அடுத்த நாள் காலை வாசுதேவன் சொன்ன இடத்திற்கு சென்றாள் மைவிழி. புதிய படத்தின் பூஜையோடு போட்டோ ஷூட் இருப்பதாகவும் கூற, அதற்கு ஏற்றாற் போல அழகான கற்கள் கொண்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த லெஹங்கா ஒன்றினை எடுத்து அணிந்தவள் தன்னுடைய நீளமான கூந்தலை விரித்து விட்டாள்.
காதுகளிலே அழகான குடை ஜிமிக்கியும் சங்குக் கழுத்தில் மெல்லிய செயினும் கண்களில் அஞ்சனமும் சிவந்த இதழ்களுக்கு உதட்டுச் சாயமும் பூசி பேரழகியாக பூஜை நடக்கும் இடத்திற்கு வந்தவளைக் கண்டு அனைவரும் வாயடைத்துப் போயினர்.
“ப்பாஆஆ என்ன அழகுடா…” என வியக்கும் வகையில் இருந்தது அவளுடைய பேரழகு.
நடமாடும் மயில் போல ஒயிலாக நடந்து வந்து நின்றவளின் நளினம் அங்கிருந்த அத்தனை ஆண்களையும் தடுமாறச் செய்தது.
பெண்களோ பொறாமையில் வெந்து போயினர்.
இது எதுவும் அறியாத மைவிழியோ சாந்தமான முகத்துடன் பட பூஜையில் கலந்து கொண்டாள்.
பூஜை முடிந்ததும் போட்டோ ஷூட் ஆரம்பமாகியது. படத்தின் போஸ்டருக்காக நடிகன் தீனாவையும் மைவிழியையும் அணைத்தாற் போல போஸ் கொடுக்கச் சொல்ல முதலில் தயங்கிய மைவிழியோ பின் அதற்கு ஒப்புக் கொண்டாள்.
தீனாவின் பார்வையோ அவளை அடிக்கடி மையமிட்டவாறே இருந்தது.
தீனா அவளைப் பின்னால் இருந்து அணைக்க, அவளோ இரு கைகளையும் இதய வடிவில் பிடிப்பதைப் போல இருந்தது அந்த போஸ்.
நாயகனும் நாயகியும் அழகாக போஸ் கொடுக்க, அவர்களை மிக தெளிவாக கிளிக்கிக் கொண்டது கேமரா.
காதலர் தினத்தை முன்னிட்டு எடுக்க இருந்த அந்த திரைப்படத்தின் போஸ்டர் அன்றைய தினமே மீடியாவில் வெளியாகியது.
**********
தன்னை தாங்கிய மைவிழி தன்னோடு இல்லை என்பதை உணரத் தொடங்கினான் ருத்ரதீரன்.
அவன் எழுந்ததிலிருந்து தூங்கும் வரை தன் அருகே துணையாக இருந்தவள் தற்போது இல்லையென்ற போது ஏதோவொன்றை இழந்தது போல கலங்கி நின்றான் அவன்.
உண்பதற்காக அமர்ந்தாலும் அவளது ஞாபகம், காரில் ஏறினாலும் அவளது ஞாபகம் என அவன் செய்த அனைத்திலும் வந்து நின்றாள் மைவிழி.
தனிமையில் கலங்கியவன் படுக்கையில் இருந்து கொண்டு சிந்தித்துக் கொண்டு இருக்கையில் அவனது ஃபோனில் ஏதோ தகவல் வந்த சத்தம் கேட்டது.
தன் ஃபோனை எடுத்து பார்த்த போது புதுப்படம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது என செய்தி வர அதை திறந்து பார்த்தான் ருத்ரதீரன்.
ஆம் அங்கே வந்த செய்தி மைவிழியின் புதிய படம் தொடர்பாக வெளியான புகைப்படங்கள் தான்.
தீனாவோ நெருக்கமாக மைவிழியை அணைத்துக் கொள்ள சிரித்தவாறு மைவிழி நிற்க, அதனைப் பார்த்த தீரனின் நிலையோ மாறியது.
தன் ஸ்பரிசம் படுகையில் துள்ளி குதித்த மாது இன்னொரு ஆண்மகனின் கைகளுக்குள் பாந்தமாக அடங்கி இருப்பதை பார்த்து கோபமடைந்த தீரனோ,
“ஷிட்…, இவளுக்கு என்னாச்சு, இனி நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ படம் நடிக்க வந்திருக்காளே…, அதுவும் தீனா கூட…” என தன் அருகில் இருந்த சுவரில் கையை அடித்து எழுந்தவனோ டென்ஷனாகி பேசிக் கொண்டே அங்குமிங்குமாக நடக்க தொடங்கினான்.
“நான் வேணாம்னு சொன்னா வீட்டுக்கு போக வேண்டியது தானே அதை விட்டுட்டு இவளுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை,
தீனா சும்மாவே லேடீஸ் விஷயத்துல வீக் அம்முக்கோ ஒன்னும் தெரியாது” என அவளைப் பற்றி புலம்பியபடி இருந்தவன் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஃபோன் செய்து கேட்டான்.
“ஹலோ ஆம் தீரன்” என அவனது குரல் ஒலிக்க,
“எஸ் தீரன் சொல்லுங்க…” என அவர் கூறினார்.
“சார் உங்களோட நியூ பிலிம் எதை பேஸ் பண்ணி எடுக்கறீங்க” எனக் கேட்டான் அவன்.
“லவ்தான் தீரன். நாளைக்கு தான் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றேன் தீரன் அதுல நம்ம தீனாவும் மைவிழியும் தான் ஆக்ட் பண்ணப் போறாங்க” என்று கூற,
“எஸ் நானும் அந்த போஸ்டர் பார்த்தேன் பட் அதைப் பார்த்தா லவ் ஸ்டோரி மாதிரி தெரிஞ்சுது அதான் கேட்கலாம்னு எடுத்தேன்”
“எஸ் சார் இது டோட்டலி ஃபுல் அன்ட் ஃபுல் லவ் ஸடோரி தான், நம்ம தீனாவுக்கு நார்மலாவே லேடீஸ் ஃபேன்ஸ் அதிகம் அன்ட் மைவிழியும் இப்போ ட்ரன்டிங்கான ஹூரோயின் சோ அவங்க ரெண்டு பேரையும் வைச்சு இப்படி ஒரு படத்தை எடுத்தா நல்லா ரீச் ஆக முடியும் அன்ட் அவங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரியும் ஓகேயாகிருச்சு நீங்க கூட பார்த்திருப்பீங்களே போஸ்டருக்கு நல்ல வரவேற்பு” என அந்த டைரக்டர் கூறினார்.
அவர்களது ஜோடி சூப்பராக இருக்கின்றது என அவர் கூறுகையி்ல் அதைக்கேட்ட தீரனின் விழிகளோ கோபத்தில் சிவந்தது.
அவர் மட்டும் அருகில் இருந்தால் அப்படிக் கூறிய வாய் இரத்த வெள்ளத்தில் மிதந்திருக்கும் அவ்வளவு கோபத்தையும் அடக்கிய ருத்ரதீரன்,
“எஸ் சூப்பரா இருக்கு…, அப்புறம் நாளைக்கு எங்கே ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றீங்க” என எதையும் வெளிக்காட்டாமல் கேட்டான் தீரன்.
“நம்ம ஜீர் ஸ்டூடியோவில தான் முதலாவது ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றேன் தீரா வேணும்னா நீயும் வாவேன்” என அவர் அழைப்பு விடுக்க,
“ஷூர் நான் இல்லாம நம்ம மைவிழியோட படம் இருக்குமா கட்டாயமா வர்றேன்” எனக் கூறி ஃபோனை வைத்தவன்,
“அம்மு நாளைக்கு புரியும் நான் யார்ன்னு” என அதீதக் கோபத்தில் இருந்தான் ருத்ரதீரன்.
ஆனால் அவனது கோபம் அவளை என்னதான் செய்ய முடியும் தற்போது அவள் ஒன்றும் கிராமத்திலிருந்து வந்த ஒன்றும் தெரியாத மைவிழி இல்லையே, எனவே இருவரின் நிலைப் பற்றி நாளை புரியும்.
அவள் மீது கொண்ட கோபத்தில் தூக்கமின்றி இருந்த தீரன் பொழுது விடிவதை எதிர்பார்த்து இருந்தான். அவனுடைய மனமும் உடலும் அவளுக்காக ஏங்கத் தொடங்கியது.
கட்டி அணைத்து அவளுடைய வாசத்தை நுகர்ந்தவாறு தூங்கிப் பழக்கப்பட்டவனுக்கு அவள் இல்லாதது மிகவும் பாதித்தது.
அவள் தன் அருகே படுக்கும் இடத்தை தன் ஒற்றைக் கரத்தால் மெல்ல வருடினான் தீரன்.
அவளுடைய சிரித்த முகம் அவனுடைய கண்களில் வந்து நர்த்தனம் ஆடியது.
அவளுடைய தடித்துச் சிவந்த இதழ்களை கவ்விச் சுவைக்க அவனுடைய இதழ்கள் துடியாய் துடித்தன.
அவளுடைய வெண்ணிற சங்கு போன்ற கழுத்தில் முகம் புதைக்க அவனுடைய ஆசை மனம் அவா கொண்டது.
அவன் எஞ்ஞான்றும் விரும்பும் அவளுடைய தங்கப் புதையல் போன்ற இரு குவியல்களை தன் கரங்களால் அழுத்தி முகம் புதைத்து அவற்றில் அமுதம் பருக அவன் உள்ளம் தவியாய் தவித்தது.
எத்தனை நாட்கள் அவளுடைய மென்மையான வயிற்றில் முகம் புதைத்திருப்பான்.
எத்தனை நாட்கள் அவளுடைய நாபிச் சுழியில் இதழ் புதைத்திருப்பான்..
எத்தனை எத்தனை தடவை அவளுடைய இடையில் கிள்ளி விளையாண்டிருப்பான்..
எத்தனையோ தடவை அவளுடைய மர்மப் பேழையில் செத்துப் பிழைத்திருப்பான்..
அத்தனையையும் நினைத்துப் பார்த்தவனுக்கு அக் கணமே அவள் வேண்டும் போல இருந்தது.
தன்னை ஏங்க வைக்கும் இந்த இரவை வெறுத்தவன் மீண்டும் அந்த போஸ்டரைப் பார்த்தான்.
“ஹௌ டேர் யு மைவிழி.? இன்னொருத்தன்கிட்ட நீ எப்படி க்ளோஸ்ஸா இருக்கலாம்.? ஹொ டேர் யு டாமிட்..?” என்றவனின் குரல் அளவு கடந்த சீற்றத்தில் ஓங்கி ஒலித்தது.
“இந்த தீரனைப் பத்தி உனக்கு இன்னும் ஒழுங்கா புரியலை அம்மு. என்னை மீறி உன்னால எந்த படத்துலயும் எவன் கூடயும் நடிக்க முடியாது. நடிக்கவும் கூடாது.” என்றவன் அவளைப் பற்றி சிந்தித்த வண்ணமே உறக்கத்தை தழுவிக் கொண்டான்.