மின்சார பாவை-13

5
(2)

மின்சார பாவை-13

முதல் நாள் போல் மாணவர்களின் கொண்டாட்டம் மட்டுமே இல்லை.

 இன்று எல்லா ஆசிரியர்களும் வந்திருக்க, மதன்சாருக்கான பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது.

 ஒவ்வொரு வருட மாணவர்களை அழைத்து அவரைப் பற்றி பேச சொல்லி அவர்களுடன் ஃபோட்டோ எடுத்து, பொன்னாடை போர்த்தி, கிப்ட் கொடுத்து என்று அவரைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தனர்.

வெண்ணிலாவின் கேங் வர, அவர்களோ, சால்வை, கிரீடம் போர்த்தி, சாருக்கு பிடித்த சாக்லேட் கேக் எடுத்து வந்து அலப்பறை பண்ணிக் கொண்டிருக்க.

அவரோ ஆனந்தத்தில் கண் கலங்க நின்றார்.

அவருக்கருகே இருந்த வெண்ணிலாவோ,”என்னாச்சு சார்?” என்று பதறி வினவ.

“நத்திங்டா. இது சந்தோஷத்துல வர்றது. நீ எப்படி இருக்க ? நீ வருவேன்னு எதிர்பார்க்கவில்லை.” என்றுக் கூறி புன்னகைத்தார்.

“ உங்களுக்கான விழா. நான் வராமலா சார்?”

“ அது இல்லம்மா. அப்பவே உங்க அம்மா உன்னை எங்கேயும் அனுப்ப மாட்டாங்க. இப்ப மேரேஜ் வேற ஆயிடுச்சா. அதான் கேட்டேன்.”

“எங்க அம்மா வீட்டை விட என் மாமியார் வீட்ல எனக்கு ஃபுல் சுதந்திரம். இப்பல்லாம் நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை எங்க வேணும்னாலும் போகலாம். யாருடைய சிபாரிசும் தேவையில்லை.” என்றுக் கூறி புன்னகைக்க.

“ மகிழ்ச்சி மா! இதே போல் என்னைக்கும் நீ சந்தோஷமா இருக்கணும்.”என்று அவளது தலையில் கை வைத்து ஆசீர்வதித்த மதன்சாரின் நினைவில் கடந்த கால நினைவு வந்து போனது.

(அன்று காதல் பண்ணியது)

 மதன் நினைத்தது போலவே வெண்ணிலாவும், யுகித்தும் டூயட் சாங்கில் செலக்ட்டாகிருந்தார்கள்.

யுகித்தின் குரலுக்கு ஏத்தாற் போல், அவளது குரல் அவ்வளவு குழைந்து ஒலிக்க.

 இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

 யுகித்தும் அவளது குரலில் மயங்கித் தான் போனான்.

பெங்களூருக்கு பத்து நாட்களில் செல்ல வேண்டும் என்ற தகவல் வந்தது.

போட்டியில் தேர்வான மாணவ, மாணவிகள் பெங்களூர் செல்வதற்கான ஏற்பாடுகளை உற்சாகமாக செய்ய ஆரம்பித்தனர்.

இதில் எதிலும் ஆர்வம் காட்டாமல் எதையோ பறிக்கொடுத்தாற் போல் வெண்ணிலா அமர்ந்து இருக்க.

“என்னாச்சு நிலா? பெங்களூர்ல இருந்து சாக்லேட் வாங்கிக் கேட்போம்னு சோகமா இருக்கியா?” என்று சபரீகா வெண்ணிலாவிடம் வம்பு வளர்க்க.

“ப்ச்!” என்றவளுக்கு கண்கள் கலங்கியது.

“என்னடி உன் பிரச்சனை? சொன்னா தானே எங்களுக்குத் தெரியும்.” என்று மஹதியும் வினவ.

“பெங்களூர் போறதுக்கு எங்க வீட்ல அலோவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இதுக்குத் தான் போட்டியில் பேர் கொடுக்காமல் இருந்தேன்.” என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“அழாதே நிலா! வீட்டில் கேட்டியா?” என்று நகுலன் வினவ.

“ம்!” என்ற வெண்ணிலாவிற்கு காலையில் நடந்ததை நண்பர்களிடம் பகிர்ந்துக் கொண்டாள்.

“அம்மா!” என்று வெண்ணிலா அழைக்க.

“என்ன வேணும் உனக்கு? ஊமைக்கோட்டானாட்டம் முகத்த வைச்சிட்டிருக்க? என்னாச்சு? என்ன காரியமாகணும்னு எங்கிட்ட வந்து நிக்குற?” என்று கமலி வினவ.

“அது வந்தும்மா…” என்று வெண்ணிலா இழுக்க.

“ அது தான் வந்துட்டியே… என்ன விஷயம்னு சொல்லு. எனக்கு வேலை இருக்கு.” என்று எரிச்சலாக கமலி கூற.

“காலேஜ்ல கல்ச்சுரல் ப்ரோக்ராம்.”

“அதுக்கு என்ன? விருப்பமிருந்தா கலந்துக்க வேண்டியது தானே.”

“அது வந்து பெங்களூர்ல மெயின் ப்ராஞ்ச்ல நடக்குது.”

“என்னது பெங்களூருக்கா? எதுக்கு கண்ணுக்கு தெரியாம இன்னும் நல்லா ஆட்டம் போடுறதுக்கா? அங்கெல்லாம் அனுப்ப முடியாது.”

“அம்மா! ப்ளீஸ்மா! நான் பாட்டு போட்டில செலக்ட் ஆயிட்டேன். கண்டிப்பா போகணும்.” என்று கெஞ்சினாள் வெண்ணிலா.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் உன்னெல்லாம் நம்ப முடியாது. உங்களுக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்ததுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்துட்டீங்க?”

“அம்மா அக்கா பண்ணதுக்கு நான் என்னம்மா பண்ணுவேன்.”

“ உங்க அக்காவை அவ இஷ்டத்துக்கு விட்டதால தான் நாமெல்லாம் வேணாம்னு ஓடிப்போயிட்டா. அதே மாதிரி உன்னை விட முடியாது. நீ எங்கேயும் போகக்கூடாது. என் கண்ணு முன்னாடி தான் இருக்கணும். இங்க நடக்குற போட்டியில கலந்துக்கிட்டா போதும். வெளியூர் போய் எதுவும் கிழிக்க வேணாம்.” என்றுக் கமலி கூறி விட.

அழுததழுது வீங்கி போன முகத்துடன் தான் கல்லூரிக்கே வந்திருந்தாள்.

அதையெல்லாம் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள, அந்த நேரம் அங்கு வந்த யுகித்தின் கண்களில் இந்த காட்சி தப்பவில்லை.

ஆனால் காரணம் தான் தெரியவில்லை.

எப்பவும் போல விவரம் தெரிந்துக் கொள்ள தீபிகாவிடம் யுகித் விசாரிக்க.

அவளும் தான் காலையில் கல்லூரிக்கு வந்ததுமே அவள் முகத்தைப் பார்த்து விசாரித்திருந்தாள்.

“நிலா வீட்ல அவளை பெங்களூருக்கு போக கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம்.”

“ ஏனாம்?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது யுகி. அதுக்குள்ள அவங்க ஃப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்கன்னு போயிட்டா.”

“ஓ!” என்ற யுகித் அமைதியாக இருக்க.

“பாவம் நிலா. அவளுக்கு பெங்களூருக்கு வரணும்னு அவ்வளவு ஆசை.”

“ இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. “

“அதான் அவங்க வீட்ல விடலையே.”

“மதன் சார் கிட்ட சொல்லலாம். அவருக்கு வெண்ணிலாவோட திறமை மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு. வெண்ணிலா கலந்துக் கிட்டா கப்பு நமக்கு தான் ரொம்ப கான்ஃபிடன்ட்டா நம்புறாரு. பை சான்ஸ் அவர் அவங்க அம்மாகிட்ட கூட பேசலாம்‌.”

“அப்படிங்கற…” என்று தீபிகா வினவ.

“ஆமாங்குறேன்!”

“அப்ப சரி இப்பவே நீ சார் கிட்ட போய் பேசு யுகா. பாவம் நிலா.” என்று தீபிகா கூற.

“நான் போய் சார் கிட்ட சொல்றேன். நீ உன் ஃப்ரெண்ட்டை சமாதானம் படுத்துற வேலையை மட்டும் பாரு.” என்று சொல்லிவிட்டு மதன் சாரை தேடிச் சென்றான் யுகித்.

ஆஃபிஸ் ரூமிலிருந்த மதனோ, “என்ன யுகி! இந்த நேரம் வந்திருக்க உனக்கு வகுப்பு இல்லையா?” என்று வினவ.

“ அது வந்து சார்… ஒரு சின்ன ப்ராப்ளம்.”

“சொல்லு யுகித்.”

“என்னோட ஃபேர் சிங்கர் வெண்ணிலா பெங்களூருக்கு வரலைன்னு சொல்றாங்க.”

“வாட்?” என்று புரியாமல் மதன் வினவ.

“சார்! அவங்க வீட்ல பெங்களூர் போறதுக்கு அலவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.”

“வாட்? இந்த காலத்திலும் இப்படி இருக்காங்களா? யூ டோண்ட் வொர்ரி யுகித். நான் அவங்ககிட்டப் பேசிப் பர்மிஷன் வாங்கித் தர்றேன்.”

“தேங்க் யூ சார்.” என்றான் யுகித்.

“நீ போய் வெண்ணிலாவை இங்க வர சொல்லு.”

“ஓகே சார்.” என்றவன், வகுப்பிலிருந்த வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு வந்தான்.

அவளோ, ‘சார் திட்டுவாரோ!’ என்று பயந்துக் கொண்டே வந்தாள்.

 அவளைப் பார்த்ததுமே அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

“ வருத்தப்படாதே வெண்ணிலா. யுகித் சொன்னான். நான் உங்க அம்மாகிட்ட பேசுறேன்.” என்றவர், அவளிடம் நம்பர் வாங்கி,உடனேயே அவருக்கு அழைத்தார்.

“ஹலோ!‌ நான் வெண்ணிலாவோட ப்ரோபஸர் பேசுறேன்.” என்று தன்னை அறிமுகமப்படுத்திக் கொண்டவர், நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“இங்க பாருங்கம்மா. வெண்ணிலாவுக்கு பாடுறதுல திறமை இருக்கு. காலேஜ்ல நடக்குற போட்டியில கலந்துக்கிட்டா கண்டிப்பா அவ பிரைஸ் வின் பண்ணுவா. அது அவளோட ப்யூச்சருக்கு யூஸ் ஃபுல்லா இருக்கும். நீங்க பயப்பட வேண்டாம். என்னை நம்பி அனுப்புங்க. லேடிஸ் ஸ்டாப்ஸும் வருவாங்க. அவங்களோட நேரடி கண்காணிப்புல தான் ஸ்டூடண்ட்ஸெல்லாம் இருப்பாங்க.” என்று பேசி கன்வின்ஸ் பண்ணி எப்படியோ சம்மதம் வாங்கியிருந்தார்.

வெண்ணிலாவுக்கோ சந்தோசம்.

“ ரொம்ப தேங்க்ஸ் சார்!” என்றுக் கூற.

“என் கிட்ட ஏன் மா சொல்லுற? யுகித்துக்கு சொல்லு. அவன் தான் இந்த பிரச்சனையை என் கவனத்திற்கு கொண்டு வந்தான். இல்லைன்னா நான் இதில் தலையிட்டு இருக்க மாட்டேன்.” என்று கூறிவிட்டுச் செல்ல.

 அங்கிருந்த யுகித்தை முதல் முறையாக நன்றியுடன் பார்த்தவள்,” ரொம்ப தேங்க்ஸ் சீனியர்.” என்றுக் கூற.

“உன் தேங்க்ஸை அக்ஸப்ட் பண்ணனும்னா, முதல்ல நாம ஃப்ரெண்ட்ஸாகணும்.”என்று யுகித் கையை நீட்ட. அவள் தயக்கத்துடன் கையை நீட்டினாள்.

வீட்டிற்கு வந்த வெண்ணிலாவிடம் அவளது அம்மா,”இங்கே பாரு வெண்ணிலா, உங்க ப்ரொபசர் சொல்றாங்கன்றதுக்காக தான் உன்னை அனுப்புறேன். மத்தபடி நான் சொல்றத தான் நீ கேட்கணும். உங்க மேடம் கூடதான் நீ எப்பவும் இருக்கணும், நான் எப்ப கால் பண்ணாலும் எடுக்கணும், எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கணும்‌.” என்று ஆயிரம் அறிவுரைகள் கூற.

 எல்லாவற்றிற்கும்,” சரி! சரி!” என்று தலையாட்டினாள் வெண்ணிலா.

‘எங்கே நீ போகவேண்டாம்.’ என்று தடுத்

துவிடுவாரோ என்று ஒரு வித பயம் கலந்த படபடப்புடனே கிளம்பும் வரை இருந்தாள்.

இதில் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து விட்டிருந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!