விடியல் வர முதலாவது நபராக ஜீர் ஸ்டூடியோவுக்கு வந்தான் ருத்ரதீரன்.
தீரன் வந்திருப்பதை பார்த்து அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. இவ்வாறு வேறு எந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் செல்லாத தீரன் எதற்காக இங்கே வந்திருக்கிறான் என அனைவரும் தங்களுக்குள் பேச தீனாவும் உள்ளே வந்தான்.
தீனாவோ தீரன் இருப்பதை பார்த்து அருகில் வந்து அமர்ந்து சாதரணமாக பேசிக் கொண்டிருக்கையில் மைவிழி உள்ளே வந்தாள்.
தீரனுக்கும் தீனாவுக்கும் இடையே என்னதான் விரிசல் இருந்தாலும் நேரில் பார்க்கும் போது ஹாய் பை போன்ற சிறு சிறு உனையாடலோடு இருவரும் முடித்துக் கொள்வர்.
இன்றோ ருத்ர தீரனிடம் சிறு புன்னகைக்கும் பஞ்சமாகிப் போனது.
“மேடம் வந்துட்டாங்க” என அங்கிருந்த ஒருவர் கூற மைவிழியை பார்த்து தீனா எழுந்து,
“ஹாய் டியர் ஹௌ ஆர் யூ” எனக் கேட்டவாறு மைவிழியை கட்டியணைக்க பின்னால் அமர்ந்திருந்தான் ருத்ரதீரன்.
அவனுடைய உடலோ எரிமலை போல தகிப்பில் வெடித்துக் கொண்டிருந்தது.
தீரன் அமர்ந்திருப்பதை பார்த்து அவளது விழிகள் விரிய அவனோ ஒரு புருவத்தினை மட்டும் உயர்த்தி பார்த்தப்படி அவளை நோக்கி தன் தீப் பார்வையை வீசினான்.
தீரன் தன்னை பார்த்து கோபப்படுகின்றான் என புரிந்துக் கொண்ட மைவிழி எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல வேண்டுமென தீனாவை அணைத்து, “ ஐ ஆம் குட் டியர்” என பதிலளித்தாள்.
அவள் நினைத்தது போல அவனின் விழிகள் இரண்டும் சிவக்க கையினை பொத்திப் பிடித்தவாறு தன் தொடையில் குத்திக் கொண்டான் ருத்ரதீரன்.
தீனாவை அடித்து கொன்று புதைத்தால் என்ன என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.
மைவிழியோ அங்கிருந்த தீரனை பார்த்தும் எதுவும் பேசாமல் அவளது கேரவனுக்குள் செல்ல, அடுத்த கணம் அங்கே அமர்ந்திருந்த தீரனும் எழுந்து அவள் பின்னால் உள்ளே சென்றான்.
தீரனோ கேரவன் உள்ளே வந்து கதவை மூட,
கதவு மூடும் சத்தத்தில் அதிர்ந்து பின்னால் திரும்பிப் பார்க்கையில் உள்ளே அவன் நிற்க, கொதித்துப் போனாள் மைவிழி.
“ஹலோ மிஸ்டர் யாரை கேட்டு நீங்க உள்ளே வந்தீங்க..?” எனக் கேட்டாள் அவள்.
“அம்மு உனக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு..?, எதுக்காக நீ இன்னொரு படம் நடிக்குற..?” எனக் கேட்க,
“நான் நடிக்குறதும் நடிக்காததும் என்னோட விருப்பம். என் விருப்பத்துல நீங்க எப்படி வருவீங்க..?”
“அம்மு நீ என்மேலே இருக்குற கோபத்துல பேசுற, பட் உனக்கு ஒன்னுமே தெரியலைடி. தீனா நீ நினைக்கிற மாதிரி இல்லை. நீ படத்துல நடிக்க வேணாம் ஊருக்கு போ.” என அவன் கூற,
“நீ என்னமோ நல்லவன் மாதிரி பேசுற, நீயும் என்னோட படு…. தானே வேலை வாங்கின, உன்னை விட மோசமானவனா தீனா இருக்க மாட்டான்.” என அவள் கூற அவளது கையினை அழுத்தமாக பிடித்த தீரன்,
“நீ இங்கே இருக்க வேணாம் உடனடியா ஊருக்கு போ” எனக் கட்டளை இட்டான்.
“ப்ச் கையை விடுடா…, என்னை தொட உனக்கு என்ன உரிமை இருக்கு.? வெட்கமா இல்லையா…, உன்னோட மூஞ்சில முழிக்கவே கேவலமா இருக்கு. முதல்ல இங்க இருந்து போ ப்ளீஸ் ” என அவனை நோக்கி திட்டத் தொடங்கினாள் மைவிழி.
அதுவரை நேரம் பொறுமையாக இருந்த தீரன் சட்டென பொங்கி எழுந்து மைவிழியின் கழுத்தைப் பிடித்தான்.
“நீ இன்னைக்கே இந்த ஷுட்டிங்கை விட்டுப் போகனும் அன்ட் டுடே ஈவினிங் என்னோட கார் வந்து நிற்கும் அதுல நீ வரனும் இது நடக்கலைன்னா கரெக்டா அஞ்சு மணிக்கு உன்னோட அப்பா இருக்க மாட்டான்.
குடிகார அப்பா ரோட்ல அடிப்பட்டு கிடப்பான் வீட்டில பாட்டி தூங்குற மாதிரி இருக்கும் ஆனா உயிர் இருக்காது” என கொடிய வார்த்தைகளை கொண்டு மிரட்ட,
“உன்னை சும்மா விட மாட்டேன் டா அப்படி ஏதும் நடந்துச்சுன்னா இப்பவே நான் போலிஸ்க்கு போவேன்” என சீற்றத்தின் உச்சத்தில் சீறினாள் மங்கை.
ஆனால் அவனோ சிரித்தவாறு, “எனக்காக போலிஸ்க்கு போக பல பேர் வருவாங்க பட் உனக்கு என்ன முடிவு அப்பாவும் இல்லை பாட்டியும் இல்லை, நீ எல்லாத்தையும் இழந்துட்டு இருப்ப, எனக்கு உங்க ஊர்ல வேலை பண்றதுக்காக நிறைய பேர் இருக்காங்க அம்மு” எனக் கூறினான் அவன்.
“தயவு செஞ்சு என்னை அம்மூன்னு சொல்லாத. உன்னோட வார்த்தையை நம்பி வர்றத்துக்கு நான் ஒன்னும் பழைய மைவிழி இல்லை, கெட் அவுட்…” என சத்தமிட,
சட்டென அவளுடைய சத்தமிட்ட இதழ்களைக் கவ்விக் கொண்டான். அவளோ அதிர்ந்து அவனை வெறுப்போடு தள்ளி விட்டாள்.
“ச்சீஈஈ….”
“ஹா ஹா பார்க்கலாம் அம்மு…” எனக் கூறிச் சென்றான் தீரன்.
அவன் வெளியே சென்றதும் உடைந்து போனாள் மைவிழி. பொங்கிய கண்ணீரை துடைத்து எறிந்தவள்,
‘இவன் சொல்ற மாதிரி பண்ண மாட்டான், பொய் சொல்லி என்னை ஏமாத்த பார்க்குறான்’ என நினைத்துக் கொண்டாள்.
தீரன் அங்கிருந்து சென்ற பத்தாவது நிமிடத்தில் புதிய நம்பரில் இருந்து சில போட்டோக்கள் அவளுக்கு வந்தன.
ஆம் அந்த போட்டோவில் கிராமத்தில் உள்ள அவளது வீட்டின் முன்னால் சிலர் அருவாள் கம்புகளுடன் நிற்பதைப் பார்த்தவள் பதறிப் போனாள்.
இரும்பிலான கூட்டில் அடைத்து பூட்டிடப்பட்ட சிறு பறவை போல தீரனின் செயலில் சிக்கி தவித்தாள் மைவிழி.
தன்னுடன் வர வேண்டும் இல்லாவிடின் தந்தையையும் பாட்டியையும் கொலை செய்வேன் என மிரட்டிய போது அவன் கூறுவது உண்மையில்லை என நினைத்து விட்ட மைவிழிக்கோ கிடைத்த போட்டோக்களைப் பார்த்ததும் உடல் அதிர்ச்சியில் உறைந்து போனது.
இதைப் பார்த்தவுடன் அவளது ஹிருதயமோ படபடக்க தீரனுக்கு ஃபோன் செய்தாள் மைவிழி.
அவள் எத்தனையோ முறை முயன்றும் அவளுடைய அழைப்பை அவன் ஏற்காது போக, உடல் நடுங்கிப் போனாள் மங்கை.
அடுத்த கணமே கேரவனை விட்டு வெளியே ஓடி வந்தவள் கேரக்டரிடம் மன்னிப்புக் கோரிவிட்டு இன்று என்னால் நடிக்க முடிமாதென்றவள் அவர் கூற வந்ததைக் கூடக் கேட்காது வெளியே வேகமாக ஓடி வந்தாள்.
அக் கணம் அவளின் முன்னே வந்து நின்றது தீரனின் கார்.
சற்றும் சிந்திக்காது அவனுடைய காரில் ஏறி அமந்ந்தாள் மைவிழி.
“பரவால்லையே அம்மு. நான்கூட நீ ஷூட்டிங்கை முடிச்சுட்டு ஈவ்னிங்தான் வருவேன்னு நினைச்சேன். பத்து நிமிஷத்துலையே பறந்து வந்துட்டியே.” என்றவாறு அவன் காரை ஸ்டார்ட் செய்ய, அவளோ அமைதியாக அழுது கொண்டே வந்தாள்.
இவனைப் போன்ற மிருகத்தையா நேசித்தோம் என்ற வேதனை வேறு அவளை ஆட்டுவித்தது.
“ஐ லைக் யு அம்மு.”
“ச்சீஈஈஈ ஐ ஹேட் யு.” என வெடித்தாள் அவள்.
“ஹா… ஹா…”
“உன்னை மாதிரி ஒரு கேவலமான பிறப்பை நான் பார்த்ததே இல்ல.”
“இஸ் இட்..? இப்போ பார்த்துக்கோ அம்மு.” என்றவனின் கன்னத்தில் பளாரென அறைந்தாள் அவள்.
அவனோ அவளுடைய செயலில் சீற்றத்தின் உச்சிக்கே சென்றவன், அவளுடைய கன்னத்தை இறுகப் பற்றிக் கொண்டான்.
“என்னை இதுவரைக்கும் யாரும் அடிச்சது இல்ல. இனியும் யாரும் அடிக்கப் போறதும் இல்ல.இப்போ அடிச்சது நீங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக உன்னை சும்மா விட்றேன். இல்லைன்னா நடக்குறதே வேற.” என அவன் கர்ஜிக்க, அவளோ மிரண்டு போனாள்.