மீன் பிடிப்பதற்காக படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான் ஆதி. ஆனால் எப்படியோ நான்கு பெரிய மீன்கள் சிக்கிவிட்டன. அதனை எடுத்து வந்து பெருமையாக காட்டினான் யூவியிடம்.
அவளும் “பரவாயில்லை ஆதி. நீ ஒன்னுக்கும் உதவாதவன்னுல நினைச்சேன். பட் இதையாவது பண்றியே.” அவனைக் கிண்டலடித்தாள் யூவி சிரிப்பை அடக்கியவாறு.
“ஏய்…” என்றவன் அவள் மண்டையில் நங்கென்று கொட்ட
“ஸ்ஸ்ஸ்… ஆஆஆ…” எனக் கத்தியவள் “அடிக்காதடா வலிக்கிது.” என மண்டையை தேய்க்க
“வலிக்கனும்னுதான் அடிக்கிறது.” என்றவன் மீனை சமைக்க ஆரம்பித்தான்.
“சரி ஆதி நீ சமைச்சிக்கோ. நான் போய் குளிச்சிட்டு வரட்டுமா? என் உடம்பெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு. சேறு ஊறிடுச்சு.” என்று முக சுளிப்போடு சொன்னாள்.
“ஆமாம்… இவ பெரிய பிக்னிக் வந்திருக்கா பாரு…” என கடுகடுத்தவன் அவள் முக பாவனையைப் பார்த்துவிட்டு “சரி நீ குளிச்சிட்டு வா. பட் தூரமா போய்டாத.” என்றுவிட்டு மீனை வாட்ட ஆரம்பித்தான்.
அவள் குளித்து முடித்து ஈர உடைகளோடு வந்து நிற்க அவன் அவளைப் பார்த்துவிட்டு தனது சேர்ட்டை கழட்ட “நீ… என்ன பண்ற?” என திடுக்கிட்டாள் யூவி.
“இல்லை. நீ இப்படி ஈரமா இருந்தன்னா கோல்ட் பிடிச்சிக்கும். சோ இதப் போட்டுக்கோ.” என்று அவனது சேர்ட்டைக் கழட்டிக் கொடுக்க
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.” தயங்கியவாறே நின்றாள்.
“என் மேல நம்பிக்கை இல்லையா? நான் அவ்ளோ ஒன்னும் தப்பானவன் கிடையாதுப்பா. நம்பு.” என்றதும் சங்கடத்துடன் அவள் தானாகவே அவனது சேர்ட்டை வாங்கிக் கொண்டு மாற்றுவதற்காக சென்றுவிட்டாள்.
அவள் அவனது சேர்ட்டை அணிந்து கொண்டு வர அவளை இமை அகலாது பார்த்தவன் விழிகளில் காதல் பெருக்கெடுத்து ஓடியது. இதயம் தாறுமாறாக துடிக்க கண்களை அவளை விட்டுத் திருப்ப முடியவில்லை அவனால். ஈரம் சொட்ட சொட்ட முழங்காலுக்கு சற்று மேல் ஏறியிருந்த தனது சேர்ட்டை அணிந்து கொண்டு ஈரத்துடன் நின்றிருந்தவளைப் பார்த்து கண் இமைக்க மறந்தான். “ஆதி… சைட் அடிச்சது போதும்டா. ரொம்ப ஓவரா பண்ற நீ? இதெல்லாம் தப்பு.” அவன் மனம் அவனை வன்மையாக கண்டித்தது. தான் என்ன செய்கிறோம் என உணர்ந்தவன் உடனே கண்களை தன் வேலையின் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தான். அவளுக்கும் அவனை சேர்ட் இல்லாமல் பார்க்க சங்கடமாக இருக்க அவளும் அவனிடம் பார்வையை செலுத்தவில்லை.
மீனை வாட்டிக் கொண்டிருந்தவன் அவள் பக்கம் திரும்பாது “சரி… யூவி நீ யாரையாவது லவ் பண்ணிருக்கிறியா?” பேச்சை வளர்க்க ஆரம்பித்தான். அவளுக்கு சட்டென சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது.
சிரித்துக் கொண்டிருப்பவளிடம் “என்ன சிரிக்கிற? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.” என்று முறைத்தான்.
“யாரு? நானா? அதுவும் லவ்வா? எதுக்கு இப்படி ஜோக் அடிக்கிற? நானே ஊருக்குள்ள முரட்டு சிங்கிள் பொண்ணுன்னு சொல்லி சுத்திட்டு இருக்கேன். நீ வேற கடுப்பேத்தாத. அப்படி லவ் பண்ணாலும் என்னை எல்லாம் எவன் லவ் பண்ணுவான்?” என்று கூறிவிட்டு சிரித்தாள்.
அவளது கையில் மீன் ஒன்றை கொடுத்தவன் “இதோ… நான் லவ் பண்றேனே? அது போதாதா உனக்கு?” என கதையுடன் கதையாக உண்மையை உடைக்க
“நீ என்ன லவ் பண்றீயா? ஜோக் கேட்க நல்லாதான் இருக்கு ஆதி. பட் சிரிப்புதான் வரல. நான் வீட்டுக்கு போனதுக்கு பிறகு இந்த ஜோக்க சொல்லு… அப்போ வேணும்னா சிரிக்க ட்ரை பண்றேன்.” என்றவள் அவனை வேடிக்கையாக பார்க்க
மீனை சாப்பிட்டவாறே “ஏய்… நான் சீரியஸ்ஸா சொல்றேன்ப்பா. I’m in deeply love with you.” என உரைக்க
“அடப் போடா… எந்த நேரத்துல விளையாடனும்ங்குற அறிவே உனக்கு இல்லாம போச்சு. நான் உன்கூட விளையாடுற மூட்ல இல்ல. சோ… நீ நாளைக்கு ட்ரை பண்ணு. எனக்கு தூக்கம் வருது நான் துங்குறேன் பாய்.” என்று கொட்டாவி விட்டுவிட்டு அவனது ஜேக்கட்டை தலையணையாக வைத்து தூங்கிவிட்டாள்.
“நான் ஏதோ சீரியஸ்ஸா பேசுறேன். இவ ஏதோ ஜோக்குன்னு சொல்றா.” என்றவன் “சரி… இவளுக்கு புரிய வைக்க வேண்டிய நேரம் இது இல்ல. வீட்டுக்கு வந்த பிறகு எல்லாத்தையும் பேசிக்கலாம்.” என்றவன் தானும் தூங்கிவிட்டான்.
ஆனால் ஒருவேளை அவன் பேசும் போது அவள் அவனது கண்ணைப் பார்த்து பேசியிருந்தால் தெரிந்திருக்கலாம் அவன் உண்மையைத்தான் கூறுகிறான் என்று. ஆனால் அவன்தான் அவளை ஏறிட்டுக் கூட திரும்பிப் பார்க்கவில்லையே.
இங்கே ஆதியைத் தேடி அவன் வீட்டிற்கே வந்துவிட்டான் ரித்தேஷ். உள்ளே நுழைந்தவன் பரபரப்பாக ஆதியையும் யூவியையும் தேடிக் கொண்டிருப்பவர்களை நோக்கினான்.
“யார் நீங்க? என்ன வேணும்?” என பல்லவி அவனிடம் கேட்க
“ஆதி சேர பாக்கலாம்னு வந்தேன். ஒரு முக்கியமான விசயம் பேசனும்.” என்று தலையைக் குனிந்து கொண்டான்.
“சோரி… கார்த்திக் மாமா வீட்ல இல்ல. நீங்க போய் பிறகு வாங்க.” என்றதும் அவன் கண்டு பிடித்து விட்டான் ஏதோ தவறென.
“ஏதாவது ப்ரோப்ளமா?” என அவன் வினவ பல்லவி என்ன கூறுவது என விழித்தாள்.
“I know நீங்க பல்லவி தானே? நீங்க தாராளமா என்கிட்ட எல்லா விசயத்தையும் செயார் பண்ணிக்கலாம். ஏன்னா காலையில இருந்து நானும் அவர் போனுக்கு ட்ரை பண்றேன். பட் ஸ்விட்ச் ஓப்ன்னு வருது. நீங்க என்ன ப்ரோப்ளம்னு சொன்னா நான் அதுக்கான சொல்யூசன பாத்துப்பேன்.” என்றான் மெதுவாக.
அவளும் சற்று தயங்கியவாறே “கார்த்திக் மாமாவ காலையில இருந்து காணோம். அதே நேரம் யூவியயும் காணோம். யூவின்னா கார்த்திக் மாமா தங்கச்சோட ப்ரண்ட். அந்த பொண்ணையும் காணோம். ரெண்டு பேரும் ஒரே நேரத்துல காணாம போய்ருக்காங்க. ஒரு வேளை அவங்கள யாராவது கடத்திருப்பாங்களான்னு பயமா இருக்கு.” என சந்தேகமாய் கேட்க
“அதுக்கு சான்ஸ் இல்ல. சேர கடத்த சான்ஸ் இருந்தாலும் யூவி மேம கடத்த சான்ஸ் இல்ல. நான் பாத்துக்குறேன்.” என்று கூறிவிட்டு யாருக்கோ போன் செய்து விடயத்தை கூறினான்.
கார்த்திகாவும் திவ்யங்காவும் வேறு யோசனையில் ஆழ்ந்திருந்தனர். பல்லவியை பிடித்து இழுத்து “பல்லவி… ரெண்டு பேரும் ஒரே நேரத்துல காணாம போய்ருக்காங்க. சோ… அவங்க ரெண்டு பேரும் அந்த ஆதித்ய வர்மா மாதிரி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களோ? அந்தப் பொண்ணு மேல ஏற்கனவே எனக்கு சந்தேகம் இருந்தது பல்லவி. ஒருவேளை இப்படி நடந்திருந்தா?” எனக் கேட்டதும்
“உங்க மனச அசிட் ஊத்தி கழுவுங்க. நாங்க என்ன யோசிச்சிட்டு இருக்கோம்… நீங்க என்ன பேசுறீங்க? எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க பாருங்க. ச்சேய்…” எனத் திட்டியவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
ரித்தேஷ் அவனுக்குத் தெரிந்த மீட்புப் படையை அழைத்து விடயத்தைக் கூறி ஆதியைத் தேடச் சொல்லியிருந்தான். ஆனால் இரவாகியும் அவர்களால் இருவரையும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. மகாலக்ஷ்மி வேறு உணவு அருந்தாமல் அழுது கொண்டிருக்க அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார் விஜயன். “ஆதிக்கும் யூவிக்கும் எதுவும் ஆகாது. நீ கவலைப்படாத லக்ஷ்மி. அவங்க வந்துடுவாங்க.” என்றதும்
“காலையில இருந்து காணோம் எங்கதான் போனாங்க? ஒருவேளை ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது? ரெண்டு பேர் போனும் நொட் ரீசப்ள்ன்னு காட்டுது. அப்படின்னா அவங்களுக்கு ஏதோ பிரச்சினைன்னு தானே அர்த்தம்?” என தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.
“கடவுள் இருக்காரு. நம்ம பசங்களுக்கு எதுவும் ஆகாது.” என்ற பாட்டி கடவுளை வேண்டிக் கொண்டார்.
நிலவு வெளிச்சம் காடெங்கும் ஒளி பரப்ப “என்னால நடக்க முடியல ஆதி. எவ்ளோ நேரம்தான் நடக்குறது. இங்க பாரு. அதே மரம். நாம மறுபடியும் மறுபடியும் இந்த இடத்துலேயே வந்து நிக்கிறோம் பாரு.” என தான் அடையாளம் காண்பதற்காக மரத்தில் வரைந்து வைத்திருந்த AY என்ற அடையாளத்தைக் காட்டினாள். அதைப் பார்த்தவன்
“அடக் கடவுளே நானும் எவ்ளோ தடவைதான் இந்த காட்ட விட்டு வெளிய போக ட்ரை பண்றது. ரைட் சைட் போனாலும் இங்கதான் வந்து நிக்கிறோம். லெப்ட் சைட் போனாலும் இங்கதான் வந்து நிக்கிறோம். ச்சேய்…” என்றவன் அப்படியோ அந்த மர்த்தின் அருகில் அமர்ந்து விட்டான்.
“வலி வேற உயிர் போகுதுடா. மயக்கம் மயக்கமா வருது. உடம்புல தெம்பே இல்லை.” சோர்வாக சொன்னாள் யூவி.
“ஏதோ பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்திருக்குற மாதிரி பேசுற? இது காடுமா. இங்க எதுவும் கிடைக்காது.” என்றவன் சோம்பல் முறித்துவிட்டு தூங்க.
அவனருகில் நிலவைப் பார்த்தவாறே தூங்கியவள் திடீரென நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தாள். கண்களை விழித்து பார்த்தவன் “என்னடி பண்ற?” எனக் கேட்க
“பாத்தா தெரியல? ஸ்டார்ஸ எண்ணுறேன்.” என்றவள் “நீயும் எண்ணு. யாரு நிறைய ஸ்டார்ஸ எண்ணுறாங்கன்னு பாக்கலாம்.” என்றதும் அவனும் சேர்ந்து எண்ண ஆரம்பித்தான்.
அவள் மெது மெதுவாக எண்ண அவன் வேகமாக எண்ணி அவளை தாண்டிச் செல்ல இடை இடையே அவனைக் குழப்பிக் கொண்டிருந்தாள்.
“இது சீட்டிங்க். நீ தப்பா விளையாடுற. நான்தான் வின்னர்.” என்று அவன் அவள் கையைத் தட்டி விட்டான்.
“நான்தான் வின்னர். நீதான் பொய்யா எண்ணுற.” என்று அனை அடிக்க மாறி மாறி இருவரும் வாக்குவாதம் செய்ய இறுதியில் அவள்
“ஓக்கே… ரைட்… நீதான் வின்னர் போதுமா?” என்றுவிட்டு வாயை துருத்தி அவனுக்கு பழிப்பு காட்டியவள் அவனுக்கு எதிர்ப் பக்கமாக முகத்தை தினுப்பி தூங்கிவிட்டாள். அவனும் எதிர்ப் பக்கமாக தூங்கிவிட்டான்.
காலையில் எழுந்து பார்த்தாள் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தான் ஆதி. கைகள் இரண்டையும் சேர்த்து கட்டப்பட்டிருந்தன. கண்ணை சிமிட்டி சிமிட்டிப் பார்க்க உலகமே தலைகீழாக இருந்தது. உடலிலிருக்கும் அங்கங்கள் அனைத்தும் புவியீர்ப்பு விசை காரணமாக வாய் வழியே வெளியே வந்துவிடும் போல் இருந்தது.
அப்போதுதான் எதிரே இருந்த யூவியைப் பார்த்தவன் “ஏய்… தூங்கு மூஞ்சு யூவி… எழுந்துருடி…. என்ன பாருடி… யூவி… இங்க பாரு… என்ன என்னடி பண்ண? எதுக்காக நான் இப்படி அந்தரத்துல தொங்கிட்டு இருக்கேன்?” என அவன் கத்த அப்போதுதான் கண்ணை விழித்து பார்த்தாள். ஆதியின் கால்களை கயிற்றில் கட்டி தலைகீழாக தொங்கவிடப் பட்டிருந்தது. அவன் கைகளையும் ஒன்றாக சேர்த்து பின்னிக் கட்டப்பட்டிருந்தது.
அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவள் “ஆதி.” என்றவாறு தன்னை நோக்க அவளையும் ஒரு மரத்தில் கட்டிப் போட்டிருந்தார்கள் அக் காட்டில் வாழும் பழங்குடி மக்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது காட்டிற்கு வேட்டைக்குச் சென்றவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டு வந்துவிட்டனர்.
கண்களை உருட்டி உருட்டி பார்த்தவள் தங்களை சுற்றி நின்றவர்களை பார்த்து “யாரு நீங்க?” எனக் கேட்டாள் பயத்தோடு. அதற்கு அவர்கள் ஏதோ புது மொழியில் பேச அவளுக்கு எதுவுமே புரியவில்லை. உடனே அங்கிருந்த கிரீடம் அணிந்த ஒருவர் ஆதியின் கால்கள் கட்டப்பட்டிருந்த கயிற்றை வெட்டிவிட தொப்பென்று கீழே விழுந்தவன் தலையைத் தேய்க்க
“ஹோர்… ரோஹ்…” என அனைவரும் ஒன்றாக சேர்ந்து கைகள் கூப்பி தலை குனிந்து மண்டியிட்டு அமர்ந்து அவனை வணங்கியவாறு கத்திக் கொண்டிருக்க அவர்களை விசித்திரமாகவே பார்த்தான் ஆதி.
அங்கிருந்த பழங்குடித் தலைவர் அவனிடம் ஒரு ஆயுதத்தைக் கொடுத்து அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்று அருகிலிருந்த சிம்மாசனத்தில் அமர வைத்தார். அதனைப் பார்த்த யூவிக்கு தலையே சுற்றியது.
ஆதிக்கும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை. பின்னர் ஒருவர் ஒருவராக வந்து ஆதியின் கைகளில் பல பரிசுகளை வைத்துவிட்டு அவன் காலில் விழுந்து வணங்கிச் சென்றனர். பின் அவனை வணங்கியது போல அவன் அருகிலிருந்த அவர்களின் கடவுள் சிலையையும் வணங்க பின்னர்தான் புரிந்தது அவர்கள் அவனைக் கடவுளாக வழிபடுகிறார்கள் என்பது.
உடனே ஒவ்வொருவருக்கும் ஆசிர்வாதம் வழங்குவது போல சைகை செய்ய யூவிக்குதான் தாங்க முடியவில்லை. காலின் மேல் காலைப் போட்டவன் “பாத்தியா… எப்படி… என்னோட கெத்த… ஒரே நாள்ள எல்லாருக்கும் கடவுள் ஆகிட்டேன்ல?” என அவன் சிரிக்க அவனை முறைத்தவள்
“ரொம்ப ஆடாத. கண்டிப்பா இவங்க உன்ன வணங்கின அதே கையாலயே உன்ன போட்டுத் தள்ள கூட யோசிக்க மாட்டாங்க.” என்றதும் அவனுக்கு அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை.
“உனக்கு பொறாமை யூவி… போ…றாமை. என்றவன் ஏதோ பாவமன்னு விடுறேன். பிழைச்சி போ…” என்றுவிட்டு அந்த பழங்குடி மக்களின் தலைவனிடம்
“ஹூரே… ஹூ… ஹூ…” என ஏதோ உலர அவருக்கு எதுவும் புரியவில்லை. பின்னர் அவன் சைகையால் யூவியின் கட்டை அவிழ்க்குமாறு காட்ட அதனைப் புரிந்து கொண்டு யூவியின் கட்டை அவிழ்த்து விட்டனர். அவள் பயத்தோடு வந்து அவன் அருகே நிற்க அனைவரும் அவளிடம் கூரிய ஆயுதத்தை “ஹோ…” எனக் கத்தியவாறு நீட்ட திடுக்கிட்டு அவன் கையைப் பிடித்தாள்.
“ஹூ…. ஹூஊ… ஹூஊ…” என்றவாறு அவர்களின் ஆயுதங்களை கீழே போடுமாறு அவன் சைகை செய்ய அனைவரும் மெதுவாக ஆயுதத்தை கீழே இறக்கினார்கள்.
“பாத்தியா… என் பவர… என் சிம்மாசனத்துல கூட உன்ன வெச்சி பாக்க அவங்க விரும்பல.” என்று கொலரைத் தூக்கி விட்டான்.
“ரொம்ப ஆடாதடா… சகிக்கல. நீ பண்றத பாத்தா இங்கேயே நாக்கு தள்ளி செத்துடுவேன்.” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
“உனக்கு ஜெலஸ் யூவி…” என்றவனை ஒரு அரசன் போல் ராஜ மரியாதை செய்தனர். அவளுக்குதான் புகைந்து கொண்டு வந்தது. இவ்வாறே அவனது ஆட்டம் தாங்க முடியவில்லை அவளால். இதிலும் அப் பழங்குடி மக்கள் அவனை தாங்கு தாங்கு என தாங்க யூவிக்குதான் எரிச்சல் கிளம்பியது.
இன்றும் ஆதியையும் யூவியையும் தேடும் வேட்டை ஆரம்பமானது. ஆனால் யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இரு நாட்களாக யூவியையும் ஆதியையும் காணவில்லை என்பதால் உணவு உண்ணாது வாடிப் போனார் மகாலக்ஷ்மி. பல்லவிக்கு அழுது அழுதே கன்னங்கள் சிவந்து விட்டன.
இனியும் தாமதிக்க கூடாது என்று நினைத்த விஜயன் ரித்தேஷிடம் “உங்களால என் பையனையும் யூவியையும் கண்டு பிடிக்கமுடியுமா முடியாதா? உங்களால முடியாதுன்னா சொல்லுங்க. நாங்க பொலிஸ்ல கம்ப்லேன்ட் பண்றோம்.” பொங்கிவிட்டார் மனிதன்.
“One minute sir… நாங்க காட்டுப் பக்கம் தேடிட்டு இருக்கோம். ஸ்னிப்பர் டோக் அந்த வழிலதான் ஆதி சேரோட சேர்ட்ட கண்டு பிடிச்சது. அதனால எப்படியோ நாங்க இன்னைக்கு நைட் ரெண்டு பேரையும் கண்டு பிடிச்சிடுவோம். கொஞ்சம் அமைதியா இருங்க.” என்றான் ரித்து.
“இன்னைக்கு மட்டும்தான் நான் எல்லாத்தையும் பொறுமையா பாத்துட்டு இருப்பேன். ஆதியும் யூவியும் கிடைக்கல உங்களால நாங்க போலிஸ் ஸ்டேஷன் போறத தடுக்க முடியாது.” கோபமாக சொன்னார் விஷ்ணு.
இரவும் சூழ்ந்தது. ஆதியை கையிலேயே பிடிக்க முடியவில்லை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தன்னை மறந்து வானில் பறந்து கொண்டிருந்தான். குக்கூ… குக்கூ… ரேஞ்சிற்கு கலை கட்டியது அந்த இடமே.
“ஆட்டமாடா ஆடுற… கொஞ்ச நேரத்துல தெரியும்… உன் ஆட்டமெல்லாம். இவனுங்க கல்யாணத்துக்காக உன்ன பலி கொடுக்கதான் ரொம்ப மரியாதை பண்ணுறானுங்கன்னு தெரியல உனக்கு. சோ… சேட்.” என மனதில் நினைத்தவள் அவனை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கே இரு தம்பதியினருக்கு திருமணம் நடக்கவிருக்க அதற்கான தாலியை ஒரு தட்டில் வைத்தார் அந்த கூட்டத்தின் தலைவர். ஆனால் அதை யூவிக்காக மெல்ல சுட்டு போக்கெட்டில் வைத்துக் கொண்டான் ஆதி. அம் மக்கள் தனது கடவுள்களை கும்பிட அந்த நேரத்தை பயன்படுத்தி மெதுவாக யூவியின் பின்னால் வந்து நின்றவன் அம் மக்களோடு மக்களாக கடவுளை கண் மூடி வணங்கும் யூவியின் கழுத்தில் அவளுக்கு தெரியாமலே தாலியைக் கட்டினான்.
தொடரும்…