அரண் 24
ஜோசப்பிடமிருந்து பதிலை எதிர்பார்த்த வண்ணம் அனைவரும் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க,
அவன் குரலை சேருமிக் கொண்டு, “நான் சொல்றது எல்லாமே உண்மைதான் நீங்க இனிமே எவ்வளவு அடிச்சாலும் என்னால இந்த வலியைத் தாங்க முடியாது இனிமேல் அடிக்கிறதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க..”
விஷயத்தை நேரடியாக சொல்லாமல் ஜோசப் உளறிக் கொண்டிருக்க துருவனுக்கு பொறுமை காற்றில் பறந்து போனது.
“வாயைத் திறந்து முதலில் நடந்த விஷயங்களை ஒன்னையும் மறைக்காம அப்படியே சொல்லு அப்புறம் உன்னை கொல்றதா உயிரோட விடுறதான்னு பார்த்துக்கலாம்..” என்று அவனது சட்டைக் காலரை பிடித்து இழுத்து துருவன் மிரட்ட,
“கைய எடுங்க சார் சொல்றேன்…” என்று ஜோசப் ஒரு இயலாமையுடன் கூற, அவனது சட்டையிலிருந்து கையை எடுத்துவிட்டு அவன் கூறுவதை அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“நாங்க ஒரு கேங் எப்பவுமே நாங்க ஒருத்தரை ஒருத்தர் நேரில் சந்திக்கிறதில்ல பொது இடங்களில் பக்கத்தில் நின்றாலும் தெரியாத மாதிரி தான் நடந்துப்போம் எனக்கு ஒருத்தன் மூலமாக தான் யாரை கடத்தோணும் அவங்க எங்க இருக்காங்க எந்த டைம்ல அவங்க எங்க நிப்பாங்க என்று சொல்லி எல்லா டீடெயில்ஸ் வரும் அத வச்சு நாங்க சொன்ன நேரத்துல அந்த இடத்துல போய் அவங்கள கச்சிதமா கடத்திடுவோம்..”
“யார் அந்த ஆள்? உங்க கேங்ல யார் யார் இருக்காங்க..?” என்று கமிஷனர் கேட்டார்.
“எல்லோரையும் எங்களுக்கு தெரியாது நாங்க ரொம்ப சீக்ரெட்டா வேலைய முடிக்கணும் என்பதற்காக ஒருத்தர ஒருத்தர் நாங்க நேர்ல எப்பவுமே சந்திக்கிறது இல்ல எங்களுக்கு வேலை வந்தா மட்டும் தான் ஒருத்தரோட மட்டும் தான் நாங்க தொடர்பு கொள்ளுவோம் அப்படி என்னோட தொடர்பு கொண்ட ஒரே ஒரு ஆளு விராட்..”
“என்னடா விராட், டோனி, சச்சின்னு என்ன கதை சொல்லிக்கிட்டு இருக்க..?” என்று துருவன் அவனை அடிப்பதற்கு நெருங்க போலீசார் மீண்டும் துருவனை பிடித்து இழுத்தனர்.
“நான் சொல்றது உண்மைதான் சார் நம்புங்க இது ஒரு இருட்டு உலகம் இங்க யாருமே உண்மையான பெயரை தங்களுக்கு வைத்துக்கொண்டு திரிகிறதில்லை அதனால எங்களுக்குள்ளே நாங்க எங்களுக்கு பிடிச்ச ஒவ்வொரு பேரையும் வைத்துக் கொள்வோம்..”
“அப்போ உன்னோட உண்மையான பெயர் என்ன..?” என்று துருவன் புருவம் உயர்த்தி கேட்க,
“இவ்வளவு அடிச்சும் என்னோட உண்மையான பெயரை நான் சொல்லாம இருப்பேனா சார் என்னோட உண்மையான பேரு ஜோசப் தான்..”
“ஓகே அப்போ இருட்டு உலகத்துல உன்னோட பெயர்..”
“அது அது வந்து அது… சொன்னா சிரிக்க மாட்டீங்களே ..!”
“இல்ல சொல்லு இப்போ நாங்க சிரிக்கிற நிலைமையில தான் இருக்கோம்..”
“பில்லேடன்..”
“அவரு யாருன்னு உனக்கு தெரியுமாடா..? உன் மூஞ்சிக்கு இதெல்லாம் ஓவர் தான்.. அத விடு முதல்ல நீ விஷயத்துக்கு வா..” என்று துருவன் கூறவும்,
“என்ன சார் இப்படி பேசுறீங்க எங்களுக்கும் கொஞ்சம் உலக அறிவு இருக்கு அத வச்சு தான் பெயரை வச்சேன் ஆஹ் எதுல விட்டேன் ம்ம்ம்… எப்பவுமே நாங்க நேர்ல சந்திக்கிறேன்னா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சர்ச்சில தான் அவன சந்திப்பேன் பிரேயர் நடந்துகிட்டு இருக்கும் லாஸ் பெஞ்சில ஒரு மூலையில நான் போய் யாரும் இல்லாத இடத்தில் இருப்பேன் அப்போ அவன் எனக்கு பக்கத்துல வந்து இருப்பான்
ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக்க மாட்டோம். பிரே பண்றது போல அவன் முக்கியமான விஷயங்கள் எல்லாம் மெதுவாக கூறுவான் அப்புறம் போட்டோவ சென்ட் பண்ணுவான் பிரேயருக்குள்ளேயே நாம சில விஷயங்களை பேசி கொள்ளுவோம் அவன் ஃபுல் டீடைல்ஸை சொல்லிட்டு கிளம்பி போயிடுவான்
நான் அந்த டீடைல்ஸ் வச்சு ஆட்களைக் கடத்திட்டு உடனே அவனுக்கு மெசேஜ் பாஸ் பண்ணுவேன்
அவன் வந்து அந்த ஆள உடனே பேசின காசு கொடுத்துட்டு தூக்கிட்டு போயிடுவான்..” என்று என் ஜோசப் தனது விளக்கமாக தனது தொழில் பற்றிய ரகசியங்களைக் கூற,
துருவனுக்கு ஏதோ எங்கோ இடிப்பது போல இருந்தது. நன்றாக யோசித்துப் பார்த்தவன்,
“அப்போ ஏன் என்கிட்ட காசு கேட்டு மிரட்டினீங்க அவன் உனக்கு காசு தரேன்னா என்னத்துக்கு என்கிட்ட காசு கேட்ட..? என்னடா பொய்யா சொல்ற..?” என்று துருவன் பாய்ந்து அவனது மூக்கில் குத்தினான். துருவனது வலிமையான கரம் அவனது மூக்கின் சிற்றளம்பை பதம் பார்க்க அதிலிருந்து உறுதியானது வேகமாக வெளியேறியது.
வேதனை தாங்க முடியாமல் ஐயோ என்ன கத்தியவன்,
“ப்ளீஸ் சார் என்னால தாங்க முடியல அடிக்காதீங்க நான் உண்மைய தான் சொல்றேன் நான் பண்ணின பெரிய தப்பு காசு மேல ஆசைப்பட்டது தான். வளமையாக விராட் கொடுக்கிற காசை வேண்டிக்கிட்டு நான் உங்க வைஃபை ஒப்படைச்சி இருக்கணும் உங்க வைஃப் போட்டு இருக்கும் நகை மேல ஆசைப்பட்டு அவங்க பெரிய பணக்காரரா இருப்பாங்கன்னு நினைச்ச நான் ஒரே ரெண்டு லட்சத்துக்கும் மூன்று லட்சத்துக்கும் கஷ்டப்பட்டு கடத்துறத விட்டுட்டு கோடிக்கணக்குல ஒரே நேரத்துல சம்பாதிச்சுட்டு அந்த காசை எடுத்துட்டு வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆயிடலாம் என்று ஒரு ஆட்டுக்கு தெரியாம திட்டம் போட்டோம் அதனாலதான் உங்ககிட்ட அப்படி மிரட்டினேன் நான் செஞ்ச ஒரு தப்பால தானே இப்ப இங்க வந்து இருக்கேன்…” என்று மனம் வருந்தி அழுதான் ஜோசப்.
“அற்புத வள்ளிய கடத்தின பிறகு பிராட் உன்ன தேடி வரலையா..?”
“உங்க வைப் தப்பிச்சு ஓடின பத்து நிமிஷத்துல விராட் கால் எடுத்தான் என்ன விஷயம் முடிஞ்சா என்று கேட்டான் நான் காலையில வந்து பொண்ண கொண்டு போன்னு சொன்னேன்
எப்படியும் உங்க வைஃப்பை கண்டு புடிச்சு விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் அப்படி சொன்னேன் ஆனா பிடிக்க முடியல அடுத்த நாள் காலையில உங்க வைஃபை கடத்தின அதே இடத்தில விராட்டும் செத்துக்கிடந்தான்
அப்போ எனக்கு உண்மையிலேயே நம்ப முடியல நான் ஏதோ பெரிய ஒரு பிரச்சனையில மாட்டிக்கிட்டேன் என்று மட்டும் தான் எனக்கு தோணுச்சு இன்ஃபர்மேஷன் கொடுத்த அவனையே தூக்கிட்டாங்கன்னா அந்த வேலை ஒழுங்கா செய்யாதே எனக்கு என்ன நிலமை என்று நான் யோசிச்சேன்.
இவ்வளவு பவரோட இருக்கிறவங்க ஏன் அவங்களே நேரடியா செய்யாம என்ன வச்சு செஞ்சாங்கன்னு எனக்கு இதுவரைக்கும் யோசிச்சு யோசிச்சு முடியல சார்..” என்று துருவனைப் பார்த்து ஜோசப் கேட்க,
“நீ சொல்றத நான் நம்பனும் விராட் செத்துட்டான்..”
“ஆமாங்க சார் உண்மையிலேயே அவன் செத்துட்டான் நான் பாடிய பார்த்ததும் பயத்துல ஓடி ஒளிஞ்சிட்டேன் போலீஸ் வந்து இன்வெஸ்டிகேஷன் செய்து அந்த பாடிய அவங்களோட பேமிலிக்கு கொடுத்துட்டாங்க
அப்போதான் எனக்கு தெரியும் விராட்டுக்கு பெரிய ஃபேமிலியே இருக்குன்னு அவன் இங்க பக்கத்துல சென்னையில தான் இருக்கான்
நான் அதுக்கு அப்புறம் தெரியாதவங்க போல அவனோட இறுதிச் சடங்குக்கு போயிட்டு அப்படியே வந்துட்டேன் என்ன இருந்தாலும் இவ்வளவு காலமும் என்னோட பழகினவன்ல என்னோட நண்பன் மாதிரி சார்..” என்று கவலையுடன் கூறினான் ஜோசப்.
“பெரிய மகாத்மா காந்தி செத்துட்டாரு அதுக்கு இவரு கவலைப்படுகிறார் செய்யறது எல்லாம் பித்தலாட்டம், ஆள் கடத்தல், முள்ளமாரித்தனம் இதுல பெரிய நியாயம், தர்மம், விசுவாசம், எல்லாம் வந்து தொலையுது..” என்று கூறிவிட்டு, கமிஷனரை கண்களால் வெளியே அழைத்தான்.
அவனது குறிப்புரைக்கும் செய்கையை உணர்ந்து கமிஷனர் வெளியே வந்ததும்,
“கமிஷனர் சார் இவன எங்கேயும் விட்டுறாதீங்க இவன் கிட்ட எவ்வளவு டீடைல்ஸ் எடுக்க இயலுமோ அவ்வளவு டீடெயில்ஸையும் கலெக்ட் பண்ணுங்க முக்கியமான விஷயம் எதுவும் சொன்னால் எனக்கு உடனே இன்பார்ம் பண்ணுங்க..”
“ஆனா துருவன் இவன் சொன்னதெல்லாம்..”
“சொன்னதெல்லாம் உண்மைதான் அவன் என்கிட்ட பொய் சொல்லல..”
இவன் கிட்ட இருந்தாவது உங்கள மறைமுகமா குறி வைக்கிறது யாருன்னு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தால் அவனுக்கே ஒன்னும் தெரியாம இருக்குது
துருவன் எப்படி இந்த கேஸ ஹாண்டில் பண்றதுன்னு தெரியல ஏதாவது ஒரு விஷயம் கூட கிடைக்குமான்னு தேடுறேன் கிடைக்குதே இல்லை ஒரே தலைவலியா இருக்கு..”
“என்ன கமிஷனர் சார் நீங்களே இப்படி சொன்னா யாருன்னு கூடிய சீக்கிரம் தெரிய வரும் எப்படியும் என்கிட்ட அவன் எந்த வழியில் ஆவது மாட்டுவான் அப்போ அவனுக்கு பெரிய சம்பவம் காத்திருக்கு
ஆனா அவனோட விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்கிட்ட நேருக்கு நேரா மோத தைரியம் இல்லாதவன் ஒளிஞ்சிருந்து என்னை தாக்க பார்க்கிறான்
நல்ல விஷயம் தான் பார்ப்போம் எவ்வளவு காலத்துக்கு ஓடி ஒளியுறான்னு எப்போதாவது எதிலாவது சீக்கிரமா சிக்குவான் தானே அப்போ பார்த்துக்கிறேன் அப்போ இந்த துருவன் யாருன்னு அவக்குக் காட்றேன்..” என்று கூறிக்கொண்டே நேரத்தை பார்க்க நேரம் ஒன்பதைத் தாண்டி இருந்தது.
“ஓகே சார் நான் கிளம்புறேன் எனக்கு டைம் ஆயிட்டு மார்னிங் இருந்து இன்னும் வீட்ட போகல சீக்கிரமா போகணும் அதோட இந்த விஷயம் அப்பாக்கு தெரிய வேணாம் வெளில நியூஸ் லீக் ஆகிடாம பார்த்துக்கொள்ளுங்கள் என்ன அந்த சூசைட் மேட்டரை வெரி கேர்ஃபுல்லாக கேண்டில் பண்ணுங்க நான் வாரன் கமிஷனர் சார்..” என்று கமிஷனரிடமிருந்து விடை பெற்று காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்.
இன்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் மீட்டிப் பார்த்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டு செல்ல காலையில் அற்புதவள்ளியிடம் தான் பேசிய வார்த்தைகளையும், நடந்து கொண்ட முறையையும் எண்ணி மிகவும் மனம் வருந்தினான்.
‘காலையிலேயே அவளை ரொம்ப திட்டிட்டேன் பாவம் அற்புதம் அவ படிக்காதவன் என்று தெரிந்து தானே அவளை திருமணம் செய்து கொண்டேன் இருந்தும் அவளது பலவீனத்தை நான் குத்தி காட்டி பேசியிருக்கக் கூடாது
அவளுக்கு படிக்க ரொம்ப விருப்பம் அதை தானே என்னிடம் அவள் வேண்டுகோளாக கேட்டுக் கொண்டது. அப்படி இருந்தும் நான் அவளுக்கு இப்படி பேசி இருக்க கூடாது..’ என்று தன்னுடைய மடத்தனத்தை எண்ணி கவலை கொண்டவன்,
“நாம கோபத்துல பேசிட்டேன் ஆனா அதை மறந்துட்டு வேலையில மூழ்கி போய்விட்டேன் ஆனால் அவள் வீட்டில் இருந்து இதைத்தானே நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள்..” என்று மனதுக்குள் நினைத்து மருகியவன் எப்படியாவது அற்புத வள்ளியை சமாதானப்படுத்த வேண்டும் என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடி வீட்டில் நோக்கி கரை செலுத்தினான்