் கொண்டு கண்ணைத் துடைத்தவள் காரிய திருப்தியில் மனதுற்குள் குத்தாட்டம் ஆடினாள்.

அவனும் சேர்ட்டின் கைகளை மடித்து விட்டவன் அவளருகில் அமர்ந்து துணியைத் துவைத்துக் கொண்டிருந்தான்.

“தங்க் யூ…” அவள் கண்ணீரை துடைத்தவாறு சிரித்துக் கொண்டே கூற

“எதுக்கு?” என்று உடையை கசக்கியவாறே

“நீ க்ளிசரின் போட்டுதான் அழுறன்னு தெரிஞ்சும் இதெல்லாம் பண்றதுக்கா?” எனக் கேட்க கண்களைப் பிதிக்கியவள்

“இல்லை… உங்கம்மா கொடுத்த தங்க ஆரம் நீங்கதான் என் பேர்த் டேக்காக வாங்கி தந்தீங்கன்னு தெரியும்.” அவள் கூறி சிரிக்க அவளை தலையைத் திருப்பிப் பார்த்தவாறே

“வழக்கமா… என் அக்காவுக்கு பாத்து பாத்து வாங்கிக் கொடுப்பேன். இந்த தடவை உனக்கு.” என்று நுரை இருந்த கையோடு அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன் அழகாய் சிரித்தான். அவள் மூக்கைத் துடைத்துக் கொண்டு பதிலுக்கு சிரித்தாள்.

“அக்கா… கார்த்திக் மாமாவ பாத்தீங்களா?” என்றவாறு அந்த பக்கமாக வந்தாள் பல்லவி. அவள் குரலைக் கேட்டதும் எழுந்து நின்ற ஆதிக்கு எரிச்சல் தான் வந்தது.

“அந்த குட்டி சாத்தான்கிட்ட நான் எங்க இருக்கேன்னு சொல்லிடாத. இல்லன்னா பின்னாலயே வந்து தொல்ல பண்ணுவா.” என்றவாறு அவசரமாக கையை துடைக்க துணி இல்லாமல் யூவியின் துப்பட்டாவை பிடித்து அவசரமாத துடைத்தவன் மரத்தின் பின் சென்று ஒளிந்து கொண்டான்.

“டேய்… என் துப்பட்டா…” என்று சிவப்பு நிற துப்பட்டாவைப் பார்த்தவளிடம்

“யூவி… நீ கார்த்திக்க பாத்த?” என்றவாறு வந்து நின்றாள் பல்லவி.

மரத்திற்குப் பின்னிருந்த அவனைப் பார்த்தவாறே “இல்லயே நான் பாக்கலையே. ஏன்?” என அவள் வினவினாள்.

“இல்ல. அவர் துணிய துவைக்கதான்.” என்றாள் குதூகலத்துடன்.

“ஏன் அவர் துணிய நீங்க துவைக்கனும்? அவருக்கு கை இல்லையாமா?” என்றாள் அவன் மீது அவள் எடுத்துக் கொள்ளும் உரிமையை சகிக்க முடியாமல்.

“இல்ல. இங்க  ஹஸ்பன்ட் துணிய வைப்தான் துவைப்பாங்க.” என அவள் இழிக்க

“அதுதான் இன்னும் நீங்க கல்யாணம் பண்ணிக்கலையே. பின்ன என்ன ஹஸ்பன்ட்?” எனக் கேட்டவளுக்கு எரிச்சல்தான் கிளம்பியது.

“அது… எப்படியோ… வருங்காலத்துல ஹஸ்பண்ட் தானே. சோ… பழகிக்கலாம்.” என்றதும் அவளை சற்று வினோதமாக பார்த்தவள்

“ஹஸ்பன்டாம்… பெரிய ஹஸ்பன்ட்… இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை… வழிஞ்சிட்டு வந்து நின்னுடுவா.” என்று என்று மனதில் எரிந்து கொண்டவள் அவள் மேலிருந்த கோபத்தை அவன் உடைகளில்தான் காட்டினாள். சேர்ட்டை எடுத்து கோபத்தில் சரசரவென பல்லைக் கடித்து தேய்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த உடைகளை பார்த்த பல்லவி  “அது சரி. இது யாரோட சேர்ட்?” என்றாள். ஆதியுடையது என்று சொல்லிவிடவா முடியும்?

“சக்தியோடது…” என்றாள் இழித்துக் கொண்டே.

“நீ மட்டும் சக்தி சேர்ட்டை துவைக்கலாம். நான் கார்த்திக் சேர்ட்டை துவைக்க கூடாதா?” என்று அவளை டேமேஜ் செய்துவிட்டாள் பல்லவி.

“சரி. தாராளமா துவைங்க… நான் ஒன்னும் கேட்கலையே..” என்றவாறு கோபத்தில் அவனது சேர்ட்டை வேகமாக யூவி தேய்க்க அது கிழிந்தே போய்விட்டது. அதனைப் பார்த்தலளுக்கு நெஞ்சாங்கூட்டில் தண்ணீர் இல்லை. பயம் நெஞ்சுக் குழாயை அடைத்தது.

“ஐய்யய்யோ… இத பாத்தான்னா திட்டுவானே. நான் காலி கடவுளே. இவன் வர்ரதுக்குள்ள இத நான் டிஸ்போஸ் பண்ணிடனுமே…” என்று பல்லைக் கடித்தவள் அவனை வராமல் ஆக்க பல்லவியை அழைத்து

“ஆதி அந்த மரத்துக்கு பின்னாடி மட்டும் இல்ல…” என்றதும் அவளுக்கு புரிந்துவிட்டது.

“ஐய்யய்யோ… நாசமா போறவ… மாட்டி விட்டுட்டாளே…” என்று எங்கே ஓடி ஒளிப்பது என்று தெரியாமல் தவித்தான்.

“ஓஹ்… இங்கதான் ஒளிஞ்சிட்டு இருக்கீங்களா?” என அவள் ஆதியைக் காண மரத்தின் பின் சென்றுவிட்டாள்.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!