அரண் 20
துருவன் கூறிய வார்த்தைகளை கேட்டதும் அவளுக்கு அந்த அறையில் மூச்சடைப்பது போல இருந்தது அவன் வெளியே போ என்று கத்திய பின் எவ்வாறு அவன் முன்னே நிற்பாய் உடனே வெளியே வந்தவள்,
துருவன் கூறிய வார்த்தைகளை ஏற்க முடியாமல் அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் எதிரொலிக்க, அவளால் அந்த குரலை சகிக்க முடியவில்லை.
“உனக்கு எப்படி தெரியும் படிச்சிருந்தா தானே உனக்கு இதெல்லாம் புரிகிறதுக்கு மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பட்டிக்காடு தானே நீ.. பட்டிக்காடு… பட்டிக்காடு… பட்டிக்காடு..” என்று அவனது காதில் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் ஒலித்தன.
“இல்ல என்னை அப்படி பேசாதீங்க தயவுசெய்து அப்படி என்ன பேசாதீங்க என்னால தாங்க முடியல நான் பட்டிக்காடு இல்ல..” என்று தன்னை மீறி புலம்பியவள்,
என்னோட துருவா அப்படி பேசியது? என்னோட மனசுக்கு பிடிச்சவர் இப்படி மனசு என்னோட மனச புண்படுத்தும்படி பேசுவாரா? என்னை இப்படி கொடிய வார்த்தைகள் பேசி கஷ்டப்படுத்த நினைப்பாரா?
‘நீ செய்தது தப்புகின்றதாலத் தான் அவருக்கு கோபம் வந்திருக்கு அதனால தான் அவர் உனக்கு பேசியிருக்கிறார் அவர் கோபப்படும்படி ஏன் நீ நடந்து கிட்ட..’ என்று வள்ளியின் மனசாட்சி அவளை கேள்வி கேட்டது.
‘அதுக்காக இப்படி எல்லாம் பேசலாமா..? நான் தெரியாமல் பண்ணியது தப்பு இல்லை தவறு.
தவறு செய்பவர்களை மன்னிச்சு தானே ஆகணும் அதுதான் ஒரு படித்த பையனுக்கு அழகு..’ என்று மறுபக்கம் மனசாட்சி வள்ளிக்கு ஆதரவாக பேசியது.
‘அவர் படித்த பயங்கரதால தான் உன்ன சும்மா விட்டு இருக்காரு இதே வேற ஒருவராய் இருந்திருந்தால் இந்நேரம் உன் கன்னம் சிவந்திருக்கும்..’ என்று கூற உடனே இரு கன்னத்திலும் கை வைத்து,
‘கடவுள் ஏன் என்னை இப்படி வஞ்சிக்கிறாரோ இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா அவர் என்கிட்ட அன்பு காட்டத் தொடங்கினார் அதுக்குள்ள இந்த அசம்பாவிதம் நடந்து முடிஞ்சிருச்சு எப்படி நான் இதை சரி செய்வது..” என்று மனதிற்குள் எணியவள்,
வைதேகி அத்தைக்கு நடந்தவை ஒன்றும் தெரிய வேணாம் என்று உடனே கண்களில் வழிந்த நீரை துடைத்துவிட்டு அருகில் இருந்த சுவாமி அறைக்குள் புகுந்தாள்.
அவளுக்கு எப்போதெல்லாம் மனது பாரமாக இருக்கின்றதோ எப்போதெல்லாம் துன்பம் நெஞ்சை பிழிகின்றதோ அப்போதெல்லாம் இறைவனையே அவள் நாடிச் செல்வாள்.
உண்மையிலேயே நாம் நம்பி எங்களது மனக் கவலைகளை கடவுளிடம் மட்டும் தான் கொட்ட முடியும். ஏனென்றால் அவர்தான் வேறொருவரிடமும் எங்களது கவலைகளை பரிமாற மாட்டார்,
வேறொருவரிடம் நகைத்து பேச மாட்டார், நாம் சொல்லும் கவலைகளை கேட்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டு வெளியே பொய்யாக கவலைப்படுவது போல் நடிக்க மாட்டார்.
இவை அனைத்தையும் கடவுள் செய்யாததால் தான் அவர் கடவுளாக நம் முன் இருக்கின்றார். மனதில் இருந்த அனைத்து துன்பங்களையும் வாய் வழியாக கடவுளிடம் உரையாடும்போது அனைத்தும் கடவுளின் காலடியில் போட்டு விட்டது போலும் இனிமே எந்த பயமும் இல்லை அவர் பார்த்துக் கொள்வார் என்ற ஒரு நம்பிக்கையும் அவளுக்குள் எழுந்து விடும்.
அதனால் அவளுக்கு எப்போதெல்லாம் இந்த துன்பங்கள் வருகிறதோ அந்த துன்பச் சுமையை கடவுளிடம் இறக்கி விட்ட பிறகு அவள் ஒரு வசந்தகால பறவை போல அனைத்தையும் மறந்து மீண்டும் மனதில் இன்பம் வந்து சூழ்ந்து கொள்ள வட்டமிட்டு திரிவாள்.
அவள் எப்பொழுதும் சிறு பிள்ளை போல ஆனந்தமாய் இருப்பதற்கு இதுவே காரணம். நாங்களும் துன்பம் எனும் குப்பையை மனதிற்குள் சேர்த்து வைத்திருந்தால் மனம் சுமையாகவும், குப்பை கூடையாகவும் தான் இருக்கும்.
துன்பங்களை இறக்கி வைத்து இன்பங்களை நினைத்து இன்புறுவது மனதிற்கு ஆரோக்கியம் நமக்கும் ஆரோக்கியம். அதுவே எங்களை முதுமைக்குத் தள்ளாமல் எப்பொழுதும் இளமையாகவே வைத்திருக்கும். மனதளவில் சந்தோசம் காண்பது மிகச் சிறந்தது.
அதற்குத் தானே முன்னோர்கள் எழுதி வைத்த பழமொழியும் இருக்கின்றதே! அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகத்தில் உள்ள சிந்தனைகளும் சந்தோசமுமே முகத்தை அழகாக பிரகாசிக்கச் செய்யும்.
நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள் எப்பொழுது உங்களை சந்தோஷமாகவே வைத்திருக்கும் அதனால் எங்களது முகம் அழகாக தென்படும்.
தீய சிந்தனைகள், தீய எண்ணங்கள் எங்களை ஒரு அரக்க குணம் படைத்தவராக மாற்றிவிடும். எப்போது யார் கீழே வீழ்வர், யார் இறப்பர், யார் துன்பப்படுவர் என்று எண்ணினால் எங்களது வாழ்வும் அதேபோலவே நடக்கும் அதனால் தான் எண்ணம் போல் வாழ்க்கை என்று பெரியோர்கள் கூறுவர்.
அப்படித்தான் நமது வள்ளியும் எப்பொழுதும் இன்பமயமாக சுற்றித் திரிவதற்கு அவள் எப்பொழுதும் தோழமையுடன் பழகும் தனது மாரியம்மனை மன்றாடி, அழைத்து, தனது கஷ்டங்களை கூறி உரையாடுவதால் தான் அவள் இன்றும் சிறு பிள்ளை போல கள்ளம் கபடம் இல்லாமல் வாழ்கின்றாள்.
அவளது அழைப்பை கேட்டு மாரியம்மன் அருகில் இருந்து ஆதரவாக அன்னையைப் போல் அவளிடம் துன்பத்திற்கான விடை கூறுவது போலவும், அவளை அள்ளி அணைத்து ஆறுதல் அளிப்பது போலவும் அவளுக்குத் தோன்றும்.
அன்றும் அவ்வாறே சுவாமி அறைக்குள் சென்று மாரியம்மனை வேண்டி,
“நான் செய்தது தப்பு தான்மா ஆனால் அவர் இப்படி பேசுவாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அவர் பேசினதுக்காக நீ அவருக்கு தண்டனை எல்லாம் கொடுத்து விடாதே அவர் செய்தது தப்பு தான் நான் அதைவிட பெரிய தப்பு செய்துவிட்டேன்.
நான் செஞ்ச தப்பால தான் அவர் அப்படி பேசினார். அந்த தப்பால அவருக்கு பெரிய தொகை பணம் நஷ்டத்துல வந்துருமாம் அதை மட்டும் வந்திராம பார்த்துக் கொள்ளுங்க அவர் பேசினதுக்காக அவரை தண்டிச்சிறாதிங்க அம்மா..” என்று துருவனுக்காக பரிந்து பேசினாள் அற்புத வள்ளி.
அவன் மீது இருந்த காதல் அவளை அவ்வாறு பேச வைத்தது. இதுவே வேறு யாராக இருந்திருந்தால் வள்ளியின் விளையாட்டே வேற லெவல்ல இருந்திருக்கும்.
அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் பல நூறு வார்த்தை பேசி அவர்களை உண்டு இல்லை என்று செய்திருப்பாள். ஊரில் வம்பு வழக்குகள் வந்தால் முதலில் நிற்பது வள்ளி தான் வாயாடி ரங்கம்மா என்று ஊரில் அவளுக்கு தனிப் பெயரே உண்டு.
ஆனால் துருவன் ஒரு வார்த்தை கூறவும் மறுவார்த்தை பேச அவளுக்கு ஏனோ மனம் இடம் தரவில்லை. அவன் கூறிய அனைத்தையும் காதில் கேட்டுவிட்டு ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பி வந்தது அவளுக்கே அபூர்வமாக இருந்தது.
இந்த வள்ளி அவளுக்கே புதிதாக தான் தெரிந்தாள். அப்படி பேசியவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டு அன்று மாரியம்மன் கோயிலுக்கு போய் அவர்கள் கால் உடையனும், கையுடையனும், பெரிய காயம் வரணும், அப்படி இப்படி என்று சாபமெல்லாம் விடுவாள்.
அப்படிப்பட்டவள் ஒன்றும் பேசாமல் கடவுளிடம் வந்து சாபமும் போடாமல் கடவுளிடமே மன்னித்துவிடு என்று மன்றாடுவது மாரியம்மனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
மாரியம்மனே கன்னத்தில் கை வைத்துக் கொண்டு,
‘இது என்னடா கூத்து நம்ம பிள்ளையா இது..?’ என்று பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார். காதல் எப்படியெல்லாம் ஒருவரை மாற்றி அமைக்கிறது பார்த்தீர்களா..?
வெளியே வேகமாக வந்த துருவன் கண்களால் வள் ளியைத் தேடினான். எங்கும் அவளை காணவில்லை என்றதும் கீழ் இறங்கி வைதேகி இடம் கூட கூறாமல் காரை எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் சென்று விட்டான்.
அவன் செல்வதை மேலே சுவாமி அறை வாசலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வள்ளி கீழே இறங்கி வந்து வைதேகிக்கு வளமை போல உதவிகள் செய்து கொடுத்தாள் ஆனால் நினைவெல்லாம் காலையில் நடந்த விடயத்திலேயே மனம் தொக்கி நின்றது.
காரில் போகும்போது தனது செகரட்டரிக்கு அழைப்பு எடுத்து, மீட்டிங்கை கேன்சல் செய்யும்படி கூற,
செக்ரட்டரியோ “இல்ல சார் அவங்க ஆல்ரெடி வந்துட்டாங்க நீங்க எதுக்கும் நேர்ல மீட் பண்ணி விஷயத்தை சொன்னீங்கன்னா தான் நிலைமையை சமாளிக்கலாம்..” என்று அவன் கூறியதும்,
அவன் கூறுவதும் சரி என்று பட,
“ஓகே நான் இன்னும் 5 மினிட்ஸல ரீச் ஆயிடுவேன்..” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து கோபமாக போனை அருகில் இருக்கும் இருக்கையில் தூக்கி எறிந்தான்.
சொன்னபடி 5 நிமிடங்களில் கம்பெனிக்கு அருகில் காரை நிறுத்தியவன் உள்ளே சிங்கம் வேட்டியாட செல்வது போல கன்ஃபரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான்.
ஹாலுக்குள் துருவனது மீட்டிங்குகாக காத்திருந்த வர்த்தகப் பங்காளர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க துருவன் வந்த வேகத்தை பார்த்து அதிர்ந்து ஒருசேர அனைவரும் எழுந்து நின்றனர்.
அனைவரையும் பார்க்க வண்ணம்,
“குட் மார்னிங் ஆல் அப் யூ..” என்று கூறி அனைவரும் அமரும்படி கண்ணசைத்தான்.
அவனது செய்கையை புரிந்து கொண்டவர்கள் தங்களது இருக்கையில் அமர,
“நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கே வாரேன் சாரி டு சே திஸ்.. டுடே மீட்டிங் ஸ் கேன்சல்ட் ..”
அனைவரும் திகைப்புடன் “என்ன, ஏன், எதுக்காக, எப்படி..” என்று தங்களுக்கு மாறி மாறி கேள்வி கேட்டு காரணங்களை ஊகித்து பேசிக்கொண்டு இருந்தனர்.
“சாரி டியர் என்னோட இம்போர்ட்டண்ட் டாக்குமெண்ட்ஸ் மிஸ் ஆயிட்டு கூடிய சீக்கிரம் நெக்ஸ்ட் மீட்டிங்ல நான் அதை கட்டாயம் சப்மிட் பண்றேன்.. நீங்க இப்போ கிளம்பலாம் மீண்டும் சந்திப்போம் பாய் தேங்க்யூ..” என்று மனதில் உள்ள கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அனைத்தையும் கூறி முடித்தான்.
அவன் அவ்வாறு கூற அந்த வர்த்தக பங்காளர்கள் கூட்டத்தில் உள்ள ஒருவர் எழுந்து,
“என்ன துருவன் சார் இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்றீங்க பள்ளிக்கூடம் போற புள்ள பென்சில் தொலைஞ்சிட்டுன்னு சொல்ற மாதிரி இருக்கு..” என்று அவன் கூற அங்குள்ள அனைவரும் இதனைக் கேட்டு சிரிக்கத் தொடங்கினர்.
அதோடு விடாமல் அவன் மேலும்,
“நாங்க எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கோம் மீட்டிங் கேன்சல் ஆயிடுச்சுன்னு இவ்வளவு கூலா சொல்றீங்க நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமையா இங்க வந்து காலையில இருந்து உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கோம்.
உங்களுக்கு எங்களோட பிசினஸ் பண்ண விருப்பம்ன்னா விருப்பம்னு சொல்லுங்க இல்லன்னா விருப்பம் இல்லைன்னு சொல்லுங்க ஏன் சும்மா எங்கள அலைய வைக்குறீங்க கொஞ்சமாவது ஸ்மார்ட்டா நடந்துக்கோங்க ஒரு மீட்டிங்கையே ஒழுங்கா நடத்த முடியல எப்படித்தான் இவ்வளவு கம்பனிஸ ஹேண்டில் பண்றீங்களோ தெரியல..” என்று அவன் நக்கலாக கூறி முடிக்கும் முன்பு,
எழுந்து கதிரையை காலால் உதைத்து தள்ளி விட கதிரை சுவற்றில் போய் மோதி நின்றது. உடனே அந்த நபரின் முன் வந்து நின்றவன், அவரது முகத்திற்கு நேராக சுடக்கிட்டு,
“ஹலோ மிஸ்டர் உங்களுக்கு என்னோட பிசினஸ் செய்ய வேண்டும் என்று விருப்பம் இருந்தா செய்ங்க இல்லன்னா இப்படி ரோங்கா பேசுறத விட நீங்க என்னோட பிசினஸ் செய்யாம இருக்கிறது எனக்கு நல்லதா படுது.
இப்படி மோசமான பிஹேவியர் இருக்கிற உங்களோட என்னால பிசினஸ் பண்ண முடியாது தேங்க்யூ ஃபார் யுவர் கம்மிங்..” என்று கூறிவிட்டு வெளியே கையை காட்டினான். அவரும் மிகவும் கோபமாக எழுந்து சென்று விட்டார்
அடுத்த நிமிடங்களில் அங்கு இருப்பவர்களுக்குள் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் சலசலப்பு உண்டானது. துருவனுக்கோ தலை வெடிப்பது போல இருந்தது.
உடனே எதுவும் பேசாமல் அந்த அறையை விட்டு எழுந்து சென்று விட்டான்.