அம் மக்கள் தமது கடவுள்களை வணங்க அந்த நேரத்தை பயன்படுத்தி மெதுவாக யூவியின் பின்னால் வந்து நின்றவன் மக்களோடு மக்களாக கடவுளை கண் மூடி வணங்கும் யூவியின் கழுத்தில் அவளுக்கு தெரியாமலே தாலியைக் கட்டினான்.
கண்ணைத் திறந்து அவனை பார்க்க “surprise.” என அவள் கழுத்தில் கட்டிய மாலையைக் காட்டினான். அதைப் பார்த்து வியந்து போனவள்
“டேய்… என்னடா பண்ண?” என அதிர்ந்து விழித்தாள். “அழகா இருந்துச்சா… அதுதான் உனக்காக திருடினேன். உனக்கு பிடிச்சிருக்கா?” என்றவனுக்கு நடக்கப் போகும் விபரீதம் தெரியவில்லை.
“என்னது… அழகா இருக்குன்னு கட்டினியா? டேய்… இது அவங்க தாலிடா.” என மண்டலயிலேயே நங்கென வைத்தாள்.
“என்னது… தாலியா?” என்றவன் “சத்தியமா எனக்கு தெரியாதுப்பா. கலர் கலர் கல்லு ஒட்டி அழகா இருக்குதுன்னுதான் திருடினேன். தாலின்னு எல்லாம் எனக்கு தெரியாது.” என்றான் பாவமாக.
“திருடினது நீதான்னு தெரிஞ்சா இப்போ உன்ன செம்மையா அடிக்க போறாங்க.” பயம் அல்லு விட்டது யூவிக்கு.
“அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. ஏன்னா நான் அவங்களுக்கு மத்தியில ரொம்ப உயர்ந்த இடத்துல இருக்கிறேன்.” என்றான் சேர்ட் கொலரை தூக்கிவிட்டு.
“ஹெல்லோ சேர்… நீங்க இந்த… Pirates of the Carribbean படம்லாம் பாக்கலையா?” யூவி மிடுக்காக
“ஹா… பாத்திருக்கேனே. ஏன்?” என்றான் கண்கள் மின்ன
“அதுல 2 வது எபிசோட்ல அந்த காட்டுவாசிங்க கெப்டன் ஜேக்ஸ் ஸ்பெர்ரோவயும் இப்படித்தான் கடவுள்னு சொல்லுவாங்க. பட் லாஸ்ட்ல… என்ன நடக்கும்???” என அவனைப் பார்த்து கேள்வி எழுப்பினாள்.
சற்று சிந்தித்துப் பார்த்தவன் “கெப்டனையே கொலை பண்ணிடுவானுங்க.” என அதிர்ச்சி கலந்த நடுக்கத்துடன் உரைக்க
“அப்போ… காட்டுவாசிங்களோட கடவுள் சேரே… உங்களுக்கும் இன்னும் கொஞ்ச நேரத்துல சங்குதான். ஊ… ஊ… ஊ…” என கழுத்தில் கை வைத்து அறுப்பது போல் சைகை செய்து நக்கலடித்தாள் யூவி.
“அடிப் பாவி… இத ஏன்டி முதல்லையே சொல்லல?” பதறிப் போனான்.
“இல்ல… பெரிசா ராஜ மரியாதையோட இவங்க சேவைய சந்தோசமா அனுபவிச்சிட்டு இருந்தியே அதுதான் உன் சாவையும் அனுபவின்னு விட்டேன்.” என்றாள் அவனை ஏளனமாக பார்த்தவாறே.
“அடிப் பாவி… இப்போ என்னடி பண்றது?” கை காலெல்லாம் நடுங்கியது ஆதிக்கு.
“உன் சாவ பாத்து நான் சந்தோசப்பட்டுக்க பண்ண வேண்டியதுதான். என்ன டோர்ச்சர் பண்ணல்ல?” என்றவள் அவனைப் பார்த்து கண்ணடிக்க
“இப்போ நான் வன் டூ த்ரீ சொல்லுவேன். ரெண்டு பேரும் ஓடிடலாம்.” என்றான் ஆதி.
“சரி கௌன்ட் பண்ணு.” என்றாள் வீராப்பாக
அவன் “One, Two…” என்றதுமே அடித்துக் கொண்டு ஓடியிருந்தாள் காட்டுப் பக்கமாக.
“ஏன் நில்லுடி. இன்னும் நான் த்ரீ சொல்லல…” என்றவாறே அவள் பின்னால் ஓட அவர்களைத் துரத்தினார்கள் காட்டுவாசிகள்.
அவளை எகிறிப் பிடித்தவன் “லூசு… நான் த்ரீ சொல்ல முன்னமே ஓடிட்ட?” ஆதி கத்த
“சாவுக்காக காத்துட்டு இருக்க சொல்றியா? அது மட்டும் முடியாது. உன்ன போல நான் ஒன்னும் தைரியமானவன் இல்லப்பா.” என்றாள் ஓடியவாறே. மூச்சுப் பிடித்து ஓட அவன் அவளை இழுத்துக் கொண்டு வந்து ஒரு மரத்தின் பொந்தினுள் ஒழிந்து கொண்டான்.
காட்டுவாசிகள் அவர்களை நெருங்க அவள் வாயை தன் கரங்களால் பொத்திக் கொண்டான். சிறு சிறு விசும்பலுடன் அவள் மூச்சு வாங்க அவள் காதினருகே சென்று “சத்தம் போடாத. இல்லன்னா கண்டு பிடிச்சிடுவாங்க.” என அவன் ஹஸ்கி வொய்சிவ் கூற இருவர் கண்களும் நேர் கோட்டில் தாக்கிக் கொண்டது. அவள் கண்களில் என்னவொரு காந்த சக்தி. அவள் கண்ணழகில் மெய் மறந்து போனான். பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது அவனுக்கு.
“ஐய்யோ… இழுக்குறாளே…” மனதிற்குள் நினைத்துக் கொண்டான். இருவருக்குள்ளும் நூல் இடைவெளி கூட இல்லை. அவளை இறுக்கி அணைத்து தன்னுடன் சேர்த்து வைத்திருந்தான். அவன் கூந்தல் காற்றில் பறந்து அவன் முகத்தை வருட. அதில் வாசம் பிடித்தான். அழகாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
காட்டுவாசிகள் தமது ஆயுதங்களை மரப் பொந்தினுள் நுழைத்து அவர்களை தேடிக் கொண்டிருந்தனர். ஒருவன் தனது ஈட்டியை உள்ளே நுழைக்க அது ஆதியின் தோளைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து.
அதைப் பார்த்த யூவி “ஆஆஆ…” எனக் கத்த ஆரம்பித்ததும் தன் இதழ் கொண்டு அவள் இதழை சத்தம் வராதபடி மூடிவிட்டான். அவ்வாறே தன்னை அறியாமல் அவள் இதழில் முத்தம் எனும் கவிதை வாசித்தான். அவன் கண்களை மூடி முத்தத்தை ரசிக்க அவன் கண்களை விரித்து அதிர்ச்சியில் அவன் செய்வதை தடுக்கவும் முடியாமல் அவனை விட்டு விலகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அவள் மெல்லமாகத் திமிரினாலும் அவன் விடுவதாக இல்லை. அவன் முத்தத்திலேயே தெரிந்தது அவன் கையில் ஏற்பட்ட காயம் எவ்வளவு வலித்தது என்று. வலியை கட்டுப்படுத்த அவள் இதழை இன்னும் கண்ணை மூடி அழுத்தினான். அவள்தான் தடுமாறிப் போனாள். என்ன செய்வதென தெரியவில்லை. சிலையாக நின்றிருந்தாள்.
ஈட்டியிலிருந்து இரத்தம் சொட்ட அதனை வைத்துக் கண்டுபிடித்து விட்டார்கள் இருவரினையும். உடனே உள்ளிருந்து தன் முன்னாள் நின்றவன் மூக்கில் குத்தி இரத்தம் வர வைத்த ஆதி தன் கால்களை முன்னோக்கி வைத்து கண்கள் சிவந்து நின்றிருந்தான்.
“அவனை பிடியுங்கள்.” என ஒருவன் சைகை காட்ட அவனை நெருங்கியவர்களை பார்த்தவன்
“யூவி… நீ வெளில வந்துடாத.” என கத்தினான் காதுகள் கிழிய. அவனைத் தாக்க வந்தவர்களை நோக்கி அடிகள் எடுத்து வைத்தவன் ஆலமர விழுதுகளை உடைத்து ஒவ்வொருவரின் கழுத்தையும் நெறித்து திணறடித்தான். எல்லாரையும் அடித்து நிலை தடுமாற வைக்க அவர்கள் அசர்ந்திருந்த நேரத்தில் யூவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் ஒரு பக்கமாக.
இருள் சூழ்ந்த காட்டினுள் நிலவொளியில் ஆதியையும் யூவியையும் தேடிக் கொண்டிருந்தார்கள் அவனது பாதுகாப்பாளர்கள். வழியில் ஆதியினது உடையின் கிழிந்த துண்டுகளைக் கண்டதும் அதனைப் பார்த்து அவர்கள் காட்டிற்குள்தான் இருக்க வேண்டும் என்று நிச்சயித்திருந்தான் ரித்தேஷ். ஸ்னிப்பர் டோக்கிடம் அந்த கிழிந்த சேர்ட் துண்டை கொடுக்கவும் அது மோப்பம் பிடித்துக் கொண்டு அவர்களை இழுத்துச் சென்றது. ஓட்டம் சூடுபிடிக்க கால்கள் இரண்டும் வெடவெடக்க இருவரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். இடை இடையே “உனக்கு ஒன்னும் இல்லல்ல? நீ ஓக்கே தானே?” என கேட்டுக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தான் ஆதி.
“எனக்கு ஒன்னும் இல்லை. நான் நல்லாதான் இருக்கேன். நீ ஒன்னும் கவலைப்பட தேவையில்லை ஆதி.” என்றவள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் இருவராலும் முடியவில்லை. கைகளை முழங்காலில் வைத்து மூச்சை வேகமாக இழுத்துக் கொண்டிருந்தனர். மயக்கத்துடன் தலைசுற்ற நின்றிருந்தாள் யூவி.
“ஆதி… சீக்கிரம் வா ஓடலாம். இப்படி நின்னுட்டு இருந்தா அவங்க நம்மல பிடிச்சிடுவாங்க. எந்தனை நாள் இந்த காட்டுக்குள்ளேயே அலமோதுறது? வீடு போய் சேர வேணாமா?” என மூச்சு முட்ட அவன் தோளில் கையைப் போட்டு கேட்டாள் யூவி.
“நீ முதல்ல போ… நான் பின்னாடியே வரேன்.” என்று அவன் கூற
“அதெப்படி நான் மட்டும் போறது? நீயும் வா. தப்பிக்கனும்னா ஒன்னாவே தப்பிக்கலாம்.” என்றவளின் நெற்றியில் முத்தம் வைத்தவன்
“நான் உனக்கு சத்தியம் பண்றேன். உனக்காக நான் திரும்பி வருவேன். எனக்கு எதுவும் ஆகாது. நீ போ.” என்றதும் அவனை விட்டு பிரிய மனம் வராது “ஆனால்…” என ஏதோ சொல்ல முயற்சித்தவள் வாயை பொத்தியவன்
“போன்னு சொன்னா போ…” எனக் கத்தினான் காது கிழிய. அவன் செயற்பாட்டில் பயந்து போய் எதிர் வழியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். பல நேரமாக உயிர் துடிக்க அழுதவாறே ஓடிக் கொண்டிருந்தவள் கால் தடக்கி கீழே விழுந்து விட்டாள். விழுந்தவள் சற்று மூச்சு வாங்க காதை நிலத்தில் சாய்த்து கொண்டிருக்க யரோ ஓடுவதனால் நிலம் அதிரும் சத்தம் காதைக் கிழித்துக் கொண்டு உள்ளேறியது.
மயக்கம் அதிகமான நிலையில் எழும்ப முடியாமல் கீழே கிடந்தவளின் அருகே வந்து நின்ற நாய் அவளைப் பார்த்து குரைத்துக் கொண்டிருக்க ஓடிவந்து அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து தட்டி எழுப்பினான் ரித்தேஷ். அடுத்ததாக அவள் ஓடி வந்த திசையை நோக்கி ஓடியது அந்த மோப்ப நாய். அவளை எழுப்பி தண்ணீர் தெளிக்க கண் விழித்தவள் “ஆதி… ஆதி ஆபத்துல மாட்டிட்டு இருக்கான். அவன காப்பாத்துங்க.” எனக் கேட்டுக் கொண்டதும் அவள் கையை பிடித்து தூக்கி விட அவனுடன் ஆதியைத் தேடிச் சென்றாள் யூவி.
அந்த ஸ்னிப்பர் டோக் சென்ற வழியிலேயே சென்றார்கள் அந்த கூட்டம். அந்த வேடுவர்களை அடித்து துவம்சம் செய்தவன் பின்னாலிருந்து அவன் தோளில் கை வைத்த ரித்தேஷின் கழுத்தைப் பிடித்து மரத்தில் சாய்த்து கழுத்தில் கண்ணாடித் துண்டை வைக்க “நான்தான்… நான்தான் சேர்…” என கையை உயர்த்தி சொன்னான் மரண பயத்தோடு.
பெரும் மூச்சை இழுத்து விட்டவன் மனதில் சற்று நிம்மதி பரவியது. “உனக்கு ஒன்னும் இல்லலல்ல? Are you fine?” என அவன் கையைப் பிடித்து கேட்டவளை சமாதானப்படுத்தி “ஒன்னும் இல்ல. வீட்டுக்கு போகலாம் வா.” என அழைத்துக் கொண்டு சென்றான் அவர்களுடன்.
வீட்டு வாசலை நோட்டமிட்டவாறே நின்றிருந்தார் விஜயன். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவர் “இது வேலைக்காகாது. நான் போய் போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண போறேன்.” என உரைத்துவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க
ஆதி யூவியைத் தாங்கிப் பிடித்துக் கொள்ள இருவரும் பலத்த காயங்களுடன் தள்ளாடியவாறே வீட்டிற்கு வந்தனர். உள்ளே நொன்டி நொன்டி நடந்து வந்தவர்களின் கோலத்தைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைய மகாலக்ஷ்மி ஓடிவந்து ஆதியை நோக்கி
“கார்த்திக்… யூவி… உங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சு? எப்படி இவ்ளோ அடிபட்டது?” எனக் கண்கள் நிறைய கண்ணீருடன் கேட்டவர் ஆதியின் கையில் ஈட்டி துழைத்து உருவாகிய காயத்திலிருந்து இரத்தம் சொட்டுவதைப் பார்த்து
“அடக் கடவுளே… என்ன இது இவ்ளோ பெரிய காயம். அய்யய்யோ இவ்ளோ ரத்தமா கொட்டுதே.” என்றவர் “என்னப்பா இது?” என கத்தினார்.
பார்வதி பாட்டி அவனது கோலத்தைப் பார்த்து “எங்கடா போய்த் தொலைஞ்ச? என்ன கோலம் இது… இப்படி அடிப்பட்டு வந்து நிக்கற? நாங்க உன்ன காணாம எவ்ளோ கஸ்டப்பட்டோம் தெரியுமா? ஏன்டா புரிஞ்சிக்காம இப்படி நடந்துக்குற?” எனக் கேட்டவர் யூவியின் பக்கம் திரும்பி
“நீ எங்க போன? அவன்தான் பிடிவாதக்காரன். சொல் பேச்சு கேட்க மாட்டான். ஆனால் நீ ஏன் அவனை மாதிரியே நடந்துக்கிட்ட?” திட்டினார் சரஸ்வதி கோபமாக.
“முதல்ல அவங்கள ரெஸ்ட் எடுக்க வைங்க. மீதியை பிறகு பாத்துக்கலாம். நான் டொக்டர வர சொல்றேன்.” என்ற விஜயன் தொலைபேசியில் வைத்தியருக்கு அழைத்தார். யூவி தடுமாறியதைக் கண்ட பல்லவி ஓடிச் சென்று அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.
அவளை மகாலக்ஷ்மி அறைக்கு அழைத்து செல்லுமாறு கூற அதன் படி செய்தாள் பல்லவி. ஆதியும் ரித்தேஷிடம் “நான் பிறகு பேசுறேன்.” எனக் கூறிவிட்டு அறைக்கு சென்றவனுக்கு உதவ அவன் ஒற்றைக் கையை தனது தோளில் வைத்துக் கொள்ள முயற்சித்த பல்லவியை ஒரு முறை முறைத்து விட்டு கையை உதறிவிட்டு தனது அறைக்கு சென்றான்.
சில நேரங்களில் மருத்துவர் வீடு வந்து சேர ஆதியையும் யூவியையும் பரிசோதித்து விட்டு சில அறிவுரைகளையும் மருந்துளையும் கொடுத்துவிட்டு சென்றார். அவர் வெளியில் சென்றதும் தனது உடைகளை மாற்றிக் கொண்டவன் அமைதியாக கண்களை மூடி தூங்கலானான். அவனுக்கு உதவியாக இருந்தான் விக்ரம்.
அனைவரும் கடவுளிடம் ஆதியிற்கும் யூவியிற்கும் உடல்நிலை சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். இதில் பல்லவி வேறு அழது அழுது கன்னங்கள் சிவக்க கடவுளிடம் ஆதிக்கும் யூவிக்கும் நோய் சரியானால் நெய் விளக்கு எற்றுவதாக நிபந்தனையை வைத்துவிட்டு வீட்டிற்கு வந்தாள். ஆதியைக் கவனிப்பதற்காக விக்ரம் அவனுடன் இரவு முழுவதும் இருந்தான்.
அதே போல் மகாலக்ஷ்மியும் யூவிக்கு மருந்துகளை கொடுத்து அவளை தூங்க வைத்தார். காலையில் எழுந்து ஆதி முற்றத்தில் வந்து அமர்ந்து தனது கால்களை தூக்கி மேசை மீது வைத்தவாறு கோபியை அருந்திக் கொண்டிருக்க அவன் அருகில் வந்து அமர்ந்தார் அவனது அப்பா.
“ஏன் இப்படி ஸ்ட்ரைன் பண்ற? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம் தானே?” என கேட்டார்.
“இல்லப்பா உள்ள எல்லாம் என்னால இருக்க முடியாது. கொஞ்சம் வேலையும் இருந்தது. அதுதான் வெளில வந்தேன்.” என்றவன் தனது தொலைபேசியை நோண்ட
“உன்ன திருத்தவே முடியாதுடா. முதல்ல நாம நல்லா இருந்தாதான் நம்மலால வேலைய நல்லா பண்ண முடியும். அதனால முதல்ல டெப்லட்ஸ் போட்டுட்டு தூங்குடா.” என அவனுக்கு அறிவுரை கூறினார் விஷ்ணுதேவன்.
இந்த சமயத்தைப் பயன்படுத்தியவர் “ஆதி… நீ எப்படி காட்டுக்குள்ள மாட்டிக்கிட்ட? அதுவும் அந்த யூவியோட?” என பேச்சை ஆரம்பித்தார் சிவனேசன்.
அவரை ஏறிட்டு முறைத்தவன் மறுபடி தனது வேலையில் கண்ணாக இருக்க “அதுதான் உன்கிட்ட கேட்கிறாங்கல்ல? வாய்க்குள்ள என்ன இருக்கு? பதில் சொல்லு… அவ கூட எதுக்கு போன? ஏன் போன?” என திவ்யங்கா திட்ட
“இப்ப நான் காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டது பிரச்சினையா? இல்ல… யூவி கூட போனது பிரச்சினையா?” என அவரை ஆழமாக நோக்க அவன் வெட்டென்ற கேள்விகளால் தடுமாறியவர்
“அது… அது வந்து… கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. இப்படி எதிர்க் கேள்வி கேட்காம.” என்றார் அவனை பார்த்து கண்கள் படபடத்தவாறே.
“இப்போ பதில் சொல்லல்ன்னா என்ன பண்ணுவிங்க?” என அவன் ஆழ்ந்து நோக்க
“அதெல்லாம் முடியாது. நீ பதில் சொல்லியே ஆகணும்.” என அவர் அவனையே ஆழமாகப் பார்த்தார்.
“என்னோட எல்லா விசயங்களுக்கும் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. சோ… கொஞ்சம் என் விசயத்துல தலையிடாம வாய மூடிக்கிட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.” என கை நீட்டி எச்சரித்தான் ஆதி.
“அவங்க என்ன கேட்டுட்டாங்கன்னு இப்படி அவங்கள உன் விசயத்துல தலையிட கூடாதுன்னு சொல்ற? நானே கேட்கணும்னுதான் இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் எப்படி காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டீங்க?” என மகாலக்ஷ்மி அவனுக்கு மருந்து போட்டவாறே கேட்க அவன் அதனை புறக்கணிக்கும் விதமாக
“ம்மா… நடந்து முடிஞ்சத எதுக்கு திரும்ப திரும்ப கேட்குற? இனி நடக்கப் போறத பாருங்கம்மா. இதெல்லாம் எக்ஸ்ப்லைன் பண்ணிட்டு இருக்க எனக்கு டைம் இல்ல.” என்று அவரையும் சேர்த்து முறைத்தான்.
“நீ சொல்லுவடா… நீ எங்க வேணா சொல்லாம கொள்ளாம போவ. ஆனால் கவலைப்பட போறது நாங்க தானே.” என அவனுக்கு ஊட்டிவிட்டவாறு கேட்டான் விக்ரம்.
“ஹா… நல்லா கேளு விக்கி. இவனுக்கு சுத்தமா பொறுப்பே இல்லை. இவன் இல்லன்னா எங்க கூட யாரு சண்டை போடுறது?” என அவன் தலைவலிக்கு மருந்து போட்டவாறே கேட்டாள் அகல்யா.
“ஆமா… ஆமா… பிடிவாதம் பிடிக்க இந்த வீட்டு பிள்ளைங்களுக்கு கத்து கொடுக்க ஆள் வேணுமே. உங்கள பாத்துதான் இந்த குழந்தைங்க பிடிவாதம் பிடிக்க கத்துக்குறாங்க.” என்று அவன் தோளை செல்லமாக அடித்தாள் மீரா.
“நல்லா எல்லாரும் அப்படிதான் திட்டுங்க. நான் பிடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு சொல்ற ஆள் தானே நீ. அப்டியே அக்கா மாதிரியே. நல்லா வருவ.” எனத் திட்டிவிட்ட சரஸ்வதியின் மடியில் படுத்தவன்
“இனிமேலும் இங்க இருக்க முடியாது. நீங்க எல்லாரும் பாசக் கயிறால என்ன தூக்குல போட்டு கொன்னாலும் கொன்னுடுவிங்க.” என எழுந்து தனது அறைக்குள் சென்று கதவை அடைத்தவன் ரித்தேஷுக்கு அழைப்பு விடுவித்தான்.
“ஹெல்லோ. நான் கேட்ட விசயம் என்ன ஆச்சு? நீ டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிட்டியா?” என கேட்க
“சேர்.. நீங்க எப்படி இருக்கீங்க? Are you okay? இப்போ எப்படி இருக்கு?” எனக் கேட்டான் ரித்தேஷ்.
“எனக்கென்ன நான் நல்லாதான்டா இருக்கேன். நீ முதல்ல உடனே வீட்டுக்கு வா. நான் உன்கிட்ட பேசணும்.” என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை வைத்தான்.
தூக்கத்திலிருந்து “ஆதி…” எனக் கத்தியவாறு எழுந்தாள் யூவி. கெட்ட கனவொன்று கண்டவள் உடனே எழுந்து அவனைத் தேடி நொன்டியவாறே வெளியில் சென்றாள். கண்கள் நிறையக் குழப்பத்துடன் பாட்டியிடம் சென்றவள் “பாட்டி… பாட்டி… ஆதி… ஆதி எங்க? அவனுக்கு ஒன்னும் இல்லல்ல? அவன் நல்லா தானே இருக்கான்?” என பதறியவளை அணைத்து
“கொஞ்சம் நிதானமா இரு… எதுக்கு இப்படி டென்சன் ஆகுற? கார்த்திக் நல்லாதான் இருக்கான். அவனுக்கு எதுவும் இல்ல. அவன் ரூம்லதான் இருக்கான். நீ எதுக்கு இப்போ வெளில வந்த? போ… போய் ரெஸ்ட் எடு.” என்று அவளை அனுப்புவதிலேயே குறியாய் இருந்தார்.
“நான் உங்கக்கிட்ட பிறகு பேசுறேன் பாட்டி.” என அவசரமாக கூறியவள் ஆதியின் அறையை நோக்கி ஓடினாள். அறையைத் தாண்டி நிதானமில்லாது ஓடியவள் கால் தடக்கி கீழே விழப்போக
“ஹேய்… பாத்து… ஏன் இப்படி ஓடி வர? கொஞ்சம் மெதுவாதான் நடவேன்.” என புன்னகைத்துக் கூறியவாறே அவளைப் பிடித்துக் கொண்டான் ஆதி. அவனைக் கண்டவுடன் நெஞ்சினுள் ஒரு நிம்மதி பரவ விழி முழுக்க கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
“நீ நல்லா தானே இருக்க? உனக்கு ஒன்னும் இல்லல்ல? நீ நல்லா தானே இருக்க?” என்றவள் அவன் கன்னத்தை தொட்டு அவன் கைகளை தடவிப் பார்க்க
“ஏய்? எனக்கு என்ன ஆக போகுது? நான் நல்லாதான் இருக்கேன். ரொம்ப நல்லா இருக்கேன். ஆனால்… உனக்கு தான் ரொம்ப அடி பட்டிருக்கு இப்படி நண்டு மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடாம இப்படி உட்காரே.” என கட்டிலைக் காட்ட
“ஆனால்.. உனக்கு'” என அவள் ஏதோ உலர அவள் பக்கம் திரும்பியவன்
“எனக்கு ஒன்னும் இல்லை. உனக்குதான் ஏதோ ஆகிடுச்சு. அதனாலதான் இப்படி உலரிக்கிட்டு இருக்க? என்ன கனவு ஏதாவது கண்டியா?” என அவளைப் பார்த்து கோட்டவன் அவள் கையைப் பிடித்து
“இப்படி உட்காரு.” என இழுத்து கட்டிலில் அமர வைத்தவன் அவளின் அருகே காலை மடித்து அமர்ந்து
“நீ ரொம்ப யோசிக்கிற யூவி. யாருக்கும் எதுவும் இல்லை. எல்லாரும் நல்லாதான் இருக்காங்க. உன்னத் தவிர. நீதான் ரொம்ப மோசமான ஸ்டேஜ்ல இருக்குற. ரொம்ப அடிபட்டிருக்கு பாரு. உனக்கு உன் மேல சுத்தமா அக்கரையே இல்ல. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்? நீ ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத. முக்கியமா என்ன பத்தி யோசிக்காத. I’m completely alright.” என்றதும் கதவு திறந்து கொண்டது. இருவரின் கண்களும் ஏக நேரத்தில் கதவை திறந்தவரை நோக்கியது.
கதவைத் திறந்தவளை நோக்கிய ஆதியின் முகத்தில் 1000 வோல்ட் பல்ப் எரிய ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டான் ஆதி. “ஹேய்… ப்ரியா… நீ நல்லா இருக்கல்ல? எவ்வளவு நாளாச்சு உன்ன பாத்து?” என்றவன் அவளை அணைத்து “லவ் யூ டி சதிகாரி. என்னடி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற?” என அவளைக் கொஞ்ச யூவியின் வயிற்றில்தான் புகை கிளம்பியது.
ஒருவேளை அவன் பல்லவியிடம் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாக கூறியது இவளைத் தானோ? என்கிற சந்தேகமும் அவளுள் எழுந்தது.
தொடரும்…