மகனைப் பார்த்ததும் நீலகண்டன் அவன் அருகில் சென்று அணைத்துக் கொண்டு அழுதார். திடீரென்று இவரின் அழுகை எதற்காக என்று அறியாத காளையினும் அவரை அனைத்து தேற்றினார். “என்ன பிரச்சினை? எதற்காக அழுறீங்க? உங்களுடைய பையன் நல்லா இருக்கான்ல?” என்று கேட்டான்.
காளையன் கேட்க, அதற்கு அவரும் “இதோ காருக்குள்ளதான் காளையா ஹர்ஷா உட்கார்ந்து இருக்கிறான். இப்போது நல்லம். ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க. அதுதான் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி உன்னை பார்த்துட்டு போகலாம்னு” நினைத்து இங்க வந்தோம். என்று சொன்னார்.
அதற்கு காளையன், “எதுக்குங்க சும்மா, இப்போதான் ஆப்பரேஷன் பண்ண உடம்பு. ஹர்ஷாவை எதற்கு இப்போ அங்கேயும் இங்கேயுமாக வீணா அழைச்சிக்கிட்டு இருக்கிறீங்க? நீங்க போனே பண்ணிருக்கலாமே” என்று சொன்னான் காளையன். அதற்கு அவர், “இல்லப்பா நான் உன்ன பார்க்க வந்தது வேறொரு முக்கியமான விஷயமா” என்று சொன்னார்.
அவனும், “என்ன சார்? என்கிட்ட பேச அப்படி என்ன முக்கியமான விசயம் இருக்கு? “என்று கேட்டான். அதற்கு நீலகண்டன், “இருக்குப்பா நிறைய விசயம் இருக்கு. உனக்கு தெரியாத பல உண்மைகள் இருக்கு. “என்று சொன்னார். காளையன் அவர் சொல்வது புரியவில்லை என்றவாறு பார்த்தான். பின் அவரிடம், என்னவென்று கேட்க, ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு காருக்குச் சென்று ரிப்போர்ட் எடுத்து வந்து அவனிடம் குடுத்தார்.
அவன் சிரித்துக் கொண்டு,”சார் எனக்கு படிக்க தெரியாது” என்று சொன்னான். “சரிப்பா அப்போ நான் சொல்றதை நீ நம்புவியா நீனு எனக்கு தெரியலை. ஆனால் நான் சொல்லணும்” என்று சொல்லிக் கொண்டு, அவனின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டார். “காளையா உன்னோட அம்மா அப்பா யாரு?” என்று கேட்டார். அதற்கு அவனும், “என்னோட அப்பா தேவச்சந்திரன் அம்மா” என்றான்.
அதற்கு அவர், “நான் சொல்றதை ஏத்துக்கப்பா என்று, அவர்கள் உன்னை பெத்தவங்க இல்லப்பா. அவங்க உன்னை வளர்த்தவங்க. உன்னைப் பெத்த உண்மையான அம்மா அப்பா யார் தெரியுமா? உன்னோட உண்மையான அப்பா நான், உன்னோட அம்மா குமுதா, அவ இறந்து அஞ்சு வருஷம் ஆச்சுப்பா.” என்று சொன்னார்.
இதை கேட்டதும் காளையன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. திடீரென்று ஒருவர் வந்து, இத்தனை நாள் வாழ்ந்த குடும்பம் உன்னுடைய குடும்பம் இல்லை. என்று சொல்வதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இருந்தது. அதே நேரத்தில் தான்தான் அவருடைய உண்மையான மகன் என்று தெரிந்து, கண்களில் பாசத்தோடும் கண்ணீரோடும் நின்றுகொண்டு தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் இவர் பொய் சொல்வாரா என்று கூட ஒரு நிமிடம் யோசித்தான் காளையன்.
அவனது முக பாவங்களே அவரிடம் சொன்னது, அவனது நிலமை என்னவென்று. “காளையா நீ சின்ன வயசா இருக்கும்போது திருச்செந்தூர் கோயிலுக்கு போயிருந்தோம். அங்கே தான் உன்னை தொலைச்சிட்டோம். உன்னைத் தேடாத இடம் இல்லப்பா. கேட்காத ஆட்கள் இல்லை. உன்னை நினைக்காத நாளில்லை. எங்களிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும், நாங்க இந்த சமூகத்துல உயர்ந்து இருந்தாலும், நீ இல்லை என்கிற குறை எங்ககிட்ட இருந்துகிட்டே இருந்துச்சு. இப்போதான் எனக்கு அந்த குறையே இல்லை.
என்னோட மூத்த மகன் நீ, இங்க உயிரோடு இருக்க. இப்போ என்கிட்ட ரொம்ப பக்கத்தில கைஎட்டும் தூரத்தில இருக்க. இதை நினைக்க நினைக்க மனசுக்குள்ள அத்தனை சந்தோஷமா இருக்கு” என்று சொன்னார். அப்போது காரில் இருந்து இறங்கி அவர்களிடம் வந்த ஹர்ஷா,” அண்ணா உன்னை நான் சின்ன வயசு போட்டோல மட்டும்தான் பார்த்திருக்கிறன். ஏன்னு தெரியலை எனக்கு அம்மா உன்னை பத்தி சொல்லச் சொல்ல உன் மேல கொஞ்சமும் கோபம் வரலை.
எனக்கு உன் கூட இருக்கணும். உன் கூட கை கோர்த்துக்கிட்டு போகணும். டிரஸ்ஸ ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கணும். இந்த உலகத்தில நம்மைப் போன்ற அண்ணன் தம்பி இருக்கக் கூடாதுனு பல பல கனவுகளை வச்சிருந்தேன். எனக்கு உன்ன பார்க்காமலே ரொம்ப புடிச்சிருந்திச்சு அண்ணா. உன்னை எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு முயற்சி பண்ணிட்டே இருந்தேன்.
நீதான் என்னோட உயிரை காப்பாத்தியிருக்க அண்ணா. வந்துட்டேன் நான். என் கூட வா அண்ணா, இங்க இருந்து போயிடலாம் அண்ணா” என்று சொன்னான். அவனது பாசம் காளையனுக்கு புரிந்தது. பாசத்தில் உணர்ச்சிவசப்பட்டு அவன் பேசுகின்றான் என்று நினைத்துக் கொண்டே,” ஹர்ஷா இங்க பாரு நீ திடீர்னு வந்து என்னை அண்ணன்னு சொல்ற. நீ எனக்கு தம்பி மாதிரி தான். மாதிரி என்ன மாதிரி நீ என்னோட தம்பிதான் சரியா? அதுல எந்த மாற்றமும் இல்லை.
சார் நீங்களும் பார்க்க என் அப்பா மாதிரி தான் இருக்கிறீங்க அதனால உங்களை அப்பானு சொல்றது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் இத்தனை நாள் என்ன அவங்களோட சொந்த பிள்ளையா நினைச்சு என்னை வளர்த்தாங்க. அவங்களை விட்டுட்டு என்னால எப்பவுமே வர முடியாது. மன்னிச்சுக்கோங்க அப்பா.
நான் உங்களோட பையன் என்று நீங்க சொல்றீங்க. அது உண்மையாவே இருக்கட்டும். உங்களுடைய நம்பிக்கை உண்மையாக இருக்கட்டும். ஆனால் இந்த ஊரை விட்டு இந்த மக்களை விட்டு இந்த இயற்கை காற்று, நான் வாழ்ற இந்த இடத்தை விட்டு எப்பவுமே வேற எங்கேயும் வரவே மாட்டேன்” என்று சொன்னேன்.
இதைக் கேட்ட நீலகண்டனுக்கு கவலையாக இருந்தாலும், மகன் சொல்வதும் சரிதானே இத்தனை நாள் வாழ்ந்த இடத்தை விட்டு இப்போது வந்தவர்கள் நான்தான் உன்னுடைய அப்பா உன்னுடைய தம்பி என்று சொன்னால், அவனால் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அவனது நிலைமை அவருக்குப் புரிந்தது.
அவர் சிரித்துக் கொண்டே, “பரவாயில்லப்பா எப்படியோ நீ என்னோட பிள்ளை. நீ சாகல உயிரோட நல்லா இருக்கிறான்னு தெரிஞ்சது. ரொம்ப சந்தோசம். எனக்கு அதுவே போதும். ஆனால் ஒண்ணு காளையா, இந்த அப்பா, உன் தம்பி எப்பவும் உனக்காக இருக்கிறோம். உனக்கு என்ன பிரச்சினைனு சொன்னாலும் நீ உடனே என்கிட்ட சொல்லணும். சரியா நாங்க எங்க இருந்து இப்ப போகலாம். ஆனால் எங்களோட பார்வை உன்னை சுத்தி தான் இருக்கு.
உனக்கு எப்போ எங்களை பார்க்க வரணும்னு தோணுதோ, அப்போ ஒரு போன் பண்ணு உடனே வந்து கூட்டிட்டு போயிருவேன். என்ன மகனை கைகிட்ட பார்த்துட்டு என்கூட கூட்டிட்டு போக முடியலையே எனக்கு என்ற கவலையோட நான் போறேன்” என்று சொன்னார்.
அதைக் கேட்ட காளையன்” அப்பா என்று அவரை அழைத்துக்கொண்டு அப்பா என்னை மன்னிச்சிடுங்க அப்பா. நீங்க என்னோட அப்பா. என்னால உணர முடியாத பாசத்தை நீங்க காட்டுனீங்க. ஆனால் கண்ணுக்கு முன்னுக்கு இத்தனை வருஷமா என்னை பாதுகாத்து அவங்களுடைய மொத்த அன்பையும் கொட்டிக் கொடுக்கிற குடும்பத்தை விட்டு என்னால வர முடியலை. ஒருவேளை இங்க இருந்து நான் வரணும்னு இருந்துச்சுன்னு, நீங்க சொன்னா மாதிரி கண்டிப்பா உங்க கிட்ட தான் வருவேன்” என்று சொன்னான்.
அதற்கு நீலகண்டன்,” உன்னை எப்படி என்கிட்ட விதி அடையாளம் காட்டிச்சோ அதே மாதிரி அதே விதியே உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும் காளையா. பத்திரமா இரு எதனாலும் எனக்கு போன் பண்ணு. நான் அடிக்கடி உன்கூட போன் பண்ணி பேசலாம் தானே “என்று கேட்டார். அருகில் இருந்த ஹர்ஷாவும் நான் போன் பண்ணலாமா என்று காளையனிடம் கேட்க, காளையன் சிரித்துக்கொண்டே “அண்ணா கூட பேசுறதுக்கு தம்பி அனுமதி கேட்கணுமா என்ன? உனக்கு எப்போ என்கூட பேசணும்னு தோணுதோ அப்போ எல்லாம் எனக்கு நீ போன் பண்ணலாம்” என்றான். அணைத்துக் கொண்டு பாசமழை பொழிந்தனர். பின்னர் காளையன் அவர்கள் இருவரையும் கண்ணீருடன் வழி அனுப்பி வைத்துவிட்டு அங்கேயே மடிந்து உட்கார்ந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
3 comments
The story is very nice. But the continuity is missing if you post with longer intervals.
Keep writing sis
Kandipa sis.. Story regulara varum. 😊 Thank you for your comment 💙
Super divi