அரண் 21
அவன் செல்வதையை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவனது செக்கரட்டரி வேந்தனிடம்,
“என்ன வேந்தன் இது இப்படி நடந்துக்கிட்டா எப்படி..? அவர் கேட்டதுல என்ன தப்பு..? இங்க நாங்க பல நூறு மயில் தூரத்தில் இருந்து மீட்டிங்க்கு வந்தா இவர் என்னவோ விக்ரமாதித்தன் வேதாளம் கதை சொல்றாரு.
இது சரிப்பட்டு வராது நீங்க துருவன்கிட்ட நேரடியாக போய் இந்த விஷயத்தை பற்றி சொல்லி புரிய வைங்க ஆனா இனிமேல் உங்களோட பிசினஸ் செய்வோம்னு நீங்க கனவிலும் நினைச்சுக்காதீங்க அந்த ஆளுக்கு கேட்டுட்டு போனதில் என்ன தப்பு.
10 டேஸ்க்கு முன்மே இந்த மீட்டிங் பிளான் பண்ணியாச்சு இவ்வளவு நாளும் அந்த டாக்குமெண்ட்ஸ ரெடி பண்ணாமலா இருந்தாரு கடைசி நேரம் திடீரென்று வந்து மிஸ் பண்ணிட்டேன்னு அவர் சொல்றத பார்த்தா எங்களோட அவருக்கு பிசினஸ் ரிலேஷன்ஷிப் வெச்சி இருக்கிறது விருப்பமில்லைன்னு மறைமுகமாக சொல்ற மாதிரில்ல இருக்கு எங்கள பார்த்தா எப்படி தெரியுது..” என்று அவர் நீளமாக பேசிக்கொண்டு போக,
இரு கைகளையும் கட்டிக்கொண்டு ஒரு பெருமூச்சு ஒன்றை வெளி விட்டு குரலை செருமிய வேந்தன், அங்கிருப்பவர்களை பார்த்து,
“எக்ஸ்கியூஸ் மீ ஜென்டில்மேன்ஸ் என்னோட பாஸ் எப்பவும் பொய் சொல்ல மாட்டார் அவர் ரொம்ப ஸ்ட்ரைட் பார்வர்ட் உங்களோட பிசினஸ் பண்ண விரும்பலனா அவர் அதை நேரடியாகவே உங்க கிட்டயே சொல்லி இருப்பாரு.
இப்படி சில்லி சில்லியா சின்ன சின்ன ரீசன் எல்லாம் சொல்லிட்டு இருக்கணும் என்று அவருக்கு எந்த அவசியமுமில்லை அதோட இந்த இந்தியால எவ்வளவு பிஸ்னஸ் மேன்ஸ் இருக்காங்க உங்களோட தான் அவர் பிசினஸ் ரிலேஷன்ஷிப் வெச்சிருக்கணும் என்று அவசியமே இல்லை.
நீங்க இல்லன்னா இன்னும் எவ்வளவு பேர் இருக்காங்க கடல்ல மீனா இல்ல என்னோட பாஷ பத்தி பேசுறதுக்கு முன்னுக்கு கொஞ்சம் யோசிச்சு பேசுங்க இப்ப நீங்க என்னோட பேசின மாதிரி என்னோட பாசு கிட்ட பேசி இருக்க முடியுமா? முதல் இரண்டு வார்த்தைகள் பேசி முடிப்பதற்கு முன்னமே அவனது கண்ணம் சிவந்திருக்கும்…” என்று அனைவரையும் பார்த்து கூறியவன் கடைசியாக தன் முன் வந்து நின்று பேசியவன் முன் அவரது முகத்தை நேராகப் பார்த்து பேசி முடித்தான்.
அவன் மிகவும் திமிராக கூற அங்கு இருப்பவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். துருவன் அப்படி பேசிட்டு போறான் என்று பார்த்தால் அவனது செகரட்டரி வேந்தன் அதைவிட ஒரு மடங்கு மேலாக அல்லவா இருக்கின்றான்.
வேந்தன் இவ்வாறு கூறியதற்கு மேலும் அவர்கள் அங்கு நிற்க என்ன மடையர்களா? அவன் பேசிய பேச்சில் உடனே கன்ஃபரென்ஸ் ஹால்லை விட்டு வெளியேறினர்.
அவர்கள் அங்கிருந்து செல்ல வேந்தன் உடனே துருவனின் அறைக்குள் வந்து பார்த்தால், அங்கிருக்கும் ஒவ்வொரு பொருட்களும் சிதறி சில்லு சில்லாக உடைந்து கிடந்தது. அனைத்தும் அந்த அறை முழுவதும் சிதறிக் கிடந்தன.
அனைத்திற்கும் நடுவில் கதிரையில் கால் மேல் கால் போட்டு தலையில் கை வைத்தபடி துருவன் மிகவும் கோபமாக இருந்தான்.
துருவனின் கோபத்தை பார்த்து பழக்கப்பட்ட வேந்தனுக்கு அவனின் செயல்கள் அனைத்தும் பெரிதாக ஆச்சரியப்படும்படி இல்லை எல்லாம் எதிர்பார்த்ததுதானே வளமையாக நடப்பது தானே என்று மிகவும் இயல்பாக இருந்தான்.
‘இப்படி எல்லாம் நடக்கவில்லை என்றால் தான் ஆச்சரியமே..!’ என்று மனதிற்குள் நினைத்தவன். இப்போது எவ்வாறு இவரிடம் பேசுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்க,
துருவன் வேந்தனின் வருகையை உணர்ந்து நிமிர்ந்து பார்த்து புருவம் உயர்த்தி “என்ன..” என்று கேட்டான்.
“இல்ல சார் நீங்க கொஞ்சம் அமைதியா இதை ஹாண்டில் பண்ணி இருக்கலாம்..” என்று கூறியவன், துருவன் கூறிய பதிலில் அதற்குப் பின் தான் தாமதமாக யோசித்தான் இப்படி கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று,
துருவனோ அதிகபட்ச கோபத்தில்,
“அவன் எல்லாம் யார் என்ன கேள்வி கேட்கிறதுக்கு? அவனுக்கு என்னோட பிசினஸ் பண்ண விருப்பம் இல்லையாம் பெரிய மைசூர் மகாராஜா என் கூட பிசினஸ் வச்சுக்க ஆசை படுறாரு அவன் யாரு ஆஹ்… ரெண்டு வருஷத்துக்கு முன்னுக்கு குழந்தை பிள்ளைகள்ல பால் பவுடர் ப்ரொடக்ட் என்ற பெயர்ல ட்ரக்ஸ் கடத்தி வித்து போலீஸ் கிட்ட மாட்டினவன் தானே இவன்…”
“சரி சரி காம்டோன்ஸ் காம் டவுன் காம் டவுன்..”
“வேந்தன் இவன் எல்லாம் பெரிய ம**** மாதிரி எல்லோருக்கும் முன்னுக்கு வந்து என்கிட்ட பேசுறான் இவன் எங்களுடைய ஒன்னா செய்ற பிசினஸ் எல்லாம் பிளாக் பண்ணிடுங்க அடுத்த இன்வஸ் பண்ணினேன் பணத்தை எல்லாம் திருப்பி கொடுத்துடுங்க இன்னைல இருந்து எங்க கம்பெனிக்கும் அவனுக்கும் தொடர்பு இல்லை..”
துருவனது அதிரடி நடவடிக்கையைப் பார்த்து மிரண்டு போன வேந்தன்,
“பாஸ் அவர் இதுவரைக்கும் 8 கான்ட்ராக்ட்ல சைன் பண்ணி இருக்கேர்.. அந்த கான்ட்ராக்ட் க்ளோஸ் பண்ணனும்னா உங்களுக்கு பல லட்சம் லாஸ் ஆகும்..” என்று கூற,
“பரவாயில்லை டு தட்..” என்று மிக இயல்பாக கூறி விட்டு,
மேசையில் இருந்த கிளாஸில் உள்ள நீரை எடுத்து வாயிற்கு அருகில் குடிக்க கொண்டு சென்ற போது, திடீரென துருவன் ஒன்றை கவனித்தவன்.
உடனே அறையை விட்டு வெளியேற எண்ணிய வேந்தனை,
“வேந்தன் ஸ்டொப்..” என்று துருவன் கூற வேந்தன் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றான்.
“வேந்தன் நம்மளோட மெடிக்கல் ஸ்டாப் ரெண்டு பேர உடனே என்னோட ரூமுக்கு சீக்கிரம் வர சொல்லு கோ ஃபாஸ்ட்..” என்று தீவிர யோசனையுடன் தண்ணீரை பார்த்தபடி கூறினான்.
அவன் திகைப்புடன்
“என்ன சார் எனிதிங் சீரியஸ் சீக்கிரம் சொல்லுங்க சார்..” என்று கேட்க,
“வேந்தன் என்ன விஷயம்ன்னு அப்புறம் சொல்லுறேன் முதல்ல அவங்கள இங்க வர சொல்லுங்க டென் மினிட்ஸ்ல அவங்க இங்க இருக்கணும்..” என்று துருவன் கூறுவது வேந்தனுக்கு என்னவோ எதனையோ எச்சரிக்கையாகத் தெரிவிப்பது போல் இருந்தது.
“ஓகே சார்..” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று அவன் கூறிய வேலையை வளமையைப் போல் மிகவும் கச்சிதமாக முடித்து இருந்தான்.
துருவன் கூறிய நேரத்தை விட இரண்டு நிமிடங்கள் முன்னமே அவர்கள் துருவனின் மேசை முன்னே நின்றனர்.
துருவம் கதிரையை விட்டு எழுந்து அந்த நபர்கள் அருகே வந்து இருவரையும் ஒரு ஆராய்ச்சி உடன் உற்று நோக்கிய பின்,
“எனக்கு இப்போ இந்த கிளாஸ்ல என்ன கலந்திருக்குன்னு தெரிஞ்சுக்கணும் என்னன்னு கண்டுபிடிச்சு சீக்கிரமா சொல்லுங்க
அப்புறம் ஏன் உங்களை இங்கே கூப்பிட்டேன்னா இந்த விஷயம் ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும் என்கிட்ட மட்டும் தான் நீங்க பதில சொல்லணும்..” என்று துருவன் எச்சரிக்க,
“ஓகே சார்..” என்று கூறி விட்டு அந்த கிளாசியில் உள்ள நீரை எடுத்துக்கொண்டு சென்றனர்.
எதனையோ சிந்தித்தவனாக கையில் கார் சாவியை எடுத்துக்கொண்டு காரில் புறப்படும் போது அலைபேசியில் அழைப்பு வந்ததைப் பார்த்து சற்று தடுமாறியவன்,
அதனை அழுத்தி காதில் வைத்து,
“ஐ அம் ஒன் த வே..” என்று பதில் கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டான்.
சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு வர அவனுக்கு எரிச்சலாகிப் போனது, சினத்துடன் அதனை அழுத்தி காதில் வைக்க அதிலிருந்து கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ந்து காரினை அப்படியே நிறுத்தி விட்டான்.
அவனால் அந்த அலைபேசி மூலம் கூறிய செய்தியை நம்ப முடியவில்லை.
உடனே காரை திருப்பிக் கொண்டு அவனது மெடிக்கல் பேக்டரிக்கு திரும்பினான்.
துருவனுக்கு இருக்கும் பிசினஸ்களில் மருத்துவத்துறையே மிக முக்கியமானது. இதில் பலதரப்பட்ட மூலிகைகளையும், சில இரசாயன மூலகங்களையும் வைத்து அவன் பயனுள்ளவாறு பல மருந்துகளை தயாரிக்கின்றான்.
அவனது மருந்துகளால் இயற்கையான வழிமுறைகள் நிறைந்த இந்த மாத்திரைகளால் மனித உடலில் ஏற்படும் பின் விளைவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறன.
உடனே மெடிக்கல் பேக்டரிக்கு அருகில் காரை நிறுத்தியவன் உள்ளே புயலைப் போல நுழைந்தான்.
அவன் வரும் வேகத்தை பார்த்து பணிபுரிந்து கொண்டிருந்த அனைவரும் எழுந்து தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அனைவருக்கும் தலை அசைப்பை மட்டும் பரிசாக கொடுத்துவிட்டு தனக்குரிய அறைக்குள் நுழைந்து கொண்டவனின் முன்னிலையில் அந்த இரு தொழிலாளிகளும் நின்றனர்.
அவனது மேசையில் அந்த தண்ணீரை பரிசோதனை செய்த ரிப்போர்ட் வைக்கப்பட்டிருந்தது.
அதை எடுத்துப் பார்த்தவன்,
“வாட்..” என்று பாயும் புலி போல எழுந்து அதனை சுக்குநூறாக கிழித்தெறிந்தான்.
“இந்த ரிப்போர்ட்ல எழுதி இருக்கிற அனைத்தும் உண்மையா..?”
“ஆ…. ஆ… ஆமாங்க சா…ர் உங்க குடி தண்ணில யாரோ வி…விஷம் கலந்து இருக்காங்க..” என்று நடந்ததை கூறி முடிக்க முடியாமல் பயத்தில் கைகள் நடுங்க அவன் முன்பு நின்றனர்.
துருவனின் கம்பெனிக்குள் நுழைந்து அவனது அறைக்குள்ளேயே அவன் அருந்தும் நீரில் விஷம் வைக்கும் அளவிற்கு யாருக்கு அவ்வளவு துணிச்சல் வந்தது.
யார் இதனை துணிந்து செய்திருப்பர் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்..