யட்சனின் போக யட்சினி – 12

4.8
(6)

போகம் – 12

 

திங்களவன் தன் சுழலும் வேலையை செவ்வென தொடங்கி செங்கதிர்களை பூமியின் மேல் முழுமையாக வீச தொடங்கியிருக்க… இளம்பனியும் தன் தாக்கத்தை இன்னும் சிறிது நேரத்தில் குறைத்துவிடுவேன் என கூறும் அழகிய காலை வேலை…!

 

ருத்ரன் கொம்பனுடன் அடக்கும் விளையாட்டில் மும்முரமாக இருக்க…

தன் காரிகையின் கீச்சுக்குரல் கேட்டது போலவே இருக்கவும் மேலே விழி உயர்த்தி பார்த்தவனுக்கு,அவள் இல்லை என்றதும் காதல் பித்தால் ஏற்பட்ட தன் மனபித்து போல என்று நினைத்துக் கொண்டான்.

 

பின் கொம்பனை வழக்கம் போல அடக்கி ஜெய்த்துவிட்டு…

கொம்பனின் நெற்றியில் இவன் நெற்றியை புன்னகையுடன் முட்டியவன்,

“சபாஷ்டா கொம்பாஆஆ…”, என்று அவனின் மூக்கனாங்கயிற்றை பிடித்துக் கொண்டான்.

 

விஜயனோ விசிலடிக்க…

தாத்தாவும்,”எடே ராஜா இந்த ஜில்லாவுளயே ஏன் எங்கயுமே நம்ம கொம்பனை யாராலையும் அடக்க முடியறது இல்ல…!  

இவனும் உன்னை தவிர யாருக்கும் அடங்குறதாவும் இல்ல…!”, என்றவாரு தன் மீசையை திருகினார்.

 

ரகசியா மேலே இருந்து படிகளில் புயலென ஓடி வர…

பாட்டி அந்த நேரம் சரியாக பூஜை முடித்து வெளியே வந்தவர் ஆராதனை தட்டுடன் நின்றிருக்க…

பாட்டியையும் கண்டு கொள்ளாமல் இவள் இப்படி ஓடுவதைக் கண்டுவிட்டு அவரும் ரகசியா ஓடிய கொட்டகை பக்கம் நோக்கி சென்றார்.

 

ரகசியாவோ நேரே ஓடிச் சென்று ருத்ரனை இழுக்க சென்றவள்…

ப்ரேக் போட்ட கவர்மெண்ட் பஸ்ஸாக தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டாள்.

 

காரணம் நம் கொம்பன்தான்…! 

முதல் முறை நேராக மிக அருகில் ஒரு காளையை காண்கிறாள். அதுவும் இவ்வளவு பெரிய கூரான கொம்புகளுடன் ருத்ரனுடைய மார்ப்புக்கும் கொஞ்சம் கீழ்வரை அவனுக்கு இணையாக வளர்ந்து நிற்கவும் பயந்துவிட்டாள்.

 

விழிகள் படபடக்க ருத்ரனை மேலும் கீழும் நன்றாக உள்ளானா தன் மனாளன் எனப் பார்த்தவள், 

“ருத்துஉஉஉ… ருத்துஉ… 

உனக்குஉஉ…உனக்கு ஒன்னுமில்லையே…

 

இது உன்ன குத்த வந்துச்சு…

தாத்தா… தாத்தா… அவரை தூரமா வர சொல்லுங்க…

அடிப்பட்டுச்சா பார்க்கனும்…!” , என்று படபடப்பு சிறிதும் குறையாமல் தாத்தாவின் கையை பிடித்து உலுக்கோ உலுக்கென உலுக்கி எடுத்துவிட்டாள்.

 

ருத்ரனோ,”இது என்னடா கனவா நினைவா…?! 

இல்லை மறுபடியும் நான்தேன் மனசுல நினைச்சுகறேனா…?”,என்று அவள் கேட்பது எல்லாம் கனவுதான் போல என எண்ணியவன் அவளின் அழகில் சொக்கிப் போய் உச்சிமுதல் பாதம் வரை தன் விழிகளில் நிரப்ப தொடங்கி மெய் மறந்து நின்றான்.

 

ரகசியா உடனே திரும்பி விஜயனைப் பார்த்து,

“விஜி பாய்… நீங்களாச்சும் சொல்லுங்க… 

தூரமா வர சொல்லுங்க…. “, என்ற அவனிடமும் கதறினாள்.

 

தாத்தாவும் விஜயனும் வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்க…  பாட்டி ரகசியாவின் பின்னாலேயே வந்தவர் நடந்ததை புரிந்து கொண்டார். 

 

தன் பேத்தியின் பரிதவிப்பைக் காண முடியாமல்…

“அச்சோ தங்கம்மா… 

அவன் நம்ம கொம்பன்டா…நம்ம வீட்டுப் பையன்தான்…

ஒன்னு செய்யமாட்டான் யாரையும்…! நல்ல புள்ளை அவன்…!”, என்று ரகசியாவின் தாடையை பிடித்துக் செல்லம் கொஞ்சிக் கொண்டே கூறினார்.

 

“இல்லை பாட்டிஇஇஇ… நான் பார்த்தேன்… 

திஸ் பல்கி கொம்பு ருத்துவை முட்ட வந்து சண்டைப் போட்டுச்சு பாட்டிஇஇஇ…”, என்று இன்னும் பதபதைப்பு குறையாமல் ரகசியா தவித்தாள்.

 

ருத்ரனுக்குமே அவளின் அழகிய அன்பின் பரதவிப்பிலும்…

அறியாக் குழந்தையாக பேசவும் சிரிப்பு வந்துவிட்டது.

 

கள்ளச் சிரிப்புடன்,

“ஆமாடிஇஇ மினுக்கி இவன என்னனு கேளு வந்து… 

என்னை முட்டதான் வந்தான்… காப்பாத்து ப்ளீஸ்…

எனக்கு பயமா இருக்கு… 

நீ நல்லா கேளுடி பொண்டாட்டிஇஇஇ… “, என்று பயந்தவன் போல அவள் பக்கமாக ஒளிந்து கொண்டே கூறினான் .

 

தாத்தாவும் விஜயனும் இதற்கு மேலே அடக்க முடியாதடா என்று நினைத்து சத்தமாக சிரித்துவிட…

 

“ஹாஹாஹா… 

தங்கம்மா குழந்தைடா நீங்க… எடோய் வேலா கிண்டல் பண்ணாத என்ற பேத்தியை… ” , என்று தாத்தாவும் புன்னகைக்க…

 

“ஹாஹா என்ற தங்கச்சிஇஇஇ அப்பாவியா இருக்கு மச்சா..ன்… ஆனாலும் நீனு ரொம்ப பன்ற மச்..சா..ன்…” ,என்றவாறு விஜயனும் சத்தமாக சிரித்தேவிட்டான்.

 

பாட்டி விஜயனின் முதுகில் நன்றாக ஒரு மொத்து மொத்திவிட்டு… தாத்தாவின் தாடையில் இடித்து,

“இருந்தாலும் குசும்பு கூடிட்டு உங்க மூணு பேத்துக்கும்…!”, என்றவர்…

 

ருத்ரனைப் பார்த்து,”எய்யா ராஜா…

பாவம் தங்க புள்ள பயந்து போய் உமக்கு என்னவோ ஏதோனு ஓடி வந்தாங்க டே…!”, என்றவாறு ரகசியாவை அணைத்தவர்…

 

அவளிடம்,”தங்கம்மா …

அது சும்மாடா கண்ணு இவங்க ரெண்டு பேரும் காலைல இப்படித்தான் விளையாடிப்பாங்க… உடற்பயிற்சி மாதிரிதான் டா…

நம்மை எதுவும் செய்யமாட்டான்…

 

அவனும் எங்க பேரன் தங்கம்மா …

ருத்ரனுக்கும் விஜயனுக்கும் தம்பி…

பேரு கத்திக்கொம்பன்…!

 

இப்ப பாருங்க நான் அவனுக்கு ஆரத்தி காட்டுதேன்…

அமைதியா நிப்பான்…”, என்றுவிட்டு கொம்பனுக்கு தீபத்தில் ஆராதனைக் காட்டிவிட்டு தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து அவன் நெற்றியில் வைத்துவிட்டார்.

 

பின் ரகசியாவிடம் தட்டை நீட்டியர்…,

“பார்த்தீங்களா தங்கம்மா… வாங்க நீங்களும் வைங்க…

ஒன்னும் செய்யமாட்டான்…

 

டேய் கொம்பா அவங்க உன்ற அண்ணி… 

ஏதும் செய்யமாட்டதான…?! ஆமா சொல்லு அண்ணிகிட்ட…!”, என்று கொம்பனிடம் கேட்டார்.

 

கொம்பனும் தலையை ஆம் என்பது போல் ஆட்டி, ” ம்மாஆஆ” என்று கத்தினான்.

 

அண்ணி என கூப்பிட்டானாம் அவன் பாஷையில்…!

 

கொம்பன் தலையை ஆட்டி கத்தியதும் ரகசியாவிற்கு அவனை பிடித்துவிட…

 

இருந்தாலும் பயத்தில் ,”ஹாஆஆஆ நோஓஓ பாட்டிம்மாஆ… 

நான் இல்ல இப்போ இல்ல…எனக்கு பயம்லாம் இல்லை…

 

பட் டுமாரோ வைக்குறேன் ஹிஹி…

ஹாய் பல்கிகொம்பூ…”,என்று தாத்தாவின் பின்னால் ஒளிந்து கொண்டு பாட்டியிடம் கூறிவிட்டு தலையை எக்கி கொம்பனிடம் பேசினாள்.

 

பின் சந்தானம் பாட்டி எல்லோருக்கும் தீபம் காண்பித்து ஆரத்தி தந்தார்.

பக்தியுடன் அனைவரும் கும்பிட்டு விபூதியை எடுத்து கீற்றாக வைத்துக் கொண்டனர்.

 

“சரி நாங்க வயலுக்கு போயிட்டு வரோம் சந்தா…”,என்று புன்னகையுடன் மனைவியிடம் கூறியவர்…

“சரிடா தங்கம்மா… தாத்தா வரேன்…

ராஜா சொல்லிட்டு வாரும் வோய்…”, என்று தன் பேத்தி ரகசியாவின் தலையை வாஞ்சையாக தடவி கூறிவிட்டு முன்னே சென்றார் தாத்தா.

 

“பை பாட்டி…வரேன்டா தங்கச்சி…!”, என்றவாறு விஜயனும் நடக்க தொடங்கினான் அவருடன்.

 

பாட்டி ருத்ரனைப் பார்த்துவிட்டு,

“பாத்து சூதானமா போயிட்டு வெரசா வந்துடுங்க ராஜா…!”, என்றுவிட்டு சிறியவர்களுக்கு தனிமையை விட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

 

ரகசியா அவரின் பின்னாடியே திரும்பி நடப்பதற்குள்…

ருத்ரன் தன் வலக்கையால் அவள் கையை பிடித்து ஒரு சுற்று சுற்றி தன் கை வளைவுக்குள் நெருக்கமாக கொண்டு வந்தவன்…

 

அவள் இவனை திரும்பிப் பார்த்து திட்டுவதற்குள்…

ருத்ரன் தன் மனைவியின் உச்சி நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டிருந்தான் அவளை அணைத்தவாறே…!

 

“லீவ் மீ ருத்ரன்…என்னை விடு மேன்…!”, என்று அவன் உடும்பு பிடியில் இருந்து நெளிய…

 

“அப்போ ஏதோ கூப்பிட்டியே அதே மாதிரி கூப்பிடேன்டி பாப்பூ…

மாமன் மேல அவ்ளோ பாசமாடி பொண்டாட்டிஇஇ…

இல்லாத மாதிரியே நடிப்பா…

வந்து கவனிக்கிறேன்டிஇஇ அழகி மினுக்கி…”, என்றவாறு யாரும் காணாமல் நொடிப் பொழுதில் அவளின் கன்னத்தில் தன் மீசைதாடியர் உரச அழுத்தமாக நா பட முத்தமிட்ட பின்னரே அவளை தன் கைவளைவில் இருந்து விட்டான்.

 

ரகசியா சிலையாகி நிற்பதை விழி முழுதும் கண்டு நிரப்பி புன்னகை வதனமாக கண்ணடித்துவிட்டு ருத்ரன் கொம்பனுடன்  நடந்து சென்றான்.

 

சிறிது நொடிக் கழித்து தன்னிலை வந்தவள்…

தூரமாக கேட்டின் அருகில் மூவருமாக சென்றுவிட்டதை பார்க்க,”யூஊஊ…யூ…

நாட்டுகாட்டான்…அர்னால்ட்… இருடா உன்னைஐஐஐ…”, என்று முணுமுணுக்க அங்கிருந்து திரும்பாமலே ருத்ரன் கையை உயர்த்தி ‘பை’ என்பது போல அசைத்தான்.

 

“ஹான்ன்…இடியட். ..ச்ச இப்படி ஏமாந்து போகிட்டனே…

அப்படியே நடிக்கிறான் பேனிக் ஆகிட்டப் போல நான் கேட்கறப்போ … வில்லேஜ் வினிகர்…

 

இதுல எப்ப பாரு கடிச்சு வேற வைக்கிறான்…

வீட்டுக்கு வா மேன் அப்போ இருக்கு…!”, என்றுவிட்டு ரகசியாவும் உள்ளே பாட்டியிடம் சென்றுவிட்டாள்.

 

மோனாவும் எழுந்து தயாராகி அங்கே வரவும்…

உண்டு முடித்து பின் பாட்டியுடன் வீட்டை சுற்றிப் பார்க்கையில் ஒரு அறை மட்டும் பூட்டு போட்டு மூடியிருப்பதை கண்டாள் ரகசியா.

 

“இந்த ரூம் மட்டும் ஏன் பாட்டி மூடியிருக்கு,ஓப்பன் செய்ங்களேன்… இதுக்குள்ள என்ன இருக்கு காமிங்க பாட்டிம்மாஆஆ…,”,என்று அவரைப் பின்னாலிருந்து அணைத்த வண்ணம் அவரின் கழுத்து வளைவில் தன் தாடை பதித்து ரகசியா கேட்க…

 

“அது…அ…து… அ..ங்..க…

பழைய பொருள்லாம் இருக்கும் தங்கம்மா…

தூசி தும்பா இருக்கும் உங்களுக்கு ஏற்றுக்காது …

அதான்டா மூடியிரு…க்கு…! நான் சுத்தம் செய்ய சொல்றேன்… அதுக்கு அப்…றம் பார்க்கலாம் தங்கம்மா…!”, என்று வேர்க்க விறுவிறுக்க விழிகள் துடிக்க சமாளித்து வைத்தார்.

 

ரகசியா பாட்டியின் பின்னால் நின்றிருந்ததாள் கவனிக்கவில்லை அவர் விழியில் வழிந்திருந்த பொய்யை….!

 

“ஹோஓ அப்படிங்களா… தென் ஒகே பாட்டிஇஇ…!”, என்றவாறு மற்றவைகளை ரசிக்க தொடங்கி விட்டாள்.

(ஒருவேலை சந்திரமுகி பாம்புஉஉ இருக்குமோ…??!!)

 

******************************

 

காலை சென்றவர்கள் வயலில் சிலபல வேலைகள் நடப்பதை மேற்பார்வை பார்த்துக் கொண்டு உலாவினர்.

 

ருத்ரனுக்கு நினைவு முழுதும் முத்துமயில் மட்டுமே ஓடியபடி இருந்தாள்…!

விஜயன் கன்னிப்பெண்கள் சைட் அடிப்பதுதான் தன் முழு முதற்கடமை என்றிருக்க…

தாத்தாவோ மனம் நிறைவுடன் கயிற்றுக் கட்டிலில் படுத்து காற்று வாங்கினார்…!

 

காலை உணவு அங்கே பண்ணை வீட்டிற்கே வந்துவிட சாப்பிட்டு முடித்தவர்கள்,மதியம் உணவுக்கு வீட்டிற்கு வந்தனர்.

 

ரகசியாவும் மோனாவுடன் தங்களின் லேப்டாப்பில் அவர்களின் கம்பனி விஷயமாக ஏதோ மீட்டிங்கில் இருப்பதாக அவர்களிடம் பாட்டி கூறவும்….

யாரும் தொந்தரவு செய்யவில்லை ஆனால் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை தன் தேவதையின் முகத்தை மட்டும் பார்த்து கொண்டேதான் இருந்தாள் காதல் மன்னன் ருத்ரன்.

 

பின் ருத்ரனும் விஜயனும் மாலை தொடங்கிய நேரம் பூந்தோட்டம் சென்று வருகிறோம் என கிளம்பி விட்டனர்…!

 

****************************

 

கதிரவன் நடு உச்சியில் இருந்து இறங்கி கீழ்வானம் நோக்கி செல்ல துவங்கிய மந்தகாச மாலை வேலை அது…!!!

 

ருத்ரனின் நண்பர்கள் பட்டாளமே அங்கே அருவிக் கரையோரம் இருக்க, “என்னடே மச்சான்ஹளா… 

அதிசயமா எல்லா பயலும் ஒட்டுக்கா வந்து இருக்கீஹ… ஒன்னு இல்லாம இப்படி அடிச்சிக்காம இருக்கமாட்டீஹளே… 

என்னா மேட்டரு வோய்ஹளா…?!”,என்று கேட்கவும்…

 

அனைவரும் பல்லை இளித்துக் கொண்டு விஜயனைப் பார்த்தனர்.

 

ருத்ரன் முறைத்துக் கொண்டே விஜயனைப் பார்த்தான்.

 

“அதுஉஉஉ வேற ஒன்னுமில்ல மச்சா…ன்… 

நேற்று கேன்சலான கள்ளு பார்டிதேன் மச்சான்ன்ன்…

நீனுதேன் ஒகே சொல்லிட்டியே ஹிஹிஹி…” ,என்று தலையை சொரிந்து விஜயன் இவன் பங்கிற்கு இளித்து வைத்தான்.

(கள்ளுக்கு ஆசைபட்டு பல்லு போகாம இருந்த சரிதேன்…!)

 

“என்னவோ பண்ணித் தொலைங்க பன்னிஹளா…

ஆனா தோட்டப் பக்கம் வந்துர கூடாது சொல்லிபுட்டேன்…

அருவி ஆத்தங்கரையோட ஓவர்…!

 

கிரகத்தை கூட எதையாவது குடினு போதைல கொஞ்சல் வேற செய்வீங்க…

அதனால முன்னாடியே எனக்கு மோர் மட்டும் ஒரு பாட்டில்ல போட்டு வைடே மாப்பி…

தலை எழுத்துலே…!

 

சரி தோட்டத்துக்க போயிட்டு வரேன்…!

பார்த்து பத்திரம்…

எங்கனவாச்சும் போதைல விழுந்து தொலையாதீங்கடே…!”, என்றுவிட்டு தனக்கு பிடித்தமான மேல்குடில் நோக்கி நடந்து சென்றான் ருத்ரன்.

 

கயிற்றேணியை பிடித்து மேலே ஏறியவன்,குடிலின் வெளியே சென்று

மரக்கம்பு பிடியை பிடித்து நின்றான்… 

 

“உஃப்… முத்துமயிலு உடம்பு அனலா கொதிக்குதுடி…

உன்னய தேடுதே…!

 

முடியலடிஇஇ மாமனால…

என்னடி செய்வேன் நானு என் காதல மொத்தம் காட்ட தோணுது…

 

உனக்கும் என்னைய பிடிச்சிருச்சுடி,உன் மனசுக்குள்ள இந்த அத்தான் வந்துட்டேன்… 

அதேன் காலைல அப்படி வெரசா ஓடி வந்திருக்க…

அதுவே என்னை இன்னும் இழுத்து நெருங்கி வர சொல்லுதுடி…

 

ஆனா கண்டிப்பா கேட்டா ஆமா சொல்லமாட்ட தெரியும்…

நேத்து உன்னைய அப்படி பார்த்ததுல இருந்து எப்படிடி உன்ற அத்தான் சும்மா இருப்பேன்…!

 

நீ கனவுல பண்ண எல்லா சேட்டையும் கண்ணுக்குள்ள வந்து உன்ன திங்க சொல்லுதுடி…!

நேத்தி ராத்திரியே கத்தி மேல நின்னாப்ல இருந்தாச்சு…

இன்னைக்கு என்னா செய்ய போவுறனோ தெரில…

பேசாம தண்ணீத் தொட்டிக்கு உள்ள படுத்து தூங்க வேண்டியதுதேன்….! 

 

என்னா உதடுடாஆஆஆ…

அந்த கண்ணு இருக்கே ப்பாஆஆ….

பேரழகி என்னை திண்ணு முழுங்குறா அவ பேச்சாலயே…!

ஃப்ஊஊஊஊ…”,என்று தன் கழுத்தை தடவி சிகை கோதிக் கொண்டு பெருமூச்சு விட்டு கீழே இறங்கியவன் நண்பர்கள் இருக்கும் திசையை நோக்கி சென்றான்.

 

(டிஸ்கி : கள்ளானாலும் குடியே…ஃபுல்லானாலும் குடியே…

                எதுவானாலும் ஏதோ ஒரு வகையில் தீங்கு தீங்குதான் மக்கள்ஸ்…)

 

ருத்ரன் வந்ததும் எல்லாரும் ஒரே கோரஸாக, 

“வாழ்த்துழ்ழ்ழ்க்கள் டே மச்சாழ்..ன்…”, என கத்தி அவனை தூக்கி தோளுக்கு மேலே வைத்துக் கொண்டனர்…!

 

“எடே போதைக்கார எருமைஹளா… 

போட்டுடாதீங்கடா கீழ என்னைய…

 

இத விடுங்கடான்னா கேட்கறீங்களா எங்கையாச்சு…

சரிடே சரிடே… விடுங்க டே என்னைய மொதல்ல …!”,என்று ருத்ரன் கூறியதும் கீழே விட்டனர் அவனை.

 

தண்ணீர் சலசலவென ஓட அதன் சத்தத்துடன் இவர்களின் அலப்பறை வேறு…

நீலப்பற்கள் ஸ்பீக்கர் அதானுங்க ப்ளுட்டூத்து ஸ்பீக்கரில்,

‘நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு….’ , என்ற பாட்டை போட்டுவிட்டு ஆடலும் பாடலுமாக தொடங்கினர்.

 

விஜயன் ஒரு பாட்டிலை முடித்திருந்தவன்…

ஆடிக் கொண்டே வந்து புதியதாக ஒன்றை கையில் அவனுக்கு எடுத்துக் கொண்டு,ருத்ரனுக்கு ஒரு மோர் பாட்டிலை எடுத்து கொடுத்தான்.

(ஆஹான்)

 

“மச்…சாழ்ன்… என்ற உயிழ்ரே…

இந்தாடே உனக்கு மோழுருஉஉ…

மச்..சாழ்ன்… போடுடே சியர்ழ்ருஉஉ…”,என்று தள்ளாடி ருத்ரனிடம் நீட்டியபடி அமர…

 

ருத்ரனோ, “எடே பத்திரம் டே…

நிறுத்துனாலும்  கேட்கறதில்ல…

அடிப்பது கள்ளு…

அதுக்கேவா டே இவ்ளோ அலப்பறைய கூட்டுறீங்க…

 

நல்லவேளையா இன்னும் மிலிட்ரி சரக்குலாம் போடல…

போட்டாக்க அவ்ளோதான் போல டே மாப்பிஇஇ…

குடுடே அந்த மோரை… டொம்னு அந்த தட்டை சட்டு புட்டுனு தட்டிட்டு நான் கிளம்புதேன்…!”, என்றுவிட்டு அவன் கையிலிருந்து மோரைப் பிடுங்கினான்.

(பார்த்து பார்த்து ருத்ரன் மேன்…?!)

 

விஜயனோ,”கழ்ல்யாண வாழ்த்து…க..ள் மச்சாழ்ன்…

என் உயிழ்ரேஏ…என் சொந்தமேஐ …

லவ்ழ் யூஊஊஊ மச்சா..ன்…

இச்சு மொச்சு சொச்சுஉஉ…”,என்றவாரு ருத்ரனை கட்டிபிடித்து கொண்டு அலப்பறை செய்தவன்…

 

பாட்டிலை ஒரு வாய் குடித்துவிட்டு கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று ஆட…

 

“அடச்சை… மவனே தெளியட்டும் வச்சுகிடுதேன்…

இது ஒன்னுடே கொஞ்சோ கொஞ்சுனு கொஞ்சுவான் தயிருமவனே…,”, என்றுவிட்டு மோர் பாட்டிலில் இருந்து இரண்டு வாய் பருகியவன்…

விஜயன் பாட்டிலின் அருகில் வைத்துவிட்டு தானும் எழுந்து நின்று கொண்டான்.

 

விஜயனோ, ” சரி மச்..சாழ்ன் கிளம்பு தங்கச்சிஇஇ காத்திரு…க்கும் போ சீக்கிரழம்…”, என்று ருத்ரனை தள்ளிவிட…

 

“எபாஆஆ டேய் தங்கச்சி பாசத்துல தெளிவுதாம்டே… 

அது சரிதேன்…!

 

ஆகட்டும் டே மாப்பிஇஇ நான் கிளம்பறேன்…

 நீங்க எவனும் காலை கைய விழுந்து வாரி ஒடச்சுகாதீஹடே…!” என்று குனிந்து மோர் பாட்டிலை எடுத்துக் கொண்டான்.

(மோர்தான)

 

மற்ற நண்பர்களையும் பார்த்து, 

“வரேன்டே தோஸ்துஹளா வெரசா திண்ணுட்டு படுங்கடே….வரேன்…”, என்றுவிட்டு தன் ஜீப்பை நோக்கி சென்றவன், பாட்டிலை டைட்டாக மூடிவிட்டு வீட்டில் இறங்கி இதை முடிக்கலாம் என சீட்டின் அடியில் வைத்தான்.

 

வண்டியை புழுதிப் பறக்க திருப்பியவன் தங்கள் அரண்மனை நோக்கி வேகமாக விட்டான் தன் ஆசைக்கிளியை  விரைந்து பார்த்துவிடும் ஆவலில்…!

 

கேட்டை தாண்டி ஷெட்டில் சென்று வண்டியை விட்டுவிட்டு…

அந்த பாட்டிலை எடுத்து திறந்தவன் குடிக்க தொடங்கினான்.

 

சுவையின் வித்யாசம் இரு முடங்கில் தெரிய, 

“ஒரு வேல மாப்பிஇஇ கலந்து குடுத்துட்டானோ… 

ச்சச ச அவனுக்கு நான் எப்படியும் பொலந்து கட்டிடுவேனு தெரியும்…

அதுமில்லாம அங்க குடிக்கும்போது நல்லாதேன் இருந்துச்சு…! 

 

ஆனா இப்போ டேஸ்ட் மாறிட்டே… 

ஹோஓஓ ஒரு வேல புளிச்சுடிச்சோ வண்டி சூடுல…

இருக்கும்…இருக்கும்…!”, என்றுவிட்டு அங்கேயே மொத்த பாட்டிலையும் மோராக நினைத்து குடித்தேவிட்டான்.

 

சில விநாடிகளில் உடலில் ஏதோ செய்ய…

பாவம் அவனுக்கு தெரியவில்லை அது கள்ளென…

ருத்ரன்தான் அருவிக்கரையில் கீழிருந்து எடுக்கும் சமயம் மாத்தி எடுத்தது.

(ஹோலி க்ரிம்ல்…)

 

விஜயனுக்கு அங்கே குடித்ததும் அப்போதையிலும் வித்யாசம் கண்டறிந்து விட்டான்….

வரும் வழி எங்கிலும் இதை கூற விஜயன் அழைக்க முயற்சித்திருக்க, எங்கே இவன் மொபைல்தான் அகோர பசியின் காரணமாய் சார்ஜ் இன்றி மயங்கிவிட்டதே சரியாக எப்போதோ…!

 

“ப்பா…ஃப்ஊஊஊ…”, என்று தன் தலையை நன்றாக உதறி ஆட்டியவனுக்கு அனைத்தும் வித்யாசமாய் தெரிந்தது.

 

எங்கும் தன் முத்துமயிலாக ருத்ரனுக்கு, 

“ஹே…முத்தேஏ மாமழ..னுக்காஹ காத்திழுக்கியா…

புருஷழன பிடிச்சுப் போசுசுஉஉ ஸொல்ல மாட்டியாடிஇ…

பொண்டாட்டிஇஇஇ…”, என்றவாறு வாசலில் தூணில் சாய்ந்து நின்றிருந்த ரகசியாவை பிடிக்கப்போக மறைந்துவிட்டாள்.

 

“ஓடிழ்த்தியா… இதோஓஓ வரேழ்ன் மேழே…மாமன்ன்ன்…”,என்றுவிட்டு உள்ளே சென்றான்.

நல்ல வேலையாக அந்த நேரம் வேறு ஆட்கள் யாரும் அங்கே இல்லை…! 

 

அங்கே நண்பர்களுடன் இருக்கும் போதே கால் அடித்து

‘நான் தோஸ்துஹளோட சாப்பிட்டுட்டேன்…

எனக்கு காத்திருக்காமல் என்ற பொண்டாட்டியையும் மோனா புள்ளையும் கூப்பிட்டு சாப்பிடுங்க தாத்தோவ்…’,என்று தாத்தாவை அழைத்து கூறிவிட்டான்.

 

“மனசழ ப்ப் பறிக் கொடுத்தேன்டிஇஇஇ”, என்று பாட்டு பாடிய வண்ணம் கும்மாங்குத்து டான்ஸ் ஆடிக் கொண்டே மேலே படிகளில் ஏறினான்.

(என்னம்மா ஆடுறார்யா நம்ம ருத்ரர்…)

 

காதல் வந்தும்

தொட்டாச் சினுங்கி

என 

சினுங்கிக் 

கொண்டு 

மனதை

மறைக்கும் 

உன்னை என் 

செய்யடி

என் யட்சினியே…?!!

 

(செம டிஷ்யூம் டிஷ்யூம் இருக்கும் போலவே சண்டகோழிஸ்கு செல்லாஸ்…)

 

(அங்க சண்டை நடக்குதோ இல்லையோ உனக்கு அடிதடிதேன் தன்வி புள்ள ப்ரேக் போட்றதே வேளையில்ல உமக்கு…அதான பேபிஸ் நினைச்சிங் கிகிகி)

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!