அரண் 23
கண்ணுக்கு முன்னே ஒரு சடலத்தை பார்த்ததும் இருவருக்கும் மனதுக்குள் சிறு பயன் தொற்றிக் கொண்டது. உடனே துருவன் அழைப்பெடுத்து போலீஸுக்கு அறிவித்தான்.
சிறிது நேரத்திலேயே சனக்கூட்டங்கள் அங்கு கூடத் தொடங்கின. 10 நிமிடங்களில் போலீசஸும் அங்கு வந்து சேர துருவனும், வேந்தனும் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.
வேந்தன் துருவனை விசித்திரமாக பார்த்து,
“எப்படி பாஸ் அவங்க உள்ள தான் இருக்காங்கன்னு கண்டுபிடிச்சீங்க..?” என்று கேட்க,
“சரோஜா அம்மா சைக்கிள்ல தான் வேலைக்கு வாரவங்க அவங்களோட சைக்கிள் அதோ அங்க பாரு இருக்கு அப்போ அவங்க வேற எங்கேயும் வெளியே போகலன்னு தானே அர்த்தம்..”
“ஏன் பஸ்ல போய் இருக்கலாம் தானே..”
“நீ சொல்றதும் சரிதான் ஆனால் செருப்பு இல்லாமல் எப்படி பஸ்ஸில் போவாங்க அவங்க வீட்டு வாசல்ல அவங்களோட செருப்பு இருக்கே..”
“வாவ்.. அமேசிங் நீங்க உண்மையிலேயே செம் இன்டெலிஜென்ட் பாஸ்..”
“உனக்கு பாஸா இருக்கிறேனா கொஞ்சம் புத்திசாலியா தான் இருக்கணும்..”
“போங்க பாஸ் நேரம், காலம் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு..”
“காமெடி எல்லாம் இல்ல இனிமேல் தான் இருக்கு விஷயமே அவங்க செத்துட்டாங்க அப்போ நஞ்சு வச்சது நீதானே..!”
“என்ன பாஸ் வேதாளம் மாதிரி திருப்பியும் முதல்ல இருந்து வரீங்க…” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க அங்கு சடலத்தை வெளியே எடுத்த போலீஸ் இருவருக்கும் அருகில் வந்து நிற்க,
“ஹலோ சார்…” என்று துருவனை பார்த்து கூற,
துருவன் சிறு தலை அசைப்புடன்,
“ஏதாவது குளு கிடைச்சுதா..?”
“ஆமா சார் அவங்க கையில ஒரு லெட்டர் இருந்துச்சு அதை யாருக்கும் தெரியாம நான் எடுத்துட்டு வந்துட்டேன்.
அதுல இறந்ததற்கான காரணம் எழுதி இருக்காங்க அதுல உங்க பேரு மென்ஷன் பண்ணி இருக்காங்க..” என்று கூறியதும் இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.
“என்ன பாஸ் இப்படி சொல்றாங்க..”
வேந்தனை முறைத்து பார்த்தபடி,
“அது இப்போ எங்க..?”
“இதோ சார்..” என்று யாருக்கும் தெரியாமல் மறைவாக கைக்குள் வைத்து துருவனின் கையில் கொடுத்தான்.
துருவம் காருக்குள் சென்று கதவை மூடிவிட்டு அந்த கடிதத்தினை படிக்கத் தொடங்கினான்.
துருவனுக்கு பின்னே வேந்தனும் வந்து அமர்ந்து அதில் என்ன இருக்கிறது என ஆர்வமாக வாசித்தான்.
‘வணக்கம் ஐயா நான் உங்களிடம் முதல் மன்னிப்பு கேட்டுக்கிறேன் இப்படி செய்ததற்காகவும் இந்த லெட்டர் எழுதுவதற்காகவும் நான் இறந்து போனா எப்படி இறந்தேனு காரணம் தெரியாமல் போயிடுமில்ல அதுக்காகத்தான் இந்த லெட்டரை எழுதுகிறேன்.
நீங்க எனக்கு எவ்வளவு உதவி செய்து இருக்கீங்க அதை நான் எப்பவும் மறக்க மாட்டேன் என்னோட புருஷன் இத்தனை வருஷமா குடிச்சு குடிச்சு குடிச்சு சேர்த்து வைத்த கடன் எல்லாம் உங்களோட உதவி இல்லாம என்னால அடைச்சிருக்க முடியாது.
போன வருஷம் இறந்து போனதிலிருந்து எனக்கு ஒரே மனதில் பெரும் தாக்கம் அவர் குடிச்சு குடிச்சு என்னோட நகைகளை அளித்தது மட்டுமல்லாமல் எல்லோரிடமும் சுற்றி சுற்றி கடனும் வாங்கி வச்சிருக்கேர் இந்த நாலு மாசமா எனக்கு சரியான நெருக்கடி நான் ஒருத்தன் கிட்ட வட்டிக்கு பணம் வேண்டி கடன்காரனது கடனை எல்லாம் அழிச்சிட்டேன் ஆனா வட்டிக்கு வாங்கி கடனை என்னால கட்ட முடியல.
அதனாலதான் நான் உங்ககிட்ட பத்து லட்சம் கடன் வாங்கினேன். அதை ஒரு வருஷத்துல திரும்பி தரேன் என்று சொன்னேன் ஆனால் என்னால தர முடியல சொன்னத காப்பாத்த முடியல
என்ன மன்னிச்சிடுங்க எனக்கு இந்த கடன் தொல்லையால் உயிர் வாழ பிடிக்கல நான் நிம்மதியா இஇருக்கணும் ஆனா நிம்மதி என்பது இந்த கடவுள் கிட்ட மட்டும் தான் இருக்கு போல நான் போயிட்டு வரேன் எல்லாத்துக்கும் நன்றி இப்படிக்கு சரோஜா..” என்று அதில் அழகாக எழுதியிருந்தது.
துருவனுக்கு வந்த கோபத்தில் பற்களை கடித்துக் கொண்டு,
“பிளடி ராஸ்கல்.._ என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.
பின்னிருந்த வேந்தன்,
“சார் இதெல்லாம் என்ன சார் அபாண்டமா உங்க மேல பழி போட்டு இருக்காங்க கடன் தொல்லையால தான் செத்து போனாங்களாம் நீங்க பாவம் என்று கடன் கொடுத்தது தப்பா போச்சே..!”
“வேந்தன் செட் அப்.. கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணு சரோஜா அம்மாக்கு எழுத படிக்க தெரியுமா..?” என்று அடிக்குரலில் கர்சிக்க,
“அச்சச்சோ அட ஆமா சார் அத மறந்துட்டேனே..”
“அவங்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாது அப்போ அப்படி இந்த கடிதத் எழுதினாங்க..”
“தெரியலையே யாரோ உங்கள திட்டம் போட்டு மாட்ட வச்சிருக்காங்க..” என்று வேந்தன் கூற,
“சரோஜா அம்மாக்கு அவங்களோட கையெழுத்து மட்டும்தான் போடத் தெரியும் அதுவும் பிழையா தான் போடுவாங்க அவங்க கையெழுத்துக்கு சரோஜா என்ற சரேஜா என்று தான் போடுவாங்க எத்தனை தடவை சம்பள புக்ல நீங்க அவங்களோட கையெழுத்தை சொல்லி கிண்டல் அடிச்சு இருக்கீங்க
அப்படிப்பட்டவங்க இவ்வளவு அழகா கடிதம் எழுதி இருக்காங்கன்னா இட் இஸ் செட் அப் மேடர்..”
“ஆமாங்க சார் இது பக்காவா யாரோ பிளான் பண்ணி செய்றாங்க..”
“என்னோட செக்ரட்டரியா நீ செய்த ஒரே ஒரு நல்ல விஷயம் எது தெரியுமா? சரோஜா அம்மா தான் நான் குடிக்கிற தண்ணில விஷம் கலந்தது என்று கண்டுபிடித்தது தான். சரோஜா அம்மா எப்படி செத்தாங்கன்னு நான் கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன் நாங்க கொலைகாரனை நெருங்கிட்டோம்னு நினைக்கிறேன்..” என்று கூற,
“எப்படி சார் சொல்றீங்க..”
“அவனுக்குத் தெரியும் சரோஜா அம்மாவ வச்சு விஷத்தை கலக்க வெச்சா எப்படியும் நாங்க கண்டுபிடிச்சிடுவோம்முன்னு தெரிஞ்சே தான் சரோஜா அம்மாவையும் கொண்டிருக்கான் அவனுக்கு பயம் வந்துட்டு சரோஜா அம்மா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிடுவாங்கன்னு அந்தப் பயம் தான் அவனுக்கு முதல் எதிரி..” என்று கூற,
“சூப்பர் பாஸ் சும்மா அசத்துடீங்க போங்க..” என்று வேந்தன் கூற,
அவனைப் பார்த்து சிறு புன்னகையுடன் தலையசைத்தபடி காரை விட்டு வெளியே வந்து அந்த போலீசிடம்,
“இந்த லெட்டர் என்கிட்டயே இருக்கட்டும் நீங்க போஸ்ட்மார்ட்டத்திற்கு ரெடி பண்ணுங்க..”
“ஓகே சார் அந்த ப்ரோமோஷன்..” என்று தலையைச் சொரிய,
“நான் கமிஷனர் கிட்ட பேசுறேன் உங்களோட பெயர்..?”
“ரவிச்சந்திரன் சார்..” என்று தனது நெஞ்சில் பெயர் பொறித்திருப்பதை காட்டி ஆர்வமாகக் கூறினான்.
“ஓகே ரவிச்சந்திரன் கூடிய சீக்கிரம் புரமோஷன் கிடைக்கும் நீங்க போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தவுடன் எனக்கு ரிப்போர்ட்ட போட்டோ எடுத்து அனுப்புங்க..”
“ஓகே சார்..”
“அடுத்த இவங்க என்னோட ஆபீஸ்ல தான் வேலை செஞ்சாங்க என்ற விசயம் வெளியே தெரிய வேணாம் இந்த மீடியாக்காரர்கள் அதையே பெரிய நியூஸ் ஆக்கிருவாங்க..”
“இல்ல சார் நான் எல்லாத்தையும் சீக்கிரட்டாவே மெயின்டன் பண்றேன்..”
“குட்..” என்று விட்டு அவன் தலைவலி தாங்க முடியாமல் வீட்டிற்கு கிளம்புவோம் என்று காரை எடுத்தான்.
காலைப் பொழுதிலிருந்து மாறி மாறி எல்லாமே கெட்டதாகவே நடந்து கொண்டிருக்கின்றது.
காரை ஓட்டிக்கொண்டு போகும் போதுதான் காலையில் கமிஷனர் ஆபீசில் இருந்து கால் வந்தது ஞாபகத்துக்கு வந்தது. நேராக கமிஷனர் ஆபீசுக்கு சென்றான்.
கமிஷனர் அற்புத வள்ளியை கடத்தியவனை பிடித்து வைத்திருந்தார்.
கட்டிப்போட்டு அவனுக்கு அடித்த அடியில் உடல் எங்கும் இரத்த வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.
துருவனை பார்த்ததும்
“சார் சார் ப்ளீஸ் சார் என்னை காப்பாத்துங்க சார் நான் எதுவும் செய்யல சார்..” என்று அழுது துடித்தான்.
துருவன் வந்த வேகத்தில் கன்னத்தில் புயல் வேகத்தில் மாறி மாறி அடித்தான். அவனுக்கு கண நேரத்தில் மின்னல் வெட்டியது போல இருந்தது.
கன்னங்கள் இரண்டும் தகிக்கத் தொடங்கின. யாரோ நெருப்பை அள்ளி கொட்டியது போல இருந்தது. இவ்வளவு பேர் இரத்தம் வரும் அளவிற்கு இத்தனை அடி அடித்தும் தாங்கிக் கொண்டவன், துருவனின் அதிரடி தாக்குதலை ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் ஐயோ என அலறினான்.
அவனது இந்த திடீர் நடவடிக்கை எதிர்பார்க்காத கமிஷனரே மிரண்டு போய்விட்டார்.
உடனே துருவனை இரு போலீசார் வந்து பிடித்து தடுத்து நிறுத்தினார்கள்.
“துருவன் காம் டவுன் வாட் இஸ் திஸ்..” என்று கமிஷனர் கூறியதும் கண்களை ஒரு நிமிடம் இருக மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாயைக் குவித்து ஊதி, நிதானத்திற்கு வந்தான்.
“நீ உயிரோடு இருக்கனும்ன்னா அது என்னால் மட்டும் தான் முடியும் உன்னோட உயிர் இப்போ என்னோட கையில
எங்க வந்து யார் மேல கை வைக்கிற என்னோட வைப்ஃ மேல கைவைத்த உன்னோட ரெண்டு கையையும் வெட்டி முடமா தான் திரிய விடுவேன்
மரியாதையா யார் சொல்லி நீ அற்புதத்தை கடத்தினேன்னு சொல்லிடு இல்லன்னா உன்னோட சாவு இன்னும் சில மணி நேரங்களில் உறுதியாக நடக்கும் சொந்தக்காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிட சொல்லிடுவேன் ஜாக்கிரதை..” என்று வேட்டையாடும் வேங்கை போல உறுமினான்.
துருவனைப் பார்த்ததும் விளங்கி விட்டது அந்த கடத்தல்காரனான ஜோசப்புக்கு, இங்கு இருப்பவர்கள் எவராலும் துருவனை அடக்க முடியாது என்று, அவன் கூறுவது தான் இங்கு நடக்கும் என்று வந்த உடனே அவன் செய்கையிலேயே காட்டி விட்டான்.
அவனது பேச்சைக் கேட்டு மிரண்டு போன ஜோசப்,
“ஐயோ வேணாம் ஐயா நான் நடந்த எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லிறேன். என்ன விட்டுருங்க எனக்கு என்னோட உயிர் தான் முக்கியம்..” என்று அலறினான்.
ஜோசப் அற்புத வள்ளியை கடத்த சொன்னவர்களை காட்டிக் கொடுப்பானா..?
தன்னுடைய தண்ணீரில் விஷம் கலந்தவர்கள் தான் அற்புத வள்ளியை கடத்தினார்களா? அல்லது சரோஜா அம்மாவின் சாவிற்கு காரணமானவர்கள் யார்..? இந்த குழப்பத்திற்கெல்லாம் ஜோசப் சொல்ல போகும் பதிலில் தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது