கதவைத் திறந்தவளை நோக்கிய ஆதியின் முகத்தில் 1000 வோல்ட் பல்ப் எரிய ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டான். “ஹேய்… ப்ரியா… நீ நல்லா இருக்கல்ல? எவ்வளவு நாளாச்சுடீ உன்ன பாத்து?” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்து
“லவ் யூ டி சதிகாரி. என்னடி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற?” என அவளைக் கொஞ்ச யூவியின் வயிற்றிலிருந்துதான் புகை கிளம்பியது.
“ஒருவேளை அவன் பல்லவியிடம் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாக கூறியது இவளைத் தானோ?” என்கிற சந்தேகமும் அவளுள் எழுந்தது.
“சரி. வா… உள்ள வா.” என அவளை உள்ளே அழைத்து யூவியிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
“இவ என் பெஸ்ட் ப்ரண்ட். பெயர் ப்ரியா.” என அவளுக்கு அறிமுகப்படுத்தி வைக்க ப்ரியா கையை யூவிக்கு நீட்டானாள் சிறு புன்னகை செய்து
“ஹெல்லோ. ஐம் ப்ரியா.” என்றவாறு கொடுக்க யூவி அவளை சிறு முறைப்போடு பார்த்தவாறே கைகளை உயர்த்தி “வணக்கம்.” என்று உள்ளே புகைந்ததை மறைத்து சிரித்தாள்.
அதில் நிலை தடுமாறிப் போன ப்ரியா தன் இரு கரங்களை ஒன்றிணைத்து ஆதியைப் பார்த்தவாறே “வணக்கம்.” என பதிலுக்கு கூற மீண்டும்
வேண்டுமென்றே யூவி கையை நீட்டி “ஹெல்லோ.” என்றதும் அவள் செயலில் மீண்டும் தடுமாறிப் போனாள் ப்ரியா.
“ஹெல்லோ…” என அவள் மீண்டும் யூவிக்கு கையைக் கொடுத்ததும் அவள் கையை சட்டென்று தட்டி விட்ட யூவி முகத்தைத் சுளித்துக் கொண்டாள்.
“ஏய்… என்னடி பண்ற? அவ என் ப்ரண்ட். இப்படி ஓவர் ரியேக்ட் பண்ணண்ணா கொன்னுடுவேன்.” என அவன் அவளது காதில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு ப்ரியாவைப் பார்த்து சிரித்தவாறே சொல்ல இருவரையும் முறைத்தலள் உதட்டை சுழித்து வெளியே சென்றுவிட்டாள். ஆதி எந்தப் பெண்ணிணம் பேசினாலும் யூவிக்கு அப்படியே பற்றிக் கொண்டு வருகிறது. ஏன் என்று ஆராய அவள் தயாராகத்தான் இல்லை. சில சமயம்… அவர்களை கொலை செய்துவிடலாம் என்றும் தோன்றும். கோபத்தை அடக்கி வைத்திருப்பாள்.
அவளைப் பார்த்து தலையிலடித்தவன் “அவ அப்படித்தான். சரியான தொட்டாச் சிணுங்கி.” என்று அவள் போன பாதையையே பார்த்தவாறு சொன்னான் ஆதி.
“அதெல்லாம் இருக்கட்டும்… உனக்கு அடி பட்டிருக்குன்னு ரித்து சொன்னான். என்ன ஆச்சுடா? காட்டுல ஹீரோயிஸ்ம் பண்ணியா?” என்று கேட்டு அவன் தோளில் தை போட நடந்ததை அவளுக்கு விளக்கினான் ஆதி.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடா? ஏன்டா இப்படி பண்ண? சிறுத்தை கிட்ட மாட்டிக்கிட்டு உயிரோட வந்திருக்க. லக்குதான் உன்ன காப்பாத்திருக்கு. இனிமேல் இப்படி பண்ணண்ணா கொன்னுடுவேன்.” என்று அவனை முறைத்தவளுக்கு ஏதோ யோசனை மண்டைக்கூள் வர
“அதெல்லாம் ஓக்கே… பட் உங்க ரெண்டு பேருக்கும் உள்ள பயங்கர லவ் ஸ்டோரி போய்க்கிட்டிருக்கு போல? நான் உன் ப்ரண்டுன்னு சொன்னதும் அவ மூஞ்சு அஷ்ட கோணலா போச்சே. என்னடா விழுந்துட்டியா? அவளுக்காக நிறைய பண்ணிருக்க?” என்று நண்பனை சீண்டினாள்.
“ஏய்… அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி. நீ வேற. சும்மா இருக்குறியா?” என்று சமாளித்தவனுக்கு யூவியைப் பற்றி நினைக்கையில் வந்த சிரிப்பையும் மாத்திரம் அடக்கவே முடியவில்லை.
“உன் சிரிப்பே நீ பொய் சொல்றன்னு காட்டிடிச்சுடா. நீ இப்படி கண்டதுக்கெல்லாம் சிரிக்க மாட்டியே… எப்பவுமே உர்ருன்னு மூஞ்ச தூக்கி வெச்சு கத்திட்டு திரிவ… இன்னைக்கு கூலா இருக்க. உன் மூஞ்சில லவ் தேஜஸ் வேற தெரிது. ஹ்ம்… ஹ்ம்… நடத்து நடத்து வாழ்க வளமுடன். சிங்கிளா இருந்த நீயும் மிங்கிளாகிட்ட… நான்தான் இப்போ சிங்கிளா இருக்கேன்…” என்றவள் அவன் அறையை சுற்றி சுற்றி பார்க்க அவள் பேச்சைக் கேட்டு சிரித்து வைத்தான் ஆதி.
“அதெல்லாம் சரிடி. எப்போ வந்த? எப்படி வந்த? ஒரு போன் கூட பண்ணாம வந்திருக்க? உன்ன நான் வேலை எல்லாம் கவனிக்க சொல்லிட்டுல்ல வந்தேன்? நீ என்னடான்னா இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்குற? என் வேலை எல்லாம் எவன் பாப்பான்?” என்று யோசனையில் இடுப்பில் கை குத்தி முறைத்தான்.
“அதெல்லாம் பாத்துக்கலாம். சரி… ஆள் யாரு? உனக்கு என்ன உறவு? எப்படி இங்க வந்தா?” என யூவியைப் பற்றிக் கேட்டு அவனை விடாமல் தொந்தரவு செய்தாள்.
“என் தங்கச்சோட ப்ரண்ட்டுடி.” என்றான் அவள் தொல்லை தாங்க முடியாமல் கத்தானான்.
“அப்றம்…” என்று அருகில் அமர்ந்திருந்த அவன் தோளை இடித்தாள் அவனை சீண்டும் விதமாக.
“அப்றம் என்ன?… என் அத்தை பொண்ணு.” என்றான் கட்டிலில் இருந்த புத்தகத்தைப் புரட்டியவாறே.
“அத்தைப் பொண்ணா? எப்படி?” என அவள் ஆர்வமாய் கேட்க
“எங்க மாமா ஆதித்யா பொண்ணு.” என்றான் உப்பிய முகத்துடன்.
“அவர் பொண்ணா? இந்த விசயம் வீட்டுல யாருக்கும் தெரியாதா?” அவள் கண்கள் மிரட்சியில் விரிந்தது.
“நோ… தெரியாது.” என்றான் இடது கையால் தலைமுடியை கோதி விட்டவாறே.
“அதுதானே பாத்தேன். தெரிஞ்சா அவள உங்க வீட்டாளுங்க சும்மா விட்டுடுவாய்ங்கலா என்ன? சரி. மேல சொல்லு.” என காலை எடுத்துப் போட்டு ஆர்வமாக கட்டிலில் சம்மணமிட்டு அவனை நெருங்கி அமர்ந்தாள்.
“இது என்னடி…” என தலையில் அடித்தவன்
“பெயர் வியூஷிகா. நிக் நேம் யூவி.” என்றதும் அவள் தோளில் கை போட்டவள்
“மேல சொல்லு. மேல சொல்லு.” அவள் கையை உயர்த்திக் காட்டி சைகை செய்தாள்.
“இன்னும் சொல்லனும்னா எனக்கும் பிரண்ட்.” என்றவனைப் பார்த்து
“ப்ரண்டா? ப்ரண்ட் மாதிரி தெரியலையே. வேற ஏதோ ரிலேஷன்சிப் போலயே…” என அவள் கண்ணடித்து துருவ
“ஏய்… அதுதான் சொல்றேன்லடி. ஒன்னும் இல்ல.” அவன் மறைக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.
“என் மேல சத்தியமாவா? சொல்லுடா… சொல்லு. நல்லவன் மாதிரி நடிக்காத. எனக்கு எல்லாம் தெரியும். உன் வாயால கேட்கனும்னுதான் ஆசை.” என்றாள் தொல்லையாக.
“இப்போ உனக்கு என்னதான்டி வேணும்?” அவன் எரிச்சலாக கேட்டான்.
“அவ உனக்கு யாரு? இந்த கேள்விக்கு பதில் வேணும்.” என்றாள் அவனைத் துளைத்தெடுத்தவாறு.
“அவ எனக்கு நேற்றைய யாரோ… இன்னைய காதலி. நாளைய மனைவி. போதுமாடி உனக்கு?” என்றான் அவள் தொல்லை தாங்காமல்
“அப்பாடா. போதும் போதும். இப்பவாச்சும் சொன்னியேடா. கிறுக்கா. உன் வாயில இருந்து ஒரு வார்த்தைய வர வைக்க எவ்ளோ பாடு பட வேண்டியது இருக்கு.” எனத் திட்டியவளை
“முதல்ல நீ சாப்பிட்டியா? வா போய் சாப்பிடலாம்.” என அவளை அழைத்துச் சென்றான். இல்லை… இழுத்துச் சென்றான்.
வெளியே வந்ததும் “ப்ரியாம்மா… ரொம்ப நாளைக்கு பின்ன எங்க வீட்டுக்கு வந்திருக்க. நல்லா வயிறார சாப்பிடு.” என கூறி வரவேற்றார் விஜயன்.
“தங்க் யூ அங்கிள்.” என கீழே பந்தியில் அமர்ந்தவளுக்கும் வாழை இலையை போட உணவைப் பரிமாறினார் மகாலக்ஷ்மி.
ஆதியின் வலது பக்கமாக ப்ரியா அமர இடது பக்கமாக யூவி அமர்ந்து கொண்டாள். யூவி உணவு உண்பதற்காக பந்தியில் அமர்ந்ததாக தெரியவில்லை. ஆதியின் பக்கமே அவள் பார்வை இருந்தது. ப்ரியா சாப்பிட்டு வைத்திருந்த உணவுகளை ஆதி திருடி உண்டான். அவள் எச்சிலை கூட அவன் அலட்டிக் கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் “பாட்டி… என் சப்பாத்திய காணோம்.” என சினுங்கி நெடுநேரமாக சப்பாத்தி ஒவ்வொன்றாக காணாமல் போவதைப் பார்த்து புகார் வைத்தாள் ப்ரியா.
“ஐய்ய… போலிஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வர்ரியா? தேடி கண்டு பிடிச்சு தருவாங்க.” என்று அவளைப் பார்த்து நக்கலடித்தவனிடம்
“நீதான்டா திருடன். நான் போலிஸ்க்கு போக வேண்டிய அவசியமே இல்லை. எனக்கு நல்லா தெரியும். நீதான் என் சப்பாத்திய திருடின.” என்றவள் அவனது இலையிலிருந்து ஒரு சப்பாத்தியை எடுத்து தன் இலையில் வைத்துக் கொள்ள
“பாட்டி… பாருங்க. இவ சரியான அரிசி மூட்டை. வேணும்னே என் சப்பாத்திய திருட இப்படி என் மேல திருட்டு பழி சுமத்துறா.” என்றவன் அவள் கையிலிருந்த சப்பாத்தியை பிடுத்து இழுத்தான்.
“கொடுடி… என் சப்பாத்திய. கொடுடி சதிகாரி.” என இழுத்தான்.
“யாரப் பாத்துடா சதிகாரின்னு சொல்ற? என் சப்பாத்திடா இது. கொடுடா…” என அவனை திட்டியவாறு இழுக்க
“ரெண்டு பேரும் சண்ட போடாதிங்க. நான் இன்னொரு சப்பாத்தி தரேன்.” என சரஸ்வதி முறைக்க சப்பாத்தி இரண்டு துண்டாக பிரிந்து கொண்டது.
அவன் ஒருபக்கம் முறுக்கிக் கொள்ள அவளும் ஒரு பக்கம் முறுக்கிக் கொண்டான். இவர்களைப் பார்த்து யூவிக்குதான் புகை கிளம்பியது வயிற்றினுள் இருந்து.
இதில் புறை வேறு அடித்துவிட “தண்ணிய குடி யூவி. புறை அடிக்கிது பாரு.” என்று தனது உணவை உண்டவாறே கூறினான் ஆதி.
அவனை முறைத்துப் பார்த்தவள் தண்ணீரைக் குடிக்க அடுத்து ப்ரியாவுக்கு புறை ஏறியது. உடனே அவள் தலையில் தட்டியவன் “பாத்து சாப்பிட மாட்ட?” என தண்ணீரை எடுத்து நீட்டினான். இவற்றை பார்த்த யூவிக்கு எரிச்சல் எழும்ப பாதியிலேயே எழுந்துவிட்டாள்.
“என்ன ஆச்சும்மா? சாப்பிடாமலே எழுந்திருச்சிட்ட? மாத்திரை போடனும்ல?” என்று அக்கறையாக கேட்டார் பாட்டி.
“இல்ல பாட்டி. பசியில்லை. நான் போறேன்.” என கோபமாக ஆதியை முறைத்தவாறு உரைத்தவளை பார்த்து கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டவன்
“பாட்டி… எங்கேயோ கருகுற வாசனை வரல?” என சிரித்தவாறே கேட்டவன் மனதினுள் “மிஸன் சக்ஸஸ்.” என்று குத்தாட்டம் போட்டான்.
“டேய்… ரொம்ப பண்ணாத. போய் சமாதானம் பண்ணு.” என அவன் காதில் குறுகுறுத்த ப்ரியா அவன் தொடையில் கிள்ள “ஸ்ஸ்ஸ்… ஆஆஆ…” என தொடையைத் தேய்த்தவன் அவளை முறைத்து பார்த்து கொண்டே வெளியில் சென்றான்.
பல்லவி ப்ரியாவை பார்த்ததும் ஒருவேளை இதுதான் ஆதியின் காதலியோ என்ற எண்ணத்தில் அவளிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தியவள் “கார்த்திக் மாமா லவ் பண்ற பொண்ணு நீங்க தானா? அவர ஒரு எக்ஸிடன்ட்ல இருந்து காப்பாத்தினீங்களாமே.” என பதிலை எதிர்பார்த்து கேட்க
“என்னது? எக்ஸிடன்ல இருந்து காப்பாத்தினேனா? அவன் பொய் சொல்லிருக்கான்மா. நீ வேற… அவன யாரும் எக்ஸிடன்ட்ல இருந்து காப்பாத்தவும் இல்ல. முதல்ல அவனுக்கு இதுவரை எந்த எக்ஸிடன்டும் ஆனதே இல்லை. இன்னும் சொல்லப் போனா அவன் யாரையும் லவ் பண்ணிணதும் இல்ல. உங்கள ஏமாத்த வேணும்னே கப்ஸா விட்டிருக்கான்.” என்று உண்மையை உடைத்து விட்டுச் சென்றுவிட்டாள்.
அவள் பேச்சை கேட்டு சந்தோசமடைந்தவள் “அப்படின்னா மாமா என்கிட்ட பொய் சொல்லிருக்காரா?” என்றவளுக்கு தலை கால் புரியாமல் போனது.
யூவியின் பின்னாலேயே சென்றவன் “ஹேய்… நில்லுடீ… கொஞ்சம் நில்லேன்டி.” என்று கத்தியவாறே அவள் கையைப் பிடித்து இழுத்தவன்
“நில்லுன்னு சொல்றேன்லடி… நீ பாட்டுக்கு போய்ட்டே இருக்க? எதுக்குடி பாதியிலேயே எழுந்து போன?” என்று குறும்புடன் அவளை தலைசாய்த்தூக் கேட்டான்.
“சாப்பாடு பிடிக்கல.” என்றாள் முகத்தைத் திருப்பிக் கொண்டவாறே.
“சாப்பாடு பிடிக்கலயா? இல்ல… அங்க இருக்க பிடிக்கலயா?” என்று முகம் கொள்ளாப் புன்னகையுடன் பினன்ந்தலையை தேய்த்துவிட்டவாறே கேட்டவனை பார்த்து
“அதுதான் தெரிதுல்ல? பின்ன எதுக்கு இப்படி ட்ராமா போடுற?” என வாய்க்குள் முனுமுனுத்தாள்.
“ஏன்??? ஏன்??? ஏன்??? ஹோ… பொஸஸ்ஸிவ்னஸ்ஸாடி?” என்று அவள் கையைப் பிடித்து தன் தோளில் அவள் கையைப் பதித்துக் கொண்டவன் அவள் இடையைப் பிடித்து இழுத்து அவளோடு ஒட்டி நின்றவன் அவளைப் பார்த்துக் கண்ணடிக்க முதலில் வெட்கம் கொண்டு இமைகளைத் தாழ்த்திக் கொண்டவள் பின் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அவசரமாக அவன் கையை உதறி விட்டு தள்ளி நின்று கொண்டாள்.
“இல்ல… நான் எதுக்கு பொஸஸ்ஸிவ் ஆகனும்? நீ யாருக்கு கூட கடலை போட்டா எனக்கு என்ன? முதல்ல பல்லவி, ரெண்டாவது நான் இப்போ அவளா? நடத்து.. நடத்து… சரியான ப்ளே போய்.” என்றாள் பார்வையை மேலே பார்த்தவாறு கை கட்டி நின்று.
“ஏய்… யாரப் பாத்துடி ப்ளே போய்ன்னு சொன்ன? ப்ளே போய்ன்னா… வேற ரகம்… காணுற பொண்ணுங்க கூட எல்லாம்…… ம்ம்ம்…” என்று சொல்ல வந்தவன் கோபமாக இருந்தாலும் நாவை அடக்கிக் கொண்டு நிற்க அவன் நுனி மூக்கு கோபத்தில் சிவந்திருந்தது. அதைப் பார்த்து திருத்துட்டுத்தனமாக ரசித்தவள் அவனை மேலும் சீண்டும் விதமாக
“உன்னப் பாத்துதான்டா சொன்னேன்.” என்றாள்.
“கொழுப்பு கூடிப் போச்சுடி உனக்கு… உனக்காக வந்து பேசினேனே. என்ன செருப்பாலையே அடிக்கனும்.” என்றவன் அவ்விடம் விட்டு காலியானான்.
அவன் செல்வதைப் பார்த்தவள் கையை கசக்கி “ஆஆஆ…” எனக் கத்திவிட்டு அவன் பின்னாலேயே அதிக கோபத்தோடு அவன் அறையை நோக்கி நடந்து சென்றவள் விருட்டென உள்ளே சென்று அவன் அறையில் ஏதோவொன்றை ஆராய
“ஏய்… நீ பாட்டுக்கு வர்ர… போற… ஒருத்தங்க ரூமுக்குள்ள என்டர் ஆக முன்னாடி பேர்மிசன் கேட்கனும்னு தெரியாதா உனக்கு?” என அவன் லெப்டோப்பில் டைப் செய்தவாறே கேட்க அவள் பாட்டிற்கு தன் வேலையில் கருத்தாய் இருந்தாள்.
அவள் என்ன செய்கிறாள் என கூர்ந்து கவனித்தவன் அவன் திருடி வைத்துக் கொண்ட அவளது புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியில் செல்வதைப் பார்த்து அதிர்ந்துதான் போனான். அவளை இழுத்துப் பிடித்து வைத்து கதவை சாத்தியவன் “ஏய்… என்னடி… நீ பாட்டுக்கு வர்ர… என் புக்க எடுக்குற… போற?” என மிரட்டலாக கேட்டதும் அவன் கையை உதறி விட்டவள்
“என்னது… உன் புக்கா? இது என் புக். வந்துட்டான் பெரிய இவன் மாரி.” என திட்டினாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
“உன் புக்குன்னு நான் எப்படி நம்புறது? இது இரண்டு மூனு வருசத்துக்கு முன்ன ஒரு பொண்ணு ரெய்ல்வே ஸ்டேசன்ல விட்டுட்டு போன புக்.” என அவள் காதில் அவன் கத்த
“ஸ்ஸ்ஸ்… பக்கத்துலதானேடா இருக்கேன். ஏன்டா கத்துற?” என காதைத் தேய்த்தவள்
“அந்த பொண்ணே நான்தான்டா பைத்தியம். நான்தான் இங்க எக்ஸேம் எழுத வரும் போது இந்த புக்க விட்டுட்டு போனேன்.” என்றதும் அவன் கண்கள் மிரட்சியில் விரிந்தன. அவன் வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கின. இறுதில் அவன் தேடியவள் அவளிடமே வந்து சேர்ந்துவிட்டாள் என்பதில் பெருமிதம் கொண்டான்.
இருந்தாலும் அவன் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு “நான் நம்ப மாட்டேன்பா…” என்று தோளைக் குலுக்கினான் வேண்டுமென்றே.
“அப்படியா ?அன்னைக்கு இந்த AVSV க்கு மீனிங் கேட்டேல்ல? (A)adhithya (V)arma (S)reeThanya (V)yushikha. போதுமா? இனிமேல் என் திங்க்ஸ் எதுவும் உன்கிட்ட இருக்க கூடாது.” எனத் திட்டியவளை நினைத்து கண்களில் ஆயிரம் வோல்ட் பல்ப் எரிந்தது ஆதிக்கு. அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. வானத்தில் பறப்பது போல இருந்தது.
“அதுதானே பாத்தேன்… இவளை எவ்வளவு வெறுத்தும் அவ்ளோ சீக்கிரமா எப்படி அவ காதல் வலையில விழுந்தேன்னு யோசிச்சேனே. இதுதான் காரணமா?” என புரிந்து கொண்டவனுக்கு பொங்கி வந்த உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.
அவனை முறைத்துப் பார்த்தவள் வெளியே செல்ல எத்தனிக்க அவள் கையை இழுத்துப் பிடித்து அவளை தன்னோடு சேர்த்து ஒன்றி வைத்தவன் நச்சென்று கொடுத்தான் இதழில். கண்கள் விரிய அவனைப் பார்த்தவள் நிலைதடுமாறிப் போனாள். கண்கள் மட்டும் சுழல அவள் அவனையே “ம்ம்ம்ம்…” என்று அவனை மிரட்ட அவன்தான் அவள் கன்னத்தை கைகளில் ஏந்தி முத்தத்தில் லயித்திருந்தான்.
“ம்ம்ம்… விடுடா என்ன…” என்று அவன் நெஞ்சில் அடித்து அவனை விலக்க முயன்றாள். அவன் விட்டால்தானே… எவ்வளவு அடித்தும் விடாமல் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன் சற்று நேரம் கழிய அவளை விடுவித்து பார்வையை தாழ்த்தி பின்னந் தலையில் தட்டிச் சிரித்தவன் அவள் கையை இழுத்து கன்னத்தை கைகளில் ஏந்தி
“I Lo…” என்றதும்
“ஆதி… இங்கப் பாரு… நீ இப்படி பண்றதெல்லாம்… எனக்கு சுத்தமா… பிடிக்க…ல…” என்று வெளியே கோபமாக சொன்னாலும் உள்ளுக்குள் வெட்கம் பிடுங்கித் திண்றது.
“ஓஹ்… அப்டியா?” என்று தலைசாய்த்து இடுப்பில் கை வைத்தே அவளைப் பார்த்து சிரித்தவனை முறைத்தவள் சிலைபோல் புத்தைகத்தை ஏந்திக் கொண்டு வெளியில் நடந்தாள்.
அவன் செய்த செயல் அவனுக்கே வெட்கம் தர “ஐய்யோ… இவ என்ன மந்திரம் போட்டாளே…” என கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தை பார்த்து என்று கையை கசக்கி உற்சாகமாக கூறிவிட்டு யூவியின் பின்னாலேயே சென்றான்.
“ஏய்… யூவி நில்லுடி…” என அவன் கத்த அவள் அந்த காட்டு வழிப் பாதையில் சென்று கொண்டிருந்தாள்.
“ஏய்… புள்ள… நில்லுடீ.” என்று கத்தவும் அவள் திரும்பாததால்
“அடியே… வியூஷிகா… சத்த இங்க பாருடி.” எனக் கத்தியவாறு அவள் பின்னால் சென்று கொண்டிருந்தான்.
பாய்ந்து அவள் கையைப் பிடித்தவன் “அடியே நில்லுங்குறேன்.” என்று அவள் அருகே நெருங்கியவன்
“எ… எ… எ… இப்போ எ… எதுக்கு கிட்ட வர்ர? தள்ளி நில்லு.” என அவள் பின்னால் காலடி எடுத்து வைத்தாள்.
“ஒரே ஒரு கிஸ்தானேடி அடிச்சேன்… அதுக்கே இப்படி பயந்து போய் கிட்ட கூட வரலன்னா எப்படி? இன்னும் எவ்வளவு… இருக்கு?” என்று அவள் உயரத்திற்குக் குனிந்து அவள் முகத்தினருகே அவள் கண்களோடு கண்களைக் கலக்க விட்டு சொன்னான்.
அவன் செய்கை அவளுக்கு வெட்கத்தைத் தந்தாலும் வெளியே வீராப்பாக “என்ன தைரியம் உனக்கு? என் கிட்டேயே மிஸ் பிஹேவ் பண்றியா?” என்று கோபமாக முறைக்க
“ஏய்… என்னடி மிஸ் பிஹேவ்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்ட… மிஸ் பிஹேவ்னா… வேற ரகம்டி…” என்று கண்ணடித்தவனை படு கோபமாக முறைத்து வைத்தாள்.
“சரி சரி… முறைக்காதடி… இனிமேல் கல்யாணத்துக்கு அப்பறம் வெச்சிக்கலாம்.” என உரைத்தவனைப் பார்த்து முழித்தவள் அவன் கையை உதறிவிட்டுச் செல்ல
“ஏய் சத்தியமா சொல்றேன்டி. இனிமேல் இப்படி கண்ட நேரம் கண்ட இடத்துல கிஸ் அடிக்க மாட்டேன். கல்யாணத்துக்கு அப்பறம்தான் அடிப்பேன். சத்தியமாடீ. உன் மேல சத்தியம்டி… நில்லுடி..” எனக் கத்திக் கொண்டே சென்றவனை மதிக்காமல் அவள் பாட்டிற்குச் செல்ல
“ஹெய்… பொண்டாட்டி… பொண்டாட்டி… நில்லேன்டி கொஞ்சோம்.” எனக் கத்தியவாறே சொன்றவனை திரும்பி முறைத்தவள் கோபமாக வீர நடை போட்டு அவனருகில் வந்து
“யாருக்கு யாருடா பொண்டாட்டி? ஹா? யாரு பொண்டாட்டி?” என்று விரல் நீட்டி கேட்டாள் கோபத்துடன்.
“நீதான்டி… என் பொண்டாட்டி. அதுதான் நான் கட்டின தாலி உன் கழுத்துல இருக்கேடி குள்ளச்சி… பின்ன என்னடி?” என்று என அவளைப் பார்த்து தாடையை நீவி சிரிக்க
“தாலியா? எங்க இருக்கு?” என கழுத்தில் கிடந்த மணி மாலையை திருட்டு முழி முழித்தவாறே தொட்டுப் பார்த்துக் கேட்டாள்.
“நான் காட்டுக்குள்ள வெச்சு கட்டுன தாலிய நீ இன்னும் கழட்டவே இல்லையேடி… மாமன் மேல அவ்ளோ பாசமோ…” என்று கீழுதட்டைப் பற்கலால் கடித்து அவளை கிறக்கமாக பார்த்து சொன்னவனின் அழகில் திணறியவாறே
“அது… அவங்க நம்பிக்கையில அது தாலி… ஆனால் என்ன பொறுத்த வரைக்கும் அது தாலி இல்லை…” என்று வேண்டுமென்றே உரைத்தவளை பார்த்து காதல் பொங்க
“நாம மஞ்சள் கயிற மஞ்சள் கயிறா பார்த்தா அது சாதாரண மஞ்சள் கயிறு தான். தாலியா பாத்தா அது தாலிதான்டி பொண்டாட்டி…” என்றவன் சீரியஸ் மூடிற்கு மாறி
“என்ன பொறுத்தவரை நான் கட்டினது தாலிதான்டி. நீ எப்போவோ எனக்கு மனைவி ஆகிட்ட. பட்… எப்போ நமக்கு ஒபிசியலா கல்யாணம் நடக்குதோ அதுக்கு அப்பறம் உனக்கு புரியும் நாமதான் மேட் போர் ஈச் அதர்னு.” என்று கூறி அவளை மேலும் கீழும் பார்த்து அவள் பேரழகை ரசித்தவனின் காதலில் திக்கு தெரியாதவளாகிப் போனவள் வேண்டுமென்றே கோபமாக அவன் நெஞ்சில் அடித்துவிட்டு
“நீ என்ன உலர்ர?” என்று அவனை முறைத்துவிட்டு மீண்டும் தன் பாதையில் திரும்பிப் பயணித்தவள் கன்னம் வெட்கத்தில் சிவந்து போனது.
“அடியே ராட்சசி…. இதயத்தை திருடின திருடி… எங்க போறேன்னு சொல்லிட்டு போடீ…” என்றான் அவள் அழகை பின்னாலிருந்து தனக்குள் கவர்ந்தவாறே.
“ஆஆஆ… சீத்தா தேவி கோவிலுக்கு. வேண்டுதல் வெக்க போறேன்.” என்று கன்னம் சிவந்து வெட்கத்துடன் புன்னகைத்துக் கூறியவளை பார்தவன்
“நானும் வரேன் இருடி குள்ளச்சி.” என சவரம் செய்யாத தாடியை நீவியவாறு அவளைப் பின்தொடர அவளுக்கு உச்சி மண்டையில் கோபம் ஏறிவிட்டது.
“டேய்… எருமை மாடு. கமுகு மரம் மாதிரி ஆறடி உயரத்துக்கு நீ வளர்ந்து தொலைச்சிட்டு… என்ன வந்து குள்ளச்சின்னு சொல்ற? நீதான்டா நெட்டையா இருக்க? அதுக்கு நான் பலியா?” என வாக்குவாதம் செய்தவளை அப்படியே கையில் அள்ளிக் கொண்டான் ஆதி.
அதில் அதிர்ந்து போனவள் “ஹேய்… என்னப் பண்ற… என்ன கீழ இறக்கிவிடு… யாராவது பாத்துட்டா பிரச்சினை ஆகிடும்…. ப்ளீஸ் ஆதி… ப்ளீஸ்…” என கெஞ்சியவளுக்கும் அவன் நெருக்கம் பிடித்திருந்ததுதான்.
“ஹேய்… என் பொண்டாட்டிய… நான் தூக்கிட்டு போறேன்டி… எவன் தடுப்பான்? தடுக்க சொல்லு… வெட்டிடுறேன்…” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தவன் பார்வை அவளை வெட்கித் தலைகுனியச் செய்தது. தன்னையே மறந்து அவன் கழுத்தை சுற்றி இரு கைகளையும் வளைத்துப் பிடித்தவள் வெட்கம் பூத்த முகத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள
“அடியே… சிரிச்சு மயக்காதடி… அப்றம்… நான் ரொம்ப கெட்டவனா மாறிடுவேன்…” என்று இரு அர்த்தம் வைத்துப் பேசியவனின் வார்த்தைகள் அவள் உயிரினுள் ஊடுறுவிச் சென்றது.
சீதா தேவி கோவிலை இருவரும் வந்தடைய அங்கே “ஆதி…” என்ற யூவியின் வார்த்தைகள் காற்றிற்கும் நோகாதபடி வந்தது.
“ம்ம்ம்… இறக்கி விடணுமாடி?” என்றதும்
“ம்ம்ம்…” என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள். உடனே கீழே இறக்கி விட்டவனிடமிருந்து… அவன் மோகப் பார்வையிலிருந்து தப்பி ஓடிவிட்டாள் யூவி. அவள் துள்ளி ஓடுவதையே பார்த்து ரசனையுடன் நின்றவன் இதழ் விரிய சிரித்தான்.
உள்ளே சென்று நெய் விளக்கு ஏற்றிக் கொண்டிருந்தாள் யூவி. அவளைப் பார்த்த கோவில் பூசாரி “என்னம்மா? தனியா நின்னு விளக்கு ஏத்துறே? இந்த கோவில் விஷேசமானது. கணவன் மனைவி ரெண்டு போரும் சேர்ந்து விளக்கு ஏத்தினாதான் வேண்டிக்கிட்டது நடக்கும்னு இருக்கு.” என்றவர் பின்னால் வந்து சுவரில் சாய்ந்து தலையை சாய்த்து அவளை ரசித்த ஆதியை அவளது கணவன் என நினைத்துவிட்டு
“தம்பி போய் உங்க சம்சாரத்துக்கு உதவி பண்ணுங்கோ. தனியா நின்னுட்டு விளக்கு ஏத்த கூடாது.” என்றதும்
“ஏத்திட்டா போச்சு…” என ட்ரௌஸர் போக்கெட்டினுள் கையை வைத்து அவளைப் பார்த்து ரசித்தவாறே சொன்னவன் அவளருகில் நகர்ந்தான்.
அவள் பின்னால் அவளை ஒட்டி நின்று அவள் கையைப் பிடித்து அவள் தோளில் தன் தாடையை ஊன்றி வைத்தவனின் இடது கை மெதுவாக அவள் இடையை ஊர்ந்து சென்று இறுக்கிக் கொள்ள உயிர் உருகிப் போனவளுக்கு நாணம் வந்து ஒட்டிக் கொள்ள மூச்சு முட்டிப் போனது. அவள் கையின் உரோமங்கள் சிலிர்த்து அடங்கின.
அவள் முகத்தை தலைசாய்த்துப் பார்த்தவாறே அவன் நெய் விளக்கு ஏற்ற “இது… கோ… கோவில்… என்ன பண்றீங்க?” என்று வார்த்தை தந்தியடித்து வர
“கோவில்னா என்ன… நீ என் பொண்டாட்டி இல்லன்னு ஆகிடுமா? அவர்தானே சொன்னாரு… ரெண்டு பேரும் சேர்ந்து ஏத்தனும்னு… அததான் பண்ணிட்டு இருக்கேன்.” என்று அவள் கன்னத்தில் அழுத்தமாக மீசை முடி உரச அழுத்தமாக முத்தம் பதித்தவனின் கையை விலக்கிவிட்டு நாணிக் குனிந்து ஓடினாள் யூவி.
அவளருகில் போய் நின்றவன் அவளை பார்வையால் வருடியவாறே நெய் விளக்கு ஏற்றி தீப ஆராதனை காட்டினான். அவன் அருகாமையில் அவளும் தன்னைத் தொலைத்துதான் போனாள். இருவரும் காதலுடன் கண்கள் நோக்க ஒரு கட்டத்தில் யூவியினால் முடியவில்லை. அவனைத் தள்ளிவிட்டு சென்று மணியை அடித்து வணங்கினாள் சீதா தேவியை.
“அன்பே சீதா.
காலமெல்லாம் உனை பார்த்துக் கொள்ளும் வரம் தா.
வாழ்வு முழுக்க உன்னோடு ராமராய் உருமாறி உனைத் தாங்க வருவேன். இல்லையென்றால் அனைத்தும் இழந்து ஆஞ்சனேயராய் உயிரைத் துறப்பேன்.“
அவன் கூறியதைக் கேட்டவளுக்கு சிரிப்புதான் வந்தது.
“என்னடி? நான் ஒன்னும் உன்கிட்ட சொல்லல. என் சீதா கிட்ட சொன்னேன். புரிதா?” என்றதும்
“புரிது… புரிது…” என்று தலையுட்டி சிரித்தவள் குங்குமத்தை கையில் எடுக்க
“ஹேய்… நான் வெச்சி விடுறேன்.” என்றவன் பார்வையாலேயே அவளை கண்கள் மூட சொல்ல கண்களை இலேசாக மூடிக் கொண்டாள். குங்குமத்தை எடுத்து திருமணம் ஆன பெண்கள் வைப்பது போல் நெற்றி வகுட்டில் என்றான் காதலோடு.
கண்களைத் திறந்தவளின் முகத்தை கண்ணாற கண்டு மகிழ்ந்தவன் கிறந்தித் தவித்தான். அவள் அழகு உயிரினுள் உணர்வுகளின் பூகம்பத்தையே ஏற்படுத்தியது. போனிலுள்ள செல்பி கெமராவை எடுத்து அவள் முகத்தை காட்டியதும் கன்னம் செவ்வானமாய் சிவந்து போக இதழ்கள் வெட்கத்தில் நடுங்கின.
அவள் பின்னால் சென்று ஒட்டி நின்றவன் அவள் இடையோடு சேர்த்து கட்டிக் கொண்டு “இப்படி உன்ன பாக்கும் போது… எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? இழுக்கிறியேடி… கொல்றியேடீடீடீடீ… தவிக்க வெக்கிறியேடீ…. இதுக்காகவே உன்ன சீக்கிரமா கல்யாணம் கட்டிக்கனும்னு தோனுது… கட்டிக்கலாமா?” என ஹஸ்கி வொய்சில் அவள் காதிற்குள் கேட்க அவள் காது மடலில் அவன் மீசை உரசி உயிரைப் பறித்தது.
அவள் அவனைப் பிடித்து இடித்துத் தள்ளிவிட்டு நெற்றி உச்சியிலிருந்த குங்குமத்தை துடைத்தவாறே அவ்விடம் விட்டு புன்னகையோடு ஓடினாள் யூவி. “அடியே மச்சாள். நில்லேன்டி. உனக்கு வெட்கப்பட கூட தெரியுமாடி? சும்மாவே தவிக்கிறேன். இப்படி வெட்கப்பட்டா… அப்றம் நான் காலிதான்டி… ஏன்டி விலகி போற… இதயம் வலிக்கிதுடி… ஹேய்… மச்சாள் நில்லுடி” என்றவாறே அவளை ஓடிச் சென்று பிடித்துக் கொண்டான்.
அவன் பார்வையில் பரிதவித்து தன்னை மீட்டுக் கொண்டவள் “யாரு யாருக்குடா மச்சாள்?” என பொய்க் கோபம் கொண்டாள்.
“எனக்கு நீதான்டி மச்சாள். அத்தை பொண்ண மச்சாள்னு தானே சொல்லனும்? பொண்டாட்டின்னுதான் கூப்பிட விட மாட்ற… மச்சாள்னாவது கூப்பிடலாமே…” என்று அவள் மூக்கில் தனது மூக்கை உரசியவனின் பார்வையிலிருந்து தப்ப முடியாமல் வெட்கப்பட்டு சிரித்து ஓடியே விட்டாள்.
“எப்படி இருந்தாலும் என்கிட்ட தானேடி வரணும்? அப்போ வெச்சுக்கிறேன்டி மச்சாள் உன்ன..” என்று கத்தி கூப்பாடு போட்டவனை பாராமலேயே ஓடிவிட்டாள்.
“சீதா தேவி… உம்மா….” என முத்தம் கொடுத்தவன்
“தங்க் யூ… என் லவ் சக்ஸஸ்.” என்று துள்ளிக் குதித்தான் ஆதி.
வீட்டிற்கு வந்த யூவியை கையில் பிடிக்கவே முடியவில்லை. அவளை இன்று அதிக சந்தோசமாக பார்த்த பாட்டி “பாத்துடி. ரொம்ப சந்தோசமா இருக்க. கண்ணு பட்டுக்க போகுது.” என்று உரைத்தவர் அவளுக்கு திருஷ்டி எடுத்தார். அவள் இதழ்கள் முழுக்க வெட்கத்துடன் கலந்த புன்னகை.
“நான் இன்னைக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பாட்டி. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.” என தன்னையே மறந்து போனவள் மனதிற்குள்ளேயே தன்னை ஆதியின் மனைவியாக கற்பனை செய்து கொண்டாள்.
“தீர்க்க ஆயுஷோட இருடியம்மா.” என்றவரைப் பார்த்து புன்னகைத்தவள்முகம் அப்படியே எதிராக மாறிப் போனது.
“எனக்குதான் அந்த பாக்கியம் இல்லையே.” என மனதில் நினைத்தவாறு தனது அறையில் சென்று கதவை சாத்திக் கொண்டு அனைத்தையும் மறந்து சுற்றமும் மறந்து கனவு கான ஆரம்பித்துவிட்டாள். கட்டிலில் கையைக் காலை நீட்டிப் படுத்தவளுக்கு அவன் தீண்டுவது போலவே இருந்தது. அவள் முத்தம் வைத்த காது மடல் குறுகுறுத்ததது. உடம்பெல்லாம் சிலிர்ந்து அடங்கியது. ஆதி கட்டிய தாலியை தொட்டுப் பார்த்தவள் கண்ணாடியில் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவள் அவளாகவே இல்லை.
உள்ளே யூவியைத் தேடியவாறே நுழைந்தவனைப் பார்த்து “என்னடா லவ் சக்ஸெஸ் ஆச்சு போல? உன் ஆளு ரொம்ப சந்தோசமா இருக்கா. என்ன ரொமேன்ஸோ?” என்று பனிக் கூழை சாப்பிட்டவாறு ப்ரியா கேட்க அவள் கையிலிருந்த ஐஸ்கிரீமை பறித்து தனது வாயில் திணித்தவனின் கையில் அடித்து அதனை மீண்டுய் பிடிங்கிக் கொண்டாள் ப்ரியா.
“அப்படியே வெச்சிக்கோயேன். கூடிய சீக்கிரம் மார டம் டம் மஞ்சர டம் டம் தான். கல்யாணம் பண்ணி… பத்துப் பதினைஞ்சு குழந்தை பெத்துக்க போறேன் பாறேன்…” என்று ஆசை பொங்க கூறியவனிடம்
“ரொம்ப ஆசைதான்… ஆனால்… உன் பொண்டாட்டி யூவியா… இல்லை… பல்லவியான்னுதான் எனக்கு தெரியல…” என்றாள் உள்குத்துடன்.
“அதுல என்ன சந்தேகம்… என் பொண்டாட்டி… யூவிதான். நான் முடிவு பண்ணிட்டேன்.” என்று கூறி இதழ் வளைத்தவனிடம்
“நண்பா… அக்கடச் சூடு…” என்று உள்ளே அமர்ந்து ஐயரிடம் பேசிக் கொண்டிருந்த பாட்டியைக் காட்டினாள் ப்ரியா. உள்ளே பார்த்தவனின் முகத்தில் யோசனை ரேகைகள்.
“கார்த்திக்… இங்க வா…” என பாட்டி அழைக்க யோசனையோடு புருவம் நீவியவாறே உள்ளே சென்றவன்
“என்ன பாட்டி?” என்றான் மறைந்த புன்னகையுடன்.
“எல்லாம் நல்ல விசயம் தான்டா. உனக்கும் பல்லவிக்கும் நாளைக்கு அடுத்தன்னே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.” என்றதும் ஆதியின் முகத்தில் தென்பட்ட சந்தோசம் நொடியில் தொலைந்து போனது.
தொடரும்…